சமீபத்திய பதிவுகள்

நெருப்பு நரி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடயங்களை அழிக்கலாம்

>> Thursday, November 19, 2009

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து பல விஷயங்களைப்பெறுகிறோம்வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக,பன்னாட்டளவில் தகவல்களைத் தேடுவார்கள்வேலை தேடுபவர்கள்,போட்டித் தேர்வு எழுதுபவர்கள்தங்கள் முன்னேற்றத்திற்கென இணையத்தில்தங்கள் தேடலை மேற்கொள்வார்கள்போட்டிகள் நிறைந்த இந்த உலகில்இத்தகைய தேடல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதேஆனால்உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள்கம்ப்யூட்டரில் இன்டர்நெட் ஹிஸ்டரியாகப் பதியப்படுகிறதேஇதனைப்பயன்படுத்தி யார் வேண்டுமானாலும்நீங்கள் என்ன என்ன தளங்களைப்பார்த்தீர்கள் என்று அறிந்துஅவர்களும் அந்த தளங்களில் இருந்துதகவல்களைப் பெற்று உங்களுக்குப் போட்டியாக செயல்படலாமேஆம்,இதற்கு என்ன வழி?


இத்தகைய நிலை சில மாதங்களுக்கு முன் இருந்ததுஆனால் இப்போது வரும்பிரவுசர் பதிப்புகள்உங்களின் இன்டர்நெட் உலாஅடுத்தவர் பார்த்து அறியாதவகையில் இருக்க செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வசதிகளை அளிக்கின்றன.அவற்றை இங்கு பார்க்கலாம்பிரவுசர்களில் உள்ள இந்த வசதிகளுடன் சிலதேர்ட் பார்ட்டி புரோகிராம் எனப்படும் சில புரோகிராம்களும் இந்த வசதியைஅளிக்கின்றனஇங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் பயர்பாக்ஸ்பதிப்பு 3.5 ஆகியவை சார்ந்த பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

1. 
முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பார்ப்போம்டூல்ஸ் மெனு கிளிக்செய்துகிடைக்கும் மெனுவில்மேலாக உள்ள டெலீட் பிரவுசிங் ஹிஸ்டரிஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும்கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்துஆப்ஷன்கள் தரப்படும்இந்த ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்நீங்கள்பார்த்த தளங்களின் பட்டியலை அழிக்கலாம்குக்கி பைல்களை நீக்கலாம்;இப்படி உங்கள் பிரவுசிங் சம்பந்தமான அனைத்து தடயங்களையும்நீக்கலாம்.எவற்றை நீக்க வேண்டும் என முடிவு செய்துஅவற்றைத்தேர்ந்தெடுத்து நீக்கவும்ஆனால் எதனையும் நீக்கும் முன்ஒருமுறைக்குஇருமுறை சிந்தித்துச் செயல்படவும்ஏனென்றால் பாஸ்வேர்ட்களைநினைவில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் அமைத்திருக்கலாம்.அவற்றை நீக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதில் யோசித்து முடிவெடுக்கவும்.அதே போல Form Data, Cookies ஆகியவற்றை நீக்கினால்உங்கள் இன்டர்நெட்பயன்பாடு சற்று தாமதமடையலாம்அல்லது முழுவதுமாக மாறலாம்எனவேதேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

2. 
இன்னொரு வழியைப் பார்ப்போம்இப்போதும் டூல்ஸ் மெனு கிளிக் செய்து, Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்இங்கு கிடைக்கும் பல டேப்கள்அடங்கிய விண்டோவில், Privacy டேப் என்பதில் கிளிக் செய்திடவும்கிடைக்கும்விண்டோவில் பெறும் ஆப்ஷன்கள் மூலமாகஉங்களுடைய கம்ப்யூட்டரில்பதியப்படும் குக்கிகள் எப்படி உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாட்டில்உதவலாம் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.

பொதுவாக குக்கு பைல்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை உடையவை என்றுநாம் எண்ணி வந்தாலும்பல குக்கிகள் அவை சார்ந்த தளங்களை நாம் எப்படிபயன்படுத்துகிறோம் என்பதைத் தளத்திற்கு உணர்த்திஅந்த தளத்துடனான நம்அனுபவத்தினைச் சீராக்குகின்றனஎனவே இங்கு தரப்படும் செட்டிங்ஸ்ஸ்கேலில், Medium என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

3. 
இன்டர்நெட் வெப்சைட்களுக்கு நாம் செல்கையில்அந்த தளங்களில்இருக்கும் இமேஜஸ் மற்றும் பிற தகவல்களை நாம் வைத்திருக்கும்பிரவுசர்கள் காப்பி செய்து வைத்துக் கொள்கின்றன என்று பலருக்குத்தெரியாதுஇந்த பைல்களை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில் உள்ளGeneral என்ற டேப்பினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்கலாம்இதன் மூலம்நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்கையில்அந்த தளங்கள்விரைவில் நமக்குக் கிடைக்க இந்த பைல்கள் உதவுகின்றன. Browsing Historyபிரிவில் Settings என்பதில் கிளிக் செய்து பின் View Files என்பதைத் தட்டினால்இந்தபைல்களைக் காணலாம்.

இவ்வாறு பைல்கள் குவிவதனை நீங்கள் விரும்பவில்லை என்றால்உங்கள்பிரவுசிங் முடிந்துபிரவுசரை மூடும்போதுஅவை அனைத்தையும்போல்டரிலிருந்து நீக்கும் படி நீங்கள் செட் செய்திட முடியும்.

Internet Options 
விண்டோவில், Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்இதில்நிறைய ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும்எனவே கவனமாக இதில் ஸ்குரோல்செய்திட வேண்டும்தவறுதலாக எதனையேனும்நம்மையும் அறியாமல்தேர்ந்தெடுத்து விட்டால்பின் பிரவுசிங் செய்திடுகையில் பிரச்சினை ஏற்படும்.ஏற்கனவே பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் சில ஆப்ஷன்ஸ்தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும்இவற்றை நீக்கிவிடாமல்வரிசையாகச் செல்ல வேண்டும்அப்படி எதனையேனும் நீக்கியதாகஉணர்ந்தால்உடனே Cancel பட்டன் கிளிக் செய்து மீண்டும் இந்தவிண்டோவினைத் திறந்து செலக்ட் செய்திடலாம்இனி இந்த லிஸ்ட்டில்ஸ்குரோல் செய்து அதில் 'Empty Temporary Internet Files Folder when browser is closed' என்றஆப்ஷன் உள்ள வரியினைத் தேடிக் கண்டுபிடிக்கவும்இதில் ஒரு சிறிய டிக்அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பயர்பாக்ஸ் 3.5 தொகுப்பு மேலே தரப்பட்டுள்ள பல வசதிகளை மிக எளிமையாகஅமைத்துக் கொள்ள வழிகளைத் தருகிறது.Tools மெனுவில் Clear Private Dataஎன்பதைத் தேர்ந்தெடுங்கள்இதில் நீங்கள் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும்என விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.இதில் டெம்பரரி இன்டர்நெட் பைல்களைக் காலி செய்திட Cache என்பதில் கிளிக்செய்திட வேண்டும்.

இங்கும் பிரவுசர் மூடப்படுகையில் பெர்சனல் தகவல்கள் அனைத்தையும்நீக்குமாறு செட் செய்திடலாம். Tools மெனுவிலிருந்து Options செலக்ட்செய்திடவும்இங்கு Privacy என்ற டேப் அழுத்தினால் கிடைக்கும் பாக்ஸில் Settingsஅழுத்தவும்பின் Settings for deleting history என்ற விண்டோ கிடைக்கும்இதில் எந்தவகை டேட்டா இருக்கக் கூடாது என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத்தேர்ந்தெடுத்துபின் ஓகே கொடுத்து மூடலாம்.

source:paranthan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்

 
 

 

'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா? பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா? என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! 

மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக முடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷ அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்து விட்டது.

பொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக பொன்சேகாவும் சிங்களவர்களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இது மகிந்தவுக்குச் சகிக்கவில்லை. பொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப்பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம்.

இராணுவத் தளபதியாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து எதையும் செய்து விடுவார் என்பதால், 'முப்படைகளுக்கும் சேர்ந்த பொறுப்பு' தரப்பட்டது. முக்கியமானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது.

முறைப்படி டிசம்பர் 18-ம் தேதி பொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்த போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் காரியம் என்று நினைத்து, பொன்சேகா அவமானத்தில் நெளிந்தார்.

பாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த பொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதாவில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். 'முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித்தால் போதுமானது' என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்தபாய, 'பொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கினால், அது ஆபத்தானதாக இருக்கும்' என்றார். பொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும் பொன்சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், பொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்' என்று வஞ்சகத்தை மறைத்து வைத்து மகிந்தாவும் பச்சைக்கொடி காட்டினார்.

இந்த நிலையில்தான், பொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது.

அந்த நாட்டின் க்ரீன் கார்டு வைத்திருக்கும் பொன்சேகா, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப் போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள்.

'நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்யமாட்டேன்' என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய பொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

 'அதைவிட முக்கியமாக பொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்' என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக் கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக பொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

 'நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்' என்று சொல்லிக்கொள்பவர் மகிந்த ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தோட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார்.

இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷ.

இது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான ஈரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. 'யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்' என்று மகிந்த சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம்.

எதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. 'ராஜபக்ஷவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய இராணுவம் உஷாராக இருந்தது' என்று பொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது.

'இன்னும் பல இரகசியங்களை பொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்' என்று பிரணாப் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு வல்லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல் நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்கு நல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் பொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை.

எனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. 'இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்?' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் பொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷ.

இவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது!

நன்றி: ஆனந்த விகடன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பட்டப்படிப்பு படிக்க அமெரிக்கர்கள் இந்தியா வருகை

இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க அமெ​ரிக்​கர்​கள் ஆர்​வம்

 


வாஷிங்​டன்,​ நவ.17:​ இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்க வரும் அமெ​ரிக்​கர்​க​ளின் எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​க​ரித்து வரு​கி​றது.

÷இ​தன் மூலம் இந்​தி​யா​வில் உயர் கல்வி படிக்​கும் ஆர்​வம் அமெ​ரிக்க மாண​வர்​கள் மத்​தி​யில் அதி​க​ரித்​துள்​ளது தெரி​ய​வந்​துள்​ளது.

÷ச​மீ​ப​கா​ல​மாக அமெ​ரிக்​கா​வில் நிர்​வா​கம்,​ விஞ்​ஞா​னம் உள்​பட அனைத்து துறை​க​ளி​லுமே இந்​தி​யர்​கள் தங்​க​ளது திற​மையை நிரூ​பித்து முக்​கி​யப் பங்​காற்​று​கின்​ற​னர். இது​போன்ற இந்​திய அறி​வு​ஜீ​வி​க​ளின் சாதனை அமெ​ரிக்​கர்​க​ளின் கவ​னத்தை இந்​தி​யா​வின் உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளின் பக்​கம் திருப்​பி​யுள்​ளது என்று சமீ​பத்​தில் நடத்​திய ஆய்வு ஒன்​றில் தெரி​ய​வந்​துள்​ளது.

÷2007-08 கல்வி ஆண்​டில் அமெ​ரிக்​கா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு 3,150 மாண​வர்​கள் உயர் கல்வி பயில்​வ​தற்​காக வந்​துள்​ள​னர். இந்த எண்​ணிக்கை அதற்கு முந்​தைய கல்வி ஆண்​டைக் காட்​டி​லும் 20 சத​வீ​தம் அதி​க​மா​கும். அ​மெ​ரிக்​கா​வில் இருந்து வெளி​நா​டு​க​ளுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மான வகை​யில் அதி​க​ரித்து வரு​கி​றது.

÷2007-08 கல்வி ஆண்​டில் மட்​டும் 2,62,416 அமெ​ரிக்​கர்​கள் பல்​வேறு நாடு​க​ளுக்கு படிக்​கச் சென்​றுள்​ள​னர்.​

பிரிட்​டன் முத​லி​டம்:​​ பிரிட்​ட​னுக்​குத்​தான் ஒவ்​வொரு ஆண்​டும் அதி​க​மான அமெ​ரிக்​கர்​கள் உயர் கல்வி பயி​லச் செல்​கின்​ற​னர். பிரிட்​ட​னில் உள்ள பல்​வேறு உயர் கல்வி நிறு​வ​னங்​க​ளில் 2008-09 கல்வி ஆண்​டில் மட்​டும் 33,333 அமெ​ரிக்​கர்​கள் சேர்ந்​துள்​ள​னர்.

இதை​ய​டுத்து இத்​தா​லிக்கு 30,670, ஸ்பெ​யி​னுக்கு 25,212, பிரான்​ஸýக்கு 17,336, சீனா​வுக்கு 13,165 அமெ​ரிக்​கர்​கள் உயர் கல்வி படிக்​கச் சென்​றுள்​ள​னர். உல​கில் அமெ​ரிக்​கர்​கள் அதி​கம் படிக்​கும் நாடு​க​ளின் பட்​டிய​லில் இந்​தியா 17-வது இடத்​தில் உள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது. வரும் கல்வி ஆண்​டில் இந்த இடத்​தில் இருந்து இந்​தியா முன்​னேற அதி​க​மான வாய்ப்​புள்​ள​தாக இந்​திய கல்வி நிபு​ணர்​கள் கணித்​துள்​ள​னர்.

source:dinamani

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தேசிய தலைவரின் மாவீரர் தின உரை வருமா ? வராதா ?




 

மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ் வேளையில், மாவீரர் தின உரை வருமா இல்லை வராதா என்ற ஏக்கத்துடன் உலகத் தமிழர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒருபுறம் மாற்றுக் கருத்து உள்ளவர்களும், அரசுடன் சேர்ந்து இயங்குபவர்களும் மாவீரர் தின உரை இம்முறை வெளிவராவிட்டால் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டு விட்டது என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை பரப்புரையாக மேற்கொள்ள காத்திருக்கின்றனர். மறு முனையில் இலங்கை அரசானது தாமே ஒரு பொய்யான மாவீரர் தின உரையை நிகழ்த்தி, அதில் தேசிய தலைவருக்கும் ஈகைச் சுடர் ஏற்றி அதை வெளியிட்டு, புலம்பெயர் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்ச முயல்வதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன.

குறிப்பாக இணையத்தள உரிமையாளர்கள், இந்த விடையத்தில் மிகவும் அவதானமாகச் செயல்படுவது நல்லது. மாவீரர் தின அறிக்கை என, எவராலும் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அவை இலங்கை புலனாய்வுத் துறைமூலமாக வெளியிடப்படலாம். இச் சந்தர்ப்பத்தில் பொறுமைகாத்து நிதானாமாகச் செயல்படுவது நல்லது.

எது எவ்வாறு இருப்பினும் மாவீரர் தின உரை என்பது எமது தேசிய தலைவரால் வாசிக்கப்படும் ஒரு உன்னதமான உயிரோட்டமுள்ள உரை. ஒரு பேரழிவை எமது இனம் சந்தித்துள்ளவேளை, எமது ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக மௌனித்துள்ள இவ் வேளை நாம் தேசிய தலைவர் அவர்களின் உரையை எதிர்பார்த்திருப்பது முறையல்ல. ஏன் எனில் வழமையாக நவம்பர் மாதம் என்றாலே இலங்கை அரசு கதிகலங்கி இருக்கும். மாவீரர் மாதத்தில் பல பாரிய தாக்குதல்கள் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராகவும் நடைபெறும். அவ்வாறு தாக்குதல்கள் வெற்றியாக முடிந்த தறுவாயில் தேசிய தலைவர் மாவீரர் நாள் உரையாற்றுவது வழக்கம்.

அதனால் இன்னும் ஒரு பாரிய வெற்றி, அது அரசியலாக இருக்கலாம் இல்லை ஆயுதப் போராட்ட வெற்றியாக இருக்கலாம் அப்படி ஒரு வெற்றியை நாம் அடைந்த பின்னரே அவர் உரை வெளிவரும் என்பதை புலிகளை நன்கு விளங்கிக்கொண்டவர்கள் அறிவார்கள். அதுவே அவர் உரைக்கும் பெருமை சேர்க்கும், தமிழினம் தலை நிமிரும் உரையாகவும் அமையும். 

உரை வரும் வராது என்ற வாதப் பிரதிவாதங்களை முதலில் நாம் நிறுத்திவிட்டு எமது மாவீரச் செல்வங்களின் கல்லறை நோக்கி அணிதிரளுவோம். உங்கள் நாடுகளில் எங்கெங்கு மாவீரர் நினைவு தினம் நடக்கின்றதோ அங்கே சென்று அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றுவோம். எமது போராட்டத்திற்கு உரம்சேர்ப்போம், உறுதியுடன் போராடுவோம் என மாவீரர் முன் நின்று அவர்கள் கனவு நினைவாக உழைப்போம் என சபதம் எடுத்துக்கொள்வோம். 

இதுவே எம் மனதைத் தூய்மைஆக்குவதோடு சரியான முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்கும் . எமது மாவீரச் செல்வங்களின் உருவப்படத்தை ஒரு முறை பார்த்தால் சஞ்சலங்கள் தீரும். எமது ஏக்கம் தீரும். ஒவ்வொரு மாவீரனும் மண்ணில் விழும்போது நாளை பிறக்கும் தமிழீழம் என்ற லட்சியக் கனவுடன் கண்மூடி இருப்பான்.. அவர்கள் கண்மூடும் போது கண்ட கனவை நாம் நிஜமாக்குவோம்.


அதிர்வின் ஆசிரியபீடம்

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன

athirvu@gmail.com


source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

'பட்டர் சிக்கன்' விலை ஆறாயிரம் ரூபாய் தானுங்க

 
 

General India news in detailஐதராபாத் : ஆறாயிரம் ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றால், கேமரா, பிளைட் டிக்கெட் உட்பட பல பொருட்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், ஆறாயிரம் ரூபாய்க்கு சிறிதளவு "பட்டர் சிக்கன்' வாங்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், சிறிதளவு பட்டர் சிக்கன் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு ஆன்-லைன் மூலமே ஆர்டர் கொடுக்க முடியும். ஈரானில் பிறந்தவரான, பரத் சக்சேனா என்பவர் தான், இதை தயாரித்து அளிக்கிறார். இந்த பட்டர் சிக்கனுக்கு "அனார்கலி' என்று பெயரிட்டுள்ளார். கோல்டு மற்றும் சில்வர் பேப்பர்களில் சுற்றியும், கைகளால் உருவாக்கப்பட்ட கன்டெய்னர்களிலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பட்டர் சிக்கன் வினியோகிக்கப்படுகிறது.



இதுகுறித்து சக்சேனா கூறியதாவது: எனக்கு என் குழுவினருக்கும், பட்டர் சிக்கன் செய்வது என்பது பொழுது போக்கு. இதை நாங் கள் லாப நோக்கில் செய்யவில்லை. ஆனால், இந்தியாவில், நல்ல மற்றும் தரமான பொருளுக்கு எந்த விலை கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். இந்த பட்டர் சிக்கன் தயாரிக்க, நாங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் பற்றி விவரங்களும், எங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். ஆனால், காப்புரிமை காரணமாக அதன் அளவுகளை வெளியிடவில்லை. இவ்வாறு சக்சேனா கூறினார்.


ஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக, "அனார்கலி' அறிமுகப்படுத்தியதில் இருந்து, அதற்கு வாடிக்கையாளர்கள் இடையே போதிய வரவேற்பு இல்லை. சென்ற மாதம், ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இதற்கு ஆர்டர் வழங்கி உள்ளார். ஆனால், வாடிக்கையாளரின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனக்கூறி, சக்சேனா, அவர் பற்றி தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த மாதம், நான்கு வாடிக்கையாளர்கள், "அனார்கலி' பட்டர் சிக்கனுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் மீது வீண்பழியை சுமத்துகிறார் கலைஞர் : பழ. நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்


 
விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகு‌றி‌த்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ. நெடுமாற‌ன் இ‌ன்று ‌அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ''‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌மீது மு‌ற்‌றிலு‌ம் உ‌ண்மை‌யி‌ல்லாத கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்களை‌க் கூ‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌நீ‌ண்ட அ‌றி‌க்கை ஒ‌ன்‌றினை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர். 

1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். 

ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, 

பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார். 

அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார். 

2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார். 

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. 

இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. 

இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர். 

அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார். 

அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது. 

பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார். 

இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது. 

பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல. 

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. 

அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும். 

1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். 

அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்? 

பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன? 

ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். 

ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். 

இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். 

உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. 

சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த‌ப் பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். 

தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். 

அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர். 


இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. 

உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை''என்று தெரிவித்துள்ளார்.

source:tamilwin
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்தியாவை புண்படுத்தும் கூகிள்

இது தான் கூகுள்








கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து http://ditu.google.com  பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக, இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP