சமீபத்திய பதிவுகள்

நான் எந்த மாநிலத்துக்கு போவேன்-ரஜினி புலம்பல்

>> Saturday, April 12, 2008

நான் எங்கதான் போறது? மகராஷ்ட்ரா போனா தமிழன்னு சொல்றாங்க. கர்நாடகா போனா மராட்டிக்காரன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுக்கு வந்தா கன்னடக்காரன்னு சொல்றாங்க. நான் எங்கதான் போறது... இப்படி வேதனையோடு புலம்பியவர் சாதாரணமானவர் அல்ல. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்னையில் தமிழ் திரையுலகமே திரண்டு, நெய்வேலியில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்திய போது, அதில் ரஜினி பங்கேற்கவில்லை. அப்போது எழுந்த காரசாரமான விமர்சனத்தைத் தாங்க முடியாமல்தான் இப்படி தனது வேதனையை வெளியிட்டார் ரஜினி.
அதன்பின் மறுநாளே சென்னையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து தமிழகத்துக்கு தனது விசுவாசத்தைக் காட்டினார். இப்போது இரண்டாவது முறையாக, ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து சமீபத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்று தான் தமிழன்தான், தமிழகத்துக்கு ஆதரவானவன்தான் என்பதை நிரூபித்தார்.
தமிழகத்தில் ரஜினிக்கு இந்தப் பிரச்னை என்றால் மகாராஷ்ட்ராவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு பிரச்னை. அமிதாப் தான் பிறந்து வளர்ந்த உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறார். தனது மருமகள் ஐஸ்வர்யா பெயரில் கல்வி நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.
பணம் சம்பாதிப்பது மும்பையில், முதலீடு செய்வது சொந்த ஊரிலா என மகராஷ்ட்ராவின் மண்ணின் மைந்தர்கள் குரல் கொடுக்க அமிதாப்புக்கு பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. பிரபலமாய் இருப்பதற்கான விலைதான் இதெல்லாம்.
பிறக்கும் ஊரிலேயே யாரும் பெரிய ஆளாய் ஆகிவிட முடியாது. அதற்கான வாய்ப்பும் வசதியும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அது நடக்கும். அதேபோல், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்யவும் ஒருவருக்கு உரிமை இருக்கிறது. யாருக்கு தானமாய் கொடுக்க விரும்புகிறாரோ, அவருக்குக் கொடுக்கலாம். எங்கு காடு, கழனி வாங்க விரும்புகிறாரோ அங்கு வாங்கலாம். இதை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.
சென்னையில் சம்பாதிக்கும் திருநெல்வேலிக்காரர் ஒருவர், நிலம் வாங்க விரும்பினால் எங்கு வாங்குவார்? சொந்த ஊரில்தானே. அப்படித்தானே எல்லோரும். இதில் என்ன தப்பு இருக்க முடியும்? இதை எப்படி பிரச்னை ஆக்க முடியும்? ஆனால் ஆக்குவார்கள்.
காரணம், பாழாய் போன அரசியல். அதற்கென ஒரு கூட்டம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக் கொண்டு, மொழியையும், மண்ணையும் தூக்கிப் பிடிப்பது போல் பேசி, பிடிக்காதவர்களை பழி வாங்கும். அதற்கு பின்னணியில் பெரிய அரசியல் கட்சிகளும் இருக்கும்.
ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. காலையில் சென்னையில் குடும்பம் சகிதமாக டிபன். தொழில் கூட்டாளிகளுடன் சிங்கப்பூரில் லஞ்ச் மீட்டிங். பின்னர் மும்பையில் நண்பர்களுடன் டின்னர் என காலம் வேகமாய் பறக்கிறது. கடல் தாண்டி கம்பெனி மூலம் நாடு பிடித்தது அந்தக் காலம். இப்போது பல நாடுகளில் கம்பெனிகள்தான் ஆளும் அரசாங்கத்தையே முடிவு செய்கின்றன.
கோககோலாவும் பெப்சியும் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையாகிறது. இந்தியரான ரத்தன் டாடா, இங்கிலாந¢தின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கினார். அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை வாங்குகிறார். இந்தியாவில் தயாராகப் போகும் டாடா நானோ கார் உலகம் முழுவதும் பவனி வரப் போகிறது.
இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் கொடி கட்டிப் பறக்கும் லட்சுமி மிட்டல், லக்சம்பெர்க் நாட்டைச் சேர்ந்த ஆர்சிலர் நிறுவனத்தை வாங்கினார். உலகிலேயே ஸ்டீல் உற்பத்தியில் நம்பர் ஒன் நிறுவனம் அது. விஜய் மல்லையா உலகின் பிரபலமான மது பிராண்டுகளை வாங்கி வருகிறார். அமெரிக்காவின் மோட்டாரோலா செல்போன் நிறுவனத்தை இந்தியாவின் வீடியோகான் வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பணம். அதுதான் அனைத்தையும் முடிவு செய்கிறது. அது இருந்தால் யாரும் எந்த நிறுவனத்தையும் வாங்கலாம். எந்த நாட்டிலும் நிறுவனத்தைத் தொடங்கலாம். இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக முதலீடு கிடைக்கிறது. வேலை வாய்ப்பு உருவாகும் என அதை வரவேற்கிறோம். ஆனால் சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் மட்டும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது.
காவிரி பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே இவ்வளவு பகையுணர்வு தேவையில்லை. இரண்டு மாநிலங்களுமே இந்தியாவின் அங்கங்கள். இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது ஒரு கையில் அரிவாளை எடுத்து, மறு கையை வெட்டுவது போன்றதுதான்.
எங்கேயோ எத்தியோப்பியாவில் பஞ்சம் என்றால் கண்ணீர் வடிக்கிறோம். பரிதவிக்கிறோம். இங்கே பக்கத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டால், அதற்காக புதிதாக ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கிறது ஒரு கோஷ்டி. இது என்ன நியாயம்?
இரு தரப்பிலும் பஸ் போக்குவரத்துக்கு தடை, தியேட்டர்கள், உணவகங்களில் ரகளை. இங்கேயும் கலைத் துறையினர் உண்ணாவிரதப் போராட்டம். அங்கேயும் இதே போல் போராட்டம். எல்லாம் சரி.. இதில் யாருக்கு லாபம்? யாருக்கும் இல்லை.
நஷ்டம்தான் இரு தரப்புக்கும். தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட முடியாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் தமிழ் பட உலகுக்கு. அதே போல், பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூ, மெகா பட்ஜெட், சூப்பர் மசாலா என அனைத்தும் கொண்ட புதிய தமிழ் படங்களை பார்க்க முடியாததால், டப் செய்ய முடியாததால், திரையிட முடியாததால் அவர்களுக்கும் சில கோடி நஷ்டம்.
நாடுகளே ஒற்றுமையாய் நதி நீரைப் பிரித்துக் கொள்கின்றன. ஒன்று சேர்ந்து வன வளத்தைப் பாதுகாக்கின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க கரம் கோர்க்கின்றன. ஆனால் இந்தியாவில் குடிநீர் பிரச்னையில் இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன.
மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, நியாயம் சொல்லி பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் பொதுதானே. இது இப்படித்தான் என அடித்துச் சொல்லி, பிரச்னையை தீர்க்க வேண்டியது மத்திய அரசுதான். அதற்கு வலுவான அரசு தேவை. அண்ணன், தம்பிகள் அடித்துக் கொண்டால், அப்பா தானே தீர்த்து வைப்பார்.
அதுபோல் மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, அறிவுரை சொல்லியும், அடித்தும் திருத்த வேண்டியது மத்திய அரசுதான். வெளிநாடுகளில் இருந்து தாக்குதல் அபாயம் ஏற்பட்டால் மட்டும்தான் மார்தட்ட வேண்டும் என்பதில்லை. உள்நாட்டிலேயே ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் போது, சட்டத்தின் துணையோடு, இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
ஒரு நாள் நள்ளிரவில் அப்போதிருந்த அனைத்து பெரிய வங்கிகளும் இரவோடு இரவாக தேசிய மயமாக்கப்பட்டன. அதே போல் ஒரு நாள் நதிகளும் தேசிய மயமாக்கப்படும். அப்போதுதான் காவிரி பிரச்னை போன்ற நதி நீர்ப் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். அந்த நாளும் வரும். அது வரைக்கும் காத்திருப்போம்.

http://www.dinakaran.com/daily/2008/apr/13/jannal.asp

StumbleUpon.com Read more...

விஷம் சாப்பிட்ட முகமது மரித்தும்போனார்.

ஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த தயாரா? விஷம் சாப்பிட்ட நபி மரித்தும்போனார். (http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html) The Challenge of Mark 16 மாற்கு 16ன் சவால் Sam Shamoun அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.
Quote:
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18 ) இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள். இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:
Quote:
அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12) இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, "எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )
Quote:
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20) அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:
Quote:
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)
Quote:
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)
Quote:
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)
Quote:
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9) இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. "பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:
Quote:
கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4) அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13) நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார் கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!
Quote:
-------------------------------------------------------------------------------- பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175 ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (அல்-புகாரி) --------------------------------------------------------------------------------
Quote:
-------------------------------------------------------------------------------- பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268 ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள். (இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது. (அல்-புகாரி) --------------------------------------------------------------------------------
Quote:
-------------------------------------------------------------------------------- பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763 ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள் ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி) --------------------------------------------------------------------------------
Quote:
-------------------------------------------------------------------------------- பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும். பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி) --------------------------------------------------------------------------------விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது
Quote:
-------------------------------------------------------------------------------- பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617 அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி) --------------------------------------------------------------------------------இபின் சௌத் தொகுத்த சரிதை " the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:" லிருந்து
Quote:
ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: "நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்"மற்றும்
Quote:
அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : "நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள். அல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )
Quote:
அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும். தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம். இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும். மூலகட்டுரை: http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm -------------------------------------------------------------------------------- டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு: 1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும் 2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது 3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்) மேலும் படிப்பதற்கு: 4. Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 1 5. Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 2 6. More on Muhammad and Poison:(Examining Abdullah Smith's War on Islam As Well as His Continuous Intellectual Suicide Mission) Source: http://isakoran.blogspot.com/2008/04/blog-post_11.html

StumbleUpon.com Read more...

தினமலர் பத்திரிக்கையின் ஆதிக்க வெறி

"டிக்' அதிகாரி விடுப்பில் சென்றார்: அரசு அலுவலகத்தில் அழகருக்கு தடைநீங்கியது

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையத்தில்"டிக்' கள்ளழகருக்கு மண்டகப்படி வைக்க மறுத்த அதிகாரி விடுப்பில் சென்றதால் வழக்கம்போல இந்த ஆண்டும் மண்டகப்படி நடைபெற உள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகி ஒவ்வொரு சமுதாய, அரசு அலுவலகங்கள், மாவட்ட உயரதிகாரிகளின் இல்லங்கள் என பல இடங்களில் தங்கிச் செல்வார். மதுரை அழகர்கோயில் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகேயுள்ள மாவட்ட தொழில் மையத்திலும் "மண்டகப்படியாகி' தங்கிச் செல்வது வழக்கம். அன்னதானமும் நடைபெறும். இங்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள், மாறுதல் பெற்ற அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தொகை வசூலித்து இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுமேலாளர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, "அரசு அலுவலகத்திற்குள் பூஜை, அன்னதானம் நடத்தக் கூடாது. வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்' என்று எதிர்ப்பு தெரிவித்தார்.(சரியாகத்தான் செய்து இருக்கிறார். இதேபோல் மதுரை புதூரில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடத்தும் போது அரசாங்க இடத்தை கேட்டால் கொடுப்பார்களா?) இதனால் அதிகாரிகள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். "28 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கத்துக்கு இந்த ஆண்டு தடைவிதிக்கப்படுகிறதே' என மனம் புழுங்கினர். மண்டகப்படிக்காக செலுத்த வேண்டிய ரூ. 6 ஆயிரம் செலுத்தி இந்த ஆண்டு நடத்தாவிடில், வரும்ஆண்டுகளில் மண்டகப்படிக்கு புதிதாக அனுமதி பெற ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டும், வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் என்பதால் ஊழியர்களிடையே சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து கலெக்டர் ஜவஹரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி வைரமணியிடம் கேட்டபோது, "முன்னாள் அதிகாரிகள் சிலர் இங்கு மாற்றலாகி வர முயற்சித்து பிரச்னையை பெரிதாக்குகின்றனர். இந்நிகழ்ச்சி அரசு அலுவலக செலவில் நடைபெறுவதில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்கள், அலுவலர்கள் வசூல் செய்து நடத்துவதால் வெளியே வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளேன். இதுகுறித்து கலெக்டரிடமும் விளக்கம் தெரிவித்து விட்டேன்' என்றார். இந்நிலையில் பொதுமேலாளர் வைரமணியை விடுப்பில் செல்லும்படி சென்னையில் உள்ள இயக்குனரகம் உத்தரவிட்டதால், அவர் 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். தற்போது பொதுமேலாளராக ராமநாதபுரம் மாவட்ட பொதுமேலாளர் அரங்கண்ணல் கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு தடையின்றி கள்ளழகர் அங்கு தங்கிச் செல்ல உள்ளார். காலங்காலமாக நடந்து வரும் பொதுவான கலாச்சார நிகழ்ச்சி அதிகாரியால் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியதே. (தினமலர் தனக்கு பிடிக்காத எந்த அதிகாரியும் விட்டுவைக்காது, சமீபத்திய உதாரணம் காமராஜர் பல்கலைக்கழக துனைவேந்தர் திரு.மருதமுத்து)

நன்றி: தினமலர்

முதலில் எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருந்தும் கடவுள் என்று சொல்லப்படுகிறன்றவர்களின் படங்கள் அகற்றப்படவேண்டும். மேலும் பண்டிகையை சாக்காகவைத்து பணம் வசூலித்து கொண்டுவதை தவிர்க்க வேண்டும், அதிலும் குறிப்பாக இந்த ஆயுபூஜையை சாக்க வைத்து இவர்கள் எல்லாரிடமும் பணம் வசூலித்து அதை [b]டாஸ்மார்கில் கொடுக்கும் இவர்கள் எல்லாம் பக்தர்களா? கொடுமை!!! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை சொன்னால் மட்டும் போதாது செயலிலும் காண்பிக்க வேண்டும்


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13589#13589

StumbleUpon.com Read more...

தர்மபுரியில் விஜயகாந்த் பேச்சு ஒகேனக்கல் திட்டத்துக்காக தேமுதிக தொடர்ந்து போராடும்

தர்மபுரி, ஏப். 11: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரியில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. உடனடியாக மத்திய-மாநில அரசுகள் கலந்தாலோசித்து, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஜூன் மாதம் வரை பொறுத்திருப்போம், அதன் பிறகும் இத்திட்டம் தொடங்கப்படவில்லையெனில் தேமுதிக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

குழந்தை பெற்றெடுத்தார் இரண்டரை அடி உயர பெண்


குழந்தை பெற்றெடுத்தார் இரண்டரை அடி உயர பெண்


போலியோ பாதிக்கப்பட்டவர் கணவர்


போபால், ஏப்.11: இரண்டரை அடி உயரமுள்ள பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர். இதனால், அவரால் நடந்து செல்ல முடியாது. தவழ்ந்துதான் செல்வார். அவரது மனைவி மீனா (18), உயரம் குறைவானவர். அவரது உயரமே இரண்டரை அடிதான். கணவன், மனைவி இருவராலும் வேலைக்கு போக முடியாது என்பதால், அவர்கள் மீனாவின் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்கள். மீனாவின் பெற்றோர் கூலி வேலை செய்து மகளையும், மருமகனையும் காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மீனா கர்ப்பம் அடைந்தார். மிகவும் குள்ளமான பெண் என்பதால், அவருக்கு பிரசவம் பார்க்க உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மறுத்துவிட்டனர். இதனால், சிந்த்வாராவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மீனா சென்றார். ஒவ்வொரு மாதமும் டாக்டர்கள் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.
கர்ப்பபையில் குழந்தை வளர வளர மீனாவுக்கு இனம்புரியாத பயமும் அதிகரித்தது. தனக்கு பிறக்கும் குழந்தையும் தன்னைப் போல உயரம் குறைவானதாக இருக்குமோ என்று மீனா பயந்தார். ஆனால், அவரது கர்ப்பபையில் வளரும் குழந்தையின் உயரம், சாதாரண குழந்தையின் உயரத்தை போலவே இருப்பதாக ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினர். 6 மாதத்துக்கு மேல், கருவில் இருந்த குழந்தையை சுமக்க மீனா சிரமப்பட்டார்.
ஏப்ரல் மாத இறுதியில் மீனாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மருத்துவ சோதனைக்காக மீனா சிந்த்வாரா அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, கருவில் இருந்த குழந்தையின் எடை 2 கிலோவை தாண்டியதை டாக்டர்கள் கண்டறிந்தனர். பிரசவத்துக்கு இன்னும் 3 வாரங்கள் இருக்கும் நிலையில் அதுவரை குழந்தையை தாங்கக் கூடிய நிலையில் மீனாவின் உடல்நிலை நிலை இல்லை. இதனால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர். இதன்படி, சிசேரியன் அறுவை சிகிச்சையில் மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். அந்த குழந்தைக்கு மீனா தாய் பால் ஊட்டுகிறார். இன்னும் சில நாட்களில் மீனாவும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இரண்டரை அடி உயரம் உள்ள குள்ளமான பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது சிந்த்வாரா மருத்துவமனையில் இதுதான் முதல் முறை.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்


உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு


27% இடஒதுக்கீடு செல்லும்


புதுடெல்லி, ஏப்.11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தவர்களுக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து, இந்த கல்வியாண்டிலேயே 27 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் உதவி பெறும் எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Ôஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும். 1931ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வதை ஏற்க முடியாது. இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கக் கூடாதுÕ என்று அவர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த சட்டத்துக்கு 2007 மார்ச் 29ல் இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
5 நீதிபதிகள் பெஞ்ச்: இந்தவழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னையின் முக்கியத்துவம் கருதி வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கூர், ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பெற்றனர். ஓராண்டாக விசாரணை நடந்தது. இந்த பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
? பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு வந்த சட்டம் செல்லும். இது அரசியல் சட்டத்தின் அடிப்படையை மீறியதாக இல்லை.
? சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சரிதான்.
? தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பிற கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிப்பதை பரிசீலிக்கலாம் என்று 4 நீதிபதிகள் கூறியுள்ளனர். இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடுவது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று நீதிபதி தல்வீர் பண்டாரி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை நீங்கிவிட்டது. 2008-09ம் கல்வியாண்டில் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், உள்ளிட்ட எல்லா கல்வி நிலையங்களிலும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்.
இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.) 15 சதவீதமும் பழங்குடியினருக்கு (எஸ்.டி.) பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இனிமேல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 49.5 சதவீத இடங்கள் இந்த இடஒதுக்கீடுகள் மூலம் நிரப்பப்படும்.
 

StumbleUpon.com Read more...

வரதட்சணை தராததால் இந்து மனைவியின் கண்களை தோண்டிய இந்து கணவன்

வரதட்சணை தராததால் மனைவியின் கண்களை தோண்டிய கணவன்

நகரி, ஏப். 12-

ஒரிசா மாநிலம் ரூர்கே லாவை அடுத்த கோபிநாத்பூரை சேர்ந்தவர் பிருந்தாவன் இவரது மனைவி துளசி.

திருமணத்தின் போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் தருவதாக துளசியின் பெற்றோர் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் 15 பவுன் நகைதான் மகளுக்கு போட முடிந்தது.

இதையறிந்ததும் பிருந் தாவன் ஆவேசமானார். "மீதி நகையை ஒரு வாரத்தில் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உன்னை உயிருடன் கொளுத்தி விடு வேன்'' என்று மிரட்டினார்.

ஆனாலும் துளசியின் பெற்றோரால் ஒரு வாரத்தில் 5 பவுன் நகை கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று பிருந்தாவன் துளசியை வரதட்சணை கேட்டு அடித்து உதைத்தார். பின்னர் துளசியை கட்டி வைத்து கத்தியால் அவரது 2 கண்களையும் தோண்டி எடுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பிருந்தாவன் தப்பி ஓடினார்.

கண்களை இழந்த துளசி தற்போது அங்குள்ள ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போனோரு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிருந்தாவனை தேடி வருகிறார்கள். வரதட் சணைக்காக கணவன், மனைவியின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

சந்தனத்தில் பட்டுப்புடவை தயாரித்த தம்பதி: 3 ஆண்டுவரை கம கமக்கும்

நகரி, ஏப். 12-

ஆந்திர மாநிலம் அனந்தா புரம் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உஷாராணி. இருவரும் பேஷன் டிசைனிங் படித்து விட்டு சொந்தமாக பட்டுப்புடவை தயாரித்து வருகிறார்கள்.

இவர்களது கற்பனையில் உருவான பட்டுப்புடவை டிசைன்களுக்கு நாடு முழு வதிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும வகையில் இருவரும் சந்தன பட்டுப் புடவை தயாரிக்க திட்ட மிட்டனர்.

இதன்படி அவர்கள் சந்தன வில்லைகளை கல் நகை போல் டிசைன் செய்து பட்டுப்புடவையில் பொருத்தினர்.

சுமார் 400 கிராம் சந்த னத்தை அந்த புடவைக்கு பயன்படுத்தினர். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த சந்தன புடவையை தர்மாவரம் பெண் கள் திரண்டு வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதுபற்றி பேஷன் டிசைனர் உஷாராணி கூறும் போது, சந்தன பட்டுப்புடவையை 7 பேர் சேர்ந்து 15 நாட்களில் தயாரித்தோம்.

இப்புடவையில் 3 ஆண்டு வரை இந்தன வாசனை வீசும்.

இதை உடுத்தும் பெண் கள் வாசனை திரவியம் பயன்படுத்த தேவை இல்லை. இந்த சந்தன வாசனையே போதும். சந்தன பட்டுப் புடவை தயாரிக்க நிறைய செலவாகிறது. இப்புடவைக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்''.

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=261147

StumbleUpon.com Read more...

அரசு மானியத்தில் ஹஜ் செய்வது குரானுக்கு எதிரானது?

ஹஜ் மானியம் வேண்டாம் பிரதமரிடம் எம்.பி.க்கள் மனு


புதுடெல்லி, ஏப். 11-
ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை துணை தலைவர் ரகுமான் கான் தலைமையில் எம்.பிக்கள் குழு ஒன்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஹஜ் சட்டத்தை மாற்றியமைக்கும் படி 5 மாநில ஹஜ் கமிட்டிகளும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இஸ்லாமியர்களின் மத கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் ஹஜ்புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் 300 கோடி ரூபாய் செலவழிக்கிறது. இதற்கு சங்பரிவார் உள்ளிட்ட ஒரு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு மதத்துக்காக அரசு பணத்தை செலவிடுவது தவறு என இந்த அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இது தொடர்பான வழக்கு ஒன்று அலகாபாத் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை ரத்து செய்யுமாறு 5 மாநில ஹஜ் கமிட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாநிலங்களவை தலைவர் ரகுமான் தலைமையில் எம்.பி.க்கள் குழு ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஹஜ் மானியத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஹஜ்மானியத்துக்கு மாற்றாக வேறு வழிமுறைகள் ஆராய்வதற்காக மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்துள்ளார். இந்தக் கமிட்டியின் அறிக்கை கிடைத்தவுடன் ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.
ஹஜ் மானியம் ரத்து குறித்து டெல்லி ஜமா மஸ்ஜித் இமாம் அகமது புகாரி கூறுகையில், Ôஹஜ் யாத்திரை செல்வதற்குரிய வசதி இல்லாதவர்கள் யாத்திரை செல்லவேண்டிய அவசியம் இல்லை என குரானில் சொல்லப்பட்டுள்ளதுÕ என்றார்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP