சமீபத்திய பதிவுகள்

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன்

>> Monday, March 8, 2010

கஷ்டத்தில் பழம்பெரும் நடிகை! கண்டுகொள்ளாத நடிகர் சங்கம்!!

Actress kanchana`s plight
ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களூருவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா, ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படித்து முடித்து விட்டு ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தேபோதே ஜமீன் வீட்டு பெண் வேலைக்கு ‌போவதா? என்று குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி நடிகையானவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரியாத சமீபத்தில் சரோஜாதேவிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்பார் என திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரோஜாதேவியே நேரில் சென்று அழைத்தும் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் காஞ்சனா தவிர்த்தார்.

இந்த நிலையில்தான் காஞ்சனா பற்றிய இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. தான் இப்போது படும் கஷ்டம் குறி்த்து காஞ்சனா அளி்த்துள்ள பேட்டியில், ஒருவர் நன்றாக வாழ்ந்ததை வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படலாம். எனது தற்போதைய வாழ்க்கையை‌ வெளியுலகம் அறிந்து, ஐயோ... இப்படி ஆயிட்டாளே... என்று என் மீது இரக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நன்றாக வாழும் காலத்தில் தான் சம்பாதிப்பதை யாரையும் நம்பி ஒப்படைக்கக் கூடாது. அப்படி செய்தால் என்னை என்னைப்போலத்தான் கஷ்டப்பட வேண்டும். இது என் தலைவிதி. மகாராணி போல வாழ்ந்தவள் இன்று இப்படி அல்லாடறேன், என்று கூறியுள்ளார்.

திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எத்தனையோபேர் காஞ்சனாவைப் போன்று கஷ்டத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்

source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்

 
 


 இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது. 
இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. 
முதலில்http://www1.k9webprotection.com/என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள். டவுண்லோட் செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்டு படிவம் ஒன்றில் நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும். பின் கே9 தளம் தந்த இமெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் நீங்கள்  பயன்படுத்த ஒரு கீ தரப்படும். சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்துவிடுகிறது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. 

கே 9 வெப் புரடக்ஷன் சாப்ட்வேர் இந்த வகையில் மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. குழந்தைகள் மோசமான தளங்களைப் பார்ப்பதிலிருந்து தடுக்கிறது.இலவச அவாஸ்ட் - புதிய பதிப்பு
இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் மிகவும் பிரபலமானது அவாஸ்ட் (avast!) தொகுப்பாகும். இது தற்போது அதன் பதிப்பு 5க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிய யூசர் இன்டர்பேஸ் மற்றும் நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த புதிய பதிப்பு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் கிடைக்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்:
1. ஸ்பைவேர் தொகுப்புகளைக் கண்டறிய புதிய அப்ளிகேஷன்
2. அவாஸ்ட் இன்டெலிஜன்ட் ஸ்கேனர்
3. சைலண்ட்/கேமிங் வசதி
4. புதிய கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்
5. வைரஸ் இயங்கும் விதம் அறிந்து பாதுகாப்பு
6. மிக வேகமாக அப்டேட் பைல்கள் ஏற்பு
7. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஸ்கேனிங் என இன்னும் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பு மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இயங்குகிறது.
ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கும் மேலாக,இலவச ஆண்ட்டி வைரஸ் அவாஸ்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
http://www.avast.com/freeantivirusdownload  என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி


   

Swine Flu

சட்ட ரீதியாக நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகி உள்ள சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.பிரபல சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, 

இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், உருவப்படங்கள் எரிப்பும் நித்யானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன. சென்னை போலீஸ் கமிஷனரிடமும், கோவை மாநகர காவல்துறையிடமும் நித்யானந்தாவை கைது செய்யக் கோரி புகார் கொடுப்பட்டுள்ளது. 

நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான் தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் நித்ய தர்மானந்தா (எ) லெனின் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோ பதிவுகளை ஒப்படைத்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் காவல்துறையில் லெனின் புகார் கொடுத்துள்ளார். இதனையெடுத்து லெனின் போலிசாரின் நேரடி பாதுகாப்பில் உள்ளார்.

சாமியார் நித்யானந்தா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லெனின் தனது புகாரில் தெரிவித்துள்ளதை அடுத்து, கொலை மிரட்டல் வழக்கை மட்டும் தமிழக போலீஸ் விசாரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சாமியார் நித்யானந்தா மீதான பாலியல், கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட 5 வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாமியார் நித்யானந்தா, நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அந்த வீடியோ பதிவுகள் போலீயானது என்றும் சாமியார் பேட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 

உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக சொல்ல விரும்புகின்றேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை. நாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்தப் பிறகு, எல்லா உண்மைகளையும் உங்கள் முன் விளக்குகிறேன் என்று சாமியார் நித்தியானந்த பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் அந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது, மற்றும் அவர் எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவில்லை.

Nithyananda's First Public Statement : http://www.dinakaran.com/Nithyananda-Public-Statement.asp


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP