சமீபத்திய பதிவுகள்
நியூஸீலாந்து அபார வெற்றி
|
வெற்றி பெற 182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து ஆஸ்ட்ரேலியாவின் அபார பந்து வீச்சிற்கு 4 விக்கெட்டுகளை 64 ரன்களுக்கு இழந்தது. அதன் பிறகு புரூம் சிறப்பாக விளையாடி டெய்லருக்கு ஸ்டாண்ட் கொடுக்க ஸ்கோர் 106 ரன்களாக உயர்ந்தது. அப்போது 29 ரன்களில் கிளார்க் பந்தில் பௌல்டு ஆனார். ஆனால் அதன் பிறகு கைல் மில்சும், ராஸ் டெய்லரும் இணைந்து அபாரமாக விளையாடினர். அப்போது 3-வது பவர் பிளே எடுக்கப்பட்டது. இதில் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்கள் சரியாக வீசவில்லை. இதனால் 11 ஓவர்களில் இருவரும் 62 ரன்களைச் சேர்த்தனர். மில்ஸ் 26 ரன்களில் டெய்ட் பந்தில் அவுட் ஆனார். டெய்லர் இந்த வெற்றிக்கு வித்திட்ட வீரர் 64 ரன்கள் எடுத்து பிராக்கன் பந்தில் ஆட்டமிழக்க ஆட்டம் சற்றே பரபரப்பானது. 15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சவுத்தீ தேவையில்லாமல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது 4 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்றானது. அதன் பிறகு மூன்று சிங்கிள்கள் எடுக்க ஸ்கோர் சமன் ஆனது. பிறகு கடைசி பந்தில் வெட்டோரி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். 4 விக்கெட்டுகளையும் 25 ரன்களையும் எடுத்த கைல் மில்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யபட்டார். இரு அணிகளுக்குமான 2-வது ஒரு நாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை மெல்போர்னில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1233510828&archive=&start_from=&ucat=4&
ஃபெடரரை வீழ்த்தி நடால் சாம்பியன்
|
சுமார் 4 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அதி அற்புதமான போட்டித்தன்மை மிகுந்த உயர் தர டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடால் 7- 5, 3- 6, 7- 6, 3- 6, 6- 2 என்ற செட்களில் அயாராது போராடி ஃபெடரரை வீழ்த்தினார். அதிக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற பீட் சாம்பிராஸை சமன் செய்யும் ஃபெடரரின் கனவை ரஃபேல் நடால் மீண்டும் முறியடித்தார். முதல் செட்டின் துவக்கத்திலேயே இருவரும் மாறி மாறி தங்களது சர்வை தோற்றனர். பிழையினால் அல்ல இருவரும் அபார டென்னிஸை விளையாடினர். ஆனால் ரஃபேல் நடால் 3வது முறை ஃபெடரர் சர்வை முறியடித்த போது முதல் செட்டை 7- 5 என்று வெற்றி பெற்றார். இரண்டாவது செட்டில் ஃபெடரர் இரண்டு நடால் சர்வ்களை முறியடித்து அபரமான தரை ஷாட்களில் ஃபோர் ஹேண்டில் தனது திறமையை வெளிப்படுத்தி செட்டை 6- 3 என்று கைப்பற்றினார். 3-வது செட்டிலும் இருவரும் தங்களது சர்வை தோற்றாலும் பிறகு மீண்டு 6- 6 என்று சமன் முறிவுக்கு தள்ளினர். இதில் ஃபெடரர் சில தவறுகளைச் செய்ய இந்த முறை ரஃபேல் நடால் அபாரமான ஃபோர் ஹேண்ட், பேக் ஹேண்ட், வாலி ஷாட்களை ஆடி ஃபெடரர் பிரமிக்க வைத்து 7- 3 என்று டை பிரேக்கரில் வெற்றி பெற்று 2- 1 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்த செட்டில் மீண்டும் ஃபெடரர் எழுந்தார். இரண்டு பிரேக்குகளை கொடுத்து செட்டை 6- 3 என்று கைப்பற்றினார். கடைசி செட்டில் ஃபெடரரின் ஷாட்கள் பல நெட்டில் அடித்தும் வெளியில் சென்றும் அவருக்கு நிலை தடுமாற்றத்தை ஏற்படுத்தின. கடைசியில் ஃபெடரரின் உடல் மொழி ஆட்டத்தை அவர் கைவிட்டது போல்தான் தெரிந்தது. கடைசி செட்டை இதனால் 6- 2 என்று நடால் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஃபெடரரின் சர்வை முறியடித்து கடைசியாக ஒரு அபாரமான ஃபோர் ஹேன்ட் ஷாட் மூலம் வெற்றி பெற்றார் நடால். ரஃபேல் நடாலின் 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும் இது. 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் ஃபெடரர் சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்ய விடாமல் விம்பிள்டன் மற்றும் தற்போது ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸிலும் ஃபெடரரை வீழ்த்தியுள்ளார் நடால். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1233510937&archive=&start_from=&ucat=4&
சுதந்திரபுரத்தில் அகோர ஷெல் வீச்சு 50 பேர் உயிரிழப்பு; 169 பேர் காயம்
|
|
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயப் பகுதியிலும் உடையார்கட்டுப் பகுதியிலும் நேற்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்ற அகோர ஷெல் தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதுடன் 169 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் இடம்பெயர்ந்து பெருமளவில் தங்கியிருந்த பொது மக்கள் மீது நேற்றுக் காலை 9.30 மணியளவில் கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபகுதி மீது மீண்டும் நண்பகல் 12.30 மணியளவில் மீண்டும் பின்னர் பிற்பகல் 2 மணியளவிலும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 12 சிறுவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் அந்தப் பகுதி மக்களின் குடியிருப்புகள் பெருமளவு அழிந்துள்ளதுடன்இ உடைமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உடையார்கட்டுப் பகுதி நோக்கி நேற்றுக் காலை 5.30 மணியிலிருந்து தொடர்ச்சியாக கடும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புப் பகுதி நோக்கியும் நேற்றுக் காலை தொடக்கம் அகோர பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேவிபுரம் பகுதியில் நடைபெற்ற கடும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன்இ 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தேராவில் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். மூங்கிலாறுப் பகுதியில் நடைபெற்ற தக் குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் எண்மர் காயமடைந்துள்ளனர். வலைஞர் மடம் பகுதி யில் நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் எண்மர் காய மடைந்துள்ளனர். கடுமையான பீரங்கித் தாக்குதல் எல்லா இடங்களிலும் தொடர்வதாலும் மக்கள் நாலா பக்கமும் உயிரைப் பாதுகாக்க சிதறி ஓடுவதாலும் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. |
"தமிழர்களை காக்க, புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்": "ஒபாமாவுக்கான தமிழர்கள்" வேண்டுகோள்
|
|
தமிழினத்தின் ஒரே காவலர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளே இருப்பதால், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் - புலிகள் இயக்கம் தொடர்பான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து - தனது பயங்காரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கும் என "ஒபாமாவுக்கான தமிழர்கள்" அமைப்பு நம்புவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
அமெரிக்காவில் குடியேறியிருக்கும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த தமிழர்களைக் கொண்ட "ஒபாமாவுக்கான தமிழர்கள்" என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்று வரும் போரை, விடுதலைப் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறிலங்கா சித்தரித்து வருகின்றது. மேற்குலகமும், மேற்குலக ஊடகங்களும் கூட - உண்மையை மறைத்து - கொழும்பு அரசின் போக்கிலேயே பெருமளவில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், கொழும்பு அரசின் அரச பயங்கரவாதமே, உண்மையில் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளை உருவாக்கியிருக்கின்றது. சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் - அதிகாரங்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தினால் பறித்தெடுக்கப்பட்டதுடன், அதனை தமிழர்களுடன் பகிர்வதற்கு அவர்கள் முன்வரவில்லை. தமது அரசியல் உரிமைகளைப் பெற அமைதியான - சட்டபூர்வமான - வழிகளில் தமிழ் மக்களாலும், அவர்களது தலைவர்களாலும் முப்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவையும் சிறிலங்கா அரசு முறியடித்தது. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் - பிரித்தானியா சிறிலங்காவை விட்டு சென்ற 1948 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அன்று முதல் - தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். தமிழருக்கு எதிரான நாடு தழுவிய இன வன்முறைகள் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள மொழி அதிகாரபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் வேலை வாய்ப்புக்களும், கல்வியும் தடுக்கப்பட்டது. பௌத்த சமயம் நாட்டின் சமயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இந்து சமயமும், கிறிஸ்தவ சமயமும் புறக்கணிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் பிறப்பிற்கு முன்னரே இவை எல்லாம் நடைபெற்றுள்ளன. சிறிலங்கா அரசின் இந்த தமிழின ஓடுக்குமுறைகளும், வன்முறைகளுமே விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியிருந்தது. விடுதலைப் புலிகளின் பிறப்பு தவிர்க்க முடியாததாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஆயுத வன்முறைகள் முடிவற்றவையாகத் தொடர்கின்றன. தமிழ் மக்களின் மீதான மெதுவான இந்த இனச் சுத்திகரிப்பாக இது நடைபெறுகின்றது. சிறிலங்காவின் அண்மைக்கால இராணுவ வெற்றிகளை நோக்கும் போது - இறுதியாக அரசு விடுதலைப் புலிகளை முறியடித்துவிடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். எமது பிரச்சினை இது தான்: விடுதலைப் புலிகள் இயக்கம் தான் - திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வன்முறைகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு. விடுதலைப் புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டால், தாம் முற்றாக அழிவுக்கு உட்படலாம் என தமிழ் மக்கள் இப்போது அஞ்சுகின்றனர். பெரும் அழிவிலிருந்து தமிழ் மக்களைக் காக்க வேண்டும் எனில், விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும். |
நோர்வேயின் இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்: தமிழர்கள் நடத்திய கண்காட்சியைத் தடுக்கவில்லையாம்
|
|
|
முன்னாள் உயர்சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் புதல்வாரன எசலவின் மீது, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ஆலோசகராக செயற்பட்டதாகவும், இவரது தந்தையார் பிரட்மன் வீரக்கோன் விடுதலைப்புலிகளுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் ஏற்பட முயற்சி செய்ததாகவும், வன்னியில் கை-ரெக் வானொலி, தொடர்பு உதிரிப்பாகங்களை அனுப்பியதில் இவருக்கும் பங்குள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் எசல வீரக்கோனை திருப்பியழைக்கும் உத்தரவை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. |
http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b33P9EEe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dVZLuGce03g2hF0cc2tj0Cde
புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டால் மேற்கத்திய நாடுகளின் தூதர்கள், பத்திரிகையாளர்களை விரட்டியடிப்போம்: கோத்தபாய மிரட்டல்
|
|
|
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதர்களையும், சிஎன்என், பிபிசி, அல் ஜசீரா ஆகியவற்றை கோத்தபாய கடுமையாக மிரட்டியுள்ளார். அவர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சில வெளிநாட்டு மீடியாக்கள், பாதுகாப்புப் படையினரின் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுகின்றன. புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அப்படிப்பட்டவர்களை இலங்கையை விட்டே விரட்டியடிப்போம் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த மீடியாக்கள் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் வகையில் செய்திகள் வெளியிடுகின்றன. புலிகள் ஆதரவு இணையதளத்தில் உள்ள வீடியோ காட்சிகளை திரும்பத் திரும்ப காட்டுகின்றன. இன்னொரு முறை அவர்கள் இதேபோல செயல்பட்டால் அவர்களை விரட்டியடிப்போம் என்று கொக்கரித்துள்ளார் கோத்தபாய. அப்பாவித் தமிழர்கள் பெரும் அவதியிலும், உயிர் பயத்திலும் சிக்கிக் கொண்டிருப்பது குறித்து சிஎன்என், அல் ஜசீரா உள்ளிட்ட உலக மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் தமிழர்கள் ஆர்ப்பரித்துப் போராட்டங்களில் குதித்துள்ளதால் உலக நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த கோபத்தில்தான் கோத்தபாய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என நம்பப்படுகிறது. |
மக்கள் காப்பு வலயம்" மீண்டும் கொலைக்களமானது: அடைக்கலம் புகுந்தோரில் 26 தமிழர்களை இன்று எரிகுண்டுகளால் தாக்கிக் கொன்றது சிறிலங்கா: 52 பேருக்கு எரிகாயம்!
|
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தாக்குதல்களில் - எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் என சம்பவ இடத்தை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். |
இன்றைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தோர் எல்லோருமே கடுமையான எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் - 13 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். அதே போல, முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் - 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதலில் - 7 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு - முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா படையினரின் இந்த தாக்குதல்களினால் மக்களின் பெருமளவிலான வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள் என்பன முற்றாக அழிந்தும், சேதமடைந்த வண்ணமும் உள்ளன எனவும் - சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குத் தப்புவதற்காக மக்கள் பெரும் அவலப்பட்டு - பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து ஓடுகின்ற சூழ்நிலையிலேயே, அவர்கள் மீது இவ்வாறான படுகொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் |
http://www.puthinam.com/full.php?2b24OO44b33M6DDe4d45Vo6ca0bc4AO24d2ISmA2e0dC0MtHce03f1eW0cc2mcYAde
கென்யாவில் தீயில் கருகி 111 பேர் பலி
| |||||||||||
|
முல்லைத்தீவு முற்றுகைச் சமரில் முக்கிய களமாக மாறியுள்ள கடல்
முல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும்புலித் தாக்குதல் படகு வெடித்துச் சிதறியது. அதிலிருந்த இரண்டு கடற்கரும்புலிகள் உயிரிழந்திருப்பதைப் புலிகள் உறுதி செய்திருக்கின்றனர்.
இதன்பின்னர் முல்லைத்தீவுக் கடலில் அன்று காலை 10 மணியளவில் மற்றொரு கடற்சண்டை நடந்திருக்கிறது. இந்தச் சண்டை கடற்படையின் முதலாவது தடுப்பு வலயத்துக்குள் இடம்பெற்றிருக்கிறது. முல்லைத்தீவில் வட்டுவாகலுக்கும் சுண்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட சுமார் 20 கி.மீ வரையான கடற்பகுதி மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது.
இந்தப் பகுதியில் இருந்து கடற்புலிகள் விநியோகங்களைச் செய்ய முடியாத வகையிலும் தப்பிச் செல்ல முடியாதவாறும் கடற்படையினர் நான்கு கட்டப் பாதுகாப்பு வியூகத்தை அமைத்திருக்கின்றனர். முதலாவது கட்டத்தில் கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட விசேட படகுப் படையணி (Special Boat Squadron -SBS) மற்றும் துரித நடவடிக்கை படகுப் படையணி (Rapid Action Boat Squadron -RABS) என்பன பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இரண்டாவது கட்டத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகள் (Fast Attack Crafts - FACs) நிறுத்தப்பட்டிருக்கின்றன. மூன்றாவது கட்டத்தில் அதிவேகப் பீரங்கிப் படகுகள் (Fast Gun Boats- FGBs) காவலில் ஈடுபட்டிருக்கின்றன. இதையும் கடந்து சென்றால் அடுத்த கட்டமாக தடுத்து நிறுத்த ஆழ்கடல் ரோந்துப் படகுகள் (Offshore Patrol Vessels - OPVs) நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன.
50 ற்கும் குறையாத கடற்படைப் படகுகளைக் கொண்டு இந்த கடற்தடுப்பு வலயத்தை கடற்படை அமைத்திருக்கிறது. இதை உடைத்துக் கொண்டு கடற்புலிகள் அவ்வப்போது ஆழ்கடல் நோக்கிய பயணங்களைச் செய்வதாகவும் சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. கடந்த வெள்ளியன்று காலை 10 மணியளவில் கடற்படையின் 15 வரையான கரையோர ரோந்துப் படகுகளைக் கொண்ட அணி மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்தச் சண்டையில் கடற்படையின் சிறப்புத் தாக்குதல் படையணியின் கொமாண்டோக்கள் பயன்படுத்தும் "அரோ' வகைப் படகுகள் இரண்டை தாம் தாக்கி மூழ்கடித்ததாகவும் புலிகள் கூறியிருக்கின்றனர். ஆனால் கடற்படையினர் தரப்பில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து இப்பத்தி எழுதப்படும் வரையில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
கடற்புலிகள் குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதும் கடற்படையினர் மீதான தாக்குதல்களை அவர்கள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த 19ஆம் திகதி இரவு முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுண்டிக்குளம் கடற்பகுதியில் P 434 இலக்கத்தைக் கொண்ட கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகான "சுப்பர் டோறா' ஒன்றை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்திருந்தனர்.
இரவு 11.28 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் கடற்புலிகளால் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களைக் கொண்ட கரும்புலிப் படகை மோத வைத்தே நிகழ்த்தப்பட்டிருந்தது. லெப்.கேணல் நிதி உள்ளிட்ட இரண்டு கடற் கரும்புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் அறிவித்திருந்தனர். தாக்குதல் நடந்த மறுநிமிடமே கடற்படைப் படகு முற்றாக நீரில் மூழ்கி விட்டது. இந்தத் தாக்குதல் நடந்தது கடற்படையின் இரண்டாவது கட்ட தடுப்பு வலயத்துக்கு வெளியே கரையில் இருந்து 9 கடல் மைல் தொலைவிலாகும்.
இதேவேளை புலிகளுடனான கடற்சண்டையின் போது கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்திருப்பதாக கடற்படையினர் கூறியி ருந்தனர். அத்துடன் கடற்படைப் படகு சிறியளவில் சேதமுற்றதாகவே கூறப்பட்டிருந்தது. ஆனால் கடற்படைப் படகு முற்றாக ÷சதமாகிவிட்டது. இந்தப் படகில் இருந்த முக்கிய அதிகாரிகள் சிலரும் காணாமற் போய்விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமான "டொக்யார்ட்'டின் கீழ் அதிவேகத் தாக்குதல் படகுகளின் அணியொன்று இயங்கி வருகிறது. இதற்கு 4ஆவது அதிவேகத் தாக்குதல் படகு அணிக்கு (4th Fast Attack Flotilla (aka Dvora Squadron) என்று பெயர். இந்த அணி யைச் சேர்ந்த அதிவேகத் தாக்குதல் படகு தான் சுண்டிக்குளம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தப் படகு அணியின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் லெப்.கொமாண்டர் என்.எல். அபேசிங்க. இவரது உதவியாளர் லெப்டினன்ட் பெரேரா. இவர்கள் இருவரும் P 434 இலக்க டோறாப் படகில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது தான் கடற்புலிகளின் தாக்குதல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் அவர்கள் இருவரும் P 434 இன் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் சம்பத் உள்ளிட்ட 19கடற்படையினரும் காணாமற் போய்விட்டனர்.
இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரேயொரு கடற்படைச் சிப்பாய் மட்டும் இந்தத் தாக்குதலின் பின்னர் உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலுக்குக் கடற்புலிகள் நீருக்கடியில் பயணிக்கக் கூடிய தாக்குதல் படகைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கடற்படை சந்தேகிக்கிறது, கடற்புலிகள் நீருக்கடியில் பயன்படுத்தும் படகுகளை வைத்திருப்பதை கடந்த வாரம் படையினர் உறுதிசெய்திருக்கின்றனர்.
உடையார்கட்டுப் பகுதியில் புலிகளின் படகு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் "கோகுலன் 2008′ எனப் பெயரிடப்பட்ட 35 அடி நீளமான நீர்மூழ்கிப் படகு ஒன்றை படையினர் கைப்பற்றினர். இது நீருக்கடியில் பயணிக்கும் திறனுடன் இருக்கிறதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதும் கடற்புலிகள் நீர்மூழ்கிகள் குறித்து அதிக கவனம் செலுத்துவது உறுதியாகியிருக்கிறது.
அத்துடன் இப்போது அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கின்ற விநியோகப் படகுகளை வடிவமைத்தே ஆழ்கடல் விநியோகங்களை மேற்கொள்வதாகவும் கடற்படை கூறுகின்றது. நீர்மூழ்கிகளை சொந்தமாக வடிவமைத்துக் கொண்ட நாடுகள் என்று பார்த்தால் அந்தப் பட்டியல் மிகவும் சிறியது. இலங்கை வடிவமைப்பில் மட்டுமல்ல பயன்பாட்டைக்கூட கொண்டிராத ஒரு நாடு.
ஆனால் புலிகள் இயக்கம் தனிப்பட்ட ரீதியில் நீர்மூழ்கிகளை வடிவமைத்து இயக்குகின்ற ஒரு அமைப்பாக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்புலிகளிடம் இன்னும் எவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கின்றனவோ தெரியாது. அவர்களின் பலத்தை பெருமளவில் அழித்து விட்டதாக அரசாங்கத்தால் கூறமுடியாதுள்ளது.
கைவிடப்பட்ட படகுகள் சிலவற்றையும் நீர்மூழ்கியையும் கைப்பற்றியிருப்பதன் மூலம் கடற்புலிகளை முடக்கி விட்டதாக கூறிவிட முடியாது. இந்தநிலையில் கடற் புலிகளின் தாக்குதல்கள் அண்மையில் அதிகரிக்க ஆரம்பித்திருப்பது அவர்கள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்படுவதையே காட்டுகிறது.
குறுகலான கடற்பிரதேசத்துக்குள் கடற்புலிகள் மீது கடற்படை தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று குவித்திருக்கின்ற நிலையில் அடுத்து வரும் காலத்தில் கடற்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதல்களில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கிறது கடற்படை. முல்லைத்தீவு முற்றுகைச் சமரின் முக்கிய களமாக இந்தக் கடற்பகுதி மாறியிருக்கிறது.
வேகமெடுக்கும் தொடர் தாக்குதல்களால் பேரழிவுக்குள்ளாகும் மக்கள்
வன்னி நிலைமை என்றுமில்லாதளவுக்கு மிக மோசமடைந்துள்ளது. யுத்தத்தில் சிக்குண்டு தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படுகின்றனர். மிகப் பெருமளவானோர் படுகாயமடைந்து வரு கின்றனர். விடுதலைப் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் மிகுதிப் பகுதியையும் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கான இழப்புக ளும் அதிகரித்து வருகிறது. புலிகளின் பகுதிக்குள்ளிருக்கும் மக்களை வெளியேற்று வதன் மூலம் புலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி அவர்களை முற்றாக அழித்துவிடலாமென அரசு கருதுகிறது. இந்தியாவின் பூரண ஆதரவு இலங்கை அரசுக்குக் கிடைத்திருப்பதால் இந்த யுத்தத்தை மிகவும் துணிவாக இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, விசுவமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே யுத்தம் நடைபெறுகிறது. பரந்தன்முல்லைத்தீவு வீதியை (ஏ35) மையமாக வைத்து நடைபெறும் இந்த யுத்தம் முடிவுக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படைத்தரப்பு கூறுகிறது. 15 கிலோ மீற்றர்து15 கிலோ மீற்றர் பரப்பளவினுள் நான்கு இலட்சத்து எழுபதாயிரம் மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்தப் பகுதிக்குள்தான் தற்போது புலிகளும் உள்ளனர். இந்தப் பகுதியை நோக்கிய பாரிய படைநகர்வு அப்பாவி மக்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வன்னிக்குள் ஏவப்படும் ஒவ்வொரு ஷெல்களும் பலரைப் பலியெடுப்பதுடன் பலரையும் படுகாயப்படுத்துகிறது. தினமும் 24 மணிநேரமும் கண்மூடித்தனமாக ஷெல்களும் பல்குழல் ரொக்கட்டுகளும் மோட்டார் குண்டுகளும் ஏவப்படு கின்றன.
புலிகள் பதில் தாக்குதலை நடத்துகின்ற போதும் அது எதிர்பார்த்தளவுக்கு இல்லையெனப் படைத்தரப்பு கூறுகிறது. புலிகள் தற்போது மக்களை மனிதக் கேடயமாக்கி யுத்தம் புரிய முற்படுவதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. இதனால் புலிகள் வசமுள்ள மிகுதிப் பகுதிக்குள் படையினர் நுழைவதில் தாமதமேற்படுவதாகவும் படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், அந்தப் பகுதியில் நடைபெறும் ஷெல் தாக்குதலும், பல்குழல் ரொக்கட் தாக்குதலும், மோட்டார் தாக்குதலும் படையினர் தங்கள் தாக்குதலின் வேகத்தைக் குறைத்திருப்பது போல் தெரியவில்லை. மக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாதவாறே இந்த யுத்தத்தை தாங்கள் நடத்துவதாக அரசு வெளியுலகிற்கு கூறினாலும் அங்கு தினமும் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. படுகாயமடைந்தோரால் அந்தப் பகுதியிலுள்ள ஒரேயொரு ஆஸ்பத்திரியும் (புதுக்குடியிருப்பு) நிரம்பிவழிகிறது. படுகாயமடைந்த பெருமளவானோர் பலத்த சிரமத்தின் மத்தியில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய நிலையில் 500இற்கும் மேற்பட்டோர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையிலிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.
தற்போது புலிகள் வசம் எஞ்சியிருக்கும் முக்கிய நகரான புதுக்குடியிருப்பை பிடித்து விட படையினர் முயல்கின்றனர். இந்த நகரைக் கைப்பற்றிவிட்டால் ஏ35 வீதியையும் கைப்பற்றி புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடிவிட முடியுமென படையினர் கருதுகின்றனர். அத்துடன் புலிகளின் பகுதியும் மிகவும் குறுகலாகி ஏ35 வீதிக்கு வடகிழக்கே செவ்வகம் போன்றதொரு பகுதிக்குள் முடங்கிவிடுமெனவும் கருதுவதால் எட்டு முனைகளிலிருந்தும் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்துகின்றனர். அதேநேரம், விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் அவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் தங்கள் நடவடிக்கையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிவேக டோரா பீரங்கிப் படகுகள், தாக்குதல் படகுகள், விரைந்து தாக்குதலை நடத்தும் படகு அணிகளென முல்லைத்தீவு முதல் வடமேற்கே சாலை வரையான கடற்பரப்பில் பலத்த பாதுகாப்பு வளையமொன்றை அமைத்துள்ளனர். தரையில் தற்போது படையினர் புலிகளின் பகுதியை "க்' வடிவில் சுற்றிவளைத்துள்ளனர். எஞ்சிய கடற்பகுதியில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளதால் மிகக் குறுகிய பகுதிக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். சகல முனைகளிலிருந்தும் படையினர் தீவிர தாக்குதலை நடத்திவரும் அதேநேரம், புலிகளின் பகுதிக்குள் கடற்படையினர் தரையிறங்குவதையும் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதையும் தடுப்பதற்காக கடற்புலிகள் அடிக்கடி கடற்படையினர் மீது தாக்குதலை நடத்த முற்படுகின்றனர். கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்குமிடையே முல்லைத் தீவுக்கும் சாலைக் கடற்பரப்புக்குமிடையில் தற்போது அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை கூட கடும் மோதல்கள் நடை பெற்றுள்ளன.
கடல் வழியால் தாக்குதல் நடை பெறுவதையும் கடல் வழித் தரையிறக்க முயற்சிகளைத் தடுப்பதற்காகவும் கடற்புலிகள் அடிக்கடி கடற்படையினருடன் மோதுவதால் கடற்படைப் படகுகள் எதுவும் கரையோரத்தை நெருங்குவதில்லை. கரையிலிருந்து மிக நீண்டதூரத்திலேயே அவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடல்வழியால் வரும் ஆபத்தை புலிகள் தவிர்த்தவாறு சுண்டிக்குளம் முதல் விசுவமடு ஊடாக முல்லைத்தீவு வரையான பகுதிகளிலிருந்து எட்டு முனைகளூடாக, தேங்கா பாதியை கவிழ்த்தது போல் முன்நகர முயலும் படையினருடன் கடுமையாக மோதி வருகின்றனர்.
தற்போது நடைபெறும் மோதலில் ஏற்படும் இழப்புகள் குறித்து எந்தத் தரப்பும் எதுவும் கூறுவதில்லை. புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர்ந்து செல்லும் போது தாங்கள் கைப்பற்றிய இடங்களை மட்டுமே படையினர் கூறுகின்றனர். அதேநேரம், இந்தச் சமர்களில் பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லையென்றே அரசும் படையினரும் கூறிவருகின்றனர். ஆனால், அங்கு தினமும் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லையென்றால், வவுனியா ஆஸ்பத்திரிக்கு இதுவரை படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பதற்கு அரசு என்ன பதில் கூறப் போகிறது? இதனால் வன்னிக்குள் தினமும் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டு வருவது வெளியுலகிற்கு தெரியத்தொடங்கிவிட்டது. ஆனாலும் இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் இதனை மூடி மறைத்து வருவதால் வன்னியில் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்கள் வெளி உலகை எட்ட தாமதமேற்படுகிறது.
இலங்கையைப் பொறுத்த வரை இந்த யுத்தத்தை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு இந்தியா பூரண உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையின் ஒவ்வொரு செயல்களையும் இந்தியா நியாயப்படுத்தி வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும்வரை ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வில்லையென்பதை இலங்கை அரசும் அறியும். அதேநேரம், ஈழ விடுதலைப் போரை நசுக்கி விடுதலைப் புலிகளை ஒழிக்க தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசைவிட்டால் இனியொரு போதும் வாப்புக் கிடைக்காதென்பதை இந்திய அரசும் நன்குண ரும். இதனால்தான் அடுத்த இரு மாதங்க ளுக்குள் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கிடையில் முடிந்தவரை புலிகளை அழித்து அவர்கள் பிரதேசத்தை கைப்பற்றிவிட வேண்டுமென இலங்கை அரசு மிகத் தீவிரம் காட்டும் அதேநேரம், இலங்கை அரசுக்கு சகல வழிகளிலும் உதவி புலிகளை அழித்துவிட வேண்டுமென்பதில் இந்திய அரசு பெரும் முனைப்புக் காட்டுகிறது. இதனாலேயே புலிகளது பதில் தாக்குதலும் தொடர்ந்தும் தாமதமடைந்து வருவதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா வில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரெ னக் கூறி உலகம் முழுவதையும் தனது காலடியில் வீழ்த்த முனைந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ், உலகமெங்கும் பேரிழிவுகளை ஏற்படுத்திவிட்டு எதனையும் சாதிக்காமல் அவமானத்துடன் பதவி விலகியிருந்தார். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறி உலகெங்கும் பேரழிவுகளை ஏற்படுத்திய போர்களுக்கும் புதிய ஜனாதிபதி விடைகொடுக்க முனைந்துள்ளார்.
இந்தியாவிலும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தனது ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் காங்கிரஸ் உள்ள போதும் ஈழத்தமிழர் விடயத்தில் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வே , அவசிய மெனக் கூறிக் கொண்டு இங்கு இராணுவத் தீர்வுக்கு ஆதரவளிக்கிறது. ராஜீவ் காந்தி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் மீது அரைகுறைத் தீர்வைத் திணிக்க காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முற்படுகின்றார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இலங்கை அரசு எப்போதோ தூக்கிவீசிவிட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு, விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நிலைப்பாட்டுக்கு முழு அளவில் ஆரதவு வழங்குவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நன் குணர்ந்துள்ளார். இதனால் தான் எந்த இந்தியத் தலை வர்கள் இலங்கைக்கு வந்தாலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமெனக் கூறி அவர்களை வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் இனவாதிகள் மத்தியிலோ ஒற்றையாட்சி முறைக்குள் தான் எதுவுமென்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் முன்போ சர்வகட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்கும் யோசனையே தீர்வென்கிறார்கள்.
விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த முடியுமென இந்திய அரசு நம்புகிறது. புலிகளை அழித்து அவர்களது பகுதிகளைக் கைப்பற்றிவிட்டால், இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்கள் விரும்பும் தீர்வை அமுல்படுத்த முடியாதென்பது காங்கிரஸ் அரசுக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த இருமாதங்களுக்குள் தேர்தல் வருவதற்கிடையில் முடிந்த வரை இலங்கை அரசுக்கு உதவி விடுதலைப்புலிகளை அழிப்பதுடன், ராஜீவ் படுகொலை வழக்கிற்காக புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செவதற்காகவே இலங்கை அரசிற்கு இந்தியா உதவியது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் காங்கிரஸ் அரசு முற்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இன்று தோன்றியுள்ள நிலைமை எல்லை கடப்பதையே காட்டுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக முத்துக்குமார் தனது உடலில் வைத்த தீ, முழுத் தமிழகத்திலும் பரவிவிட்டது. இதனை எவராலுமே அணைக்க முடியாதென்பது தெளிவாகியுள்ளது. இந்தத் தீக்குள் இம்முறை நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் பொசுங்கப் போகிறது. மதில்மேல் பூனை போலிருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸுடன் தொடர்ந்தும் கூட்டு வைப்பாரானால், அது தனது ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடலாமென்றதொரு நிலையைத் தோற்றுவித்து விடுமென்ற அச்சமும் அவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றம் ஈழவிடுதலைப் போரிலும் மாற்றத்தை ஏற்படுத்துமெனக் கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் வன்னிப் போரில் திடீர் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால் அதற்கு இராணுவ ரீதியில் பூரண உதவிகளை வழங்க காங்கிரஸ் அரசு தயாராகவே உள்ளது. ராஜீவ் காந்தியை மையப்படுத்தியதாகவே சோனியா இந்த அரசை வழிநடத்தி வருவதால் புலிகளை அழிப்பதில் அவர் தீவிர அக்கறை காட்டுகின்றார். ஆனால் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்படும் போது அது இந்திய நலன் சார்ந்ததாகவே இருக்குமென்பதால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தற்போதைய காங்கிரஸ் அரசு இராணுவத் தீர்வுக்கு சாதகமாயிருப்பது போல் புதிய அரசு இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்காது. இதனால் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை காண முற்படும் இலங்கை அரசுக்கு அதன் ஆதரவு கிடைக்காது. இதனைப் புலிகளும் நன்குணர்ந்துள்ளதுடன் இலங்கை அரசுக்கும் இது நன்கு தெரியும். இதனால்தான் இந்திய ஆட்சியில் மாற்றமொன்றுக்காக விடுதலைப் புலிகள் காத்திருக்கையில் அந்த மாற்றத்திற்கு முன்னர் புலிகளை அழித்து அவர்கள் வசமிருக்கும் எஞ்சிய பகுதியையும் கைப்பற்றிவிட இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது.
அதேநேரம், வன்னியிலிருக்கும் 4,70,000 மக்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதிலும் தீவிர அக்கறை காட்டுகிறது. கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படும் போது, புலிகள் அவர்களை வெளியேறிவிட்டால் இந்த இழப்புகள் ஏற்படாதெனக் கூறி உலகளாவிய ரீதியில் புலிகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கவும் அரசு முற்படுகிறது. இதனால் வன்னியிலுள்ள மக்களின் உயிர்களுடன் விளையாட அரசு தயாராகிவிட்டது. பின் விளைவுகள் குறித்து சிந்திக்காது புலிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக மக்களை பணயம் வைக்க முடியுமென்ற தத்துவம் இலங்கை அரசை திருப்பித் தாக்கினால் எப்படியிருக்குமென்பதை எவரும் உணரத் தலைப்படவில்லை.
தற்போதைய நிலையில் வன்னியிலி ருந்து மக்கள் வெளியேறும் சாத்தியமில்லை யென்றே கருதப்படுகிறது. இதனால் அங்கு படைநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் போது இழப்புகளும் பெரியளவில் ஏற்படலாம். இது விடுதலைப் புலிகளுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த முற்படுகிறார்களென்ற பிரசாரத்தை மேலும் வலுப்பெறச் செயலாம். இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த புலிகள் தொடர்ந்தும் அந்தச் சமரிலேயே ஈடுபடுவதால் தற்போது அவர்களது பகுதிகள் அனைத்திலும் ஷெல்கள் வீழ்கின்றன. மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் நாலரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதால் தினமும் அங்கு இழப்புகள் ஏற்படப் போகின்றன.
இலங்கை விவகாரம் தொடர்பில் எப்போது உங்கள் மௌனம் கலையும்: கனேடிய எம்.பி. கடும் சீற்றம்
இலங்கை விவகாரம் தொடர்பில் நீண்டநாட்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தை கனேடிய அரசாங்கம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி, அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு எதிரான நிலைப்பாடொன்றை கனேடிய அரசு எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Albina Guarnieri
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை காலை விடுத்த அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள எம்.பி அல்பினா குவார்னியறி இலங்கையிலுள்ள அப்பாவி மக்கள் இராணுவ நடவடிக்கையால் காடுகளுக்குள் தஞ்சமடைய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தனது அரசாங்கம் மௌனமாக இருப்பதை தான் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி எம்.பி.யான குவார்னியறி மேலும் தெரிவித்துள்ளதாவது;
இராணுவத்தினரால் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டபோது கனடா அமைதியாக இருந்தது. மருத்துவமனைகள்,பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் குண்டு வைத்து தகர்த்தப்பட்டபோதும் கனடா அமைதியாக இருந்தது. பலவந்த இடப்பெயர்வுகள், எண்ணிலடங்காத கொடுமைகள் மற்றும் பாரியளவில் காணாமல் போதல்கள் நடைபெற்று வரும் நிலையிலும் கூட கனடா தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கிறது.
அங்கு இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, உண்மையை அறிவதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனேடிய கொன்சவேடிவ் அரசாங்கம் எடுக்கவேண்டுமெனவும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒன்றிணைந்த சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை குவார்னியறியின் மிசிசௌகா நகர வீதிகளில் கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய குழுவொன்றையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாறு கவனிக்கிறது
வரலாற்றால் சபிக்கப்பட்ட இரு நிலங்கள். நவீன உலகைப் பின்னோக்கி இழுக்கும் இரு போர் வெறியர்கள். துப்பாக்கிகள், எறிகணைகள், வெடிகுண்டுகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ரத்தம், ஓலம், மரண ஓட்டம், சாவு…
வரலாறு நெடுக மேலாதிக்கத்தாலும் போர் அச்சுறுத்தலாலும் பீடிக்கப்பட்டவை காஸôவும் வன்னியும். ஏறத்தாழ ஒரே காலகட்டம். ஏறத்தாழ ஒரே பிரச்னை. ஏறத்தாழ ஒரே சூழல். ஆனால், அணுகுமுறைகளில் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள்.
கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஹமாஸýடனான போர்நிறுத்தத்தை தூக்கியெறிந்துவிட்டு காஸô மீதான தன் தாக்குதலை இஸ்ரேல் அதிபர் எஹுத் ஒல்மர்ட் தொடங்கினார். 22 நாள்களில் ஏறத்தாழ 1,200 உயிர்களைப் பலிகொண்ட பின்னர் ஒட்டுமொத்த சர்வதேச எதிர்ப்பின் விளைவாக போர்நிறுத்தத்தை இப்போது அறிவித்திருக்கிறார்.
இந்தப் போர்நிறுத்தத்துக்காக குரல் கொடுக்காதவர்கள் யாருமே இல்லை. போர் தொடங்கிய நாளிலிருந்தே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
ஐ.நா.சபையின் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தது. ""இந்தத் தீர்மானம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவு" என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீஸô ரைஸ். ""நான் பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முழுவீச்சில் தொடங்குவேன்" என்றார் தற்போது பதவியேற்றுள்ள அதிபர் ஒபாமா.
இஸ்ரேலால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அரபு நாடுகளின் வற்புறுத்தலின்பேரில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் போர்நிறுத்தத்தை ஐ.நா.சபை வலியுறுத்தியது. பான் கி மூன் லெபனான் சென்றார். ஐரோப்பிய ஒன்றியம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியது.
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி எகிப்து அதிபர் முபாரக்கைச் சந்தித்தார். எஹுத் ஒல்மர்ட்டிடம் போரை நிறுத்தச் சொன்னார். இங்கிலாந்தும் சீனாவும் இந்தியாவும் இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்டித்தன.
அரபு நாடுகளில் தொடங்கி இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரவிய மக்களின் தன்னெழுச்சியான இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம் எகிப்து, கியூபா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்று உலகெங்கும் பரவியது. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியாவிலும்கூட காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசுகள் மெüனம் காக்க முற்பட்டபோதும் மக்களின் குரல் அரசாங்கங்களை அசைத்து மெüனத்தைக் கிழித்தது.
ஆனால், உலகின் இன்னொரு பக்கம் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்க ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 2008, ஜனவரி 17-ல் விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டார் ராஜபக்ஷ. இலங்கை அரசின் வன்னி மீதான போர் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டாகிவிட்டது. உயிரிழந்தோர், காயமடைந்தோர், காணாமல்போனோர் எண்ணிக்கை தெரியவில்லை. வன்னியின் ஒவ்வொரு நகரமும் ஆவி நகரமாகிக்கொண்டிருக்கின்றன.
முல்லைத்தீவில் சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே வாழக் கூடிய பரப்பளவில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் உயிரைக் கையில் ஏந்தி ஒளிந்திருக்கின்றனர். காடுகளிலும் கிராமங்களிலும் வெட்டவெளியில் ஆயிரக் கணக்கானோர் எவ்வித வசதியுமின்றி தங்கியிருக்கின்றனர். விஷ ஜந்துக்கள் கடிக்கு ஆளாகி மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் வன்னியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். மோட்டார் வாகனங்களில், மாட்டு வண்டிகளில், இரு சக்கர வாகனங்களில் எனக் கிடைத்த வாகனத்தில் சொந்த மண்ணையும் உடைமைகளையும் துறந்து பெட்டி, படுக்கையோடு வரிசையாய் அணிவகுத்துச் செல்லும் தமிழர்களால் யாழ்குடா செல்லும் பாதைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன.
ஆனால், இலங்கை அரசோ சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமரை நடத்திக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவைச் சுற்றி வளைத்திருக்கும் இலங்கை ராணுவம் தன்னுடைய பெரும்பகுதி வீரர்களையும் அங்கு குவித்துவருகிறது. தாக்குதலின் உக்கிரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் என எவ்விதப் பாகுபாடுமின்றி குண்டுவீச்சு தொடர்கிறது.
ஐ.நா. சபை, அமெரிக்காவின் புதிய அதிபர், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் ஈழத் தமிழர்கள் தனித்தனியே விடுத்த போர்நிறுத்த கோரிக்கை எவராலும் பொருள்படுத்தப்படவில்லை. ""இடம்பெயரும் பிரதேசங்கள் மீதான தாக்குதலையேனும் தாற்காலிகமாக நிறுத்த வேண்டும்" என்ற தமிழ் மக்களின் குறைந்தபட்ச உயிர்ப்பிச்சையையும்கூட ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார். ""மருத்துவமனைகள் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டும்" என்ற மருத்துவர்களின் வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டதால் போரில் தாக்குதலுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. இறந்தவர்கள் பலருக்கு இறுதிச் சடங்குகள்கூட நடப்பதில்லை.
இலங்கையில் இதற்கும் மேல் நிகழ வேண்டியது என்ன? ஒட்டுமொத்த உலகமும் இன்னமும் மெüனம் காக்கிறதே ஏன்? ஏனெனில், இலங்கையில் கொல்லப்படுவது தமிழர்கள்.
இந்த ஒரு காரணம்தான் இந்தியாவின் பிரதமர் முதல் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் வரை இஸ்ரேலுக்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு ஒரு நியாயமும் பேச வைக்கிறது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பொதுத் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறது; தம் சொந்த இனத்தவர் ஆயிரக்கணக்கில் உயிரழிய, குற்ற உணர்வற்ற மெüனத்தை தமிழர்களுக்குப் பழக்கி இருக்கிறது.
ஆறு கோடி தமிழர்களின் உணர்வைப் புறந்தள்ளி தன்னுடைய ரகசிய உதவிகள் மூலம் ஒரு வரலாற்றுக் குற்றத்தைத் திட்டமிட்டு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தன்னுடைய வெற்று வார்த்தைகள் மூலம் அந்தக் குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தம்முடைய ஓட்டு அரசியல் மூலம் மன்னிக்க முடியாத இனத் துரோகத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். இவை எல்லாவற்றையும் மெüனமாக கவனித்துக் கொண்டிருக்கிறது வரலாறு!
வன்னி எம்.பி.செல்வம் அடைக்கலநாதனின் வவுனியா அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் !a
February 1, 2009
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள வன்னி மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராகிய செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தின் மீது சனிக்கிழமை இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் காவல் வழங்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் அமைந்துள்ள காணியின் பின்பக்கத்தில் இருந்து வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு)புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 350 பேர் படுகாயம்; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு
இணைப்பு)புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 350 பேர் படுகாயம்; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு |
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் டாங்கிகள் - 02 துருப்புக்காவி - 01 இராணுவ ஊர்திகள் (ட்றக்) - 02 இராணுவ பேருந்து - 01 இராணுவ உழுபொறிகள் - 02 ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்குள் படையினர் இருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். |
"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு |
|
|
இறுதி ஊர்வல பாதை முழுவதும் திரண்ட மக்கள் மெழுகுதிரி ஏந்தி முத்துக்குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ஈழத் தமிழருக்காக தனது இன்னுயிரைத் தீயிட்டு மாய்த்துக் கொண்ட "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் உடல் சென்னை கொளத்தூரில் உள்ள அவரின் சகோதரி வீட்டில் பொதுமக்களின் வணக்கத்துக்காக கடந்த இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை புறப்பட்டு சென்னை கொளத்தூரில் இருந்து காகித ஆலை சாலை, பெரம்பூர் தொடருந்த நிலையம், ஸ்டீபன் சன் சாலை, இளங்கோ நகர், அம்பேத்கர் கல்லூரி சாலை, எருக்கஞ்சேரி, வியாசர்பாடி மேம்பாலம் வழியாக 10 கிலோ மீற்றர் தொலைவைக் கடந்து இரவு 9:00 மணிக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள இடுகாட்டை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்ததராஜன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உட்படப் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மாணவர்கள், இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் மெழுகுதிரி ஏற்றி "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாருக்கு வணக்கம் செலுத்தினர். |
இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!
|
|
|
"புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே. இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு. தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல. ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை. "அன்னை சோனியாவின் ஆன்மா கரையப்போவதில்லை" இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே. இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை. இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர். இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன. இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன. இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது. இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும் கூட - அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி - சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர். ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா. பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும். ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும். தனக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே இவன் சிரிக்கின்றான் பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக "சாஸ்திரி பவன்" முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை. தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை. பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை. என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா. சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா. நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், "இப்போது எமது கையில் எதுவுமே இல்லை", என்று. உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்! எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும். ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம். உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம். சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம். இந்தியா நடத்தும் போர்: இனி நடக்க முடியாதவள் ஆனாள் தங்கை ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும். சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும். இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை. மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி - ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம். "வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும். எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும். மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல. எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும். இப்போது - எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும். உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் - அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது. அந்த சரியான இலக்கு - இந்தியா. என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும். விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை. இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை. உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும். தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும். லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும். அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும். இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும். தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும். எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும். தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும். தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும். ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும். அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும். உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை: உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும். படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும். மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும். நாம் தெளிவாக இருப்போம் - சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும். ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும். இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி! சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து! செயற்படுவோம், இப்போதே! கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com கையிழந்த தம்பி காத்திருக்கிறான், நாம் கை கொடுப்போம் என்ற நம்பிக்கையில் |
புதுக்குடியிருப்பு நரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு
|
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. |
இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும். |
புலிகள் ஆதரவு முழக்கங்கள் : முத்துக்குமார் அஞ்சலி ஊர்வலத்தில் பொங்கிய ஈழ உணர்வு!
|
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர்கள், திரைப்பட படைப்பாளிகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், சமுதாய அமைப்புகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பெருமளவில் பங்கேற்றனர். முத்துக்குமார் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் படங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பல்வேறு அமைப்பினர் ஊர்வலத்தில் முழக்கங்கள் எழுப்பினர். தமிழீழம் அமைந்தே தீரும் என்றும், ஈழம் வாழ்க என்றும், மேதகு பிரபாகரன் வாழ்க என்றும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வழி நெடுகிலும் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களில் பலரும் பிரபாகரன் படத்தை பிடித்திருந்தனர். குழந்தைகள் கைகளிலும் பிரபாகரன் படமும், புலிக்கொடியும் காணப்பட்டன. இந்த காட்சிகளைக் கண்டும், முழக்கங்களை கேட்டும் மகிழ்ச்சியடைந்த ஈழ ஆதரவாளர்கள், முத்துக்குமார் விருப்பம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என கருத்து தெரிவித்தனர். சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் புலிகள் ஆதரவு முழக்கங்கள் எழுப்பி சென்றனர். முத்துக்குமாரின் மரணத்திற்கு பிறகு ஈழ ஆதரவை வெளிப்படையாக மீண்டும் வெளிப்படுத்தியதை அதிகமாகக் காண முடிந்தது. |