சமீபத்திய பதிவுகள்

பெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி

>> Friday, June 27, 2008

 
பெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க பெண் தளபதி செல்வியின் இறுதிச் சடங்கில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி பங்கேற்றார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி வெளி நிகழ்ச்சிகளில் மிகவும் அரிதாகத்தான் கலந்து கொள்வார். இந்த நிலையில் மரணமடைந்த, விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு ராணுவப் பயிற்சியாளரான செல்வியின் இறுதிச் சடங்கில் மதிவதனி கலந்து கொண்டார்.

செல்வி, மூத்த பெண் விடுதலைப் புலி தளபதி ஆவார். பல போர்களில் இவர் பங்கேற்றுள்ளார். சோதிய படையின் துணைத் தலைவராக செயல்பட்டார்.

சமீபத்தில் இவர் மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கு கிளிநொச்சியில் நடந்தது. இவரது இறுதிச் சடங்கில் மதிவதனி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பலரும் பேசினர். இருப்பினும் மதிவதனி உரை எதுவும் நிகழ்த்தவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய விடுதலைப் புலிகள் இயக்க பெண்கள் படைப் பயிற்சி மையத்தின் மூத்த பயிற்சியாளரான சஞ்சனா கூறுகையில், செல்வி, 1995ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பல்வேறு போர் முனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.

வீராங்கனையாக மட்டும் இல்லாமல் கவிதை எழுதும் திறனும் படைத்தவர் செல்வி. நன்கு பாடவும் செய்வார். விடுதலைப் புலிகளின் ரேடியோ மற்றும் டிவியிலும் அவர் பல நிகழ்ச்சிகளைக் கொடுத்துள்ளார்.

செல்வியின் வீர, தீரத்தைப் பாராட்டி, 34 நாள் பயிற்சிக்குப் பின்னர் அவரை மகளிர் போர் பயிற்சிக் கழகத்தின் மூத்த நிர்வாகியாக புலிகள் நிர்வாகம் நியமித்தது என்றார்.

செல்வி எப்படி இறந்தார், அவரது வயது என்ன என்ற விவரங்களை புலிகள் இயக்கம் வெளியிடவில்லை.

 
 

StumbleUpon.com Read more...

மைக்ரோசாப்ட்: விலகுகிறார் பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட்: விலகுகிறார் பில்கேட்ஸ்
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Bill Gates and Steve Ballmer
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் அதன் தலைமைப் பொறுப்பில் (Head) இருந்து இன்று விலகுகிறார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கேட்ஸ், இனி தனது பெரும்பாலான நேரத்தை பில் கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளையின் சமூக நலப் பணிகளில் செலவிடவுள்ளார்.

ஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Chairman பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார். இதுவரை கேட்ஸ் வகித்து வந்த தலைமைப் பொறுப்பில் ஸ்டீவ் பால்மர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பால்மர் மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்தார்.

1975ல் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கினார் கேட்ஸ். 52 வயதான கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து உலகின் மிகப் பெரிய அறக்கட்டளையையும் நிறுவி அதன் மூலம் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மூன்றாம் உலக நாடுகளில் இந்த அறக்கட்டளை எய்ட்ஸ் கட்டுப்பாடு, நோய்கள் ஒழிப்பு, கல்வியறிவூட்டல் போன்ற பெரும் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையில் உலகின் மாபெரும் பணக்காரரான வாரன் பவெட்டும் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளார்.

 

StumbleUpon.com Read more...

செல்போனில் திருமணம்!

செல்போனில் திருமணம்!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

பண்ருட்டி: பண்ருட்டியில் மணமகளுக்கும், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணமகனுக்கும் செல்போனிலேயே திங்கள்கிழமை திருமணம் நடந்தது.

பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மகன் முகமது யாசின் (21), அபுபக்கர் மகன் ஷாஜகான் (37).

ஷாஜகான் வீட்டில் குடியிருக்கும் அப்துல் அஜீஸ் மகள் நிலோபர் நிஷாவுக்கும், சுலைமான் மகன் முகமது யாசினுக்கும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு 12.6.2008ல் நிச்சயம் செய்யப்பட்டது. 23.6.2008-ல் திருமணம் நடத்த தேதி குறித்தனர்.

இதை அறிந்த ஷாஜகான், நிலாபர் நிஷாவை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் இருவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் கத்தியால் முகமது யாசினை குத்தினார்.

இதில் காயம் அடைந்த முகமது யாசின் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந் நிலையில் 23.6.2008 அன்று பண்ருட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துவா ஓத, அதை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணமகன் முகமதுயாசின் செல்போன் மூலம் கேட்டவாறு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

யூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்

யூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்
யூரோ 2008 கால்பந்து அரையிறுதியில் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஆட்டத்தின் இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாத நிலையில், 50-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஸாவி தனியாக பந்தை கடத்தி, ரஷ்யாவின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று கோலாக மாற்றினார்.

டேவிட் வில்லாவிற்கு பதிலாக களமிறங்கிய ஃபேபர்காஸ், ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ரஷ்ய தடுப்பு வீரர்களை சாதுர்யமாக எதிர்கொண்டு, ஒரு ஷாட்டை லேசாக தூக்கி அடிக்க அதனை குய்சா கோலாக மாற்றினார்.

அதன்பின் 3-வது கோலுக்கு வழிவகை செய்தவரும் ஃபேபர்காஸ்தான். இவர் படு வேகமாக பந்தை எடுத்து சென்று சில்வாவிடம் அடிக்க, சில்வா அதனை 3-வது வெற்றி கோலாக மாற்றினார்.

ஜெர்மனியும் ஸ்பெயினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

இந்து மதம் எங்கே போகிறது? (16-30)

 

இந்து மதம் எங்கே போகிறது? (16)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

'நக்கீரன் இதழில் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர மடங்களின், சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....

வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் - என சங்கரர் சொல்லி அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

குட்டைதான் குழம்பியது அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க.. ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.

ஆகமக்காரர்களா...? முதலில் ஆகமம் என்றால் என்ன?

கடவுளை எப்படி வழிபடவேண்டும் என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப் பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்யவேண்டிய சடங்குகளையும் பற்றி சொல்வதுதான் ஆகமம் ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.

இதில் வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 6 ஆகமங்களும் இருக்கின்றன.

வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.

பெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும் அர்ச்சிக்கவேண்டும்.. ஆகியவற்றை 'விகனசர் என்பவர் வகுத்தார் எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.

அடுத்ததாக.. பெருமாளே இறங்கி வந்து 'என்னை இப்படி இப்படியெல்லாம் ப+ஜிக்கவேண்டும் புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும், அலங்காரம் பண்ணவேண்டும் என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது இதுவே பாஞ்சராத்ர ஆகமம் எனப்படுகிறது.

சைவ சம்பிரதாயத்துக்கு 6 ஆகமங்கள் அவற்றில் பலவற்றை இப்பொழுது புழக்கத்தில் பார்ப்பதே அப+ர்வமாகி விட்டது.

சரி.. இவைதான் ஆகமங்கள் அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள்தான் ஆகமங்கள் இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்.. இதோடு இன்னொன்றையும் கூறின.

'இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால்தான் மோட்சம் கிட்டும் என்பதுதான் அது.

இங்கேதான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார் கண்டித்தார் என்றுகூட சொல்லலாம்.

கடவுள் மட்டும்தான் நிஜம் மற்ற அனைத்தும் மாயம், பொய் ஆகமங்கள் பொய்களை திரட்டி வந்து உண்மையை ப+ஜிக்கச் செய்கின்றன அந்த உண்மையைக்கூட விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன இப்படியெல்லாம்.. ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது கடவுளின் கடாட்சமும் கிட்டாது.

ஆகமங்கள் தவறு அதை அடியொற்றுவதும் தவறு என வாதிட்டார் ஆதிசங்கரர்.

அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...? சொன்னார்.

"சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம்

நித்ஸங்கத்வே நிர்மோகத்வம்

நிர்மோகத்வே நித்ஸலசித்தம்

நித்ஸலசித்தே ஜீவன்முக்தி..."

இந்த வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?

சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும்போது உனக்கு உலகியல் மீதான நாட்டம் குறைகிறது.

உலகியல் பற்று குறையும்போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது.

மோகத்தை நீ விட்டுவிட்டபோது உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது.

சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும்.

இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.

இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும் தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர் தனது 3 வயதிலேயே மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.

அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்.. அவர் இன்ன இடத்தில்தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான் நிலவுகிறது.

ஒருவேளை கிடைத்திருந்தால்.. அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள் நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை அதனால்.. ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.

இந்த ய+கங்கள் ஒருபுறம் இருக்க.. சங்கரரின் காலம்பற்றியும் பல கணிப்புகள்! தனது னுளைஉழஎநசல ழக ஐனெயை என்னும் வலுவான வரலாற்று நூலில் ஆதிசங்கரர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.

இன்னும் சிலர்.. நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள் இவர்களைத் தாக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும் சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர் என்கிறார்கள் சகஜமாக.

இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர்தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பதுதான் வரலாற்றை வடிகட்டிப் பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.

என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி முடித்துவிட்டாரே? சங்கரர் என்றால் மடங்கள்தானே ஞாபகம் வரும் அவற்றைப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில் தீர்க்கமாக தெறிக்கிறது.

சங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகுதானே ஆரம்பிக்கப்பட்டவை? அதை எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.

 

(தொடரும்)


--------------------------------------------------------------------------------


இந்து மதம் எங்கே போகிறது? (17)

அப்படியானால்...

சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?.. அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?.. அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.

தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.

புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்.. வைஷ்ணவர்களால் 'ப்ரசன்ன பௌத்தர் என்றே அழைக்கப்பட்டார் அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார் இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்.. ப்ரஸன்ன பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

சங்கரரர் காலத்துக்குப் பிறகு.. அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள் சங்கரரை போலவே ஊர் ஊராக சுற்றினார்கள்.

வாழ்வே பொய் எதையும் நம்பாதே சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள்.

'தனேஷனே.. பார்யஷனே.. புத்ரேஷனே' என சொல்லித்தான் அவர்கள் சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையைத் துறந்தேன் மனைவி (பெண்) இச்சையை மறந்தேன் அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பதுதான் இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள்.

"நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம்" என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் எனச் சொன்னார்.

அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப நாமும் புத்தரைப் பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே" என ஆலோசித்தனர்.

என்ன யுக்தி?...

இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில் நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா? இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே?  இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான் பெற்றார்கள் என இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர்.

அதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள்.. புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக் கொத்தாய் நடந்தனர்.

தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு மடத்தை எழுப்பி.. அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் ப+ரியில் மடத்தை நிர்மாணித்தார்கள் மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது மடம்.

வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர்.

இவ்வாறு சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.

ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க இம் மடங்களில் எந்தவிதமான ப+ஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின்படி.. விக்ரக வழிபாடு கிடையாது, ப+ஜைகள் கிடையாது கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது ஆகமங்கள் கிடையாது வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.

சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக சமையல்?...

சமையல் இல்லையென்றால்,  அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே ப+ஜை எப்படி நடக்கும்? ப+ஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்?

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்  ளூயமெயசய  ஆரவாள யசந யசந ழடெல கழச pசழஉடயஅயவழைn ழக யுனஎலனயஅ."

அதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி.. அத்வைத கொள்கையை பறைசாற்றி.. உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி வேறெதற்கும் அல்ல.

இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா? சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?..

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (18)

ஆதிசங்கரர் போதித்தபடிதான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.

வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை.

அந்த முறையில்.. சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?.. என்பதைப் பார்க்கக் கடவோம்.

ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் எனக் கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான ப+கோள வழிகாட்டுதல்கள் என எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத் தகுந்ததாகிறது.

இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள் கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன அந்த சின்னச் சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு.

விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம் ஆகிறது?

அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள் செய்திருக்கிறார் இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும்.

இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி, கால் நடையாகவே சுற்றி அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார். கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து இன்று இந்தியா என்று சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.

ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத்,  கிழக்கே ப+ரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய்  எக்கச்சக்க தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதைக் காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.

அடுத்ததாக...

சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய ப+மி எங்கே இருக்கிறதென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.

அப்படியானால்.. சங்கரர் முக்திபெற்ற பிறகு அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக.. அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக.. சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?.

சரி.. சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான் அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.

அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள் இன்னொரு பக்கம் சங்கரர்.. சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.

தெய்வ சாட்சியா? ஆமாம் கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில்தான்.. மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன் அதாவது.. சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன் மூலம் உலகியல் பற்றை ஒழித்து.. மோகத்தை துறந்து.. அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.

இதைச் சொன்ன சங்கரர்.. விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது, மனசு சுத்தமானாதான் மோட்சமே தவிர.. அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம் இப்படிப்பட்ட சங்கரர்.. தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா...?

அதிலும் 'அகம் ப்ரம்மம்" என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளைக் கவனியுங்கள்.

தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு.. கிழக்கே உள்ள ப+ரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சிவ வழிபாடு.. மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும் விக்ரக வழிபாடு. மூர்த்தி உபாஸனை அதுவும் வௌ;வேறு தெய்வ வழிபாடு.  சங்கரரே உண்மையில் மடங்களை ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா? இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம் 'சங்கரர்தான் மடங்களை ஸ்தாபித்தார் அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்" என்று.

சபாஷ் இந்த பதில்தான் முதல் கேள்விக்கு பதில் அதாவது.. சங்கரர் போதித்தபடிதான் மடங்கள் நடக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.

அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த கேள்வி காதில் கேட்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு அது கும்பகோண மடம்தான்.


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (19)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா? இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 50 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன்.

இன்றைய பெங்க@ரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கடந்து.. தண்மையான துங்கா நதியின் மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம்.

 எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம் மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.

மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க.. அங்கேயும் சில பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும் அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு.

இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம் மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான் சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும் அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது

அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது இந்த இடத்தில் மடாதிபதி என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.

மடங்களின் அதிபதி மடாதிபதி அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர் அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் _த்தவர்கள் மடாதிபதி என அழைக்கப்படுவார் அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர் அடுத்த மடாதிபதியாக வருவார் இதுதான் மடாதிபதி என்பதன் பொருள் மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம் செய்பவர் அல்ல அதாவது.. அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள் சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார் அதாவது கூhந ளுநNiடிச ளுயiவே நெஉடிஅநள ளநநச இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?

அப்படி ஒரு _த்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில் அவரைப் பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.

அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய...

"நில்லுங்கள்" என்றது மடத்துக்காரரின் குரல். "நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார் போய்விடுங்கள்."

ஏன்...? கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.

"ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள், உங்கள் சம்பந்தம் வேண்டாம், உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம், புத்ர சுகம்.. முதலான லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார்? பிறகு எப்படி உங்களை நோக்குவார் பிக்டீhந்திக்காக வந்தால் அப்போது இப்பழக்கங்களை இடுங்கள் இப்போது திரும்ப நடங்கள்" என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.

ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம் பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து போனார்கள்.

இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.

:ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான் அனுமதிக்க வேண்டியது தானே...?"

"இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?"

"அனுமதி இல்லையா? ஏன்?"

இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.

மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக் கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர் அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.

"நீங்கள் தமிழ்நாட்டுப் ப+ர்வீக பிராமணர்கள்தானே..."

"ஆமாம்.. அதற்கென்ன?..."

"நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால் உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை. என்றனர் மடத்துக்காரர்கள்.

"தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே.. நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?."

"ப+கோள எல்லை கிடக்கட்டும்.. உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை..."

கருநாடக மண்ணில் 'தமிழர்கள்" முதன்முதலாக அனுமதி மறுக்கப்பட்டது இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.

(தொடரும்)


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (20)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்.. காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.

மறுபடியும் மடத்தின் வாசல் "நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்.. எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்) இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம் உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்."

"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே.. நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா?" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம். சோழ மண்டலத்திலிருந்தும் திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர் முறையாக தீட்சை பெற்று.. சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.

அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.

"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்குபெறவேண்டும். குடுமியை முடிந்துகொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.

"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம் என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போதுதான் ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.

"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல,  வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே..."

இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க.. அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.

தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்கர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை பரிபாலித்தனர்.

இம் மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க.. காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.

கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.

அதாவது.. அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, ப+ரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.

அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.

கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம் சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.

மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும் உபந்யாசங்களுக்காகவும் கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.

அப்போது தஞ்சாவ+ரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நாயக்க மன்னர்கள் சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான்.

அறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.

அப்படிப்பட்ட ஒரு மடம் ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.

எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.

உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. காஞ்சியிலிருந்த அம்மடம் காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது. புதிய மடம் சொத்துகளை நிறைய தானமாக  மன்னர்கள் கொடுத்தனர்.  அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.

எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மாணித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...?

(தொடரும்)


--------------------------------------------------------------------------------

இந்து மதம் எங்கே போகிறது? (20)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும் காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.

மறுபடியும் மடத்தின் வாசல் "நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்.. எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்) இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்."

"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே. நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா?" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும் திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர் முறையாக தீட்சை பெற்று. சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.

அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.

"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும் மட காரியங்களில் நாம் பங்குபெறவேண்டும்" குடுமியை முடிந்துகொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.

"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம்" என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போதுதான் ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.

"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல.  வேத ஞானம் விருத்தியானவர்கள் நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே?"

இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.

தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்கர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தைப் பரிபாலித்தனர்.

இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.

கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.

அதாவது அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, ப+ரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.

அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.

கட்டிடம் கிடையாது. பெரிய இடம் கிடையாது. சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம் சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.

மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும் உபந்யாசங்களுக்காகவும் கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.

அப்போது தஞ்சாவ+ரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர் நாயக்க மன்னர்கள் சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான்.

அறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.

அப்படிப்பட்ட ஒரு மடம்.. ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.

எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.

உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.

காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது புதிய மடம் சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர் மன்னர்கள் அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 7 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.

எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு.. கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...?

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (21)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

நக்கீரன் இதழில் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர மடங்களின், சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.

கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம். பெண்களை உள்ளே அனுமதிக்காத, 'எல்லைகளை" கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவ+ர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி ராமநாதபுர சமுத்திரக்கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.

ஆனால் இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம் அதாவது, 'எல்லை" தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.

இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா?

பரமாத்மனே யேர் ரக்தஹ
விரக்தோ அபரமாத்மநீ....

என்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன. அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசை வைப்பவன் பக்தன் கிடையாது. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.

இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே" என அழைக்கிறார்கள் சிந்தித்துப் பாருங்கள் நம்மில் 'பக்தர்கள்" எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள் (!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்?

அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது என்று ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.

இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம் பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.

அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார் (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன) இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின் பக்தர்கள் ஆனார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.

'நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள் என அவர்களும் இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள்" என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க.. இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.

மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுத பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளிய+ர்களுக்குச் சென்று வந்தாலும் மகா பெரியவரின் ப்ராப கண்டா பெருகியது.

அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான ப+ரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.

கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் ப+ரி சங்கராச்சாரியார் நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள் நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் 'தேசாந்திரம் எனப்படும் வெளிய+ர் பயணங்கள் மேற்கொள்ளும்போது 'கும்பகோணம் மடாதிபதி வருகை"  என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.

இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.

நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும் காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா?

சரி.. மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் மெய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா?


 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (21)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு.. கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம் பெண்களை உள்ளே அனுமதிக்காத, 'எல்லைகளை கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவ+ர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி ராமநாதபுர சமுத்திரக்கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.

ஆனால்.. இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம் அதாவது, 'எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.

இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா?

பரமாத்மனே யேர் ரக்தஹ
விரக்தோ அபரமாத்மநீ

என்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசை வைப்பவன் பக்தன் கிடையாது இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்.. பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத.. லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.

இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே"என அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் 'பக்தர்கள்" எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள் (!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது. காரணம்?

அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது என்று ஸ்மிருதி வகுத்த விதி. அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.

இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு 'சிறப்பாக நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.

அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார் (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின் பக்தர்கள் ஆனார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார் இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.

'நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்" என அவர்களும்,  இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள் என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.

மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதி. பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளிய+ர்களுக்குச் சென்று வந்தாலும் மகா பெரியவரின் ப்ராப கண்டா பெருகியது.

அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான ப+ரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார் இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.

கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் ப+ரி சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளைக் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் 'தேசாந்திரம்" எனப்படும் வெளிய+ர் பயணங்கள் மேற்கொள்ளும்போது 'கும்பகோணம் மடாதிபதி வருகை" என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.

இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.

நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது கும்பகோண மடம் மறுபடியும்.. காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா?

சரி. மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா?

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (22)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

மகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளுடன் நான் பெற்றிருந்த பாக்கியத்துக்குரிய தோழமை அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் முன், அவரோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய என் வாழ்க்கை நிலைமையும் ஞாபகத்தில் வந்து கூத்தாடுகிறது.

இதைச் சொல்லிவிட்டுப் பிறகு மகா பெரியவரின் தோழமைக்குள் நுழைந்ததை தொட்டுத் தொடருகிறேன்

என் குழந்தைப் பருவத்திலே நான் தொட்டு விளையாடிய பொருள்களிலே வேதப்புஸ்தகங்களும் அடங்கும்.

என்னுடைய தகப்பனார்...

தாததேசிக தாத்தாச்சாரியார் வேதங்களைக் கரைத்துத் தாளித்துத் தளிகை செய்து உண்டவர் என்றுகூட சொல்லலாம். நான் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என் சின்னச் சின்ன செவிமடல்களில் அவரது வேதக்குரல் மோதிக் தளும்பும் அப்போது எனக்கு வேதமும் தெரியாது வெங்காயமும் தெரியாது.

நான் வளர்ந்த நாள்களில் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும்போது சொந்தக்காரர்கள் பலர் அது சொல்லுது.. இது சொல்லுது.. என பேச வைத்துக் கொண்டிருக்க.. என் தந்தையார் என்னைக் கொஞ்சும்போதும் வேத மந்திரங்களைத்தான் சொல்லுவாராம். நான் ரொம்ப அடம்பண்ணினால் கோபிக்கும்போதும், வேத மந்திரங்களிலிருந்து சில கடும் புத்தி சொல்லும் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் கோபிப்பாராம்.

இப்படியாக எனக்குத் தெரியாமலேயே வேதங்கள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தன.

கற்கும் வயது வந்ததும் என்னுடைய தகப்பானாரே எனக்கு வேதங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் வேத அத்யயனம் செய்த நான் அவருடைய மகனாக மட்டுமன்றி மாணவனாகவும் மலர்ந்தேன். வேதத்தின் ஓசைகளைக் காதால் கேட்டு அதை நாக்கால் புரட்டிப் போடுவது தான் வேத அத்யயனம் என்ற நிலை இருந்த அந்தக் காலத்தில் எனக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வேதத்தின் பொருள் பகுத்து விளக்கிவந்தார் தகப்பனார்.

பதினைந்து வயது முதலான நாள்களில் வேதங்களைப் பற்றி நானே சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் நாட்டில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதென்ன ஆரிய சமாஜம்?

தயானந்த சரஸ்வதி என்பவரால் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு பிராமணர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியதை அன்று இளைஞனான என்னால் உணர முடிந்தது.

அந்த அளவுக்கு தயானந்த சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா?

வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாகப் பயன்படுத்திவிட்டனர். இதனால் வேதம் பிராமணர்களின் வீட்டு புஸ்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது.

"தாங்களும் வேதத்தைக் கற்காமல் அடுத்தவர்களும் கற்காமல் வேதத்தை அவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். எனவே, வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்கவேண்டும். வேதப்பொருள்களை அனைவரும் உணரவேண்டும். அனைவரும் என்றால் பிராமணர் அல்லாதவர்களும்."

என்ற ரீதியில் தயானந்த சரஸ்வதி பரப்பிய கருத்தை அவரது ஆரிய சமாஜத்தினர் இந்தியா முழுவதும் பரப்பி வந்தனர். இங்கே தமிழ் நாட்டுக்கும் வந்து சேர்ந்தது அந்தக் கருத்துரு.

பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. சென்னை சவுகார்பேட்டையில் வந்து சமாஜத்தினர் கூட்டங்களும் போட்டனர்.

இந்த நிலையில்தான் கும்பகோணத்தில் வேதம் படித்துணர்ந்த நானும் என் சனாதன சகாக்களும் பிராமணீயத்தைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம்.

பிராமண சபை என ஒரு சபையை அமைத்தோம். அந்த நேரத்தில் ஈரோடு ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் பிராமணர்களை,  பிராமணீயத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார். எனவே நாங்கள் 'பிராமண சபை'யை ஆரம்பித்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் பிரச்சாரங்களில்    ஈடுபட்டோம்.

ஊர், ஊராக கிராமம் கிராமமாக ஜில்லா முழுவதும் செல்வோம். ஒருநாள் உபந்யாசம் செய்தால் சபையிலிருந்து 10 ரூபாய் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஊரெல்லாம் சுற்றி நாங்கள் ராமசாமி நாயக்கருக்குப் பதிலடி கொடுத்து வந்த வேளையிலே ஒரு சுவராஜ்யம்.

பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் எனும் ஒரு நண்பர் வேதங்கள் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சூத்திரர்களைத் தாக்கி, அவமானப்படுத்தும் விதமாக உள்ள ஸ்லோகங் களையெல்லாம் எடுத்து எழுதி ராமசாமி நாயக்கரின் இயக்கக்காரர்களிடம் கொடுத்து விடுவார். அவர்களுக்கு எங்களை வசவுபாட இது மேலும் வசதியாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையிலும் சனாதன தர்மசபை என மேலும் ஒரு சபை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி வெங்கட்ராமய்யர், எம்.கே. வைத்யநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் எங்கள் சபைக்கு வரத்தொடங்கினர்.

அப்போது கும்பகோணத்தில் கம்பீரமாக இருந்த சங்கரமடத்தின் சார்பில் ஆரிய தர்மம் என்னும் ஒரு பத்திரிகைகூட வெளிவந்தது அதிலே என்னுடைய சித்தப்பா அக்னிஹோத்ரம் கோபால தேசிகாச்சாரியார் எடிட்டர் ஆகவும் இருக்கிறார் அதோடு 'ஜாதி தத்வ நிரூபணம்" எனும் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.

இப்படியாக நான் சபைகளின் மூலம் வேத தர்மத்தைக் காக்க பிரச்சாரத்திலும், சில பத்திரிகைகளில் எழுதிக்கொண்டும் இருந்தபோது அடிக்கடி சென்னை சென்றும் வருவேன்.

நான் இப்பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட கும்பகோண மடத்தின் சங்காராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னைப் பற்றி சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களிடமே என்னை அவர் கூப்பிட்டு அனுப்ப...

என் இளமைப் பருவத்தின் ஒரு காலை வேளையில் கும்பகோணம் சங்கர மடத்துக்குப் போனேன.; தாத்தாச்சாரீ! வாரும், உட்காரும், என அழைத்து தன் அருகிலேயே என்னை உட்கார வைத்தார். (தொடரும்)

நன்றி 'நக்கீரன்" - 26.2.2005


--------------------------------------------------------------------------------


 

இந்து மதம் எங்கே போகிறது? (23)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

"வாரும் தாத்தாச்சாரியார்.. நன்னா இருக்கீரா? உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா.. தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமே.. உடம்பை பார்த்துக் கோங்காணும்...."

என முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார் சங்கராச்சாரியார்.

சனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணணுமே ஸ்வாமி, அதான் அங்க இங்கேன்னு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலேயே இருக்கேன்.

என நான் பதில் சொல்ல... எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.

நானும் சளைக்காமல் போன, வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.

எனது அனுபவங் களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர் 'ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்.. இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்" என விடை கொடுத்தார்.

அவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.

நான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு.

என்ன ஓய்.. நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்.. ஆனா இவர் சங்கராச்சாரியாரை பார்த்துட்டு வந்திருக்காரே.. இதெல்லாம் நன்னா இருக்கோ... என என் காதுபடவே கும்பகோணத்தில் சில குரல்கள் புறப்பட்டன.

இதெல்லாம் நன்னா இருக்கோ? என பார்ப்பதற்கு முன் 'அதென்ன ஆச்சார்ய புருஷாள்?" என உங்களுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.

ஒரு சமூகத்தில் அதாகப்பட்டது அந்தக் கால பிராமண சமூகத்தில் சமய தத்துவங்களை போதிக்க ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவை நிரம்பப் பெற்ற சிந்தனவாதிகளுக்குக்குத்தான் சிறப்புத் தகுதி இருந்தது. அதாவது அவர்களை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர்.

இதுபோல் அனைத்துச் சமய தகுதிகளும் வாய்க்கப் பெற்ற குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிற் சிலர்தான் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து சகல மரியாதைகளையும் கௌரவத்தையும் கொடுத்து போற்றி வந்திருக்கிறார்கள். அப்படி போற்றப்பட்டவர்கள் தான் ஆச்சார்ய புருஷரின் வம்சாவழியான நானும் ஓர் ஆச்சார்ய புருஷன்.

அதே நேரம்.. வெறும் வம்சத்தால் மட்டுமே இப்பெருமையை இப்போது பலர் பெற்றிருக்கிறார்கள். சிலர் தான் அந்த ஞானம் ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் இன்னமும் தங்கள் பரம்பரைப் புகழை காப்பாற்றி வருகின்றனர்.

உதாரணத்துக்கு சிறீராமானுஜர் அருளிய பாஷ்யத்தைப் பற்றி உபதேசிக்கவும் எடுத்துரைக்கவும் பாஷ்ய சிம்மா சனாதிபதிகள் எனச் சிலர் அவரது காலத்திலேயே நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பரம்பரையில் பிறந்து வந்ததன் காரணமாகவே இன்றும் சிலர் தங்களை பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் 'பாஷ்யம"; பற்றி இவர்களுக்கு தெரிந்தது ப+ஜ்யம் என்றாலும் கூட இவர்கள் தான் இன்று பாஷ்ய சிம்மா சனாதிபதிகள். அதுபோல ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்கமுடியுமா? அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.

அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.

அப்படி ஒரு தடவை சந்தித்தபோது 'முதலில் நாம் நம்மை சுத்தப் படுத்திக்கணும் இல்லையா? இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும் அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்யவேண்டும் ஏதாவது சொல்லுங்களேன்" என்றார் மகா பெரியவர்.

நான் சொன்னேன்

'நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் முலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே ஜெகந்நாதச் சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட 'பிராமணன்" 'தார்மீக ஹிந்து" னு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம் என நான் சொன்னேன்.

பதிலுக்கு மகா பெரியவர்.....

'அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரியார்.. ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமையை மறந்துட்டா இல்லையா?"

அதனால் அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம் இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்."

மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறத்துக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பத்தான். நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும் என்றார்.

இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது.

குளித்தலை அண்ணாத்ர அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள்.

அன்றைய தஞ்சாவ+ர் ஜில்லா முழுவதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய, அவர்களோடு நானும் புறப்பட்டேன்.

"பிராமணர்களை திருத்தினால் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப் படுத்துவார்கள்" என நம்பிய மகா பெரியவர் இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.

அது என்ன பலனை கொடுத்தது?


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (24)

"வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல்லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (ஏநனiஉ ளிசைவை) உண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்.. பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார் இல்லையா?" என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க எதற்கு ஆவஹந்தி ஹோமம்?.. அப்படியென்றால் என்ன?...

ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக்காகத்தான் அதாவது கோரிக்கைகளை (னுநஅயனௌ) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன அந்த வகையில் ஆவஹந்தி ஹோமம். ப்ரம்ம தேஜஸ்க்காக நடத்தப்படுகிறது.

புனித கலசத்தை நிறுவி, அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றித் துதி செய்து, அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம் அஃதாவது அன்னத்தை கொடுத்து வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து 'ப்ரம்ம தேஜஸ"ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் ப்ரம்ம தேஜஸ் என்பது பிராமணீயத்தின் பலம் எனக் குறிப்பிடப்படும் ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.

இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடிந்ததும் வேதத்தைப்பற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றை யெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.

அப்போது, கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன் கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.

இந்த வசதிகள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது மகாபெரியவரின் ஆசீர்வாதம் எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக தஞ்சாவ+ர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமையர் பெரும் பொறுப்பு வகித்தார்.

இப்படியாக.. இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.

தஞ்சாவ+ரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும் பண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது?

இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான் செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈ டுபாட்டிலிருந்து விலகவில்லை.

அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி அகமதாபாத் டெல்லி, கல்கத்தா, நாக்ப+ர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வட இந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.

அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவ+ர் ஜில்லாவில் வேதம் வளர்க்கப் பயன்படுத்தினோம்.

இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம். நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே நீலமேகம்.

கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும்போது..

"ஸ்வாமி.. பார்த்தீரா.. எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்" என்பார்.

கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் நான் நகர்வேன். இந்;நிலையில் பிராமணர்களை மட்டுமன்றி. தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.

இது மகா பெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். தாத்தாச்சாரீ.. நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.

அதுக்கு அடுத்ததா. அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால.. நாம் ப+ஜா தத்வத்தையும்.. சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்.. என்ன சொல்றீர்" என்றார்.

"வாஸ்தவம்தான் ஸ்வாமீ.. இந்த 'அவேர்னஸ்" (யறயசநநௌள) பிராமணாளுக்கும் வரணும் மத்தவாளுக்கும் வரணும் என்றேன்.

எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு உதித்தது ஆகம சிற்ப சதஸ்.

(தொடரும்)

நன்றி நக்கீரன் - 5.3.2005


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (25)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

அதென்ன ஆஹம சிற்ப சதஸ்?

ஆஹமம் என்றால் என்ன என்பதுபற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.

விக்ரகங்களை.. தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.

சிற்பம்? இன்றும் நாம் கோயில்களுக்குச் செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு.  நீங்கள் வட இந்தியக் கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப்போல நுட்பமும், அழகும் ஒரு சேர வாய்த்திருத்தல் கடினம்.

பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டி வைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறு சிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.

இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆஹம சிற்ப சதஸ்.

இந்த அமைப்பை நடத்தவேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.

ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?

கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம் ப+ஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிரகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.

கோபுரத்தின் அழகு, பிரகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.

இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல நான் உங்களிடமும் சொல்கிறேன்.

"ஆதிகாலத்தில்.. அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான் உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான் பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவமைத்ததுபோல.. அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம் அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான் எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும் என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம் நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச் சார்யார்களாகவும் அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.

இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.

சனாதன தர்மசபையில் ஆரம்பித்து வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம் உபன்யாஸம் பண்றோம் ஹோமம் பண்றோம் ஆனா.. பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே.. அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஏதாவது பண்ணணுமே" என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.

தமிழ்தானே!

ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள் இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?"

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

"இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம் இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும் ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ் சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?"

என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும் சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.

அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.

"ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன? என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.

"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்... என்றேன.; அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.

உங்களுக்கு...?

 http://nakkeran.com/Hindusamayam2005.htm

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP