தினத்தந்தி,மாலைமலர் பத்திரிக்கைகள் வெளியிட்ட தவறான செய்தி
>> Monday, August 17, 2009
பொது மக்களுக்கான ஒரு பொது அறிவுப் பள்ளிக்கூடமாக இருப்பது பத்திரிக்கைகளே.ஆனால் அவைகள் செய்கின்ற கூத்து அவற்றின் நம்பகத்தன்மைகளை கேள்விக்குரியாக்குகிறது.
கடந்த 15ஆம் தேதி இந்தியா முழுவதும் 63ஆம் சுதந்திர நாள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.ஆனால் மக்களுக்கு இயறகையான சந்தேகம் வருவது உண்மை.அதாவது 1947ல் ஆகஸ்ட் 15 சுதந்திரம் அடைந்த இந்தியா 2009 ஆகஸ்ட் 15ல் 62 வருடத்தை முடித்து 63 ஆம் வருடத்தை தொடங்குகிறது.ஒருவரின் பிறந்த நாளை கணக்கிடும் பொழுது அவர் பிறந்த தினத்தில் இருந்து ஒரு வருடம் கழிந்து அதே நாள் அவரும் பொழுதே ஒரு வயது என்று கணக்கிடப்படுகிறது.ஆனால் சுதந்திர தினம் அப்படி கணக்கிடக்கூடியது அல்ல.1947ல் இருந்து கணக்கிடப்பட வேண்டும்.அப்படி கணக்கிட்டால் 2009 ஆகஸ்ட் 15 இந்தியாவின் 63ஆம் சுதந்திர தினமாகும்.
இப்பொழுது இதில் என்ன பிரச்சனை உள்ளது என்று சொல்லுகிறேன்.
கடந்த 15,16ஆம் தேதி வெளியான தினத்தந்தி, மாலைமலர் ஆகிய பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் நாடுமுழுவதும் 62ஆம் சுதந்திரதினம் என்று தவறான செய்தி வெளியாகியுள்ளது.ஆனால் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 63ஆம் சுதந்திர தினம் என்று சரியாக இருந்தது.
என்னுடைய கேள்வி ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலையில் தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி இதழின் உறவு நிறுவணமான மாலைமலர் பத்திரிக்கையும் இதே தவறை திரும்ப செய்திருந்தது.இதுமட்டும் அல்ல அடுத்த நாள் 16ஆம் தேதியும் அதே தவறை மீண்டும் செய்து தங்களுடைய கவனக்குறைவை பறைசாற்றியது இந்த பத்திரிக்கை நிறுவனங்கள்.
இனிமேலாவது இது போன்ற தவறுகளை இந்த நிறுவனங்கள் தவிர்பார்களா??
தினத்தந்தி செய்தியை படிக்க
http://www.dailythanthi.com/article.asp?NewsID=507702&disdate=8/16/2009&advt=2
தினத்தந்தியின் செய்தி படவடிவில் அடிக்கொடிட்டு காட்டப்பட்டுள்ளது.பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்
மாலைமலர் செய்தி ,பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்
![]() |
From தமிழ் முஸ்லீம் |
அதே நாளில் வெளியான தினமலர் செய்தி அடிக்கொடிட்டு காட்டப்பட்டுள்ளது,பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்
