சமீபத்திய பதிவுகள்

வீரர்களின் தலை மதிப்பு எகிறும்: அடுத்த சீசனுக்கான ஏலத்தொகை அதிகரிப்பு

>> Wednesday, May 7, 2008

வீரர்களின் தலை மதிப்பு எகிறும்: அடுத்த சீசனுக்கான ஏலத்தொகை அதிகரிப்பு

மெல்போர்ன், மே.7-

முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.20 கோடி வரை செலவு செய்யலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இருப்பினும் சில அணி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட கொஞ்சம் கூடுதல் தொகையை செலவு செய்தனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி ரூ.6 கோடிக்கு ஏலம் போனார்.

அவரை சென்னை அணி வாங்கியது. அதே சமயம் சில வெளிநாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பை விட குறைந்து தொகைக்கு ஏலம் போனார்கள். இந்த வகையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் வீரர்கள் இதை விட அதிக தொகையை சம்பாதிக்க இருக்கிறார்கள். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் செலவு செய்யும் தொகையை ரூ.61 கோடியாக உயர்த்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சீசனில் ஒரு வீரர் சம்பாதிக்கும் தொகை ரூ.10 கோடியை கூட எளிதாக தாண்டி விடும் வாய்ப்பு உள்ளது.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

பிரபல நிதி நிறுவனத்தில் பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த `காமிரா': கம்ப்ïட்டரில் பார்த்து ரசித்த ஊழியர் `சஸ்பெண்டு

சிட்னி, மே. 7-

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல தனியார் டி.வி. நிறுவன தலைமை அலுவலகத்தில் பெண்கள் உடை மாற்றுவதற்காக தனி அறை உள்ளது.

டி.வி. நிகழ்ச்சிக்கு வரும் பெண்கள் இந்த அறைக்கு சென்று வெவ்வேறு உடைகளை மாற்றிக்கொண்டு விதம் விதமாக நிகழ்ச்சிகளில் தோன்றுவார்கள். இவர் களை டி.வி.யில் பார்பதை விடவும் நேரில் பார்க்க துடித்தார் அங்குள்ள ஊழியர் ஒருவர்.

இதற்காக அவர் ஒரு திட்டம் தயாரித்து செயலிலும் இறங்கினார்.

பெண்கள் உடை மாற்றும் அறையில் சிறிய விசேஷ காமிரா ஒன்றை ரகசியமாக பொருத்தினார். பின்னர் தனது அறையில் இருக்கும் கம்ப்ïட்டரில் "லைவ்"வாக காட்சிகளை காண ஆரம்பித்தார்.

பல்வேறு பெண்கள் அவசரம் அவசரமாக உடை மாற்றுவதை இவர் மெல்ல, நிதானமாக பார்த்து ரசித்தார்.

கடந்த வாரம் அந்த ஊழியர் விடுமுறையின் போது மற்றொருவர் அவரது பணியை செய் தார்.

ஏற்கனவே கம்ப்ïட் டரில் `சேவ்' செய்து வைத் திருந்த உடை மாற்றும் காட்சிகள் தற்செயலாக அவரது கண்ணில் பட்டது.

அவ்வளவுதான் ஆபீஸ் முழுவதும் `ஆ' என்று அலறியது.


`ஆப்' எடுத்து வீட்டி லிருந்த அந்த ஊழியரை அழைத்து சஸ்பெண்டு செய்து `ஆப்பு' வைத் திருக்கிறார் `எம்.டி.'.

அந்த நிறுவன பெண் ஊழியர்களோ `அய்யோ... கருமம், கருமம். அந்தப்பாவி என்னத்த எல்லாம் பாத்து தொலைச்சானோ' என்று தினமும் கூச்சப் பட்டபடியே வேலைக்கு வந்து செல்கிறார்கள்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

ஆந்திராவில் 2 லட்சம் பேரிடம் தங்ககாசு மோசடி: 32 கிளைகள் மூடப்பட்டன- நிர்வாகிகள் தப்பிஓட்டம்

ஆந்திராவில் 2 லட்சம் பேரிடம் தங்ககாசு மோசடி: 32 கிளைகள் மூடப்பட்டன- நிர்வாகிகள் தப்பிஓட்டம்

நகரி, மே.7-

சென்னையில் உள்ள குவெஸ்ட்நெட் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்ககாசு மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழகம் முழுவதிலும் ஏராளமானோர் இந்நிறுவ னத்தில் பணம் கட்டி ஏமாந் துள்ளனர். இதே போல ஆந்தி ராவிலும் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தில் 2 லட்சத்திற் கும் மேற்பட்டோர் தங்ககாசு வாங்கி ஏமாந்துள்ளனர். அதிலும் ஐதராபாத்தில் தான் அதிக அளவில் இந்த மோசடி நடந்துள்ளது.

அங்குள்ள ஹிமாயித் நகரில் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இதன் கீழ் நகர் முழுவதிலும் 32 கிளைகள் செயல்பட்டு வந்தன.

இங்கு லட்சக்கணக்கா னோர் ரூ.33 ஆயிரம் கட்டி தங்க காசை வாங்கியுள்ளனர். தங்ககாசு விற்பனையில் அங்குள்ள அரசியல்வாதிகள் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

சென்னையில் தங்ககாசு மோசடி நடந்ததை அறிந் ததும் ஐதராபாத்தில் உள்ள பொதுமக்கள் அந் நிறுவனத்தை முற்றுகை யிட்டனர். இதனால் பயந்து போன நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் நிறுவனங்களை மூடிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அங்கு பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பலர் கடன் வாங்கி தங்க காசுகளை வாங்கியுள்ளனர்.

அவர்கள் ஐதராபாத் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதையடுத்து தப்பிஓடிய கோல்டு குவெஸ்ட் நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

கரோலினா: ஒபாமா, இன்டியனா: ஹிலாரி

கரோலினா: ஒபாமா, இன்டியனா: ஹிலாரி
.
.
வாஷிங்டன், மே 7: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.
.
அங்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் வடக்கு கரோலினாவில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். இன்டியானாவில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

ஆனால் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதில் பாரக் ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெற்று வரும் வாக்குப்பதிவுகளில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால் இழுபறி நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வாக்குபதிவுகளில் வெற்றி பெற்று ஹிலாரி முன்னிலை பெற்றிருந்தார்.

ஆனால் இன்று நடைபெற்ற வடக்கு கரோலினா மற்றும் இன்டியானா மாகாண வாக்குப்பதிவில் கரோலினாவில் ஒபாமாவும், இன்டியானாவில் ஹிலாரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. அடுத்த வாரம் மேற்கு விர்ஜினியாவில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

http://www.maalaisudar.com/newsindex.php?id=13115%20&%20section=1

StumbleUpon.com Read more...

புலிகள் தலைவர் கைது

புலிகள் தலைவர் கைது

.

.
 லண்டன், மே 7: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர் லண்டனில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதம் வாங்குவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
.
இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஏ.சி. சாந்தன்.

இவர் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த மறைந்த ஆண்டன் பாலசிங்கத் துடன் இணைந்து லண்டனில் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் அவர் ஆண்டன் பாலசிங்கத்துடன் கலந்து கொண்டார்.

51 வயதாகும் சாந்தனை வில்ட் ஷயர் என்ற இடத்தில் வில்ட்ஷயர் போலீஸ் மற்றும் லண்டன் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது கைது செவ்வாயன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் வாங்குவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சாந்தன் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த 3 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாந்தன் லண்டனில் கைது செய்யப் பட்டார். பின்னர் அவர் நவம்பர் மாதம் ஜாமீனில் விடுதலையானார்.

சாந்தன் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருப்பதாக வில்ட்ஷயர் போலீசார் கூறியுள்ளனர்.

லண்டனில் கைது செய்யப் பட்டுள்ள சாந்தன் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

சாந்தனின் மனைவியும், பிரபாகரனின் மனைவி மதிவதனியும் ஒன்றுவிட்ட சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.maalaisudar.com/newsindex.php?id=13133%20&%20section=1

StumbleUpon.com Read more...

தங்ககாசு மோசடியில் சிக்கிய தெலுங்கு நடிகர்-நடிகைகள்

நகரி, மே. 7-

சென்னை கோல்டு குவெஸ்ட் நெட் நிறுவனத்தில் தமிழ்நடிகர்-நடிகைகள் பலர் தங்க காசுகள் வாங்கி உள்ளனர். இதில் பல நடிகர்- நடிகைகள் ஏஜெண்டுக ளாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் யார், யார்ப என்று போலீசார் பட்டியல் தயாரித்து வருகிறார்கள்.

இது போல தெலுங்கு நடிகர்-நடிகைகள் பலர் தங்ககாசு நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மூலம் ஆயிரக்கணக்கான தங்க காசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நடிகர் சந்திரமோகன் அவரது மனைவிஜலந் தரா ஆகியோர் ஏஜெண் டாக செயல்பட்டு வந்துள் ளனர். இதே போல நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் உள்பட பல நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் தங்ககாசு சங்கிலி தொடர் திட்டத்தில் சேர்த்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

தெலுங்குபட தயாரிப் பாளர்கள், அரசியல்வாதிகள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள், போலீசார் கூட இந்த தங்ககாசு சங்கிலி தொடர் திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.

தெலுங்கு நடிகைஒருவர் கூறும்போது, கோல்டு குவெஸ்ட் நெட் நிறுவ னத்தின் தங்க காசு திட்டத்தில் தெலுங்கு நடி கர்-நடிகைகளை சேர்த்தது தமிழ் நடிகர்-நடிகைகள்தான் அவர்கள் வற்புறுத்தியதால் தான் தங்ககாசுகளை வாங் கினோம்.

இந் நிறுவனம் இந்தியா முழுவதிலும் பெரிய அளவுக்கு மோசடி செய்திருப் பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தோம் என்றார்.

ஐதராபாத் போலீசார் கோல்டு குவெஸ்ட்நெட் நிறு வனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்ககாசு மோசடியில் தொடர்புடைய நடிகர்-நடிகைகள் பட்டிய லையும் தயாரித்து வருகி றார்கள். இதனால் தங்க காசு நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்ட நடிகர்-நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

ஹர்பஜன் ஸீரிசாந் விவகாரம்-வீடியோவில் ஷாக்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/07/017/07_05_2008_017_013.jpg

StumbleUpon.com Read more...

எலிக்களும்,நாயும் உப்பு மூட்டை (போட்டோவுடன்)
StumbleUpon.com Read more...

ஏன் முஸ்லீம் பெண்கள் மற்ற ஆண்கள் பார்க்க அனுமதிக்க்கப் படுவதில்லை?http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/07/002/07_05_2008_002_009.jpg

StumbleUpon.com Read more...

நடிகை முதல் டி.எஸ்..பி வரை தங்க காசு பிரச்சனையில் உள்ளனர்!!!!


http://epaper.dinamalar.com/ArticleImageEx.aspx?article=07_05_2008_004_007&type=1&mode=1

StumbleUpon.com Read more...

நந்திகிராமில் அட்டூழியம் 3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்

நந்திகிராமில் அட்டூழியம் 3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்


நந்திகிராமில் அட்டூழியம்
3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை
நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்


நந்திகிராம், மே.7-

மேற்கு வங்காளத்தில் நந்திகிராமில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்தனர். அப்போது சிமுல்குண்டு என்ற இடத்தில் பூமி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மாலதி தாஸ், கிருஷ்ண தாஸ், துளசி தாஸ் ஆகிய 3 பெண்களின் வீடுகளுக்கு சென்று தேர்தலில் தங்களுக்கே ஓட்டுப் போட வேண்டும் என்று கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். உடனே கம்ïனிஸ்டு கட்சியினர் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து தாக்கியதுடன், நிர்வாணமாக்கி ஓட, ஓட விரட்டினர். அவர்களிடம் இருந்து தப்ப அந்த பெண்கள் 1 கி.மீ. தூரம் நிர்வாணமாக ஓடினர். இந்த சம்பவத்தில் 3 பெண்களும் படுகாயம் அடைந்ததால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி மறுத்துள்ளது. தங்கள் கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சி கூறி உள்ளது.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=411016&disdate=5/7/2008

StumbleUpon.com Read more...

வாகன பெருக்கமும் விவாகரத்துக்கு காரணம்-ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாகன பெருக்கமும் விவாகரத்துக்கு காரணம்-ஆய்வில் அதிர்ச்சி தகவல்http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/07/010/07_05_2008_010_009.jpg

StumbleUpon.com Read more...

வாகன பெருக்கமும் விவாகரத்துக்கு காரணம்-ஆய்வில் அதிர்ச்சி தகவல்http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/07/010/07_05_2008_010_009.jpg

StumbleUpon.com Read more...

நந்திகிராமில் அட்டூழியம் 3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்


நந்திகிராமில் அட்டூழியம்
3 பெண்களுக்கு சரமாரி அடி-உதை
நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்தனர்


நந்திகிராம், மே.7-

மேற்கு வங்காளத்தில் நந்திகிராமில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்தனர். அப்போது சிமுல்குண்டு என்ற இடத்தில் பூமி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மாலதி தாஸ், கிருஷ்ண தாஸ், துளசி தாஸ் ஆகிய 3 பெண்களின் வீடுகளுக்கு சென்று தேர்தலில் தங்களுக்கே ஓட்டுப் போட வேண்டும் என்று கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். உடனே கம்ïனிஸ்டு கட்சியினர் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து தாக்கியதுடன், நிர்வாணமாக்கி ஓட, ஓட விரட்டினர். அவர்களிடம் இருந்து தப்ப அந்த பெண்கள் 1 கி.மீ. தூரம் நிர்வாணமாக ஓடினர். இந்த சம்பவத்தில் 3 பெண்களும் படுகாயம் அடைந்ததால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி மறுத்துள்ளது. தங்கள் கட்சிக்கு உள்ள நற்பெயரை கெடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சி கூறி உள்ளது.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=411016&disdate=5/7/2008

StumbleUpon.com Read more...

நடிகை முதல் டி.எஸ்..பி வரை தங்க காசு பிரச்சனையில் உள்ளனர்!!!!


http://epaper.dinamalar.com/ArticleImageEx.aspx?article=07_05_2008_004_007&type=1&mode=1

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP