சமீபத்திய பதிவுகள்

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய கிரனைட் தாக்குதல்

>> Wednesday, April 1, 2009

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய கிரனைட் தாக்குதலில்; படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றும் ஒருவர் காயமடைந்தார்.


இத்தாக்குதல் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த படைவீரர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட படைவீரரின் சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

StumbleUpon.com Read more...

தமிழில் தொலைக்காட்சி News TVI 01.04.2009

StumbleUpon.com Read more...

தமிழகத்தில் உலவும் புதிய காணொளிகள் !! புதுவகை தேர்தல் பரப்புரை !!










StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 8 கிலோமீற்றர் வரையான காவலரண்கள் தாக்கியழிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.



பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஊடறுப்புத் தாக்குதலை தளபதி கேணல் பாணு தலைமையில் விடுதலைப் புலிகளின் முன்னணி தாக்குதல் அணிகளுள் ஒன்றான சாள்ஸ் அன்ரணி படையணியே நடத்தியுள்ளது.

இந்த ஊடறுப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பெருந்தொகையான படைக்கருவிகளையும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறிலங்காப் படையினர் அங்கிருந்து தப்பியோடிபோதும் அவர்கள் மீது படைத் தளபதிகளின் உத்தரவுக்கமைய துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதிலும் பல படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன

StumbleUpon.com Read more...

என்.டி.டி.வி ஆய்வு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் என்று என்.டி.டி.வி ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசாங்கம், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்ற ஆய்வின் போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள பொதுமக்களில் 66 வீதமானோர் ஆம் என தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP