சமீபத்திய பதிவுகள்

GTV BREAKING NEWS.. SRILANKAN ARMY 1500 MOR DEATH

>> Saturday, January 24, 2009

StumbleUpon.com Read more...

கல்மடு குளக்கட்டு உடைந்ததால் சிறிலங்கா படையினருக்கு பாதிப்பு: உதய நாணயக்கார

கல்மடு குளக்கட்டு உடைந்ததால் சிறிலங்கா படையினருக்கு பாதிப்பு: உதய நாணயக்கார
 
கல்மடு குளத்தின் அணைக்கட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிறிலங்கா படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கல்மடு குளத்தின் அணைக்கட்டு நேற்று சனிக்கிழமை காலை தகர்க்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பரந்தன் - முல்லைத்தீவு (ஏ-35) சாலையின் ஒரு பகுதி, இராமநாதபுரம், தர்மபுரம் மற்றும் விசுவமடு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வெள்ளம் நான்கு அடி உயரத்திற்கு பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் படையினரும் பாதிப்படைந்துள்ளனர். எனினும் இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தெரியாது. 
கல்மடு குளம் 4.5 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டதுடன், அது 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான நீர்வளத்தையும் கொண்டுள்ளதாக என்றார் அவர்.

 

http://www.puthinam.com/full.php?2b38VVA4b3dFaFu34d0WOqJ2b02PcIMb4d2bSsG4e0dj6Kofce0cd5e12ccemj5Z3e

StumbleUpon.com Read more...

தயான் ஜயதிலக்கவால் சிறிலங்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்

தயான் ஜயதிலக்கவால் சிறிலங்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்
 
இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இஸ்ரேலின் காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து சிறிலங்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தக்கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளது.
தயான் ஜெயதிலக்கவின் கருத்துக்களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் கடந்த வாரம் சிறிலங்காவுக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது.
இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் சிறிலங்காவின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னவை கடந்த புதன்கிழமை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
மனித உரிமை சபையில் அரபு நாடுகள் எடுத்த நிலைப்பாட்டை விட சிறிலங்கா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாகவும் அதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் பாலித கோகன்னவிடம் மார்க் சோபர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நெருங்கிய நண்பன் யார் என கேள்வி எழுப்பியுள்ள பிரதிநிதி மிகவும் சினமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளை இஸ்ரேல் நிறுத்தக்கூடும் என்ற அச்சம் அரச தரப்பில் ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.puthinam.com/full.php?2b37QRA4b4dG5Es34d0ZSuL2b02R7CPb4d2d1tB4e0dJ3Pqkce0ch2g12cceid4U3e

StumbleUpon.com Read more...

சிறிலங்காவில் ஊடகவியலாளர் மீதான வன்முறை: புதிய அமெரிக்க அரசு அதிர்ச்சி

 
 
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தீவிரமான வன்முறைகளையிட்டு புதிய அமெரிக்க அரசாங்கம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களத்தின் பிரதி பேச்சாளர் றொபேர்ட் ஏ வூட் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது.
இத்தகவல்கள் சிறிலங்காவில் ஊடகத்துறை சுதந்திரமாக செயற்படும் நிலை மோசமடைந்து வருவதையே காட்டுகின்றது.
ஜனநாயகம் தொடர்ந்து பேணப்படுவதற்கு சுதந்திரமானதும் தன்னிச்சையானதுமான ஊடகத்துறை அவசியமானது.
சிறிலங்கா அரசு எல்லா மக்களையும் பாதுகாப்பதுடன், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளையும் தடுக்க வேண்டும் என நாம் கேட்டு கொள்கின்றோம்.
பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக முழுமையானதும், தரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

 

http://www.puthinam.com/full.php?2b3aQPJ4b3dB4Jr34d0USrO2b02U8IQb4d25UpF4e0ds0Kslce0cj1e62ccehk3Z3e

StumbleUpon.com Read more...

பாரிஸ் மனிதசங்கிலிப் போராட்டம் - 4000 ற்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர்

பாரிஸ் மனிதசங்கிலிப் போராட்டம் - 4000 ற்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர்
 
 
இன்று மாலை பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தாயகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்கு தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர்.
மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான இவ் மனித சங்கிலிப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது.

தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்று
எங்கள் தலைவர் பிரபாகரன்
எங்கள் தேசம் தமிழீழம்
கெசோவே மக்கள் போன்றே தமிழரும் போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர்.

சகல வர்த்தக நிறுவனங்களும் மாலை 17.00 மணி தொடக்கம் 18.00 மணிவரை தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 26 பேர் பலி; 52 பேர் படுகாயம்

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படையினரின் 5 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டள்ளன.
பிகே எல்எம்ஜி - 01
ஆர்பிஜிக்கள் - 04
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 07
உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dbj0A0ecQG7h3b4F9EE4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

வன்னியில் புலிகள் இராணுவத்துக்கு எதிரான வலிந்த தாக்குதலில்.....1500 படையினர் பலி, 5000 படையினர் சிறைபிடிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிப்பு.. தொடர்ந்து கடும் சமர். (3 ம் இணைப்பு)

வன்னியில் புலிகள் இராணுவத்துக்கு எதிரான வலிந்த தாக்குதலில்.....1500 படையினர் பலி, 5000 படையினர் சிறைபிடிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிப்பு.. தொடர்ந்து கடும் சமர். (3 ம் இணைப்பு)
பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 1500 படையினர் கொல்லப்படுள்ளதாகவும் 5000 படையினர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் விஷ்வமடு பகுதியில் இன்று விடுதலைப்புலிகளை தாக்கும் தீவிரத்தில் சிங்களராணுவம் முன்னேறியதாகவும், அவர்களை முன்னேறவிடாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாகவும் இலங்கை பத்திரிக்கை வட்டாரங்களில்
இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்று மதியம் 3மணிக்கு தொடங்கிய இந்த பதிலடி தாக்குதல் மாலை 6மணிக்கு முடிந்ததாகவும், இந்த பதிலடி தாக்குதலில் 1500 ராணுவத்தினர் பலியானதாகவும், 5000 ராணுவத்தினர் காயங்களுடன் தப்பி ஓடியதாகவும் அவர்களை விடுதலைப்புலிகள் பிடித்து சிறைபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியான ராணுவத்தினரில் 500 சடலங்கள் மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர். இரவு வந்துவிட்டதால் சடலங்களை தேட முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்னும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை.

தொடரும்..

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232800572&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

ஆனையிறவும் அதனூடே முல்லைத்தீவும்

 
தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம் எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது.

யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?. வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும் பின்னடைவு அல்லது பின்வாங்கல் என்பது அசாத்தியமானதொரு தற்காப்புப் போர்முறை என்ற புகட்டலில்லாமல் சிங்களத்தின் பிணங்கள் ஒன்றிரண்டு சரியும் போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களை உருவேற்றி உண்மையை உணரவிடாது தடுத்தமையே இந்த போரின் உண்மை முகம் பற்றிய தெளிவான பார்வையை அவர்கள் பெறாததற்கான காரணம்.

ஏனெனில் சூதாட்டப் பந்தயத்தில் கலந்து கொள்கிற இரு குதிரைகளாகவே சிறிலங்கா அரசையும், விடுதலைப் புலிகளையும் இதுவரைப் பார்த்து வந்திருக்கிறோம். எங்களுடைய குதிரை முந்துகிற போதெல்லாம் விசிலடித்து புழகாங்கிதித்த மனம் இப்போது போராட்டம் மந்த கதியை அடைகிறதா அல்லது மங்கிச் செல்கிறதா என்கிற எண்ணவோட்டங்களிலெல்லாம் பயணிக்கிறது. இந்த போராட்டம் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கான பதில் இன்றைய உலகத்தின் இணைவுப் பாதையுடன் தன்னைத் தொடுக்க முனைகிறது என்பதேயாகும்.

இந்திய இராணுவம் வன்னிபோரில் 1987 இல் புலிகளை தள்ளிய போது எந்த ஒரு உணர்வு இருந்ததோ அல்லது ஜெயசிக்குறு போரின் போது 1998 இல் எந்த ஒரு அவலம் இருந்ததோ அதை விடப் பெரிய அவலமாக இன்றைய நிலை இல்லவே இல்லை. ஆனால், வெற்றி என்பது மட்டுமே முடிந்த முடிபு என்பதைத் தவிர எதையுமே ஏற்க மறுக்கின்ற எங்களின் மன ஆளுமையும் எதிர்காலச் சிக்கல்கள் பற்றிய சிந்தனையற்ற சிங்கள அரசின் மாறுபட்ட போரியலும் உண்மைக்குத் திரைபோட்டு இப்போரியலை ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்துவிட்டதே எமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட தற்போதைய துன்பமாகி விட்டது. ஆனால் உண்மை அவ்வாறல்ல.

இதைவிட நெருக்கடியான நிலையில் விடுதலைப் போர் இருந்ததென்பதும் இதனையொத்த பல காலங்களை அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதுமே உண்மை. ஆனால், இலத்திரனியலின் வளர்ச்சி, செய்திகள் வந்தடைகின்ற வேகம் என்பவை இந்தப் போரை ஏனையவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுத்தி தேவைக்கதிகமான செய்திகளை எமக்கு வழங்கி இப்போரை வித்தியாசமாகக் காட்ட முனைகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இன்றும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. 1987 இல் இந்திய இராணுவத்துடன் சமர் தொடங்கிய போது 'ஐயகோ! உலகின் நான்காவது வல்லரசுடனா போர்? விடுதலைப் போரே மடியப்போகிறது" என்று ஏங்கி அழுதவர்களுக்கெல்லாம் புதிய புறநானூற்றை காட்டியெழுந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

இதற்கும் மேலாக ஜெயசிக்குறுவுடன் முடிந்து விட்டாகள் என்பதற்கு அவர்கள் எழுதிய கணக்கு வேறுவிதமாக இருந்தது. மூன்றே மூன்று நாட்கள் ஒட்டிசுட்டான் தாக்குதல் எப்படி மாங்குளத்தை அடைந்தது வவுனியா வரை இராணுவத்தை விரட்டியது என்பது பற்றியும் கிளிநொச்சித் தாக்குதல் எப்படி கிளாலி வரை வந்து கொழும்புத்துறையை மேவி யாழ். நகரில் கைகுலுக்கக் காத்திருந்தது என்பது பற்றியும் இன்றும் வியந்து கொள்ளக்கூடிய தாக்குதல்களைத் தந்த விடுதலைப் புலிகளின் கணக்கு எப்போதுமே வேறுவிதமானது.

எந்த ஒரு மூத்த தளபதியும் போர்முனையில் இன்னுமேன் நிற்கவில்லை என்று எதிரியானவனே திகைத்து நிற்க வான்படையின் ஊர்திகள் முதல் அசுர ஆயுதங்கள் எதனையுமே இன்றுவரை இக்களங்களில் இழக்கவில்லை. மறக்க வேண்டாம் பூநகரி முனையிலிருந்து பலாலித்தளத்திற்கு பாய்ந்து சென்ற ஆட்டிலறிகளும் நகர்த்தப்படுகின்றனவே தவிர இழக்கப்படவில்லை என்பதே உண்மை. தலைவன் தனது ஆளணிகளையும் ஆயுதங்களையும் இழப்பின்றி அழகாக நகர்த்துகின்ற இப்போரியல், இன்றைய பின்வாங்கல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

உலகின் புதிய வரலாறொன்றிற்கான தேவையின் நிமிர்த்தமான நகர்வில் இதுவல்ல இன்னமும் இடம்பெற்றாலும் அதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்வதற்கான மன ஆளுமையைப் பெற வேண்டியதே எம்முடைய தேவை. அதை விடுத்து, பின்வாங்கலிற்கான காரணங்களை தேடுவதிலும் அல்லது சிங்களத்தின் மேதாவித்தனத்தை வியப்போடு பார்ப்பதையும் நிறுத்திக்கொண்டு நாங்கள் யதார்த்தத்தை உணரத் தலைப்பட வேண்டும். போராட்டம் மற்றொரு முனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான பரிசில்களாகவே இப்போதைய பின்வாங்கல்களும் இழப்புக்களும் இருக்கின்றன.

பேச்சுவார்த்தை மேசைக்கு சென்ற விடுதலைப் போர் மீண்டு வந்ததாகச் சரிதமே இல்லாதிருக்கின்ற இன்றைய உலகில் எங்களது மட்டும் விதிவிலக்காகி மீண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதை விட என்ன உறுதி வேண்டும் எங்களுக்கு? எத்தனை எத்தனை சூழ்ச்சிகள் நடந்தேறின? ரோக்கியோ மாநாடு முதல் கயவனின் துரோகம் வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அதற்கும் மேலாக வழங்கல் பாதையில் பயணித்து வந்த கலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல இழக்கப்பட்ட துன்பியல் வரலாறும் இந்த அனைத்துலக ஆதரவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நமக்குத் தந்த உயர்பரிசுகள் இருந்தபோதும் விடுதலைப்போர் கிஞ்சித்தும் சிதறாமல் நவீன கிரகிப்புடன் பயணிக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக நாங்கள் மாற வேண்டும்.

யாழ். முன்னரங்கு, வவுனியா முன்னரங்கு, மணலாறு முன்னரங்கு, மன்னார் முன்னரங்கு என்று வன்னிக்களப்பரப்பில் திறக்கப்பட்ட போர்முனைகள் நாற்பதிற்கும் மேல். இவையனைத்திலும் வலுவுடன் பொருதினால் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான ஆள் இழப்பு மற்றும் காயமடைந்து களத்திலிருந்து அகற்றப்படும் போராளிகளென இழப்புக்கள் அளவு கடந்து போய் அதன்மூலம் அவர்கள் ஆட்டம் கண்டுவிடுவார்கள் என்பது சிங்களத்தின் சிம்மாசனக் கணக்கு. அதற்கு மேலாக இவ்வளவு முன்னரங்குகளிலும் பொருதும் போது தொடர்ச்சியான ஆயுத தளவாடப் பாவனைகளினால் அவர்களின் ஆயுத இருப்பும் வற்றும் நிலையை அடைந்து விடும் என்பது சிங்களத்தின் உச்சக்கனவு. அதனை தவிடுபொடியாக்கி விடுதலைப் புலிகள் நாற்பது களமுனைகளை சுருக்கி முல்லைத்தீவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளையும் முனைகளாக்கி பொருதுகிறார்கள்.

இப்போது கால்பதித்த இடங்களைக் காத்துக் கொள்ளத் திணறும் சிங்களத்திற்கு, முல்லைத்தீவைச் சுற்றிவரப் போர் தொடுக்கும் சிங்களத்திற்கு, தெற்கில் சிங்களப் பகுதிகளிலுள்ள படைத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கப போகிறார்கள் என்ற அச்சம் பலமாக ஏற்பட்டிருக்கிறது. தியத்தலாவையை உச்சப்பாதுகாப்பிற்குள் கொண்டு வந்தது இதற்கான இன்றைய உதாரணம். இந்த அச்சம் சிங்களத்திற்கே மட்டும் புரிந்த அச்சம். போரரங்குகள் சுருக்கப்பட்டதால் இப்போது பல நூற்றுக்கணக்கான போராளிகளை எந்தத் தேவைக்காகவும் எந்தவிடத்திலும் பாவிக்கக்கூடிய திறனை விடுதலைப் புலிகள் தாராளமாகப் பெற்றுள்ளார்கள். அதுவும் எந்தவொரு சிறந்த தளபதியும் இன்னமும் களத்தில் இழக்காத ஒரு நிலையில் இந்தத் தாராள வசதியைச் சிங்களம் செய்து கொடுத்திருக்கிறது.

விரிந்து பரந்து வியாபித்து இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ள சிங்களம் இன்னமும் தொடர்ந்து தக்கவைக்க இரண்டு லட்சம் பேர் தேவை என்று புலம்புவது எதைக் கூறுகிறது? அல்லது முல்லைத்தீவை உடனேயே முடக்கிவிட வேண்டும் என்று இன்றும் முயல்வது எதனைக் காட்டுகிறது? என்ற கேள்விகளுக்கான விடையை விடுதலைப் புலிகள் தரும் வரை ஒன்றை நம்புவோமாக…

தேசியத் தலைவரின் கனவுகளிற்கு நிஜவடிவம் தந்து ஒட்டுமொத்த சிங்களத்தையும் இரையாக்கிய பெருமையை மகிந்த ராஜபக்ச விரைவில் பெறப்போகிறார்.

-எ.இராஜவர்மன்-
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232751579&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

இந்தியாவின்(வை நோக்கிய எமது) இன்றைய தேவை என்ன?

இந்தியாவின்(வை நோக்கிய எமது) இன்றைய தேவை என்ன?
உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது.

இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

கிழக்கில் இருந்து பின்வாங்கிய விடுதலைப் புலிகள் வன்னியிலேயே தாக்குப்பிடிக்க போரிடுகிற நிலையில் மேற்கூறப்பட்ட "பலம்" அல்லது "இராணுவ நேர்த்தி" என்ற சொற்பதங்கள் ஏன் 2007 இன் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு சிரத்தையானதாக இருந்திருக்கும் என்பதற்கான விடை விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தின் வளர்ச்சியான வான்புலிகளே.

இந்தியாவானது ஒரு அணுவாயுத நாடு. சந்திரனிற்கு விண்கலத்தை அனுப்புகிற அளவிற்கு அபரிமிதமாக வளர்ந்து விட்ட நாடு. தென்னாசியாவின் பொருளார மையம். எந்தவிதத்திலும் மேற்குலகால் புறந்தள்ள முடியாத ஒரு நாடு. எனவே, இந்தியாவின் இறையாண்மை என்பது அதனால் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் உள்ளாக முடியாத ஒரு விடயம். எனவே, அதன் கடல் எல்லைக்குள்ளோ வான் எல்லைக்குள்ளோ அந்நியரின் அத்துமீறிய பிரவேசம் நடந்தால் அது இந்தியாவின் இறையாண்மையை அது பாதுகாக்கத் தவறிவிட்டது என்றே கருதப்படும். எனவே, அப்படி ஏதும் நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது வன்னி நடவடிக்கைக்கு முண்டு கொடுக்கிறது.

கடற்புலிகளையே ஒரு கட்டுமானம் கொண்ட கடற்படையாகவே இந்தியா கருதி வந்தது. இந்நிலையில் வான்புலிகளின் பிரவேசம் இந்தியாவிற்கு சிம்மசொப்பனமாக மாறிவிட்டது. ஏனெனில் வான்புலிகளின் விமானம் இந்தியாவின் வான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்தால் கூட அதனால் இந்தியாவிற்கு ஏற்படப் போகும் அவமானம் மிக மிகப் பெரியதாகவே இருக்கும். அதன் இறையாண்மைக் கண்காணிப்பு வலைப்பின்னலின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு விடும்.

தர்க்கீக ரீதியாக விடுதலைப் புலிகளையும் இந்தியாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுவதற்கு அதன் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் அடுக்கிய வாதப்பிரதிவாதங்களை சாத்தியமற்றவை என்று ஒதுக்குகிற அளவிற்கு ஈழத்தமிழர்களுடனான உறவு இந்தியாவிற்கு இல்லாதமையால் அதுவே இந்தியாவின் தேவைகளை மாற்றி இந்தப் போரிற்கான தொழில்நுட்ப உதவிகளைச் செய்யுமளவிற்கு மாறியிருக்கிறது. எனவே தான் அது தனது கரையோரப் பகுதிகளில் ராடர் கண்காணிப்பு நிலைகளை வான்புலிகளைக் கவனிக்கவென்றே அமைத்ததுடன் கடற்கண்காணிப்பு கப்பலொன்றையும் மேலதிகமாக இச் சேவையிலீடுபடுத்தியது. மேலதிகமாக சிங்களத்தின் ஊசாத்துணையாக வவுனியா மன்னாரில் கூட ராடார்களை நிறுவியது. நிழற்போரங்கில் அதன் முக்கிய பணி இந்த வான்புலிகளைக் கண்காணிப்பதாகவே இருந்தது.

அதுபோலவே வான்புலிகளின் ஏழு தாக்குதற் பறப்புக்களும் அச்சொட்டானதாக அமைந்திருந்தன. நேர்த்தியான அனுபவமிக்க பறப்புக்கள் அவை. நவீன தொழில்நுட்பத்தின் உதவிகளற்று தாக்குதல் இலக்குகளை துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தளம் திரும்புவதற்கு இந்த இலகுரக விமானங்களால் முடிந்ததென்பது அவர்களின் அனுபவத்தை வெளிக்காட்டியது. அதுவும் பகல் நேரப் பறப்புக்களால் கூட இயலாத இலக்குக்களை கரிய இருட்டில் சென்று தாக்கிவிட்டு சிறிலங்கா வான்வெளித் தாக்குதலிகளிலிருந்து தப்பி வருமளவிற்கு அவை அனுபவமாக செயற்பட்டிருக்கினறன. எனவே இத்தகையதொரு படையை அது தனது இறையாண்மைக்கான பாதகமாக கருதத் தொடங்கிவிட்டது.

வான் புலிகளின் விமானப் பறப்புக்களை கட்டுப்படுத்தியாக வேண்டிய தேவைக்காகவே கிளிநொச்சி கைப்பற்றப்பட வேண்டும் என்பதும் கடற்புலிகள் முடக்கப்பட வேண்டும் என்பதற்காகவே முல்லைத்தீவு முற்றுகையிடப்பட வேண்டுமென்பதும் அதன் மௌனத்தின் அர்த்தமாகக் நாங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். எனவே உளவு விமானம் பறப்புக்களை இந்தியா மேற்கொண்டதாகச் செய்தி வந்தால் அது வான்புலிகளின் விமானங்களின் தரை வழி நகர்த்தல்களையே அறிய முனைந்திருக்கும் என்றே நாம் கருதிக் கொள்ள வேண்டுமே தவிர நாமே ஒரு அரைகுறைச் செய்திக்கு வாலும் தலையும் வைத்து பூதாகரமாக்குகிற முயற்சியில் இறங்கக்கூடாது. முக்கியமாக செய்திகள் மூலம் பூச்சாண்டி காட்டுகின்ற முரண்பட்ட வேலையில் ஈடுபடக்கூடாது.

முக்கியமாக இந்தியாவை நட்பு சக்தியாக மாற்றியே ஆக வேண்டும் என்கிற நோக்கில் எந்த மாறுதலும் ஏற்படக்கூடாது. அந்த முயற்சியொன்றே தான் நமக்கான மாற்றுவழியாக அமையும். மத்திய அரசையும் அதன் கொள்கை வகுப்பாளர்களையும் ஈழத்தமிழர்களின் நேச சக்தியாக மாற்ற வைக்கமுடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் உறவுகள் என்றுமே தேவை சார்ந்தவையே. ஏனெனில் எமது பலமே இப்போது எமக்கான பகையாக இருக்கிறது. விமான ஓடுபாதைகளற்ற, விமானப்பலமற்ற புலிகளை இந்தியா பார்க்க விரும்புகிறது. அதனை சிறிலங்கா தனக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்துகிறது. இதுபோலவே விடுதலைப் போரின் ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் அழுத்தங்கள் தாரளமாகப் பிரயோகிக்கப்பட்டன.

ஆனால் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களை நேச சக்தியாக ஏற்க வைக்க வேண்டிய தேவையை தாய்த் தமிழகமும், புலம்பெயர்ந்த தமிழர்களும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காகப் பலரும் முயன்று கொண்டிருக்கும் இவ்வேளை அதன் ஒரு கட்டமாக நாங்கள் இலகுவாகக் செய்யக்கூடிய விடயங்களில் ஒன்று டெல்லி அரசியலில் எளிதாகச் சாதிக்கும் வல்லமை படைத்த மூவரைச் செயற்பட வைப்பதேயாகும். கனிமொழி, அன்புமணி, தயாநிதி மாறன் ஆகியோர் இப் பணியின் நாயகர்களாக டில்லியில் செயற்பட புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தலைவர்களும் ஒருமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த யுகம் முயற்சி திருவினையாக்கும் என்ற ஒபாமாவின் யுகம். இந்த யுகத்தில் இந்த இளையவர்கள் மூவரும் சாதிக்க நினைத்தால் ஈழத்தமிழனுடனான இந்திய உறவுக்கான தூரம் அதிகமில்லை.

இவர்கள் மூவரும் மத்திய அரசுடனான பேரம் பேசு திறன் அதிகம் மிக்கவர்கள் என்பதோடு தேவை ஏற்படுகின்ற போது பல அரிய செயற்பாடுகளை மத்திய அரசினூடாக சாதித்த சாதனையாளர்கள். அதைவிட தங்கள் கட்சித் தலைவர்களிடம் பலமாகச் செல்வாக்குச் செலுத்துபவர்கள். எனவே, இப்போது பேரம்பேசு பொருளாக இவர்கள் ஈழத்தமிழனின் விவகாரத்தை இராஜதந்திரத்துடன் எடுத்தாள நாங்கள் வழியமைக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சுற்றி அல்லது தமிழர்களைச் சுற்றி வலம் வரும் அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்களுக்கும் அப்பால் இராஜதந்திரம் சார்ந்த அரசியற் செயற்பாடு என்கிற களத்தில் நாற்பது பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் பலம் இறங்கும் போது அதுவே இந்தியாவின் இன்றைய வன்னிக்கான தேவையை இதுபோன்ற நடவடிக்கைகளே தலைகீழாக மாற்றமடைய வைக்கும்.

-எ.இராஜவர்மன்-

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232758052&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP