சமீபத்திய பதிவுகள்

கம்யூனிச சீனாவில் இனிமேல் இராணுவ வீரர்கள் சிலுவை அணிந்து வரவேண்டும்!!!!!!!!!

>> Monday, May 19, 2008

StumbleUpon.com Read more...

27 வருடங்களாக நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் மறக்காத அபூர்வ பெண்
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/20/015/20_05_2008_015_004.jpg

StumbleUpon.com Read more...

அமைச்சராக பதவி ஏற்ற நிர்வாண அழகி-
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/20/015/20_05_2008_015_002.jpg

StumbleUpon.com Read more...

நக்சலைட் ஆக மாறுவேன் -தமிழக எம்பி ஆவேசம்

மீண்டும் நக்சலைட் ஆக மாறுவேன் - தென்காசி எம்பி ஆவேசம்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

தென்காசி: நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, ஏழைகள் படும் அவதியைப் பார்க்கும்போது மீண்டும் நக்சல்பாரி இயக்கத்திற்கே சென்று விடலாமோ என்று தோன்றுகிறது என்று தென்காசி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ அப்பாதுரை ஆவேசமாக கூறியுள்ளார்.

தென்காசியை அடுத்த மேலகரத்தில் சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையான மயான சாலை அமைக்க நிதி ஓதுக்கீடு செய்தமைக்காக அப்பாத்துரை எம்பிக்கு பாராட்டு விழா நடந்தது.

விழாவில் அப்பாத்துரை பேசுகையில், நாடு இவ்வளவு தூரம் முன்னேறிய நிலையிலும் ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

மக்களின் மருத்துவ தேவை, குடிநீர் தேவை, போன்றவற்றை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தால் நிதி இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் கோடிக்கனக்கான பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டும் நிதிபாற்றாக்குறை வந்து விடுகிறது. அரசு தானிய கிட்டாங்கியில் போதுமான உணவு இருப்பு இருந்தும் நாட்டில் 34 கோடி பேர் ஒருவேளை உணவு பற்றாக்குறையில் உள்ளனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது செயல்பட்ட நக்சல்பாரி இயக்கத்திற்கே திரும்பி சென்று விடவேண்டும் என்று எண்ணுகிறேன் என்றார்.
 

StumbleUpon.com Read more...

டிரஸ்ஸிங் அறைக்கு இனிமேல் போகக்கூடாது-கண்டிப்பாக நான் போவேன்

வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்ல ஷாருக் கானுக்குத் தடை
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Shahrukh Khan
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்குச் செல்ல ஐசிசி திடீர் தடை விதித்துள்ளது. ஆனால் தனது அணி வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்குள் செல்வதை யாரும் தடுக்க முடியாது என ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கொல்கத்தாவில் நடந்த சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, தனது அணி வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் இருந்த ஷாருக்கைச் சந்தித்து இந்தத் தடையை கூறினர்.

இதுபோல இனிமேல் டிரஸ்ஸிங் ரூம் வரை நீங்கள் வரக் கூடாது. இனி வரும் போட்டிகளில் இதை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

ஐசிசியின் இந்த நடவடிக்கை குறித்து ஷாருக் கான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வீரர்களுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஐசிசியின் உத்தரவு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

எனக்கு ஐசிசியின் விதிகள் தெரியாது. கொல்கத்தா வந்து எனது அணி வீரர்களை நான் சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது அணி எப்போதெல்லாம் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் நான் அவர்களுடன் இருப்பேன் என்றார் ஷாருக்.

StumbleUpon.com Read more...

இத்தாலியின் மிக முக்கியமான முஸ்லீம் போப் முன்னிலையில் கத்தோலிக்கத்தை தழுவினார்

இத்தாலியின் மிக முக்கியமான முஸ்லீம் போப் முன்னிலையில் கத்தோலிக்கத்தை தழுவினார்

போப்பாண்டவர் பெனடிக்ட் 16 இத்தாலியின் முக்கிய முஸ்லீமான எகிப்தியரான மெக்தி ஆலம் என்பவர் மீது தண்ணீர் ஊற்றி, கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்ததாக அறிவித்தார்.

இந்த மெக்தி ஆலம், முஸ்லீமாக இருந்தபோது பாலஸ்தீன தற்கொலைப்படைகளை கண்டித்தார். அதனால் ஹமாஸ் என்ற அமைப்பு இவரை கொல்லப்போவதாக அறிவித்தது. இதனால், தீவிரமாக சிந்தித்த மெக்தி ஆலம், இஸ்லாமின் அடிப்படையே வன்முறைதான் என்று அறிந்து "இஸ்ரேல் வாழ்க" என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தற்போது கத்தோலிக்க மதத்தையும் தழுவியுள்ளார்.

Pope Benedict XVI baptizes prominent Italian Muslim
The Associated PressPublished: March 23, 2008


VATICAN CITY: A prominent Italian Muslim - an iconoclastic writer who has condemned Islamic extremism and defended Israel - converted to Catholicism in a baptism by the pope at the Vatican Easter service.

Magdi Allam, an Egyptian-born, non-practicing Muslim who is married to a Roman Catholic, has infuriated some Muslims with his books and columns in the daily newspaper Corriere della Sera, where he is a deputy editor.

Allam titled one book "Long Live Israel."

As a choir sang Saturday night, Pope Benedict XVI poured holy water over Allam's head and said a brief prayer in Latin.

"We no longer stand alongside or in opposition to one another," Benedict said in a homily reflecting on the meaning of baptism. "Thus faith is a force for peace and reconciliation in the world: distances between people are overcome, in the Lord we have become close."

Today in Europe
Sarkozy defends France's nuclear arsenalCypriot leaders move forward on reconciliationDuma wants Putin to back Georgian separatists
Allam, 55, told the newspaper Il Giornale in a December interview that his criticism of Palestinian suicide bombings had provoked threats on his life in 2003, prompting the Italian government to provide him with a security detail.

Yahya Pallavicini, vice president of Coreis, a group of observant Muslims in Italy, said he respected Allam's choice but said he was "perplexed" by the symbolic and high-profile way in which he chose to convert.

"If Allam truly was compelled by a strong spiritual inspiration, perhaps it would have been better to do it delicately," Pallavicini said, according to a report by the ANSA news agency.

Allam, who has a young son with his Catholic wife and two adult children from a previous relationship, indicated in the Il Giornale interview that he would have no problem converting to Christianity. He did not speak to the press Saturday, and his newspaper said it had no information about his conversion.

Allam explained his decision to title a recent book "Viva Israele" by saying he wrote it after he received death threats from Hamas.

"Having been condemned to death, I have reflected a long time on the value of life. And I discovered that behind the origin of the ideology of hatred, violence and death is the discrimination against Israel. Everyone has the right to exist except for the Jewish state and its inhabitants," he said. "Today, Israel is the paradigm of the right to life."

In 2006, Allam was a co-winner, with three other journalists, of the $1 million Dan David Prize, named for an Israeli entrepreneur.

The prize committee cited Allam for "his ceaseless work in fostering understanding and tolerance between cultures."

StumbleUpon.com Read more...

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி

தமிழ் நடையில் தடம் பதித்தவர்

.
.
எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.
பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு எழுதி வந்திருக்கிறார்.
.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வந்த சுஜாதாவை எந்த அடைமொழிக்குள்ளும் அடக்கி விட முடியாது.

ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், தனது மனைவி "சுஜாதா' பெயரை புனைப்பெயராக எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளராகவே அறியப்பட்டார். தனக்கென தனித்துவமிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்.

குமுதத்தில் தொடராக வெளி வந்த முதல் நாவலான "நைலான் கயிறு' மூலம் வாசகர்கள் மத்தியில் பிரபலமான "சுஜாதா', பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதி குவித்த வேகம் அசாத்தியமானது.

சுஜாதா எழுதாத தமிழ் பத்திரிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துலகில் அவரது கொடி பறந்தது.

"கணேஷ்வசந்த்' பாத்திரங்களை பிரபலமாக்கிய சுஜாதா, இன்னொரு பக்கம் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்னும் பெயரில் "கணையாழி' இலக்கிய பத்திரிகையில் கனமான விஷயங் களை தனக்கே உரிய இலகுவான நடையில் எழுதி வந்தார்.

அவரது இலக்கிய முகம் வெகுஜன வாசகர்களுக்கு தாமதமாகவே அறிமுகமானது. அதற்கு முன்பாகவே அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்லக் கூடியவராக அவர் அறியப்பட்டார்.

அவருடைய நவீன தமிழ் நடை இதற்கு உதவியாக இருந்தது. "கம்ப்யூட்டர்' என்பது ஒரு சொல்லாக கூட அறிமுகமாகாத காலத்திலேயே அவர் சிலிக்கான் பற்றியும், கம்ப்யூட்டர் பற்றியும் எழுதியது வியப்புரிக்குரியது.

அற்புதமான அறிவியல் புனை கதைகளையும் எழுதியதோடு, விஞ்ஞானத்தின் சமகால போக்கை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருந்தார்.
நாவல்கள் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விட்ட சுஜாதா, பின்னர் புதிய வேகத்தோடு
எழுதத் தொடங்கினார்.

இடையே மெக்சிகோ சலவைக்காரி ஜோக் தனக்கு தெரியும் என்று சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவரால் முடிந்தது. கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், பதவிக்காக, மோதிரக் கதைகள், கொலையுதிர் காலம், வசந்தகால குற்றங்கள் என்றும் எழுத முடிந்தது.

விஞ்ஞானம் பற்றி எழுதி வந்த சுஜாதா, தனது சாதாரண நாவல்களில் கூட போகிற போக்கில் உலக விஷயங்களையும், பிரபலமான ஆளுமைகளையும் குறிப்பிட்டபடி இருப்பார்.

 இப்படி வைரக் கடத்தல் பற்றிய கதையில் ஒற்றை வரியில் "டி பியர்ஸ்' நிறுவனம் பற்றி எழுதி வருவார். கணேஷ் விடுமுறைக்காக படிக்க டால்ஸ் டாயின், வார் அண்டு பீஸ் நாவலை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதுவார்.

இப்படி நல்ல வாசகர்களுக்கு தனது நாவலில் அவர் ஆங்காங்கே பொறி வைத்திருப்பார். அதை பிடித்துக் கொண்டால் வாசகர்கள் தீவிரமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள தொடங்கலாம்.

பின்னர் கணையாழியில் எழுதியது போலவே, பிரபலமான பத்திரிகை களிலும், இலக்கிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். ஞானக் கூத்தனின் கவிதைகளையும், சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையையும், நகுலனின் நினைவுப் பாதையையும், தி.ஜானகிராமனின் கட்டிப்போடும் தமிழ் நடை பற்றியும் அவர் சராசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இசங்களின் பெயரில், தமிழில் இலக்கிய உலகில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, சுஜாதா ஆரவாரமே இல்லாமல் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சுட்டிக்காட்டி பிரபலமான இளம் கவிஞர்களும் உண்டு. மனுஷ்ய புத்ரன், மகுடேஸ்வரன் போன்றோர் இதற்கு உதாரணம். அவர் கை காட்டிய புத்தகங்களின் பின்னே ஆயிரக்கணக்கான வாசகர்கள் படையெடுக்க தயாராக இருந்த நிலையிலும் சுஜாதா "விமர்சனம்' என்ற மகுடம் தரித்துக் கொள்ள விரும்பியதில்லை.

நல்ல விஷயங்களுடனான எனது பரிச்சயத்தை பகிர்ந்து கொள்வதே எனது பணி என அவர் செயல்பட்டு வந்தார். ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்ற நிலையில் இருந்து இலக்கிய உலகிற்கும், வெகுஜன வாசகனுக்கு மான பாலமாக அவர் உருவாகி நின்றார்.

கேள்விபதில் பகுதி மூலம் அவர் வாசகர்களுக்கு தெரியப்படுத்திய விஷயங்களும் அநேகம்.
எழுதாத விஷயமே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பல துறைகள் பற்றி எழுதிய சுஜாதா, திருக் குறளுக்கும் உரை எழுதினார். புறநானூற்றை எளிமைப்படுத்தி தருவதாக கூறினார். திரைக்கதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக் கொடுத்தார்.

பிரபலமாக இருந்த காலத்தில், "காயத்ரி' உள்ளிட்ட நாவல்களை படமாக்க கொடுத்து இயக்குனர்கள் அவற்றை சிதைத்து விட்டார்கள் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா, பிற்காலத்தில் தமிழ் திரை உலகில் ஐக்கியமான விதமும் வியப்பிற்குரியது தான். மணிரத்னம், ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படைப்பு குழுவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

சுயசரிதையை கூட வழக்கம் போல் எழுதாமல், அவை கட்டுரைகள் போலவே அவர் "கற்றதும் பெற்றதும்' என எழுதினார்.

தனது காலத்தில் பெரும் புகழை சம்பாதித்த சுஜாதா, சர்ச்சைகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல தான்! அதையும் வெகு ஜனமாக்க முடிந்தது அவரது பலம் என்றால் அதுவே அவரது பலவீன மாகவும் இருந்தது.

கனமான விஷயங்களை ரொம்பவும்எளிமை படுத்தி விடுவார் என்பதும், இலக்கியத்தரமாக அதிகம் எழுதியது இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பாக, நழுவிச் செல்லும் அவரது பண்பு, கடுமையாக விமர்சிக்கப் பட்டதுண்டு.  புறநானூறு உரையில், தமிழ் இலக்கியத்தை தன் மேதாவித்தனத்தால் தப்பும் தவறுமாக எழுதி இருக்கிறார் என்றும் கூறப் பட்டது. விமர்சனங்களை கேட்டு அவர் அதிகம் கோபப்பட்டதில்லை. பெரும்பாலும் புன்னகையுடனேயே எதிர் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி. இலக்கிய ஆசான் என்று அவரை பலர் ஏற்க மறுக்கலாம், ஆனால் நவீன தமிழ் உரையில் புதிய வேகத்தை கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

சங்கத் தமிழில் துவங்கி தமிழுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. தமிழ் உரைநடையை பொறுத்தவரை அதற்கு நவீனத்துவத்தை ஏற்படுத்தி புதிய பரிமாணத்தை தந்ததற்காக தமிழ் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இரா. நரசிம்மன்


http://www.maalaisudar.com/staticpage.php?id=10003%20&%20section=10%20&%20catid=62%20&%20cat=?????????????

StumbleUpon.com Read more...

நடிகர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ எச்சரிக்கை

ஷாருக்கானுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
.
.
 புதுடெல்லி, மே 19: பிரபல இந்தி நடிகரும், ஐபிஎல் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் சென்றார்.

ஆனால் அவர் வீரர்கள் தங்கும் அறைக்கோ, மைதானத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கோ செல்லக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குழு கூறிவிட்டது.

ஐசிசி விதிகளின் படி தாம் அணி வீரர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஷாருக்கான் தெரிவித்தார்.

ஐசிசியின் இந்த செயல் தம்மை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக ஷாருக்கான் கூறினார். தாம் எப்போதும் வீரர்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும், தமது அணி ஆடும் போட்டிகள் நடைபெறும் போது தாம் கொல்கத்தாவுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐசிசி விதிகளை ஷாருக்கான மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அது கூறியுள்ளது.

இதனிடையே ஐபிஎல் போட்டிகளின் போது ஷாருக்கானின் நடத்தை குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.


http://www.maalaisudar.com/newsindex.php?id=13643%20&%20section=1

StumbleUpon.com Read more...

மத்திய அரசின் லோக்சபா சானலில் அரை நிவாண காட்சிகள் - மக்கள் முகம் சுளிப்பு

லோக்சபா சானலில் ஆபாச காட்சிகள் - மக்கள் முகம் சுளிப்பு
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgets
மதுரை: மத்திய அரசின், லோச்சபா டிவி சேனலில் பாலியல் காட்சிகள் தாராளமாக காட்டப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வசதியாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை ஆரம்பித்த சேனல்தான் லோக்சபா சானல். இதில் லோக்சபா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதுதவிர விவாதங்கள், பேட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

தற்போது இந்த சேனலில் திரைப்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பாடல் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

சில தினங்களுக்கு முன்பு இரவில் அந்த சேனலில் ஒளிபரப்பான ஒரு படத்தில் பாலுணர்வைத் தூண்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பினர்.

அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் இருப்பது போன்ற அந்தக் காட்சி குடும்பத்துடன் டிவி பார்ப்பவர்களை நெளிய வைத்தது.

தனியார் சேனல்கல்கள் தான் நேயர்களை கவரவும், விளம்பர படங்கள் மக்களை சென்றடையவும் பாலுணர்வு தூண்டும் வகையில் காட்சிகள் அமைப்பது வழக்கம்.

ஆனால் பாரம்பரியம் மிக்க லோக் சபா பெயரில் ஒளிபரப்படும் சேனலிலும் இந்த நிலை தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்


http://thatstamil.oneindia.in/news/2008/05/18/tn-obscene-scenes-in-loksabha-channel.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP