சமீபத்திய பதிவுகள்

ஒரு தமிழ் முஸ்லிம் நண்பரின் நாத்திக பயணம்

>> Saturday, October 22, 2011

1. பாசிஸத்தை வெற்றிக் கொண்ட வீரர். -பகுதி 1

கியோர்கி டிமிட்ரொவ் பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற ஆசான். சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் இயக்கத்தின் சிறப்புமிகு செயல்வீரர். லெனினின் வார்ப்பில் உருவான புரட்சியாளர். கொடுங்கோலாட்சிக்கும், அடிமைத்தனம் அனைத்திற்கும் எதிரான போராட்ட வீரர். அவரது தனிப்பெருமை ஒரு ஒழுங்கான மனித வாழ்விற்காகவும், மனிதர்களிடையே அமைதிக்காகவும், பரஸ்பர ஒற்றுமைக்காகவும் நிகழ்த்திய போராட்டத்தோடும், விடுத்த அன்பான அறைகூவல்களோடும் இணைந்து பரிணமிப்பதாகும். இந்தக் குறிக்கோள்களின் வெற்றிக்காகவே அவரது செயல்திறனை அரை நூற்றாண்டுக் காலம் செலவிட்டார்.

            பாசிஸத்தை வெற்றிகொண்ட வீரர் – பகுதி 2

                பாசிஸத்தை வெற்றிகொண்ட வீரர் – பகுதி 3

2 . ஆரம்பத்தை நோக்கி – தொடர் 1

இசுலாம் ஒரு மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்றும், இசுலாம் ஒரு எளிய மார்க்கம் என்றும், இசுலாமியக் கொள்கைகள் மட்டுமே காலங்காலத்திற்கும் பொறுத்தமான வாழ்க்கைக்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது; கடைபிடிக்க சிறந்தது என்றும் இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து, கிறித்துவ மதங்கள் போன்று இசுலாமும் ஒரு பிற்போக்கானதே என்பதை ஒரு நீண்ட தொடர்மூலம் விரிவாக விளக்குவதே இத் தொடர்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 2

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். முகம்மதுநபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 3

வழிபாடுகளில் கவனம் தேவையா?
 முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்.  இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்த கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 4

வேதவெளிப்பாடு
சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள்,  ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக குர் ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக முஹம்மதுநபிக்கு அருளப்பட்டது. அவ்வாறு அருளப்பட்ட வசனங்களின் முழுமையான தொகுப்பு குர்ஆன்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 5

மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்
ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து புனையப்பட்ட செய்தி… (புகாரி 2661, 3388, 4141, 4750, 4757) (பெரிய ஹதீஸ்தான் வேறுவழியில்லை!)
புகாரி ஹதீஸ் -2661
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
…நபி (ஸல்)அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தெட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது.

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 6 

சில Instant வேதவெளிப்பாடுகள்
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 7

சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்
முஹம்மதுநபி தேனை மிக விரும்பி உண்பார். தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப்   அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார் (புகாரி 4912, 5267, 5268).

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 8

பொருந்தா உறவும் வேதவெளிப்பாடும்.
திருக்குர் ஆன் 33:33,59. வசனங்களுக்கான உண்மையான காரணத்தை சற்று விரிவாக காணலாம்.
 (நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ”அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,…                                                                                                              (குர்அன் 33:37)
கதீஜா அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்  அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா அவர்கள் முஹம்மது நபி அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கி,…..

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 9

 ஜைனப்பை திருமணம் செய்ததற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  எனது மறுப்புகளும் வருமாறு:-
விளக்கம் : 1
முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து …..

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 10

தோழர்களின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்
ஹிஜாப் (கோஷா- ஆண்களுக்கு முன் தோன்றாமல் திரைமறைவில் இருக்கும் நிலை)  முறை அமலக்கப்பட்ட நிகழ்சி
தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்பை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி  அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக  முஹம்மது நபி  அவர்களின் “நிலைமை” புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி  அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும்(நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 11

வன்கலவியும் வேதவெளிப்பாடும்
முஹம்மது நபியும் அவரது படையினரும் பல போர்களை சந்தித்தவர்கள். இவற்றில் ஓரிரு போர்களைத் தவிர மற்றவையெல்லாம் முஹம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான திடீர் தாக்குதல்களே. ஒவ்வொரு போரின் முடிவிலும் பெருமளவு பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் போர்கைதிகளாக கருதப்பட்டு முஸ்லீம்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகளை போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இந்த அடிமைகளுக்கு சில அடிப்படை உரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டது. சுதந்திரமான  மனிதர்களைப் போல வாழ அடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 12

இஸ்லாம் எந்தவகையான ஒழுக்கநெறிகளைப் போதிக்கிறது?
மதுவும், வட்டியும்,  பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான இச் செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?
சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?….

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 13

திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம்.  குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,





source:

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கடாஃபியின் கடைசி நிமிடங்கள்(video)

http://senkodi.files.wordpress.com/2011/10/qaddafi.jpg?w=150&h=250 புரட்சிப் படையினர் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொண்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.பி.சி அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் இவர் இறந்ததை தெரிவிக்க இழுத்தடிக்கின்ற நிலையில் சிரியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அடிப்படியில் அவர் கொல்லப்பட்டார் என்பது உறுதியாகிறது. இதேவேளை புரட்சிப் படையினருக்கு ஆதரவாக நேட்டோப் படையினர் வான் தாக்குதலை நடத்தியதோடு ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP