சமீபத்திய பதிவுகள்

இந்தியாவில் இணையதளத்தில் செக்ஸ் படங்களுக்கு தடை

>> Sunday, January 10, 2010

 
 

Front page news and headlines today புதுடில்லி : வெளிநாடுகளில் பாலியல் சம்பந்தமான படங்கள், விஷயங்களைத் தேடித் தரும் இணையதளங்களின் தேடல் இயந்திரங்கள் (சர்ச் இன்ஜின்), இந்தியாவில் மட்டும் அதுபோன்ற காட்சிகளைத் தருவதில்லை. மாறாக அவ்வாறு தேடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கின்றன.தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் - 2000ல் சில திருத்தங்கள் சமீபத்தில் செய்யப்பட்டன. அதன்படி, செக்ஸ் தொடர்பான காட்சிகள், விஷயங்கள், இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.இச்சட்டம், 150 ஆண்டுகள் பழமையான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 292வது பிரிவை அடிப்படையாகக் கொண்டது. அப்பிரிவில் ஆபாசம் அல்லது காமத்தைத் தூண்டும் விஷயம் என்பதற்கு விளக்கமாக, "பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அல்லது கேட்பவர்களின் மனதில் காமத்தைத் தூண்டிவிட்டு ஒழுக்கத்தைச் சிதைக்கும் விஷயம்' என்று கூறப்பட்டுள்ளது. பல மத சம்பிரதாயங்கள் கோலேச்சிவரும் இந்தியாவில்தான் பிற நாடுகளை விட பாலியல் விஷயங்கள், இணையத்தில் தேடப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், புதிய சட்டத் திருத்தம், இணையதளங்களில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இணையதளத்தில் பிரபல தேடல் இயந்திரங்களான யாஹூ, பிளிக்கர் போட்டோ போன்றவற்றில் பாலியல் தொடர்பான ஆபாசமான காட்சிகள், செய்திகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கொரியாவிலும் இந்தக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட்டின் "பிங்' தேடல் இயந்திரமும் பாலியல் விஷயங்களைத் தருவதில்லை. சமீபத்தில் ஆந்திர கவர்னர் என்.டி.திவாரியின் மீதான பாலியல் புகார், ஒரு குடும்பப் பெண் தன் அந்தரங்கங்களை எல்லாரும் பார்க்கும்படியாக இணையதளத்தில் வெளியிட்டது, பின் மத்திய அரசு அதைத் தடை செய்தது போன்றவை, பாலியல் தொடர்பான விஷயங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்துவிட்டன என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்."இணையதள சேவை தருவோர் கழக'த்தின் (இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்ஸ் அசோசியேஷன்) தலைவர் ராஜேஷ் சாரியா கூறுகையில், "இந்தியக் கலாசாரத்துக்கு இவை எதிரானவை. இதுபோன்ற காட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்' என்றார்.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டார் :

மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டார் : மருத்துவ சான்றிதழில் தகவல்

 

Top global news update 

லண்டன் : பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதாக மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது என, பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த அமெரிக்க பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகப்படியான போதை மருந்தை உட்கொண்டதால் இறந்ததாக கூறப்பட்டது. அதிகமான போதை மருந்தை கொடுத்ததற்காக அவரது டாக்டர் கொன்ராட் முரே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே லண்டனிலிருந்து வெளிவரும், "நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகை, மைக்கேல் ஜாக்சனின் இறப்பு சான்றிதழில், "அவர் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது. மைக்கேல் ஜாக்சனுக்கு கடைசியாக சிகிச்சையளித்த டாக்டர் செர்ரி மேக் வில்லி, அவரது இறப்புக்கான காரணம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், ஆகஸ்ட் மாதம் மைக்கேல் ஜாக்சனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர் கிறிஸ்டோபர் ரோஜர், "இந்த சாவு அப்பட்டமான கொலை' என, இறப்பு சான்றிதழில் திருத்தி எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சான்றிதழின் நகலையும் இந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.
"மைக்கேல் ஜாக்சன் உடல் நிலை மோசமான நிலையில் இருந்த போது கடுமையான போதை மருந்தை கொன்ராட் முரே அவருக்கு செலுத்தியுள்ளார். இதனால் தான் மைக்கேல் ஜாக்சன் இறந்துள்ளார். எனவே, மற்றவர் மூலம் செலுத்தப்பட்ட கொடிய போதை மருந்தால் ஜாக்சன் இறந்ததால் இது கொலை தான்' என, மருத்துவ ஆய்வாளர் கிறிஸ்டோபர் ரோஜர் குறிப்பிட்டுள்ளதாக, இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி

 
 

டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனம் உங்களுடைய லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் டிவி நிகழ்ச்சியை லைவாகப் பார்க்கும் வசதியைத் தருகிறது. இந்நிறுவனம் வழங்கும் இன்டர்நெட் இணைப்பினைத்தரும் டாட்ட போட்டான் ப்ளஸ் (கூச்tச் கடணிtணிண கடூதண்) தற்போது டிவி பார்க்கும் வசதியுடன் தரப்படுகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி இருக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ்,நியூஸ், பொழுதுபோக்கு மற்றும் அந்த அந்த இடங்களில் பிரபலமான சேனல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ஒளிபரப்பப்படும் நேரத்திலேயே கிடைக்கும். இவற்றுடன் ஏற்கனவே ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் பதிவு செய்யப்பட்டு, பட்டியலிடப்பட்டு தரப்படுகின்றன. இவற்றிலிருந்தும் நீங்கள் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 
டிவி சேனல் நிகழ்ச்சிகளை சந்தா கட்டிப் பெறலாம். மூன்று வகையான சந்தா முறை உள்ளது. ரூ.5 செலுத்தினால் ஒரு மாதத்திற்கு ஒரு சேனல் பார்க்கலாம். 10 சேனல்கள் அடங்கிய தொகுப்பு காண ரூ. 29 செலுத்த வேண்டும். அனைத்து சேனல்களையும் பார்க்க ரூ.75 செலுத்த வேண்டும். இவை தவிர டேட்டாவிற்கான தொகையை இன்டர்நெட் வசதிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளபடி செலுத்த வேண்டும்

source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மலேசியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீ வைப்புத் தாக்குதல்

  


 

பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் தமது நம்பிக்கைப்படி கோயில்களைக் கட்டி வழிபாடு நடத்த முழு சுதந்திரமுள்ள ஒரே முஸ்லிம் நாடான மலேசியாவில் சமீப காலமாக இனங்களுக்கிடையே பிளவுகளை உண்டாக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

அதாவது இக்குழுக்கள் திட்டமிட்டு மலேசியாவிலுள்ள முக்கிய கிறித்தவ தேவாலயங்கள் மீது தீக் குண்டு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.

இதுவரை இத்தாக்குதல்களில் 4 தேவாலயங்கள் இலக்காகியுள்ளன.

தேசா மெலாவத்தியில் உள்ள மெட்ரோ டபெர்னக்கால் தேவாலயம்,பெட்டலிங் ஜெயாவில் உள்ள அஷம்ப்சன் தேவாலயம், லைப் சாப்பால் தேவாலயம் ஆகியவையே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

 பெட்டலிங் ஜெயாவில் உள்ள குட் ஷெப்பர்ட் லூதரன் தேவாலயமே இறுதியாகத் தீ வைக்கப்பட்ட தேவாலயமாகும்.

'அல்லாஹ்' எனும் வார்த்தையை கத்தோலிக்க நாளேடான ஹெரால்டில் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதித்ததே சமய உணர்வுகளைத் தூண்டி விட்டு இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ காரணமாக அமைந்து விட்டது என்று மலேசியாவின் ஆளும் கட்சியான அம்னோவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை மலேசியப் பிரதமர் நஜீப் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மத ரீதியான இத்தாக்குதல்களுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
 source:4tamilmedia

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!

 
  

பிறந்த குழந்தையானது முதல் மாதத்திலிருந்து பன்னிரண்டாவது மாதம் வரை அதாவது ஒரு வருடம் வரை படிப்படியாக எப்படி, என்ன வளர்ச்சிகளைக் காண்கிறது தெரியுமா? இதை குழந்தை பெற்ற பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதம்

பிறந்த குழந்தையை தூக்கும் போது, அதன் தலை நேராக நிற்காமல் விழும் தலையோடு சேர்த்து தூக்க வேண்டும். அதை குப்புறப் படுக்க வைத்தால், அதன் இடுப்பு, கைகள் மற்றும் கால்களைவிட சற்று உயரத்தில் இருக்கும். அதன் உள்ளங்கையைத் தொட்டால், கைகளை மூடிக் கொள்ளும்.

இரண்டாம் மாதம்

கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளும், இடுப்புப் பகுதியைக் கீழே வைத்துக் கொள்ளும்.

மூன்றாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலை லேசாக நிற்கும். கட்டை விரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பிக்கும்.

நான்காவது மாதம்

தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கும். நிற்க வைக்க இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்தால் பிடித்துக் கொள்ளும்.

ஐந்தாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.

ஆறாம் மாதம்

எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். முன்னங்கைகளைத் தரையில் அழுத்தமாக ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.

ஏழாம் மாதம்

பிடிமானமில்லாமல் உட்காரக் கற்று கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நிற்கும். தனது கைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளும்.

எட்டாம் மாதம்

கொஞ்சம் தடுமாற்றமின்றி நன்றாகவே உட்காரும். உடலின் மொத்த எடையையும் தன் கால்களில் தாங்கியபடி நிற்கப் பழகும். டம்ளர், பால் பாட்டில் போன்றவற்றைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.

ஒன்பதாம் மாதம்

பத்து நிமிடங்கள் வரை தடுமாறாமல் உட்கார முடியும். எதையாவது பிடித்தபடி நிற்க ஆரம்பிக்கும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகக் குவிக்கக் கற்றுக் கொள்ளும்.

பத்தாம் மாதம்

முன் பக்கமாகச் சாய்ந்து அங்கே கிடக்கும் பொருட்களை எடுக்கும். கைகளை ஊன்றியபடி தரையில் தவழ ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக் கொள்ளும்.

பதினோராம் மாதம்

உட்கார்ந்த நிலையில் உடலைத் திருப்ப அதனால் முடியும். முழங்கால்களைத் தரையில் ஊன்றியபடி தவழ ஆரம்பிக்கும். நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். ஆட்காட்டி விரலால் தரையில் எதையாவது எழுதுகிற மாதிரிச் செய்யும்.

பன்னிரண்டாம் மாதம்

கைகளையும், கால்களையும் உபயோகித்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும் கூட ஸ்திரமாக நிற்கப்பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்ளும்.

 source:dinakaran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP