சமீபத்திய பதிவுகள்

அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது

>> Friday, November 14, 2008

அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது
 
 
lankasri.comசர்வதேச தீவிரவாதி அல்கொய்தா தலைவன் பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாக தேடியும் அவன் பிடிபடவில்லை.பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.ஆனாலும் அவனை பிடிக்க முடியவில்லை.

பின்லேடன் பற்றி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.கூறும்போது பின்லேடன் செல்வாக்கு குறைந்து விட்டது.அவன் தனிமை படுத்தப்பட்டு விட்டான் என்று கூறியுள்ளது.

சி.ஐ.ஏ. டைரக்டர் மைக்கேல் ஹேடன் கூறியதாவது:-

தனது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பின்லேடன் மாறி மாறி செல்கிறான்.உயிர் தப்புவதிலேயே பின்லேடன் முழு கவனம் செலுத்தி வருகிறான்.முன்புபோல பின்லேடனால் திறமையாக செயல்பட முடியவில்லை.தனது இயக்கத்தினருடன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு பின்லேடன் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறான்.பின்லேடனுக்கு முன்பு இருந்த செல்வாக்கும் குறைந்து விட்டது.

ஆனால் அல்கொய்தா இயக்கத்தின் பலம் குறைந்து விடவில்லை.அமெரிக்காவுக்கு இன்னும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இயக்கமாக அது வளர்ந்து இருக்கிறது.அமெரிக்காவுக்கு எப்போதும் அல்கொய்தா இயக்கத்தால் ஆபத்துதான்.

பாகிஸ்தானில் அல் கொய்தா இயக்கத்தினரின் பயிற்சி முகாம் உள்ளது.இவ்வாறு மைக்கேல் ஹேடன் கூறியுள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

புலிகளிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் பிடித்தது

 
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் கடும் போர் நிலவி வருகிறது.


இதில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை முழுவதுமாக பிடிக்க சிங்கள ராணுவம்
மும்முனை தாக்குதல் நடத்தியபடி முன்னேறி செல்கிறது.

ராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளிநொச்சியை மிக அருகில் ராணுவம் நெருங்கி செல்கிறது.

வெள்ளிக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய 2 கிராமங்களை பிடித்துவிட்டதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது. மன்னார்-பூநகரி சாலைக்கு மேற்கே இந்த பகுதி உள்ளது.

பேய்முனையை கைப்பற்றியதன் மூலம் மேற்கு கரையோரத்தில் இருந்து கடற்புலிகளின் தளம் ராணுவத்தின் வசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது விடுதலைப்புலிகள் பூநகரி தளத்தை வலுப்படுத்தி வருகிறார்கள். பூநகரி நோக்கி இப்போது ராணுவம் முன்னேறி செல்கிறது. அந்த பகுதியையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=289

StumbleUpon.com Read more...

1500 சிங்கள வீரர்களுக்கு சிறைஇலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது ராணுவத்தை விட்டு விட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர்கள் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1500 பேர் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


விடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் போரின்போது அவர்களுடன் மோதி உயிரை விட விரும்பாத ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தலைமறைவாகி விட்டவர்களில் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவடைந்த 1500 பேர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடிப் போயுள்ளனர்.

அவர்கள் மீண்டும் பணியில் சேர அவகாசம் தரப்பட்டது. அது சனிக்கிழமையுடன் முடிவடைகிறது என்றார்.

ராணுவத்திற்கு ஆளெடுப்பு:

இதற்கிடையே, ராணுவத்திற்கு புதிதாக ஆளெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை அது நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கையில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களில் ஆளெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இதுவரை 5000 சிங்கள இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=290

StumbleUpon.com Read more...

இலங்கை இனப்பிரச்சினைகோவி லெனின்
 

 

               ப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.

இலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.

சுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.

தமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.

செல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.

அவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.

1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் விடுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.

ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படையும் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.

இவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்.source:http://www.nakkheeran.in/users/frmnews.aspx?NT=5

StumbleUpon.com Read more...

வெற்றி! வெற்றி!! சந்திரனில் இந்திய தேசியக்கொடியை நட்டது சந்திராயன்1

                  

                நிலவில் தேசியக் கொடியை நட்ட நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா.   இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று(நவ.14) இரவு எட்டு முப்பதுக்கு நிலவில் இறங்கியுள்ளது.

       

             இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்திருக்கிறது.  இந்த விண்கலத்தை நிலவுக்கு மேலே நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வர முடிவு செய்திருந்தார்கள்.


            நேற்று மாலை நிலாவை நெருங்கி வந்த விண்கலத்தை அதில் உள்ள மோட்டாரை இயக்கி நூறு கிலோமீட்டர் தூரத்தில் சரியான இடத்தில் நிலை நிறுத்தினார்கள். 

            விண்கலத்தில் 'மூன் இம்பேக்ட் பிராய்' என்ற ஆராய்ச்சி கருவி உள்ளது.    இது விண்கலத்தை விட்டு தனியாக பிரிந்து நிலவில் இறங்கியது..  

                இந்த ஆராய்ச்சி கருவி நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும்.  இந்த கருவியில் இந்திய தேசியக் கொடி அனுப்பிவைக்கப்பட்டது.   .  இந்த கருவி அந்த தேசியக் கொடியை நிலவில் நட்டு வைத்தது.

                    ரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா தேசியக்கொடியை நிலவில் நட்டுள்ளது.  இந்த சாதனை இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=278

StumbleUpon.com Read more...

நிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி

 
 
lankasri.comசந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள எம்.ஐ.பி.,கருவி,இன்றிரவு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கவுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி,முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது.

இந்தியா நிலவுக்கு அனுப்பிய முதலாவது செயற்கைக்கோளான சந்திரயான்,தனது இறுதி சுற்றுப்பாதையான நிலவிலிருந்து 100 கி.மீ.,தொலைவில் தற்போது சுற்றி வருகிறது.சந்திரயானில் மொத்தம் 11 ஆராய்ச்சி கருவிகள் உள்ளன.இவற்றில் ஒன்றான 29கிலோ எடை கொண்ட எம்.ஐ.பி.,(மூன் இம்பாக்ட் புரோப்) கருவி,சந்திரயானில் இருந்து இன்று இரவு 8மணிக்கு கழற்றி விடப்படவுள்ளது.

சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது:எம்.ஐ.பி.,கருவியை பிரித்து விடுவதற்கான உத்தரவு,பெங்களூருவில் உள்ள,"இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்"மையத்திலிருந்து இன்று இரவு 8மணிக்கு பிறப்பிக்கப்படும்.

எம்.ஐ.பி.,கருவியில் உள்ள இன்ஜின் இயக்கப்பட்டு,சந்திரயானில் இருந்து நிலவை நோக்கி செலுத்தப்படும்.இதையடுத்து,எம்.ஐ.பி.,கருவி பிரிந்து,நிலவை நோக்கி பயணிக்கும்.25வது நிமிடத்தில் எம்.ஐ.பி.,கருவி நிலவில் மோதி இறங்கும்.இக்கருவியிலிருந்து பெறப்படும் புகைப்படங்கள்,வரும் 16ம் தேதி நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.எம்.ஐ.பி.,கருவியின் நான்கு புறங்களிலும் இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது.அமெரிக்கா,ரஷ்யா,ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக,நிலவின் மேற்பரப்பில் தனது நாட்டுக் கொடியை இடம் பெறச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா நாளை பெறவுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

ஒபாமாவின் வெற்றி இந்தியாவுக்கு லாபமா?

 
 13.11.08  கவர் ஸ்டோரி

மாற்றம். முடியும்!

இந்த இரட்டை வார்த்தைகள்தான் பராக் ஒபாமாவின் மிகப்பெரிய முதலீடுகள். `நாடு தற்போது இருக்கும் சூழலில் இருந்து அபரிமிதமான மாற்றம் அடைய வேண்டும். அத்தகைய மாற்றத்தை சாத்தியப்படுத்த நம்மால் முடியும்!' - இவைதான் அமெரிக்க அதிபர் பதவியை ஒபாமாவுக்கு  அறுவடை செய்து கொடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் திருவிழா தற்போது நிறைவடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஒபாமா என்ற கறுப்பு இளைஞர் வெற்றிக்கனியைச் சுவைத்து, அமெரிக்காவின் நாற்பத்துநான்காவது அதிபராகியிருக்கிறார்.

தாய் தேசமான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். தந்தை தேசமான கென்யாவில் ஒருபடி மேலே போய் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறக்கைகள் முளைக்காத குறைதான்.  உண்மையில் கென்யாவின் ஒவ்வொரு வீடும் கல்யாணவீடாக உருமாறி களை கட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய இருக்கிறார் ஒபாமா, துணை அதிபர் ஸ்பைடனுடன்.

`அமெரிக்காவில் அத்தனையும் சாத்தியம் என்பதை இளைஞர்கள், முதியவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள் என்ற ஒரே குடையின்கீழ் திரண்டு வாக்குகள் மூலமாக உலகத்துக்கு உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்' என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பராக் ஒபாமா. நல்லது.

புது மாப்பிள்ளை அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதில்தான் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்து கிடக்கிறது. அதேசமயம் வெள்ளை தேசத்தில் ஒரு கறுப்பரால் எப்படி அதிகார பீடத்தைக் கைப்பற்ற முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் பலருக்கு நீங்கவே இல்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பராக் ஒபாமாவின் பூர்வீகம் பற்றிப் பார்த்து விடலாம்.

நதிமூலம், ரிஷிமூலம்!

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியர் பராக் ஒபாமா சீனியர். இவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை. தாயார் ஆன் டன்ஹாம். இவர் ஒரு வெள்ளை அமெரிக்கர். மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த பராக் ஒபாமா சீனியர், டன்ஹாமைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கான பரிசாக 1961-ல் கிடைத்தவர்  பராக் ஹுஸைன் ஒபாமா.

அமெரிக்காவின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்ததால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று விவாகரத்து. அது இரண்டே ஆண்டுகளில் டன்ஹாம் - ஒபாமா சீனியர் தம்பதிக்கு வந்துவிட்டது. பிறகு டன்ஹாம் இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ஒபாமா சீனியரும் அதே பாணியைப் பின்பற்றினார். பிறகு டன்ஹாம் இரண்டாவது கணவரையும் பிரிந்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். தாயுடன் பாட்டி வீட்டில் வளரத் தொடங்கினார் பராக் ஹுஸைன் ஒபாமா.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆக்சிடென்டல் கல்லூரி, நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்துவிட்டு சமூக சேவகராக அவதாரம் எடுத்தார் ஒபாமா. சிகாகோவின் தெற்குப் பகுதிதான் ஒபாமாவின் சமூக சேவைக்குக் களமாக அமைந்தது. அப்போதுதான் ஒபாமாவுக்கு அரசியல் ஆர்வமும் வரத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஒபாமா 1992-ல் பில் கிளிண்டன் தேர்தலில் நின்றபோது அவருக்காகப் பிரசாரம் செய்தார்.

துல்லியமான புள்ளிவிவரம். தெளிவான பேச்சு. பிரமிக்க வைக்கும் கம்பீரம். எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து ஒபாமாவின் மதிப்பை உயர்த்தத் தொடங்கின. 1997-ல் மாநில செனட் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2004-ல் இல்லினாய்ஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த குறி அதிபர் பதவி. முடியும் என்று நம்பினார். அதைச் சாதிப்பதற்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

மிடுக்கு நிறைந்த கறுப்பர்!

நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமாக, ஒபாமா ஒரு கறுப்பர் அல்லது அரைக்கறுப்பர். ஆகவே, வெள்ளையர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மிகப்பெரிய பிரச்னை. ஆனால் அவற்றை நுணுக்கமாக சமாளித்தார் ஒபாமா. `நான் ஒரு அமெரிக்கன். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து என்னிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்கு வாக்களியுங்கள்' என்று கேட்டார். அத்தோடு சரி. எந்த இடத்திலும் தன்னை கறுப்பர் என்று சொல்லிக்கொள்ளவே இல்லை. அனுதாப வாக்கு சேகரிக்கவில்லை. மிடுக்குடனேயே பேசினார். மிடுக்குடனேயே பிரசாரம் செய்தார். மிடுக்குடனேயே நிதி உதவிகளையும் பெற்றார். இந்த மிடுக்குத்தான் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. வெள்ளையர்களின் வாக்கு வங்கி இவர் பக்கம் திரும்பியதற்கு இதுதான்  முக்கியமான காரணம்.

ஒபாமா ஒரு முஸ்லிம்?

ஒபாமாவின் தந்தை ஒரு பூர்வீக முஸ்லிம். அவருடைய பெயரில்கூட ஹுஸைன் என்று இருக்கிறது. தீவிரவாதிகளுடன் ஒபாமாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இப்படிப் பலகதைகள் கட்டுக்கட்டாக. ஆனால் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி விரிவாக மக்களிடம் பேசினார் ஒபாமா. தான் இந்தோனேஷியாவில் படித்தது முதல் அமெரிக்கப் பாட்டியால் வளர்க்கப்பட்டது வரை அத்தனை விஷயங்களையும் பட்டவர்த்தனமாகச் சொன்னார். இதனால் கட்டுக்கதைகள் கலகலத்தன. இதில் என்ன துரதிருஷ்டம் என்றால், அவரை முஸ்லிம் என்று எல்லோரும் சொன்னபோது, `முஸ்லிமாக இருப்பது குற்றமா?' என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ? திருஷ்டிப் பொட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

என்னதான் தன்னை ஒரு கறுப்பர் என்று ஒபாமா பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளாதபோதும், ஒபாமா என்ற கறுப்பர் திடுதிப்பென அதிபர் பதவிக்குப் போட்டியிட்டது, அடிமைகளாகவே நுழைந்து, அடிமைகளாக வாழ்ந்து வரும் அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய ஹீரோவாக ஒபாமாவைப் பார்த்தனர். அவர் படம் போட்ட டீ ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண்டனர். கைகளிலும் புஜங்களிலும் ஒபாமா டேட்டூக்களை ஒட்டிக்கொண்டனர். அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக உருமாறியது.

புஷ் போட்ட `பாதை'

இவை அனைத்தைக் காட்டிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்கர்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு ஒபாமாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. போர் வெறியர், அதிரடி மனிதர், குழப்பவாதி, மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர், கோமாளி என்று ஜார்ஜ் புஷ் மீது இருந்த அத்தனை எதிர்மறை விஷயங்களும் மக்களின் கவனத்தை ஒபாமா மீது திருப்புவதற்கு வசதி செய்து கொடுத்தன. போதாக்குறைக்கு செப்டம்பர் 12, 2008 அன்று அமெரிக்காவில் அரங்கேறிய பொருளாதார சுனாமி ஜார்ஜ் புஷ்ஷின் கொஞ்ச நஞ்ச இமேஜையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிக் கோபுரம் சரிவது போல லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகின.  

வாக்கும் கணக்கும்!

ஊர்கூடித் தேர் இழுத்தது போல பல்வேறு சங்கதிகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருந்ததால், தற்போது அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க  - அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒபாமாவுக்கோ 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்த குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கையினுக்கு 163 வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்களித்த பெண்களில் ஒபாமாவுக்கு மட்டும் 56 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 74 சதவிகித வெள்ளையர்களில் ஒபாமாவுக்கு 43 சதவிகிதம் பேரும் மெக்கெயினுக்கு 55 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 13 சதவிகித ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் 95 சதவிகிதம் பேர் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். நிற்க.

ஈராக் :  ப்ளஸ் புஷ்  மைனஸ் புஷ்!

ஒபாமா சர்ச்சைக்குரிய விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஈராக். ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் இமேஜை ஆழக்குழி தோண்டிப் புதைத்த விஷயங்களுள் ஈராக்குக்கு அபரிமிதமான பங்கு உண்டு. அடிப்படையில் ஒபாமா ஒரு பரிபூரண யுத்த எதிர்ப்பாளர் அல்ல என்றாலும், ஈராக் மீதான யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர். ஆகவே, தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளின்படி ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

ஒபாமா Vs ஒஸாமா!

அடுத்து, ஆப்கனிஸ்தான் யுத்தம். ஈராக் விஷயத்தில் தான் பயன்படுத்தும் அளவுகோலையே ஆப்கனிஸ்தான் விவகாரத்திலும் பயன்படுத்த ஒபாமா தயாராக இல்லை என்பதையே அவருடைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் எதிரான யுத்தத்தில் ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். ஆகவே, ஒபாமாவின் வருகை ஆப்கனுக்கு எதிரான, ஒஸாமாவுக்கு எதிரான, அல் காயிதாவுக்கு எதிரான யுத்தத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் கணிப்பு.

பாகிஸ்தானின் எதிரி?

இதே ஒஸாமா விவகாரத்தால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது அத்தனை பிடிப்பு கிடையாது. இதனால் நேற்றுவரை அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த தார்மிக ரீதியான, ராணுவரீதியான உதவிகள் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஆப்கன் போர் தீவிரமடைந்தால் அதன் பக்கவிளைவாக உள்நாட்டுக்குள் ஏற்படும் குழப்பங்களில்தான் பாகிஸ்தான் கவனம் செலுத்துமே தவிர, காஷ்மீர் விஷயத்தில் அதிகம் முனைப்பு காட்டாது. இதனால் காஷ்மீர் குழப்பங்கள் கணிசமான அளவுக்குக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. 

அண்டை நாடுகளுடனான உறவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் காட்டும் கெடுபிடிகளையும், மூர்க்கத்தனத்தையும் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா போன்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆகவே, உலக நாடுகளுடனான உறவில் அமெரிக்கா சிறிதளவேனும் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.

நமக்கு என்ன லாபம்?

இந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்படி இருக்கும்? ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? என்ற கேள்விகள் பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுடன் அனுசரணையாக நடந்துகொண்ட அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜார்ஜ் புஷ். அணுசக்தி ஒப்பந்தத்துக்காக பகீரதப் பிரயத்தனம் செய்ததை யாரும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அதேபோல பராக் ஒபாமாவும் நடந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான்.

ஒபாமா தலைமையிலான அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்பது, அவர் யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப் போகிறார்? அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது? அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார்? என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய சங்கதி இது. எனினும், இந்தியர்கள் மீது பொதுவாக ஒபாமாவுக்கு நல்ல அபிப்ராயம்  உண்டு என்பதை அவருடைய சில பேச்சுகள் வெளிப்படுத்துவதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் இருக்கின்றன.

பிபிஓ என்ன ஆகும்?

அமெரிக்காவால் இந்தியர்களுக்கு அதிக பலனளிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகளில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வரக்கூடும். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பது இந்தியர்களுடைய பயம். அதை வலுப்படுத்தும் விதமாகவே ஒபாமாவின் பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பிபிஓ அவுட்ஸோர்ஸிங் என்ற வேலைப் பகிர்வை ஒபாமாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள் தொழில்வல்லுநர்கள். வேண்டுமானால் அரசு தன்னுடைய வேலைகளை இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அவுட் ஸோர்ஸிங் செய்யாமல் இருக்கலாம். அடுத்து, அவுட் ஸோர்ஸிங் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சிலபல கெடுபிடிகளை விதிக்கலாம் அல்லது சலுகைகளைப் பறிக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது பலன் தராது. அவுட் ஸோர்ஸிங் காலத்தின் கட்டாயம், குறிப்பாக அமெரிக்காவுக்கு.

வெளிவிவகாரம் எல்லாம் சரி. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒபாமாவுக்கு  முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கின்றன. முதலில் உள்நாட்டு சவால்கள். முக்கியமாகப் பொருளாதாரச் சரிவு. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஒபாமா.

சரிந்த கோபுரங்கள் நிமிருமா?

முதல்கட்டமாக, அரசு செய்யும் அநாவசிய செலவுகளை முற்றிலுமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்குவார். உதாரணமாக, ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து, அதற்குச் செலவிடும் நிதியை, சமீபகாலமாக சப்பிரைம் கடன்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க ஏற்பாடுகள் செய்வார். ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்வார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

வழக்கமாக குடியரசுக் கட்சி அதிபர்கள் வர்த்தகக் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதுதான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் தோற்றுவாய். அமெரிக்காவைப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்கும் வகையில் வர்த்தகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார் ஒபாமா என்பது சர்வ நிச்சயம். அதேபோல பெரிய தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.

Tax and Spend என்ற தங்களுடைய கொள்கையின்படி அதிக அளவில் வரிகளை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஒபாமா அரசு தீவிரம் காட்டும். அதேசமயம், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகைகளும், மேல்தட்டு மக்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

`அதிபர் நாற்காலி மட்டும்தான் நாம் எதிர்பார்த்த மாற்றம் அல்ல. நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் பதவி ஒரு வாய்ப்பு' என்று கூறியிருக்கிறார் ஒபாமா. அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு நிறையச் சவால்கள் காத்திருக்கின்றன ஒபாமாவுக்கு. இனி மூச்சு விடுவதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒபாமாவை நினைத்துப் பெருமிதம் பொங்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் வாழும் கறுப்பர்கள்!       ஸீ

ஸீ ஆர். முத்துக்குமார்

source:kumudam

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்;75 ராணுவ வீரர்கள் பலி

 
 
 
 
 
Imageஇலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்தின் மும்முனை தாக்குதலை விடுதலைப்புலிகள் ஆவேச தாக்குதல் நடத்தி முறியடித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை இலங்கை அக்கராயனில் உள்ள முட்கொம்பு பகுதியில் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வந்தனர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை முதல் மாலை வரை நடந்த இந்த சண்டையில் 20 ராணுவத்தினர் பலியானார்கள்.இதே போல அக்கராயன் குளம் கோணவில் பகுதியிலும் முன்னேறி சென்ற ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 12 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 பனிக்கன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் உள்ள சாலைகளை சிங்கள ராணுவத்தினர் மூடிவிட்டு அங்கிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் நாலாபுறமும் அவர்களை சுற்றி வளைத்து எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
 கடந்த 2 நாட்களில் பல்வேறு பகுதிகளில் நடந்த கடும் சண்டையில் மொத்தம் 75 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றிவிட்டனர்

 

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6986&Itemid=52

StumbleUpon.com Read more...

இந்தியா 158 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

 
lankasri.comஇங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன்,"டாஸ்" வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.தொடக்க வீரர்களாக ஷேவாக்கும்,காம்பீரும் களம் இறங்கினார்கள்.இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.இருவருமே அதிரடியாக விளையாடினார்கள்.

ஒரு ஓவருக்கு 6ரன் வீதம் எடுக்கப்பட்டது.இதனால் 16.2-வது ஓவரில் இந்திய அணி 100ரன்னை தொட்டது.

ஷேவாக் 44பந்தில் 2சிக்சர்,6பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.இது அவரது 30-வது அரை சதம்.காம்பீர் 59பந்தில் 8பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.12-வது முறையாக அரை சதம் எடுத்தார்.

19.5-வது ஓவரில் ஸ்கோர் 127ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது.காம்பீர் 51ரன்னில் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார்.அடுத்து ரெய்னா களம் வந்தார்.

ஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்,85 ரன்னில்"அவுட்"ஆனார்.73பந்தில் 10பவுண்டரி 3சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.அப்போது ஸ்கோர் 153ஆக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன்,யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியது.குறிப்பாக யுவராஜ் அதிரடியாக விளையாடினார்.அவர் 42பந்தில் 5பவுண்டரி,2சிக்சருடன் 50ரன்னை தொட்டார்.

ரெய்னா 3சிக்சர் அடித்து முத்திரை பதித்தார்.அவர் 43ரன்னிலும்,அடுத்து வந்த யூசுப் பதான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.அப்போது இந்தியா 37.3ஓவரில் 4விக்கெட்டுக்கு 247ரன் என்ற நிலையில் இருந்தது.

அடுத்து கேப்டன் டோனிகளம் வந்தார்.யுவராஜ்சிங் இங்கிலாந்து பந்து வீச்சை தொடர்ந்து விளாசி தள்ளினார்.அவர் சிக்சர்,பவுண்டரியாய் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

டோனியும் பொறுப்புடன் விளையாடினார்.இந்திய அணி 43.3-வது ஓவரில் 300ரன்னை தொட்டது.

யுவராஜ்சிங் அதிரடியாக சதம் அடித்தார்.64பந்தில் 11பவுண்டரி,4சிக்சருடன் 100ரன்னை தொட்டார்.அப்போது ஸ்கோர் 335ஆக இருந்தது.

டோனி 32பந்தில் 1சிக்சர்,3பவுண்டரியுடன் 39ரன் எடுத்து அவுட் ஆனார்.

யுவராஜ்சிங்கின் தொடர் அதிரடி ஆட்டத்தால் ரன் மளமள என்று குவிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5விக்கெட் இழப்புக்கு 387ரன் குவித்தது.யுவராஜ்சிங் 78பந்தில் 16பவுண்டரி,6சிக்சருடன் 138ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 388க்கு வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 229ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் முலம் இந்தியா 158ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


அதி வேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் யுவராஜ்சிங் சாதனை

யுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் இன்று அனல் பறந்தது.ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் 64பந்தில் (11பவுண்டரி,4சிக்சர்) சதம் அடித்தார்.

இதன் மூலம் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனையை யுவராஜ்சிங் படைத்தார்.அசாருதீன் 1988ம் ஆண்டு நிïசிலாந்துக்கு எதிராக 62பந்தில் (3 சிக்சர்,10 பவுண்டரி),சதம் அடித்து இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் எப்போதுமே அதிரடியாக ஆடக்கூடியவர்.20ஓவர் உலக கோப்பை போட்டியில் அந்த அணி வீரர் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6சிக்சர் அடித்து முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது மிகப் பெரிய ஸ்கோர் இந்தியா சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5விக்கெட் இழப் புக்கு 387ரன் குவித்தது. அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஒருநாள் போட்டியின் இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது வாகும்.2007-ம் ஆண்டு உலக கோப்பையில் பெர் முடாவுக்கு எதிராக இந்திய அணி 5விக்கெட் இழப்புக்கு 413 ரன் குவித்து இருந்தது.

இந்திய அணியின் ஸ்கோரில் இன்று 13சிக்சர்களும்,38 பவுண்டரிகளும் அடங்கும்.யுவராஜ் 6சிக்சரும்,ஷேவாக்,ரெய்னா தலா 3சிக்சரும்,டோனி ஒரு சிக்சரும் அடித்தனர்.

யுவராஜ் 16 பவுண்டரியும்,ஷேவாக் 10 பண்டரியும்,காம்பீர் 8 பவுண்டரியும்,டோனி 3 பவுண்டரியும்,ரோகித் சர்மா 1 பவுண்டரியும் அடித் தனர்.

இந்தியாவின் ஒவ்வொரு 100 ரன் விவரம்:-

100 ரன்-16.2 ஓவர்

200 ரன்-31.5 ஓவர்

300 ரன்-43.5 ஓவர்

387 ரன்-50 ஓவர்

இந்தியாவின் ரன்ரேட் 7.74 ஆகும்.

 

 

StumbleUpon.com Read more...

கால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை

 
lankasri.comகால்பந்து போட்டியில் வீரர்கள் மற்றொருவருடன் மோதுவதும்,நடுவருடன் மோதுவதும் வழக்கம்.இதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய மஞ்சள் அட்டை காண்பிக்கப்படும்.மிகவும் கடுமையாக நடந்து கொண்டால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர்.

இதேபோல கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் அட்டையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதை தடுக்கவும்,நடுவர்களை திட்டுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கிரிக்கெட்டை கண்டு பிடித்த இங்கிலாந்து தான் முதலில் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

முதல்தர போட்டியில் மஞ்சள் அட்டையை கொண்டுவர இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP