சமீபத்திய பதிவுகள்

வெள்ளி பனி மலை(வீடியோ)

>> Monday, April 14, 2008

StumbleUpon.com Read more...

சமூகம் துரத்தும் பாரதிகள்(வீடியோ)

StumbleUpon.com Read more...

உணர்ச்சி பூர்வமான ரயில் பயணம்-வீடியோ

StumbleUpon.com Read more...

தூள் பறக்கும் மோதல்

    சோங்டோ: தென்கொரியத் தலைநகர் சியோல் அருகே சோங்டோ என்ற இடத்தில் இந்த ஆண்டுக்கான காளைச் சண்டைத் திருவிழா நடக்கிறது. ஒரு வாரம் நீடிக்கும் காளைகள் மோதலில் நாடு முழுவதும் இருந்து 180க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன.

அதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். நேற்று நடந்த மோதலில் ஜாங்சு (வலது) என்ற காளையும் சோய்கிங் என்ற காளையும் தூள் பறக்க ஆக்ரோஷமாக முட்டி மோதிக் கொள்கின்றன.
http://www.dinakaran.com/daily/2008/apr/14/jannal.asp

StumbleUpon.com Read more...

கணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்

கணிப்பொறி குற்றம் வைரஸ் மற்றும் தகவல் திருடுதல்

கணிப்பொறி கண்டுபிடிக்கப்பட்ட போதும் சரி, தற்போது வளர்ந்து புகழ்பெற்று விளங்கும் இந்த கால கட்டத்திலும் சரி. இது மக்களுக்கு நல்ல முறையில் பயன் தர வேண்டும். நமது அன் றாட வேலைகளில் சிலவற்றை கணிப்பொறி உதவியுடன் செய்ய வேண்டும் என்பது போன்ற பல நல்ல எண்ணங்களை மனதில் வைத்து தான், இந்த கணிப்பொறி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று பல குற்றங்கள் செய்யும் அளவிற்கு இந்த கணிப்பொறிறயில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இது போன்ற கணிப்பொறிக் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் கணிப்பொறிக் குற்றங்கள் நிகழும் போது அதை சரியான முறையில் தடுத்து நிறுத்த வேண்டும். இதனைப் பற்றிய முழுமையான விளக்கங்களை இங்கு காணலாம்.

இந்தக் கணிப்பொறிக் குற்றம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உண்மை யான நிகழ்வாகவே கருதப்படு கின்றது. இது போன்ற குற்றங்களை சில சமயங்களில் கண்டு பிடிப்பது கடினம். மேலும் அவற்றை கண்டுபிடித்து நிரூபிப்பதும் சற்று கடினம் என் பதாலும், பலர் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சாதாரணமாக ஒரு செயலை உலக அளவிலே செய்யும் போது அது தணிக்கை செய்யப்படும். ஆனால் இந்த விதமான கணிப்பொறி செயல் பாடு களில் இதுபோன்று தணிக்கை (அஞிக்ஷகூஞ்) செய்யும் முறை கிடையாது. ஏனென்றால் மற்ற முறைகளில் தகவல்கள் என்பது ஒரு புத்தக வடிவிலோ அல்லது பேப்பர் வடிவிலோ முறையான விதத்தில் தயாரித்து அனுப்பப் படுவதால், அஞிக்ஷகூஞ் எனப்படும் தணிக்கை முறையை கையாள்வது என்பது சுலபம். ஆனால் ,இந்த கணிப்பொறி மூலம் தகவல் அனுப்பும் முறையானது, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் செய்து கொள்ள லாம் என்றிருப்பதால், நம்மிடம் ஒரு சரியான தணிக்கை முறை கிடையாது.

பொதுவாக இந்த கணிப்பொறி குற்றமானது 3 வகையாக கருதப்படுகின்றது. இந்த 3 முறைகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

1.VIRUS எனப்படும் தகவல்களை அழிக்கும் புரோகிராம்கள். 2.HACKERS எனப்படும் தகவல்கள் திருடுபவர்கள். 3. தவறான தகவல்களை வெளியிடுபவர்கள்.

கணிப்பொறி உலகத்தில் தகவல்கள் அனுப்புவது என்பது, எப்பொழுதுமே பாதுகாப்பு இல்லை. ஏனென்றால், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் என்று கூறுவது போல, ஒவ்வொரு நாளும் கம்ப்ïட்டரில் புதிய வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

இவற்றைத் தடுக்கவும், வந்த பிறகு அவற்றை அழிக்கவும் பலவிதமான சாப்ட்வேர்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றையும் மீறி இன்று வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், உலகிலே வைரஸ் வராத கம்ப்ïட்டர் என்று ஒரு கம்ப்ïட்டரை கூட சொல்ல முடியாது. ஏனென்றால் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில், ஏதாவது ஒரு வைரஸ் மூலம் நாம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்போம்.

தற்போதைய காலகட்டத்தில் கம்ப்ïட்டர் வைரஸ் புரோகிராம் எழுதும் நபர்களுக்கும், அதைத் தடுக்கும் Antivirus  எனப்படும் சாப்ட்வேர் தயாரிப்பவர்களுக்கும் இடையே கடும் போட்டி நடைபெறுவதைப் போன்ற ஒரு தோற்றத்தையே நம்மால் இன்று காண முடிகின்றது. இது போன்ற வைரஸ் புரோகிராம்கள் தானாக உருவாவதில்லை. ஆனால், நம்மைப் போன்ற மனிதர்கள் இது போன்றவைரஸ் புரோகிராம்கள் எழுதி ஒரு கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு அனுப்புவதால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களில் பல வைரஸ்கள் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், குறிப்பாக I LOVE YOU, MELISSA மற்றும் மோரிஸ் WORM போன்ற வைரஸ்கள் ஏற்படுத்திய பாதிப்புகளை கணிப் பொறியில் பல ஆண்டுகள் பணிபுரியும் நபர்கள் மறந்திருக்க முடியாது.

இன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 முதல் 12 வைரஸ் புரோகிராம் கள் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்தில் 3500 முதல் 4000 வைரஸ் புரோகிராம்கள் உருவாக்கப் படுகிறது. இந்த நவீன இன்டர் நெட் உலகில், வைரஸ்கள் விரைவில் பரவ இன்டர் நெட் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் தான் இந்த வைரஸ் விரைவாக உலகெங் கும் பரவி விடுகின்றது.

Antivirus சாப்ட்வேர் செயல்படும் விதம்

தற்பொழுது உபயோகத்தில் இருந்து வரும் பல Antivirusசாப்ட்வேர்கள் மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டு உபயோகத்திற்கு சிறந்த வகையில் உள்ளது. இவையனைத்துமே, குறிப்பாக சில வகையான வைரஸ்களில் இருந்து பாது காத்து கொள்ளும் வகையிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால் இது போன்ற Antivirus புரோ கிராம்கள் எழுதும் போது, சில வகையான கற்பனையான குறிப்புகளை வைத்துத்தான் எழுத முடியும். ஆனால், வைரஸ் புரோகிராம்கள் எழுதுபவர்கள் அவர்களை விடபுத்திசாலிகள். ஏனென்றால் யாரும் எதிர்பாராத வகையில் பாதிப்பு இருக்கும் வண்ணம் வடிவமைத்து விடுவார்கள்.

வைரஸ் கண்டுபிடிக்கும் புரோகிராம்கள் சாதாரண மாக கம்ப்ïட்டரில் உள்ள அனைத்து தகவல்களையும் (File) எடுத்து வைரஸ் உடைய அறிகுறிகள் எனப்படும் முகவரிகள் உள்ளதா? என்று சோதித்து அவை கண்டறியப்பட்டால், வைரஸ் உள்ளது என்று தீர்மானிக்கப்படுகின் றது. இன்னும் சில Antivirus Software எனப்படும் சாப்ட்வேர்களில் தத்துவம் சார்ந்த விதிமுறைகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்படு கின்றது.

இது போன்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டவுடன், உடனே Antivirus மையம் எனப்படும் இடத்திற்கு தெரியப்படுத்தப்படுகின்றது. அந்த Antivirus மையம், அது என்ன விதமான வைரஸ் என்பதை கண்டறிந்து அதற்கான குணமாக்கும் புரோகிராமை தயார் படுத்தி வைரஸ் சம்பந்தமான புரோகிராம் வரிகளை அழிக்கிறது. ஆகையால்தான் நாம் வைரஸ் இடமிருந்து வெளி வர முடிகிறது.

வைரஸ் பரவும் முறை

வைரஸ் என்பது ஒரு ஆபத்தான புரோகிராம் போல இருப்பதாக நாம் அறிந்திருந்தாலும், அவற்றால் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை உணர்ந்திருந்தாலும், எவ்வாறு இந்த வைரஸ்கள் பரப்பப்படுகின்றது என்பது பற்றி காணலாம்.

1.BBS எனப்படும் Bullet in Board Service முறை மூலம் பரவுதல்

இது ஒரு பொதுவான முறையாக கருதப்பட்டாலும், இந்த முறை மூலம்தான் சர்வதேச அளவில் வைரஸ்கள் பரவுகிறது. இந்த Bullet in Board Service  என்பது ஒரு அறிவிப்பு பலகையைப் போன்று, ஏதேனும் செய்திகளை கொண்டிருக்கும். அந்தச் செய்தியை படிக்க முற்படும் போது வைரஸ்கள் நம்முடைய கம்ப்ïட்டரில் உள்ள மெமரியில் சென்று தங்கி விடுகிறது. ஏனென்றால், இது போன்ற வைரஸ்கள் வர முக்கிய காரணம், நாம் கம்ப்ïட்டரை தொலைபேசி Wire மூலமாகவோ அல்லது Telnet என்ற முறையின் மூல மாகவோ தொடர்புகொள்ளும் போது இது நிகழக்கூடும்.

2. நெட்வொர்க் மூலம் வைரஸ் பரவுதல்

நாம் கம்ப்ïட்டரை உபயோகிக்கும் போது பலவிதமான தேவைகளுக்காக பயன் படுத்தினாலும், முக்கியமாக நெட் வொர்க் மூலம் கம்ப்ïட்டர்களை இணைத்து ஒரு கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போது இது போன்ற வைரஸ் புரோகிராம்கள் எளிதில் மற்ற கம்ப்ïட் டருக்கு சென்று விடுகின்றது. உதாரணமாக, Email எனப்படும் மின்னணு அஞ்சல் முறை மூலம் தகவல்களை அனுப்பும் போது, Email செய்தியுடன் வைரஸ் புரோகிராம்களும் சென்று விடுகின்றது. இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றது.

3. இணையதளம் மூலம் வைரஸ் பரவுதல்

இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியாது. ஏனென்றால், கம்ப்ïட்டரை உலகில் உள்ள எல்லா மக் களுக்கும், பிரபலமடைய வைத்ததே இந்த இன்டர்நெட் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட இந்த இன்டர் நெட் மூலம், சில இணைய தளங்களை, நாம் பார்க்கும்போது அவற்றின் மூலம் இந்த வைரஸ் புரோகிராம்கள் நம்முடைய கம்ப்ïட்டருக்கு பரவி விடுகின்றது.

இந்த இன்டர்நெட் வைரஸ் என்பது இன்று பொதுவான ஒரு வைரஸ் பரவும் முறையாகும். ஆகையால் நாம் எப்போது இணையதளத்தை உபயோகிக்க தொடங்குகிறோமோ, அப்போது நம்முடைய கம்ப்ïட்டரில் Antivirus  சாப்ட்வேர் எனும் புரோகிராம்களை வைத்து சோதனையிட்டுக் கொள்வது நல்லது.

4. File Server மூலம் வைரஸ் பரவுதல்

நாம் சாதாரணமாக நமது அலுவலகங்களில் பல கம்ப் ïட்டர்களை ஒன்றாக நெட் வொர்க் முறையில் இணைத்திருக்கும் போது ஒரு கம்ப் ïட்டரை சர்வர் என்றும் மற்ற கம்ப்ïட்டர்களை   என்றும் அழைக்கின்றோம். அந்த சமயங்களில், இந்த Client என்பவர் ஏதேனும்File-களை Server  கம்ப்ïட்டரில் இருந்து பெற அனுமதி கேட்கும்போதும், Server கம்ப்ïட்டர் அனுப்பும் தகவல்களில் வைரஸ் இணைந்து சென்றுவிடும். அவ்வாறு அனுப்பப்பட்ட வைரஸ், அந்த கம்ப்ïட்டரில் இருந்து கொண்டு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நாம் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி, சில சமயங்களில், வைரஸ் சம்பந்தமான புத்தகங் களை கம்ப்ïட்டரில் பதிவு செய்து, அவற்றை படிப்பதன் மூலம், இந்த வைரஸ் புரோ கிராம்கள் பரவி விடுகின்றன. இது ஒரு வித்தியாசமான முறையாகும். ஏனென்றால் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு பலர் அந்த புத்தகங்களை படிக்க முயற்சிப்பர். அந்த நேரத்தில் வைரஸ் நமது கம்ப்ïட்டரில் பரவி விடும். இது ஒரு வித்தியாசமான முறை மூலம் நிகழும் குற்றமாகும்.

6. வைரஸ் விற்பனை முறை

இன்னும் சிலர், இது போன்ற வைரஸ் புரோகிராம் களை எழுதி விற்பனை செய்கின்றனர். உதாரணமாக, சில கம்ப்ïட்டர் பற்றிய வார மற்றும் மாத இதழ்களில் (Magazine ) இது போன்ற கம்ப்ïட்டர் வைரஸ் உடைய புரோகிராம் வரிகளை வெளியிடுகிறார்கள். அது போன்ற புரோகிராம்களை படித்து விட்டு, சில மாணவர்கள், நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று அந்த வைரஸ் புரோகிராம்கள் முழுவீச்சில் உருவாக்கி விளையாட்டாக பிறருடைய கம்ப்ïட்டருக்கு அனுப்பி விடுகின்றனர். இது போன்ற வைரஸ் புரோகிரம்களின் விற்பனை அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டப்படி அனுமதி பெற்று நடைபெறுகிறது. இன்னும் சில விற்பனை நிறுவனங்கள், வைரஸ் புரோகிராம்களையும் எழுதி பரவவிடுவதோடு, அவற்றை சரி செய்யும் Antivirus Software  எனப் படும் புரோகிராம்களையும் எழுதி விற்பனை செய்கிறார்கள்.

இதுவரை CYBER CRIME எனப்படும் தலைப்பிலே கணிப்பொறிக்குற்றம் என்பது பற்றிய செய்திகளை அறிந்து கொண்டோம்.
 

StumbleUpon.com Read more...

எழுத்தாளர் ஜெயமோகனும்,அவர் எழுதிய கட்டுரையும்,மன்னிப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் என்பவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பரபரப்பு.நடிகர் சங்கம் வேறு போராட்டம் நடத்தியது இவரை எதிர்த்து.இன்று காலை எழுத்தாளர் மண்ணிப்பு என்ற கட்டுரை வேறு.

என்ன தான் நடக்கிறது.என்ன பிரச்சனை,இவர் என்ன செய்தார் அப்படின்னு கொஞ்சம் இணையத்தில் தேடின பொழுதுதான் இவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் எமக்கு கிடைத்தது.


ஒன்று மறைந்த நடிகரும்,முதல்வருமான மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றியது

இன்னொன்று மறைந்த நடிகர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றியது.


இவைகளை படித்தவுடன் ஏன் இந்த எழுத்தாளருக்கு இந்தமாதிரியாக எண்ணம் உண்டானது என்று எனக்கு தோன்றியது.ஆனால் என்ன அவர் என்ன நினைத்து எழுதினார் என்று தெரியவில்லை.ஆனால் அவர் எழுதிய கட்டுரைக்கு உண்டாண விளைவு என்னென்னமோ ஆகியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இதுல எனக்கு என்ன அப்படின்னு கேட்டால் உங்க மூலமா ஒரு ஹிட் அவ்வளவே.நான் வரட்டா.

StumbleUpon.com Read more...

பாலைவனச் சோலை!

பாலைவனச் சோலை!

மெழுகுதிரி வாழ்க்கையிது
உருகியோடி மாய்ந்துவிடும்!
ஒழுக்கநெறி அற்றவராய்
உருக்குலைந்து அலைவோரே!
திருந்தி வாழும் வழியின்றேல்
திரும்ப ஒரு வாழ்வுமுண்டோ?
வருந்தி உம்மை அழைக்கும் -எங்கள்
பெருந்தெய்வக் குரல் கேட்பீர்!

பாலைவன வாழ்க்கைப்போன்ற
பாவமிக்கப் பூமியிலே
சோலைவனக் குளிர்நீராம்
ஜீவத்தண்ணீர் ஊற்றுண்டு!
ஞாலத்திலே வாடும் மாந்தர்
தாகம் தீர்க்கும் மார்க்கமுண்டு!
தேவலோகம் ஏகிச்செல்ல
கோலமிகுப் பாலமுண்டு!

கல்வாரிக் குருசு தரும்
நல்லாயன் பரிசு இது!
இல்லாமற்போகும் மாந்தர்
புல்லான வாழ்க்கையிது
நல்லார்க்கும், வல்லார்க்கும்
இல்லார்க்கும, எல்லார்க்கும்
எல்லையில்லா ஜீவன்தரும்
நல்லவரின் ஈவு இது!

நம்பினோர்க்கு மோட்சமுண்டு
நம்பாதர்க்கோ மோசமுண்டு!
தம்பிரானின் தாள்படிந்தோர்
தங்கலோகம் தடம்பதித்து
பொங்கும் மகிழ் வாழ்வடைவர்
எங்கும் நிறை எம்பிரானின்
மங்காப்புகழ் மகிமை வீட்டில்
தொல்லையிலா வாழ்வடைந்து
எல்லையில்லாக் காலம் வாழ்வார்!!வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத் 11:28
 

StumbleUpon.com Read more...

P.J. படுபொய்யர்,பொய்யிலே பிறந்து பொய்யிலே வளம் பெறுபவர்(முஸ்லீம்களின் சான்றிதழ்)

சமீபகால முபாஹலா போன்ற நிகழ்வுகளுக்குப்பிறகு, சில சகோதரர்கள் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, P.J.மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களோடு, சாட்சிகளோடு உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உறுதியாக அறிவிப்பது வருமாறு: 

உண்மையை அறிய விரும்புகிறவர்கள் நேரில் வந்தால்,  P.J. படுபொய்யர், அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வின் மீதே ஆணையிட்டே அவருக்கு மிக வேண்டியவர்களே வேண்டாதவர்கள் ஆகும்போது அப்பட்டமான பொருளாதார சம்பந்தப்பட்ட அவதூறுகளை அள்ளி இறைப்பவர், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளம் பெறுபவர், பொய்களை நிலைநாட்ட அல்லாஹ்வின் அச்சமின்றி, குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக முபாஹலாவுக்கு அழைப்பு விடுபவர், இப்படி அவர்மீது நாம் கூறும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உரிய ஆதாரங்களுடன், சாட்சிகளுடன், அவர் கைப்பட எழுதிய கடித ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.

அல்லது, சத்திய மார்க்கத்தை சமுதாய ஒற்றுமையை நிலைநாட்ட உண்மையிலேயே விரும்புகிறவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் சேர்ந்து பக்க சார்பில்லாத நடுநிலையாளர்களைக் கொண்ட ஓர் "உண்மை அறியும் குழுவை" அமைத்து நீதிமன்றம் போல், தேதி, இடம் அவர்களே முடிவு செய்து, எனக்கும், P.J.க்கும், தங்களின் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கத் தேவையான அனைத்து ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பச்செய்யுங்கள்.

நாம் அந்த அழைப்பாணையை ஏற்று, குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் எம்மிடமிருக்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், பேசிப்பதிவாகி இருக்கும் டேப்புகள், மற்றும் ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகி எமது தரப்பு நியாயங்களை எடுத்து, அந்த "உண்மை அறிவும் குழு" முன்னால் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம் என்று இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்.

இதுபோல் P.J.யும் தம்மிடம் இருக்கும் கடிதம், டேப் பதிவுகள், ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகி தனது பக்க நியாயங்களை "உண்மை அறியும் குழு முன்னால் சமர்ப்பிக்க வேண்டும்.

அவர் பக்கம் நியாயம்-உண்மை-சத்தியம் இருப்பதாக அவர் உண்மையிலேயே மனப்பூர்வமாக நம்பினால், கண்டிப்பாக "உண்மை அறியும் குழு" முன்னால் ஆஜராகி தனது பக்க நியாயங்களை எடுத்து வைக்கத் தவறமாட்டார்.

தன்பக்கம் நியாயம் இல்லை, தனது வாதத் திறமை கொண்டும் பொய்யை உண்மை போல் நிலை நிறுத்த முடியாது என்ற அச்சம் அவருக்கு இருந்தால் மட்டுமே அவர் "உண்மை அறியும் குழு" முன்னால் ஆஜராவதைத் தவிர்க்க முடியும்.

அப்படி அழைப்பாணை அனுப்பியும் அவர் வரத்தவறினால், "எக்ஸ் பார்ட்டி" தீர்ப்பு என்பதுபோல் "உண்மை அறியும் குழு" நாம் சமர்ப்பிக்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், அவர் பேசி பதிவாகியுள்ள கேஸட்டுகள்,  மற்றும் ஆவணங்கள், சாட்சிகள் இவை அனைத்தையும் முறையாக கவனமாக பரிசீலனை செய்து, நாம் அவர்மீது கூறிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையா? பொய்யா? என அல்லாஹ்வுக்குப் பயந்து நடு நிலையோடு தீர்ப்பளிக்கட்டும்.

இந்த ஏற்பாடு குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற உறுதியோடு மத்ஹபுகளைவிட்டு விடுபட்டு வந்துள்ள சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒன்றுபட பெரிதும் உதவும் அது சமுதாயத்தில் கோணல் வழிகள் ஒழிந்து ஒரே நேர்வழி நிலைநாட்டப்பட வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தக் குற்றச் சாட்டுகளை உரிய ஆவணங்கள், சாட்சிகள் கொண்டே தீர்க்கமாக தீர்ப்பளித்துவிட முடியும்.

"முபாஹலா" என்ற குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட பூச்சாண்டி அவசியமே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம். நாம் P.J.மீது கூறும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க 1987-விலிருந்து தயாராகவே இருக்கிறோம். P.J. உண்மையாளர் என்றால் துணிந்து "உண்மை அறியும் குழு" முன்னால் ஆஜராகட்டும்.
 

StumbleUpon.com Read more...

தமிழ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி முகாம்.


தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்துள்ளது.

கோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோசங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டுவைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டுமுகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள்,கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்றுஇருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்துகோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத்தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள்என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள்கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம்போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவேஇப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்களையும் தீவிரவாதிகள் தகர்க்க சதிசெய்து உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, மதுரைஉள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மதகல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.

ஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாகபோலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின்உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது. இவர்களிடம் நடத்தப்படும்விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார்தெரிவித்துள்ளனர்.

மேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:

மேலும் 2 இமாம் அலியின் கூட்டாளிகளை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைதுசெய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.

இந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானைகொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெரிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

இப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் மதுரை 2வது குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP