சமீபத்திய பதிவுகள்

வட்டக்கச்சி நோக்கி முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 18 பேர் பலி; 40 பேர் காயம்

>> Saturday, January 10, 2009

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 18-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் முறியடிப்பு தாக்குதலை நடத்தினர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் நடைபெற்றது.

இம்முறியடிப்பின் போது சிறிலங்கா படைத்தரப்பில் 18-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மோதல் நடைபெற்ற களமுனை எங்கும் சிறிலங்கா படையினரின் படையப் பொருட்களும் உடலங்களும் சிதறிக்கிடக்கின்றன.

பிகேஎல்எம்ஜி - 01
ரி-56-2 ரக துப்பாக்கி - 02
ஆர்பிஜி எறிகணைகள் - 06

ஆகிய படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP