சமீபத்திய பதிவுகள்

கொழும்பு கொண்டுசெல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள் பலர் இரகசியமாகப் படுகொலை?: இணையத்தளம் தகவல்

>> Monday, August 3, 2009

 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக 'சிறிலங்கா கார்டியன்' என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அரச வட்டாரங்களில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி தென்பகுதியில் உள்ள சிறைச்சாலைககளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இவர்கள், அங்கு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக இந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 வரையிலான முக்கிய உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசின் 'கொலைக் குழு' ஒன்றினால் கொன்று அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டிருப்பதாகவும் 'சிறிலங்கா கார்டியன்' தனது செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார் (முன்னாள் ஈரோஸ் தலைவர்), யோகரட்ணம் யோகி, கரிகாலன், புலவர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிலர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் இருந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக என இவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையிட்டோ அரசு தொடர்ந்தும் மெளனமாகவே இருந்துவருகின்றது. தயா மாஸ்டர் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பாக மட்டுமே அரசு தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மற்றொருவர், இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவோ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவுக்குக்கூட அரசு தகவல் தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவர் வீடுகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தீ வைத்தனர்,ஒரு குழந்தை 4 பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி சாவு

 
 


லாகூர், ஆக.3-

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோஜ்ரா நகரில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் ஒருவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை அவமதித்து விட்டதாக வதந்தி வெளியானது. இதைதொடர்ந்து அந்த நகரில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தீ வைத்தனர். இதில் ஒரு குழந்தையும் 4 பெண்களும் உள்பட 6 பேர் பலியானார்கள். வீடுகளின் கூரைகளில் நின்றபடி மக்கள் ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதை டி.வி. காட்சிகளில் பார்க்க முடிந்தது. வீடுகள் தீ பற்றி எரிவதையும் டி.வி.யில் காட்சிகளாக பார்க்க முடிந்தது.

வன்முறைக்கு காரணமான வதந்தி பொய்யானது என்று சிறுபான்மை இன மக்களுக்கான மந்திரி ஷபாஸ் பட்டி தெரிவித்தார். மந்திரி கோஜ்ரா நகருக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்தார். அவர் போலீசார் கலவரத்தை ஒடுக்குவதில் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.
 

StumbleUpon.com Read more...

புதிய பயிற்சியில் புலிகள், அதிரும் காடுகள்

 
 
""பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்" என்கிறார் அந்த ஈழத்தமிழர். கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியேறி, வன்னிக்காடுகள் வரை சென்று திரும்பியுள்ள அவர், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார்.

""தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுகூட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றித் தெரியாது. அந்தளவுக்கு முடக்கப்பட்டிருக்கிறார்கள். நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும். கொழும்பிலிருந்து புறப்பட்டால் செட்டிகுளம் தொடங்கி, வவுனியா வரைக்கும் முகாம்கள்தான்.

இதில் செட்டிகுளம் கதிர்காமர் முகாம் மட்டும்தான் சுத்தமாகவும் வசதியாகவும் இருக்கு. அதைத்தான் ஐ.நா. அதிகாரிகளுக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் காட்டி ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

 

எப்படியாவது சொந்த இடத்துக்குப் போகணும்ங்கிறது தான் முகாம்களில் இருக்கிற மக்களோட விருப்பம். சாப்பாடு, தண்ணீர், துணிமணி எதுவும் கிடைக்கிறதில்லை. நீர்கொழும்பு பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதி யிலிருந்து வந்த தமிழக மீனவர்கள் அதிகம். அவங்க நடத்தி வந்த 50 தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மூடியாச்சு. குடப்பாடுல உள்ள விஜயரத்னா பள்ளிக்கூடத்துல சிங்களம் படிக்க ஆரம்பிச் சிட்டாங்க. தமிழர்கள் பேசிக்கொள்ளும்போதும் சிங்களத்தில தான் பேச வேண்டிய நிலைமை. ராணுவத்துக்கிட்டேயிருந்து தப்பிக்கணுமே…

ஆமிக்காரங்களோ விசாரணைங்கிற பேரில் இளசுகளைப் பிடிச்சிட்டுப் போறாங்க. உறவினர்களைப் பார்க்க ணும்னு நான் முகாம்களுக்குப் போனப்பவும் இதே நிலைமைதான். இரண்டு நாள் கழிச்சி அந்த இளை ஞர்கள் காட்டுப்பகுதியில் கை, கால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாங்க. அதே நேரத்தில், வவுனியா காட்டுப் பகுதிக்குப் போயிட்டுத் திரும்பும் ஆமி வாகனத்தில் 10, 15 ஆமிக்காரன் பொணமா வருவதையும் பார்த்தேன். எல்லாம் பொடியன்களின் (புலிகள்) அட்டாக்தான்.

யூலை 13-ந் தேதி, காட்டுப் பகுதியில் பொடியன்கள் இருக்காங் களான்னு கண்காணிக்கும் ஆமிக் காரங்களுக்கு 3 லோரியில் உணவுப் பொருள் போனது. இதை தெரிஞ் சுக்கிட்ட புலிகள் 10 பேர் ஜெய புரம்-முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள காட்டுப்பகுதியில் லோரி களை வழிமறிச்சு, அதிலிருந்த ஆமிக்காரங்களை கொன்னுபோட்டு , உணவுப் பொருளோடு அந்த லாரிகளை காட்டுக்குள்ளே கொண்டு போயிட்டாங்க. இந்தக் கோபத் திலேதான் முகாமில் இருந்த 40 இளைஞர்களை இழுத்துக்கிட்டுப் போயி, காட்டிலே வெட்டிப் போட் டான்கள் ஆமிக்காரன்கள்.

காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத் தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும். புலிகளின் தாக்குதல் தீவிரமானால் அப்பாவித் தமிழர்களை ராஜபக்சே அரசாங்கம் சித்திரவதை செய்யும். அதனால கொழும்பு, நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமா இடம்பெயர ஆரம்பிச்சிட்டாங்க. இதுவும் இயக்கத்தோட மறைமுக உத்தரவுதான்.

புலிகள் ஒரு பாரிய அளவிலான தாக்குதலை நடத்தப்போறாங்கன்னு ராஜபக்சே அரசாங்கத் துக்கும் தெரிந்திருக்கு. அதனாலதான் ஆமிக்கு ஆள் சேர்க்கிறார். ராணுவப் பயிற்சிக்கு இந்தியா வின் உதவியைக் கேட்டிருக்கிறார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதுங்கிற பேரில் இந்திய ராணுவத்தை அழைத்து, காட்டில் புதிய வியூகத்தோடு செயல்படும் புலிகளை அழிப்பதுதான் ராஜபக்சேவின் திட்டம். அதோடு, சொந்த மண்ணுக்கு எப்போது போவோம்ங்கிற ஏக்கத்தோடு முகாமில் இருக்கும் தமிழர்களை கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தவும் திட்டம் போடப்பட்டிருக்கு.

சொந்த மண்ணில் குடியிருக்கலாம்ங்கிற ஆசையோடு வரும் தமிழர்களை கண்ணிவெடிகளில் சிக்க வைத்து கொன்று குவிக்கும் கொடூ ரத் திட்டமும் போடப் பட்டிருக்கு.

முகாம்களில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இருக்கும் போது, 40 ஆயிரம் பேர்தான் இருக்காங்கன்னு ராஜபக்சே சொல்லி இருக்கிறார். மற்றவங்களை கண்ணி வெடியில் கொன்னுடலாம்ங்கிற கணக் கோடுதான் அவர் இப்படி சொல்கிறார். இதெல்லாம் உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கு. ராஜபக்சேவின் கொடூரத் திட்டங்களை பிரபாகரன் நொறுக்கிவிடுவார்னும் தெரியும். அதனாலதான் தன் நாட்டு மக்கள் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம்னு அமெரிக்கா எச்சரித்திருக்கு.

கண்ணி வெடி மூலமாகவும் முகாம்களில் உள்ள இளைஞர்களை கடத்திச் சென்றும் தமிழினத்தை அழிக்கும் அடுத்த திட்டத்தை ராஜபக்சே அர சாங்கம் தயார் பண்ணியிருக்கு. சிங்களன் இனி என்ன திட்டம் போட்டாலும் புலிகள் தரப் போகும் அடியைத் தாங்குவது கஷ்டம்தான். உலகத்தாரே… பார்க்கத்தான் போறீர்கள்" என்றார் அந்த தமிழர்.

கொழும்பிலிருந்து எழில்

நன்றி நக்கீரன்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP