|
சமீபத்திய பதிவுகள்
இலங்கைக்கு ரஷியா ஆயுத உதவி
மாஸ்கோ, பிப். 10-
--
www.thamilislam.co.cc
அணு ஆயுத நாடாகி விட்டோம்: ஈரான் குதூகலம்
முதல்கட்டமாக 20 விழுக்காடு வரையிலான தூய்மையான யுரேனிய செறிவூட்டலை செய்துள்ள ஈரான், சுமார் 80 விழுக்காடு வரை யுரேனிய செறிவூட்டலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இந்த யுரேனிய செறிவூட்டல், அணு மின் உற்பத்தி நிலையங்களுக்காகத்தான் என்று ஈரான் கூறி வருகிற போதிலும், இந்த யுரேனிய செறிவூட்டல் மூலம் அணு ஆயுதங்களையும் அது தயாரிக்க முடியும்.
இந்நிலையில் ஈரான், இஸ்லாமிய குடியரசு நாடாக உருவாவதற்கு வழி வகுத்த புரட்சி நடந்த 31 ஆவது ஆண்டு கொண்டாட்டம், இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள சதுக்கத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் அகமதுனிஜாத், முதல் கட்ட யுரேனிய செறிவூட்டலை முடித்துள்ளதன் மூலம் ஈரான் தற்போது அணு சக்தி (ஆயுத) நாடாகிவிட்டது என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பைக் கேட்ட மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
--
www.thamilislam.co.cc
ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசப்பட்டது.
பெங்களூரு:காதலர் தினத்தை எதிர்த்து வரும் ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் முகத்தில் கறுப்பு பெயின்ட் பூசப்பட்டது.காதலர் தினத்திற்கு, ஸ்ரீராமசேனை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கன்னட "டிவி' சேனல் ஒன்று, காதலர் தினம் எதிர்ப்பு சம்பந்தமாக பெங்களூரு டவுன் ஹாலில் கலந்துரையாடலை நடத்தியது. இதில், ஸ்ரீராமசேனை தலைவர் முத்தாலிக் பங்கேற்றார்.முத்தாலிக்கின் வருகையை அறிந்த இளைஞர் காங்கிரசார், டவுன் ஹாலுக்கு கூட்டமாகச் சென்றனர். அங்கு முத்தாலிக்கை பிடித்து இழுத்து, அவரது முகத்தில் தார் மற்றும் கறுப்பு பெயின்டை பூசினர். இருந்தாலும், இளைஞர் காங்கிரசார் விடவில்லை. அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளினர். இச்சம்பவத்தையறிந்த போலீசார், டவுன் ஹால் பகுதிக்கு வந்தனர். போலீசார் வருகையை அறிந்ததும் இளைஞர் காங்கிரசார் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்தி, தடியடி நடத்தினர்; சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முத்தாலிக் கூறுகையில், ""என் முகத்தின் மீது கறுப்பு பெயின்ட் பூசப்பட்டது. இந்து சமயத்திற்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்செயல் ஜனநாயகமல்ல, குண்டாயிசம். நீதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடுவது தான் காங்கிரசிஸின் கலாசாரம். இந்து சமுதாயம் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும்,'' என்றார்.இச்சம்பவம் எதிரொலியாக, தார்வாட் காங்கிரஸ் அலுவலகம் மீது கல் வீசி தாக்கப்பட்டது. நவல்குந்தில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது. பிப்ரவரி 13ம் தேதி, பிஜப்பூர் மாவட்டம் சிந்த்பூரில் பந்த் அனுஷ்டிக்க ஸ்ரீராமசேனை அழைப்பு விடுத்துள்ளது source:dinamalar
--
www.thamilislam.co.cc