சமீபத்திய பதிவுகள்

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)

>> Friday, October 17, 2008

 
7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா?
 

இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது


(ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை)
 
முன்னுரை: ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரையாகிய‌ "ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா" என்ற ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிப்பெயர்த்து "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்" தளத்தில் பதித்தேன். இந்த கட்டுரையைப் பற்றிய விமர்சனத்தை அபூமுஹை அவர்கள் கொடுத்துள்ளார்கள். மற்றும் அவர் குர்‍ஆன் 7 வட்டார மொழிகளில் இறக்கப்பட்டது என்று முதல் வாதத்தையும், பிறகு ஒரே வார்த்தையை வித்தியாசமான இராகத்தில் ஓதுவது தவறல்ல என்று இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரையில் அவரின் வாதத்தின் மூலமாக எழும்பும் பிரச்சனைகளைக் காணலாம்.
 
 
ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரை:ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?! )

 
 

 
 
1. என் மொழிபெயர்ப்பு பற்றிய அபூமுஹை தள விமர்சனம்:

நான் "100% மொழிபெயர்ப்பு திறமையுள்ள" மொழிபெயர்ப்பாளன் கிடையாது. எனவே, என் மொழிப்பெயர்ப்புக்களில் சில நேரங்களில் ஆங்கிலத்திற்கு நிகரான மொழிபெயர்ப்பு தமிழில் இருப்பதில்லை, இதை நானும் அறிந்திருக்கிறேன், அதனால், தான் ஆங்காங்கே தேவையான இடங்களில் ஆங்கில வரிகளை அப்படியே தமிழாக்கத்தோடு கொடுத்துவிடுகிறேன். என் வரிகள் புரியவில்லையானால், ஆங்கில கட்டுரையை படித்துக்கொள்ளலாம், அதனால் தான் ஆங்கில தொடுப்பையும் கொடுத்துவிடுகிறேன்.

 
["100% சரியாக மொழிபெயர்க்க தெரியாத உனக்கு ஏன் இந்த மொழிபெயர்க்கும் வேலை" என்று சில முஸ்லீம்கள் என்னிடம் கேட்கக்கூடும். இதற்கு பதில் சுலபம், அதாவது, 1% கூட‌ புரியாமல், அரபியில் மட்டும் குர்‍ஆனை படிக்கும் கோடானுகோடி முஸ்லீம்கள் இருக்கும் போது, ஏதோ என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி பெயர்க்கிறேன். ஆகையால், இஸ்லாமுக்கு பதில் சொல்ல இந்த திறமை போதும் என்பது என் கருத்து]

 
அபூமுஹை தளம்:
 
தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் 'மிகவும் தெளிவாக உள்ளது' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.
 
 
ஈஸா குர்‍ஆன்:

 
நான் சொன்னபடி உங்களுக்கு என் தமிழாக்கம் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளலாம். இந்த கட்டுரையை பொருத்த மட்டில், அரபி மொழியிலும் படித்துக்கொள்ளலாம், உங்களுக்கு அரபி படிக்க புரிந்துக்கொள்ள தெரிந்திருந்தால்.

 
ஆங்கிலக் கட்டுரை: Quran or Qurans?!

அரபிக் கட்டுரை: النسخة العربية

 
நான் எழுதிய தமிழ் வரிகள், அதற்கான மூல ஆங்கில வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//

What I'm trying to say is clear; nobody could say that there is one Quran.
 
 
அபூமுஹை தளம்:
 
நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,
 
ஈஸா குர்‍ஆன்:

 
முஸ்லீம்களும் நகைச்சுவையாக எழுதுவதென்பது மிகவும் சந்தோஷமாக விஷயம். உலகத்தில் அனேக குர்‍ஆன் பிரதிகள் உள்ளது என்கிறீர்கள், ஆனால் அவைகள் அனைத்தும் எழுத்துக்கு எழுத்து மாறாமல் இருக்கின்றதா என்பது தானே இப்போது கேள்வியே?

 
எங்கள் குர்‍ஆன்களில் பல வித்தியாசங்கள் உள்ளது என்று எழுதியதே உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் (குவைத் பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசியர்கள்) தானே.
 
 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

 
இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)

டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

 
இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.

 
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)

 
 
 
நான் என் பங்கிற்கு ஒரு வேடிக்கையான ஆனால் உண்மை விவரத்தைச் சொல்கிறேன். உலக முஸ்லீம்கள் குர்‍ஆனை எப்படி மதிக்கிறார்கள், குர்‍ஆன் என்றால் எப்படி இருக்கும் என்று கண்முடித்தனமாக நம்புகிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

 
என் சொந்தக்காரர் ஒருவர் ஒரு கல்ப் நாட்டில் வேலை செய்கிறார், இரண்டாண்டிற்கு ஒரு முறை ஊருக்கு வருவார். ஒரு முறை அப்படி வந்து இருக்கும் போது, அவர் சில பொருட்களை "அரபி செய்தித்தாளில்" சுற்றி கொண்டு வந்தார். நானும் அப்போது அங்கு இருந்தேன். நான் அந்த செய்தித்தளை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு சிறிய பகுதியை வெட்டி எடுத்து என் சகோதரிக்கு காட்டினேன். என் சகோதரி குர்‍ஆனை அரபியில் பல முறை படித்துள்ளாள். அந்த வெட்டிய காகிதத்தை கண்டவுடன் பயபக்தியுடன் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு அதை பத்திரப்படுத்திக் கொண்டாள். அது என்ன காகிதம் என்று நான் கேட்டேன், அவள் சொன்னாள், அது அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆன் வசனம் என்றாள். நான் பிறகு அவளுக்கு விவரித்தேன், அந்த காகிதம் நம் தமிழ் செய்தித்தாள் தினத்தந்தி போல, அரபி செய்தித்தள் என்றுச் சொல்லி, அந்த மொத்த அரபி செய்தித்தாளையும் காட்டினேன், அவள் தன் அறியாமையை நினைத்து நொந்துப்போனால். இப்படித் தான் உலகமனைத்திலும் உள்ள அரபி பின்னனி இல்லாத இஸ்லாமிய மக்கள் "சிகப்பு சேலை கட்டியவள் எல்லாம் என் மனைவி" என்று ஒருவன் சொன்னானாம், அது போல, அரபியில் இருப்பது எல்லாம் குர்‍ஆன் என்று கருதிக்கொண்டு இருக்கின்றனர். அரபியில் நீ உருப்படமாட்டாய், உன் வீடு உருப்படாது என்பது போல பல மோசமான வார்த்தைகளை எழுதி இப்படிப்பட்டவர்களிடம் கொடுத்தால், அதையும் பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைப்பார்கள், நம் இஸ்லாமியர்கள். இதே போலத்தான் தங்கள் வாழ்நாட்கள் அனைத்தும் ஒரு வரியும் புரியாமல் குர்‍ஆனை அரபியில் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி வட்டார விஷயத்திற்கு வருகிறேன்.

 
 
அபூமுஹை அவர்களின் வாதம் 1: வட்டார வார்த்தைகள்
 
 
அபூமுஹை அவர்கள் எழுதியது

 
வட்டார மொழி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.
 
 
ஈஸா குர்‍ஆன்:

 
மேலே அபூமுஹை அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன், ஒரு சில வார்த்தைகள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வித்தியாசமாக பேசப்படும், பொருள் ஒன்றாக இருந்தாலும், வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கும். ஆனால், வட்டார மொழியில் குர்‍ஆனை அல்லா இறக்கினான் என்றுச் சொல்லி, குர்‍ஆனை அபூமுஹை அவர்களே கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார். வட்டார மொழியெல்லாம் இலக்கணப்படி சரியானதாக இருக்காது.

 
எப்படி என்று கேட்கிறீர்களா? தமிழில் உள்ள வட்டார வார்த்தைகளை உதாரணத்திற்காக எடுத்துக்கொள்வோம். கீழ் கண்ட வார்த்தைகளை பாருங்கள். இவைகள் அனைத்திற்கும் ஒரே பொருள் தான். ஆனால், பல வட்டாரங்களில் அல்லது இடங்களில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளாகும். இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் அனைவரும் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம், பேசியும் இருப்போம்.
 
 
1) இருக்கின்றது

2) இருக்கிறது

3) இருக்குது

4) இருக்கு

 
5) இக்குது

 
6) இக்கு

 
மற்றும்

 
7) கீது

 
 
வட்டார வார்த்தைகளில் குர்‍ஆன் வசனங்கள்:

அபூமுஹை அவர்கள் வட்டார மொழியில் குர்‍ஆன் இறங்கியது என்ற கருத்திற்காக ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டினார்.
 
அபூமுஹை தளம்:

"ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)
 
 
ஈஸா குர்‍ஆன்:

 
இந்த ஹதீஸ் சரியானதா இல்லையா என்பதை இஸ்லாமியர்கள் ஆராய்ச்சி செய்யட்டும், நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அபூமுஹை அவர்கள் இந்த ஹதிஸை ஆதாரமாக காட்டினபடியால், இந்த ஹதீஸ் உண்மையென்றே கருதி, இதனால் எழும் கேள்விகளைக் காண்போம். குர்‍ஆன் ஒரு இறைவேதம், இலக்கிய நூல்களில் சிறந்தது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட வட்டார வார்த்தைகள் தங்கள் வேதத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வார்களா? பாமர மக்கள் தங்கள் வழக்கத்திற்கு ஏற்ப இலக்கண முறைக்கு முரணாக சொந்தமாக உருவாக்கிக்கொள்ளும் வார்த்தைகளை இஸ்லாமின் இறைவன் தன் வேதத்திலும் புகுத்துவாரா? என்று இஸ்லாமியர்கள் சிந்திக்கட்டும்.

 
இந்த ஹதீஸின் படி குர்‍ஆன் வசனங்களை ஜிப்ராயீல் தூதன், அரபி வட்டார வழக்கப்படி முகமதுவின் வேண்டுகோளுக்கு இணங்க இறக்கினார் என்று அறிகிறோம்.

 
உதாரணத்திற்கு குர்‍ஆன் 2:115ல் உள்ள வசனத்தை நாம் எடுத்துக்கொள்வோம், நாம் மேலே கண்ட தமிழ் வட்டார வார்த்தைகளை( இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு , மற்றும் கீது ) இட்டு இந்த வசனத்தை படித்தால் எப்படி இருக்கும் என்று இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் சிந்திக்கட்டும்.
 
 
குர்‍ஆன் 2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.
 
 
மேற்கண்ட வசனத்தில் "இருக்கிறது" என்ற இடத்தில், இருக்கின்றது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு , மற்றும் கீது என்று மாற்றி படித்துப் பாருங்கள் தமிழ் முஸ்லீம் சகோதரர்களே.

 
இப்படித்தான் அல்லா குர்‍ஆனை பலவிதமான 7 வட்டார மொழிப்படி இறக்கினார் என்று அபூமுஹை சொல்லியுள்ளார். ஒரு எடுத்துக்காட்டிற்காக நான் தமிழ் வட்டார வார்த்தைகளை எழுதினேன், இதே போல அரபியில் இருக்கும் வட்டார வார்த்தைகளில் இறக்கப்பட்டதாக அபூமுஹை அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

 
வட்டார மொழிகள் உள்ள குர்‍ஆன் இலக்கணப்படி சரியானதா?

 
அரபி இலக்கிய புத்தகங்களிலேயே குர்‍ஆன் ஒன்று மட்டும் தான் அதிக தகுதியுடனும், சிறப்புடனும் உள்ளது. இதன் இலக்கிய அழகிற்கு எதுவுமே ஈடாகாது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இப்படி வட்டார மொழிகளோடு உள்ள புத்தகம் இலக்கணப்படி சரியானதாக இருக்குமா சிந்தியுங்கள்.

 
நாம் பேசும் போது நம் வழக்கப்படி, நாம் வாழும் வட்டாரப்படி பேசினாலும், எழுதும் போது, இலக்கணப்படி எழுதவேண்டும். உதாரணத்திற்கு, மேற்கண்ட குர்‍ஆன் வசனத்தில், வட்டார வழக்கச் சொற்கள் இட்டு படித்துப்பாருங்கள், எவ்வளவு கொச்சையாக இருக்கும்.
 
 
நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்குது

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கு

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இக்கு
 

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் கீது
 
 
தமிழ் வெர்சுவல் பல்கலைக் கழகம் (Tamil Virtual University) என்ற தளத்தில் "செந்தமிழ் சிறப்பு" என்ற கட்டுரையிலிருந்து ஒரு விளக்கம்:
 
 
இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு, கீது என வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வடிவில் வழங்கினாலும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும், இருக்கின்றது அல்லது இருக்கிறது என்னும் வடிவையே ஆளவேண்டுமென்பது, தொல்லாசிரியர் கட்டளையிட்ட செம்மையென்னும் வரம்பாம்.

Source: Tamil Virtual University http://www.tamilvu.org/slet/lA46K/lA46Kd11.jsp?id=23

formats mine
 
 
எவ்வளவு வட்டார சொற்கள் இருந்தாலும், மேடையில் பேசும் போதும், புத்தகம் எழுதும் போதும், இலக்கணப்படி சரியாக உள்ள வார்த்தைகளை பேச/எழுத‌ வேண்டும். மேடையில் பேசும் போது, வட்டார வார்த்தைகளைப் பேசினால், அது நகைச்சுவைக்காகவும், கேலிக்காகவும் இருக்குமே ஒழிய அது ஒரு இலக்கணப்படி சரியானதாக இருக்காது.

 
எனவே, இலக்கணத்தின்படி அல்லாமல், கொச்சை மொழிகள் வார்த்தைகள் கொண்ட புத்தகத்தை ஒரு சிறப்புடைய புத்தகம் என்று சொல்லமுடியாது.

 
 
அபூமுஹை அவர்களின் வாதம் 2: ஒரே வார்த்தையை வித்தியாசமான இராகத்தில் ஒலியை நீட்டி, நிறுத்தி ஓதுதல்:
 
 
அபூமுஹை அவர்களின் வாதம்:

 
"தர்ஜீவு" என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

 
பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

 
குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

 
"பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி..." என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். எழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

formats mine
 
அபூமுஹை அவர்கள் சொல்வது போல, ஓதும் 7 முறைகளிலும் வார்த்தைகள் ஒன்று தான் "இராகம்" மட்டும் தான் மாறுகிறது என்ற கூற்று தவறானதாகும். அதாவது, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அங்கீகரித்த ஓதும் முறைகளில் வார்த்தைகளே மாறியிருக்கிறது.ஒரு வேளை, இன்றுள்ள குர்‍ஆன் ஓதும் முறைகளில், வெறும் இராகம் மட்டும் தான் மாறியிருக்குமானால், குவைத் பல்கலைக் கழக பேராசியர்கள் அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர்கள் எழுதிய‌ விவரங்களின் படி, ஒவ்வொரு ஓதும் முறைக்கு வார்த்தைகள் மாறியுள்ளன, அதே போல பொருளும் மாறுகிறது.

"ஒரு குர்‍ஆனா பல குர்‍ஆன்களா" என்ற கட்டுரையில் உள்ள இரண்டாம் எடுத்துக்காட்டை காண்போமானால், நமக்கு இந்த வித்தியாசம் புரியும்.

கீழே உள்ள எடுத்துக்காட்டில் ஒவ்வொரு ஓதும் முறையிலும் அரபி வார்த்தை மாறியிருப்பதை காணலாம்.
 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25

[English translation based on the one done by Yusuf Ali.]

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
toosaqit

* ஹம்ஜா, அல்மிஷ்:

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tasaaqat

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yassaqat

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tassaqat

* அபோ நஹிக், அபோ ஹை:

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tosqt

 
* அலேரப் a book for Alnahas:

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
nosaqit

 
* மஸ்ரோக்

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yosaqit

* அபோ ஹையா:

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tasqwt

* அபோ ஹையா

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yasqwt

 
* அபோ ஹையா

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tatasaqat

* அபோ அல்ஸ்மல்:

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yosqt

Source: ஒரு குர்‍ஆனா பல குர்‍ஆன்களா

மேலே உள்ள எடுத்துக்காட்டுக்களை பாருங்கள், அபூமுஹை அவர்கள் சொல்வது போல, ஒரே வார்த்தையை பல இராகங்களில் ஓதுவது போல உள்ளதா? கண்டிப்பாக இல்லை, ஒவ்வொரு ஓதும் முறையிலும் வார்த்தை வித்தியாசமாக உள்ளது. இந்த எடுத்துக்காட்டுக்கள் அனைத்தும், குவைத் பலகலைக் கழக பேராசியர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து எடுத்ததுதான்.

 
அபூமுஹை அவர்களின் முரண்பட்ட இரண்டு வாதங்கள்:

 
அபூமுஹை முதலில் 7 வட்டார வார்த்தைகளில் குர்‍ஆனை இறக்கினார் என்றார், வட்டார வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கும் என்றார், ஆனால்,தன் இரண்டாவது வாதத்தில் குர்‍ஆனை 7 ஓதும் முறை என்பது, ஒரே வார்த்தையை அழகிற்காகவும், இராகத்திற்காகவும், நீட்டியும், நிறுத்தியும் குர்‍ஆனை வாசிப்பதைத் தான் "குர்‍ஆனை ஓதும் 7 முறைகள்" என்கிறார். இதில் எது சரி, எது தவறு?

 
அவர் சொன்ன இரண்டு விவரங்களை விவரங்களை கீழ் கண்ட பட்டியலில் காணலாம்.
 
 
(A)

7 வட்டார வித்தியாசமான வார்த்தைகள்
(B)

ஒரே வார்த்தையை இராக‌த்திற்காக‌ ப‌ல‌ வ‌கைக‌ளில்(பொதுவாக‌ 7 முறையில்) ஓதுத‌ல்
1) இருக்கின்றது 1) அல்லாஹு அக்பர்
2) இருக்கிறது 2) அல்ல்ல்லாஹு அக்பர்
3) இருக்குது 3) அல்லா.......ஹு அக்பர்
4) இருக்கு 4) அல்லாஹூ...... அக்பர்
5) இக்குது 5) அல்லாஹு அக்க்க்பர்
6) இக்கு 6) அல்லாஹு அக்ப......ர்
7) கீது 7) அல்லாஹு அக்பர்ர்ர்ர்ர்ர்ர்
 
 
அன்பான அபூமுஹை அவர்களே, உங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில், மேலே உள்ள பட்டியலில் (A) பத்தியில் சொல்லப்பட்டது போல, 7 வட்டார மொழிகளில் இறங்கியது என்றீர்கள். பிறகு, அதே கட்டுரையில் (B) என்ற பத்தியில் உள்ளது போல, அழகிற்காக நாங்கள் குர்‍ஆனை பல வகைகளில் ஒரே வார்த்தையை படிப்போம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

 
ஆனால், இன்றுள்ள குர்‍ஆன்களில் (A) என்ற பத்தியில் உள்ளது போல, வார்த்தைகள் வித்தியாசங்கள் உள்ளன, நீங்கள் சொல்வது போல, ஒரு வார்த்தையை வித்தியாசமாக படிப்போம் என்பது போல இல்லை. எனவே, யார் யாருக்கு எப்படி எழுத தோன்றியதோ அது போல, குர்‍ஆனின் வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

 
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வெறும் வார்த்தைகளில் வித்தையாசங்கள் இருப்பதோடு மட்டுமில்லாமல், இன்னும் அனேக வித்தியாசங்கள் கீழ்கண்ட பட்டியலில் குறிப்பிட்டது போல‌ குர்‍ஆன்களில் உள்ளது.
 
 
எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].

1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.

3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.

5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.

6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.

7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.

மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

Source: பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

FootNote:
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.
 
முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல, குர்‍ஆனில் ஒரு எழுத்துகூட மாறவில்லை, வசனங்கள் மாறவில்லை என்று நீங்கள் நம்புவது வெறும் உங்கள் அறிஞர்கள் உங்களுக்குச் போதித்துக்கொண்டு இருக்கும் தவறான விவரங்களாகும். உண்மையில் அப்படி இல்லை, மேலும் அறிய கீழ் கண்ட தமிழ் கட்டுரைகளை படித்துப்பாருங்கள்.

 
குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்:
குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?!)

குர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)

பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?

இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம் 

 

StumbleUpon.com Read more...

இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்

 


இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்

 

சஹிஹ் முஸ்லீம் (Sahih Muslim, Book 8, Number 3421)

 
ஆயிஷா அவர்கள் கூறியதவது: பத்து முறை பால்கொடுத்து விட்டால் திருமணம் நியாயமற்றதாகிவிடும் என்று குர்‍ஆனில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் இது இரத்து செய்யப்பட்டு(Abrogate or Substitute) ஐந்து முறையாக குறைக்கப்பட்டது. அல்லாவின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மரிக்கும் காலத்திற்கு முன்பு வரையிலும் இந்த வசனம் குர்‍ஆனில் இருந்தது (மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது)
 
 
ஏன் இந்த வசனம் இன்றைய குர்‍ஆனில் இல்லை? ஏன்? எங்கே போனது இந்த வசனம்?

 
 
பால் ஊட்டுதல் பற்றிய மேலதிக விவரங்களை அறிய இங்கு சொடுக்கவும்.

 
 
 


குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
 

StumbleUpon.com Read more...

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?

 விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம்
குர்‍ஆனில் இல்லை ஏன்
 

The Verse of Stoning
 

சஹிஹ் புகாரி (Sahih Bukhari, Volume 8, Book 82, Number 816)

 
பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்து கொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன். (இதே விவரமுள்ள ஹதீஸை இங்கே (Vol. 8, No. 817 and Vol. 9, No. 424;) மற்றும் சஹீஹ் முஸ்லீம் ஹதீஸில் இங்கே(No. 4194) பார்க்கலாம்)
 
விபச்சார குற்றத்திற்கு தண்டனையாக உள்ள இந்த "கல்லெறிந்துக் கொள்ளுதல்" வசனம், குர்‍ஆனில் இல்லை? ஏன்?

 
இந்த தலைப்பு பற்றிய மேலதிக விவரங்களை ஜான் கில்கிறைஸ்ட் அவர்களின் "Jam' al-Qur'an" என்ற கட்டுரையிலும், சாம் ஷமான் அவர்களின் கட்டுரையாகிய "Islam and Stoning: A Case Study Into the Textual Corruption Of the Quran" என்ற கட்டுரையிலும் படிக்கலாம். மற்றும் ஜான் பர்டன் அவர்களின் "The Collection of the Qur'an" என்ற கட்டுரையில், இஸ்லாமிய ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் மேற்கோள்களின் சுருக்க பட்டியலிலும் காணலாம்.
 
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/stoning.html

குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/quran/stoning.html
 

StumbleUpon.com Read more...

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!

 ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌

(Sura 2:238 is not complete according to Aisha)
 


 
 
ஆயிஷா அவர்களிடமிருந்தும், அபூ யூனுஸ் மூலமாக, அல்-ககா இபின் ஹகீம் மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக மாலிக் மூலமாக யஹ்யா மூலமாக எனக்கு அறிவிக்கப்பட்டது (Yahya related to me from Malik from Zayd ibn Aslam from al-Qaqa ibn Hakim that Abu Yunus, the mawla of A'isha,) உம்-அல்-மூமினீன் கூறியதாவது,


ஆயிஷா தனக்கு ஒரு குர்‍ஆன் எழுதித் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். மேலும் "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்கு கீழ்படிவாயாக" என்ற ஆயத்தை நீ அடையும்போது எனக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். நான் அதை எட்டியபோது ஆயிஷா அவர்களிடம் கூறினேன், அவர்கள், "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்குக் கீழ்படிவாயாக" என்று ஒப்புவித்து, இப்படி எழுதும் படி கூறினார்கள். மற்றும் "நான் இதை அல்லாவின் தூதரிடமிருந்து கேட்டேன் அல்லா அவருக்கு சமாதானம் அருளுவானாக. என்று கூறினார்கள்."
 
 
 
அமர் இபின் ரபி மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக, மாலிக் மூலமாக, யஹ்யா மூலமாக அறிவிக்கப்பட்டது(Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Amr ibn Rafi said)

நான், உம்-அல்-மூமினீன், ஹப்ஸாவிற்காக ஒரு குர்‍ஆன் எழுதிக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம், நீ "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக காத்துக்கொண்டு அல்லாவுக்கு கீழ்படிந்து இரு" என்ற‌ ஆயத்தை எட்டும்போது எனக்கு தெரியப்படுத்து, என்றுச் சொன்னார்கள். நான் அதை எட்டினபோது அவருக்கு அறிவித்தேன், அவர்கள். "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாகக் காத்து அல்லாவுக்கு கீழ்படிந்திரு." என்று ஒப்புவித்தார்கள்.
 
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/2.238.html

  

StumbleUpon.com Read more...

மதகலவரம்-அணுசக்தி ஒப்பந்தம்:மேல் சபையில் அமளி;பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை

 
 
lankasri.comஒரிசா,கர்நாடகா மத கலவரம் தொடர்பாக மேல்சபையில் கம்னிஸ்டு-பாரதீய ஜனதா இடையே மோதல் ஏற்பட்டது.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது பகுதி கூட்டம் இன்று தொடங்கியது.

பாராளுமன்றம் கூடியதும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.சமீபத்தில் மரணம் அடைந்த பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஸ்ரீகாந்தப்பா,லால் திவார்,மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் 7பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்துடன் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் உயிர் இழந்தவர்கள்,இமாச்சல பிரதேசம் கோவில் நெரிசலில் உயிர் இழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சபை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல மேல்-சபையிலும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது கம்னிஸ்டு எம்.பி.க்கள் சமீபத்தில் ஒரிசா,கர்நாடகத்தில் மத கலவரத்தில் இறந்தவர்களுக்கும் ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு பாரதீய ஜனதா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் அவையின் மையப்பகுதிக்கு வந்து வாக்குவாதம் செய்தனர்.

இதனால் மேல் சபை தலைவர் அமீது அன்சாரி சபையை 12மணி வரை ஒத்தி வைத்தார்.12மணிக்கு மீண்டும் சபை கூடியது.அப்போது பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி,கம்னிஸ்டு எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டார்.அவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வர வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.இதனால் சபையை திங்கட்கிழமை வரை மேல் சபை தலைவர் ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக அவர் மீது கம்னிஸ்டு கட்சிகள் உரிமை மீறல் நோட்டீசு கொடுத்துள்ளன.சபாநாயர் சோம்நாத் சட்டர்ஜி,மேல் சபை தலைவர் அமீது அன்சாரி ஆகியோரிடம் இந்த நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

கிறித்துவர்களைத் தாக்குவதற்குப் பெயர் மக்களைக் காப்பாற்றுவதாம்! பஜ்ரங் தள் தலைவரின் உளறல்!


 

புதுடில்லி, அக். 5- மக்களைக் காப்பாற்றத்தான் பஜ்ரங் தள் அமைப்புக்குப் பயிற்சி அளிக் கப்படுவதாக அந்த அமைப் பின் தலைவர் கூறியுள்ளார்.
கான்பூரில் தனியார் விடுதி யில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற் பட்ட விபத்தில் இறந்துபோன பூபிந்தர் சிங் என்பவர் பஜ்ரங் தளத்தின் தீவிர தொண்டர் எனவும் அவர் தற்போது ஒதுங் கியிருப்பதால், அவருடைய செயல்களுக்கு பஜ்ரங் தளம் காரணமாக்கப் படக் கூடாது என்றும் அதன் தலைவர் பிரகாஷ் சர்மா கூறுகிறார்.
விசுவ இந்துபரிசத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங் தளம் உருவாக்கப்பட்ட போது கான்பூரின் அமைப்பாளராக பிரகாஷ் சர்மா நியமிக்கப்பட் டார். அப்போது உத்தரப்பிர தேசத்தின் சில பகுதிகளில் மட் டுமே பஜ்ரங் தளம் செயல் பட்டது. தற்போது அதில் 13 லட்சம் தீவிர தொண்டர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே உள்ளனர். பஜ்ரங் தளத்தின் நோக்கமெல்லாம் இந்திய நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பஜ்ரங் தளத்தின் கிளைகள் இருக்க வேண்டும் என்பதுதான் என் கிறார் இவர்.
கான்பூரில் வெடி விபத்து நடந்த இடத்தில் 11 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிப்பொருள் கள், பாட்டரிகள், ஜெலட்டின் குச்சிகள், நேரம் குறிப்பான்கள் போன்றவை காணக் கிடைத் தன. இங்கு வெடி விபத்தில் இறந்த ராஜீவ் மிஸ்ர என்பவர் யார் எனத் தெரியாது எனக் கூறி விட்டார் பிரகாஷ் சர்மா.
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்திலோ, கருநாடக மாநிலம் மங்களூரிலோ வேறு எங்குமோ தமது பஜ்ரங் தளம், கிறித்துவர்களுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபட வில்லை என முழுப் பூணிக் காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். கருநாடகா மாநில பஜ்ரங் தளத்தின் தலை வர் மகேந்திர குமார் வன் செயல்களைத் தம் அமைப்பு செய்ததாக ஏற்கெனவே ஒத்துக் கொண்டு கைதாகியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
அவர் கூறியது தவறு என் கிறார் பிரகாஷ் சர்மா. இந் துக்கள் இதில் சம்பந்தப்பட் டிருக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் கூற முடியும்? ஒரு வரையொருவர் கிறித்துவர்கள் தாக்கிக் கொள்ளவில்லை என்று கூற முடியுமா? இரண்டு கிறித்துவர்கள் ஒரு தேவால யத்திற்குத் தீ வைத்தது எனக்குத் தெரியும் என்றெல்லாம் இவர் சவடாலாகப் பேசுகிறார்.
அங்கே இருந்த விசுவ இந்து பரிசத்தின் வயதான தலைவர் கிரிராஜ் கிஷோர் என்பவர் கூறுகையில், அந்தப் பகுதியில் பணியாற்றிய லட்சுமணா னந்தா கொல்லப்பட்டதால் எதிர்விளைவுகள் இருக்கத் தான் செய்யும் எனக் குறிப்பிட் டார். ஒரிசாவில் பா.ஜ. கட்சிக் கூட்டணி ஆட்சி நடந்தாலும், கொலை செய்தவர்களை இன் னும் கைது செய்யவில்லை என்று கூறினார். மக்களைக் காப்பாற்றும் கடமை பஜ்ரங் தளக்காரர்களுக்கு இருப்பதாக வும் இதற்காக அவர்களுக்குக் கடும் பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரகாஷ் சர்மா தெரிவித்தார். பஜ்ரங் தளத்தின் நோக்கம், இலட்சியம் எல் லாமே இந்து ராஷட்ரத்தை ஏற்படுத்துவதுதான் என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இந்து ராஷ்டிரத்தில் சிறு பான்மையர் வசிக்கலாம்; மசூதிக்கோ, சர்ச்சுக்கோ போக வேண்டாம் எனக் கூறவில்லை. மத மாற்றம் நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு அவர்களை மாற்றிக் கொண்டு வந்துள் ளோம். (இது மத மாற்றம் அல்லவா?) எனக் கூறிய பிரகாஷ் சர்மா, தாம் பஜ்ரங் தளத்தின் அமைப்பாளராக வந்த பிறகு 10 அல்லது 15 ஆயிரம் பேரை மத மாற்றம் செய்திருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டார்.
இவ்வளவு வெளிப்படை யாக இந்து மதவெறிப் பேச்சும், பிற மத வெறுப்பும் கொண் டுள்ள இந்த அமைப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சார்பின்மைக்கு எதிராக, இந்து மத ஆட்சியை நிறுவத் துடிக்கும் பஜ்ரங் தளத் துக்குத் தடை விதிக்க வேண் டும் எனப் பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.

 

http://files.periyar.org.in/viduthalai/20081005/news08.html

StumbleUpon.com Read more...

டெஸ்ட்டில் அதிக ரன் - சச்சின் புதிய உலக சாதனை

 இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் சாதனை நாயகன் சச்சின். சச்சின் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் லாரா, 11,953 ரன்கள் எடுத்து தக்க வைத்திருந்தார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்த சாதனையை முறிய‌டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


முன்னதாக சச்சின் சாதனை படைப்பதற்காக லாரா பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரா அளித்திருந்த பேட்டியில், சச்சின், இந்தியாவை இக்கட்டான கால கட்டங்களில் காப்பாற்றியிருக்கிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

சச்சின் சாதனை புரிந்ததை தொடர்ந்து மொகாலி விளையாட்டரங்கே களை கட்டியது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சக வீரர்கள், சச்சினுக்கு பெவிலியனில் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸி., வீரர்கள் முன்னதாக சச்சினை சாதனை படைக்க விடாமல் தடுப்பதே தங்கள் இலக்கு என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.

லாரா 131வது ‌டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய சாதனையை, சச்சின் தனது 152வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.


டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள் :

சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார். வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார். அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார். டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார். கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.

நன்றி : தினமலர்
 
http://thamizcricket.blogspot.com

StumbleUpon.com Read more...

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை

 

17 10 2008


பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது:

ழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் 'இந்து' பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர்.

மாலினி பார்த்தசாரதியின் 'மலநாற்றம்' வீசும் கட்டுரை வெளியிட்ட 'இந்து' ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

நன்றி
புரட்சி பெரியார் முழுக்கம். (16-10-2008)

"த்திரிகைளுக்கு எதிராக நடந்த வன்முறை' என்று இதைக் கருதி கண்டிப்பதாக கோவையில் உள்ள 'பிரஸ் கிளப் ஆப் இண்டியா' கூடி முடிவெடுத்திருக்கிறார்களாம். அதனால், இந்து நாளிதழ் எரிக்கப்பட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை. போதாகுறைக்கு, பெரியார் திராவிடர் கழக தலைமைக்கு 'கட்சியை எப்படி நடத்துவது?' என்று அறிவுரையும் சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறார்களாம், பத்திரிகையாளர்கள். நல்லது.

'இந்து' பத்திரிகைக்கு வலித்தால், இவர்கள் அழுகிறார்கள். 'இந்து' பத்திரிகைக்கு கோபம் வந்தால் இவர்கள் சீறுகிறார்கள். இப்படி கொதித்து எழும் இந்த கிளப்புகள், ஜெயலலிதா ஆட்சியில், நக்கீரன் கோபால் பொடாவில் கைதானபோதும், நிருபர்கள் தாக்கப்பட்டபோதும், இப்படித்தான் 'தைரியாமாக' ஒரே குரலில் செயல் பட்டதா?

பல பத்திரிகை நிர்வாகங்கள், தன்னிடம் வேலை பார்க்கும் பத்திரிகையார்களை அடிமைகளை போல் நடத்துவதும், மரியாதைக்குறைவாக அழைப்பதும், கேவலப்படுத்துவதும், நினைத்தால் வேலையை விட்டு விரட்டுவதும், அடியாட்களை வைத்து அடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்து இருக்கிறார்கள். இருக்கிறார்கள். முதலாளிகளால், நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கிளப்புகள், செய்தது என்ன?

தனிநபராக நிர்வாகத்தை எதிர்த்து, துணிந்து மோதிய பத்திரிகையாளர்களுக்கு மறைமுக ஆதரவைக் கூட தந்ததில்லை கிளப்புகள். அந்தப் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டால் தமக்கு ஆபத்து வருமோ என்று கருதி, தொலைபேசியில் கூட விசாரித்ததில்லை, கிளப்புகளின் பொறுப்பாளர்கள், சக பத்திரிகையாளர்கள். அப்படியானால் பத்திரிகையாளர்களுக்கான கிளப்புகள் யாருக்கானவை?

ஒரு படத்தில் நடிகர் விவேக், டீக் கடையில் இருக்கும் போது, ரவுடிகளால் தாக்கப்படுவார். அந்தக் கடையின் உரிமையாளர் அதை பார்க்கமால் அவர் பாட்டுக்கு டீ போட்டுக் கொண்டு இருப்பார். அவரை பார்த்து விவேக், "யாருமே இல்லாத டீக் கடையில, யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்க" என்பார். அதுபோல்தான் செயல் படுகிறது இந்த பத்திரிகையார்களின் கிளப்.

பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்க முன் வராத கிளப்புகள், நிர்வாகத்திற்கு பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் போல் அறிவுரைச் சொல்கிறார்கள். தீர்ப்பும் வழங்குகிறார்கள்.

சேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில், கேரளாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளம் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேலை பார்க்கும் மலையாளிகள்.

தமிழர்கள் பிரச்சினைகளின் போதோ, தமிழர்கள் பாதிக்கப்படும் போதோக்கூட குரல் கொடுக்க மறுக்கிறார்கள், இந்து பத்திரிகையின் ஆதரவாளர்களான 'பிரஸ் கிளப் ஆப் இண்டியா' தமிழ் பத்தரிகையாளர்கள். ஏன் என்றால் காரணம் இவர்கள் தமிழர்கள் அல்ல. இந்துக்கள்.

பாவம் பத்திரிகையாளர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கும், சுயமரியாதைக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-வே. மதிமாறன்

 

http://mathimaran.wordpress.com/2008/10/17/article-129/

StumbleUpon.com Read more...

குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!

மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.


"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது'' என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.


ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. "கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்' என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.


"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, "ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.


சென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, "மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, "மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது. பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் "பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.


தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.


வர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. மக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.


இந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.


சங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் "நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு. வட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.


டெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு. வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் "இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது. காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.


பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து "தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர். ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.


சங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள். இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர். அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.


இவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர். 92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர். முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.


2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது. காங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.


அதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள். மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. "குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்'' என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.


இந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி. மும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள். ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் "பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.


" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் "கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி "பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல். இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.


பார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும். சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும். அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.


இந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள். இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.


இந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன. ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை. மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி. அவ்வாறு வெல்ல வேண்டுமென்றால் சிறுபான்மை மக்கள் மதச்சார்பற்ற அமைப்புகளின் கீழ் திரளுவதற்கு முன்வர வேண்டும்.


தமிழகத்தில் பார்ப்பன மதவெறியர்கள் காலூன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரின் பணி. கடந்த இரு பத்தாண்டுகளில் எமது அமைப்பினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் மக்கள் இசைவிழா, தில்லை சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக நடந்த போராட்டம் முதலானவையும், இந்து மதவெறியர்களுக்கு எதிரான நேரடியான மோதுதல்களும் இந்து மதவெறியர்களைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தியிருக்கின்றன.


இருப்பினும், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் மதமாற்றம், புளியங்குடி தென்காசி கலவரம், கோவை கலவரம், தற்போது கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுதல் என அவர்கள் தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து முயன்றவாறுதான் இருக்கின்றார்கள். இந்தச் சூழலில் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது சாதி, தீண்டாமை, மொழி, பண்பாட்டு அடக்குமுறை, மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் சித்தாந்தம் என்று பார்ப்பன பாசிசத்தைப் பெரும்பான்மை மக்களிடத்தில் விளங்க வைக்காத வரை அவர்களை ஒழிக்க முடியாது.


அந்தப் போராட்டம் ஒன்றுதான் இந்து மதவெறியர்களைத் தனிமைப்படுத்தும். அந்தப் போராட்டம்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரி என்பதை மக்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் விளங்கச் செய்யும். கடினமென்றாலும் இது ஒன்றே வழி.


· சாத்தன்

 http://tamilarangam.blogspot.com/2008/10/blog-post_17.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP