சமீபத்திய பதிவுகள்

இலங்கை முகாம்களில் 20 ஆயிரம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இருக்கிறார்களாம்!

>> Friday, July 31, 2009

 
 
இலங்கை முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து அங்கு வசித்த 2 1/2 லட்சம் தமிழர்கள் மீட்கப்பட்டு இலங்கை அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் வசிக்கிறார்கள்.
 
முகாம்களில் தங்கியிருப்பவர்களில் 20 ஆயிரம் பேர் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்று இலங்கை ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெயரத்னாயகே தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும், போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னிப்பகுதியில் பல்வேறு முகாம்களில் வசிக்கிறார்கள். பொது மக்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் தங்கியுள்ளனர்.


15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இருக்கலாம். அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள். வவுனியா முகாமில் மட்டும் 10 ஆயிரம் பேர் உள்ளனர். பெண் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் உள்ளனர்.
 
முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழர்களில் பெரும் பாலானோர் விவசாய தொழிலாளர்கள். அவர்கள் மீண்டும் வயலுக்கு திரும்ப விரும்புகிறார்கள்.
 
மற்றவர்களை அவர்களுக்கு ஏற்ற தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்டு வருகிறோம்.
 
விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

StumbleUpon.com Read more...

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவு

 

 
 
 விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர்  அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
 
விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும்  வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின்  6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.

 எனினும் ராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.  ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர்  என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக ராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில்  அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

StumbleUpon.com Read more...

இந்த போட்டோவை பார்த்து தயவு செய்து சிரிக்காதீங்க.

 
இந்த போட்டோவை பார்த்து தயவு செய்து சிரிக்காதீங்க அப்படீன்னு நான் சொன்னா நீங்க சிரிக்காமய இருக்கபோறீங்க?
 
திடீர் என்று ஒரு வாகன ஒர்க்ஷாப் அருகில் ஒரு சிங்கம் நிற்பதை பார்த்தவுடன் பயந்தடித்து ஓட தயாரானார்கள்
 
 
 
ஆனால் சிறிது உற்று பார்த்த பொழுது அந்த சிங்கம் திரும்பிப்பார்த்தது.அப்பொழுதுதான் உயிரே வந்தது.அதை கொஞ்சம் கீழே பாருங்களேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கீழே பாருங்களேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கீழே பாருங்களேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கீழே பாருங்களேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கீழே பாருங்களேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்திய நாய்க்கு முடிதிருத்தம் செய்திருந்த காட்சி இது.ஓட்டல் ரூம் போட்டு யோசிப்பாங்களோ

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP