சமீபத்திய பதிவுகள்

ஆயுதங்களுடன் மர்மப்படகு : அந்தமான் கடலில் பெரும் பீதி

>> Wednesday, September 23, 2009

 
 

 

போர்ட்பிளேர் : நிக்கோபர் தீவுகளில் அமைந்த தெசீரா தீவிற்கு அருகில் உள்ள கடல் பகுதியில், ஆயுதங்களுடன் பிடிபட்ட பைபர் கிளாஸ் படகில், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் பயன்படுத்தப் படும் எறிகுண்டுகள் இருந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர். இந்த படகு, கடந்த 11ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டாலும், பாதுகாப்பு காரணங்கள் கருதி, அந்தமான் நிக்கோபர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், படகு குறித்த தகவல்கள் அனைத்தையும் மிக ரகசியமாக வைத்திருந்தனர்.அந்தமான் குற்றவியல் புலனாய் வுத் துறை போலீஸ் கண்காணிப் பாளர் அசோக் சந்த் கூறியதாவது: தெசீரா தீவில் வசிப்பவர்கள், இந்த படகை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது, அப்படகு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எறிகுண்டுகள், வித்தியாசமானதாக உள்ளது. அதை பயன்படுத்த, ராக்கெட் லாஞ்சர்கள் தேவை. மேலும், கையெறி குண்டுகள் மற்றும் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளுக்கான காலி தோட்டாக்கள் அதில் இருந்தன. இவ்வாறு அசோக் கூறினார்.இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பைபர் படகின் தோற்றத்தை பார்க்கும் போது, அது வெளிநாட்டில் தயாரானதாக இருக்க வேண்டும். அந்தமான் நிக்கோபர் போலீசார் மற்றும் கமாண்டோக்கள் ஆகியோர், படகு உருவாக்கப்பட்ட இடம் குறித்து விசாரித்து வருகின்றனர்' என்றார். தவிரவும், தெசீரா தீவு அமைந்த கடற்பகுதி பயங்கரமான இடமாகும். இப்பகுதி மலாக்கா தீவு என்ற கடற்கொள்ளையர் நடமாட்டம் மிக்க பகுதி என்பதால், முழு விசாரணை தீவிரமாகியிருக்கிறது. கடந்த மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் பிடிக்கப்பட்ட வடகொரிய சரக்கு கப்பல், இப்பகுதியில் பெரும் பிரச்னையை எழுப்பியது. அதற்கு முன், மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் இருந்த படகை, தாய்லாந்து கடற்படை கப்பல் இப்பகுதியில் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களைக் கொண்ட படகு பிடிபட்டிருப்பது, அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அந்தக் கோணத்தில் தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

போலியாக 'அடிக்க' முடியாத பிளாஸ்டிக் நோட்டு அறிமுகம்

போலியாக 'அடிக்க' முடியாத பிளாஸ்டிக் நோட்டு அறிமுகம்
 

புதுடில்லி : பத்து ரூபாய் மதிப்பில் புதிதாக பாலிமர் (பிளாஸ் டிக்) ரக ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, பத்து ரூபாய் மதிப்பில் 100 கோடி நோட்டுக்கள் வெளியிடப்படும்.இப்போதுள்ள ரூபாய் நோட்டுக்கள், அதிகபட்சம் ஓராண்டு வரை கசங்காமல், அழுக்காகாமல் இருக்கும்; ஆனால், இந்த பாலிமர் நோட்டு, ஐந்தாண்டு வரை அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் நோட்டுக்களை போலியாக தயாரிக்க முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதை தயாரிப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சர்வதேச நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டியுள்ளன. அடுத்த மாதம் 20ம் தேதி அன்று டெண்டர் மீது முடிவெடுக்கப்படும்.இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் தான் பாலிமர் ரக நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரக நோட்டுக்களில் பாதுகாப்பு தொழில்நுட்பம் அதிகம் இருப்பதால், போலி ரூபாய் நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இது உதவும்' என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்து, நியூ கொய்னா, ருமேனியா, பெர்முடா, புருனை, வியட்நாம் நாடுகளில் பாலிமர் கரன்சி நோட்டுகள் நடைமுறையில் உள்ளன.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இராணுவத்தினருடன் நேரடி மோதல்! விடுதலை புலி போராளிகள் இருவர் வீரச்சாவு

   

ltte_logoதிருகோணமலை தம்பலகாமத்தில் கடந்த 05-09-2009 அன்று இரவு 8.15 மணிக்கு சிறீலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போது போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்source:nerudal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP