சமீபத்திய பதிவுகள்

கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்புடன் விண்டோஸ் 7

>> Monday, February 8, 2010


 
 


புத்தம் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் என்ன கூடுதல் வசதிகள் தர முடியும் என்று இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணலாம். விண்டோஸ் 7 செட்டிங்ஸ் அமைப்பினைச் சீர்படுத்தி, அதன் செயல்பாட்டினை மேம்படுத்த பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இலவச புரோகிராம்களே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். நீங்கள் இன்னும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறவில்லை என்றாலும், இவற்றைக் குறித்து வைத்துக் கொள்வது, அல்லது டவுண்லோட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (http://www. crosoft.com/Security_Essentials)விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு முன் வந்தவை போல, இந்த புதிய சிஸ்டத்திலும் மால்வேர், வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் வசதிகள் எதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் தரப்படவில்லை. பயர்வால் ஒன்று இணைத்துத் தரப்பட்டிருந்தாலும், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான நடவடிக்கையை அதனால் எடுக்க முடியாது. எனவே தான் நாம் கட்டணம் செலுத்தி மெக் அபி அல்லது சைமாண்டெக் போன்ற வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதே வேலையை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் தனியாக செக்யூரிட்ட் எசன்ஷியல்ஸ் என்ற புரோகிராமினைத் தருகிறது. வீடுகளில் வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களுக்கு இது மிகச் சரியான பாதுகாப்பினைத் தருகிறது. இதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனை டவுண்ட்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அல்லது எனக்கு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இலவசமாகப் பெற்று பயன்படுத்தலாம். 
2. நினைட் (Ninite): எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 7 க்கு மாறுபவர்கள், கிளீன் இன்ஸ்டால் செய்திட வேண்டியுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த அனைத்து புரோகிராம்களையும் மீண்டும் ஒரு முறை,புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். இது ஒரு அநாவசியமான நேரம் எடுக்கும் வேலை ஆகும். இதற்குப் பதிலாக அனைத்து இலவச புரோகிராம் களையும் தானாக ஒரே வேலையாக இன்ஸ்டால் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இதனைத் தான் நினைட் தளம் மேற்கொள்கிறது. முதலில் http://www.ninite.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களைத் தேர்வு செய்திடுங்கள் (எ.கா. பயர்பாக்ஸ், ஸ்கைப், ஐட்யூன்ஸ் போல) அடுத்து நினைட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின் அனைத்து புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித கூடுதல் வேலையும் இல்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும். நினைட் பெர்சனல் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கும்.
3.விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) விஸ்டாவினால் நாம் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் அநாவசியத்திற்குப் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் லைவ் போட்டோ காலரி. இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download. live.com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.
4. விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் (windows easy transfer) : நீங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாறுபவர்களாக இருந்தால், விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் என்னும் மைக்ரோசாப்ட் இலவசமாகத் தரும் புரோகிராமினை, நிச்சயம் இயக்கிப் பார்க்க வேண்டும். இந்த புரோகிராம் http://windows.microsoft.com/enus/windows7/products/features/windowseasytransfer என்ற முகவரியில் கிடைக்கிறது. பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு உதவிடுகிறது. இதில் ஒரு பைல் எக்ஸ்புளோரர் தரப்படுகிறது. நாம் காப்பி செய்திடக் கொடுக்கும் பைல், அதன் டைரக்டரியிலிருந்து எடுக்கப்பட முடியாமல், மாற்றப்பட முடியாமல் இருந்தால், உடனே இந்த எக்ஸ்புளோரர் முடங்காது. அதற்குப் பதிலாக பைல் மாற்றத்தை முடித்து, இறுதியில் எந்த பைலை ஏன் மாற்ற முடியவில்லை என்ற அறிக்கையைத் தரும். இந்த புரோகிராம் பைல்களைக் காப்பி செய்வதில்லை. ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொன்றுக்கு, அவற்றை இணைக்கும் கேபிள் வழியே மாற்றுகிறது. கம்ப்யூட்டர் இணைக்கப்படவில்லை என்றால் பைல்களை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் டிரைவிற்கு மாற்றலாம். இந்த புரோகிராமை இயக்க கேபிள் அல்லது மேலே சொல்லப்பட்ட இந்த டிரைவ்கள் தேவை.
5. அல்ட்டிமேட் விண்டோஸ் ட்வீக்கர் வி2 (Ultimate Windows Tweaker v2) விண்டோஸ் 7 தொகுப்பின் இயக்கத்தினை, உங்கள் விருப்பப்படி அமைக்க வேண்டுமா? யூசர் இன்டர்பேஸ், நெட்வொர்க், செக்யூரிட்டி, சிஸ்டம் செட்டிங்ஸ் போன்றவை உங்கள் விருப்பத்தின்படி இயங்க வேண்டுமா! இந்த தொகுப்பைப் பயன்படுத்துங்கள். விஸ்டாவிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வழிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் பல செட்டிங்குகளை அமைக்கலாம். விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களில் அல்ட்டிமேட் எடிஷன் பயன்படுத்துபவர்களுக்கு இது கூடுதல் வசதிகளைத் தருகிறது. இதனை http://www.thewindowsclub.com/ultimatewindowstweakerv2atweakuiforwindows 7vista#more1957 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். 
6.விண்ஸிப் 14 (WinZip): விண்டோஸ் தொகுப்பிலேயே பைல்களைச் சுருக்கி விரிக்கும் வசதி இருக்கையில் விண்ஸிப் எதற்கு என்று நீங்கள் எண்ணலாம். இதே இதழில் விண்ஸிப் பதிப்பு 14 குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையைப் படிக்கவும். விண்டோஸ் இயக்கம் தரும் வசதிகளுடன் கூடுதல் வசதிகளை இந்த பதிப்பு தருகிறது. எனவே இதனையும் கூடுதலாகப் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். கிடைக்கும் தள முகவரி www.winzip.com

7. என்ஹேன்ஸ் மை 7 (EnhanceMySeven) விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பியைக் காட்டிலும் விண்டோஸ் 7 பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்து நிர்வகித்தல் என்பது சற்று சிரமமான காரியம் என்பது போகப் போகத் தெரியும். இந்த வகையில் உதவுவதற்கு என என்ஹேன்ஸ் மை 7 தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.http://www.seriousbit.com/tweak_ windows_7/ என்ற தளத்தில் இது கிடைக்கிறது. இதன் மூலம் எந்த பைல்கள் ஸ்டார்ட் அப் போல்டரில் இருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். ஹார்ட் டிரைவ் செயல்படும் விதம், வெப்ப நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ரிஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்தும் வேலையையும் மேற்கொள்ளலாம். 
8. இமேஸ் ரீசைஸர் (Image Resizer Powertoy Clone): விண்டோஸ் 7 இயக்கத்தில் படங்களின் அளவை மாற்றி அமைக்க வேண்டுமா! இந்த இமேஜ் ரீசைஸர் புரோகிராம் இதற்கு உதவி வேலையை எளிதாக்குகிறது. இதனை இன்ஸ்டால் செய்த பின், பட பைல் ஒன்றின் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், அதில் நான்குவித அளவுகளுக்கான (small (640 by 480); medium (800 by 600); large (1024 by 768);  மற்றும் handheld PC (240 by 320)) மெனு கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த அளவில் படம் கிடைக்கும். இவை தவிர நீங்கள் செட் செய்திடும் அளவிலும் படங்களை அமைக்கலாம். இந்த புரோகிராமினை http://imageresizer.codeplex.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
9. சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools): விண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு, சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. இதனை ttp://systerac.com/seven/overview.htm என்ற முகவரி யில் பெறலாம்.
10. விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் (Windows7 Upgrade Advisor):  உங்கள் சிஸ்டத்தை விஸ்டா அல்லது எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்திட திட்டமா? அப்படியானால் விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் புரோகிராம் இயக்கிப் பார்க்காமல் செய்திட வேண்டாம். மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் (http://www.microsoft.com/windows/windows7/get/upgradeadvisor.aspx)  இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பிரிவுகளையும் சோதனை செய்து அவை அனைத்தும் விண்டோஸ் 7 சிஸ்டம் ஏற்றுக் கொள்ள போதுமானவையா என்று காட்டுகிறது.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பூலான்தேவி கொள்ளைக்காரியாக மாறிய வரலாறு பாகம்-2

முதல்_மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள்
முதல்_மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள்பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்தனர். உயர் சமூகத்தினர் தொந்தரவில் இருந்து தங்களை காப்பாற்றும் கேடயம் பூலான்தேவி என்று கருதினார்கள்.
 
இதற்கிடையில் போலீஸ் வேட்டை தீவிரம் அடைந்ததால், பூலான்தேவி சரண் அடைய முடிவு செய்தாள். சில நிபந்தனைகளை விதித்து இருந்தாள். அவளது தங்கை மற்றும் குடும்பத்தினரை போலீசார் பிடித்து காவலில் வைத்தனர்.
 
இதனால் பூலான்தேவி சரண் அடைவதில் ஆர்வமாக இருந்தாள். சில மாத காலம் சமரச தூது நடைபெற்றது. இறுதியில் மத்திய பிரதேசத்தில் சரண் அடைய விரும்புவதாகவும், அங்கு தனது பெற்றோரை அழைத்து வந்து பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
 
இதனை அடுத்து பூலான்தேவி தனது கொள்ளை கோஷ்டியுடன் மத்தியபிரதேசம் சென்றாள். 11_2_1983 அன்று மத்தியபிரதேச மாநிலம் ஜக்மோரி கிராமத்தின் அருகே உள்ள காட்டில் இருந்து அவள் வெளியே வந்தாள்.
 
நேராக நயாகாவோன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஆஜரானாள். அவளுடன் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் சென்றார்கள். அவர்கள், பிந்து நகரத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்கள். அங்கு காவலில் வைக்கப்பட்டார்கள்.
 
பிந்து நகரம் குவாலியரில் இருந்து 50 மைல் தூரத்தில் உள்ளது. இந்த தகவல்களை, சம்பல் பள்ளத்தாக்கு போலீஸ் டி.ஐ.ஜி. என்.டி.சர்மா அறிவித்தார். மகுவா கிராமத்தில் நடக்கும் யாகத்தைப் பார்க்க வேண்டும் என்று பூலான்தேவி விருப்பம் தெரிவித்தாள்.அதை நிறைவேற்றுவதற்காக அவளை யாகம் நடக்கும் இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.
 
என்றபோதிலும் பூலான்தேவி சரண் அடைவது சம்பிரதாயமாக பொதுமக்கள் முன்னிலையில் பிந்து நகரத்தில் 12_2_1983 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும், மத்தியபிரதேச முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவாள் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
மத்தியபிரதேசத்தில், இதற்கு முன்பு ஏராளமான கொள்ளைக்காரர்கள் ஜெயப்பிரகாசர் வேண்டுகோளை ஏற்று சரண் அடைந்து இருக்கிறார்கள். பெண் கொள்ளைக்காரிகள் யாரும் சரண் அடையவில்லை. பெண் கொள்ளைக்காரியான அசீனா, புட்லிபாய் இருவரும் முன்பு போலீசாருடன் நடத்திய துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார்கள்.
 
1982_ம் ஆண்டு ஜுன் மாதம் 17_ந்தேதி, பிரபல கொள்ளைக்காரன் மல்கான்சிங், பிந்து நகரில்தான் முதல் மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் புதுவாழ்வு தொடங்கினான். அதே இடத்தில்தான் பூலான்தேவியும் சரண் அடைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அறிவிக்கப்பட்டபடியே பிந்து நகரில் உள்ள சிவாஜிராவ் சிந்தியா கல்லூரி மைதானத்தில் விசேஷ மேடை அமைத்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்_மந்திரி அர்ஜூன்சிங் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பிந்து நகரத்துக்கு வந்தார். சரியாக 9 மணிக்கு பூலான்தேவி மேடைக்கு வந்தாள்.
 
அவள் காக்கி நிற யூனிபாரம் அணிந்து இருந்தாள். நெற்றியை சுற்றி வழக்கம்போல சிவப்பு நிற ரிப்பன் கட்டி இருந்தாள். தோளில் துப்பாக்கியும், மார்பை சுற்றி துப்பாக்கி குண்டு `பெல்ட்'டும் காட்சி தந்தன. 3 மலர் மாலைகள் தயாராக இருந்தன. அதில் ஒன்றை மேடையில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கும், மற்றொன்றை துர்க்காதேவி படத்துக்கும் அணிவித்தாள். 3_வது மாலை முதல்_ மந்திரி அர்ஜூன்சிங்குக்கு அணிவிக்கப்பட்டது.
 
பிறகு சரியாக 9_45 மணிக்கு பூலான் தேவி முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்பு சென்று மண்டியிட்டு காலை தொட்டு கும்பிட்டாள். தான் எடுத்து வந்த துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகளை முறைப்படி ஒப்படைத்து சரண் அடைந்தாள்.
 
இந்த நிகழ்ச்சியை பார்க்க மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்தார்கள். அவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களைப் பார்த்து பூலான்தேவி கைகளை அசைத்தாள். பிறகு இரு கைகளையும் கூப்பி கும்பிட்டாள். அப்போது கூடியிருந்த மக்களும் அவளை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தார்கள்.
 
பின்னர் பூலான்தேவியின் கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் தங்கள் துப்பாக்கிகளையும், வெடிமருந்துகளையும் ஒப்படைத்துவிட்டு முதல்_மந்திரியிடம் சரண் அடைந்தார்கள். சரண் அடைந்தவர்களில் பூலான்தேவியின் காதலன் மான்சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிகழ்ச்சியில் வேறு சில கொள்ளை கோஷ்டிகளைச் சேர்ந்த 24 கொள்ளைக்காரர்களும் சரண் அடைந்தார்கள்.
 
கொள்ளைக்காரர்கள் சரண் அடைந்த பிறகு முதல்_மந்திரி அர்ஜூன்சிங் பேசினார். அவர் கூறுகையில், "எந்தவித நிபந்தனையும் இன்றி பூலான்தேவி சரண் அடைந்து இருக்கிறார். இது போலீசாரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்று குறிப்பிட்டார். பூலான்தேவி சரண் அடைந்த நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
 
பூலான்தேவியை ஒலிபெருக்கியில் பேசும்படி போலீஸ் அதிகாரி கேட்டுக்கொண்டார். அவள் பேச மறுத்து ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் 27 கோரிக்கைகள் எழுதப்பட்டு இருந்தன. அதில் முக்கியமானவை வருமாறு:-

எங்களை தூக்கில் போடக்கூடாது.
கை விலங்கு மாட்டக்கூடாது.
போலீஸ் காவலில் வைக்கக்கூடாது.
தனி கோர்ட்டில் விசாரிக்க வேண்டும்.
 
ஜலான் மாவட்டத்தில் படித்து வரும் என் 14 வயது தம்பிக்கு வேலை கொடுக்கவேண்டும். உத்தரபிரதேசத்துக்கு திருப்பி அனுப்பக்கூடாது. சிறையில் விசேஷ வகுப்பில் வைக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பூலான்தேவி எழுதி இருந்தாள்.
 
"கொள்ளைக்காரியாக வாழ்ந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்தாள். சரண் அடைவதற்கு முன் பூலான்தேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டாள். முன்தினநாள் முழுவதும் அவள் எதுவும் சாப்பிடவில்லை. சரண் அடைந்த பிறகு, பூலான்தேவி குவாலியர் நகர சிறையில் அடைக்கப்பட்டாள்.
 
சரண் அடைந்தபோது பூலான்தேவிக்கு 26 வயதுதான்

source:மாலைமலர்

தொடரும்................

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இராணுவ, சிங்கள – பவுத்த மயமாக்கல் ஆகியவற்றால் முற்றுகையிடப்படும் தமிழீழம் !


 

 

இலங்கை சுதந்திரம் பெற்ற 62 ஆவது ஆண்டு நிறைவை சிங்கள தேசம் கண்டியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. இலங்கையின் வட – கிழக்கு மாகாணங்களை சிங்களப் பேரினவாத அரசு தனது மேலாண்மைக்குள் வேகமாகக் கொண்டு வருகிறது. இலங்கைத் தீவின் வரலாற்றில் அது என்றுமே ஒரு நாடாக, ஒரே அரசாக இருந்தில்லை.

இராசரட்டை, உறுகுணரட்டை, மாயரட்டை என இலங்கை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை வெவ்வேறு குறுநில அரசர்கள் ஆண்டார்கள். 
முதலாவது விஜயபாகு, ஆறாவது விக்கிரமபாகு இவர்கள் காலத்திலேயே இலங்கை ஒரு குடைக்குள் ஆளப்பட்டது எனக் கொள்ளலாம். குடியேற்ற நாடுகளில் ஒன்றான போர்த்துக்கேசியர் புயலில் சிக்குண்டு கிபி 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கரை தட்டியபோது இலங்கையில் மூன்று அரசுகள் வரையறை செய்யப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தன.

1)தெற்கே கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கோட்டை இராச்சியம். 

2)வடக்கே யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம். 

3)மத்தியில் கண்டியைத் தலைநகராகக் கொண்ட கண்டி இராச்சியம்.

யாழ்ப்பாண இராச்சியம்; கிபி 1215 தொடக்கம் கிபி 1619 வரை யாழ்ப்பாண மன்னர்களால் தனிநாடாக ஆளப்பட்டது. அதன் எல்லைகள் புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக கிழக்கே பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை விரிந்திருந்தது

ஒல்லாந்தர்; இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது. 

இலங்கையில் போர்த்துக்கேயரது ஆட்சி 1656 வரை நீடித்தது. பின்னர் அவர்களிடம் இருந்து ஒல்லாந்தருக்குக் கைமாறியது. ஒல்லாந்தரிடம் இருந்து 1796 இல் ஆங்கிலேயர் கைக்கு மாறியது. 

1815 இல் மத்தியில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனை ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வந்து அங்கிருந்து லேலூருக்கு அவனும் அவனது குடும்பமும் அனுப்பி வைக்கப்பட்டனர். 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கை மூலம் அந்த இராச்சியம் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டது. 

இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்த ஆங்கிலேயர் 1833 இல் நிருவாக வசதிக்காக மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை) ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1948 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது செயற்கையாக அய்க்கியப்படுத்திய இலங்கைத் தீவைப் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒன்றுபட்ட இலங்கையில் தங்களை முதலில் இலங்கையர் என்றும் பின்னர் தமிழர் என்றும் கருதிய தமிழர்கள் ஆங்கிலேயரிடம் தங்களது மூதாதையர் போர்முனையில் இழந்த அரசைப் பிரித்துத் தருமாறு கேட்கத் தவறிவிட்டனர். 

சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் போன்றோர் சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக தேசிய இனங்கள் (Founding Nations) என்றே நம்பினார்கள். தங்களைச் சிறுபான்மை இனம் என அவர்கள் நினைக்கவில்லை. கடைசிக் காலத்தில்தான் சிங்களவர்கள் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்ற திரைக்குப் பின்னால் அரசியல் அதிகாரம் முழுவதையும் தங்கள் கைக்குள் கொண்டுவரச் சதி செய்தார்கள் என்பதையும் தம்மை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டார்கள். 

அண்டை நாடான இந்தியாவில் முஸ்லீம் லீக் தலைவர் மொகமது ஜின்னா மாட்டை வழிபடும் இந்துக்களும் மாட்டை அடித்துச் சாப்பிடும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழமுடியாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு வாதாடி பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பிரித்து எடுத்துக் கொண்டணர். 'பிரிட்டிஷ்காரரே வெளியேறுங்கள் ஆனால் முதலில் இந்தியாவைப் பிரித்து விட்டு வெளியேறுங்கள்' என்று ஜின்னாவின் முழக்கத்தை தமிழ்த் தலைவர்கள் காதில் போட மறுத்துவிட்டார்கள்.

சோல்பெரி ஆணைக்குழு முன் தோன்றி 50 க்கு 50 க்கு வாதாடிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதில் சிறுபான்மை இனத்தவர்களது நலன்களைப் பாதுகாக்க சோல்பெரி யாப்பில் விதி 29 சேர்க்கப்பட்டது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தை டி.எஸ். சேனநாயக்கா நிறைவேற்றினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

1947 இல் நடந்த தேர்தலில் மலையக மக்கள் 7 தொகுதிகளில் வென்றிருந்தார்கள். இதனை சிங்கள இனவாதியான டி.எஸ். சேனநாயக்காவால் செரிக்க முடியவில்லை. இரண்டாவதாக மலையக மக்களின் வாக்குப் பலத்தால் மேலும் 20 தொகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெற்றிருந்ததை சேனநாயக்கா தனது அரசியல் இருப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என நினைத்தார்.

1952 இல் நடந்த தேர்தலில் வாக்குரிமை பிடுங்கப்பட்ட மலையக மக்களால் ஒருவரைக் கூட நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது போய்விட்டது. அறுபதுகளில் சிறிமா – சாத்திரி உடன்பாட்டின் கீழ் 525,000 மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். இதனால் சிங்களவர்களது எண்ணிக்கை அதிகரிக்கவும் தமிழர் எண்ணிக்கை குறையவும் ஏதுவாயிற்று.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எப்படிச் சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் மாறியதை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.


இலங்கை சுதந்திரம் பெறு முன்னரே சட்ட அவையில் காணி, வேளாண்மை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியேற்றினார். 

1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து அந்த சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வழிகோலினார். 

கிழக்கில் 1949 இல் கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலம் கல்லோயா மேம்பாட்டு அவையின் கீழ் கொண்டுவரப்பட்டு 40 கொலனிகளில் 20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டனர். இந்தக் குடியேற்றத்தின் விளைவாக 1963 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. 1960 இல் அம்பாரை (டிகமடுல்ல) என்ற புதிய தொகுதி சிங்களவர்களுக்கு உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது. 

எண்பதுகளில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மதுர ஒயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தினால் மேலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடியேற்றப்பட்டார்கள்.

இதே போல் திருகோணமலை மாவட்டத்தில் அல்லை – கந்தளாய் என்ற பாரிய குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன. 

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தின் இனவாரிஙாந மக்கள்தொகை விழுக்காடு மாறத் தொடங்கியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1827-1981 இடையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.


இதுபோன்று சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும், சிங்கள மரபணுவில் ஊறியுள்ள இந்த இனவெறியை நாம் இலங்கை அரசுடன் கூடி நின்று செயலாற்றி வெல்லமுடியுமா ? இலங்கை தேசிய நீரோட்டத்தில் கலக்க நினைக்கும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல வரலாறுப் பாடம். இனியாவது தெளிவுபெற இது ஏதுவாக அமையும்source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP