சமீபத்திய பதிவுகள்

115 புலிகள் சுட்டுக்கொலை

>> Tuesday, August 12, 2008

115 புலிகள் சுட்டுக்கொலை

.

.

கொழும்பு, ஆக. 12: இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 115 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக  இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் வடக்கு பகுதியில் ராணுவம் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது.

நேற்று முன் தினம் ராணுவம் நடத்திய  தாக்குதலில் 115 புலிகள்  கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதயநாணயக்காரா தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களில் 3 ராணுவ வீரர்களும் பலியானதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.maalaisudar.com/newsindex.php?id=17707%20&%20section=23

StumbleUpon.com Read more...

ஹாட்ரிக் அடித்தார் பெல்ப்ஸ்

ஹாட்ரிக் அடித்தார் பெல்ப்ஸ்

.

.
பெய்ஜிங், ஆக. 12: அமெரிக்க நீச்சல் வீரர் இன்று 3வது உலக சாதனையோடு 3வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் 9 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள வரலாற்று நாயகர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்துள்ளார்.
.
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். 400 மீட்டர் மெட்லி மற்றும் 400 மீட்டர் பிரி ஸ்டைல் ரிலே போட்டிகளில் அவர் முதல் 2 தங்கப்பதக்கங்களை உலக சாதனையோடு வென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது 3வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 200 மீட்டர் பிரி ஸ்டைல் போட்டியில் அவர் 1 நிமிடம் 42.96 வினாடிகளை கடந்து புதிய உலக சாதனை படைத்து தங்கத்தை வென்றுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஒலிம்பிக்கில் 6 தங்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ் மொத்தம் 9 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 9 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள சாதனையாளர்களான மார்க் ஸ்பிட்ஸ், காரல் லூயிஸ், பாவோ நுர்மி மற்றும் லார்சியா லாட்நினா ஆகியோர் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.

நாளை பெல்ப்ஸ் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் பங்கேற்கிறார்.  இதில் வெற்றி பெற்றால் அவர் 10வது தங்கப்பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைப்பார். இந்த பிரிவில் அவர் உலக சாதனைக்கு சொந்தக்காரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
http://www.maalaisudar.com/newsindex.php?id=17690%20&%20section=1

StumbleUpon.com Read more...

இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கொழும்புவில் நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில், 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஒரு தினம் மீதமிருந்த நிலையில், 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியின் வார்னபுரா 54 ரன்களையும், ஜெயவர்த்தனே 50 ரன்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

முன்னதாக, வாண்டோர்ட் 3 ரன்களிலும், சங்ககாரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் ஜாகீர் கான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப்போட்டியில் இந்தியா தனது 2-வது இன்னிங்ஸ்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திராவிட் 68 ரன்களையும், லஷ்மண் 61 ரன்களையும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ்சில், இந்திய அணி 249 ரன்களே எடுத்தது. அதில், கம்பீர் மட்டுமே 72 ரன்கள் எடுத்தார்.

இரு இன்னிங்ஸ்சிலும் சேர்த்து, இலங்கையின் மெண்டிஸ் 8 விக்கெட்டுகளும், முரளிதரன் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 396 ரன்கள் குவித்தது. அதில், சங்ககாரா மட்டுமே 144 ரன்கள் எடுத்து, அணியை வலுவான நிலைக்குக் கொண்டுச் சென்றார்.

இப்போட்டியில் ஆட்டநாயகனாக சங்ககாராவும், தொடர் நாயகனாக மெண்டிஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(மூலம் - வெப்துனியா

StumbleUpon.com Read more...

இந்தியாவின் ஒலிம்பிக் 'தங்க' மகன் அபினவ் பிந்த்ரா!

இந்தியாவின் ஒலிம்பிக் 'தங்க' மகன் அபினவ் பிந்த்ரா!
Abinav Binthra
PTI
பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய அபினவ், மொத்தம் (596+104.5) 700.5 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

இதுவே, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் ஆகும். மேலும், இதுவரை பெற்றுள்ள தங்கப் பதங்கங்களில், இது 9-வது தங்கமாகும்.

முன்னதாக, கடந்த 2004-ல் ஏதென்ஸ்சில் நடந்த ஒலிம்பிக்கில், டபுள் டிராப் ஷூட்டர் ராஜ்யவர்தன் ரதோர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பீஜிங் ஒலிம்பிக்கில் தற்போது வரலாறு படைத்துள்ள அனுபவ் பிந்த்ரே, கடந்து வந்த பாதை வியப்புக்குரியதும் சாதனைகள் நிரம்பியதுமாகும்.

அனுபவ் பிந்த்ரா

பஞ்சாபில் வசித்து வரும் இவர், 1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ல் பிறந்தார். கோலராடோ பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பும், முனீச்சில் டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மென்டல் மேனேஜ்மென்ட்டும் பயின்றவர். இளம் வயதில் இருந்தே, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, எண்ணற்ற பரிசுகளையும் விருதுகளையும் குவித்தவர்.

சாதனைகள்

* 2006- மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்.

* 2005 - பேங்காக்கில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடுதல் கோப்பையில் தங்கம்.

* 2004- ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் சாதனை முறையடிப்பு; இறுதிச் சுற்றுக்குத் தகுதி

* 2004 - ஆல் அமெரிக்கன் கோப்பையில் தங்கப் பதக்கம்

* 2002 - மான்செஸ்டர், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்.

* 2002 - ஐரோப்பிய சர்க்யூட் கோப்பை - 7 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம்.

* 1999 - 2000, 2001, 2002, 2003, 2005 - தேசிய சாம்பியன் பட்டங்கள்

* ஜூனியர் பிரிவு போட்டிகளில் பல தங்கப் பதங்கங்களும், உலக சாதனைகளும்.

முக்கிய விருதுகள்

* அர்ஜூனா விருது - 2000
* ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது - 2001
* மகாராஜா ரஞ்சித் சிங் விருது - 2001
* கே.கே.பிர்லா விருது - 2002
* பஞ்சாப் பிராமன் பாத்ரா விருது - 2006
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

ஒட்டுமொத்த இந்தியாவின் பாராட்டு-பரிசு மழையில் அபினவ்!

ஒட்டுமொத்த இந்தியாவின் பாராட்டு-பரிசு மழையில் அபினவ்!
பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்துள்ள அபினவ் பிந்த்ரா, நாடு முழுவதும் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்ததோடு, பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் அபினவ் பிந்த்ராவுக்குத் தெரிவித்துள்ளனர்.

"பிந்த்ராவின் இந்த ஒப்பற்ற சாதனை, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்கிறது. ஒலிம்பிக்கில் இந்தியா மேலும் பதக்கங்கள் வெல்ல தூண்டுகோலாய் அமைந்துள்ளது," என்றார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

"இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பொன்னாள். கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியாவில், ஏனைய விளையாட்டுகளிலும் இந்திய இளைஞர் ஆர்வம் கொள்வதற்கு தூண்டுகோலாய் அமைகிறது," என்று கூறினார், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி.

"நாட்டுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துவிட்டான், அபினவ்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அபினவ் பிந்த்ராவின் தாயார், பாப்லி.

அபினவுக்கு இந்தியத் தலைவர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவரும் நிலையில், நாட்டின் ஊடகங்கள் அனைத்திலும் இன்றைய தினத்தில் முழுமையாக அனுபவே ஆக்கிரமித்தார்.

குவியும் பரிசுகள்!

* நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள அபினவ் பிந்த்ராவுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

* பிந்த்ராவின் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநில அரசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

* வாழ்நாள் முழுவதும் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான தங்க அட்டையை பரிசாக அறிவித்துள்ளார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.25 லட்சம் பரிசை அறிவித்துள்ளது.

* ஹரியானா மாநில அரசு ரூ.25 லட்சம்; மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம்; சண்டிகர் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளன.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP