சமீபத்திய பதிவுகள்

புகை பிடிப்பது குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் விஷயம்

>> Wednesday, May 28, 2008

 
 
பிரேசிலியா: புகைபிடிப்பதன் தீமைகள் குறித்து மருத்துவர்கள் முதல் உறவினர்கள் வரை யார் அறிவுரை சொன்னாலும் சிலரால் அப்பழக்கத்தை விட்டு மீள முடிவதில்லை.

தற்போது உலகப் பொருளாதாரத்தில் விரைந்து முன்னேறிவரும் நாடுகளில் ஒன்றான பிரேசில், புகை பிடிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை விரிவான அளவில் செய்து வருகிறது. புகை பிடிப்பது குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தை சிகரெட் பாக்கெட்கள் மீது அச்சடித்திருக்கிறார்கள்.

இது அந்நாட்டு சுகாதாரத்துறையின் யோசனை. புகைக்கு எதிராக இதுபோன்ற 10 விளம்பரங்கள் இப்போது பிரேசில் நாட்டையே கலக்குகின்றன. இவற்றைப் பார்த்த பிறகாவது புகைப் பிரியர்கள் கொஞ்சம் திருந்தலாம். 
  
  http://www.dinakaran.com/daily/2008/may/29/high2.asp

StumbleUpon.com Read more...

சேலத்தில் நாடக நடிகை வெட்டிக்கொலை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்



சேலம், மே.29-

சேலத்தில் நாடக நடிகை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்தார். கொலையாளி யார்? ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடக நடிகை

சேலம் கிச்சிப்பாளையம் பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் சாந்தி என்ற செல்வமேரி (வயது 41), நாடக நடிகை. இவருடைய கணவர் மாசிலாமணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வளர்மதி (23), சத்யா (21) என்ற 2 மகள்களும், செல்வம் (19) என்ற மகனும் உள்ளனர்.

கணவர் இறந்த பின்பு சாந்தி நாடகங்களில் நடித்து தன் குழந்தைகளை வளர்த்து வந்தார். மகள்கள் வளர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியபிறகு சாந்தி நடிப்பது இல்லை. ஆனால் மகள்களுக்கு நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வாங்கித் தருவார்.

இவர்களில் செல்வம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வளர்மதியும், சத்யாவும் நாடகங்களில் நடித்து வருகிறார்கள்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வளர்மதியும், சத்யாவும் நாடகங்களில் நடிப்பதற்காக வெளிïர் சென்றுவிட்டனர். செல்வமும், சத்யாவுக்கு துணையாக வெளிïருக்கு சென்றிருந்தார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று காலை செல்வமும், சத்யாவும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவருடைய தாய் சாந்தி ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அலறினார். அவருடைய தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக்காயம் இருந்தது.

சாந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு போராட்டமே நடந்துள்ளதற்கு அறிகுறியாக வீட்டில் அலமாரியில் இருந்த துணிமணிகள், பொருட்கள் எல்லாம் வெளியே சிதறிக்கிடந்தன.

செல்போன் மாயம்

சாந்தி தன்னுடைய உபயோகத்துக்காக ஒரு செல்போன் வைத்திருந்தார். போலீசார் அந்த செல்போன் நம்பருக்கு அழைத்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே கொலையாளியே, அந்த செல்போனை தூக்கிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் சாந்தியை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளும் சிக்கவில்லை. அதுவும் போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

சாந்தியை கொலை செய்த மர்ம மனிதன் யார்? ஏன் கொலை செய்தான்? என்ற விவரம் தெரியவில்லை. சாந்தி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்துதான் அந்த ஆசாமி வீட்டுக்கு வந்துள்ளான் என்பதாலும், கொலை செய்யப்பட்ட சாந்தியின் உடல் நிர்வாண நிலையில் இருந்ததும் போலீசாரிடம் பல்வேறு ïகங்களை ஏற்படுத்தியுள்ளது. பல கோணங்களில் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சாந்தி நாடக நடிகை என்பதால் அவருக்கு நாடகங்களில் நடித்த வகையில் யார், யாருடன் பழக்கம் உண்டு என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415571&disdate=5/29/2008

StumbleUpon.com Read more...

ஒசாமா பின்லேடன் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு


பாகிஸ்தான்-சீனா எல்லையில்
பின்லேடன் இமயமலை அடிவாரத்தில் பதுங்கி இருக்கிறார்
அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது


இஸ்லாமாபாத், மே.29-

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் சீனா எல்லை அருகே இமயமலை அடிவாரத்தில் பதுங்கி இருக்கிறார் என்று அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ கண்டுபிடித்து உள்ளது.

எங்கு இருக்கிறார்

அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின்லேடன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியபோது ஆப்கானிஸ்தான் தங்கி இருந்தார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து அங்கு இருந்து தப்பி ஓடிய அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியானது.

இணையதளத்தில் வெளியான அவருடைய அறிக்கைகளும், போட்டோக்களும் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அவர் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிஇன மக்களுடன் வசிக்கிறார் என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியிலும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இமயமலை அடிவாரத்தில்

இந்த நிலையில் அவர் இமயமலை அடிவாரத்தில் காரகோரம் பகுதியில் சீனாவின் எல்லை அருகே அவர் பதுங்கிஇருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ கண்டுபிடித்து உள்ளது.

உலகின் கூரை என்று அழைக்கப்படும் அளவுக்கு உலகிலேயே உயரமான பகுதியில் தான் பின்லேடன் பதுங்கிஇருக்கிறார். பாகிஸ்தானின் மேற்கே ஆப்கானிஸ்தானின் நுரேஸ்தான் மாநிலமும், இந்த பகுதியின் வடக்கே சீனாவும் உள்ளது. இந்த தகவலை அல்அரேபியா என்ற அரபு சேனல் அறிவித்து உள்ளது.

அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆலோசனை

கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் உள்ள ராணுவதளத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் பின்லேடனை பிடிப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஈராக் நாட்டுக்கான அமெரிக்க தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயியஸ் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஆனி பாட்டர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415614&disdate=5/29/2008

StumbleUpon.com Read more...

சிரிப்பு நடிகர் ஒருவர் தன் காமெடியில் அடிக்கடி `அப்துல்கலாம்' பற்றி குறிப்பிடுவது ஏன்?

தங்கள் காமெடியில் அடிக்கடி `அப்துல்கலாம்' பற்றி குறிப்பிடுவது ஏன்?

அவர் `இஸ்ரோ' தந்த விஞ்ஞானி!
இலக்கியம், தத்துவம் பேசும் மெய்ஞானி!
இசையை நேசிப்பவர்:
பெற்றோரைப் பூசிப்பவர்.
`பொக்ரான்' சோதனையில்
உலகத்தையே உளப்பியவர்!
குழந்தைகள் உள்ளத்தில்
பூவாய் நுழைந்து, புயலைக்கிளப்பியவர்!
ஒரு மயிலுக்கு அடிபட்டாலும்
மருத்துவம் செய்யக் கூறியவர்!
வெயிலில் நிற்கும் ஜவானுக்கு
நிழற்குடை அமைக்கக் கோரியவர்!
இந்தியா, கல்வி - அவர் கடமைகள்!
இரண்டு பேண்ட், இரண்டு ஷர்ட்...
அவர்தம் உடமைகள்!
பாதுகாப்பு வளையம் தாண்டியவர்!
பாரதமாதாவுக்கு வேண்டியவர்!
இல்வாழ்க்கை என்னும்
இன்பம் துறந்தவர்!
இந்திய சுபிட்சத்தின்
கதவு திறந்தவர்!
அவர்!
மாணவர் நெற்றியில் எரியும் விளக்கு!
மணக்கும் பூக்களின் புதிய கிழக்கு!
இந்திய தேசத்தின் புதிய பிதா!
இதனால்தான் அவர் பற்றி கூறுகிறேன் சதா!.

டாக்டர். முருகுசுந்தரம், பூந்தமல்லி.
 
 

StumbleUpon.com Read more...

தில்லை நடராஜர் கோயிலுக்கும்,இப்போது புதிதாக ஆரம்பமாகி விட்டது, ஒரு பிரமோற்சவ பிரச்னை

 

 
 
 
 01.06.08     ஹாட் டாபிக்
 
தில்லை நடராஜர் கோயிலுக்கும், திகுதிகு பிரச்னைகளுக்கும் அப்படி என்னதான் ஒட்டுறவோ தெரியவில்லை! தில்லை பொன்னம்பல மேடையில் நின்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் பிரச்னை ஒருவழியாக ஓய்ந்து விட்டதல்லவா? இப்போது புதிதாக ஆரம்பமாகி விட்டது, ஒரு பிரமோற்சவ பிரச்னை.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்ளேயே உள்ளது   ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில். இது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில். `இங்கே கொடி யேற்றம்,  பிரமோற்சவம்  நடத்த வேண்டும்' என்று வைணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்க, அவ்வளவுதான்! பிரச்னை ஆரம்பமாகி விட்டது. ``இது சிவ ஸ்தலம். இங்கே பரிவார தேவதையாக இருக்கும் பெருமாளுக்கு எதற்கு பிரமோற்-சவம்? இது ஆகமத்துக்கு எதிரானது! அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன்தான் வைணவர்களைத் தூண்டி-விடுகிறார்'' என்று தீட்சிதர்கள் எகிறி எழ, தீயாய்த் தகிக்க ஆரம்பித்துள்ளது இப்பிரச்னை.
இதுபற்றி சிதம்பரம் நடராஜர் கோயில் பூஜா ஸ்தானிக டிரஸ்டிகளில் ஒருவரான ராஜசேகர தீட்சிதரிடம் முத லில் பேசினோம். "இங்கே பெருமாள் பரிவார தேவதை யாகத்தான் வீற்றிருக்கிறார். பரிவார தேவதைக்கு பிர மோற்சவ விழா நடத்தக் கூடாது. அத்துடன் இங்கே கோயில் என்ற அமைப்புடன் பெருமாள் இல்லை. தனி சன்னதியில்தான் பெருமாள் இருக்-கிறார். கோயில் என்றால் ராஜகோபுரம்,  கொடிமரம், பலிபீடம், கர்ப்பகிரகம் எல்லாம்  இருக்க வேண்டும். இங்கே ராஜகோபுரத்துக்கு வெளியில்தான் கொடிமரம், பலிபீடம் இருக்கிறது. அத்துடன், கொடிமரத்தில் கொடியேற்றுவதற்கான வளையங்கள் எதுவும் அமைக்கப் படவில்லை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்களுக்குள்ளும் பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. அங்கேயெல்லாம் பிரமோற்சவ விழா நடத்தப்படுவதில்லை. பிரமோற்சவ விழா என்றால், தேரோட்டம் வேண்டும். இவர்களிடம் தேரே இல்லை. அதேபோல் வாகன மண்டபம், கல்யாண மண்டபம், தீர்த்தவாரி விழா நடத்த தீர்த்தம் என எதுவுமே இங்கே இல்லை. அப்படியிருக்க, பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று வைண வர்கள் பிடிவாதம் பிடிப்பது  மூர்க்கத்தனமான செயல்'' என்றார் அவர் ஆத்திரத்துடன்.
"நாங்கள் கதவைத் திறந்துவிட்டால்தான் அவர்கள் பூஜையே செய்யமுடியும். இதை நாங்கள் ஆணவத்துடன் சொல்லவில்லை. அந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்குக் கூட நாங்கள்தான் யாகசாலைக்கு இடம் தந்து, யாகத்துக்குத் தேவையான வெள்ளிச் சொம்பு ஆகியவற்றைத் தந்து ஒத்துழைப்புக் கொடுத்தோம். ஆகமத்தை மாற்றக் கூடாது என்பதால்தான் பெருமாளுக்கு இங்கே பிரமோற்சவம் நடத்தக் கூடாது என்கிறோம். நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்ப்பதற்காக இங்கே வந்தவர்தான் இந்த கோவிந்தராஜப் பெருமாள். அவரது சன்னதி நடராஜர் கோயிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், அதை  அப்புறப்படுத்திவிட்டு பெரு மாளைத் தூக்கி கடலில் போடவேண்டும் என்று, இந்தக் கோயிலை அமைத்த மன்னனே சொன்னதாகக் கூட வரலாறு இருக்கிறது.
வி.வி.சுவாமிநாதன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, நடராஜர் கோயில் நகைகளைச் சரிபார்க்க அவற்றை எடுத்து வரச்சொன்னார். நாங்கள் மறுத்து விட்டோம். அதை மனதில் வைத்துத்தான் இப்போது வைணவர்களைத் தூண்டிவிட்டு அவர் பழி தீர்க்கப் பார்க்கிறார். அத்துடன், எங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் சொல்கிறார். சைவ, வைணவ மோதலைத் தூண்டி விடும் இவரையல்லவா குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்? இந்தப் பிரச்னையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ளப் போகிறோம்'' என்றார் துரை தீட்சிதர் என்பவர் படபடப்புடன்.
சரி! வைணவர்கள் தரப்பு என்ன சொல்கிறது?  அது-பற்றி நமக்கு விளக்கம் தர முன்வந்தார் தில்லை ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயில் மேனேஜிங் டிரஸ்டி ரங்காச்சாரி.
"திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகி-யோ-ரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தனி திவ்ய கேஷத்திரம். அத்துடன் தனி நிர்வாகம்,தனி ஆகமத்துடன் இங்கே பூஜை நடந்து கொண்டி ருக்கிறது. இந்தக் கோயிலில் பிரமோற்சவம் நடத்த பக்தர்கள் விரும்பியதால், அறநிலைய அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட்டோம். விழாவுக்கு ஒத்துழைப்பு வேண்டும் என தீட்சிதர்களி டமும் விண்ணப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு தனிக்கோயில் என்றால் அது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த அம்சத்துடன் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், கொடிமரம், பலிபீடம் என ஒரு கோயிலுக்குத் தேவை யான அனைத்தும் இந்த பெருமாள் கோயிலுக்கு இருக்கிறது. பெருமாளை பரிவார தேவதை என்று தட்டிக்கழித்தால், இங்குள்ள  சிவகாமி அம்மன், சுப்பிரமணியசுவாமி போன்றவர்களும் பரிவார தேவதைகள்தானே? அவர்களுக்கெல்லாம் கொடியேற்றி உற்சவம் நடத்துவது மட்டும் சரியா?
பிரமோற்சவ பிரச்னையில் முன்னாள் அமைச்சர் சுவாமி நாதன் எங்களைத் தூண்டிவிட வில்லை. 1968-ம் வருடம் உற்சவம் நடத்த நாங்கள் அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்தபோது, தீட்சிதர்கள் ஆணையரிடம் அப்பீல் வாங்கினார்கள். பிறகு, 1982-ல் மறுபடியும் நாங்-கள் முயன்றபோது தீட்சிதர்கள் உயர்நீதிமன்றம் போனார்கள். ஆகவே, எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. ஆதிமுதலாக நாங்களாகவேதான் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆயிரம் பேசினாலும் நடராஜர் கோயிலுக்குள் சைவ, வைணவ பேதம் கிடையாது. ஒரே இடத்தில் நின்று கொண்டு சிவனையும், பெருமாளையும் வழிபடுவது மாதிரியான அமைப்பு சிதம்பரத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது'' என்றார் அவர் போட்டோவுக்கு மறுத்தபடி.
அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய நபர் ஒருவர் பல `பகீர்' தகவல்களைப் பகிர்ந்தார்.

"நாலாயிர திவ்விய பிரபந்தம் உருவானதே இந்த கேஷத்திரத் தில்தான் என்கிறார்கள். இங்கு கொடிமரம், பலிபீடம் போன்றவை இருப்பதால் ஏற்கெனவே பிரமோற்ச வம் நடந்திருக்க வேண்டும். தில் லையில் இப்போது தீட்சிதர்களின் பலம் சற்றுக் குறைந்திருப்பதால்  இந்த பிரமோற்சவப் பிரச்னை எழுந்திருக்கிறது. பிரமோற்சவம் நடத்தினால் பெருமாளுக்கு சக்தி அதிகமாகி, நடராஜருடைய சக்தி குறைந்துவிடும் என்று தீட்சிதர்கள் கருதுவதாலேயே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்'' என்றார் அவர்.
கடைசியாக  வி.வி.சுவாமிநாதனிடம் பேசினோம்.
"அதிர்ஷ்டவசமாக இந்த பெருமாள் கோயில்  தமிழக அரசின் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது.  பெருமாள் கோயில் பரம்பரை டிரஸ்டிகள் என்று சொல்பவர்கள், தீட்சிதர்களை எதிர்க்கத் துணிவில்லாமல் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பதால் தான் இந்தக் கோயிலே விளங்காமல் இருக்கிறது.
இந்தக் கோயில் அறங்காவலர் நிர்வாகத்தில் மேனேஜிங் டிரஸ்டி என்ற ஓர் அலங்காரப் பதவிதான் இருக்கிறது. அந்த இடத்தில் அதிகாரமுள்ள நிர்வாக அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். 1979லிருந்து அறநிலையத்துறையும், நிர்வாக அறங்காவலர்களும் எடுத்த முயற்சியே பிரமோற்சவம் நடத்தப்படவேண்டு மென்பது தான். இதற்குத் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், போலீஸில் புகார் செய்யவேண்டியதுதானே? ஆனால் செய்ய மறுக்கிறார்கள். அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபிறகுதானே கனகசபையில் தேவாரம், திருவாசகம் பாட தீட்சிதர்கள் அனுமதித்து  அடங்கிப் போனார்கள்'' என்றவர், "இந்தப் பிரச்னையில் நான் யாரையும் தூண்டிவிடவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வுதான் ஊட்டுகிறேன். இதில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கனகசபையில் நடந்தது மாதிரி ஒரு பெரிய மோதலே நடக்கும்'' என்றார் தெளிவாக.     ஸீ

ஸீ
ஆர். விவேக் ஆனந்தன்

 

 

StumbleUpon.com Read more...

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.இவ்வளவு இடங்களை பிடிக்க காரணம் என்ன?ஓர் ஆராய்ச்சி

கர்நாடகத் தேர்தலில் தமது இந்துத்வா முழக்கங்களை பி.ஜே.பி. முன் வைக்கவில்லை. அதை மூட்டை கட்டி வைத்து விட்டது. விலைவாசி உயர்வைத்தான் முன்னிறுத்தியது. காரணம், வெங்காயத்தின் விலை உயர்வுதான் தங்கள் டெல்லிப் பிரதேச ஆட்சியையே கவிழ்த்தது என்பதனை அவர்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்னையால் நல்ல பலன் கிடைத்தது. நமது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் புரிய வேண்டுமே?
 
 
 
 
 
 
ர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தனிப்பெரும் சக்தியாக எழுந்திருக்கிறது. தனித்து ஆட்சி அமைக்க  அதற்கு இன்னும் கூடுதலாக சில இடங்கள் தேவையென்றாலும் அரசு அமைக்க அந்தக் கட்சியை அழைப்பதுதான் ஜனநாயகம்.


இந்த வெற்றி மூலம் விந்தியத்திற்குத் தெற்கே பி.ஜே.பி. தடம் பதிக்கிறது. தலித் மக்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அந்த வாக்கு வங்கியை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி குஜராத் தேர்தலில் சிதைத்தது. மீண்டும் நரேந்திர மோடி முதல்வரானார். இப்போது கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற, அதே கைங்கர்யத்தை மாயாவதி செய்திருக்கிறார்.


கர்நாடகத் தேர்தலில் மாயாவதி தனித்து `களம்' காண்கிறார் என்ற செய்தி ஏற்கெனவே பி.ஜே.பி.யின் வெற்றிக்குக் கட்டியம் கூறி விட்டது.


தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் பி.ஜே.பி.யின் தேர்தல் வல்லுனர் அருண் ஜேட்லி பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தார். அமைதியாகப் பணிகளைத் தொடங்கினார். அடுத்து அவர் ஓர் அறிவிப்புச் செய்தார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, `தேர்தல் பணியில் வெகுதூரம் முன்னேறி விட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னும் பயணத்தையே தொடங்கவில்லை' என்றார். இறுதிவரை பி.ஜே.பி.யே முன்னேறி முன்னேறி வெற்றிக் கம்பத்தைச் சற்றுத் தடுமாற்றத்துடன் தொட்டு விட்டது.


பொதுவாக கர்நாடகாவின் கடற்கரை மாவட்டங்கள் - தென் கன்னடப் பகுதி பி.ஜே.பி.யின்  கோட்டை என்பார்கள். இம்முறை அந்தக் கோட்டையில் சற்று ஓட்டை விழுந்தது. மராட்டிய மொழிபேசும் மக்கள் கணிசமாக வாழ்கின்ற வட கன்னட மாவட்டங்களில் காங்கிரஸ்  கட்சியின் பலம் கூடியிருக்கிறது. ஆனால், அதன் செல்வாக்கு மண்டலமாகக் கருதப்பட்ட மத்திய கர்நாடகாவில் பெரும் சரிவைச் சந்தித்து இருக்கிறது.


கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட தற்போது காங்கிஸ் கட்சிக்கு 15 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அந்தக் கட்சி ஆறுதல் பெறலாம். ஆனால், பி.ஜே.பி. 31 இடங்கள்  அதிகமாகப் பெற்றிருக்கிறது.


அரசியல் பொம்மலாட்டம் நடத்தும் தேவேகவுடாவின்  ஐக்கிய ஜனதா தளம்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது.   அதன் சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு இன்னும் கர்நாடகம் முழுமையாக விடை கொடுக்கவில்லை. இருந்தாலும் மரணஅடி கொடுத்திருக்கிறது. வேண்டுமானால் உயிர் பிரிய-வில்லை என்று சொல்லலாம்.


கர்நாடகத் தேர்தலில் பணம்தான் பிரதானமாக இருந்தது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்திருக்கிறார். உண்மை. இந்திய அரசியலை காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி.யும் அழிவு முனைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதனை கர்நாடகத் தேர்தல் வெளிச்சம் போட்-டுக் காட்டி விட்டது.


ரியல் எஸ்டேட் அதிபர்கள், சுரங்க முதலாளிகள், சங்கிலித் தொடராகப் பல்வேறு கல்லூரிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்கள், திடீர் குபேரர்கள், கள்ளச்சாராய ஆலை அதிபர்கள் மற்றும் தாதாக்களின் கரங்களுக்கு இந்திய அரசியல் மாறி வருகிறது என்பதனையே காங்கிரஸ், பி.ஜே.பி. வேட்பாளர்களின் பட்டியல் படம் பிடித்துக் காட்டுகிறது.


மாநில பி.ஜே.பி.யின் தேர்தல் பெட்டகமே ஒரு ஜனார்த்தன ரெட்டிதான். அவர்தான் பி.ஜே.பி.க்காகத் தேர்தலையே நடத்தியவர். பெல்லாரியில் குடிகொண்டிருக்கும் அவர், சுரங்கங்களின் ஏகபோகச் சக்கரவர்த்தி. இப்போது சீனத்திற்கு பெல்லாரி இரும்புத் தாது கப்பல் கப்பலாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ரெட்டிகாரின் வருமானம் அவ்வளவு அதிகமில்லை.  ஒரு நாள் வருமானம் ஏழுகோடிதான் என்று கர்நாடக ஏடுகள் கண்சிமிட்டிக் கூறுகின்றன.


காங்கிரஸ் வெற்றி பெற்றால், சுரங்கத் துறையிலுள்ள தமது ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்து விடும் என்று நியாயமாகவே அச்சப்பட்டார். அந்த ரெட்டிகாரின் தர்பாரை மீறி பெல்லாரி உள்பட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியே செய்ய முடியவில்லை.


வாரிசு அடிப்படையில் இனி தேர்தல் டிக்கெட் இல்லை என்று கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை நல்ல முடிவு எடுத்தது. மார்கரெட் ஆல்வா உள்பட காங்கிரஸ் கட்சியின் 12 பெரும் புள்ளிகளின் வாரிசுகளுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் வேட்பாளர் தேர்வில் பி.ஜே.பி.யின் வழியைத்தான் பின்பற்றியது. காங்-கிரஸ் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் வசதி-படைத்த செல்வந்தர்கள்தான். பி.ஜே.பி. ரகத்தைச் சேர்ந்த-வர்கள்-தான்.


தேவேகவுடாவின் மைந்தன் குமாரசாமி முதல்வராக இருந்தபோது ஒரு நல்ல காரியம் செய்தார். பெங்களூரு நகர எல்லைக்குள் யார் யார் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிக்க ஒரு குழு அமைத்தார்.  அரசுக்குச் சொந்தமான ஏறத்தாழ 1300 ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதனை அந்தக் குழு கண்டுபிடித்தது.


ஆனாலும் நிலத்தை மீட்க முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் பலநூறு  மாடி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பனை செய்து பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகி விட்டார்கள். அவர்களும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி. வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். வெற்றியும் பெற்றனர். தங்கள் நலன் என்று வரும்போது, இவர்கள் ஆளும் கட்சியைக் காப்பதற்கு அணிதிரண்டு நிற்கத் தயாராக இருக்கிறார்கள். இந்திய அரசியலின் இதயமே எப்படிச் செல்லரித்துப்-போய் வருகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.


கர்நாடகா தேர்தலில் குறிப்-பிடத்தக்க அம்சம் என்னவெனில், காங்கிரஸோ, பி.ஜே.பி.யோ, கவுடாவின் ஜனதா தளமோ கூட்டணி அமைக்கவில்லை. தனித்தேதான் போட்டியிட்டன.


நாடு முழுமையும் நடந்த தொகுதிச் சீரமைப்பிற்குப் பின்னர் கர்நாடகம்தான் முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்தது. எனவே, தீர்ப்பு எப்படியிருக்கும் என்று தேர்தல் ஆணையமும் அச்சம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளும் திகைத்துப் போய்தான் தேர்தல் களத்திற்கு வந்தன. ஆனால், தொகுதிச் சீரமைப்பு எந்தக் கட்சியின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிக்கவில்லை. மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.


தங்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கவுடாவின் ஜனதாதளம் நம்பிக்கையோடு இருந்தது. பெல்லாரி சுரங்கத் துறையையும், தொழில்துறையையும் எந்தக் கட்சி தங்களுக்கு சீதனமாக அளிக்கிறதோ, அந்தக் கட்சியுடன் அணி சேர தேவேகவுடா தயாராக இருந்தார். ஆமாம். கர்நாடகா அரசியலைத் தீர்மானிப்பதே பெல்லாரி சுரங்கங்கள்தான்.


அடுத்து வரும் சட்டமன்றங்களின் தேர்தல் தீர்ப்பிற்-கும், நாடாளுமன்றத் தேர்தல் தீர்ப்பிற்கும் கர்நாடக தேர்தல் தீர்ப்பு முன்னோடியாக இருக்கும் என்று பி.ஜே.பி. தெரிவித்தது. இப்போது அந்தக் கட்சி நம்பிக்கையோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.


கர்நாடகத் தேர்தலில் தமது இந்துத்வா முழக்கங்களை பி.ஜே.பி. முன் வைக்கவில்லை. அதை மூட்டை கட்டி வைத்து விட்டது. விலைவாசி உயர்வைத்தான் முன்னிறுத்தியது. காரணம், வெங்காயத்தின் விலை உயர்வுதான் தங்கள் டெல்லிப் பிரதேச ஆட்சியையே கவிழ்த்தது என்பதனை அவர்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்னையால் நல்ல பலன் கிடைத்தது. நமது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் புரிய வேண்டுமே?


எதிர்காலத்தில் புதிய அரசியல் அணிகள் அமைவதற்கான வாசலை கர்நாடகா  தேர்தல் திறந்து விட்டிருக்கிறது. சோனியாவுக்குத் தெரிய வேண்டுமே?            ஸீ 
 

 
 

StumbleUpon.com Read more...

போதனைகள் செய்ய தகுதி உடைய ஒரே ஒருவர்

இயேசு கிறிஸ்துவின் போதனைகள்

thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Good Shepherd Jesusஇயேசு கிறிஸ்து பல இடங்களுக்கும் சென்று கிறிஸ்துவ மத உபதேசங்களை செய்து வந்தார். பலரின் நோய்களையும் குணப்படுத்தி வந்தார். அவரது புகழ் பரவியது.அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரை பின் தெடார்ந்து சென்றனர்.

அது போல் ஒரு நாள் அவரை பின் தொடர்ந்து பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட இயேசு அருகிலிருந்த குன்றின் மேல் அமர்ந்துமக்களுக்கு போதனை செய்தார். அதனால் இந்த போதனை மலைமேல் இயேசு செய்த போதனை என அழைக்கப்படுகிறது.

தான் அமர்ந்த இடத்திலிருந்து மக்களை பார்த்தார் இயேசு பிரான். கூடியிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருப்பவர்களும், மனவருத்தம் உடையவர்களாகவும் இருக்க கண்டார் இயேசு.

அவர்களுக்கு இயேசு செய்த போதனை:

Sermons
  • மனம் வருந்தாதீர்கள். சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்யம்தான்.

  • தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

  • கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்.

  • தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

  • அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவனின் புதல்வர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

  • என் பொருட்டு துன்பப்படுகிறவர்கள் அதற்கான பரிசாக சொர்க்கத்தை அடைவார்கள்.

  • ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார். உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம்.ஆண்டவர் அந்த பொறுப்பேற்பார் என்று கூறி எவ்வாறு பிரார்த்தனை செய்வது எனவும் கூறினார்.

  • மற்றவர்கள் நீங்கள் பிரார்த்தனை செய்வதை காண வேண்டும் என பொது இடங்களில் பிரார்தனை செய்யாதீர்கள். தனி அறைக்கு சென்று பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவை பிரார்த்தியுங்கள்.

  • உங்களைப்பற்றி அறிந்த தந்தை உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார் அதை அவர்அருள்வார் என கூறினார்
  • http://thatstamil.oneindia.in/religion/christianity/christmas/sermons.html

    StumbleUpon.com Read more...

    ஏ.கே.47 துப்பாக்கியுடன் போஸ்:சில்வஸ்டர் ஸ்டாலோன் vs குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்

    ஏ.கே.47 துப்பாக்கியுடன் போஸ்- பிரதீபாவுக்கு கண்டனம்
    thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
        

    Pratibha Patil
    டெல்லி: ஏ.கே.47 ரக துப்பாக்கியை கையில் ஏந்தியபடி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் போஸ் கொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ராணுவ தளம் ஒன்றுக்கு சென்ற பிரதீபா, ஏ.கே.47 துப்பாக்கியை வாங்கி அதை மேலே பிடித்தபடி சிரித்தபடி போஸ் கொடுத்தார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, பிரதீபாவின் போஸுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் ஒரு பொருளை கையில் தூக்கியபடி, புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

    அவரது புன்னகைக்கும், கையில் இருக்கும் துப்பாக்கிக்கும் சற்றும் பொருத்தமாக இல்லை. முப்படைகளுக்கும் அவர் தலைவர்தான் என்றாலும், இப்படி போஸ் கொடுத்தது தவறு.

    இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது, சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'Stop or My Mom would shoot' என்கிற படம்தான் நினைக்கு வந்தது என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.

     
     

    StumbleUpon.com Read more...

    இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவரின் புள்ளிவிவரங்கள்: உங்களையும் சேர்த்துள்ளார்கள்

    இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு-ஜக்ஸ்ட்கன்சல்ட் ஆன்லைன் ஆய்வு முடிவுகள்
        

    இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்த ஆய்வை ஜக்ஸ்ட்கன்சல்ட் நடத்தியுள்ளது.

    இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரின் பயன்பாட்டுத் தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    தற்போது 2008ம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஜக்ஸ்டகன்சல்ட் இந்தியா ஆன்லைன்-2008 ஆய்வின் முக்கிய அம்சங்கள்

    - கடந்த ஆண்டு இந்திய இன்டர்நெட் பயன்பாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.

    - இந்தியாவில் கடந்த ஆண்டு இணைய தளங்களை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 4.9 கோடியாகும். இதில் 4 கோடி பேர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 90 லட்சம் பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

    - கடந்த ஆண்டில் நகர்ப்புற இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    - இவர்களில் 3.5 கோடி பேர் மிக ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 3 கோடி பேர் நகர்ப்புறங்களையும், 50 லட்சம் பேர் ஊரகப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

    - நகர்ப்புறங்களில் ரெகுலராக இண்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 19 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    - 2.5 கோடி பேர் தினமும் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் ஆவர்.

    'ரெகுலர்' பயன்பாட்டாளர்கள் என்பது, குறைந்தது மாதம் ஒரு முறையாவது இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஆவர்.

    இந்தியாவில், அனைத்துப் வயதைச் சேர்ந்தவர்களிடையேயும், இன்டர்நெட் பயன்பாடு நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றாலும் 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் 77 சதவீதம் நெட்டை பயன்படுத்துகின்றனர்.

    மொத்த இணையதள பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் ஏ, பி மற்றும் சி நகரங்களைச் சேர்ந்தவர்கள். 51 சதவீதம் பேர் மாதச் சம்பளம் வாங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 63 சதவீதம் பேர் சொந்த வாகனம் வைத்திருப்போர் ஆவர்.

    இணையதளங்களைப் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர்தான் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தங்களது தாய் மொழி தொடர்பான இணையதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்டர்நெட் பயன்படுத்துவோரின் பின்னணி


     
    வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருப்போர் இன்டர்நெட் பயன்படுத்துவோர்
    கலர் டிவி வைத்திருப்போர 90 %
    செல்போன் 87%
    வங்கிக் கணக்கு 84%
    கம்ப்யூட்டர் - லேப்டாப் 72%
    பிரிட்ஜ 68%
    லைப் இன்சூரன்ஸ 53%
    2 வீலர 46%
    கிரெடிட் கார்டு 31%
    ஏசி 19%
    4 வீலர் 17%
    பங்கு முதலீடு வைத்திருப்போர் 11%



    தினசரி வாழ்க்கையை ஆக்கிரமிக்கும் இன்டர்நெட்:

    இண்டர்நெட் ஒருவரின் தினசரி வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வீடுகளில் பிரவுசிங் செய்வதையே 41 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
    ரெகுலர் பயன்பாட்டாளர்கள் 10 பேரில் 9 பேர் வீட்டிலும் அலுவலகத்திலும் தான் பிரவுஸ் செய்கின்றனர்.

    - இவர்களில் பலர் வீட்டில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    - வார இறுதி நாட்களில் குறைந்தது 2 மணி நேரமாவது பிரவுசிங் செய்வோரின் எண்ணிக்கை 36 சதவீதமாகும்.

    - 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் டிவி பார்ப்போரின் எண்ணிக்கை 14 சதவீதம்.

    - 2 மணி அல்லது அதற்கு மேல் செய்தித்தாள்களைப் படிப்போரின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம்தான்.

    - 2 மணி அல்லது அதற்கு மேலும் ரேடியோ கேட்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே.

    - சேட்டிங், பிளாக் உள்ளிட்ட சமூக மீடியா தளங்கள் மூலம் பிறருடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோரின் எண்ணிக்கை 81 சதவீதமாகும்.


    இமெயில் அனுப்பத்தான் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர்.

     
    டாப் 10 பயன்பாட்டு பட்டியல் இன்டர்நெட் பயன்பாடு
    இ மெயில் 91%
    வேலை தேட 72%
    மெசேஜ், சாட் செய்ய 70%
    செய்தி பார்க்க 63%
    விளையாட்டு செய்தி அறிய 57%
    படம், இசை டவுன்லோட் செய்ய 54%
    கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க 50%
    டேட்டிங், நண்பர்களைப் பிடிக்க 50%
    வரன் தேட 49%
    தகவல் தேட (சர்ச் என்ஜின்) 49%

    சராசரியாக 15 வகையான செயல்பாட்டுக்கு இன்டர்நெட்டை பயன்பாட்டாளர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இதில் டாப் 10ல் 7 செயல்பாடுகள், அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பானவையாக உள்ளன.

    தாய் மொழி பயன்பாடு அதிகரிப்பு:

    தாய் மொழியிலான இணையத் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்தது. இது தற்போது 34 சதவீதமாக எகிறியுள்ளது.

    28 சதவீதம் பேர்தான் ஆங்கில தளங்களை அதிகம் பார்க்கின்றனர். அதேசமயம் 34 சதவீதம் பேர் மட்டுமே பிராந்திய மொழிகளைப் பார்ப்பதற்குக் காரணம், பிராந்திய மொழிகளில் போதிய அளவிலான இணைய தளங்கள் இல்லாததே.

    ஆன்லைன் ஷாப்பிங்:

    - ரெகுலராக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குகின்றனர் அல்லது வாங்க இருக்கும் பொருளை ஆன்லைனில் தேடுகின்றனர்.

    - இதில் 23 சதவீதம் பேர் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

    - ஆன்லைனில் பொருட்கள் வாங்கியவர்களில் 92 சதவீதம் பேர் (இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 23 சதவீதம் ஆவர்) பயணம் தொடர்பான பொருட்களை (டிக்கெட் உள்ளிட்டவை) வாங்கியுள்ளனர். பயணம் தொடர்பில்லாத பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கியோரின் 51 சதவீதத்தினர் ஆவர்.

    - கடந்த 6 மாதங்களில் 80 சதவீதம் பேர் ரயில் டிக்கெட்டுகளை வாங்க ஆன்லைனைப் பயன்படுத்தியுள்ளனர். 52 சதவீதம் பேர் விமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

    - இவை தவிர புத்தகங்கள், உடைகள், சிடி, டிவிடி ஆகியவற்றையும் பெருமளவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியுள்ளனர். இன்டர்நெட்டில் அதிக அளவில் தேடப்பட்ட பொருட்களாக கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் உள்ளன.

    தேடல் - முன்னணியில் கூகுள்:

    இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் முன்னணி தளமாக கூகுள் உள்ளது.

     
    இணையதளம நினைத்தவர்கள் அதிகமாக பயன்படுத்தியவர்கள்
    கூகுள் 36.6% 28.4%
    யாஹூ 31.5% 27.6%
    ரீடிப் 7.4% 8.6%
    ஆர்குட 5.6% 8.1%
    ஜிெமயில 5.5% 8.6%
    இந்தியாடைம்ஸ 1.7% 1.2%
    ஹாட்மெயில் 1.1% 1.0%
    மணிகண்ட்ரோல் 0.8% 0.8%
    நெளக்ரி 0.7% 0.4%
    சிஃபி 0.6% 0.7%



















    குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இணையத் தளங்கள்.


     
    நோக்கம் இணையதளம் பயன்பாட்டு விகிதம்
    இ மெயில யாஹூ 51%
    மெசேஸிங் யாஹூ 53%
    வேலை தேடல நெளக்ரி 42%
    ஆன்லைன் செய்தி யாஹூ 16%
    தகவல் தேடல் (ஆங்கிலம்) கூகுள 81%
    தகவல் தேடல் (பிராந்தியமொழி) கூகுள் 65%
    ஆன்லைன் டிராவல யாத்ரா 18%
    கேம்ஸ ஜபக் 32%
    ஷாப்பிங் (பயணம் அல்லாதது) ஈபே 33%
    ரியல் எஸ்டேட் கூகுள் 23%
    நிதி செய்திகள் மணிகண்ட்ரோல 18%
    ஷேர் டிரேடிங் ஐசிஐசிஐ டைரக்ட் 31%
    நெட் டெலிபோன் யாஹூ 25%
    மேட்ரிமோனி பாரத் மேட்ரிமோனி 36%
    டேட்டிங், நண்பர்கள் ஆர்குட 54%
    பட பகிர்வு ஆர்குட 38%
    சோஷியல் நெட்ஒர்க்கிங ஆர்குட 66%
    புரபஷனல் நெட்ஒர்க்கிங ஆர்குட 44%
    வீடியோ பகிர்வு யூடியூப 43%
    விளையாட்ட கிரிக்இன்ஃபோ 19%
    ஜோதிடம் யாஹு 25%
    சினிமா யாஹூ 14%
    இசை ராகா 17%
    ஆன்லைன் கல்வி, கற்றல் கூகுள் 32%
    சிடி வாடகை, வாங்குவது ரீடிப் 19%
    மொபைல் கன்டென்ட் யாஹூ 12%








































    கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை:

    - கடந்த மார்ச் மாதம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    - 40 நகரங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 160 கிராமங்களைச் சேர்ந்த 4000 பேரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

    - மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலமும் கருத்து அறியப்பட்டது.

    - கூகுள் சர்ச் விளம்பரங்கள் மற்றும் ஜஸ்க்ட்கன்சல்ட் அமைப்பின் இணையதளம் மூலம் (http://www.getcounted.net/) ஆன்லைன் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    - மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில், நகர்ப்புற- கிராமப்புற மக்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து, மிகவும் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
     

    StumbleUpon.com Read more...

    பீச் ஓர பங்களா மர்மம்.

    நீலக்கடல் அலைகள் எந்தநேரமும் முத்தமிடும் நீண்ட எலியட்ஸ் கடற்கரை. அழகான அந்த பீச்சில் உலா வரும் காதல் ஜோடிகளின் கண்கள் கூட, அங்கே அஸ்திவாரம் தோண்டப்பட்டு அசுர வேகத்தில் உருவாகி வரும் ஒரு பங்களாவைக் காணத் தவறுவதில்லை. ``ஏண்டா செல்லம்? எனக்காக கடலோரம் இப்படி ஒரு வசந்த மாளிகையை எவ்வளவு நாளா கட்டுறே? சொல்லவே இல்லியே?'' என்று காதலிகள் செல்லமாக காதலனை வாருகிற காட்சிகளும் அங்கே அடிக்கடி அரங்கேறுகின்றன.

    சரி! யாருக்காகத்தான் கட்டப்பட்டு வருகிறது அந்தக் வசந்த மாளிகை? `அந்த கனவு மாளிகையில் இருந்தபடி கடற்கரையின் அழகைப் பார்த்து ரசிக்கப் போகிற பாக்கியசாலி யார்? இந்த கேள்விக்கான பதில் `கவர்னர்' என்று அமைந்துவிட்டதால் கலங்கிப் போய் இருக்கிறார்கள் பலர்.

    `சுனாமி சுருட்டிய சுருட்டலுக்குப்பின் கடற் கரையில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத்துக்குள் யாரும் கட்டடம் கட்டக் கூடாது என்று அரசு கட்டளையிட் டிருக்கிறது. கடலோர மீனவர்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளாதகுறையாக ஐநூறு மீட்டர் தொலைவுக்கு அப் பால் அப்புறப்படுத்துகிறது. அப்படியிருக்க, கவர்னருக்கு மட்டும் கடல்அலை தொடும் தூரத்தில் கனவு மாளி கையா? என்னய்யா கூத்து? ' என்ற கேள்வியும் பலரிடம் எகிறித் தெறிக்கிறது.

    அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட தென் சென்னை மக்களின் சொர்க்கபுரியாக இருக்கும் எலியட்ஸ் பீச்சில் கடற்கரையில் இருந்து சில அடி தூரத்தில் கட்டப்பட்டு வரும் அந்தக் கனவு மாளிகையைக் காணும் ஆவலில் நாமும் எலியட்ஸ் பீச்சுக்கு விரைந்தோம்.

    பெசன்ட்நகர் பிரதான சாலையில் இருந்து சர்ரென விலகி, கடற்கரையில் நடுநாயகமாக அந்த மாளிகையின் கட்டுமானப் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. அந்த மாளிகையின் பரப்பளவு ஏறத்தாழ பத்து கிரவுண்ட். அதைச் சுற்றி கச்சிதமாகக் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு, பத்தடி ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு, படு பரபரப்பாகக் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. நாம் காம்பவுண்டின் உள்புறம் சென்று கட்டடப் பணிகளைக் பார்வையிட்டோம். கட்டட முகப்பில் புல் வளர்ப்பதற்காக செம்மண் கொட்டி சமன் செய்யப் பட்டிருந்தது. புல்வெளியில் நின்று பார்த்தால் கடற்கரையின் அழகு முழுவதுமாக கண்ணுக்குத் தெரியும் வகையில் மாளிகையின் வடிவமைப்பு தென்பட்டது. அங்கே இருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

    ``இந்தக் கட்டடத்தின் சுவர்கள் `வயர்கட் பிரிக்' என்று சொல்லப்படும் விலை உயர்ந்த செங்கற்களால் உருவாகி வருகின்றன. ஒரு செங்கல்லின் விலை இருபது ரூபாய். இந்த வகை செங்கல்லில் வீடு கட்டினால் கடலின் உப்புக் காற்றால் சுவரில் அரிப்பு ஏற்படாது'' என்று அவர்கள் விளக்கினார்கள்.

    ``பல லட்ச ரூபாய் செலவில் படுஜோராகத் தயாராகிறது இந்த மாளிகை. தரைத்தளத்தோடு, முதல் தளம் கொண்டதாக கட்டடம் அமையப் போகிறது. இந்த மாளிகையில் கவர்னர் அவ்வப்போது வந்து ஓய்வெடுக்க வசதியாக இரண்டு படுக்கையறை, ஒரு சமையலறை உள்பட அனைத்து வசதிகளும் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு வருகிறது'' என்றனர் அவர்கள்

    அங்கிருந்த ஒரு கட்டடத் தொழிலாளியிடம் பேசினோம். "நாங்கள் எல்லாரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் மாயக்கிருஷ்ணன் அழைத்ததால் வேலை செய்ய வந்திருக்கிறோம். `கவர்னருக்காகக் கட்டப்படும் பங்களா என்பதால் எல்லாரும் நல்லபடியாக வேலை செய்யணும்' என்று ஆரம்பத்திலேயே சொல்லி வேலை வாங்குகிறார்கள். சில மாதங்களில் வேலை முடிந்துவிடும்'' என்றார் அவர். கட்டடத்தின் பின்புறம் சென்றபோது, சில அடி தூரங்களில் தொட்டுவிடும் தூரத்தில் கடல் இருந்தது.

    எலியட்ஸ் பீச்சில் புதிதாக எழும்பி வரும் இந்த மாளிகையைப் பற்றி, அடுக்ககம் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் மாநிலத் தலைவர் மணிசங்கரிடம் கருத்துக் கேட்டோம்.

    "இது அப்பட்டமான விதிமீறல். மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கடலோர பாதுகாப்புச் சட்டத்தின் படி கடலில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது. ஆனால் இங்கே கடலுக்கு மிக அருகில் கட்டடம் கட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் எந்தவித எச்சரிக்கையும் செய்யாமல் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடமும் தவறு இருக்கிறது. விதிமுறைகள் எல்லா மக்களுக்கும் ஒன்றுதானே?'' என்று ஆதங்கப்பட்டார் அவர்.

    கடற்கரையில் கட்டப்படும் இந்த கவர்னர் மாளி கையை எதிர்த்துப் போராடி வரும் நுகர்வோர் பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சுற்றுச்சூழல் பிரிவு நிர்வாகியான ராஜேஷ் ரங்கராஜன் என்பவரிடமும் பேசி னோம்.

    "சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவ மக் களுக்குக் கூட இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் பொது நல அமைப்புகள் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றன. இதற்காக தொலைவில் உள்ள அரசு நிலங்கள்தான் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், இங்கே தனி ஒருவருக்கு கடற்கரையில் பங்களா கட்ட அனுமதித்திருப்பதன் மூலம் அரசு இரட்டை வேடம் போடுவது நன்றாகத் தெரிகிறது. பொதுப்பணித்துறை சார்பில் அங்கே கட்டடம் கட்டி வருகின்றனர். மாநில அரசின் உயர் பதவியில் இருக்கும் கவர்னர் பர்னாலாவின் பாதுகாப்பைப் பற்றிக் கூட கவலைப்படாமல் இப்படி கடலோரம் அவருக்கு பங்களா கட்டுகிறார்கள். கிண்டி, ராஜ்பவனில் கவர்னருக்குப் போதிய வசதி இருக்கிறது. ஊட்டியிலும் கவர்னருக்கு ஓய்வு பங்களா இருக்கிறது. அப்படியிருக்க எதற்காக இப்படி ஒரு புதிய பங்களா? மக்கள் பணத்தை வீணாக்கவா?

    கவர்னர் இந்த கடற்கரை மாளிகைக்கு ஓய்வெடுக்க வந்தால், இந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடும். அப்போது பீச்சில் ஓய்வெடுக்க வரும் சாதாரண மக்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாவார்கள். கடலோர ஒருங்கமைப்புச் சட்டம் 1991_ன்படி கடலின் அதிகபட்ச அலையின் தாக்கம் (ஹை டைட் லைன்) இருக்கும் இருநூறு மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் இருக்கக் கூடாது. இந்த பங்களா காம்பவுண்ட் நூறு மீட்டருக்குள் வருகிறது. இதுவே விதிமீறிய செயல்தான்.

    அதுபோல பெசன்ட் நகரில் இருந்து நீலாங்கரை வரையுள்ள பகுதி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி. இப்படி கடலருகே கட்டடம் கட்டுவதால் ஆமை இனம் கூட அருகிப் போகும். எனவே `கடலோரத்தில் கட்டடம் கட்ட எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?' என்று பொதுத் துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு செய்திருக்கிறோம். எங்களுக்குப் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து சட்டரீதியாகப் போராடுவோம்'' என்றார் அவர் உறுதியாக.

    கவர்னர் அலுவலக வட்டாரங்களில் நாம் பேசிய போது, "கவர்னருக்கு ராஜ்பவனில் போதுமான அளவுக்கு வசதிகள் இருக்கிறன. இதில் புதிதாக அவருக்கு மாளிகை கட்ட வேண்டிய அவசியமில்லை. கவர்னர் அலுவலகத்தில் துணைவேந்தர் நியமனம் உள்பட பல விஷயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ள ஒரு தனிநபருக்காக ஒருவேளை இந்த கடற்கரை மாளிகை கட்டப்பட்டு வரலாம். அப்படி கட்டடம் கட்டுவது மாநில அரசின் முடிவாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது'' என்றனர் அவர்கள்.

    இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ தலைவரும், அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் பேச முயன்ற போது அவர் சார்பாகப் பேசியவர்கள், "எலியட்ஸ் பீச்சில் புதிதாக கட்டடம் கட்டுவது பற்றி ஆவணப் பூர்வமாக எங்களிடம் எந்தவித தகவலும் வரவில்லை. பெசன்ட் நகர் பீச்சில் கட்டடம் கட்ட நாங்கள் எந்தவித அனுமதி யும் கொடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்'' என்று கைகாட்டினர்.

    சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியனிடம் நாம் பேசியபோது, "பெசண்ட் நகர் பீச்சில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், அது புதிதாகக் கட்டப்படவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியைத்தான் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்'' என்றார் உறுதியாக.

    பந்து பொதுப்பணித்துறை பக்கம் போய் விட்டதால், அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவரைக் கேட்டோம். "பொதுப்பணித் துறை சார்பில் எந்த ஒரு கட்டடமும் கடற்கரையில் கட்டுவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை. தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள்தான்'' என்று ஒரேடியாக சாதித்து முடித்து விட்டார் அவர்.

    ஆக, அந்த பங்களா ஒரு மர்ம மாளிகையாகத்தான் காட்சியளிக்கிறது. உண்மைகளை விளக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

    படங்கள்: ஞானமணி.
    ஆ. விஜயானந்த்


    நன்றி: குமுதம் ரிப்பொர்ட்டர்

    StumbleUpon.com Read more...

    இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருக்கின்றன அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தகவல்


    லண்டன், மே.28-

    இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருக்கின்றன என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தார்.

    இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பதாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக அறிவித்து இருப்பது இதுதான் முதல் முறை ஆகும்.

    ஒப்புக்கொண்டது கிடையாது

    அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலிடம் அணுஆயுதங்கள் இருக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் அணுகுண்டு இருப்பதாக ஒப்புக்கொண்டது கிடையாது. அமெரிக்க அதிகாரிகளும் இதை வெளிப்படுத்தியது கிடையாது. முதல் முறையாக இப்போது தான் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரே தன் வாயால் அதை அறிவித்து இருக்கிறார்.

    ஜிம்மி கார்ட்டர் 1977-ம் ஆண்டு முதல் 1981-ம்ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். அவரது பதவி காலத்தில் தான் இஸ்ரேல் எகிப்து இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கார்ட்டர் உதவியாக இருந்தார்.

    அவர் லண்டனில் ஒரு விழாவில் பேசும்போது, அமெரிக்காவிடம் 12ஆயிரம் அணுஆயுதங்கள் உள்ளன. ரஷியாவிடமும் அதே அளவு அணுஆயுதங்கள் உள்ளன. இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளிடம் பலநூறு அணுஆயுதங்கள் உள்ளன. இஸ்ரேலிடம் 150 அணுஆயுதங்கள் உள்ளன என்று தெரிவித்தார். எனவே ஈரான் நாட்டுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அணுஆயுத திட்டத்தை கைவிடச்செய்யவேண்டும் என்று கார்ட்டர் வலியுறுத்தினார்.

    கண்டனம்

    இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதாக கார்ட்டர் தெரிவித்து இருப்பதற்கு இஸ்ரேல் அதிகாரி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது நல்லது செய்வதற்கு பதிலாக தீமை தான் செய்யும் என்று அவர் கூறினார்.

    கார்ட்டர் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். அப்போது அவர் சிரியாவில் ஹமாஸ் தீவிரவாதக்குழு தலைவரை அவர் சந்தித்து பேசினார்.

    கார்ட்டர் இஸ்ரேலின் பாலஸ்தீன கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கார்ட்டர் இஸ்ரேல் சென்றபோது, அவரை இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மர்ட் சந்திக்க மறுத்துவிட்டார்.


     http://www.dailythanthi.com/article.asp?NewsID=415389&disdate=5/28/2008

    StumbleUpon.com Read more...

    விமானப்படை குண்டுவீச்சில் விடுதலைப்புலி பெண் தளபதி பலி


    விமானப்படை குண்டுவீச்சில்
    விடுதலைப்புலி பெண் தளபதி பலி


    கொழும்பு, மே.28-

    இலங்கையின் மன்னார் பகுதியில் ஆண்டான்குளம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் மீது விமானப்படை ஹெலிகாப்டர்கள் நேற்றுமுன்தினம் குண்டுவீசின. இந்த குண்டுவீச்சில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த பெண் தளபதியான டோரா பலியானார்.

    மன்னார் முன்னரங்க பகுதியில் வேலகுளம், மாம்புலிகுளம், நெடுங்கந்தல், முனிமுறிப்பு உள்ளிட்ட இடங்களில் ராணுவத்துடன் நடைபெற்ற மோதல்களில் 10 விடுதலைப்புலிகள் பலியானார்கள். வவுனியா பகுதியில் 6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். வெலிஓயாவில் ஜனக்புரா அருகே விடுதலைப்புலிகளின் முக்கிய தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் 14 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் 3 விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் ஆண்டான்குளத்தில் 4 விடுதலைப்புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

    இந்த தகவல்களை ராணுவ தகவல் மையம் தெரிவித்து உள்ளது.

     http://www.dailythanthi.com/article.asp?NewsID=415377&disdate=5/28/2008

    StumbleUpon.com Read more...
    Related Posts with Thumbnails

    Enter a long URL to make tiny:

    தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

      © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

    Back to TOP