சமீபத்திய பதிவுகள்

முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தை மறைத்த கூகுள் ஏர்த் !

>> Saturday, March 31, 2012

கூகுள் தேடுபொறி, கூகுள் ஏத் எனப்படும் அதி நவீன சட்டலைட்டைப் பயன்படுத்தி பூமியின் எப்பாகத்தையும் பார்க்கும் தொழில் நுட்ப்ப புரட்சியை ஏற்படுத்தியது யாவரும் அறிந்ததே. நிலப்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக பார்ப்பது போல, கூகுள் ஏத் எனப்படும் சட்டலைட் மூலம் நாம் உலகின் எப்பாகத்தையும் பார்க்க முடியும். உதாரணமாக லண்டனில் வசிப்பவர் ஒருவர் இலங்கைக்கு மேலே சென்று, அங்கிருந்து யாழ்ப்பானத்தைப் பார்த்து, அதிலும் நல்லூர் கோவிலை துல்லியமாகப் பார்க்க முடியும். அதுமட்டும் அல்ல மட்டும் அல்ல வெளிவீதியையும் பார்க்க முடியும். சிரியாவில் நடைபெற்ற அரச அடக்குமுறை, பலஸ்தீனத்தின் மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று, சம்பவம் நடந்த இடங்களை ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும், மற்றும் பொதுமக்களும் பார்க்க கூகுள் ஏத் உதவியாக இருக்கும்.

2004ம் ஆண்டு இலங்கையை சுணாமி தாக்கியவேளை, கடல் நீர் எவ்வாறு நாட்டிற்குள் உட் புகுந்தது என்பதனை கூகுள் ஏத் தான் முதன் முறையாகத் துல்லியமாக எடுத்து உலகிற்கு காட்டியது. பொதுவாக கூகுள் ஏத் எனப்படும் பொறிமுறை பாவிக்கும் சட்டலைட் சுமார், 2 வாரங்கள் அல்லது 1 வாரத்துக்கு ஒருமுறையாவது உலகின் பல்வேறு பகுதிகளைப் படமெடுத்து அதனை சேமித்து வருகிறது. ஆகக் கூடச் சொல்லப்போனால் 1 மாதத்திற்கு ஒரு தடவையாவது அது எல்லா இடங்களையும் படம் எடுத்து சேமிப்பது வழக்கம். பழைய படங்களை நாம் எமது கணணியில் சேமித்தால், பின்னர் கூகுள் ஏத் தரும் புதிய படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே நடந்திருக்கும் மாற்றங்களை நாம் அவதானிக்க முடியும். இது உலகின் நகரப் பகுதிகள் காடுகள், வீதிகள், கட்டிடங்கள் என ஒன்றையும் விட்டுவைக்காமல் அப்படியே படம் எடுத்து சேமித்து வைக்கிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் அதன் கழுகு போன்ற (கமரா) கண்ணில் எந்த ஒரு பகுதியும் தப்பிக்க முடியாது. 

ஆனால் 2009ம் ஆண்டு ஏப்பிரல், மே, மற்றும் ஜூன் என 3 மாதங்களாக, முள்ளிவாய்க்காலை, கூகுள் ஏத் படம் எடுக்கவில்லை. குறிப்பாக உலகில் உள்ள பல தமிழர்கள் கூகுள் ஏத் சட்டலைட்டை பாவித்து முள்ளிவாய்க்காலைப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கே சேமித்து வைக்கப்பட்டிருந்த படங்கள் பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு சென்ற பின்னரும், அவர்கள் அங்கே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தது மட்டுமல்லாது, இறுதியாக அங்கிருந்து அவர்கள் அகன்று சென்றது கூட கூகுள் ஏத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்டு மக்களுக்கு அது காட்டப்படவில்லையா ? இல்லை பதிவே செய்யப்படவில்லையா என்பதே தற்போது எழுந்துள்ள பெருங்கேள்வி ஆகும்.

2009ம் ஆண்டு உலகளாவியரீதியாக தமிழர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டனர். நடக்கும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேசத்திடம் வேண்டி நின்றனர். பிரித்தானியா ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு பிரேரணை ஒன்றைக் கொண்டுசென்றது. இதனை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரத்துச் செய்தது. மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்திகள் உலகளாவியரீதியில் பரவலாக அடிபட்டபோதிலும் கூகுள் ஏத் ஏன் அப்பகுதியை படம் எடுக்கவில்லை ? அப்படிப் படம் எடுத்திருந்தால் முள்ளிவாய்க்காலில் மக்கள் அமைத்திருந்த கூடாரங்கள், அங்கே விழுந்து வெடித்த ஷெல்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் துல்லியமாகப் படமாக பெற்றிருக்க முடியும். ஆனால் அதனை ஏன் கூகுள் ஏத் செய்யவில்லை ?

இலங்கை அரசுடன் இவர்கள் ஏதாவது ஒப்பந்தம் போட்டார்களா ? என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளதாக அமெரிக்க ஆங்கில நாளேடு ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலைப் படம் எடுத்துவிட்டு, அதனை சேமித்துவைத்து தற்போது எடுக்கப்பட்ட படம்போல கூகுள் ஏன் காட்டிவந்தது என்பது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்கு கூகுள் நிறுவனம் பதில் சொல்லியாகவேண்டும் என அந்த ஆங்கில ஊடகம் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. 


source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1

>> Tuesday, March 27, 2012

 

 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1 
Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1

புத்தக அறிமுகம்:



Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1 

8.5"x11", color, hard cover, 67 pages 

ISBN-10: 0982964307, ISBN-13: 978-0982964309


புத்தக அட்டைப்படம்:

8121617.jpg?401

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8121617.jpg?401


என் பெயர் அப்துல். என் தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.இது என்னுடைய புதிய புத்தகம்.இந்த புத்தகம் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இஸ்லாமை சுலபமாக நீங்கள் புரிந்துக்கொள்ள இப்புத்தகம் உதவும் என்ற நோக்கத்தோடு இப்புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன்.


9068355.png?289

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/9068355.png?289

இஸ்லாமை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், நாம் முதலாவது அதன் ஸ்தாபகர் இறைத்தூதர் முஹம்மதுவை புரிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமை புரிந்துக்கொள்ள இது ஒரு சுலபமான வழியாகும்.

ஏன்?

4026245.png?316

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4026245.png?316

இஸ்லாமைப் பற்றி மக்கள் அனேக விதமாகச் சொல்வார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் தவறாக இருக்கலாம். ஏனென்றால், அவைகள் முஹம்மது என்ன சொல்லியுள்ளாரோ எவைகளை செய்துள்ளாரோ அவைகளுக்கு எதிராக இருக்கும். முஹம்மதுவின் சொல் மற்றும் செயல், இவை இரண்டிற்கு எதிராக இருப்பதெல்லாம் இஸ்லாம் அல்ல.

உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் இதைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிப்போம்.

8605183.png?363

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8605183.png?363

ஆனால், தீவிரவாதிகள் முஹம்மது சொன்னது போலத் தான் நாங்கள் நடந்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொன்னாலும், இஸ்லாமியர்கள் இதனை மாற்றிச் சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் கூறுவது: இது உண்மையான இஸ்லாம் இல்லை. இஸ்லாம் அமைதியையும், அன்பையும் போதிக்கிறது. அந்த தீவிரவாதிகள் (இரட்டை கோபுரங்களை தகர்த்திய தீவிரவாதிகள்) இஸ்லாமை கடத்திவிட்டார்கள் அல்லது அமைதி இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் கொண்டு வருகிறார்கள். ஆனால், இஸ்லாம் இப்படி தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை.

5711649.png?565

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5711649.png?565

நீங்கள் கவனித்தீர்களா?

முஹம்மது என்ன செய்யச் சொல்லி கட்டளையிட்டாரோ அதற்கு நேர் எதிரான கருத்தை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளார்கள். அதே நேரத்தில் முஹம்மது மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஆகையால், யார் சொல்வது உண்மையான விவரம் என்பதை தெரிந்துக்கொள்ள நாம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிக்கவேண்டும், முஹம்மதுவை படிக்கவேண்டும்.

5189545.png?363

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5189545.png?363

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றி நாம் கீழ்கண்ட புத்தகங்களில் படிக்கலாம்.

1) குர்‍ஆன் (அல்லாஹ்வின் வெளிப்பாடு / இஸ்லாமியர்களின் வேதம்)
2) ஹதீஸ்கள் (முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களின் தொகுப்பு)
3) சிரத் (முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு)

இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது.

8180786.png?366

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8180786.png?366

குர்‍ஆனை படிப்பது என்பது மிகவும் சோர்வு உண்டாக்கும் செயலாகும், அதாவது ஒரு சரியான முறைப்படி கோர்வையாக குர்‍ஆன் எழுதப்படவில்லை. ஒரு விவரத்திலிருந்து இன்னொரு விவரத்திற்கு குர்‍ஆன் அடிக்கடி தாவும். ஆகையால், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் மட்டுமே நிற்கும், குர்‍ஆன் என்ன சொல்கின்றது என்பது நமக்கு புரியாது.

குர்‍ஆனை புரிந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் தஃப்ஸீர் என்றுச் சொல்லக்கூடிய "குர்‍ஆன் விளக்கவுரைகளை" படிப்பார்கள்.

8186244.png?312

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/8186244.png?312

த‌ஃப்ஸீர் என்கின்ற குர்‍ஆன் விளக்கவுரைகள் அனேகம் உள்ளன, அதாவது இபின் கதீர் விளக்கவுரை, தபரி விளக்கவுரை, இபின் அப்பாஸ் விளக்கவுரை, ஜலாலைன் விளக்கவுரை என்று அனேக குர்‍ஆன் விளக்கவுரைகள் உள்ளன.

இதே போல, ஹதீஸ்களும் அனேக தொகுப்புக்கள் உள்ளன. ஹதீஸ்களில் புகாரி என்றும், முஸ்லிம் என்றும், அபூ தாவுத் என்றும், முவட்டா என்றும் அனேகம் உள்ளன. ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பிலும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அதே போல, சிரத் என்றுச் சொல்லக்கூடிய முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகள் அனேகம் உள்ளன, உதாரணத்திற்கு, இபின் இஷாக், இபின் ஹிஷாம், தபரி, இபின் ஸாத், இபின் கதீர் என்று அனேகம் உள்ளன.

154530.png?444

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/154530.png?444

இஸ்லாமை அறிந்துக்கொள்ள இத்தனை புத்தகங்களை படிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.

5173027.png?179

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/5173027.png?179

ஒரு வேளை நமக்கு நேரமிருந்தாலும், எந்த புத்தகத்தை நாம் படிப்பது?

6950385.png?228

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6950385.png?228

இந்த பிரச்சனையை தீர்க்கத்தான், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை ஒரு கோர்வையாக படக்கதைகள் மூலம் விளக்கியுள்ளேன். இஸ்லாமை அறிந்துக்கொள்ள நமக்கு முன்பாக இருக்கும் இத்தனை புத்தகங்களை படிக்க‌வேண்டும் என்ற தலைவலி இனி உங்களுக்கு இல்லை. இந்த படக்கதைகளை நீங்கள் இரசித்து படிக்கலாம்.

இது முதலாவது தொகுப்பாகும் (Volume 1)

4434218.png?302

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/4434218.png?302

இந்த முதலாவது தொகுப்பில், நீங்கள் முஹம்மதுவின் வாழ்க்கையை "மக்கா தொடங்கி அவர் மதினாவிற்கு ஹிஜ்ரா செய்த (இடம் பெயர்ந்த) காலம்வரையிலான" விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

அதுவும், ஒரே முறை உட்கார்ந்து ஒரே மூச்சில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

7578037.png?332

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/7578037.png?332

இந்த புத்தகத்தை நீங்கள் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கலாம்.

86573.png?317

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/86573.png?317

நீங்கள் இந்த புத்தகத்தை பார்க்கில் (தோட்டத்தில்) உட்கார்ந்து படிக்கலாம்.

2950704.png?446

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/2950704.png?446

உங்கள் கணினியில் உட்கார்ந்துக்கொண்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

3838682.png?304

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/3838682.png?304

ஆனால், பல‌ன் ஒன்று தான், அதாவது நாம் அனேக இஸ்லாமிய புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளும் விவரங்களை ஒரே ஒரு படக்கதை புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அறிவு நமக்கு சீக்கிரமாகவும், சரியான விவரமும் இதன் மூலம் கிடைத்துவிடும்.

இஸ்லாம் பற்றி இத்தனை விவரங்கள் எனக்குதெரிந்துவிட்டதே என்றுச் சொல்லி நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

6032384.png?365

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/6032384.png?365

இவைகளை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செலவிடவேண்டியதெல்லாம், புத்தக வடிவில் தேவையானால் $16.99 யும், கணினியில் படிக்க ஈ-புத்தகம் (e-book) என்ற வடியில் படிக்க $ 10.99 யும் ஆகும்.

இஸ்லாமை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால், அதுவும் சுவாரசியமாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருந்தால் மற்றும் உங்களிடம் அதிக நேரம் இல்லை என்றால், உங்களுக்குத் தான் இந்த புத்தகம்.

1560242.png?394

http://prophetmuhammadillustrated.com/uploads/2/8/0/6/2806546/1560242.png?394

மேலும் அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும்:

http://prophetmuhammadillustrated.com/


இந்த படக்கதை புத்தகத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை கீழ்கண்ட தொடுப்பில் சென்று படக்கதையை படிக்கலாம்:

http://prophetmuhammadillustrated.com/the-killing-of-umm-qirfa.html

You tube Video: 





Source: http://prophetmuhammadillustrated.com/





--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்

>> Monday, March 19, 2012

 

புதுடில்லி: ஐ.நா.,குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், தமிழக மக்களின் எண்ணம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் இன்று லோக்சபாவில் பிரதமர் அறிவித்தார். ஜனாதிபதி உரை குறித்த விளக்கவுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்: இந்த அரசின் வரைவு திட்டமே ஜனாதிபதியின் உரையில் அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 7 சதமாக இருக்கும் என்பது நல்ல செய்தியாகும். உலக அளவில் கடந்த ஆண்டு பொருளாதார ஸ்திரம் பாதிக்கப்பட்டது. இது பெரும் சிரமாக இருந்து வந்துள்ளது. பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். எனவே கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.
 
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் நாட்டிற்கு மிக நல்லது. பயங்கரவாத அமைப்புகளை கண்டு அழிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை நடமுறைக்கு கொண்டுவர முழு நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
திரிவேதி ராஜினாமா ஏற்பு: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. அவர் அமைச்சரவையில் இருந்து செல்வது தமக்கு கவலை தரும் விஷயம். இவரது ராஜினமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரயில்வே அமைச்சர் நியமிக்கப்படுவார். 
இலங்கை தமிழர் தொடர்பான விவகாரம் என்னிடம் தெரிவிக்கப்ட்டது. இதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். மத்திய அரசு முழுக்கவனத்துடன் இதனை பார்த்து வருகிறது. அமெரிக்கா கொண்டு 

வரும் தீர்மானத்தை முழுமையாக படிக்கவில்லை. ஆனாலும் குறிக்கோளை நிறைவேற்றும் பட்சத்தில் இருக்குமாயின் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும். மேலும் தமிழர்களின் அதிகாரப்பகிர்வு குறித்தும் இலங்கையிடம்வலியுறுத்தப்படும். இலங்கை அரசு தமிழர் தேசிய கூட்டணி கட்சியினருடன் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனை அறிவித்த நேரத்தில் அவையில் இருந்த தமிழக எம்.பி.,க்கள் கரகோஷம் எழுப்பினர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வரவேற்பு :பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு தி.மு.க.,தலைவர் கருணாநிதி வரவற்பு அளித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக முழு நிலைக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வரும் 22 ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். பிரதமர் அறிவிப்பு வந்த சில மணிதுளிகளில் உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

டுவிட்டரில் மதநிந்தனை? சவுதி ஊடகவியலாளர் மலேஷியாவில் கைது

>> Wednesday, March 14, 2012

டுவிட்டர் பக்கம் ஒன்று 



டுவிட்டரில் தான் வெளியிட்ட ஒரு கருத்தில் இறைதூதர் முகமதுவை இழிவுபடுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை மலேஷியாவில் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

முகமது நபியின் பிறந்த நாள் சென்ற வாரம் வந்த சமயத்தில் ஹம்ஸா கஷ்காரி என்ற இந்த கட்டுரை ஆசிரியர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து, சுமார் முப்பதாயிரம் பேரிடம் இருந்து டுவிட்டரில் பதில் கருத்தைத் தூண்டியிருந்தது. நிறைய பேர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வியாழனன்று இவர் மலேஷியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, சர்வதேச பொலிஸ் பிரிவான இண்டர்போல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.

முகமது நபி பிறந்தநாள் தொடர்பில் ஹம்சா எழுதியிருந்த டுவிட்டர் கருத்தில், "உன்னைப் பற்றிய பல அம்சங்களை நான் நெசிக்கிறேன். அதேநேரம் உன்னைப் பற்றிய சில அம்சங்களை நான் வெறுக்கவும் செய்கிறேன். உன்னைப் பற்றிய பல விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கிறது. நான் உனக்காக பிரார்த்திக்க மாட்டேன்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்வினைவகள் வெளியான நிலையில் இவர் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கேட்டிருந்ததோடு. அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் மாதிரியாக இருந்த கருத்துகளை டுவிட்டரில் இருந்து நீக்கியும் இருந்தார். ஆனாலும் அவர் மேலெழுந்த ஆத்திரம் கொந்தளிப்பு அடங்கியபாடில்லை..

மதநிந்தனை செய்ததாக குற்றம்சாட்டி இவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என மதகுருக்கள் கோரியுள்ளனர்.

இறைதூதரை இழிவுபடுத்தும் விதமான கருத்துகளைச் சொல்வது மதநிந்தனையாக கருதப்படுகிறது.

தவிர சவுதி அரேபியாவில் மதநிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

ஹம்ஸா கஷ்காரி எந்த நாட்டிலிருந்து வந்த விமானத்தில் மலேஷியாவுக்கு வந்தார் என்ற தகவலை மலேஷியப் பொலிசார் வெளியிடவில்லை.

இவரைக் கைது செய்யுங்கள் என்று சவுதி மன்னர் உத்தரவிட்டதாக கூறப்படுவதை அடுத்து அவர் சவுதியை விட்டு வெளியேறியதாக டுவிட்டர் தகவல்களிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

தற்போது இந்நபருடைய டுவிட்டர் கணக்கே இணையத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

மலேஷியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்ற உடன்பாடு ஏதும் இல்லை.

ஆனாலும் தேசப் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் கஷ்காரி சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத மலேஷிய அதிகாரிகள் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்


source:BBC


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஆப்கானிஸ்தானில் இமாம்கள் பெண்களுக்கான விதிகளை அறிவித்துள்ளனர்


பெண்கள் தொடர்பான புதிய கட்டுப்பாட்டு விதிகளுக்கு சமூக இணைய தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன 

ஆப்கானிஸ்தானில் மதகுருமாரின் கவுன்சிலொன்று பெண்களுக்கென கடுமையான கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது.

ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாயும் கூட இந்த புதிய விதிமுறைகளுக்கு அவரது அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் சமூக இணைய வலைத்தளங்களில் தோன்றியுள்ள அந்நாட்டு இளைஞர்கள், இந்த கட்டுப்பாடுகளையும் அதனை உருவாக்கிய மதகுருமாரையும் சாடி விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

'இது மிக வன்முறைத் தனமானது' என்று ஆப்கன் இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

'அடுத்தபடியாக, அவர்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறுவார்கள், பாதி ஆண்களுக்கு, அடுத்த பாதி பெண்களுக்கு' என்று அந்த விமர்சனம் தொடர்கிறது.

நையாண்டியான விமர்சனங்கள்

பெண்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை நையாண்டி செய்யும் கேலிச் சித்தி்ரமொன்று

பெண்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை நையாண்டி செய்யும் கேலிச் சித்தி்ரம்

ஆப்கானிஸ்தானின் முக்கிய மதகுருமார்கள் கவுன்சில் பள்ளிக்கூடங்களிலும் வேலைத்தளங்களிலும் மற்ற எல்லா நாளாந்த நடவடிக்கைகளும் ஆண்களும் பெண்களும் பிரிந்திருக்க வேண்டும், அவர்களைக் ஒன்றுசேர விடக் கூடாது என்று அறிவித்ததை அடுத்து சமூக இணைய தளங்களில் இவ்வாறான ஆயிரக்கணக்கான கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

கவுன்சிலின் அறிவிப்பை அதிபர் கர்சாயும் அங்கீகரித்தை அடுத்தே மக்கள் தங்கள் ஆத்திரங்களை இவ்வாறு இணைய தளங்களில் கொட்டித்தீர்ப்பது இன்னும் தீவிரமடைந்துள்ளது.

ஆண்-பெண் வகுப்பு வாதத்துக்கு எதிராக அங்கு புதிய இணைய தளங்களும் இப்போது துவக்கப்பட்டு பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இதேபோல இன்னும் சிலர் தமது கோபத்தை நையாண்டியாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

காபூல்வாசி ஒருவர், 'அரசாங்கத்தின் செலவினம் இன்னும் அதிகரிக்கும், இனி பெண்களுக்கு என்று தனியான நாடாளுமன்றம், தனியான பல்கலைக்கழகங்கள், வங்கிகள், அங்காடிகளை எல்லாம் அமைக்க வேண்டுமே' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னும் கேலியாக, 'ஆப்கன் பெண்களே, உங்கள் தந்தைமார், கணவன்மார் ,அல்லது உலமா கவுன்சிலின் அனுமதி இல்லாமல் எவரும் எனக்கு குறிப்புகளை போடவேண்டாம்' என்று ஒருவர் டுவிட்டர் தளத்தில் எழுதியுள்ளார்.

பிபிசியின் பாரசீகமொழிச் சேவையிடம் காபூலில் இருந்து பேசிய இளம் மாணவி ஒருவர், 'நாங்கள், இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்தவும் போவதில்லை, கட்டுப்படவும் போவதில்லை' என்று தெரிவித்தார்.

உலமா கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு ஆப்கன் அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றமை, தாலிபன் காலத்தை நோக்கி நாடு செல்வதையே காட்டுவதாக இளம் ஆப்கானியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்தபோது, ஆப்கனிலிருந்து இரானுக்கு தப்பியோடிய பெண் உரிமை ஆர்வலர் சாக்கியா நவா, 'அரசின் நடவடிக்கை ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன்கள் கட்டுப்படுத்தவே வழிவகுக்கும்' என்று தெரிவித்தார்.

எதிர்காலம்?

ஆப்கன் நாடாளுமன்றம்

ஆப்கன் நாடாளுமன்றம்

இந்தப் புதிய பரிந்துரைகளை நாடாளுமன்றத்திலும் சிலர் கண்டித்துள்ளனர்.

ஆப்கன் அரசியலமைப்பையே மீறும் செயல் என்று எதிரணியின் துணைத் தலைவர் அஹ்மட் பேஹ்சாட் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள பிரபல கவிஞர் சமய் ஹமெத்,' 'நீ பெண்களுக்கு எதிரான கருத்துடையவன் என்றால், நீ உன் தாய்க்கு எதிரானவன் என்று தானே அர்த்தம்', வாழ்க்கையில் எல்லாமே பெண்ணால் தானே சாத்தியம், ஆனால் தொடர்ந்து நீ அவளுக்கு எதிராகத் தானே குரல் எழுப்புகிறாய்' என்று பதிவு செய்திருக்கிறார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இப்போது இந்த சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திவருபவர்கள், அங்குள்ள இளம், படித்த, மேல்தட்டு வர்க்கத்தில் இருப்பவர்கள் தான்.

ஆனால், அங்கு இன்னொரு உலகம் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறது. ஆழமாக பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றும், நம்பும் ஒரு ஆப்கானும் அங்கு இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.

தெற்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய கோட்பாட்டுக் கல்வியை பயிலும் மாணவன் அப்துல் சலாம், 'உலமா சபையின் பரிந்துரைகளை நான் ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவை இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவானவை' என்று கூறுகின்றார்.

இனி, அடுத்தகட்டமாக இந்த பரிந்துரைகளுக்கு என்ன நடக்கும், புதிய சட்டமாக அமுலுக்கு வருமா என்பது தெளிவில்லை. ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் பற்றி சர்வதேச அரங்கில் பல கேள்விகளுக்கு இன்னும் பதில் காணப்பட வேண்டியிருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

source:BBC


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கன்னித்தன்மை பரிசோதனை

சமீரா இப்ராஹிம் 

எகிப்தில் சென்ற ஆண்டு முபாரக் ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இராணுவ மருத்துவர் ஒருவரை குற்றமற்றவர் என்று அந்நாட்டின் இராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்களில் ஒருவரான சமீரா இப்ராஹிம், இந்த மருத்துவருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்து வழக்கைத் தொடுத்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தான் தஹ்ரீர் சதுக்கத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர் தனது கன்னித்தன்மையை பரிசோதிக்கும் ஒரு சோதனைக்கு தன்னை வற்புறுத்தி உட்படவைத்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தனக்கு நேர்ந்தது தொடர்பில் சாட்சியளிக்க முன்வருவார்கள் என்று தான் நம்பிக்கொண்டிருந்தவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் கதையை மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று அப்பெண் கூறுகிறார்.

பெண்களுக்கு கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை பரிசோதனை செய்வதென்பதை எகிப்திய இராணுவம் ஒரு தண்டனை உத்தியாக பரவலாக பயன்படுத்தி வருகிறது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.


source:BBC

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா


 

 

எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் ஆணாதிக்க மதமே. அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் அதை தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறப்படும், இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் குறியீடாக இருக்கும் புர்கா கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.

 

புர்கா, பர்தா, துப்பட்டி, ஹிஜாப் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் பெண்களுக்கான மேலதிக ஆடை தமிழ்ச் சூழலில் 80களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த ஆடைமுறை இஸ்லாமியப் பெண்களின் மீது ஒரு உறுப்பாகவே படிந்து விட்டது. எந்த அளவுக்கு இந்த ஆடை பெண்களுக்கான கண்ணியமாக இஸ்லாமியர்களால் திணிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இதை இஸ்லாமியர்கள்  இரண்டு விதங்களில் எதிர்கொள்கிறார்கள். ஒன்று. புர்காவை மறுப்பவர்கள், மேற்குலகின் ஆகக் குறைந்த ஆடை அணிவதையே சுதந்திரமாக கொண்டிருக்கும் போக்கிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது. இரண்டு, புர்காவை மறுப்பவர்கள், பெண்களுக்கு வேறு என்ன அளவில் ஆடை அணிய வேண்டும் என்பதை வரையறுத்திருக்கிறார்களா? என்பது.

 

பெண்களுக்கான இந்த மேலதிக ஆடைய அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை காக்கும் என்பது தான். பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம். ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக எண்ணாததன் வெளிப்பாடு தான். எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

 

பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயியினும், வேறு பெண்களாயினும்; முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல. ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு; சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

 

பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால்; பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள். பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.

 

இஸ்லாம் ஆண்களுக்கு ஆடைவரம்பு விதித்திருப்பதைப் போல், பெண்களுக்கும் விதித்திருக்கிறது இதில் அடிமைத்தனம் ஒன்றுமில்லை என்பது முஸ்லீம்களின் பிரபலமான வாதம். இது உண்மையா? குரான் 24:30,31 இப்படி குறிப்பிடுகிறது.

 

மூமீன்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்….. இன்னும் மூமீன்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது. இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தம் கணவர்கள், தம் தந்தையர்கள், தம் கணவர்களின் தந்தையர்கள், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் பெண்கள், தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது……

 

இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன, முஸ்லீம்கள் கூறுவது போல் ஆண்களுக்கான ஆடை பெண்களுக்கான ஆடை என்று வரையரை செய்வதாக இல்லாமல் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குறிப்பிட்ட சில ஆண்களை தவிர ஏனைய ஆண்களுக்கு முன் வரக்கூடாது என்பதையே அந்த வசனம் குறிக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன ஆடை உடுத்தியிருந்தாலும் அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும். இது ஆடை சார்ந்த விசயமா? அடிமைத்தனம் சார்ந்த விசயமா?

 

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப, உடலை முழுவதும் மறைக்கக் கூடிய சுடிதார் போன்ற ஆடைகளும் ஹிஜாப் போன்றது தான் என்று முஸ்லீம்கள் வைக்கும் வாதத்தையும் மேற்கண்ட வசனம் தகர்த்து விடுகிறது. ஆக உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ, அன்னியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. இது ஆண்களுக்கு இல்லை.

 

முகத்தையும் முன்கைகளையும் தவிர ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள் எனும் ஹதீஸை பெண்களின் ஆடைகளுக்கான வரம்பாக காட்டினாலும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குரான் வசனங்கள், ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

 

நபியே நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக…….. குரான் 33:59

 

இந்த வசனம் வந்த சூழலை புஹாரி 146 துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கழிப்பிடம் நாடி திறந்த வெளிகளுக்கு இரவு நேரங்களில் பெண்கள் செல்வார்கள். முகம்மதின் மனைவியருள் ஒருவராகிய ஸவ்தா அவ்வாறு வெளியில் செல்கிறார். அப்போது முகம்மதுடன் அமர்ந்திருக்கும் நண்பரான உமர் ஸவ்தாவே உங்களை அடையாளம் தெரிந்து கொண்டோம் என்கிறார். முக்காடிடுவது குறித்த வசனம் இறங்க(!) வேண்டுமென்பதற்காக சப்தமிட்டு இவ்வாறு கூறுகிறார்.அப்போது தான் மேற்கூறிய வசனம் இறங்குகிறது. இந்த ஹதீஸை அறிவிப்பவர் முகம்மதின் இன்னொரு மனைவியான ஆயிஷா. ஸவ்தா முகம்மதின் மனைவியரில் உயரமானவர் எனவே இங்கு முகத்தை மறைப்பது பற்றியே கூறப்படுகிறது என்பது உறுதியாகிறது. ஆக பெண்கள் தங்கள் பாலியல் அங்கங்களை மறைக்கும் வழமையான ஆடைகளால் உடுத்திக் கொள்வது போதாது. ஆடைக்கு மேலாக முகம் உட்பட அனைத்தையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் முடிவு. இதை தற்போதைய நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு ஆடைகளையே ஹிஜாபாக கொள்ளலாம் என்றும், முகத்தை மறைப்பது முக்கியமில்லை என்றும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.

புர்கா குறித்த பிரச்சனை எழுப்பபட்டால், ஆண்களின் அளவைவிட பெண்கள் அதிகமாக ஆடை அணிய வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள், இதற்கு இஸ்லாம் ஒரு அளவை நிர்ணயித்திருக்கிறது. இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல் திசை திருப்புவார்கள். இங்கு பிரச்சனை ஆடையின் அளவு அல்ல. போதுமான அளவு ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துக் கொண்டு தான் அன்னியருக்குமுன் அல்லது வெளியில் வரவேண்டும் என்பது தான். இதுமட்டுமன்றி புர்கா அணிந்து கொண்டு வாழும் பெண்களின் மூலம் அது தங்களுக்கு படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ, பொது இடங்களுக்கு சென்று வருவதற்கோ எந்தவித இடையூறும் இல்லை என்றும், அதை ஆணாதிக்கமாக நாங்கள் கருதவில்லை என்றும் பதில் கூறச் செய்து அதனைக் கொண்டும் இதை எதிர் கொள்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு புர்கா அணியும் பெண்களுக்கு அது இடையூறாக இருக்குமா? அவர்கள் அதை ஆணாதிக்கமாக கருதுகிறார்களா என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.

 

பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது. ஆணாதிக்கமும் தனியுடமையும் இணையும் புள்ளியிலிருந்து தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடக்கம் பெறுகிறது. ஆனால் இஸ்லாம் இந்த அடிப்படைகளை காண மறுக்கிறது. பாலியல் குற்றங்களை தனிப்பட்ட குற்ற நடவடிக்கையாக காணும் அதேநேரம் அந்தக் குற்றத்தில் பெண்களையும் இணைக்கிறது. இந்த குற்றங்களுக்கு தீர்வாக புர்காவை முன் தள்ளுகிறது, அதுவும் ஆணின் பலதார வேட்கையை சட்டமாக அங்கீகரித்துக் கொண்டு. அதாவது ஆணின் காமப்பசிக்கு நான்கு மனைவிகள் கூடுதலாக வேண்டிய அளவுக்கு அடிமைகள் என்று அனுமதியளித்துவிட்டு அதற்கு எதிராக பெண்களை புர்காக்களுக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

 

ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புர்கா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா?  ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்?  சுட்டுவிரல் நகம் தெரிந்தாலும் அதையும் பாலியல் நுகர்வோடு அணுக சமூகம் ஆணை அனுமதிக்கும் போது ஒரு ஆடை அதற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? தன்னின் எந்தப்பகுதி வெளிப்பட்டு ஆணின் பார்வையில் கிளர்ச்சியை தூண்டுமோ என்னும் பதைப்பையே இந்த ஆடைகள் பெண்களுக்கு வழங்குகிறது. அது மேலும் மேலும் ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.

 

பாலியல் குற்றமென்பது பார்வையோடு மட்டும் தொடர்புடையதல்ல. பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க் கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக் கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌து போல் தைத்துக் கொள்ள‌  வேண்டும் என‌த் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

 

அல்லாவின் பெயரை உச்சரிக்கக் கேட்டுவிட்டால் முஸ்லீம்கள் அடையும் புளகம் சொல்லி மாளாது. எல்லாம் அறிந்த, எக்காலமும் அறிந்த கடவுளின் பார்வை பெண்களின் விசயத்தில் இவ்வளவு மட்டமாக இருக்க முடியுமா? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த ஒரு சராசரி மனிதனின் பார்வையைத் தாண்டி இஸ்லாத்திலோ, குரானிலோ ஒன்றுமில்லை என்பதற்கு இந்த புர்காவை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


source:senkodi
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

 

இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்று சமூகம் பொதுவுடமை சமூகமாய் இருந்தது. அது மாறி தனியுடமை கொண்டுவரப்பட்ட போதோ ஆணின் தலைமையில் பெண் அடிமையாக்கப்பட்டாள். இந்த நிலை இன்றுவரை பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை. ஆனால் வரலாற்றின் சிற்சில போதுகளில் பெண்களுக்கு ஆதரவாக சில சில்லரை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  அந்த வகையில் இஸ்லாமும் சில சீர்திருத்தங்களை பெண்களுக்காக செய்திருக்கிறது. வரலாற்றின் வழியில் நடைபெற்று வந்த மாற்றங்களூடாகத்தான் இவைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, ஆண் பெண் சமத்துவம் என்று விதந்தோதுவது வழக்கமாக இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சார உத்தி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

பெண்ணின் சொத்துரிமை குறித்து குரான் கூறுவதென்ன?

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் ….. பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் அவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு) …. குரான் 4:11

…. உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்கு பாதி பாகம் உண்டு.அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்கு கால் பாகம் தான். ….. உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்கு கால் பாகம் தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்….. குரான் 4:12

….. அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. …. அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால் அவள் சகோதரன் அவள் விட்டு சென்ற சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். குரான் 4:176

மேற்கண்ட குரான் வசனங்கள் கூறுவதை சாராம்சமாக பார்த்தால் ஆணுக்கு வழங்கப்படுவதில் பாதி பெண்களுக்கு. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது? இதற்கு மதவாதிகள் ஒரு ஆயத்தப் பதிலைக் கூறுவார்கள். இஸ்லாம் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆண்களிடம் வழங்கியிருக்கிறது, அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் வழங்குகிறது என்று.  இன்றைய ஆணாதிக்க உலகம் அப்படித்தான் இருக்கிறது என்பதால், ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், பெற்றோர்களையும் உற்றோர்களையும் கவனிக்காமல் புறந்தள்ளும் ஆணுக்கு அதிக பாகம் இல்லாமல் பெண்களுடன் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கொள்வதற்கு ஏதுவாக குரானில் வசனம் உண்டா? இன்று பெற்றோரை கவனிப்பதில், பாதுகாப்பளிப்பதில் ஈடுபடும் எத்தனையே பெண்களை, குடும்பங்களைக் காணலாம் இது போன்ற குடும்பங்களில் ஆணைவிட பெண்ணுக்கு இரண்டு மடங்கு சொத்து பகிர்ந்தளிக்க முடியுமா குரான் வசனங்களைக் கொண்டு?

ஆணுக்கே அதிக பொறுப்பு எனவே அவனுக்கே அதிக சொத்து என்பது மதவாதிகளின் சமாளித்தல்களே அன்றி வேறில்லை. இதையும் குரானே தெளிவுபடுத்தி விடுகிறது. மேற்கண்ட குரான் வசனம் 4:11 இதை தனியாக குறிப்பிடுகிறது.

…… இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். ஆகையினால் அல்லாவிடமிருந்து வந்த கட்டளையாகும். ….

மகனா? மகளா? நன்மை செய்வதில் யார் நெருக்கமாக இருப்பர்கள் என்று உங்களுக்கு தெரியாது என்றாலும் இது அல்லாவிடமிருந்துவந்த கட்டளை. அதாவது ஆணுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது, அவனே பெற்றோரை குடும்பத்தை கவனிப்பவனாக இருக்கிறான் என்பதால் அல்ல, அல்லாவின் கட்டளை என்பதால் ஆணுக்கு இரண்டு மடங்கு. பெண்ணே பொறுப்பேற்பவளாக இருந்தாலும் ஆணுக்கு இரண்டு மடங்கு தான். இதில் மறுப்பதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ வழியில்லாத அளவுக்கு ஆணும் பெண்ணும் சமமல்ல என்று குரான் தெளிவாகவே கூறிவிடுகிறது. மதவாதிகள் தான் சமாளிப்பு விளக்கங்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

குரான் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.  மஹர் தொகை பெண்களுக்கானது என்பது முகம்மதின் நிலைப்பாடு. அதாவது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடை மணப் பெண்ணுக்கே சொந்தம். முகம்மதுவுக்கு அல்லது இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் மஹர் பெண்ணுக்கு என்பது பெயரளவில் இருந்தாலும் அதை பெண்ணின் தந்தையே அனுபவித்து வந்தனர் (இதுகுறித்து தனித்தலைப்பில் விரிவாக பின்னர் பார்க்கலாம்)இதை சீர்திருத்தி முகம்மது குரானில் பெண்ணுக்கே உரியது என்கிறார். இந்த கிடக்கையிலிருந்து தான் பெண்ணின் சொத்துரிமைக்கான அங்கீகாரம் கிளைத்து வருகிறது.

மஹரின் நிர்ப்பந்தத்தினால் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிய முகம்மது மிகக் கவனமாக அது பெண்களிடம் தங்கி விடாமல் ஆண்களிடம் வந்து சேரும்படியான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார்.  வசனம் 4:12 ஐ கவனித்துப் பார்த்தால் இது விளங்கும். கணவன் இறந்த பின்னர் மனைவிக்கு குழந்தை இருந்தால் எட்டில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் நான்கில் ஒருபங்கும்; மனைவி இறந்த பின்னர் கணவனுக்கு குழந்தை இருந்தால் நான்கில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் இரண்டில் ஒருபங்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் ஆணுக்கு இரண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது போல்தான் தோன்றும் ஆனால் ஆணுக்கு நான்கு திருமணம் வரை அனுமதி என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் 6.25 ரூபாயும், குழந்தைகள் இருந்தால் 3.12 ரூபாயும் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முகம்மது எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார் என்பது விளங்குகிறதா?

இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழலாம். என்னைருந்தாலும் இஸ்லாம் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கிறதல்லவா? என்று. முகம்மதுவிற்கு முந்தைய அரேபியாவில் பெண்களுக்கு அறவே சொத்துரிமை இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அடிமைகள் இருந்ததை சில ஹதீஸ்கள் பதிவு செய்திருக்கின்றன. ஷீபா நாட்டு அரசியாக ஒரு பெண் திறம்பட ஆட்சி புரிந்ததாக குரான் குறிப்பிடுகிறது.  முகம்மதின் முதல் மனைவியாகிய கதீஜா சொந்தமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனமொன்றை நடத்தி வந்தார். எனவே இல்லாத ஒன்றை புதிதாக முகம்மது பெண்களுக்கு வழங்கிவிடவில்லை. நடப்பில் இருந்ததைசில மாற்றங்களுடன் அங்கீகரித்திருக்கிறார், அவ்வளவு தான்.

பல்வேறு வகைகளில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆணாதிக்கத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சொத்துரிமையின் பின்னணி இது தான். மேலோட்டமான அனுபவ ரீதியான வசனங்களுக்குள் அறிவியலை அடித்து இறக்கிய அனுபவத்தில், ஆண்குழந்தைக்கு பெண்குழந்தையாய் வேடமிடுவது போல ஆணாதிக்கத்தையே பெண்ணுரிமையாய் உருமாற்றிவிட்டார்கள் மதவாதிகள் என்பதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


source:senkodi

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP