சமீபத்திய பதிவுகள்

இலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி

>> Thursday, April 30, 2009

 

இலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது.

இதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது வீழ்ந்து வெடிக்கின்றன எனறும், முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதுள்ளதாகத் தெரிய வருகிறது.

StumbleUpon.com Read more...

இலங்கை கேட்டிருந்த கடனை தற்பொழுது வழங்க முடியாது-உலக வங்கி

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு
 
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மிகவும் குறைவான அளவிலேயே அத்தியாவசிய சேவைகளை வழங்கியுள்ளதாகவும், மோதல் பிரதேசங்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

எனினும் அரசாங்கம் இதனை நிராகரித்தது.

இது தொடர்பில், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய கருத்து தெரிக்கும் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் கட்டுமானத்திற்கு வந்து விடுவார்கள் என்பதை கருதியே யுத்த நிறுத்தத்தை அறிவிக்க அரசாங்கம் தயங்குவதாக தெரிவித்தார்.

அத்துடன் பொது மக்களை காப்பாற்றி வெளியேற்றும் பொருட்டு, கனரக ஆயுதங்களை பாவிக்காது, மிதமான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பயங்கர வாத்திற்கு எதிராக போராடுகிறோம், ஆப்கானிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்தால் அவருக்கு அமெரிக்கா யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க வேண்டி அவசியம் இல்லை.

அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையில் இருக்கும் போது, அவருக்கு யுத்த நிறுத்த சந்தர்ப்பம் ஒன்றினை வழங்க எந்த தரப்பும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ' தமது சிந்தனை கோணத்தில், சிறிலங்கா அரசாங்கம், பொது மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்க மறுத்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்களை காலம் தாழ்த்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் அது நிற்க வேண்டிய சரியான இடத்துக்கு அழைத்து வர முடியும் என அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கடனை நிரந்தரமாக தடுத்து நிறுத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை எனவும், அரசாங்கம் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான சேவைகளை வழங்கும் போது அது வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் இந்த தீர்மானம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தினை நடத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும், இந்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் யுத்த வெற்றிகளை இலக்கு வைத்து, அரசியல் தீர்வு முன்வைப்பை மறந்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கி இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த கடன் தொகையினை பெறுவது தொடர்பாக, இலங்கையின் விசேட குழு ஒன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களையடுத்து, இந்த கடன் பெறல் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடும் பொருட்டு, நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரும் இலங்கை வரவிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் தென்ஆப்பிரிக்கா தப்பி சென்றுவிட்டார் உளவுத்துறை தகவல்

  

கொழும்பு, ஏப்.29-

பிரபாகரன் தென் ஆப்பிரிக்கா தப்பி சென்று விட்டதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைபுலிகள் கட்டுப்பாட்டில் தற்போது 6 கிலோ மீட்டர் நீள பகுதி மட்டுமே உள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இதற்குள்தான் தங்கி இருப்பதாக சிங்கள ராணுவம் நம்புகிறது. எனவே அவரை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால் பிரபாகரன் அங்கு இல்லை. அவர் தப்பி சென்று விட்டார் என்று தகவல்கள் வந்தபடி இருக்கின்றன. அவர் நீர்மூழ்கி படகு மூலம் தப்பி இருக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சிங்கள ராணுவ தளபதி கூறினார். அவர் ஏற்கனவே தப்பி சென்று விட்டார் என்றே இந்திய மற்றும் இலங்கை உளவு அமைப்புகளும் கூறுகின்றன.
 
விடுதலைப்புலிகளின் வலுவான கோட்டையாக இருந்த புதுக்குடியிருப்பு வீழ்ந்ததுமே அவர் தப்பி சென்று விட்டதாக உளவு அமைப்புகள் கூறுகின்றன. அவர் தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர் அல்லது லாவோஸ் நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
 
மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசுகளும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் அவர் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் இருப்பதால் தனக்கு அங்கு ஆதரவு கிடைக்கும் என்று கருதி அங்கும் சென்றிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
 
பிரபாகரன் தனக்கு ஆபத்து நெருங்கும்போது தப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் உளவு அமைப்புகள் சொல்கின்றன.

பிரபாகரனின் மெய்காப்பாளராகவும், தளபதியாகவும் இருந்து பின்னர் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா பிரபாகரன் பற்றி கூறும் போது பிரபாகரன் எப்போதுமே உயிருக்கு ஆபத்தான இடத்தில் இருக்க மாட்டார். சண்டை நடக்கும் இடத்தில் இருந்து பல மைல் தூரத்துக்கு அப்பால்தான் இருப்பார். இப்போது ஆபத்து நெருங்கி இருப்பதால் அந்த இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

 

நன்றி:மாலைமலர்

StumbleUpon.com Read more...

சென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

  
சென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான்.
 
இதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
 
பலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது.
 
4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


இந்த மர்ம ஆசாமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக ரெயிலை கடத்தி நாசவேலை செய்தார்? என்பது போன்ற கேள்விகள் எதற்கும் இன்னமும் விடைகிடைக்கவில்லை.
 
நேற்றைய நாசவேலையில் 2 ரெயில் என்ஜின்களும் முழுமையாக நாசமாகி விட்டன. 4 ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தது. விபத்து நடந்த வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது போல உருக்குலைந்து போனது. இந்த சேதங்களின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
பெரம்பூர் ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் டி.ஜி.பி. கே.பி. ஜெயின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
அவர்களது முதல் கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
 
கடத்தப்பட்ட ரெயில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதை இயக்குவது சுலபமான காரியமல்ல. நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ரெயிலை லாவகமாக ஓட்ட முடியும். ஒரே நேரத்தில் கால் மற்றும் கைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக ஓட்டினால் மட்டுமே ரெயில் சீராக செல்லும். இல்லாவிட்டால் வேகம் குறைந்து தானாக நின்றுவிடும்.
 
நேற்று அதிகாலை 4.45 மணிக்கு ரெயில் டிரைவர் கருணாநிதி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அப்போது ரெயிலின் மற்றொரு வாசல் வழியாக ஏறிய மர்ம மனிதன் திடீரென ரெயிலை இயக்கி உள்ளான். எடுத்த எடுப்பிலேயே ரெயில் வேகம் பிடித்தவுடன் இது சதி வேலை என்பது உறுதியாகிவிட்டது.
 
ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை அனல் பறக்க கடந்து சென்றுள்ளது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் திகைத்து போயிருந்தனர். அதிகபட்ச வேகத்தில் ரெயில் சென்றது தெரிய வந்துள்ளது.


பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில் பெரிய வளைவு ஒன்று வரும் அதில், வேகமாக சென்றால் ரெயில் கவிழ்ந்து விடும் என்பதால் அங்கு மட்டும் ரெயில் சற்று வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த சில நொடிகளில் ராட்சத வேகம் பிடித்து ஓட தொடங்கி உள்ளது. ரயிலை ஓட்டி சென்ற மர்ம மனிதன் ரெயிலில் இருந்து குதிக்க வாய்ப்பில்லை. அப்படியே குதித்தாலும் உடல் சிதறி பலியாகி இருப்பான். எனவே, மர்ம மனிதனும் ரெயில் விபத்து தாக்குதலில் உயிரை விட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
 
இதற்கிடையே அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் பிணத்தின் படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் ஒரு பிரிவினர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடை வைத்துள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
இதில், ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த வாலிபரை பார்த்ததாக கூறினார்.
 
மேலும் அந்த அடையாளம் தெரியாத வாலிபர் கடந்த ஒரு மாதமாக ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்ததாகவும் தினந்தோறும் தனது கடைக்கு வந்து அதிகாலை வேளையில் சிலருடன் போனில் பேசுவார் என்று கூறினார். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு வந்து போனில் பேசினார். என்ன பேசினார்? யாருடன் பேசினார்? என்பது தெரியவில்லை. இங்கிருந்து சென்றுவிட்டார் என போலீசாரிடம் அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
 
கடைக்காரரின் தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்தான் ரெயிலை ஓட்டிச் சென்ற மர்ம மனிதன் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் யார் யாருடன் போனில் பேசினார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


மர்ம மனிதன் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் ஏதாவது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
சாதாரண நபர்கள் யாரும் இந்த அளவுக்கு ரெயிலை கடத்தி சாதுர்யமான தாக்குதலை நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தில் மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களே அதேபோல் ரெயிலை கடத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி அதிகாலை வேளையில் பெரும் சேதத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம்.


 அது சரக்கு ரெயில் குறுக்கே வந்ததால் தவிர்க்கப்பட்டுள்ளது. உயிர் சேதமும் குறைந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
 
ஆனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே சென்டிரல் ரெயில் நிலையத்தின் மீதும் ரெயில்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தென்னக ரெயில்வேயையும், ரெயில்வே போலீசாரையும், உஷார் படுத்தி உள்ளது. அப்படி இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்டு தப்பித்த தீவிரவாதிகள் யாராவது சென்னைக்குள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
 
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ஒரு பிரிவு தடயங்களை சேகரித்து வருகிறது. ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் உள்ள காயம் அடைந்த பயணிகளிடம் ஒரு பிரிவும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவும், ரெயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் ஒரு பிரிவும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

StumbleUpon.com Read more...

தமிழ்வெளி எல்லாம் ஒரு திரட்டியா?

>> Wednesday, April 29, 2009

தலைப்பை பார்த்தவுடன் பலருக்கு என் மேல் கோபம் வரும்.அல்லது வருத்தப்படுவார்கள்.அன்பான தமிழ்வெளி நிர்வாகம் கூட சங்கடப்படலாம்.ஆனால் இதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை.பின்ன எதற்காக வைத்தீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது.
 
 
கொஞ்சம் பொருங்கள் விவரமாக விளக்குகிறேன்.
 
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை இணைய உலகில் திரட்டி என்றாலே நினைவுக்கு முதலில் வருவது தமிழ்மணம் அதை விட்டால் தேன்கூடு இரண்டு மட்டும் தான்.
 
பெயரளவில் தமிழ்வெளி திரட்டி இருந்து வந்தது.இந்த கடந்த வருடத்தில் அநேக திரட்டிகள் முளைத்தெழுந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
 
இதற்கென்ன என்று கேட்கிறீர்களா?கொஞ்சம் பொருங்கோ அதற்குத்தான்வருகிறேன் நான் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் சக பதிவர் ஒருவரின் அறிமுகம் எனக்கு கிடைத்திருந்தது.அவரிடம் ஒரு சில இணைய தொழில்நுட்ப விஷயங்களை மெயிலுவது வழக்கம்.
 
என்னுடைய பிளாக்கரில் தமிழ்மணம்,தேன்கூடு,மற்றும் தமிழ்வெளி ஆகிய திரட்டிகளின் கருவிப்பட்டைகளை(லிங்க் இமேஞ்) இணைத்து விட்டு சக பதிவரின் பிளாக்குக்கு சென்று பார்வையிட்டேன்.அதில் முந்தின இரண்டு திரட்டிகளின் தொடுப்பு மட்டும் இருந்தது.
 
 
உடனே நான் அவரிடம் மெயிலினேன்.அதில் இன்னொரு திரட்டி உண்டு.அதன் பெயர் தமிழ்வெளி.உடனே அதில் உங்களை பதிந்து அதன் தொடுப்ப்பை உங்கள் பிளாக்கரில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
 
ஆனால் அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை மிகவும் ஏமாற்றத்தில் தள்ளியது.ஒருவாராக சமாளித்துக்கொண்டேன்.அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா?
 
இப்பொழுது தலைப்பை மீண்டும் படியுங்கள்.இதுதான் அவர் என்னிடம் சொன்ன பதில்.
 
அதன் பிறகு நான் இந்த விசயத்தை பற்ற்ரி பேசவில்லை.பல நாட்கள் ஆகிவிட்டது.கடந்த வாரத்தில் நான் அந்த சக பதிவரின் பிளாக்குக்கு செல்ல நேரிட்டது.அப்ப்பொழுது என்னால் நம்பமுடியவில்லை.தலைப்பை சொன்ன அதே பதிவார் அவரின் பிளாக்கில் கீழே உள்ள படத்தை இணைத்திருந்தார்.எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது..
 
More than Blog Aggregation 
 
 
இதிலிருந்து ஒன்று தெரிந்தது .நன்றாக வாழ்ந்திருந்தாலே தமிழன் நம்மை வாழ்த்துவான்.சிருத்துப்போன நாட்களில் நம்மை தூற்றுவான்.நான் ஈழப்பிரச்சனை பற்றி பேசுகிறேன் என்று நினைக்க வேன்ண்டாம்.
 
 
பின்குறிப்பு:கடந்த மாதங்களில் என் பிளாக்கருக்கு திரட்டிகளின் வருகை பதிவாளர்கள் எண்ணிக்கையில்  தமிழ்வெளி திரட்டியே முதலிடம் பிடித்துள்ளது.
 
இதற்கு தமிழ்வெளியின் சமீபக்கால புத்தெழுர்ச்சியே ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.உங்கள் கருத்துக்களை அறியலாமா?

StumbleUpon.com Read more...

கலைஞரை வைத்து காமடி பண்ணும் ஜெயலலிதா-வீடியோ காட்சி-Eelam Amaippen - Jayalalitha

StumbleUpon.com Read more...

இங்கிலாந்து,பிரான்ஸ் தூதர்க்ளின் வேண்டுகோளை நிராகரித்த மகிந்தாஇங்கிலாந்து,பிரான்ஸ் தூதர்க்ளின் வேண்டுகோளை நிராகரித்த மகிந்தா

StumbleUpon.com Read more...

நிர்வாண நிலையில் கட்டிவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள்-படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் அதிர்வின் Report
 

கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும் , ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்லவழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இரணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும் இந்த மர்ம சிறைச்சாலைகளில் கழிப்பிட அறைகளுக்கு அருகாமையில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும். மலம் கழிப்பதற்க்கு கூட இருவராக செல்லும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அடைக்கப்பட்டுள்ள வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெண்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல சிங்கள சமையல்காரர்கள் தற்போது கிளிநொச்சியில் இராணுவத்திற்காக வேலைசெய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மனம் தாங்கமுடியாமல் முடியாமல் கசிந்த செய்திகளே இவை. பல வாரங்களாக அடைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரிவித்த அவர், அந்த மர்ம சிறைச்சாலைகளை புகைப்படம் எடுத்துத்தரவும் சம்மதித்துள்ளார்.

எம் இன மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகின்ற ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பை மக்களாகிய உங்களிடன் நாம் ஒப்படைக்கிறோம். உண்ர்ச்சி மிகு அதிர்வு வாசகர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

StumbleUpon.com Read more...

ஈழநாதம் மக்கள் நாளிதழ் செய்தி

>> Tuesday, April 28, 2009

StumbleUpon.com Read more...

விடுதலை புலிகள் அவசர வேண்டுகோள்

StumbleUpon.com Read more...

ஒபாமாவின் பார்வை தற்பொழுது தமிழர் பக்கம் திரும்பியுள்ளது

StumbleUpon.com Read more...

இலங்கைக்கான தூதரை திரும்ப பெற்றுக்கொண்ட ஸ்வீடன்

இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்.
சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின் அழைப்பை இலங்கை மறுத்துள்ளது. இதனையடுத்தே இலங்கைக்கான தூதுவரை சுவீடன் மீள அழைத்ததாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வருவதற்கான அழைப்பு மறுக்கப்பட்டமை ஸ்டொக்ஹோம் உடனான இலங்கையின் உறவுக்கு நல்லதல்ல என வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் திடீரென அங்கு செல்வதற்கான எனது அழைப்பை மறுத்துள்ளனர்" என ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தையடுத்து லக்ஸ்ஸம்பேர்கில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கார்ல் பில்ட் என்ன காரணத்திற்காக அழைப்பு மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை எனவும் கூறியுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

கலைஞர் துரோகிக்கு ஜெயலலிதா விரோதியே மேல்

>> Monday, April 27, 2009

துரோகியை நம்புவதை விட விரோதியை நம்புவது மேல்!!!
 
 
இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.

என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது. 

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது.  இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.  

இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.

இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! 

எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம்.  இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான். 

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து  மறைத்துவிட முடியாது. 

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை.  சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது. 

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும்.  இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார். 

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார்.  ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.

இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!

இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன்.  தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம்.  பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். 

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.

StumbleUpon.com Read more...

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளைமாளிகை தொலைபேசி தொடர்பின் விபரங்கள்

 
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் வெள்ளைமாளிகை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு ஈழத்தில் எமது உறவுகளின் நிலை குறித்து விழக்கம் அல்லது முறைப்பாடுசெய்ய ஏதுவாக கீள்கானும் தொலைபேசி இலக்கங்களை உபயோகியுங்கள்.

FAX என்னும் இருப்பதால் நீங்கள் முறைப்பாடுகளை கடிதமாக எழுதி FAX அனுப்பலாம். குறைந்தது 20,000 தொலைபேசி அழைப்புகள் இன்று செல்லுமாயின் பரக் ஒபாமாவின் நேரடி கவனத்திற்கு உங்கள் கோரிக்கை கொண்டுவரப்படும் நிலை இருக்கிறது.

அகையால் அனைத்து தமிழ் உறவுகளும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் முறைப்பட்டை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

Phone Numbers

Comments complains : 001 202 456 1111
Switchboard (dirct): 001 202 456 1414
FAX (direct) : 001 202 456 2461

StumbleUpon.com Read more...

முன்னேறும் இராணுவத்தை எதிர்த்து புலிகள் கடும் தாக்குதல் தரையிறங்க முயற்சித்த படகுகள் தாக்கியழிப்பு

 
 

மீதமுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

வான், கடற்படை மற்றும் தரைப்படை என்பனவற்றை தாக்குதலில் பயன்படுத்தி, கனரக ஆயுதங்களையும் முன் நகர்த்தி பாரிய அழிவினை ஏற்படுத்த இலங்கை அரசு முனைகிறது.

கடும் முறியடிப்புச் சமரில் விடுத்லைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முள்ளிவாய்க்கால் ஊடாக இராணுவத்தினரை தரையிறக்கி தாக்குதலை நடத்த இராணுவம் திட்டமிட்டிருந்ததாகவும். பல படகுகளில் இராணுவத்தினர் தரையிறக்கத்துக்காக காத்திருந்த வேளை புலிகளின்  RPG  தாக்குதல் பிரிவு நடத்திய தாக்குதலில் பல படகுகள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.
 

StumbleUpon.com Read more...

கடைசிக்கட்ட தாக்குதலுக்கு இராணுவம் தயார் இன்று இரவுடன் பாரியதாக்குதல் நடத்த திட்டம்

>> Sunday, April 26, 2009

 
 

இன்று இரவுடன் மீதமுள்ள பகுதிகள் மீது தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக இராணுவம் கடும் தாக்குதல் தொடுக்க இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரசாயன ஆயுதங்கள், பல்குழல் எறிகணை, மற்றும் கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவம் தயாராகி வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் திட்டமிட்ட தாக்குதலை இலங்கை இராணுவம் தொடுக்குமாயின், ஓர் இரவில் மட்டும் 10,000 தமிழர்கள் கொல்லப்படும் வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது. எனவே புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே உடனடியாக தங்கள் நாட்டில் உள்ள பாரளுமன்றம் முன்பாக கூடி , அல்லது கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூடி இறுதி இன அழிப்புப் போரை தடுக்க ஆவன செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.
 

StumbleUpon.com Read more...

தனி ஈழம்தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஜெயலலிதா

இலங்கை பிரச்சனைக்கு தனி ஈழம்தான் நிரந்தர தீர்வு என்று அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார் .. காணொளி இணைப்பு

StumbleUpon.com Read more...

கருணாநிதியின் இந்த பச்சை துரோகத்துக்கும்,500 கோடி சுவிஸ் வங்கி பணத்துக்கும் என்ன சம்மந்தம்-அதிர்வின் ரிப்போர்ட்

தமிழ் நாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் இடம்பெற ஆரம்பித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த விடையம். இருப்பினும் மறைமுகமாக பல விடையங்கள் நடந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக தற்போதைய நிலையில் இந்திரா காங்கிரஸ் கலைஞர் கூட்டணியானது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல அதிர்சி தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு பெருகிவரும் நிலையில், காங்கிரசுக்கு தமிழினத் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. சரளமாக சென்னை வந்து பல கூட்டங்களை நடத்திச் சென்ற சோனியா அம்மையார் தற்போது சென்னைக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. அங்கு வந்தால் அவர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என இந்திய புலனாய்வு துறையான ரோவின் எச்சரிக்கையை அடுத்து அவர் அடக்கிவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த வேளையில் எப்போதுமே கருப்பு கண்ணாடியுடன் காணப்படும் பழுத்த, பழம்பெரும் அரசியல்வாதி ஒருவருக்கு தற்போது நடுக்கம் ஆரம்பித்திருக்கிறது. 80 வயது தாண்டியும் நடுக்கம் இன்றி காணப்படும் இவர் தேர்தல் சமயங்களில் மட்டும் சிலவேளைகளில் நடுங்குவது உண்டு. கவிதைகள் பாடி,எதுகை மோனைகளில் கதைத்து கடைசியில் காலைவாரும் நல்ல பழக்கங்களை கொண்ட இவரது கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது சிவ்சங்கர் மேனனும் நாராயனனும் இலங்கை வர இருக்கிறார்கள். மே மாதம் 15ம் திகதி தமிழ் நாட்டில் தேர்தல். அதற்கு முன்னதாக இலங்கையில் ஒரு 10 நாள் யுத்த நிறுத்தத்தை அமுல் படுத்தினால் அதனை ஒரு பரப்புரையாக்கி பாமர தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி வோட்டுகளை வென்றுவிட இந்த கருப்பு கண்ணாடி மணிதர் திட்டம் தீட்டி இருக்கலாம்.

பலிக்குமா இலங்கை அரசுடன் ? இது ஒருபுறம் இருக்க, ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று சொல்லுகிறேன்...கேளுங்கள்.... ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் பொபோர்ஸ் எனப்படும் பீரங்கிகளை வெளிநாடு ஒன்றிடம் இருந்து வாங்கியதில் பெரும் ஊளல் நடைபெற்றது. கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றார் என பரவலாக பேசப்பட்ட நிலையில் அவர் தேர்தலையும் சந்திக்கவேண்டிய நிலையில் இருந்தார். அப்போது தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் பெரிய கட்சி, அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட பல கட்சிகள் இந்த பொபோர்ஸ் பீரங்கி ஊளலை ஒரு ஆயுதமாக தேர்தலில் பயன்படுத்தியது. அதி உச்சக்கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தன எதிர்கட்சிகள் ஒரு கட்டத்தில் பொபோர்ஸ் பீரங்கியின் படங்களை கட்-அவுட் ஆக செய்து (ரஜனி கமலுக்கு செய்வது போல) பல இடங்களில் கட்டினர். தேர்தல் பிரச்சாரங்களும் முடிவிற்கு வந்தது. தேர்தல் நாளும் வந்தது. வாக்குச் சாவடிக்கு சென்ற மக்கள் பலர் வாக்களிக்கும் போது எங்கே பீரங்கி சின்னம் இங்கு இல்லையே என அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு தொண்டை கிளிய கத்தி, பொர்போஸ் பீரங்கி பற்றி எடுத்துக் கூறி அதை விளங்கப்படுத்த அதனை படமாக்கி கட்-அவுட்டாக வைத்தால், அதனையும் ஒரு கட்சியின் சின்னம் என மக்கள் நினைத்துவிட்டார்கள் என்று அப்பதான் அதிகாரிகள் ஓடிமுளித்துள்ளார்கள். அப்போதைய தமிழ் நாட்டு மக்கள் வேறு தற்போதைய தமிழ் நாட்டு மக்கள் வேறு.. இப்பவும் பலிக்குமா கறுப்புக்கண்ணாடி மனிதரின் பாச்சா ? அதனால் தான் தேர்தலுக்கு கிட்டவாக ஒரு சிறிய யுத்த நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு அறிவித்தால் அதில் சற்று குளிர்காய ஆசைப்படுகிறது காங்கிரஸ். ஒருமுறை நிருபர் ஒருவர் நீங்கள் ஏன் எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள் என கலைஞரை கேட்டபோது, இதை நான் அணிந்திருந்தால் எல்லாரும் என்னைப் பார்க்கலாம் ஆனால் நான் யாரை பார்க்கிறேன் என்று யாருக்கும் தெரியாது என்று பதில் கூறியிருக்கிறார்.

இது இவ்வாறிருக்க கலைஞரால் ஏன் மத்திய அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்க முடியவில்லை என பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. இன்று கலைஞரின் கட்சி ஆதரவை விலக்கினால் மத்தியில் ஆட்சி கலையும் நிலையில் இருக்கும் போது ஏன் கலைஞரால் இதனைச் செய்ய முடியவில்லை? இதற்கும் ஒரு காரணம் தான் உண்டு. ஸ்பெக்ரம் ரெலிகொம் ஊளல்.

இதுவும் ஒரு சுவாரசியமான தகவல். ! ஸ்பெக்ரம் ரெலிகாம் ஊளலில் சுமார் 500 கோடி ரூபா கவிஞர் கனிமொழியின் சுவிஸ் வங்கி கணக்கில் இடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வைப்பில் இடப்பட்ட தொகையின் பற்றுச்சீட்டின் பிரதி ஒன்று எம்.கே. நாராயனனின் கையில் உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த பற்றுச்சீட்டின் பிரதி ஒன்று எவ்வாறு எம்.கே. நாராயனனின் கையில் சிக்கியது என ஆராய்ந்து, ஆராய்ந்து கடைசியில் வைத்தியசாலைவரை சென்று திரும்பி இருக்கிறார் கலைஞர்.

கலைஞர் இலங்கைத் தமிழரைப்பற்றியோ அல்லது ஆட்சிக்கலைப்புப் பற்றியோ வாய்திறந்தால் நாராயனன் கையில் இருக்கும் சுவிஸ் வங்கியின் பற்றுச்சீட்டுதான் நினைவிற்குவரும். இதனால் கனிமொழியை காப்பாற்ற அத்துடன் தனது மானத்தையும் காக்க கலைஞர் ஆடும் நாடகமே தனி. ஆங்காங்கே மாட்டிக்கொண்டு இவர் அடிக்கும் அரசியல் லூட்டியில் தமிழன் உயிர் நாளுக்கு நாள் மடிந்த வண்ணம் உள்ளது. போதாக்குறைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைவேறு பாடுகிறார் ஈழத் தமிழரைப் பற்றி.....


StumbleUpon.com Read more...

அனைத்துலக நாடுகளின் வேண்டுகோள்களை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு:

அனைத்துலக நாடுகளின் வேண்டுகோள்களை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு: புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகளின்  போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

போர்நிறுத்தம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றனர்.

இதனடிப்படையில் நாம் அனைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். சிறிலங்கா அரச படைகள் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணான போர் நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பம் அதியுச்ச அளவினை எட்டியுள்ளது.

ஒருபுறம் முல்லைத்தீவு கரையோரங்களில் உள்ள எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை சுற்றிவளைத்து குவிக்கப்பட்டுள்ள சிங்களப் முப்படைகளினதும் தாக்குதல்களுக்குள் அகப்பட்டுள்ள 165,000-க்கும் அதிகமான மக்கள் நாளாந்தம் எறிகணை வீச்சு, வான் குண்டுத் தாக்குதல் மற்றும் பலவித போர் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி உயிரிழப்புக்களையும், படுகாயங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசினால் இம் மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் பிற மனிதாபிமான வழங்கல்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பட்டினி அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், இப்பகுதிகளில் இருந்து பல வழிகளிலும் வெளியேறிய போது சிங்களப் படைகளிடம் அகப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அனைத்துலக விதிகளுக்கு முரணாக தடுப்பு முகாம்களிலும், இராணுவ வதைமுகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்கள் அனைத்துலக விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாது துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று குடியமர்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
மேலும், போர்முனைகளுக்கு இவ்வாறு அகப்பட்ட மக்களின் ஒருபகுதி கொண்டு வரப்பட்டு மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் முயற்சிகளும் சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பின்னணியில், ஐ.நா. இப்பகுதிகளுக்கு மனிதாபிமான வழங்கல் வழிகளை ஏற்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்பதுடன் இம்முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கிட தயாராகவுள்ளோம்.

மேலும் ஜி-8 நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, இந்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பு என்பனவற்றினை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.

இன்று ஏற்பட்டுள்ள வன்னி பேரவலங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து மக்களின் இழப்புக்களை நிறுத்தி, மனிதாபிமான வழங்கல்களை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்கு போர் நிறுத்தப்பட்ட சூழல் அவசியமானது என்கின்ற அனைத்துலக சமூக வேண்டுதல்கள் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதற்கான முதல் முக்கிய படியாக நாங்கள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பினை இன்று விடுக்கின்றோம்.

சிறிலங்கா அரசும் இத்தகையதொரு போர்நிறுத்த ஏற்பாட்டிற்கு உடன்படுமாறு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான போர் நிறுத்த ஏற்பாடானது மனிதப் பேரவலத்தினை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இன்றுள்ள மனிதப் பேரவலத்தின் பின்விளைவுகள் இலங்கைத் தீவின் மக்கள் சமூகங்கள் மீதும், பிராந்தியம் மீதும் ஏற்படுத்தக் கூடிய நீண்டகால சிக்கல்களிற்கும் முடிவுதரும் வழியினைத் திறக்கும் என்று நம்புகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

இது தொடர்பாக பேசிய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த நிலையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோருவது அர்த்தமற்றது என்று கூறி அதனை நிராகரித்துள்ளார்.

ஆயுதங்களை களைந்துவிட்டு, தாம் பணயமாக பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்துவிட்டு, சரணடைவது ஒன்றே விடுதலைப்புலிகளுக்கு இப்போது உள்ள ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

StumbleUpon.com Read more...

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது: பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்
[
தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி  எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில்  அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார்  அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

கவிஞர் தாமரையின் அனல் பறக்கும் பேச்சு

StumbleUpon.com Read more...

ஈழப்போரை நடத்தும் இவர்களுக்கா உங்கள் ஓட்டு
high qulty

StumbleUpon.com Read more...

புலிகளின் குறிபார்த்து சுடும் அணிகளிடம் சிக்கிக்கொண்ட சிறிலங்காவின் சிறப்பு படையணிகள்

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களின் போது சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல் அணிகளிடம் சிக்கி பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அம்பலவன்பொக்கணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சமரின்போது சிறிலங்கா இராணுவம் அதிகளவில் சிறப்பு படை அணிகளையும், கொமாண்டோ படையினரையும் பயன்படுத்தியிருந்தது. 

எனினும் விடுதலைப் புலிகள் குறிபார்த்து சுடும் வீரர்களை அதிகம் நிறுத்தியிருந்தனர். இவர்களின் தாக்குதலில் சிறப்பு படையணியைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உட்பட 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

சிறப்பு படையணியின் அல்பா பிரிவைச் சேர்ந்த கப்டன் அஜித் கமகே விடுதலைப் புலிகளின் மண் பாதுகாப்பு அரணை கைப்பற்ற முயற்சித்த போது விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். அவரை மீட்கச்சென்ற மேலும் நான்கு சிறப்பு படையினரும் அதே இடத்தில் குறிபார்த்து சுடும் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டிருந்தனர். 

கப்டன் கமகே மரணத்தின் பின்னர் உடனடியாக மேஜராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மாவிலாறு, சம்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டதற்காக இவருக்கு இரு தடவைகள் 'வீர விக்கிரம விபூசண' விருதுகள் வழங்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட மேஜர் கமகே இராணுவத்தில் உள்ள மிகச்சிறந்த குறிபார்த்து சுடும் அதிகாரி ஆவார் எனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே இரண்டாவது லெப். ஜெயதிலக்க தனது குழுவினருடன் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி ஒன்றை தாக்கி அழிக்க முற்பட்டிருந்த போது விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டிருந்தார்.

இத்தாக்குதலில் அவருடன் மேலும் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயமடைந்திருந்நதனர்.

ஐந்து நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை உளவு பார்ப்பதற்கு சென்ற ஜெயதிலக்க விடுதலைப் புலிகளின் மண் அணை ஒன்றில் இரகசியமாக ஏறி நின்றவாறு "விடுதலைப் புலிகளின் மணல் அணைகளை கைப்பற்றுவது இலகுவானது" என தனது மேல் அதிகாரிக்கு தெரிவித்திருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

அம்பாறையில் ரேடார் நிலையம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

 
 

அம்பாறை மாவட்டம் உகந்தை பகுதியில் அமைந்திருந்த  படையினரின் கடற்கண்காணிப்பு நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள்  நேற்று இரவு அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதில் ரேடார் அதிவேக விசைப்படகு வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட கடலோரப்பகுதி முகாம்களுக்கான விநியோகப் பணிகள் விடுதலைப் புலிகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் அறுகம்பை தொடக்கம் உகந்தை வரையிலான கடலோரப்பகுதி  படை முகாம்களுக்கான முக்கிய விநியோகப்பணிகள் கடல் மார்க்கமாகவே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அந்த விநியோகப் பணிகளுக்கு முக்கியமான கடற்கண்காணிப்பு நிலையமாக இந்த ரேடார் நிலையமே செயற்பட்டு வந்தது.  இதன் மீது நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் அணி தாக்குதல் நடத்தியது.

சுமார் 30 கடல் மைல் தூரம் கண்காணிப்பு செய்யக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்த ரேடார் அதிவேக விசைப்படகு, வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டன. இத்தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் சில படைக்கருவிகளையும் உபகரணங்களையும் தாம் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.  உகந்தை ஆலயப்பகுதியில் அமைந்துள்ள படையினரின் முகாமில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே இந்த ரேடார் மத்திய நிலையம் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

StumbleUpon.com Read more...

ஆயிரக் கணக்கான பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர்

>> Saturday, April 25, 2009

ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர்

மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 165,000 பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசத்தில் உணவுக் கையிருப்பு முடிவடைந்துள்ளதாகவும், உடனடியாக உணவு விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வன்னிச் சிவிலியன்களுக்கு உணவு வழங்க சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர்கள், தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்திற்கு செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கான உணவு விநியோகப் பாதைகளை மூடியுள்ளதாக புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால் மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள அப்பாவிச் சிவலியன்கள் பட்டினியால் வாடுவதாக புலிகள் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் விடுத்துள்ள கோரிக்கை கடிதம் ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

குடித்துவிட்டு ரோட்டில் தூக்கம்: வாய் வழியாக உடலுக்குள் புகுந்தது பாம்பு!

 
 
காஷ்மீர் மாநிலம் ஜம்முவை அடுத்த பக்ஷிநகரை சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் நாள் முழுவதும் போதையில்தான் உலா வருவார்.

நேற்று மாலை அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை அதிகமானதால் ரோட்டோரத்தில் படுத்தார். வாயை திறந்தபடி குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
 
அப்போது 31/2 அடி நீளமுள்ள விஷபாம்பு திடீரென அஸ்வின்குமார் வாயில் புகுந்தது. பின்னர் அது அவரது வயிற்றில் புகுந்தது. இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
 
அப்போது அஸ்வின்குமார் வாயில் பாம்பின் வால் இருந்தது. உடனே அவர்கள் வாலை பிடித்து பாம்பை வெளியே எடுத்தனர்.
 
அப்போது பாம்பு இறந்த நிலையில் வெளியே வந்தது.
 
அஸ்வின்குமார் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் பதறிப்போன அவர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிலமணி நேரத்தில் அவர் மயக்கம் தெளிந்தார். இதைப்பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மிகழ்ச்சி அடைந்தனர்.
 
டாக்டர்கள் அஸ்வின் குமாருக்கு இனியாவது மது அருந்துவதை விட்டு விடுங்கள். அந்த விஷ பாம்பு கடித்திருந்தால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

StumbleUpon.com Read more...

மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன

 மனிதக் கேடய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளின் குறிசூட்டு அணியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேசங்களையும் மீட்பதற்கான பெரும் யுத்த நடவடிக்கைக்கு சிறீலங்காப் படையினர் தயாரான போதும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன.

சிறீலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியவாறு மேற்கொண்டு வரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என பதிவு இணயத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

சிறீலங்காப் படையினரின் யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இராணு ஆக்கிரமிப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்களை மனிதக் கேடமான முன்னகர்த்தியவாறு படையினர் மேற்கொண்ட படை நகர்வுகளின் போது படையினரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குறி சூட்டு அணியினர் நடத்திய குறி சூட்டுத் தாக்குதல்களினால் அவை முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு நகர்வுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போதும் அவை விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதல்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதானல் படையினரின் நகர்வுகள் காலதாமதமாகி வருகின்றன.

மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தும் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மக்களை பச்சைப்புல்மோட்டைப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். அங்கிருந்தவாறே நகர்வுகள் மேற்கொள்ளப்படும் முன்னணி நிலைக்கு மக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
 

StumbleUpon.com Read more...

கமல்,ரஜினியை சீண்டு முடியும் தினமலர் பத்திரிக்கையின் சின்னத்தனம்

திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக்கும் இடையே சீண்டு முடியும் தன்னுடைய சின்னப்புத்தியை தொடங்கியுள்ளது.

ஈழப்போராட்டத்தை வேரோடு வெட்டியெறிய துணிந்துள்ள மத்திய அரசின் கயமைத்தனத்தை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட பத்மஸரீ விருதை திரும்ப கொடுக்க ஆயத்தமாகியுள்ள பாரதிராஜாவுக்கும்,கமல்,ரஜினி போன்ற முன்னனி நட்சத்திரங்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கி ஈழ உணர்வை திரைப்பபடத்துறையில் இருந்து முற்றாக அழித்துவிட தினமலர் களம் இறங்கியுள்ளது.

தினமலரின் கயமைத்தனத்தை எத்தனையோ முறை அறிந்துகொண்டுள்ள நாம் இதனை சரியாக எடுத்துச்சொல்லவேண்டியுள்ளது.

கீழே உள்ள படத்தை பெரிதாக்கி அதில் அடிக்கோடு போடப்பட்டுள்ள வார்த்தை பிரயோகங்கள் எந்த விதமான பலனை எதிர்பார்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தினமலர் கட்டுரையை முழுமையாக படிக்க

StumbleUpon.com Read more...

புலிகளின் தலைவர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம்: இராணுவத்திற்கும் கடற்படைக்கும் இடையே கருத்து மோதல்

>> Friday, April 24, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகள் குறித்து இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளை கட்டுப்படுத்த கடற்படை தவறியிருப்பதாக இராணுவத் தலைமைக்கு இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஏலவே முறையிட்டிருந்தனர்.

இதனையடுத்து கடற்படையினருக்கு என அதிசக்தி வாய்ந்த கதுவீகள் (ராடார்)  பொருத்தப்பட்ட படகுகளும் அதிவேக படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டு கடலில் கடற்படையின் பலம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு வலயங்களைக்கொண்ட கடல்வழி பாதுகாப்பு நடைமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் தற்போது இராணுவ உயர்மட்டத்திற்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இருப்பிடம் குறித்தே இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் தற்போதைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கடல்வழி நகர்வை கட்டுப்படுத்த முடியாமல் அவரை கடற்படையினர் கோட்டைவிட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசனம் எழுப்பப்பட்டுள்ள போதும் அந்த குற்றச்சாட்டை கடற்படை அடியோடு மறுத்துள்ளது.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என களத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடல்வழியாக அவர் எந்தவொரு நகர்வையும் செய்யமுடியாது என்றும் தமது பாதுகாப்பு அத்தகையதே என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க அழுத்தவும்................

StumbleUpon.com Read more...

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி தோல்வி

>> Thursday, April 23, 2009

 

டர்பன்:ஐ.பி.எல், டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டில்லி டேர் டெவில்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. டில்லி டேர் டெவில்ஸ் அணி வீரர் டி வில்லியர்ஸ் அபாரமாக விளையாடி தொடரின் முதல் சதம் அடித்தார்.

வெற்றி இலக்கு 190 ரன் என்ற அடிப்படையில் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து தோற்றது. சென்னை அணி வீரர் ஹெய்டன் 57 ரன்னுக்கு அவுட் ஆனார்.

StumbleUpon.com Read more...

புலித்தலைவர்கள் சரணடைந்தது உண்மையா??

தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் அகியோர் சரணடையவில்லை சிகிச்சை பெற்று வந்தவர்களை இராணுவம் கைதுசெய்துள்ளது.
பிரசுரித்த திகதி : 23 Apr 2009

விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக விளங்கிய தயாமாஸ்டர் இருதய அறுவை சிகிச்சை பெற்று உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இன் நிலையில் திடீர் தாக்குதல் மூலம் வைத்தியசாலையை சுற்றிவளைத்த இராணுவத்தினர், அவரை படுக்கையில் வைத்து கைதுசெய்துள்ளனர். ஒரு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நோயாளி என்று கூடப்பாராமல், இவரை கைதுசெய்து, போதிய மருத்துவ வசதிகள் எதுவும் வழங்காமல் அவரை தடுத்துவைத்துள்ளதாக அறியப்படுகிறது.

அத்துடன் அவர் தானாக வந்து சரணடைந்ததாக பரப்புரைகளை மேற்கொள்கிறது இலங்கை இராணுவம். களத்தில் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மன உறுதியை உடைக்கும் நடவடிக்கையாகவே இவ்வாறு இராணுவம் பொய்யான தகவல்களை வெளியிட்டுவருவதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

StumbleUpon.com Read more...

சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்:தமிழ் திரையுலகம்; ரஜ்னிகாந்த்தும் கலந்துகொள்ள சம்மதம்

இலங்கையில் போரை நடத்தி தமிழர்களை கொன்றொழிக்கும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்: தடதடக்கும் தமிழ் திரையுலகம்; ரஜ்னிகாந்த்தும் கலந்துகொள்ள சம்மதம்
 
அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்! என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.

ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே ஒலிவாங்கியை பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். "ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல் கொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட சிலர், ஈழப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

தமிழக அரசோ இறையாண்மைக்கு குந்தகமாகப் பேசாத போதும், சீமானின் பேச்சு காங்கிரசுக்கு எதிராக இருந்ததால்,வேண்டு மென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் தள்ளியது.

கடலூர் கோர்ட்டில் அவரைப் பார்க்கச் சென்ற இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியவர்களை வேண்டுமென்றே ஒருநாள் சிறையில் வைத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டோம்.

ஆனால், ஈழத்தில் இரண்டரை இலட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கை முடியப் போகிற அபாயத்தில் இருந்தும், மத்திய-மாநில அரசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது! என்றவர்கள் தொடர்ந்தனர்.

கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு' என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.

ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி. பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்

StumbleUpon.com Read more...

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி ராஜபக்ச உண்ணாவிரதம்.

>> Wednesday, April 22, 2009

 

 வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தவும்.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டியும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடாத்தி வருகிறார்கள்.குறிப்பாக ஜரோப்பிய நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ்.ஜெர்மனி.சுவிஸ்.நெதர்லாந்து.ஆகிய நாடுகளிலும். கனடாவிலும் தொடர்போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து உலக நாடுகளின் போக்கில் சிறிது மாற்றம் வந்திருக்கின்றது. இந்த நாடுகளும் போரை நிறுத்தச் சொல்லி இலங்கையரசிற்கு அழுத்தமற்ற ஒரு வேண்டுகோளை இலங்கையரசிற்கு வைத்திருக்கின்றன.அதே நேரம் ஜ.நா சபையும் தன்பங்கிற்கு கவலை தெரிவித்துள்ளது. அது தவிர்ந்து மனிதவுரிமை மையம். மற்றும் வேறு மனிதவுரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும். ஜ.நா சபையிடமும் இலங்கையரசிடமும் நேரடியாகவே தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. இதே நேரம் உலகநாடுகள் நேரடியாக தலையிடவிடாமல் தடுத்து தானே நேரடியாக இலங்கையரசுடன் சேர்ந்து இந்த யுத்தத்தினை நடாத்தும் இந்திய அதிகாரத்திடமிருந்து பிரணாப் முகர்ஜியும்..நாராயணனும்... மேனனும் கூட போரை நிறுத்தச்சொல்லி அறிக்கை விட்டுவிட்டார்கள். அதே நேரம் படுகொலை செய்யப்படும் தமிழர்களை நினைத்து ச&