சமீபத்திய பதிவுகள்

இந்தியா எப்போது உருப்படும்?

>> Monday, July 27, 2009

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

எச்சரிக்கை: சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது

மொழிமாற்றம் மட்டும் அடியேனின் கைவண்ணம்!

ஜனத்தொகை 100 கோடி


10 
கோடி ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் இருக்கும் முதியவர்கள்

10 
கோடிப் பேர்கள் அரசில், அரசியலில், அல்லது அரசுத்துறையில்
(
அவர்களை வேலை வாங்குவது பெரும்பாடு)

34 
கோடிப் பேர்கள் வறுமைக் கோட்டில். அல்லது நடுத்தரக்கோட்டில்

கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் விலைவாசி அவர்கள் அழுத்திப்
பிடித்துக் கொண்டிருக்கிறது

ஒரு கோடி அறிவுஜீவிகள் .டி. துறையில்
(
அவர்கள் வேலை செய்வது வளர்ந்த நாடுகளுக்காக)

25 
கோடி பள்ளியில் அல்லது கல்லூரியில்


1 
கோடி ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள்

15 
கோடி வேலையில்லாதவர்கள், வேலை தேடுபவர்கள்

ஒரு கோடி எப்போதும் மருத்துவமனையில் அல்லது மருத்துவ மனையை நோக்கி

ஒரு கோடி சிறையில், விசாரனையில் அல்லது நீதிமன்ற வளாகங்களில்

இரண்டு கோடி ஆசாமிகள் மதுவிற்பனையில் அல்லது அது கிடைக்கும்
இடங்களில்

மீதம் இருப்பது நீங்களும் நானும்தான்!

நீங்கள் என் பதிவைப் படித்துக் கொண்டிருக்கிறீகள்
;
நான் உங்கள் பின்னூட்டத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்
.வாழ்க வளமுடன்!


StumbleUpon.com Read more...

பிரபாகரனின் வெற்றிக்கு துணை நிற்கும் மதிவதனிபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 7 ஆண்டு களுக்கும் மேலாக படுத்த படுக்கையாகக் கிடக்கும் 69 வயது முதியவரான நடராசா, ""பிரபாகரன், மதிவதனி அவங்க பெத்த பிள்ளைகளையெல்லாம் சாகடிச்சுட்டதா நாளுக்கொரு கதை விடுது சிங்கள ராணுவம். இத நெனச்சா என் ரத்தமெல்லாம் கொதிக்குது. அந்தக் குடும்பம் எப்பேர்ப்பட்ட தியாகம் பண்ணிக்கிட்டிருக்கு தெரியுமா? அவங்களுக்கெல்லாம் சாவே கிடையாது தெரியுமா?''

வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு உதடுகள் துடிக்கப் பேசுகிறார். ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுத்துறங்கி, பிரபாகரனைப் பின்னால் உட்கார வைத்து மதுரை வீதிகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த அந்தநாள் நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

""ஓவியனான எனக்கு 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானார் தம்பி. ஒரு அலுவல் விஷயமாக இலங்கையிலிருந்து சிவகாசி வரை வந்த தம்பி, அப்படியே என்னையும் சந்தித்தார்''. 1977 களில் பயணித்து 2009 வரை வந்து விட்ட அவருக்கு பேசும் போது மூச்சு வாங்கியது.

""டீ, காபி குடிப்பதையே கெட்ட பழக்கம் என்பார் தம்பி. யார் கொடுத்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் எப்படி வற்புறுத்தி னாலும் "டீயோ, காபி யோ வேண்டவே வேண்டாம்' என்று தவிர்த்து விடுவார். புகைப்பது, மது அருந் துவதென்றால் அவருக்கு ஆகவே ஆகாது. "பெண் கள் விஷயத்தில் ஒழுக் கத்தோடு இருக்க வேண் டும்' என்று தன்னைப் போலவே இயக்கத் தினரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அத்தனைக் கண்டிப்புக் காட்டுவார். நான் கூட ஒரு சமயத்தில் பேச்சுவாக்கில் "ஆண்-பெண் என்றால் ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். இயற்கைக்கு மாறாக நீங்கள் கடைப்பிடித்து வரும் கட்டுப்பாட்டில் எனக்கு உடன் பாடில்லை'' என்றேன். அதற்கு அவர் "இலங்கைத் தமிழர்களுக்காக தனி இயக்கம் கண்ட பலரும் இதுபோன்ற பலவீனங்களால், சுயநலங்களால் கொள்கை மாறிப் போனதை நான் அறிவேன். அவர்களைப் போலவே நானும் அதே தவறுகளை செய்யத் துணிந்தால் தமிழீழத்தை அடையத் துடிக்கும் என் லட்சியம் என்னாவது?' என்று என் வாயை அடைத்து விடுவார்.

பிரபாகரனை பிடிவாதக்காரர் என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. தனக்கு முரண்பாடான கருத்துக்கள் என்றாலும் அந்த நேரத்தில் மிகச் சரியென்று பட்டால் தயங்காமல் ஏற்றுக் கொள்வார். திருமண பந்தத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டதும் கூட அப்படித்தான். சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப் பாணம் பல்கலைக்கழகத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்த மாணவிகளில் ஒருவர்தான் மதிவதனி. புன்கூடு தீவு பிரதியா கேம்பஸ் விவசாயக் கல்லூரியில் "அக்ரி' படித்த அவரோடு வினோஜா, லலிதா, ஜெயா ஆகிய மாணவி களும் தொடர் உண்ணாவிரதமிருந்து சாவின் விளிம்பைத் தொட்டுவிட, அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ரகு என்பவர் அந்த நால்வரையும் பிரபாகரனிடம் அழைத்து வந்தார்.

அவர்களிடம் தகித்த தமிழீழ விடுதலை வேட்கையே இயக்கப் பணிகளில் அவர்களை ஈடுபட வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பட்டினி கிடந்து சாகவே துணிந்த பெண் போராளி மதிவதனி மீது பிரபாகரனுக்கும் மரியாதை ஏற்பட்டது. சமையலிலும் கை தேர்ந்த மதிவதனியை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. மணவாழ்க்கை காண தம்பி தயாராகி விட்டதை அறிந்த சுகுமார் என்பவர் என்னிடம், "தம்பி கல்யாணம் பண்ணிக்கப் போறது தெரியும்ல' என்று குறைபட்டுச் சொல்ல... நான் தம்பியிடம் "இந்தப் போராட்ட வாழ்க்கைல இதெல்லாம் எதுக்கு?' என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன். தம்பியோ நிதானமாக "அண்ணா... நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரல்ல. அப்படியாரும் என்னை நினைத்து விடக்கூடாது. எல்லோரையும் போல நானும் சாதாரண மனிதன்தான்' என்று யதார்த்தமாகச் சொன்னார்.

பிற்பாடுதான் மதிவதனியின் அருமை பலருக்கும் தெரிந்தது. போர்முனையிலும் கூட பிரபாகரனுக்கு எத்தனை உறுதுணையாக இருந்தாரென்று. அது என்ன வாழ்க்கை? காடுகளிலும், மலைகளிலும் அங்கும் இங்குமாக அலைந்து கடைசியில் சென்னையில்தான் சார்லஸையும், துவாரகாவையும் பெற்றார் மதிவதனி. இக்கட்டான தருணங்களில் கூட பதற்றமே இல்லாமல் இன்முகத்துடன் ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் சமா ளித்த விதம் "பிரபாகரனின் போராட்ட வாழ்க்கைக்கு எத்தனை பொருத்தமாக இருக்கிறார்!' என்று பலரையும் வியக்க வைத்தது.

ஒருமுறை, துவா ரகா பெரியவளானதை அறிந்து அவளுக்காக வெள்ளிக் கொலுசு வாங்கிக் கொண்டு சிலோன் சென்றேன். அப்போது நான் கொடுத்த கொலுசை ஆசை, ஆசையாகப் போட்டுக் கொண்டு தரையே அதிரும் விதமாக ஜல் ஜல்லென்று அவள் நடந்த காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. அப்போது தம்பியிடம், "என்ன உங்க மக இப்படி நடக்குறா?' என்று விளையாட்டாகக் கேட் டேன். மகள் நடக்கும் அழகை மனைவியோடு சேர்ந்து ரசித்த தம்பி, "எம் பொண்ணு ஸ்கூல்ல அட்வான்ஸ்ட் லெவல் முடிச் சிருக்கா. கடல்ல 15 கி.மீ. தூரம் சளைக்காம நீச்சலடிப் பாண்ணா...' என்று பூரிப் பாகச் சொன்னார்.

வாழ்க்கை முழுக்க எதிர்நீச்சலே போட்டுக் கிட்டிருக்கும் தம்பிக்கு "நீச்சலிலும் புலி'யாக மகள் இருப்பது அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தானே' என்று எண்ணிக் கொண்டேன். அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே "பூமராங்' தட்டு வீசிக்கொண்டிருந்தான் தம்பி யின் இளைய மகன் பாலச்சந்திரன். அவனுடன் சேர்ந்து விளையாட வேண்டும் போல எனக்கு ஆசை வந்தது. அவன் பக்கத்தில் சென்றேன். அப்போது அவன் பிரபாகரனிடம், "என்ன இவரு இப்படி கதைக்குறாரு' என்று கேட்டான். "மட்டக் கிளப்புல பேசுற மாதிரி பேசுறாருன்னு பார்க்குறியா? இவரு தமிழ்நாட்டுலயிருந்து வந்துருக்காரு. என்னோட நண்பர்' என்று மகனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். உடனே அவன் "தமிழ்நாடுன்னு சொல்லாதீங்கப்பா... இந்தியான்னு சொல்லுங்க...' என்றான். பிறகு அவன் என்னை நெருங்கி வந்து "ஓ... நீங்க ஜெயலலிதா ஊரா?' என்று கேட்டுவிட்டு ஓடியே போனான். அவனது அந்தப் பேச்சைக் கேட்டு நானும் பிரபாகரனும் எக்கச்சக்கமாகச் சிரித்தோம்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? விரிப்பு கூட இல்லாம கட்டாந்தரையிலதான் படுத்து தூங்குவாரு தம்பி.

என் வீட்டுக்கு வந்தாலும் அப்படித் தான். அதுக்கு அவரு சொன்ன விளக்கம் - "காட்டுல மேட்டுல திரியுறப்ப கண்ட இடத் துலயும் படுக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் சொகுச அனுபவிக்கப் பழகிட்டாலும் அப்புறம் அது இல்லாம தூக்கம் வராது. கட்டாந்தரைதான் எனக்குச் சரியா இருக்கும்' என்பார்.

இந்த உலகத்துல பிரபாகரன் மாதிரி என் உள்ளத்துல இடம்பிடிச்சது யாரும் கிடையாது. நடக்க முடியாம நான் சிரமப்படுறேன்னு தெரிஞ்சு தம்பி எனக்கு கொடுத்த கைத்தடி இது'' -அந்தத் தடியை உறுதியாகப் பற்றிக்கொண்டு பேசியபோது அவரது உடம்பும் முறுக்கிக் கொண்டது.

"இலங்கைத் தமிழர் களின் துயரம்கண்டு இந்தத் தள்ளாத வயதிலும் துடிக் கின்றீர்களே...'

நாம் கேட்ட மாத்திரத்தில் அவரிடமிருந்து தெறித்து விழுந்தது பதில்.

""1972 டூரிஸ்ட்டாதான் இலங்கைக்குப் போனேன். பிறகு 1977-லயும் சும்மா போனேன். அப்போது அங்கே தமிழ்ப் பெண்களின் மார்பகங்களை அறுத்து குச்சிகளில் கட்டித் தொங்கவிட்டு "இங்கே தமிழன் கறி மாமிசம் கிடைக்கும்' என்று எழுதி போர்டு வைத்திருந்தார்கள். ஒரு ஊரில் ஒரு தமிழ்ப் பெண்ணின் பிறப்புறுப்பில் பச்சை குத்தி சிங்கள முத்திரையைப் பதித் திருந்தார்கள். அந்தப் பெண்ணிடம் "உன்கிட்ட இனி எந்தத் தமிழ்ப் புருஷன் படுப்பான்?' என்று சிங்களக் கொடியவர்கள் கேவலப் படுத்தியிருந்ததை அந்தப் பெண் சொன் னபோது எழுந்த துடிப்புதான்... இன்னும் அடங்கவேயில்லை.

எனக்கே இந்தத் துடிப்பு என்றால், நாளும் நடக்கும் கொடுமைகளைக் கண்டு தம்பி எப்படியெல்லாம் துடித்திருப்பார்?'' அதனால்தான் ஆயுதமேந்தி இலட்சியப் போராட்டத்தை நடத்தினார்.

இலட்சியவாதியான பிரபாகரனுக்கு சாவே கிடையாது என உறுதியான குரலில் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த பிரபாகரனின் பழைய படங்களைப் பார்த்தபடியே பெருமூச்சு விட்டார் அப்பெரியவர்.

-சி.என்.இராமகிருஷ்ணன் படம் : அண்ணல்

இலங்கை ராணுவத்தின் இறுதி கட்டத் தாக்குதலின் போது இடம்பெயர்ந்த தமிழர்களை வவுனி யாவில் உள்ள "நலன் புரி முகாம்கள்' என்கிற திறந்தவெளி சிறைக் கூடங்களில் அடைத்து வைத்து டார்ச்சர் செய்து வருகிறது சிங்கள அரசு. இப்படிப்பட்ட சூழலில், மக்களோடு மக்களாகத் தங்கியிருக்கின்றனர் பிரபாகரனின் தந்தை 76 வயது திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் 71 வயதான தாய் பார்வதியும். புலிகளின் மகளிர் பிரிவு பொறுப்பாளரான கேணல் தமிழினிதான் பிரபாகரனின் பெற்றோர்களை பாதுகாத்து வந்துள்ளார். இதனை அறிந்த, ராணுவத்தினர் இலங்கை அரசுக்கு தகவல் கொடுக்க, உடனடியாக தமிழினியை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் சரத்பொன் சேகா. அதன்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் தமிழினி. மேலும், பிரபாகரனின் பெற்றோர்களையும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி சிறைப்படுத்தவும் ஆலோசித்து வருகிறார் ராஜபக்சே. திருச்சியில் வசித்து வந்த தனது பெற்றோர்களை, 2003-ல் ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் போது கிளிநொச்சிக்கு வரவழைத்து தன்னுடனேயே இருக்க வைத்துக் கொண்டார் பிரபாகரன்.


டி.என்.ஏ. மோசடி!

பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸின் ரத்த மாதிரிகளை எடுத்து மரபணு சோதனை (டி.என்.ஏ.) செய்ததில் இருவரின் ரிசல்ட்டும் ஒத்துப் போவதாக தற்போது அறிவித்துள்ளது இலங்கை அரசு. ""பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒருவரின் உடலைக் காட்டி "இரண்டே மணி நேரத்தில் மரபணு சோதனை நடத்தி உறுதி செய்து கொண்டோம்' என்று அப்போதே இலங்கை அரசு சொன்னதே, அது எப்படி?'' என்று கேள்வி எழுப்பும் புலம் பெயர்ந்த தமிழர்கள், ""பிரபாகரன் கொல்லப்பட்டதாகப் பொய்யான பரப்புரைகளை மேற் கொண்ட ராஜபக்சே நடத்தும் நாடகம் இது.

மரபணு சோதனையை இரண்டு மணி நேரத்தில் அல்ல, இரண்டு நாட்களி லேயே கூட செய்து விட முடியாது என்று தமிழக தடய அறிவியல் துறையும் மருத்துவத் துறையும் பகிரங்கப்படுத்திய நிலையில், தங்கள் பொய்யை மறைக்கவே ஒருவாரம் கழித்து மீண்டும் மரபணு சோதனை நாட கத்தை அரங்கேற்றியுள்ளார் ராஜபக்சே'' என்கின்றனர். இதனை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் தயாராகி விட்டனர் புலம் பெயர்ந்த தமிழர்கள்.


--

 


நன்றி :நக்கீரன்StumbleUpon.com Read more...

ஓவியர் புகழேந்தியுடன் ஒரு நேர்கானல்:Interview with Oviyar Pugazenthi

StumbleUpon.com Read more...

பிரபாகரனை பற்றி ஏன் இத்தனை பொய்ச்செய்திகள்?

பிரபாகரனை பற்றி ஏன் இத்தனை பொய்ச்செய்திகள்?

 உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பெங்களூரில் நடந்த ஈழத் தமிழரும்- காலக்கடமையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.


''தமிழீழ தேசிய தந்தை பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அவர் பாதுகாப்பாக உள்ளார். எந்த நேரத்தில் வெளிப்பட்டு போராட்டத்தை நடத்த வேண்டுமோ அப்போது அவர் வெளிப்படுவார்.

போர் முடிவுக்கு வந்தபிறகும் நாடு முழுவதும் தமிழர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி வெளியான பிறகும் தமிழர்களின் எழுச்சி அடங்கவில்லையே என்று நினைத்த இந்திய அரசின் `ரா' உளவுத்துறை திட்டமிட்டு பிரபாகரன் பற்றி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறது. 

அவர் அப்படி கொல்லப்பட்டார், இப்படி கொல்லப்பட்டார், சித்திரவதைப்படுத்தி கொல்லப்பட்டார் என்றெல்லாம் `ரா' உளவுப்பிரிவு மூலம் செய்திகள் பரப்பட்டு தமிழர்களை சஞ்சலப்படுத்தவும், குழப்பவும் முயற்சிக்கப்படுகிறது.

நமது நெஞ்சங்களில் துளி அளவுக்கூட சஞ்சலங்கள் இருக்கக்கூடாது. பிரபாகரன் நன்றாக, பத்திரமாக இருக்கிறார் என்பதில் யாரும் சந்தேகப்பட தேவையில்லை.  குழப்பி விடும் செய்திகளை தூக்கி எறிந்து விட வேண்டும். எதிரிகளை விட குழப்பங்களை பரப்புபவர்கள் தான் அபாயகரமானர்கள்.

எத்தனையோ தடவை பிரபாகரன் என்னும் சூரியனை மறைக்க பகை மேகங்கள் முயற்சித்தன. அத்தனை மேகங்களையும் அவர் கிழித்து கொண்டு வெளிவந்தாரே தவிர மறைந்து போகவில்லை''என்று பேசினார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP