சமீபத்திய பதிவுகள்

தமிழீழ விடுதலை புலிகள் தோல்வி அடைந்துவிட்டார்கள்

>> Friday, March 6, 2009

தமிழீழ விடுதலை புலிகள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்ற விஷயத்தை கனவிலும் கூட கேடககூடாது என்று உலக தமிழினம் அனுதினமும் இறைவனை வேண்டிக்கொன்ண்டிருக்கும் இந்த வேளையில் மக்களை கொன்று புலிகளை முழுமையாக அழிக்க ராஜபக்ஷே நினைத்து வருகின்ற இந்த நிலையில் உலக தமிழினமக்கள் ஒன்றை  மறந்துவிடக்கூடாது.
 
உலக வல்லரசாக உலவிவரும் அமேரிக்காவும்,அதன் செல்லக்குழந்தையான இஸ்ரேலும் ஹமாஸ்,மற்றும் தலிபானுக்கு எதிராக எத்தனையோ தாக்குதல்களை நடத்தின போதும் முற்றாக அழித்துவிட முடியவில்லை.
 
ஹமாசும்,தலிபானும்,புலிகளும் ஒரே நிலையில் வைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் இல்லாவிட்டாலும் போராட்ட மனபான்மையில் ஒரே நிலையில் உள்ளவர்களே.அப்படியானால் புலிகள் மீன்டும் பலம் பெறுவது கடினமான காரியமல்ல.வெளியுலகில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் களத்தில் நடந்து வரும் சமரைக்காட்டிலும் தீவிரமாக உழைக்க கடமைப்பட்டுள்ளோம்.உலக நாடுகளில் இதுவரை கேட்கப்படாத தமிழினத்தின் குரலை கேட்கும்படி செய்ய வேண்டும்.
 
ஒரு விடியலுக்காக காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயாத்தில் தமிழினம் நகர்த்தபடுள்ளது.  இதுவே தமிழனுக்கான முதல் வெற்றி.
 
 
 
மேலதிகமான கருத்துக்களுக்கு
 
 
 

StumbleUpon.com Read more...

மஞ்சள் பத்திரிக்கைக்கும் வாரப்பத்திரிக்கைக்கும் வேறுபாடு தெரியாத இலங்கை வெள்ளை வேன் பொலீசார்.

மஞ்சள் பத்திரிக்கைக்கும் வாரப்பத்திரிக்கைக்கும் வேறுபாடு தெரியாத இலங்கை வெள்ளை வேன் பொலீசார்.
 
இன்று இணையங்கள்ளின் முன்னணி இடுகைகளாக வெளிவந்துள்ள செய்தி 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதே.
 
இதுவரை மஞ்சள் பத்திரிக்கைகள் விற்பனைசெய்பவர்கள் கைது செய்யப்படுவதை கேள்விப்பட்டுள்ளோம்.ஆனால் வாரப்பத்திரிக்கை விற்பனையாளரை கைது செய்யும் போலீசார் இலங்கையில் இருக்கும் ரவுடிகளே ஆவர்.இவர்கள் வெள்ளை வேனில் வரும் ரவுடிகள்.ஒரு வாரத்திற்கு முன் உதயம் ஆசிரியர் கடத்தி செல்லப்பட்டு பின்பு சிங்கள போலீஸ் ரவுடிகளால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
 
ஊடகங்களின் உரிமையை முற்றாக வேரறுத்துவிட்ட சிங்கள பேரிணவாத  காட்டுமிரான்டிகள் தமிழர்களையும் கொன்ன்றொழிக்க நாள் குறித்துவருகின்றனர்.

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP