சமீபத்திய பதிவுகள்

மருத்துவமனை சிறிலங்கா வான் படையால் தகர்த்தழிப்பு - 60 பேர் பலி

>> Saturday, February 7, 2009

 


நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச போரியில் விதிமுறைகளில் மருத்தவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தங்கள் இலக்குகளில் மருத்துவமனைகளும் அடங்கியுள்ளதாக அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பொன்னம்பலம் ஞாபகாரத்த மருத்துவமனை சிறிலங்கா வான்படையால் முற்றாக தாக்கி அழித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

உலகில் எங்குமே நடைபெற்றிராததும், கிட்லரின் கொடூர ஆட்சியிலும் நடைபெற்றிராத அளவிற்கு சிறிலங்கா சிங்கள இனவாதப் பேரரசு தமிழ் மக்களை பெரும் அழிவுக்கு உட்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

யார் இந்த தாய்? தொழில்:பெண்க‌ள் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட‌வைத்து, அப்பெண்க‌ளை ஜிஹாதிக‌ளாக‌ மாற்றுவ‌து

 
இஸ்ரேல் விட்ட ஏவுகனைகளில் தன் பிள்ளைகளை இழந்து வேதனையடைந்துக் கொண்டு இருக்கும் தாயோ?

அல்லது

தன் கணவனை இழந்து தவிக்கும் பெண்மணியோ?

இப்படி நீங்கள் நினைத்து இருந்தால், உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த தாய் "80 இஸ்லாமிய பெண்கள்" கற்பழிக்கப்பட உதவியிருக்கிறார்கள். இப்படி கற்பழிக்கப்பட்டப் பின்பு, "உனக்கு இனி வாழ்வு இல்லை, இது உன் குடும்பத்திற்கு அவமானம், எனவே, உனக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தரவேண்டுமானால், நீ வெடிகுண்டுகளை உன் உடலில் கட்டிக்கொண்டு ஜிஹாதில் ஈடுபட்டு, உயிரை தியாகம் செய்யவேண்டும் என்றுச் சொல்லி" கற்பழிக்கப்பட்ட பெண்களை தன் வார்த்தைகளால் கட்டுப்படுத்தி, "பெண் ஜிஹாதிகளாக" மாற்றியிருக்கிறார்.
என்னே ஒரு தாய்?

இந்த தாயின் பெயர்: ச‌மீரா ஜ‌ஸ்ஸம்

புனைப்பெயர்: உம் அல் மூமனீன் (நம்பிக்கையாளர்களுக்கெல்லாம் தாய் - Um al-Mumenin -the mother of the believers)

வ‌ய‌து: 51

தொழில்: இஸ்லாமிய‌ பெண்க‌ள் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட‌வைத்து, அப்பெண்க‌ளை ஜிஹாதிக‌ளாக‌ மாற்றுவ‌து.

இடம்: ஈராக்


இஸ்லாமிய பெண்கள் கருப்பு புர்கா அணிந்துச் செல்வதினால், யாருக்கும் சந்தேகம் வராது மற்றும் பெண்களை ஆண்கள் சோதனை போடவும் முடியாது, இதனால், ஆயுதங்களை/வெடிகுண்டுகளை மறைத்து வைத்து, தற்கொலைத் தாக்குதல் நடத்த பெண்கள் சரியான வழிமுறையாகும்.


Quote:
Source: Iraqi woman had 80 women raped then recruited as suicide bombers

http://www.timesonline.co.uk/tol/news/world/iraq/article5653088.ece
http://www.icjs-online.org/orig.php?eid=5449&ICJS=2074&article=1827

…she said that she helped to organise the rapes of young women and then stepped in to persuade the victims to become suicide bombers as their only escape from the shame. …

A WOMAN suspected of recruiting more than 80 female suicide bombers has confessed to organising their rapes so she could later convince them that martyrdom was the only way to escape the shame.

Samira Jassam, 51, was arrested by Iraqi police and confessed to recruiting the women and orchestrating dozens of attacks.

In a video confession, she explained how she had mentally prepared the women for martyrdom operations, passed them on to terrorists who provided explosives, and then took the bombers to their targets. ….


The Associated Press reports US military figures indicate at least 36 female suicide bombers attempted or carried out 32 attacks last year. Women are often allowed through military checkpoints without being searched, making it easier for them to hide explosives under their traditional robes.

இந்த தாயின் வாக்குமூலத்தை கேட்க வீடியோ: http://www.youtube.com/watch?v=N54G7E2GE64இப்படி நல்ல இளம் பெண்களை கற்பழிக்க வைத்துவிட்டு, பிறகு அவர்களை பெண் தற்கொலை ஜிஹாதிகளாக மாற்றும் இந்த தாய்க்கு "இறைவன்" என்றுச் சொல்லப்படுபவன் சொர்க்கத்தில் அனுமதிப்பானா?
அனேக இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கற்பழிக்கப்பட்டுவிட்டால், குடும்பத்திற்கு அவமானம் என்றுக் கருதி, சகோதரனோ, தந்தையோ கற்பழிக்கப்பட்டவளை கொலை செய்கிறார்கள்(ஹானர் கில்லிங்).

பாகிஸ்தானில் இருந்த ஒரு சட்டத்தின் படி, தான் கற்பழிக்கப்பட்டாள் என்பதை நிருபிக்க அந்த பெண் 4 ஆண்களை சாட்சிகளாக கொண்டுவரவேண்டும். அப்படி 4 ஆண் சாட்சிகளை கொண்டுவரவில்லையானால் விபச்சாரி என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படுவாள்.

இஸ்லாமிய நாட்டில் வாழும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபம், அவர்களை காப்பாற்ற இன்னொரு நபி எழும்பி வரவேண்டுமா?
 

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி மரணம்

 


ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழிண உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பிடாரி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர் சீர்காழி 17வது வார்டு காங்கிரஸ் கிளைச் செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் சாரதா மகளிர் காங்கிரஸ் பிரிவான மகிளா காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.

வழக்கம் போல் தனது வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில், தன் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி காளியம்மன் கோயில் எதிரே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்கை முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் கருகிவிட்டது.

தீக்குளித்த ரவிச்சந்திரன் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவிச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ரவிச்சந்திரனின் உடல் 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் இருப்பதால், அவரது உயிரை காப்பாற்றுவது சந்தேகம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிருக்குப் போராடிய நிலையில் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார் ரவிச்சந்திரன். அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் (காங்கிரஸ்) முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இந்தியா இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ரவிச்சந்திரனை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்ல அவரது பெற்றோரும், தமிழின உணர்வாளர்களும் ஏற்பாடு செய்தனர். ஆனால் ரவிச்சந்திரனனின் உடல் நிலை மோசமாக இருப்பதால், தஞ்சாவூர் கொண்டு செல்லும் வரை அவரது உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு ரவிச்சந்திரன் சிகிக்சை பலனின்றி மரணம் அடைந்தார். . மருத்துவமனையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழின உணர்வாளர்களும் ரவிச்சந்திரனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ஈழத்தமிழருக்கான ஆதரவான முழக்கங்களை கோஷமிட்டனர்.

மரணம் அடைந்த ரவிச்சந்திரனின் உடலுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3145

StumbleUpon.com Read more...

ராஜபக்ஷேவின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன்-ராஜபக்ஷேவின் வலது கரமாக விளங்கிய மங்கள சமர வீரா

ராஜபக்ஷேவின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன் - மங்கள

e0aeaee0ae99e0af8de0ae95e0aeb3பிரபாகரனின் நம்பிக்கைமிகு தளபதியாக இருந்து, இன்றைக்கு அவருக்கு எதிராக அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணா. எதிரும் புதிருமான நிலை எப்போதும் யாருக்கும் ஏற்படலாம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உதாரணமாக அதே இலங்கையில் சமர வீரா! ராஜபக்ஷேவின் வலது கரமாகவும், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்த மங்கள சமர வீரா, தற்போது அதிபருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார். இவர், ராஜபக்ஷே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.

இப்போது ராஜபக்ஷேவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேள்விகளை வைத்தோம்.

"மகிந்த ராஜபக்ஷே இலங்கையின் அதிபரா வதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக்கொண்டது ஏன்?"

"கடந்த 2005-ல் அதிபர் தேர்தல் நடைபெற்றபோது, ராஜபக்ஷேவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப் பாளராகச் செயல்பட்டேன். அவர் அதிபரானதும், எனக்கும் கேபினெட்டில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 பிற்பகுதியில்தான் எங்கள் உறவில்

கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால்… திரிகோண மலையில் நான்கு மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.

இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன்.

நானும் ராஜபக்ஷேவும் அதிபர் சந்திரிகா குமார துங்காவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன். 1995-ல் போல்கோடா ஏரியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது.

கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது கோத்தபயவும், பசிலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது ராணுவத்தின் 'மனஉறுதியை'க் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரி வித்தனர்.

எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006-ல் அதிபருக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.07-ல் நான் வெளியுறவுத் துறை அமைச் சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 9.2.2007-ல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷேவும் அவருடைய சகோதரர்களும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்தப் பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை…"

"நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"சிறீலங்கா சுதந்திராக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படை யாக இருந்த ஜனநாயக சோஷலிஸக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷே ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள் கையை ஒழித்துக்கட்டிவிட்டு, ராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன!

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற போர்வை யில் ராஜபக்ஷே ஆட்சி, எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொறுக்கி வருகிறது. காவல் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர்.

நீதித் துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.

கொழும்பில் உள்ள தமிழர்களை 'வெளியாளர்கள்' என்று சொல்லி காவல் துறை சித்ரவதை செய்கிறது. 'இது ஒரு சிங்கள-பௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை' என்று ஜே.ஹெச்.யு. (ஜதிக ஹெல உருமய) அமைச்சரும், ராணுவத் தளபதி ஃபொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கியப் பங்கு வகிப்ப வர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை!"

"ராஜபக்ஷே அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?"

"இலங்கையின் மக்கள்தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால் ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் ராஜபக்ஷே போரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர்அதிகாரிகளும்கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப் படுகின்றனர். இந்தப் போர், ஒரே நாட்டில் இரு இனக் குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரே ஒரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான். ராஜபக்ஷே அரசாங்கத்தின் அப்பட்டமான சிங்களப் பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகி விடுவார்கள் என்பது நிச்சயம். இதனால் இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்…"

"அப்படியென்றால், ராஜபக்ஷே மனதிலுள்ள திட்டம்தான் என்ன?"

"அதிபர் ராஜபக்ஷேவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்க வில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் 'ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்கவேண்டாம்!' என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு 'ஜனநாயகத்'தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா..? அந்தக் கிழக்கு மாகாண கவுன்சிலுக்கே எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர், அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13-வது சட்டத் திருத்தத்தின்படியான அதிகாரங்கள்கூட எந்த மாகாண கவுன்சிலுக்கும் தரப்படவில்லை.

'அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு' என்பது சர்வதேச நெருக்குதலையும், குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000-த்தில் சந்திரிகா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைவை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்."

"த.சிவராமு, லசந்தா விக்ரமசிங்கே உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?"

"லைசென்ஸ் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள், ராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி ரத்மலானா விமான நிலையம் அருகில் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் லசந்தாவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீட்டர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும், பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி, இது போன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் சிறீலங் காவில் பல இருப்பதாகத் தெரிகிறது. 'கே-9′ எனப்படும் இந்தக் குழு, பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். ராணுவத் தளபதியைப் பற்றிக் கட்டுரை எழுதிய கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும், மகாலட்சுமி மீது நடைபெற்ற தாக்குதலும், லசந்தா கொல்லப்பட்டதும்… இவை எல்லாம் இப்படியரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன. லசந்தா கொல்லப்படுவதற்கு முன்னர் என்னிடம், 'ஜெனரல் ஜனகபெரேரா கோரமாகக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் அரசாங்கமே உள்ளது என்று கொலைப்படையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் கிடைத் திருக்கிறது' என்று சொல்லி இருந்தார்."

"ராஜபக்ஷேவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்ட்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?"

"பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக்கக் குடிமகன். ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும், பசில் ராஜபக்ஷேவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்தா கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகிறோம். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனிடம் இந்தத் தொகுப்பைக் கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.

ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம். இதையெல்லாம் செய்வதற்காக என் மீதும் அரசுத் தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து, ராஜபக்ஷேவின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன்… இதில் நான் உறுதியாக இருக்கிறேன்!'

 

http://www.nerudal.com/nerudal.543.html

StumbleUpon.com Read more...

சிங்கள வீரர்களின் இலங்கை தேசிய கொடி எரிப்பு!


சர்வதேச அனைத்து தற்காப்பு கலை அமைப்பு சார்பில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை கராத்தே, குங்பூ, பாக்சிங், டேக்குவாண்டோ போன்ற தற்காப்பு கலை போட்டிகள் நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்க இலங்கையில் இருந்து 6 வீரர்கள், 2 வீராங்கனைகள் ஆகிய 8 பேர், பயிற்சியாளர் இந்தோனி கர்ண சேனா தலைமையில் வந்திருந்தனர். நேற்று மாலை விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவையொட்டி சிங்கள வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தியபடி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் சிங்கள வீரர்கள் பங்கேற்க வந்திருக்கும் தகவல் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்தது.
அவர்கள் போட்டிகள் நடந்த உள்விளையாட்டு அரங்கின் முன்பு, இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அனைவரும் போட்டியில் இருந்து சிங்கள வீரர்களை வெளியேற்றக்கோரி கோஷம் எழுப்பினார்கள். மேலும் இலங்கை வீரர், வீராங்கனைகள் வைத்திருந்த அவர்கள் நாட்டு தேசிய கொடியையும் தமிழ்நாடு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பறித்து தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

StumbleUpon.com Read more...

ஈழப்பிரச்சனை: தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ராஜபக்சே காதில் விழவில்லை: லயோலா கல்லூரி சர்வே முடிவு


ஈழத்தமிழர் விஷயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய சர்வே முடிவுகளை லயோலா கல்லூரி இன்று வெளியிட்டது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐ.நா. அமைத்துள்ள மருத்துவமனைகள், மக்கள் பாதுகாப்பு வலையங்கள், வன்னியில் தவிக்கும் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது.
ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடந்த சில மாதங்களாக சற்று அதிகமாக குரல் கொடுத்து வருகின்றன. கடந்த வாரத்தில் முத்துக்குமார் என்ற 26 வயதே ஆன வாலிபர் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்தார். இச்சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் நடத்திய ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றி சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த சர்வேயில் மக்கள் முன் ஈழப்பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை வைத்துள்ளனர். தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசு:
இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது என்று 86.5 சதவிதம் பேரும், ராஜபக்சே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது என்று 10.5 சதவிதம் பேரும், தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது என்று 2.0 சதவிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசு மீது கோபம்:
இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும்போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக 85.0 சதவிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் மீது 44.5 சதவிதம் பேரும், 25.5 சதவிதம் பேர் ராஜபக்சே அரசின் மீதும், பன்னாட்டுச் சமூகங்கள் மீது 12.0 சதவிகித பேரும், விடுதலைப்புலிகள் மீது 3.0 சதவிகித பேர் கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
உடனடி தீர்வு போர் நிறுத்தம்:
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என 90 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனி ஈழமே நிரந்தரத் தீர்வு
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று 68 சதவிகித பேரும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச் சுயாட்சி என்று 21 சதவிகித பேரும், தமிழரைப் பௌத்த-சிங்களருக்குச் சமமாக அங்கீகரித்து இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 4.5 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் களச் சூழல்
ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் ராஜபக்சே அரசின் மீது எந்தவிதச் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை என 91.5 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி உருவாகியுள்ளது என 43 சதவிகித பேரும், மத்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது என 32.5 சதவிகித பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈழப்பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறை
தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரசின் தயவு தேவைப்படுவதால், காங்கிரசைப் பகைத்துக்கொள்ளாமல் அனுசரித்துப் போகிறது என 70.5 சதவிகித பேரும், ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறது என 22 சதவிகித பேரும், இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிஜமாகவே குழப்பத்தில் உள்ளது என 4 சதவிகித பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழருக்காக உண்மையான அக்கறை கொண்ட கட்சி எதுவுமில்லை
இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள தமிழகக் கட்சி எதுவுமில்லை, எல்லாமே தேர்தல் அரசியலே செய்கின்றன என 52 சதவிதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அக்கறையுள்ள குறிப்பிட்ட கட்சிகளைப் பொருத்த வரையில், தமிழர் தேசிய இயக்கம் 12.0, மதிமுக 9.5, விடுதலைச் சிறுத்தைகள் 6.5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5.0, திமுக 4.0, பாமக 3.5, காங்கிரஸ் 2.5, அதிமுக 2.0 தேமுதிக 1.0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.0.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3080

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP