சமீபத்திய பதிவுகள்

இதிலும் ஏர்டெல்லிற்கு முதலிடம் தான்..

>> Saturday, December 10, 2011



புதுடில்லி : தங்களது மொபைல் எண்ணை மாற்றாமல், விரும்பிய நெட்வொர்க்கிற்கு மாறும் வசதியான மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (எம்என்பி)க்கு விண்ணப்பித்தவர்களை தட்டிக்கழித்த நிறுவனஙகளின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக ராஜ்யசபாவில், தகவல் மற்றும் தொலைதொடர்பு து‌றை இணையமைச்சர் மிலிந்த் தியோரா எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

2011ம் ஆண்டின் அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தியாவில் அதிக மொபைல்போன் வாடிக்கையாளர்களளை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் ( 173.73 மில்லியன்) முதலி‌டத்தில் உள்ளது . இரண்டாவது இடத்தில் வோடபோனும் (145.91 மில்லியன்), 3ம் இடத்தில் ஐடியா செல்லுலார் ( 101.81 மில்லியன்) உள்ளது. 

வாடிக்கையாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள மொபைல் நெட்வொர்க்கின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் பிடிக்காமல், பலர் எம்என்பி ச‌ேவையின் மூலம், தங்களுக்கு பிடித்தமான நெட்வொர்க்குகளிலிருந்து மாறி வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டின், நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 190 லட்சம் வாடி‌க்கையாளர்கள் எம்என்பி சேவையின் மூலம் தங்களுக்கு பிடித்த நெட்வொர்க்கிற்கு மாறி உள்ளனர். 

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவைக்கு விண்ணப்பித்தவர்களை தட்டிக்கழிப்பதாக, வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இந்த பட்டியலிலும், ஏர்டெல் நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக 893 புகார்களும், வோடபோன் நிறுவனத்திற்கு 792 புகார்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு எதிராக 313 புகார்களும், ரிலையன்ஸ் கம்யூனி‌கேசன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 307 புகார்களும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு எதிராக 149 புகார்களும் மற்றும் லூப் நிறுவனத்திற்கு எதிராக 134 புகார்களும் பதிவாகி உள்ளது. 

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை நிராகரித்த நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை தனது துறை சார்பில் எடுக்கப்பட உள்ளதாக இணையமைச்சர் மிலிந்த் தியோரா, ராஜ்யசபாவில் தெரிவத்தார்.

source:dinamaalr
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP