சமீபத்திய பதிவுகள்

ஐபாட் - இசையை வென்ற இனிய சாதனம்

>> Wednesday, November 4, 2009

 
 மியூசிக் ரசிக்க சரியான சாதனம் எது என்று கேளுங்கள் – உடனே ஐ–பாட் என்று எவரும் கூறுவார்கள். அக்டோபர் 21ல் தன் ஒன்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் ஐபாட் இன்று இசை உலகின் ஓர் அடையாளம். அறிமுகமான எட்டு ஆண்டுகளில் 22 கோடி அளவில் விற்பனையான சாதனம் ஐபாட் தான். அதிகமான எண்ணிக் கையில் விற்பனையான மியூசிக் பிளேயர் என்று மட்டும் இது பெயர் பெறவில்லை; அதிகமான அளவில் விற்பனையான டிஜிட்டல் சாதனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. எப்படி வனஸ்பதி என்பதற்கு நம்மில் பெரும்பாலானோர் டால்டா என்று அதனைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்கி றோமோ, நகல் காப்பி என்பதற்கு செராக்ஸ் என அதனைத் தந்த நிறுவனத்தின் பெயரைக் கூறுகிறோ மோ, அதே போல இன்று மியூசிக் பிளேயர் என்றால் அது ஐபாட் என்றே பெயர் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தும் ரசிகர்கள், கண்களை மூடிக் கொண்டு உரத்த குரலில் இதுதான் உலகிலேயே உயர்ந்த சாதனம் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு அனைத்து நாடுகளிலும், மக்களின் ஏகோபித்த இசை தரும் சாதனமாக ஐபாட் வளர்ந்து வந்துள்ளது.


எப்படி ஐபாட் இந்த அளவிற்குப் புகழைப் பெற்றது? புதிய வழி ஒன்றின் மூலம் இசையைத் தரும் சாதனமாக அறிமுகமான இந்த டிஜிட்டல் தோழன், தனி ஒரு அந்தஸ்தை அடைந்தது எப்படி?முதன் முதலில் அக்டோபர் 21, 2001 அன்று முதல் ஐபாட் அறிமுகமானது. இப்போது இருக்கும் இதே வடிவத்தினையே அப்போதும் பெற்றிருந்தது. 5 ஜிபி கொள்ளளவும் கொண்டிருந்தது. 1000 பாடல்களைப் பதிவு செய்திட அதனால் முடிந்தது. கிளிக் செய்வதற்கு சிறிய சக்கரமும், பாடல்களை இயக்கவும் நிறுத்தவும் பட்டன்களும் இருந்தன. அதனுடைய திரை 160 x 128 பிக்ஸெல் கொண்ட கருப்பு வெள்ளை திரையாக இருந்தது. கம்ப்யூட்டருடன் பயன்படுத்த பயர்வயர் (Firewire) இன்டர்பேஸினை யே பயன் படுத்தியது. அப்போதிருந்த யு.எஸ்.பி. 1.1 இன்டர்பேஸைக் காட்டிலும் வேகமாக இயங்கியது. ஆனால் முதலில் வந்த ஐபாட், ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டருடன் மட்டுமே இணைந்து இயங்கியது. விண்டோஸ் பயன்படுத்தியவர்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது.
2002 மார்ச்சில் இரண்டாவது வகை ஐபாட் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கொள்ளளவு 20 ஜிபி. இதில் ஒரு டச் வீல் மற்றும் பிளாப் இருந்தன. பாடல்களை வகைப்படுத்த கூடுதல் சாப்ட்வேர் தரப்பட்டது. 
2003ல் மூன்றாவது வகை மாடல் வந்தது. இதன் கொள்ளளவு திறன் 20 மற்றும் 40 ஜிபி என்ற அளவில் இருந்தன. முந்தைய மாடல்களைக் காட்டிலும் தடிமன் மற்றும் எடை குறைவாக இருந்தன. சுற்றி வந்த கிளிக் வீலுக்குப் பதிலாக, நிலையான வீல் தரப்பட்டது. இப்போது இருக்கும் ஐபாட் கிளாசிக் மற்றும் நானோ மாடல்களில் உள்ள அதே வீல்தான் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் முதலாக யு.எஸ்.பி. போர்ட் 2 உடன் இணைந்து செயல்படத் தேவையான வசதிகள் தரப்பட்டன. 
2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிள் நிறுவனம் ஐபாட் சாதனத்திற்கு மாற்றாக ஐபாட் மினி என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இதில் 4ஜிபி கொள்ளளவு கொண்ட மைக்ரோ டிரைவ் இருந்தது. முழு வெளிப்பாகமும் அனடைஸ்டு அலுமினியம் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு, ஐந்து வண்ணங்களில் வந்தன. இதனால் தங்கள் விருப்ப வண்ணங்களில் மக்கள் ஐபாட் சாதனத்தை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் தான் முதல் முதலாக கிளிக் வீல் அறிமுகமானது. இதற்கு முன் வந்த மாடல்களில் பட்டன்கள் தனித்தனியாக இருந்தன. ஆனால் இந்த மாடலில், வீலிலேயே இவை உள்ளார்ந்து அமைக்கப்பட்டன.ஜூலை 2004ல், ஆப்பிள் தன் நான்காவது வகை மாடல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. 20 மற்றும் 40 ஜிபி அளவில் இவை இருந்தன. இதன் பின் மூன்று மாதங்கள் கழித்து அக்டோபரில் ஐபாட் போட்டோ என்ற மாடலை ஆப்பிள் வெளியிட்டது. இது 40 மற்றும் 60 ஜிபி அளவில் இருந்தன. கருப்பு வண்ணத்தில் சிகப்பு கிளிக் வீலுடன் இருந்தது. இதுவரை வெள்ளையாக இருந்த ஐபாடினைக் கண்டு சலித்துப் போன ரசிகர்கள் இதனை வரவேற்றனர். 
2005 ஜனவரியில் தன் ஐந்தாவது வகை மாடலைக் கொண்டு வந்தது ஆப்பிள். ஐபாட் ஷப்பிள் (iPod Shuffle) என அழைக்கப்பட்ட இந்த சாதனம் மிகச் சிறிய அளவில், கேபிள் இணைப்பின்றி நேரடியாகக் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன் படுத்தும் அளவில் இருந்தது. 512 எம்பி மற்றும் 1ஜிபி அளவில் இவை இருந்தன. பிப்ரவரியில் மேலும் சில மாற்றங்களை இதில் ஆப்பிள் ஏற்படுத்தியது. தங்க நிற ஐபாடை எடுத்துவிட்டு, அதன் இடத்தில் வேறு வண்ணங்களைத் தந்தது. 
அடுத்து ஐபாட் மற்றும் ஐபாட் போட்டோ சாதனங்களில் 40 ஜிபி மாடலை நீக்கி, ஐபோட்டோ இடத்தில் 30 ஜிபியையும், ஐபாடில் 20 ஜிபியையும் கொண்டு வந்தது. பின் இரண்டு மாடலையும் ஒன்றாக்கியது. கருப்பு –வெள்ளை திரையையும் மூட்டை கட்டியது. 
இதே ஆண்டில் ஆப்பிளின் மிகப் பிரபலமான ஐபாட் நானோ வெளியானது. ஆனால் அதே நேரத்தில் நன்றாக விற்பனை செய்யப்பட்டு, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த ஐபாட் மினி முடக்கப்பட்டது. புதிய கலர் ஸ்கிரீன் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபான் இன்றும் 32 மற்றும் 40 ஜிபி திறனுடன் கிடைத்துவருகிறது. ஐபாட் நானோ 2 மற்றும் 4 ஜிபி திறனுடனும் கிடைத்தது. 
2005 ஆம் ஆண்டிலேயே இன்னொரு ஐபாட் மாடலும் வெளியானது. இதில் புதுமையாக வீடியோ இயக்கும் திறன் அளிக்கப் பட்டது. ஐபாட் சாதனத்தில் இது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பாகும். இதனை மக்கள் ஐபாட் வீடியோ என அழைத்தனர். 2.5 அங்குல திரை 320 x 420 கலர் ரெசல்யூசனுடன் இருந்தது. வீடியோ பைல்கள் இதில் விநாடிக்கு 30 பிரேம்கள் என்ற வேகத்தில் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் இயக்கப்பட்டு, ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைக் கட்டணம் செலுத்தி, டவுண்லோட் செய்து இயக்கும் வசதி தரப்பட்டது. இந்த வகை ஐபாட் ஸ்லிம்மாகவும், சிறியதாகவும் அமைந்திருந்தது. இப்போது இது 30 மற்றும் 60 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது.
2006 ஆம் ஆண்டில் ஐபாட் ஷபிள் விலை குறைக்கப்பட்டது. முந்தைய 2 மற்றும் 4 ஜிபி மாடல்களோடு, ஒரு ஜிபி மாடலும் அறிமுகமானது. இதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், ஐபாட் சாதனங்கள் அனைத்தின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐபாட் ஷபிள் முந்தையதைக் காட்டிலும் பாதி அளவில் தரப்பட்டது. ஐபாடினை சட்டை மற்றும் பேண்ட்களில் மாட்டிக் கொண்டு கேட்க, கிளிப் ஒன்று சாதனத்திலேயே தரப்பட்டது.
புதிய ஐபாட் நானோ பலவகை வண்ணங்களிலும், கொள்ளளவு திறனுடனும் தரப்பட்டது. அக்டோபர் மாதத்தில் ஐபாட் நானோவின் சிகப்பு எடிஷன் அறிமுகமானது. இதன் விற்பனையில் ஒரு பங்கு பணம் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் ஐபாடுக்குப் புதிய வண்ணங்கள் அளிக்கப்பட்டன. ஆரஞ்ச், பிங்க், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வெளிவந்தன. மொத்தம் ஐந்து வண்ணங்களில் ஐபாட் கிடைத்தது. 
இந்த நேரத்தில் தான் ஐபாட் என தொடர்ந்து மைய மாடலாக இருந்த சாதனம் ஐபாட் கிளாசிக் என அழைக்கப்படத் தொடங்கியது. இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், இதன் கொள்ளளவு 160 ஜிபி வரை கொண்ட மாடலும் வெளிவந்தது. இன்றைக்கும் இதுவே ஐபாட் ஒன்றின் அதிக பட்ச கொள்ளளவினதாக உள்ளது. 30 ஜிபி மாடல் கைவிடப்பட்டது.
ஜனவரி 2008ல் ஐபாட் நானோ 8 மாடல் பிங்க் கலரில் வெளியானது. இந்த ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தில், அனைத்து மாடல்களிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆப்பிள் கிளாசிக் மாடலில் 160 ஜிபி மாடல் எடுக்கப்பட்டது. 80 மற்றும் 120 ஜிபி மாடல்கள் அதிகம் வரத் தொடங்கின. இதே போல ஐபாட் டச் பிளேயரிலும் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்பீக்கர் உள்ளாக அமைக்கப்பட்டது. வால்யூம் கண்ட்ரோல் ஐபோனில் உள்ளது போலத் தரப்பட்டது.
2009ல் ஆப்பிள் உலகின் மிகச் சிறிய மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியது. இது ஐபாட் ஷபிள் மாடலின் மூன்றாவது வகையாகும். இதுவரை வந்ததைக் காட்டிலும் சிறியதாகவும், ஸ்லிம்மாகவும், எடை மிகக் குறைவாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனுடைய நீளம் ஏறக் குறைய சுண்டு விரல் போலவே இருந்தது. வாய்ஸ் ஓவர் என்னும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பார்வை அற்றவர்கள் பாடல் குறித்த தகவல்கள் பெற்று இயக்க முடிந்தது. இந்த ஆண்டில் ஐபாட் நானோவில் புதிய வசதிகள் தரப்பட்டன. இதில் வீடியோ கேமரா தரப்பட்டு ரெகார்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் எப்.எம். ரேடியோவும் இணைந்திருந்தது. இந்த ஆண்டில் ஐபாட் கிளாசிக் ஆப்பிள் நிறுவனத்தால் கைவிடப்படும் என்று எதிர்பார்த்த நேரத்தில், அதன் நினைவகத்தினை 120லிருந்து 160 ஜிபியாக உயர்த்தி, விலையை அப்படியே வைத்து ஆப்பிள் புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. அண்மையில் ஐபாட் 32 மற்றும் 64 ஜிபி மாடல்களுடன் தரப்பட்ட இயர்போனில் மைக் மற்றும் பிளே பேக் கண்ட்ரோல்களும் தரப்பட்டன. 
ஐபாடின் அளவை சிறியதாக்கி, உள்ளே ஹார்ட் டிரைவின் அளவைப் பெரியதாக்கி, புதிய வசதிகளை இணைத்துத் தரும் பணியில் தொடர்ந்து ஆப்பிள் மேற்கொண்டு வருகிறது. இன்னும் பல மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வரவிருக்கும் நவம்பர்27 … தரவிருக்கும் தகவல்… எதிர்பார்ப்புக்கள் என்னாகும் …???


 

thalavar varuvara-ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னத நாள்;

நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில்,ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்த வருடம், தேசியத்தலைவரின் உரையில் என்ன விடயம் இருக்கும் என்பதைவிட தேசியத்தலைவர் அதி மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்துவாரா???.. இல்லையா??? என்ற கேள்வியுடன்கூடிய எதிர்பார்ப்பே எல்லோர் மத்தியிலும் காணப்படுகின்றது. ஏனெனில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவங்களின் பிற்பாடு, தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய ஐயப்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் இன்றுவரைக்கும் தீர்க்கமான,தெளிவான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அன்றைய சம்பவத்தின்போது அங்கு இருந்தவர்களால்கூட எதையுமே உறுதியாகக் கூற முடியாதளவுக்கு இப்பொழுதும் அவ்விடயம் மர்மமாகவே தொடர்கின்றது.

இந்த நிலையிலேயே,

இம்முறை தலைவர் அவர்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் மாவீரர்தின உரை நிகழ்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. தமது மான்புமிகு தலைவரின் மீள்வரவுக்காக… அவர் "மீண்டும் வருவார்" என்ற நம்பிக்கையுடன் முழுத் தமிழினமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் எதிர்பார்க்கப்படுபவையேயன்றி உறுதியாகக் கூற முடியாதவை. அந்தவகையில், எதிர்வரும் மாவீரர் தினத்தன்று தலைவர் அவர்களின் உரை நிகழ்த்தப்படுமா என்பதும் உறுதியாகக் கூறமுடியாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. இந்த விடயம் இப்படியே இருக்க, தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டால் அல்லது நிகழ்த்தப்படாவிட்டால் என்ற இரு நிலைமைகளைப் பற்றியும் அதனாலான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அவசியம் ஆராயவேண்டியுள்ளது. தேசியத் தலைவர் தோன்றி தனது உரையை நிகழ்த்துவாரானால், தமிழர்களுக்கு அதைப்போன்றதொரு மிக மகிழ்ச்சியான விடயம் வேறெதுவுமே இருக்கமுடியாது. இவ்வளவு நாட்களாய் மனமுடைந்துபோய் சோர்ந்துபோய் இருந்தவர்கள் அனைவரையும் அதன்பின் மீள எழுச்சிகொள்ளவைப்பதாக அது அமையும்.

ஒட்டுமொத்த தமிழர்களும் புத்துணர்ச்சியோடு தலைவன்பின் அணிவகுத்து நிற்கத் தயாராவார்கள். தலைவன் வழிநின்று அடுத்தகட்ட விடுதலைப் போராட்டங்களை மிக எழுச்சியோடு தொடர முனைவார்கள். சிங்கள தேசத்திற்கு அது கலக்கத்தினைத் தோற்றுவிக்கலாம். சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தினை உருவாக்கலாம். ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் ஒரு முன்னேற்றகரமான பரிமாண மாற்றத்தினைப் பெறலாம். இவையெல்லாம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் தோன்றினால் சாத்தியப்படக்கூடிய விடயங்களாக அமையக்கூடியவை. ஆனால் எதிர்மாறாக, வரவிருக்கும் மாவீரர் தினத்தன்று தேசியத்தலைவர் தோன்றவில்லையாயின், தற்பொழுதும் மனந்தளராமல் இருக்கும் பலரும் மனமுடைந்து சோர்வடைந்து போகக்கூடிய பாதகமான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன.

கடந்த மே 17 தொடங்கி இன்றுவரை தொடரும் மர்மமான கேள்விகளுக்கு தாமாகவே பதில்களை கண்டுகொள்ள எத்தனிப்பார்கள். தலைவர் வருவார் என நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஏமாற்றம் பெரும் மனமுடைவினைக் கொடுக்கலாம். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் மக்கள் போராட்டங்களில் ஒரு தொய்வுநிலைகூடத் தோன்றலாம். பல தரப்பினராலும், புலிகளின் தலைவர் இல்லை என்ற முடிவுகள் எடுக்கப்படலாம். இது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன .இவ்வாறாக, பல பாதகமான விளைவுகள் தலைவர் அவர்கள் தோன்றாதவிடத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.

மொத்தத்தில், வரவிருக்கும் மாவீரர் தினத்தில் தேசியத்தலைவர் தோன்றி உரை நிகழ்த்த வேண்டும் என்பதே நம் எல்லோருடையதும் அங்கலாய்ப்பாய் இருப்பதனை உணரமுடிகின்றது. மேலோட்டமாகப் பார்க்கும் போதும் அதனாலான விளைவுகளை மேலோட்டமாக நோக்கும்போதும் தேசியத் தலைவர் தோன்றினால் மேலே குறிப்பிட்டதைப் போன்று அனைத்து விதத்திலும் நன்மைகளே என்று தோன்றலாம்.

ஆனால் நாம் ஒன்றை மட்டும்

தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, இன்றைய நிலைமையில் தலைவர் அவர்கள் தோன்றுவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாகவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை அறிந்திருந்தும்,அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதனை உணர்ந்திருந்தும் சர்வதேசம் தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் சிதைக்கப்படுவதற்கு சிங்களத்திற்கு தனது முழுமையான ஆதரவினைக் கொடுத்திருந்தது. ஏனெனில், தமிழர்களுக்காக போராடிய புலிகளை சர்வதேசம் அச்சத்துடனேயே நோக்கியது. அவர்களின் அபரிதமான வளர்ச்சியும், செயற்திறனும், கட்டமைப்புக்களும் அவர்களை அச்சங்கொள்ள வைத்தன. அத்தோடு நாடுகளுக்கிடையிலான பிராந்திய வல்லாதிக்கம் மற்றும் வர்த்தகப் போட்டிகளும் சேர்ந்துகொண்டன. இவற்றின் காரணமாகவே, புலிகளுக்கு பயங்கரவாத முத்திரையைக் குத்தி, தடைகளை விதித்து அவர்களை அழிப்பதற்குரிய வழிமுறைகளை தேடிக்கொண்டிருந்தது.

வன்னி மீதான போரினை சாதகமாக பயன்படுத்தி தமது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டது சர்வதேசம். தமிழருக்கான தீர்வு என்பதனை விட புலிகளை அழிக்கவேண்டும் என்பதிலேயே சர்வதேசம் அதிக கரிசனை கொண்டிருந்தது என்பதனை கடந்த வரலாறு நமக்கு மிகநன்றாகவே புரியவைத்திருக்கின்றது. வன்னிப் போரின் பிற்பாடு புலிகளின் செயற்பாடுகள் அற்றுவிட்டதான நிலையில், சர்வதேசம் தற்போது தமது கவனத்தினை "தமிழர்களின் தீர்வு" என்பதன்மீது அக்கறைகொள்வதாக காட்டிக்கொள்கின்றது. அவை எந்தளவுக்கு உண்மைத் தன்மையோடு இருக்கும் என்ற சந்தேகம் இருந்தாலும், இவ்வாறான சர்வதேச மாறுதல்கள் தற்போதைய நிலைமையில் அவசியமானவையாகவே கருதப்படுகின்றன. இவற்றின் விளைவாக தற்பொழுது சிங்கள அரசு பெரும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருவதனையும் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருவதனையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்தியாவின் மெளனம் மற்றும் சீனா, ரஷ்யாவின் சிறீலங்கா ஆதரவுக் கொள்கை என்பன பாதகமானதாக இருந்தாலும் செல்வாக்குமிக்க மேற்குலக நாடுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர்களிற்கு சாதகமானதாகவே அமைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் தொடந்தால் அவை எதிர்காலத்தில் மிகச்சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஆயினும், சர்வதேசம் புலியெதிர்ப்புக் கொள்கையிலிருந்து இன்னும் விடுபடவில்லையென்பது, புலிகள் மீதான தடைகளை அவர்கள் அகற்றாமல் இருப்பதிலிருந்தும்; ஆயுதப் போராட்டம் மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சம் சர்வதேச முக்கியஸ்தர்களினால் வெளியிடப்பட்டதிலிருந்தும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதனை சர்வதேசம் இன்னும் ஏற்கத் தயாராகவில்லை.

தமிழர்களின் பிரச்சினையினையும் அவர்களுக்காக புலிகள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தினையும் சர்வதேசம் வேறுபடுத்தியே பார்க்கின்றது. தலைவரின் மீள்வரவென்பது புலிகளின் மீள்தோற்றமேயாகும். இந்நிலையில் தலைவர் அவர்கள் வெளிப்பட்டால் சர்வதேசம் தற்போது கொண்டிருக்கும் தமிழர் சார்பான ஆதரவுக் கொள்கையை கைவிட்டு மீண்டும் புலிவேட்டைக்கு புறப்பட்டுவிடும். இதனால் புலிகளின் மீள்தோற்றம் முளையிலேயே கிள்ளியெறியப்படும் அபாயமும் உருவாகும். ஒரு பாரிய பின்னடைவின் பிற்பாடு, தற்போதைய சர்வதேசப் பின்னணியில் புலிகளின் வெளிப்பாடு என்பது தற்போதைக்கு சாதகமாக அமையாது என்பது தற்போதைய யதார்த்தநிலை.

அத்தோடு,

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டம் தொடர்ந்திருந்தபோதும், சர்வதேசத்தின் பார்வையில் ஏற்படாத தமிழர் சார்பான மாற்றம் தற்பொழுது ஏற்பட்டுவருகின்றது என்றே சொல்லவேண்டும். சர்வதேச மட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அது ஆதரவினை அளிக்கக்கூடியதான சாத்தியங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் தீர்க்க தரிசனமிக்க தலைவர் அவர்கள் எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு மீண்டுமொரு சாதகமான நிலைமையில் அல்லது தீர்க்க தரிசனமிக்க அவரது கணிப்புப்படி.. தகுந்த சமயத்திலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்றே எதிர்பார்க்கலாம். அவர் வெளிப்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் இன்னும் உருவாகாத நிலையில் வருகின்ற மாவீரர்தினம் எவ்வாறு அமையப்போகின்றது?… எவ்வாறு அமைய வேண்டும்?? …. என்பது பற்றிப் பார்ப்போம்.

"மாவீரர் தினம்" என்பது தமிழீழ வரலாற்றில் என்றுமே முக்கியத்துவமிக்க, தமிழரின் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்ட தினம். இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் கடைசி ஈழத்தமிழன் உயிர்வாழும் வரைக்கும் நினைவு கூரப்படும் இந்த புனித நாள். தன் இனத்துக்காக தம் சுய ஆசாபாசங்களை மறந்து தம் இன்னுயிரையும் துறந்த தியாகத்தின் சிகரங்களை நினைவுகூர நமக்கு வரமாக கொடுக்கப்பட்ட மாவீரர் தினத்தினை இம்முறை ஒரு வித்தியாசமான உணர்வுகளோடு, எதிர்பார்ப்புகளோடு எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது ஒட்டுமொத்த தமிழினமும். நம் தேசத்தின், நம் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் கல்லறைகள் இன்று மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கின்றன.

அவை இருந்த அடையாளமே தெரியாமல் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவீரச் செல்வங்கள் நமது பிள்ளைகள், நமது சகோதரங்கள், நமது உறவுகள். இவர்களின் தியாகங்களை வெறும் வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. தம் வாழ்வையும் உயிரையும் தன் இனத்துக்காகவே கொடுத்த வீரபுருஷர்கள் இவர்கள். தமிழன் என்று சொல்லி நம்மை தலைநிமிர வைத்தவர்கள். இம்மாவீரர்களின் நினைவு நாளை எழுச்சியோடு அனுஷ்டிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தார்மீகக் கடமை. ஆனால் இக்கடமை என்பதனையும் தாண்டி, இம்முறை நாம் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கப்போகும் முறையினால் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் பலமான செய்தியொன்றினை சொல்லவேண்டியுள்ளது.

அதாவது, சர்வதேசத்தாலும், சிங்களத்தாலும் "பயங்கரவாதிகள்" என பொய்முத்திரை குத்தப்பட்ட விடுதலைப் புலிகள், நம் மாவீரர்கள் ஏதோ விண்வெளியிலிருந்து குதித்தவர்கள் அல்லர். நமது சொந்த உறவுகள். தம் இனத்தின் அவலத்தினைக் கண்ணுற்று தாங்கமுடியாமல் போராட புறப்பட்டவர்கள். நமக்காகவே தம்முயிரையும் துச்சமென நினைத்து தியாகம் பண்ணியவர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. நம் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்கள் சுமந்த விடுதலைக் கனவைத்தான் நாமும் சுமக்கின்றோம். தமிழீழத் தாயகம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழரினதும் தாகமும் வேட்கையும் அதுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுவோம். இதுவரை நாட்களும் நாம் தொடர்ந்த போராட்டங்கள்தான் சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது.

மாவீரர் தினத்தினை நாம் உணர்வெழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதன்மூலம் சர்வதேசத்திற்கு பல விடயங்களினைப் புரியவைக்க முடியும். தலைவரின் வருகை என்ற விடயத்தில் நாம் தற்போதைக்கு கவனத்தினைச் செலுத்தாது, அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்றுக் கடமையை சரிவரத் தொடர்வோம். புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம். அவர்களின் மீள்வரவென்பதும் நமது கைகளில் உள்ள நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கத் தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சியக்கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!

"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை… விதைத்திருக்கின்றோம்"

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

-பருத்தியன்


source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வினியோகம்:எதிர்க்கட்சி தலைவர் கைது


விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வினியோகம் சிங்கப்பூர் எதிர்க்கட்சி தலைவர் கைது

 கோலாலம்பூர், நவ. 4-

 

சிங்கப்பூர் எதிர்க்கட்சி தலைவர் ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது ராகவன் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
ஆயுதங்களை கொள் முதல் செய்து கொடுப்பதற்காக ராகவன் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஹனிபா உஸ்மான் என்பவரை தனக்கு உடந்தையாக வைத்துக் கொண்டு செயல் பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் இவரிடம் ஏராளமான வெடிபொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ராகவனை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி கைது செய்தனர். விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தது, வெடி பொருட்கள் வைத்திருந்தது என மொத்தம் 6 புகார்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
 
2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அவர் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய இதே குற்றச்சாட்டு ராகவன் மீது அமெரிக்காவிலும் உள்ளது. அந்த விசாரணைக்காக அவரை அமெரிக்காவுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது

source:maalaimalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உலகம் முழுவதும் மேலும் 2800 உயிரினங்கள் கண்டுபிடிப்பு

 
 ஜெனீவா, நவ. 4-
 
உலகம் முழுவதும் வாழும் உயிரினங்கள் பற்றிய விவரங்களை ஐ.யூ.சி.என். என்ற நிறுவனம் இந்த ஆண்டு ரெட்டாட் என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டு 17,921 உயிரினங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
கடந்த ஆண்டு 16,928 உயிரினங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் படி 2800 புதிய உயிரினங்கள் கூடுதலாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் 293 வித பல்லிகளும், பாம்புகளும் உள்ளன. தற்போது பனாய் உடும்பு என்ற இனம் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
 
நைஜீரியாவிலும், காம ரூனிலும் பீமன்தும்பி என்ற புதிய இனம் கண்டுபிடிக் கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பனாமாவில் மரத்தவளையும், மடகாஸ்கரில் மலை எலியும் புதிதாக பட்டியலில் சேர்ந்துள்ளது.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கார்களுக்கும் கருப்பு பெட்டி

சாலை விபத்துக்கு யார் காரணம் காரின் கருப்பு பெட்டி

லண்டன்: விமானத்தில் இருப்பது போன்ற "கருப்பு பெட்டி"யை காருக்கும் தயாரித்து ஐரோப்பிய யூனியன் சாதனை படைத்துள்ளது. விமான விபத்துகளில் காரணத்தை அறிய கருப்புப் பெட்டி உதவுகிறது. விமானத்தில் பொருத்தப்படும் அதில் கடைசி நிமிட உரையாடல், சத்தம், வானிலை அனைத்தும் பதிவாகி இருக்கும். அதை வைத்து விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கலாம். அதுபோன்ற கருவியை கார்களுக்கென தயாரிக்க ஐரோப்பிய யூனியன் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்கு ரூ.18.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3 ஆண்டு முயற்சிக்குப் பிறகு இப்போது அது சாத்தியமாகி உள்ளது. விமானத்தைப் போல கார்களுக்கென "கருப்புப் பெட்டி" வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுநர் பிரேக் போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் உட்பட 20 வகையான புள்ளிவிவரங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும். இந்த தகவல்களை விபத்துகளின்போது போலீசார், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீதிமன்ற வழக்குகளிலும் இது பயன்படும். இந்தக் கருப்பு பெட்டி குறித்து நடந்த ஆய்வில், இது பொருத்தப்பட்ட கார்களின் ஓட்டுநர்களால் விபத்துகள் 10 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. காரின் பழுதுபார்ப்பு செலவும் 25 சதவீதம் குறைந்தது. இதுபற்றி ஆய்வுக் குழு இயக்குனர் ரால்ப் காட்டா கூறுகையில், ÔÔரூ.39,000 மதிப்புள்ள இந்த கருவி, சீட்டுக் கட்டு அளவில் இருக்கும். காரின் டேஷ் போர்டு அல்லது தரைப் பகுதியில் பொருத்தலாம்ÕÕ என்றார். சென்சாருடன் இணைந்த இந்தக் கருவி, காரின் இயக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்யும். இது கார்களில் கட்டாயமாக்கப்பட்டதும், சாலை பாதுகாப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். கருப்புப் பெட்டியை இனி தயாராகும் கார்களில் பொருத்த ஐரோப்பிய நாடுகளை யூனியன் வலியுறுத்தியுள்ளது என்றும் ரால்ப் தெரிவித்தார்

source:dinakaran
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சைவ, அசைவ ரோபோக்கள்

 
 இது மிஷின் யுகம். இயந்திர மனிதனான ரோபோக்களின் பணி அதிகரித்து வருகிறது. ரோபோக்களுக்கு 

தேவையான ஆற்றல் பேட்டரிகள், செல்கள் மூலமோ அல்லது மின்சாரமாகவோ வழங்கப்படுகிறது. இதற்கு மாற்று வழியாக சில முறைகளை கடைபிடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அவற்றில் குறிப்பிடத்தக்கது மனிதனைப்போல உணவின் மூலம் ஆற்றலைப் பெறுவது. இதை அடிப்படையாக வைத்து சைவ, அசைவ ரோபோக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவை தமக்கு தேவையான ஆற்றலை தாவரங்களை உண்பதன் மூலமும், பூச்சிகளை உண்பதன் மூலமும் பெற்றுக் கொள்கின்றன.

இவற்றில் தாவரங்களை உண்ணும் ரோபோவுக்கு பற்களால் ஆன சக்கரம் பொருந்திய பகுதி உள்ளது. இது வாய் போல செயல்பட்டு தாவரங்களை அரைக்க உதவுகிறது. பேட்டரியின் திறன் குறையும் தகவல் அறிந்தவுடன் ரோபோவின் கரங்கள் தானாகவே உணவை (தாவரத்தை) தேட ஆரம்பித்துவிடும். கிடைக்கும் தாவரம் பற்சக்கரத்தில் நசுக்கப்பட்டு சாறு பிழியப்படுகிறது. இந்த சாறில் இருந்து கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு ரோபோக்கள் இயங்குகின்றன. சுமார் 150 பவுண்டு தாவரத்தை உண்டால் 100 மைல் தூரத்தை கடப்பதற்கான ஆற்றல் ரோபோவுக்கு கிடைக்கிறது. இந்த ரோபோ ஈட்ஆர் ( ணிகிஜிஸி ) எனப்படுகிறது. இது அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது அசைவ ரோபோவான எகோபாட் 2. இதற்கான உணவான புழு, பூச்சிகளை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும். 8 பூச்சிகளை உணவாக உட்கொண்டால் 7 அடி தூரம் நகரும் இந்த ரோபோ. இதுவரை இந்த ரோபோக்கள் மனிதர்களை சாப்பிடவில்லை என்பது நமக்கு ஆறுதலான விஷயம்.

source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP