சமீபத்திய பதிவுகள்

உலகம் முழுவதும் பசி-பட்டினியால் வாடும் 20 கோடி குழந்தைகள்

>> Friday, November 13, 2009

 
 
ரோம், நவ. 13-
 
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 20 கோடி குழந்தைகள் பசி மற்றும் பட்டினியால் வாடுகின்றனர். இவர்களுக்கு போதிய சத்துணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் அனவைரும் ஏழை நாடுகளில் வசிக்கும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள். இவர்களில் 90 சதவீதம் பேர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் உள்ளனர்.
 
ஆசியா கண்டத்தில் 40 சதவீதமாக இருந்த பட்டினி சதவீதம் தற்போது 30 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவில் 34 சதவீதமே குறைந்துள்ளது.
 
தெற்கு ஆசியாவில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதம், வன்முறை போன்றவற்றால், வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 8 கோடியே 30 லட்சம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனர்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை : நீறு பூத்த நெருப்பு


 
 

Front page news and headlines todayஇலங்கையில் 25 ஆண்டுக்கும் மேலாக நடந்த போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தமிழர்களுக்கான பிரச்னை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த கோரிக்கைக்காக தமிழ் மக்கள் அங்கு போராடி வந்தார்களோ, அந்த கோரிக்கை கனவாக ஆகிவிட்டது.போரின் போது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்பம் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. எந்த வசதியும் இல்லாமல் முகாம்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் பலர், ஓர் ஆண்டு காலத்துக்குள் பலமுறை தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டவர்கள். ஒவ்வொரு இடத்திலும், அங்குள்ள கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது, ராணுவத்தால் வலுக்கட்டாயமாக இன்னொரு இடத்துக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். வீடுகளின் மேற்கூரை இருந்தால், ராணுவத்துக்கே தெரியாமல் மீண்டும் குடியேறிவிடுவார்கள் என்று கருதி, ஓட்டு வீடுகள் மற்றும் கூரை வீடுகளில் உள்ள மேற்கூரையை ஏற்கனவே இலங்கை ராணுவத்தினர் பிரித்து துவம்சம் செய்துவிட்டனர். இப்போது ஆமை வேகத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தமிழகர்கள் முகாம்களிலிருந்து அவர்கள் வசித்த இடங்களுக்கு திரும்ப அனுப்புகிறார்கள். இதுவரை 12, 420 பேர் வீடு திரும்பியிருப்பதாகதமிழக முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் தெரிவித்தார். ஆகவே இன்னும் விரைவாக குடியமர்த்தம் செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு உள்ளது.வீடு திரும்பிய தமிழர்களுக்கு "அதிர்ச்சி' காத்திருக்கிறது. அவர்கள் வீடு, வீடாக இல்லை. அவர்கள் விட்டு சென்ற பொருட்கள் சூறையிடப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்ந்த தெருக்கள் அலங்கோலமாகியிருக்கின்றன. கடைகள் நாசமாகியிருக்கின்றன. அவர்களது விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. சொத்துகள் காணாமல் போய்விட்டன. சொந்தங்கள் உயிருடன் இருக்கிறார்களா... இல்லையா என்பதே தெரியாமல் மரத்துப் போன உணர்வுகளுடன் உள்ளனர். பழைய தொழில் முடக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்பு இல்லை. இத்தனை சோகங்கள் அவர்களை வரவேற்றாலும், முகாம்களில் படும் நரகவேதனைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை, என்று அவர்களது மனம் தாங்கிக் கொள்கிறது. தங்களுக்கான உலகை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம் என்ற தைரியம் அங்குள்ள தமிழர்களிடம் காணப்படுகிறது. எத்தனையோ போர்க்குற்றங்களை புரிந்த இலங்கை அரசு நிம்மதியாக இருக்கிறது. அவர்கள் மீது விசாரணை இல்லை. சர்வதேச தமிழ் மக்களிடையே இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராயும் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் அவர் ஓர் இதழுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் உள்ள சூழ்நிலை இன்னும் கடினமானதாகவே உள்ளது. ராணுவ வெற்றி அடைந்த அரசு, அங்குள்ள முகாம்களில் ஒரே இடத்தில் ஏராளமானோரை அடைத்திருப்பது ஒரு கொடுமையானதாக இருக்கிறது. இந்த முகாம்களுக்கு உள்ளே இருப்போரின் வலியும் வேதனையும் அந்த முள்வேலியைத் தாண்டி வெளியே வர முடியாத இரும்புத் திரை போல் அமைந்துள்ளது. ஏதும் மறைப்பதற்கு இல்லை என்றால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீடியாவை முகாம்களுக்குள் அனுமதிக்க வேண்டியதுதானே. போர்க் குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டியவர். அவர் புரிந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் போனதற்கு இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானும் காரணம். இந்தியா முதலில் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. பின்னர், அது இலங்கை அரசு பக்கம் தாவிக் கொண்டது.இலங்கையில் தற்போதும் பயங்கரவாத தடுப்பு சட்டம் உள்ளது. இது பயங்கரவாத தடுப்பு சட்டம் அல்ல. பயங்கரவாத உற்பத்தி சட்டம். அப்பாவிகள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தாக்குதல் நடத்த உதவும் சட்டம். முன்னாள் அதிபர் புஷ் அரசு கையாண்ட கொள்கையைப் போல்... அதாவது, நீங்கள் அரசு தரப்பில் இல்லாவிட்டால், பயங்கரவாதி தரப்பில் இருக்கிறீர்கள் என்ற கொள்கையைப் போல இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. இதைக்கூறுவதால், புலிகள் ஆதரவு நிலை என்று கருதிவிடக்கூடாது. புலிகளும் இனவாத அடிப்படையில், பயங்கரவாதம் மற்றும் நீதியற்ற நிலையில் நடந்து கொண்டார்கள். ஆயுதப் போரால்தான் தமிழ் மக்கள் அங்கு நசுக்கப்பட்டனர்.இந்திய மக்களைப் பொறுத்தவரை இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. அதற்கு காரணம், இந்திய மீடியாக்கள் லாவகமாக விஷயத்தை மறைத்துவிட்டன. இலங்கைப் பிரச்னையை இந்திய அரசு உற்று நோக்கி வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட்கள் மீதும் இலங்கை அரசு புலிகள் மீது பின்பற்றிய பாணியை பின்பற்றும் என்று நினைத்தோம். ஆனால் தற்போதுள்ள மத்திய அரசு வேறுவிதமாக செயல்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போரில் பல்வேறு நாடுகள் சிக்கித் தவித்து வருகின்றன. ஈராக், ஆப்கன், பாகிஸ்தான், இலங்கை... தற்போது இந்தியாவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 2010 ஜனவரிக்குள் தமிழ் மக்கள் அனைவரையும் குடியமர்த்திவிடுவோம் என்கிறது. இலங்கை அரசு. வாக்குறுதிகள் காப்பாற்றப்படாத பட்சத்தில் அங்குள்ள தமிழர்களில் பாதிப்பேர் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும் மிரட்டல்: இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் மிரட்டல் கொடுக்கிறது' என்கிறார் புலம்பெயர் தமிழீழ அரசின் செய்தித் தொடர்பாளர் சதீசன் குமரன். "இலங்கை அரசு செய்த அத்தனை தவறுகளும் மறக்கப்பட்டு வரும் இந்த வேளையில், இன்னொரு விதமாக தமிழர்கள் மீது இலங்கை அதிபர் ராஜபக்ஷே தாக்குதல் தொடுத்துள்ளார்' என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வழிக்கு கொண்டு வரமுடியுமா? புலிகளுக்கு எதிரான போரின் போது, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துக்கள் மூலம் மக்களிடம் ஒரு புறம் செல்வாக்கைப் பெற்றுக் கொண்ட போதிலும் மறுபுறம் ஐரோப்பிய யூனியனிலிருந்து சலுகைகளை கறப்பதில் குறியாக இருக்கிறது. இலங்கை அரசு. மனித உரிமை மீறல்களால் இலங்கை அரசுக்கான சலுகைகளை ரத்து செய்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியன், அதன் உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டிலிருந்து ஜவுளி ஏற்றுமதிக்கான சலுகைகளை இலங்கை அரசு பெற்று வருகிறது. புலிகளுக்கு எதிரான கடைசி போரில், ஈவு இரக்கமின்றி நடந்து கொண்டது, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல், 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை நெருக்கடியான முகாம்களில் அடைத்துப் போட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களால் ஐரோப்பிய யூனியன் கடும் கோபத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் கூறும் விஷயங்களை கடைபிடிக்காவிட்டால், வர்த்தக சலுகைகளை 2009ம் ஆண்டுக்கு மேல் நீட்டிக்காது என்றும் தெரிகிறது. இதை ஐரோப்பிய யூனியனின் பிளாக் மெயில் என்று இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நிலைமையை ஆராய ஐரோப்பிய யூனியன் கோரிக்கை விடுத்த போதும் அந்த விசாரணையை நடத்த இலங்கை மறுப்புத் தெரிவித்துவிட்டது. புலிகளையும் ஒழிக்க வேண்டும், அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியனின் சலுகையையும் விடக்கூடாது என்பதில் அதிபர் ராஜபக்ஷே அக்கறை காட்டி வருகிறார்.சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை வழிக்கு கொண்டு வர, இலங்கை அரசு நான்கு பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. இதற்கு தலைவராக பெரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை பார்லிமென்டில் தெரிவித்த போது, "வர்த்தக சலுகை என்ற ஆயுதத்தை காட்டி, நம்மை ஐரோப்பிய யூனியன் அச்சுறுத்தக்கூடாது' என்றார். அதே நேரத்தில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார இதழான தி எகனாமிஸ்ட் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழர்களை குடியமர்த்துவதில் அக்கறை காட்டி வருகிறோம்' என்றார். ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தை தொடர்ந்து குறைத்துக் கொள்ளத் தொடங்கினால், இலங்கையில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் பெரீஸ் கவலை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற முயற்சியை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டால், மைனாரிட்டியாக மாறிவிட்ட, தமிழர்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வருவதில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

ரோம், நவ. 12-

 

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கையில் அங்குள்ள நிலைமைகள் சீராகி நாடு முன்னேற அதிகாரிகளும், அந்த நாட்டு மக்களும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.
 
போரின் போது வெளியேறிய மக்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடத்திலேயே குடியமர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழர்களுக்கான அனைத்து உரிமையையும் வழங்க வேண்டும்.
 
அங்குமனித உரிமைகள் மீறப்படக்கூடாது இதற்கு இலங்கையில் அனைத்து பிரிவு மக்களும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். இலங்கையின் முன்னேற்றத்திற்காக சர்வதேச சமுதாயங்கள் பொருளாதார உதவி உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு போப் ஆண்டவர் கூறியுள்ளார்.


source:malaimalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்

 
 

விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.  

1. ஐகால்சி – iCalcyஉங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக டவுண்லோ செய்து கொள்ள கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.deviantart.com/art/TaskbarResizeToolforVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www. microsoft.com /downloads /details.aspx? familyid= A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 
3. கிளாஸ் சி.எம்.டி.  (GlassCMD)  "டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்'' என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினைhttp://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ்(Ambroos)  என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரிhttp://www.neowin.net /forum/index.php?s=ee8053c 1716233beb4b6dcb3715500cc&showtopic=7 467145. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad): கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf)  பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt)  அல்லது எச்.டி.எம்.எல். (.html)  பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net /projects/transnote/6. கிளாஸ் 2கே (Glass 2K):மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது 'Runtime DLL/OCX File error' போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விடுதலையை யாரும் விலைபேசமுடியாது?

 

விடுதலைசுயநலவாதிகளும் சுயசிந்தனையற்ற அடிவருடிகளும் " பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் " அல்லது " காட்டுத் தடியாச்சுக் கணக்கரின் மாடாச்சு " என்றதொரு புதிய நிலையொன்றினது தொடக்கமாகப் பல்வேறு புறநிலைகளிலும், இன்று பல்வேறு விதமான பின்னணிகளைக் கொண்ட நபர்களும், தமிழ்த் தேசியத்தினது சிந்தனைக்கு எதிரான சக்திகளும், தமிழ்த் தேசியம் என்ற போர்வைக்குள் நுளைந்து வெட்டியோடத் தலைப்பட்டுள்ளமையானது, தமிழ்த் தேசியத்திற்கு ஆரோக்கியமானதோர் சூழலை அமைத்துத்தராதென்பதை தமிழினம் தனது சுயவிருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்திப்பதோடு, சமுதாய ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், பழைமையிலும் புணைவுகளிலும் மூழ்கியுள்ள சக்திகள் தொடர்பாகவும், உண்மையென்ற நுண்ணறிவூடாக பார்த்தலும் மதிப்பீடு செய்வதும் அவசியமாகின்றது. இதுபோன்ற பிறழ்வு நிலைச் சக்திகளும் நபர்களும் தேசியம் சார்ந்தோ, மனிதக் குழுமம் சார்ந்தோ சிந்திப்பதைவிடத் தம்மை எப்படி முன்னிலைப்படுத்தலாம் என்றதோர் சுயநல நோக்கத்தோடு பல்வேறுவிதமான சொல்லாடல்களோடும், திட்டங்களோடும் எங்கும் நுளைந்து வருகின்றனர். இந்த இடத்திலே, அண்மையில் காணொளி நேர்காணலொன்றின்போது அடிகளார் திரு இமானுவேல் அவர்கள் எல்லோரையும் உள்வாங்குதல் பற்றியதான கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது, ஈகங்களால் அடையப்பட்ட இலக்குள் சிதைவுறாத உள்வாங்குதல் பற்றித் தெளிவாகக் கூறியிருந்தார். அவரது கருத்து மிகவும் ஏற்புடையதாகும்.

இதுவரை காலமும் தாயகத்திற்காகவோ அல்லது தமிழ்த் தேசியத்திற்காகவோ எந்த விதத்திலும் செயலாற்ற முன்வராத நபர்கள் பொது அமைப்புகளில் புகுந்து தம்மையும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களென்று சித்தரிக்கின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. இப் பிறழ்வு நிலைச் சக்திகள், எமது தாயவிடுதலைக்காக அளப்பரிய ஈகங்களையும், துன்பங்களையும் சுமந்தவாறு தமது இன்னுயிர்களை எம் தாயகப் பரப்பெங்கும், தமிழ்த் தேசியத்திற்காக வீசியெறிந்துவிட்ட மக்களது ஈகத்தை தம்மை முன்னிலைப்படுத்தவும் தமது சுயநலனுக்காகவும் பாவிக்க முனைவதை எந்த ஒரு கட்டத்திலும் அனுமதிக்க முடியாது என்பதைத் தமிழினம் விழிப்புடன் இருந்து உற்று நோக்குதல் அவசியமாகும். தாயகப் பெருவெளியானது எம்தமிழ் உறவுகளின் குருதியால் நனைந்து, அவர் தசைகளால் நிறைந்து எங்கும் அவர்களது மூச்சுக் காற்றுப் பரவி ஏக்கத்தோடு இருக்கின்ற சூழலமைவில், புலத்திலே இது தொடர்பான எந்தப் பிரஞ்ஞையுமற்ற பிறவிகளாக இருந்த பலருக்கு இப்போதுதான் ஞானம் தோன்றியிருக்கிறது. இது தொடர்பாக எந்தக் கேள்விக்குமப்பாலானதொரு ஆய்ந்தறிகையொன்று தமிழினத்தினது இருப்பிற்காக அவசியமாகின்றது. ஏனெனில் தன்னலமற்றுத் தமது வாழ்வை ஈகம் செய்தோரது பெறுபேறுகளைக் தமது சுயநலனுக்காய் பணயமாக்குதலையோ அன்றி தமது நலன் பேணும் கருவியாக்குதலையோ அன்றிக் கையகப்படுத்தலையோ எந்தவொரு கட்டத்திலும் அனுமதிக்க முடியாது என்பதே நிதர்சனமானது.

இரவும் பகலுமற்றுப் பகலவன் வெளித்தோன்றாத மயக்கமானதோர் மங்கிய பொழுதுகளாய் கழிகின்ற இந்த வேளையிலே எந்தவொரு சக்தியையும் தீர்க்கமற அறியமுடியாத இருள் நிலையொன்று நீடித்துச் செல்லுமிவ்வேளையைத் தமிழினம் புத்திசாதுரியத்துடனும் தெளிவுடனும் மிகத் தந்திரமாகவும் உறுதியோடும் கடந்து சென்றாக வேண்டியது அவசியமாகின்றது என்பதை புலத்திலே அரங்கேறும் சில சம்பவங்கள் எடுத்தியம்புகின்றது. எனவே முன்னைய பட்டறிவுகளில் இருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் புதியதொரு பாய்ச்சலொன்று அவசியமாகத் தேவைப்படும் அதேவேளையில், பாய்ச்சலைத் தமது சுயநலத் தேவைகளுக்காகப் பாவித்துப் பாயமுனைவோரையும் காணமுடிகிறது. அப்படியாயின் எப்படி நாம் சரியான சக்திகளை இனங்காண்பது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இங்குதான் எமது தொலைநோக்குப் பார்வையூடாக அலசியாராய்ந்து ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பதிலேயே தமிழினத்தினது எதிர்கால வாழ்வு தங்கியுள்ளமையையும் புலம்பெயர் உறவுகள் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகின்றது.

இதிலே நாம் பல விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதும் அதனூடாக சரியானவகையிலே தமிழ்த் தேசியத்தைக் காத்து வளர்க்கக்கூடிய செயற்றிறனாளர்களை இணங்காண்பதும் அவசியமாகிறது. உதாரணத்துக்காக நாம் யேர்மனியை மையமாகக் கொண்டு, ஒரு நகரத்தை எடுத்தாராய்ந்து பார்ப்போமாயின், அங்கு தமிழர்கள் வாழ்வார்களாயின் அங்கு ஒரு தமிழ் பாடசாலை இருக்கும். தமிழ் பாடசாலையை மையப்படுத்தியதாக தமிழர்களது இயங்குகை இருக்கும். அந்த இயங்தளமூடாக தமிழரது சமூகக் கட்டமைப்பைத் தமிழ்த் தேசியத்தினது நலன் சார்ந்து நகர்த்தும் விதமாக, இந்தச் சமூகக் கட்டமைப்பையும் பல்வேறு சிரமங்களுடன் தாயக விடுதலையின் இயங்குதளமாச் செயற்படுவோரால் தேவையறிந்து உருவாக்கியதன் வாயிலாக ஒரு காத்திரமான விளைவுகளைப் பெறமுடிகிறது. பெற்றோரும் பெற்றோரும், பிள்ளைகளும் பிள்ளைகளுமாக இந்தச் சில மணி நேரங்களாவது முகம் பார்த்துப் பேசவும், பொதுமையில் நிற்கவும் தகவுடைத் தளமாக இருக்கும் இதனைக்கூடத் தமது சொந்தப் பகைமுரண் சுயநலன் நோக்கில் நகர்த்தும் சக்திகளும் இல்லாமல் இல்லை என்பதும் கவனிப்பதற்கானதொரு விடயமாகும்.

இதற்கான காரணமாக இருப்பது சரியான தொலைநோக்குப் பார்வையற்ற செயற்பாட்டாளர்களே என்பதும் சுட்டடிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும். தமது நலனுக்காகத் தேசியத்தையும், தேசியத்திற்கான ஈகங்களது பெயரைப் பயன்படுத்தும் போக்கும், தானும் தனது உறவினருமாகத், தாங்கள்முடிவெடுத்துத் சொன்னால் சரியென்றும், மாநில அரசரும், நகரச் சிற்றரசரும் என்ற நிலையிலே, இன்னொரு ராஜபக்சயாக் குடும்பங்களாக அராஜகம் புரிகின்ற நிலமை அரங்கேற்றப்பட்டு வருகின்றமையின் விளைவாக, நேர்மையாகக் காரியாமற்றக் கூடியவர்கள் ஒதுங்கிச் செல்லுவதோடு, இந்தப் போக்கிலேயே தொடர்ந்தும் இவர்கள் அடுத்த தலைமுறையையும் வழிநடத்தத் தலைப்பட்டுள்ளமையையும் காணக்கூயதாக உள்ளது. அடுத்த தலைமுறையினரிடையேயும் தமது சீழ் பிடித்த சிந்தனைப் போக்கையே திணிக்கும் செயற்பாடுகள் நிகழ்வதையும் காணக் கூடியதாக உள்ளது.

இப்படியானவர்களின் கீழ் வளரும் அடுத்த தலைமுறையானது தமிழ்த் தேசியத்தை சரியாகக் கொண்டு நகர்த்துமா? இவர்களை நம்பி அனுப்பும் பெற்றோரது நிலை என்ன? போன்ற கேள்விகளும் பெற்றோரிடம் எழுந்து வருவதும் காணக்கூயதாக உள்ளது. இதுபோன்றவர்களிடம், தேசிய நலன் கருதி நியாயத்தைச் சுட்டிக் காட்டுவோரை பகை முரண் நிலையாகத் தெளிவற்றுக் குறுகிய மனப்பான்மையுடன் பார்ப்பதனூடாக, நேர்மையானவர்கள் ஒதுங்கிச் செல்வதும் நிகழ்ந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் விளைவாக தேசியத்தினது சிந்தனையால் முன்மொழியப்பட்ட நிறுவனங்களிடையே பச்சோந்திகள் தலையெடுக்கக் காரணமாகியுள்ளமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஏனிதை சுட்டுகிறேனென்றால்; தம்மைத் தமிழ்த் தமிழ்த் தேசியத்திற்காக எந்தவிதமான சுகத்தேடல்களுமின்றி மண்ணுக்குள் விதையாக்கிக் கொண்டார்களே, இறுதிக்கணம் வரை உயிரைப் பணயம் வைத்துப் பட்டினிகிடந்து தாயகப் பரப்பெங்கும் வீழ்ந்து புதையுண்ட தமிழ் மக்களது ஈகத்தின் பெயரால், தமிழ்த் தேசியத்தின் பெயரால் இந்த அராஜகச் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்பதே உண்மையாகும். இது தொடர்பாகப் பொறுப்புக்குரியவர்களும் சுதந்திரமான தேடல்களைச் செய்வதனூடாக மட்டுமே தேசியத்தைக் காக்க முடியும்.


source:tamilspy

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP