சமீபத்திய பதிவுகள்

தமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்; உலகத்திற்கான எம் செய்தி அதுவே: பா. நடேசன் பெருமிதம்

>> Thursday, January 8, 2009

 
 
ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (11.01.09) வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:
பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் சிறிலங்கா வசம் போய்விட்டது புலிகளுக்கு பின்னடைவுதானே..?
 
கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டது மட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.
 
தற்போது நடந்து  வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்...?
 
யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்
 
இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது சிறிலங்கா அரசு?
 
முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே சிறிலங்கா அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
 
பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா...?
 
வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
 
கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
 
அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம். 
 
சமீபத்தில் போரில் கொல்லப்பட்ட பெண் புலிகளின் உடைகளை உறித்தெறிந்து சிங்கள படையினர் நடத்திய பாலியல் அத்துமீறல்களை பற்றி...?
 
சிங்கள அரச படையினரின் மனிதாபிமானமற்ற இத்தகைய செயற்பாடானது சிங்கள அரசின் பேரினவாத சிந்தனைக் கோட்பாட்டின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளை பார்த்தபின்னராவது அனைத்துலக சமூகம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்த உரிமைப் போராட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும்.
 
புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலபரப்பில் தற்போதுள்ள நிலமை என்ன?
 
எம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகம்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நல்கி வருகின்றனர்.
 
புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி...?
 
இந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக சிங்கள இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.
 
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா
 
சிறிலங்கா ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீள நாம் கைப்பற்றுவதும் வழமை.
 
புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்ககூடியதா?

 
உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.
 
புலிகளைவிட  சிறிலங்கா அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே...?
 
இது எமக்கு மிகவும் மனவேதனையை தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ்மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 
இலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?
 
இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன. 
இலங்கை பிரச்சினையில்  இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிறீர்கள்?
 
சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
 
சிறிலங்கா அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே... இதில் இருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்து கொள்கிறார்கள்?
 
முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்குக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
 
தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?
 
தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்றார் நடேசன்.

 

http://www.puthinam.com/full.php?2b3dPXF4b43E5JEe4d46Vv9cb0bj4IR34d2L0tJ2e0dM4PrEce02k0k30cc3ne4Ade

StumbleUpon.com Read more...

குரங்கு சேட்டை என்று சொல்லுவது இதைதானோ?

StumbleUpon.com Read more...

3 வினாடிகளில் சிகப்பு அட்டை பெற்று பிரேட் உலக சாதனை

3 வினாடிகளில் சிகப்பு அட்டை பெற்று பிரேட் உலக சாதனை
இங்கிலாந்து கழக கால்பந்து வீரரான டேவிட் பிரேட் குறைந்த நேரத்துக்குள் சிகப்பு அட்டை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் இரண்டாம் தர கழகமான சிப்பின்ஹாம் டௌன் அணிக்காக விளையாடிவரும் பிரேட் , பெஷ்லி அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை களமிறங்கினார். எனினும் அவரால் 3 வினாடிகள் மாத்திரமே களத்தில் இருக்க முடிந்தது. போட்டி ஆரம்பமான மூன்றாவது வினாடியில் பிரேட்டுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதன்போது அவர் எதிரணி வீரராக கிறிஸ் நோலை தடுக்கி விழச் செய்ததற்காகவே சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதன்படி பிரதான கால்பந்து போட்டி ஒன்றில் குறைந்த நேரத்தில் சிகப்பு அட்டை பெற்ற வீரராக டேவிட் பிரேட் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 1990ஆம் ஆண்டு நடந்த இத்தாலி லீக் போட்டியில் குயிசப்பே லொரன்சோ 10 ஆவது வினாடியில் சிகப்பு அட்டை பெற்றதே சாதனையாக இருந்தது.

 

 

StumbleUpon.com Read more...

அவுஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து முதலிடம்

அவுஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து முதலிடம்
lankasri.com தென்னாபிரிக்காவுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டிறி 103 ஓட்டங்களõல் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

எனினும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 12 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்ததனால் அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் 126 ஆக குறைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி 121 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இதன்படி அவுஸ்திரேலியாவை விடவும் தென்னாபிரிக்க அணிக்கு 5 புள்ளிகள் மாத்திரமே குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு இன்னும் அகுதிகமாகவே காணப்படுகிறது. அவுஸ்திரேலியதென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர் தென்னாபிரிக்காவின் ஜொஹன்னர்ஸ்பர்க்கில் வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் தென்னாபிரிக்க வெற்றிபெற்றால் அது முதலிடத்துக்கு முன்னேறிவிடும்.

அதேபோன்று பங்களேதேஷûடனான டெஸ்ட் தொடரில் 20 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை அணி ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் மேலதிகமாக ஒருபுள்ளியுடன் மொத்தமாக109 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

இன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்...

கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது.

விரைவில், முல்லைத்தீவும் வீழலாம்.

ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர்.

இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை. ஆனால், வெளிநாட்டுத் தமிழர்களில் அடுத்த பகுதியினர் மிகப் பெரும் பகுதியினர் ஒரு பக்கம் திகைப்பிலும், கவலையிலும், மறுக்கம் புலிகள் ஏதாவது செய்தே ஆவார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கின்றோம்.

அப்படியான எமக்காகவே நான் இங்கே எழுதுகின்றேன். ஊர் ஊராகச் சிங்களப் படைகள் பிடித்துச் செல்வதைப் பார்த்து வரும் தோல்விக் கவலைகளும் அவ்வப்போது இறந்து கிடக்கும் சிங்கள படையினரின் படங்களை இணையத்தில் பார்த்து வரும் வெற்றிக் கனவுகளும் கலைந்து நாங்கள் எழ வேண்டும். உண்மையை உணர வேண்டும். அப்போது தான் சரியாகச் சிந்திக்கவும், முறையாகச் செயற்படவும் முடியும்.

கடந்த காலங்களில் வன்னியில் இருப்போர்கள் நிறையக் கதைத்தார்கள் என்பது உண்மை தான். மேடைப் பேச்சுக்களிலும், ஊடகப் பேட்டிகளிலும் மட்டுமன்றி, தனிப்பட்ட சந்திப்புக்களிலும் கூட அதீத நம்பிக்கைகளைக் கொடுக்கும் வீரக் கதைகள் சொன்னார்கள் என்பதும் உண்மை தான். ஆனால் இப்போது அவர்கள் சொல்லியபடி இன்னும் எதுவும் நடக்கவில்லை என்பதும் உண்மைதான். வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொரு நாளும் 'தமிழ்நெற்"றையும், 'புதின"த்தையும் தட்டிப் பார்த்துக்கொண்டு எதிர்பார்ப்புக்களோடு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் எதிர்பார்த்திருந்தபடி இன்னும் எதுவும் நடந்து விடவில்லை என்பதற்காக, இப்போது புலிகள் தமது அதிசிறப்புப் படையணிகளை இன்னும் சண்டைகளில் ஈடுபடுத்தவில்லை என்றும், ஏதோ தந்திரோபாயமாகப் பின்வாங்குகின்றார்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆட்கள் கொண்ட பெரும் படைகளை வைத்திருக்கின்றார்கள் என்றும், எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு நல்ல சகுனம் பார்த்துப் பாயப் போகின்றார்கள் என்றும் என்னைச் சாந்தப்படுத்துவதற்காக நிiனைத்துக்கொள்ளவும், உங்களைச் சாந்தப்படுத்துவதற்காக எழுதிவிடவும் நான் விரும்பவில்லை.

போதாக் குறைக்கு பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் எழுதும் நமது ஆய்வாளர்கள் வேறு தம் பங்குக்கு புலிகள் அங்கே அப்படித் தாக்கப் போகின்றார்கள், இங்கே இப்படிப் பாயப் போகின்றார்கள் என்று ஏதேதோ எழுதித் தள்ளுகி;றார்கள். புலிகள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகின்றார்களோ, அப்படியாகவே புலிகள் செய்யப் போகின்றார்கள் என்றவாறாக எழுதுகின்றார்கள்.

அவர்களில் சிலர் ஏதோ களமுனைத் தளபதிகளே இவர்களுக்கு அருகில் உட்கார்ந்து தங்களுடைய திட்டங்களை விளங்கப்படுத்தியது போல, கிளிநொச்சி விடுபட்டுப் போனதற்கு வியாக்கியானங்களும், புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய விவரணங்களும் எழுதுகின்றார்கள். இன்னொரு பக்கத்தில் ஒருபுறம் கோசம் எழுப்பும் வீரக் கவிதைகளையும், மறுபுறம் எம் அவலங்களைச் சொல்லும் ஒப்பாரிப் பாடல்களையும் எம் கவிகள் இன்னும் வரைந்து தள்ளுகின்றார்கள். உண்மை என்னவெனில் இவை எதுவுமே எமக்கு உதவாது.

இந்த மாதிரியான கனவில் மிதக்க வைக்கும் போரியல் ஆய்வுகளும், வீராவேசக் கவிதை ஜாலங்களும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒரு மாயைக்குள் இருக்கவே உதவுமே அல்லாமல், எங்களுக்கு உண்மையை உணர்த்தாது, போராட்டத்திற்கு நன்மைகள் எதனையும் செய்யாது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கத்தான் வேண்டும். அது எங்களிடம் உண்டு. ஆனால், அந்த நம்பிக்கையே அதீத நம்பிக்கையாகி, அதுவே பின்னர் ஒரு மாயை போல எங்கள் எல்லோரையும் மூழ்கடித்து விடும் அளவுக்குப் போக விடக்கூடாது. இப்போது எமக்குத் தேவையானது நிதானமான பதற்றப்படாத அறிவியல் பூர்வமான, ஒரு விஞ்ஞானச் சிந்தனை.

உண்மை இதுதான்:

ஒரு மிகப் பெரிய சர்வதேசச் சதி ஆட்டத்திற்குள் நாம் சிக்குண்டிருக்கின்றோம். சில வருடங்களுக்கு முன்னால் மேற்குலகம் தலைமை தாங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முக்கிய பங்காளியாக இருந்தது. இப்போது இந்தியாவே தலைமை தாங்கும் இந்த ஆட்டத்திற்கு உலகமே ஒத்தாசைகள் செய்கின்றது.

வன்னியில் நடக்கும் போர் இந்த ஒட்டுமொத்தமான பெரும் ஆட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. மிகுதிப் பெரும் பகுதி உண்மையில் எங்களைச் சுற்றியும், எங்கள் மனங்களுக்கு உள்ளேயும் நிகழ்த்தப்படுகின்றது. இந்த ஆட்டத்தின் நோக்கப்-பரிமாணங்கள் நாம் உணர்ந்து வைத்திருப்பதை விட ஆழமானவை, நாம் தெரிந்து வைத்திருப்பதை விட விரிவானவை. அந்த நோக்கங்களின் ஆழத்தையும், விரிவையும் விளங்கிக் கொள்ள நாம் முயல வேண்டும். எங்களைச் சுற்றியும், எங்களுக்கு உள்ளேயும் நடக்கும் இந்தப் பெரும் ஆட்டத்தில் வெல்லுவதற்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் வன்னிப் போரில் புலிகள் மொத்தமாக வாகை சூடும் போது, எல்லாம் தாமாகவே கைகூடி வரும் என்ற கனவில், சில்லறை வேலைகள் பார்த்துக்கொண்டு நாங்கள் காவல் இருக்கின்றோம். மாயையிலும், அதீத நம்பிக்கையிலும் மூழ்கிப் போய் இருக்காமல், உண்மையை உணர்ந்து கொண்டு யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு தலைவர் பிரபாகரனும் அவரது போராளிகளும் இந்தப் போரிலே வெல்லுவதற்கும், இன்றைய நிலையிலிருந்து நாம் எல்லோருமே மீண்டு வெளியில் வருவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வன்னிப் போரின் உண்மை நிலை இதுதான்:

புலிகள் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போரிடுகின்றார்கள். தமது சக்திக்கும் மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள். தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும், எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் கடந்து சிறிலங்காவின் படைகளை முன்னேற வைக்கின்றது இந்த உலகம் என்பது தான் உண்மை.

கிளிநொச்சி வீழும் வரையிலும், முல்லைத்தீவும், ஆனையிறவும் முற்றுகைக்கு உள்ளாகும் வரையிலும், வன்னியின் வட கிழக்கு மூலைக்குள்ளே முடக்கப்படும் வரையிலும், தனது அதிசிறப்புப் படையணிகளைப் பின்னாலே வைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன் என்பதை நம்புவது எனக்குக் கடினமானது. உலகமே பின்னாலே திரண்டு முன்னாலே தள்ள, முன்னேறி வருகின்ற சிறிலங்காவின் படைகளைத் தடுத்து நிறுத்த முடியாது போன பொறுப்பை புலிகளின் தலையில் கட்டிவிட்டு, நாம் சும்மா கவலைப்பட்டுக்கொண்டும், மீதி நேரத்திற்குத் துக்கம் விசாரித்துக்கொண்டும் இருக்க முடியாது.

அங்கே முன்னேறிச் செல்கின்ற படைகளைத் தடுக்க, இங்கே உரியதைச் செய்யாமல் விட்டுவிட்ட அது நடப்பதற்கு இன்னொரு வகையில் அனுமதித்த வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். அங்கே நடப்பதைத் தடுப்பதற்கு நாங்கள் செய்திருக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பில் கால்வாசியைத் தன்னும் நாம் செய்துவிடவில்லை. நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை என்பது நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க விடாமல் நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய விடாமல் யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ளவிடாமல், எம்மை ஒரு மாயைக்குள் கட்டி வைத்துவிடும் அளவுக்கு அதீத நம்பிக்கை ஆகிவிடக் கூடாது. எமது விடயத்தில் அது தான் நடந்து விட்டது.

ஒரே இரவில் பெரும் இராணுவ வெற்றியைச் சாதித்து, முழு உலகத்தையும் தமிழருக்கு சார்பாக மாற்றி, தமிழீழத்தை வென்றெடுப்பார்கள் புலிகள் என்று விட்டுவிட்டு, வெறும் மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நாங்கள் காலத்தை ஓட்டிவிட்டோம். ஆனால் இன்னும் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. தலைவர் பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் போர் வீரர்களும் தம்மையே திகைப்பில் ஆழ்;த்தும் இராணுவக் கோலாகலங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர்கள். ஆனால் அதனை அவர்கள் எங்கே நிகழ்த்துவார்கள், எப்படி நிகழ்த்துவார்கள், நிகழ்த்தியே தீருவார்களா என்பதெல்லாம் எம் யாருக்கும் தெரியவே தெரியாத விடயங்கள். தங்களுக்கான கடமையை அவர்கள் தமது வல்லமைக்கு மேலாகவே செய்கின்றார்கள். எங்களுக்கான கடமையை நாம் எந்த அளவிற்குச் செய்கின்றோம்?

ஒரு புறத்தில் அக்கறையும், நம்பிக்கையும் துணிவும் இருக்கும் வரை யாரும் தோற்றுப் போனவர்கள் அல்ல. பலவீனமானவர்களும் அல்ல. அவற்றை இழக்காதவரை யாரும் எதையும் இழந்தவர்களும் அல்ல. ஏனெனில் அவை தான் நாம் இழந்தவற்றையும், அதற்கு அதிகமாகவும் மீளப் பெறுவதற்கு எம்மிடமிருக்கும் ஆகக் கடைசி ஆயுதங்கள். மறுபுறத்தில் அக்கறையின்மையும், விரக்தியும் சலிப்பும் நேரெதிரானவை. அவை வந்துவிட்டால் நாம் வென்றிருந்தாலும் தோற்றவர்கள், பலமாய் இருந்தாலும் பலவீனமானவர்கள். ஏனெனில், அவை தான் எம்மை வீழ்த்தும் முதல் ஆயுதங்கள். எம்மிடம் இருப்பவற்றையும் இழக்க வைத்துவிடுவன அவை. அதே நேரம் அதீத நம்பிக்கையில் உயர் உற்சாகம் பெறுவதும், மிகுந்த மன விரக்தியில் சலிப்புறுவதும், சில வேளைகளில் ஒரே விளைவினைக் கொடுக்கக்கூடியவையே.

உயர் உற்சாகம் எம் கண்களை மறைப்பதற்கும், விரக்தி எம்மைச் சோர்வடைய வைப்பதற்கும் நடுவிலுள்ள மெல்லிய இடைவெளியில் நாங்கள் சிந்தனையை ஓட்ட வேண்டும். அப்போது தான் நிதானமாக யோசித்து நாம் செயலாற்ற முடியும். சும்மா செய்திகளைப் படித்துவிட்டு நடந்து முடிந்தவற்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ, அல்லது நடக்கப்போகின்றவை பற்;றிய கற்பனைகளில் மிதக்கவோ எமக்கு இப்போது நேரமேயில்லை. வெளிநாட்டுத் தமிழ் செயற்பாடுகளில் இதுவரை நாம் என்ன செய்தோம் என்பதை மீள நோக்கி, எங்கெல்லாம் தவறிழைத்தோம் என்பதைக் கண்டறிந்து, இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்த உலகம் என்னவிதமான ஒரு கபட ஆட்டத்தை எம்மைச் சுற்றி ஆடுகின்றது என்பதை அவதானித்து, எவ்வகையான பசப்பு வார்த்தைகள் பேசி எம்மை மயக்குகின்றது என்பதை உணர்ந்து, எவ்வாறு இந்த ஜால வலையில் நாம் சிக்கிக்கொண்டோம் என்பதை விளங்கிக்கொண்டு இந்தப் பெரும் சர்வதேச ஆட்டத்தை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அது தான் உருப்படியான வழிமுறை. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அனைத்துலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கான எல்லா வழிகளையும் கண்டறிவதும், அவற்றைக் கண்டறிந்து அவற்றினூடாக அதனை எல்லா முறைகளிலும் முன்னெடுப்பதும்,

அதனை முன்னெடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை எல்லா மட்டங்களிலும் பெறுவதும், அங்கீகாரத்தைப் பெற்று முடிவாகத் தமிழீழத் தனியரசை வென்றெடுப்பதும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய எம் கைகளிலேயே உண்டு.

நாம் செயற்பட வேண்டும், உடனடியாக.

தி.வழுதி

ஒரு கடிதம்: போர் முனை (நன்றி தமி்ழ்நாதம்)
தகவல் : basel murali
08 Jan 2009 USA
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

Child Brides in Nigeria -நைஜீரியாவின் குழந்தை திருமணம்

Child Brides in Nigeria
Nigeria is comprised of thirty-six states, with Muslims dominating the north and Christians more numerous in the south. The government is attempting to impose a minimum age for marriage (girls won't be allowed to marry until they're 18). Guess which states are resisting, and guess whose example they're following.

StumbleUpon.com Read more...

Ex-Hindu Brahman Testimony-முன்னால் பிராமணரின் சாட்சி







StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP