சமீபத்திய பதிவுகள்

இந்த வார டவுண்லோட்

>> Monday, August 23, 2010



இன்டர்நெட் இல்லாதபோதும் கூகுள் கேம்ப்
ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும். கூகுள் மேப்ஸை உலகின் எந்த நாட்டிலிருந்தும் பெறலாம். எந்த நாட்டிற்கும், நகரத்திற்கும், தெருவிற்கும் வழி காட்டும் வகையில் மேப்களும், வழி காட்டுதல்களும் நமக்கு கூகுள் மேப்ஸ் தருகிறது. இதற்குத் தேவை எல்லாம் சற்று வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.
இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது? இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher  என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும். இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும்.
பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes'  என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும். இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude)  ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும். இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம்.
ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம்.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

நாம் நினைப்பதை கண்டுபிடிக்கும் புதிய கம்ப்யூட்டர் இன்டெல் அறிமுகப்படுத்துகிறது



நியூயார்க் : இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கம்ப்யூட்டர்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மவுஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கம்ப்யூட்டர் அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த வல்லுனர்கள். ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது

source:dinamalar

StumbleUpon.com Read more...

சிறந்த இணைய உலாவி எது ?



இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது? எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில  அடிப்படைக் கூறுகள் சிலவற்றில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் உள்ளனவே! ஒவ்வொன்றாக இவற்றை இங்கு காணலாம்.
வெப் பிரவுசர் என்னும் இணைய உலாவித் தொகுப்புகள் தொடக்க காலத்தில் வந்தது போல் இப்போது இருக்க முடியாது. இன்டர் நெட்டின் தளத்தி லிருந்து டெக்ஸ் ட்டை எடுத்து உங்கள் மானிட்டரில் காட்டுவதோடு பழைய காலத்து பிரவு சரின் வேலை முடிந்து விட்டது. இப்போது ஒவ்வொரு வரும் குடி இருக்கும் இடமே இணைய தளங்கள் என்றாகிவிட்டன. அன்றாடப் பணிகளும் சிறப்பு வேலைகளும் இணையத்தில் தான் நடைபெறுகின்றன. எனவே பிரவுசர்கள் சந்திக்கும் சவால்களும் கடுமையாகிவிட்டன. ஆவணங்களைத் தயார் செய்து திருத்தவும், பயணங்கள் மேற்கொள்ளவும்,  பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடவும், மாப்பிள்ளை பெண் பார்க்கவும், திருமண நிச்சயதார்த்தத்தினை அறிவிக்கவும், நடந்த திருமணத்தைக் காட்டவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு வெப்சைட் உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஒரு இணைய உலாவித் தொகுப்பு இயங்க வேண்டியுள்ளது. வேகமாக இயங்கவில்லை என்றால், பயணத்திற்கு டிக்கட் கிடைக்காமல் போய்விடும். சரியாகத் தகவல் போய்ச் சேரவில்லை என்றால், திருமண வரன்கள் மாறிவிடும். எனவே இவற்றின் இயங்குதன்மை அனைத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி  – இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. அனைத்து பிரவுசர்களுமே நல்ல பயனுள்ள பிரவுசர்களே. ஒன்று மற்றதைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறந்ததாக இருக்கலாம். இணையதளங்களை வடிவமைப்பவர்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப அல்லது தாங்கள் பயன்படுத்திக் காட்டும் தொழில் நுட்பத்திற்கேற்ப ஈடு கொடுக்கும் பிரவுசரை அவர்களின் விருப்ப பிரவுசராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இணைய உலாவிற் கெனப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம். 
1.குரோம் பதிப்பு 5: இணைய தளங்களை வடிவமைக்கும் புரோகிராமர்களுக்கு குரோம் பதிப்பு 5 சிறந்த தோழனாக அமைந்துள்ளது. மேலும் இருக்கின்ற பிரவுசர்களில் மிக வேகமாக இயங்கி, இணையப் பக்கங்களைத் தருவதில், குரோம் முதல் இடத்தில் உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் எச்.டி.எம்.எல். 5 வரையறைகளை மிக சாதுர்யமாகச் சந்தித்து இயக்குகிறது. அத்துடன் அடோப் தந்துள்ள பிளாஷ் தொகுப்பில் உருவான இயக்கங்களையும் சிறப்பாக இயக்குகிறது. இதனால் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதில் இடையே தடை ஏற்படுவதே இல்லை. 
மேலும் குரோம் ப்ளக் இன் புரோகிராம்களை எளிதாகக் கையாள்கிறது. இந்த வகையில் பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் இது திறமையுடன் செயல்படுகிறது. இதனால் குரோம் பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டுக் கிடைக்கின்றன. 
2. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4: நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையிலிருந்து மறைந்த போது, அதிலிருந்து பயர்பாக்ஸ் உருவானது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள், இதில் உள்ள வசதிகளைக் கண்டு காப்பி அடிக்கும் அளவிற்கு, சிறப்பாய் உருவானது. தற்போது பயர்பாக்ஸ் தன் பிரவுசர் கிராஷ் ஆகி முடங்கிப் போகாமல் இருக்க ஒரு பாதுகாப்பினை உருவாக்கித் தந்துள்ளது. இதனால் அப்போது பார்க்கப்படும்  அந்த தளம் மட்டுமே முடங்கும். மற்றவற்றுடன் தொடர்ந்து நாம் பணியாற்றலாம். பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு பெரிய பலம், அதற்கென உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக் கான ஆட் ஆன் தொகுப்புகளும், ப்ளக் இன் புரோகிராம்களுமே. இணைய தள வடிவமைப்பாளர்கள் பயன்படுத்தும் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் பயர்பாக்ஸ், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது என்பது பலரின் குறை. ஆனால், மிக வேகமாக அவற்றை இயக்கும் வகையிலான கட்டமைப்பை விரைவில் தருவதாக மொஸில்ல்லா அறிவித்துள்ளது. 
3. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்  9 சோதனைத் தொகுப்பு: 
ஒரு காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே அனைவராலும் இணைய உலாவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக் காலம் இனி திரும்ப வருமா என்பது கேள்விக் குறியே. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், இழந்த இடத்தைப் பிடிக்க நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், பல புதிய  வசதிகளைத் தரும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. டேப் வழி வசதி பல மாதங்களுக்கு முன் தரப்பட்டது. இதன் காலரியில் இப்போது பல ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களில் தரப்பட்ட பல புதிய விஷயங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் தரப்பட்டன. 
இணையத்தில் உலா வருகையில், வைரஸ் மற்றும் பிற கெடுதல் தரும் புரோகிராம்களிலிருந்து, மைக்ரோசாப்ட் தன்னுடைய பிரவுசர் தொகுப்பு, மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பினைத் தருவதாக அறிவித்துள்ளது. குரோம் பிரவுசரைக் காட்டிலும் 5 மடங்கு, பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் 2.9 மடங்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாக அறிவித்துள்ளது. குறிப்பாகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் இணைய முகவரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும், இணைய முகவரிகளைக் கண்டறிந்து எச்சரிப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகச் சிறந்தது என்று கூறியுள்ளது. 
ஆனால் இந்த பெருமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கூறும் மைக்ரோசாப்ட், தன் பிரவுசரில் உள்ள பல பிழையான இடங்களைச் சரிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ப்ளக் இன் புரோகிராம்களுக்கு அதிக இடம் தந்ததால், அவற்றைப் பயன்படுத்தியே பலர் தங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புகின்றனர். 
இருப்பினும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்து வருவதால், இணைய தளத்தை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசருக்கேற்றபடியாகவும் தங்கள் தளங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் உள்ளது. 
4. ஆப்பரா 10.6:  ஆப்பராவின் ஒரு பெருமை அதன் அதிவேக இயக்கம் தான். மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் மிக வேகமாக இணையப் பக்கங்களை இறக்கித் தரும் பிரவுசராக இன்றும் உள்ளது. ஆனால்  அதிகபட்ச அளவில் டேட்டா கிடைக்கும்போதும், கையாளப்படும்போதும் இந்த பிரவுசர் திணறுகிறது என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  வேறு வசதிகளில் இது அதிகக் கவனம் செலுத்தாததால், சாதாரணமாக, இணையத்தைப் பயன்படுத்து பவரிடையே இது அவ்வளவாக எடுபடவில்லை.
5. ஆப்பிள் சபாரி 5.0: லினக்ஸ் உலகத்திலிருந்து பழைய Konqueror பிரவுசரை எடுத்து, அதில் நவீன தொழில் நுட்பத்தினை எக்கச்சக்க அளவில் புகுத்தி, விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் சபாரி பிரவுசரைக் கொண்டு வந்தது. சபாரி ஒரு நல்ல மாற்று பிரவுசராக இன்று இடம் பெற்றுள்ளது. வேகம், கண்ட்ரோல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள டெவலப்பர் டூல்ஸ் ஆகியவை நன்றாகவே இயங்குகின்றன. இணையப் பயனாளர் ஒருவர் விரும்பும் அனைத்துமே, சபாரி பிரவுசரில் நிச்சயம் உண்டு என்று சொல்லும் அளவிற்கு, இதனை உருவாக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.  ஆனால் மற்ற பிரவுசர்களிடமிருந்து இதனைத் தனித்துக் காட்டும் வகையில் இதில் எந்த சிறப்பும் இல்லை.  அடோப் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையின் காரணமாக, ஆப்பிள், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும், எச்.டி.எம்.எல்.5 க்கு அதிக இடம் கொடுத்துத் தொடர்ந்து அதனைச் சிறப்பான இடம் பிடிக்க உதவி வருகிறது. 
ஒவ்வொரு பிரவுசரும் ஏதேனும் சில தனிச் சிறப்பினையும், சில குறைவான வசதிகளையும் கொண்டுள்ளது. நம் தேவைகளுக்கேற்ப எது வேண்டுமோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரே பிரவுசரை மட்டுமே பயன்படுத்தாமல், ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே நமக்கு வசதியாகவும் பயனுடையதாகவும் இருக்கும்.

 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்


பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா! 
நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன.  அவற்றில் ஒன்று  http://www.freeav.com என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir.  இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும். 
ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கண்ணில் பட்டது. இதன் பெயர்AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம்.  ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள  AdAware   பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

 

சொஉர்செ:டினமலர்


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP