சமீபத்திய பதிவுகள்

திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கும் விண்டோஸ் 7

>> Sunday, February 7, 2010

 

 


 இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. ஒரு சிலர் இணையத் தளங்களில் இருந்து இதுபோன்ற திருட்டு நகல்களை டவுண்லோட் செய்தும், அதிலிருந்து சிடிக்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாக மைக்ரோசாப்ட் தன் ஒரிஜினல் சிடிக்களுக்கு ப்ராடக்ட் கீ ஒன்றை, 16 எண் மற்றும் எழுத்துக்கள் கொண்டதாக, வழங்கும். அதனைச் சரியாக அமைத்தால் தான், இந்த புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். ஆனால் தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்புகளுக்கு அது போன்ற ப்ராடக்ட் கீ எதுவும் இல்லாமலே இயங்கும்படி இந்த திருட்டு நகல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 
இது போன்ற திருட்டு நகல்கள் தயாரிக்கப்படுவது, சாப்ட்வேர் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலி யாய் இருந்து வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் தான் இது போன்ற முயற்சிகள் பெருமளவில் நடந்தேறி வருகின்றன. இந்தியாவில் 208 கோடி டாலர் அளவிற்கு இந்த திருட்டு முயற்சிகளினால் இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய விற்பனையில் வரி ஏய்ப்பும் ஏற்படுவதால் அரசுக்கு 20 கோடி டாலர் மதிப்பில் இழப்பு உண்டாகிறது.டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது. 
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, திருட்டு சாப்ட்வேர் சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர்கள் பல ஆபத்துக்களுக்கு உள்ளாவார் கள். முதலாவதாக இது சட்டப்படி தவறு. காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்து பவரைக் கைது செய்து சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கவும் முடியும் என்றார். 
மேலும் கூறுகையில் திருட்டு சாப்ட்வேர் சிடிக்களுடன் பல மால்வேர் புரோகிராம்களும் இணைந்தே தரப்பட்டு, பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்கள் மற்றவருக்குச் செல்லும் அபாயமும் என்றார். மேலும் இது போன்ற திருட்டு புரோகிராம்களை விற்பனை செய்பவர்கள், மைக்ரோசாப்ட் வெளியிட்ட சோதனைப் பதிப்புகளைக் காப்பி எடுத்து விற்பனை செய்வதாகவும், அதனால் முழுமையான பாதுகாப்பினை அவை பெற்றிருக்காது எனவும் கூறினார். மேலும் இவை ஜூன்1, 2010க்குப் பின் இயங்காது என்றும் கருத்து தெரிவித்தார். 
மேலும் தொழில் நுட்ப ரீதியாகவும் இவற்றின் இயக்கத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் விளக்கினார். திருட்டு சிடிக்கள் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால், அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
திருட்டு சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர் ஒருவரைச் சந்தித்துக் கேட்ட போது, இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த அதிகப் பணம் செலவழித்து, ஹார்ட்வேரை மாற்றி அமைக்க வேண்டிய துள்ளது என்றும், இந்நிலையில் மேலும் அதிக பணம் கொடுக்காமல் சாப்ட்வேர் கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள் என்று கூறினார். 
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வேண்டுமானால் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்கட்டும்; நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறினார். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கேற்ப சாப்ட்வேர் தொகுப்பிற்கு விலை வைக்க வேண்டும் என அவருடைய ஆதங்கத்தினை வெளிப் படுத்தினார். இந்நிலையில் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. வெளிநாட்டி லிருந்து பேக்கேஜ்டு சாப்ட்வேராக இறக்குமதி செய்தால், இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. இதனால் அதிகார பூர்வமான விண்டோஸ் 7 சாப்ட்வேர் கிடைப்பது தாமதமாகிக் கொண்டு வருகிறது என்று கூறினார். திருட்டு சாப்ட்வேர் வாங்காதீர்கள். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தில் ஆவணங்களை கண்டுபிடிப்பாம்

 வன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை போலீசின் சிறப்பு அணி கண்டுபிடித்துத் தேடுதல் நடத்தியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இந்த மறைவிடத்திலிருந்து தாம் வகைப்படுத்தப்பட்ட பல தகவல்களைக் கொண்டுள்ள கோப்புகள் பலவற்றையும், 56 சி.டி க்களையும் பெருமளவான புதியவகை ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக போலீஸ் மேலும் கூறியுள்ளது. தலைவருக்கு அருகில் இருந்த ஆறு பேர் தற்போது தமது விசாரணையின் கீழ் உள்ளதாகவும், அவர்கள் கொடுத்த தகவல்களை அடுத்தே மேற்படி ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவாம்.

மேற்படி கோப்புகளில் தலைவர், மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்களின் விவரங்கள் உள்ளதாகவும் எனவே இத்தகவல்கள் போலீசும், பாதுகாப்புப் படையினரும் தற்போது மேற்கொண்டுவரும் விசாரணைகளுக்கு மிகவும் உதவியாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிலத்துக்குக் கீழ் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் 17 தற்கொலைதாரி அங்கிகள், 7000 ஜொனி நிலக்கண்ணிகள், 300 கிலோ சி-4 வெடிமருந்துகள், 8 கிளைமோர்கள் மற்றும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மறைவிடத்துக்கு அண்மையாக ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இருந்ததற்கான அத்தாட்சிகள் காணப்பட்டதாகக் கூறியுள்ள போலீஸ், ஆனால் அந்த தொழிற்சாலை படையினர் கைகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அது புலிகளால் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதாவது இவர்களின் தகவல்படி முள்ளிவாய்க்கால் என்றழைக்கப்படும் ஒரு சிறிய பகுதியில் தலைவர் எங்கு மறைந்திருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க சுமார் 9 மாதங்கள் எடுத்திருக்கிறது. இவ்வாறான தகவல்களை வெளியிடுவதன் மூலம் இலங்கை அரசு வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் புலிகளின் ஆதரவாளர்களை முடக்கவே நிணைப்பதாகத் தோன்றுகின்றது

source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பூலான்தேவி கொள்ளைக்காரியாக மாறிய வரலாறு பாகம்-1

 வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி
வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவிகுலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி 11 ஆண்டுகள் சிறைவாசம் கண்டு, பிறகு அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினராகி சாதனை புரிந்தவள் பூலான்தேவி.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு பகுதி கொள்ளையர்களின் கூடாரமாக விளங்கியது. பலரதுதலைமையில் கொள்ளை கோஷ்டிகள் இயங்கி வந்தன.இவற்றில் சில கொள்ளைக்கும்பல்கள் பெண்ணை தலைவியாக கொண்டு செயல்பட்டன.
 
இதுபோன்று சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிபயங்கர கொள்ளைக்காரியாக விளங்கியவள்தான் பூலான்தேவி.அவளது வாழ்க்கை வரலாறு பாண்டிட் குயின் என்ற பெயரில் சினிமாப்படமாக வெளிவந்தது. அந்த திரைக்காவியம் பெரும் சர்ச்சையை கிளப்பினாலும் பூலான்தேவியைப் பற்றிய விவரங்கள் ஓரளவு வெளி உலகுக்கு தெரியவந்தது.பிறவியிலேயே பூலான்தேவி கொள்ளைக்காரி அல்ல. கொள்ளைக்காரியாக ஆக்கப்பட்டாள்.
 
பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தார்கள்.
 
4 சகோதரிகள். ஒரு தம்பி உண்டு. பாலிய விவாகம் (சிறு வயதில் திருமணம்) என்பது அங்கு சர்வசாதா ரணமான விஷயம். வயதுக்கு வரும் முன்பே (அதாவது 11 வயதில்) பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.
 
திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான்.
 
அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.
 
சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள்.
 
வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள். அவளுடைய பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் போலீஸ் பிடியில் பூலான்தேவி சிக்கினாள்.
 
சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய போலீசார் அங்கும் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.
 
பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டு உருண்டோடியது. திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.
 
அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான்.
 
இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இதன் பிறகே பூலான்தேவி முழு அளவில் கொள்ளைக்காரியாக மாறினாள். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை.
 
இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி.
 
விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981_ம் ஆண்டு பிப்ரவரி 14_ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள்.
 
அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை_கால்களை இழந்தார்கள்.
 
இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார்.
 
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.
 
பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள்.
 
நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள்.1982_ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.
 
பூலான்தேவி மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன.வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே.
 
ஆனால் அவளது தோற்றம் கம்பீரமாக இருந்து வந்திருக்கிறது. குதிரை மீது ஏறி அவள் வலம் வந்தால் அந்த சுற்று வட்டாரமே நடுங்கும். கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துவார்கள். காக்கி நிற உடையில் நெற்றியை சுற்றி சிவப்பு நிற ரிப்பனை கட்டியிருப்பது அவளுடைய தனி முத்திரையாகும்.
 
எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டா (குண்டுகள்) "பெல்ட்" உடம்பை சுற்றி காட்சி தரும்.
 

source:maalaimalar

தொடரும்.................

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிற மதத்தவர்களுக்கு மதிப்புதர மலேசிய பிரதமர் வேண்டுகோள்


பிற மதத்தவர்களுக்கு மதிப்புதர மலேசிய பிரதமர் வேண்டுகோள்

பிப்ரவரி 06,2010,00:00  IST

Top global news update

மேலாகா : "குர் ஆனில்  கூறியபடி, நாட்டில் உள்ள பிற மதத்தவர்களுக்கு, முஸ்லிம் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்' என, மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.மலேசியாவின் ஜசீன் பகுதியில் மசூதி ஒன்றை திறந்து வைத்து பேசிய அந்நாட்டு பிரதமர் நஜீப் துன் ரசாக் கூறியதாவது:முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற சமுதாய மக்கள் ஆகியோர்  இடையேயான நல்லுறவிற்கு இஸ்லாமிய கொள்கைகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அதற்கான சிறந்த சான்று நபிகள் நாயகம் . அவர், பிற மதத்தவர்களுக்கு எப்போதும் மதிப்பளித்தவர். குர் ஆனில் , பிற மதம் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை அலட்சியப்படுத்துவதற்கு எதிரான வாசகங்கள் உள்ளன. நாம் பிற மதத்தவர்களின் வழிபாட்டு, தலங்களை கொளுத்தினால், அவர்களும் அதை திருப்பி செய்வர். எனவே, முஸ்லிம் மதத்தவர்கள் பிற மதத்தவர்களுக்கு மதிப்பளித்தால், அவர்களும், மதிப்பளிப்பர். மலேசிய நாட்டின் கொள்கை சமூக நீதி  மற்றும் மதக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. இவ்வாறு  நஜீப் துன் ரசாக் கூறினார்.


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP