சமீபத்திய பதிவுகள்

வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது'

>> Thursday, December 9, 2010


சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கூகுள் ட்ரெண்ட்ஸ்

கூகுள் தேடும் தளம் தான், இன்று இணையத்தில் அதிகம் நாடப்படும் தளமாகத் தொடர்ந்து இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படியானல், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், அதிகம் தேடப்படும் பொருள் தெரிந்தால், உலகம் எதனை நோக்கி அதிகம் கவலைப் படுகிறது அல்லது தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமே. நாடு, இனம்,மொழி பாகுபாடின்றி, எது குறித்து மக்கள் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டு, நாமும் உலகத்தோடு ஒட்ட வாழ்கிறோமா என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா!
கவலைப் படவே வேண்டாம், கூகுள் தேடுதல் சாதனமே இந்த தகவல்களை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற தலைப்பில் தருகிறது.  இதற்கு முதலில் Google.com  செல்லுங்கள். இதன் மேல் பக்கத்தில்  more    என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் இதனை அடுத்து even moreஎன்பதில் கிளிக்கிடுங்கள். கிடைக்கும் அடுத்த பக்கத்தில், அப்படியே மவுஸின் சக்கரத்தினை உருட்டிச் சென்று Trends   என்று இருக்குமிடம் சென்று நிறுத்துங்கள்.  இதன் மீது கிளிக் செய்திடுங்கள். இங்குதான் மேலே முதல் பத்தியில் நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இங்குதான், பன்னாட்டு மக்களும் எந்த செய்தி அல்லது தகவலுக்காக, கூகுள் தேடுதல் தளத்தினை நாடி உள்ளனர் என்று காட்டப்படும்.  
இங்கு காட்டப்படும் தேடுதல் பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்த தேடுதல் விஷயம் இல்லை என்றால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்களோ, அதனை தேடுதல் சொற்களாக அமைத்து,  தேடுதல் கட்டத்திலேயே "Search Trends" என டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் ஒரு வரை படமாக முடிவுகள் காட்டப்படும். இந்த வரை படத்தின் மூலம், நீங்கள் காணவிரும்பிய அந்த தகவல் குறித்து எந்த ஆண்டில் எந்த மாதத்தில் அதிகத் தேடல்கள் இருந்தன என்று தெரிந்து கொள்ளலாம். நான் www.dinamalar.com என டைப் செய்து தேடச் சொன்ன போது, அருகே உள்ளது போல ஒரு கிராப் கிடைத்தது. இதிலிருந்து, தமிழ்ச் செய்தி நாளிதழ்களின் இணைய பதிப்புகளில் அதிகம் காணப்படும் நம் தினமலர் இணைய தளத்தினை எந்த எந்த மாதத்தில் அதிகம் பேர், தேடுதல் தளம் மூலம் தேடிப் பார்த்துள்ளனர் என்று தெரியவருகிறது அல்லவா! இந்த வரைபடத்தின் கீழாகவே, எந்த நாட்டில் மற்றும் எந்த நகரங்களில் அதிகம் தேடுதல் தள மூலம் பார்க்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கிறது.  இத்துடன் நின்றுவிடவில்லை. உங்கள் மனதில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் குறித்த தேடல்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என எண்ணினால், அதனை தேடுதலுக்கான விண்டோவில், ஒரு கமா மூலம் பிரித்துக் கொடுத்தால், இதே போன்ற வரைபடத்தின் மூலம் முடிவுகள் காட்டப்படும்

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டர் பைல்களின் வெவ்வேறு அளவுகள்



கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களின் அளவுகளை கிலோ பைட், மெகா பைட் என்று சொல்கிறோம். மோடம் தகவல் அனுப்பும் வேகத்தை பிட்களில் சொல்கிறோம். இவை குறிப்பாக எதைக் குறிக்கின்றன என்றும், சில அடிப்படை வேறுபாடுகளையும் இங்கு காணலாம். 
Bit:   கம்ப்யூட்டர் சார்ந்த அளவு கோலில் மிகக் குறைந்த அளவு இதுவே.  பிட்களின் அடிப்படையில் எந்த பைலின் அளவும் இருக்க முடியாது. இதனுடைய மதிப்பு 0 அல்லது 1 ஆகும்.  
Byte  இது 8 பிட்கள் இணைந்த ஒரு அலகு. ஒரு பைட் அளவிலும் பைலை உருவாக்குவது கடினம். Kilobyte(KB)   கிலோ பைட். ஏறத்தாழ 1000 பைட்கள் (துல்லிதமாக என்றால் 1024 பைட்) கொண்டது ஒரு கிலோ பைட். ஒரு  சிறிய பைலை டவுண்லோட் செய்கையில் அந்த பைலின் அளவினை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள். 
Megabyte (MB)  = 1,048,576  பைட்கள் அல்லது 1,024 கிலோபைட்கள் . Gigabyte  (GB)  கிகா பைட் 1024 மெகா பைட்.  ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவை இந்த அலகில் தான் குறிப்பிடுவார்கள்.   சரி, இந்த அலகுகளை சில சாதனங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாமா! 
* ஒரு 3.25 அங்குல பிளாப்பியில் 1.44 மெகா பைட் தகவல்களைப் பதியலாம். (1,474 கிலோ பைட்)
* ஒரு சிடியில் 650 முதல் 700 மெகா பைட்கள் அளவில் தகவல்களைப் பதியலாம். ஆனாலும் முழு அளவில் எந்த சிடியும் எழுதப் படுவதில்லை. 3.25 பிளாப்பி அளவில் சொல்வதென்றால் ஒரு சிடியில் 450 பிளாப்பிகளை அடக்கலாம். 
* 20 கிகா பைட் ஹார்ட் டிரைவில் 31 சிடிக்களில் உள்ள தகவல்களை அதாவது 14,222 பிளாப்பியில் உள்ள தகவல்களை அடக்கலாம். 
 * சாதாரணமாக ஒரு பக்க அளவில் டெக்ஸ்ட் ஒன்றை உருவாக்கி அதனைப் பைலாக மாற்றினால் அது 4 கேபி அளவில் இருக்கும். 
 ஒரு பைலின் அளவு தெரிய அதன் பெயரில் மீது ரைட் கிளிக் செய்து அதன் கீழாக வரும் மெனுவில் Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 
இன்னும் ஒரு சிறிய உதாரணம். பிட்  கடுகு அளவு என்றால் பைட் துவரம் பருப்பு. கிலோ பைட் தக்காளி என்றால் மெகா பைட் கத்தரிக்காய்.  கிகா பைட் ஒரு  பூசணிக்காய்

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP