சமீபத்திய பதிவுகள்

மைக்கேல் பெல்ப்ஸிற்கு 3 விருதுகள்!

>> Wednesday, November 19, 2008

 
lankasri.comமைக்கேல் பெல்ப்ஸின் பீஜிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டி சாதனைகளுக்காக கோல்டன் காகிளின் 3 விருதுகளைப் பெற்றுள்ளார். நீச்சல் போட்டிகளில் ஒலிம்பிக்கில் மட்டும் 8 முறை தங்கம் வென்ற பெல்ப்ஸ் அமெரிக்காவின் சிறந்த தடகள வீரர் என்ற விருதை பெற்றார்.

6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற மற்றொரு அமெரிக்க வீராங்கனை நதாலி காக்லின் சிறந்த மகளிர் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

200மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் சாதனை படைத்த ரெபெக்கா சோனிக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது.

புற்று நோய் உள்ளதாக கண்டறியப்பட்ட பின்பும் பீஜிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்ற எரிக் ஷான்டூவிற்கு அவரது உறுத்யியை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

பெல்ப்ஸின் பயிற்சியாளர் பாப் போவ்மேனுக்கு சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது.

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1227024243&archive=&start_from=&ucat=4&

 

StumbleUpon.com Read more...

புலிகள் பின்வாங்கும் மர்மம்...!

"புலிகளின் முக்கிய தளமான பூநகரியை புடிச்சிட்டாங்களாம். அது வழியா யாழ்ப்பாணத்துக்கான தரைவழி பாதையையும் திறந்திருக்காங்களாம். இன்னும் கொஞ்சநாளில் கிளிநொச்சியையும் பிடிச்சுடுவாங்க. அப்படியே புலித்தலைவர் பிரபாகரனையும் பிடிச்சுடப் போறாங்களாம். அப்படீன்னு இலங்கை அதிபர் ராஜபக்ஷே சொல்றாரு" என்று கூறி சிரித்த சித்தன்,


 "போனவாரம் நம்ப குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக அங்க இருக்குற தமிழ் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சேனாதிராஜா ஜெயனந்த மூர்த்திகிட்ட பேசுனம். அப்பவே அவர் சொன்னார். அதாவது ராணுவம் சில இடங்களை பிடிச்சிருக்கிறதா சொல்றது உண்மைதான். ஆனா அந்த பகுதிய எல்லாம் போர்கள முனைக்கு  அவசியம் இல்லாத பகுதின்னு புலிகளே விட்டு பின்நகர்ந்து போன பகுதி. அவ்வளவு எளிதில் புலிகளை வெல்ல முடியாதுங்கிறதுதான் போர்க்கள நிலவரம்.

 இவ்வளவு இடத்தை பிடித்து விட்டோம்னு சொல்றப்போ,  புலிகள் தரப்பில் மரணம் நிறைய இருந்திருக்கணுமே. ஏன் இல்லாம இருக்கு?. அதுலதான் சூட்சுமம் இருக்கு. எந்த சூழ்நிலையிலும் புலிகள் கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதை நெருங்கும் போது ராணுவப்படை பெரிய இழப்பை சந்திக்கும்னு சொன்னவரு போர் தந்திரங்களுக்காக பின்நகர்ந்து வருகிறோம். விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடக்கும்னு புலித்தலைவர் தமிழ் எம்.பி.கிட்ட சொன்னதாகவும் கூறினார். அதுதான் இப்போது செய்தியா வெளிவந்து பரபரப்பாகிகிட்டு இருக்கு.

 அதுக்கேற்ற மாதிரி உலகளவில் போர் நிலவரங்களை  ஆய்வு செய்து வரும் நிபுணர்கள் எல்லாம்...

 "புலிகள் தரப்பில் உக்கிரமான போர் தொடுக்கப்படவில்லை. கரும்புலிகளின் வேகம் அதிகமிருக்கும். ஆனால் இதுவரையிலான போரில் கரும்புலிகளின் பங்களிப்பே இல்லை. அந்தப்படை நுழைந்து விட்டால் சிங்கள ராணுவத்துக்கு பெரிய இழப்பு ஏற்படும். இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை எனும் போது,  ஏதோ ஒரு திட்டத்தோடு புலிகள் அமைதி காத்து பின்நகர்கிறார்கள் என்பது உண்மைதான். அதனையடுத்து எப்படிப்பட்ட போர் நடக்கும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கும்னு சொல்றாங்க"

 ஆக, உச்சக்கட்டப் போர் என்பது இனிமேல்தான் நடக்கும். அதுதான் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்"- அன்வர்பாய்.

 "ஆமாம். அப்படித்தான் சொல்றாங்க. அந்த சமயத்துல, இலங்கை ராணுவத்தின் தாக்குதல் எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் மீது மேலும் மோசமாக நடக்கும். அதனால்தான் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாம இந்திய அரசு ஐ.நா. மன்றத்துக்கு புகாரா எடுத்துக்கிட்டு போகணும்னு,  பா.ம.க தரப்புல ராமதாஸ் சொல்றாரு. இன்னைக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துற இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கையும் அதுதான்.

 உலகில் எல்லா நாடுகளிலும்தான் தீவிரவாதம் இருக்கிறது. எந்த நாடும் தன் சொந்தப் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்துறதில்ல. இலங்கையில் அப்படி நடக்கிறது. அது ஒரு இன அழிப்பு முறை. அதனால் ஐ.நா. தலையிட நிர்ப்பந்திக்க வேண்டும்னு ம.தி.மு.க தலைவர் வைகோ, திருமாவளவன் எல்லாரும் சொல்றாங்க"thanks:kumudam

StumbleUpon.com Read more...

புலிகள்-ராணுவம் கடும் மோதல்: 200 ராணுவத்தினர் பலி


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் கடந்த 3 நாட்களில் 200 சிங்கள வீரர்கள் பலியானதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் முக்கிய இடமான கிளிநொச்சியை பிடிக்க சிங்கள ராணுவம் முற்றுமையிட்டுள்ளது. இதற்காக 3 முனைகளில் இருந்து சிங்கள ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. வடக்கு பகுதியில் முகமாலை வழியாக முன்னேறி வந்த சிங்கள படையை விடுதலைப்புலிகள் அதிரடியாக தாக்கினார்கள். இதில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை காலை வரை நடந்த சண்டையில் 36 சிங்கள வீரர்கள் பலியானார்கள்.

90 பேர் காயம் அடைந்தனர். அதற்கு முந்தைய நாள் சண்டையில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்படடனர்.

இதேபோல மாங்குளம் என்ற இடத்திலும் கடும் சண்டை நடந்து வருகிறது. கிளிநொச்சி பகுதியில் கடந்த 3 நாட்கள் நடந்த சண்டையில் மட்டுமே 200 சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட செய்தியிலும் 3 நாள் போரில் 200 வீரர்கள் இறந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிட இலங்கை பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெரியவில்லை.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=384

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP