சமீபத்திய பதிவுகள்

கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 64 ஜிபி

>> Wednesday, November 18, 2009


 


டேட்டா படிக்கும் வேகம், அழகான வடிவமைப்பு, எந்த அசைவும் தாக்க முடியாத வன்மையான வெளி அமைப்பு, பயனுள்ள சாப்ட்வேர் எனப் பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200 யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ். 


டிஜிட்டல் சாதனங்களுக்கான சந்தையில், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் நமக்கான டேட்டாவினை, மிக எளிதாக நம்முடைய கரங்களிலே எடுத்துச் செல்ல முடிகிறது. அண்மையில் வெளியான கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 200, 64 ஜிபி கொள்ளளவு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் பாதி ரப்பரிலானல் ஆனது. இதனை பேக்கிங்கில் இருக்கும் போதே பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 70.39 மிமீ, 22.78 மிமீ அகலம் மற்றும் தடிமன் 12.52மிமீ. கருப்பு ரப்பரில் இதன் ஸ்லைடிங் பகுதி வழுக்கிக் கொண்டு செல்கிறது. இதன் அகலம் மற்றும் தடிமன் குறைவாக இருப்பதனால், இதன் அருகே உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இன்னொரு டிரைவினை அல்லது வேறு ஒரு சாதனத்தை இணைப்பது எளிதாகிறது. 64 ஜிபி ஸ்டிக் மஞ்சள் வண்ணத்திலும், 32 ஜிபி நீல நிறத்திலும், 128 ஜிபி கிரே கலரிலும் கிடைக்கின்றன. டிரைவ் செயல்படுகையில் இதன் எல்.இ.டி. விளக்கு எரிந்து நமக்கு தகவல் காட்டுகிறது. இந்த டிரைவ் FAT32 பைல் வகைகளுக்கென பார்மட் செய்யப்பட்டுள்ளது. இதனை NTFS  வகையிலும் பார்மட் செய்து கொள்ளலாம். NTFS வகையில் பார்மட் செய்தால், 4 ஜிபி வரையிலான பைலை இதில் எடுத்துச் செல்ல முடியும். வழக்கமாக கிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ்களுடன், சாப்ட்வேர் சிடி ஒன்று தரப்படும். இதில் அவை பதியப்பட்டே கிடைக்கின்றன. இந்த டிரைவின் இன்னொரு சிறப்பம்சம் இதில் தரப்படும்Privacy Zone மற்றும் Public Zone என்பதாகும். முதலில் தரப்படுவது ஒரு என்கிரிப்ட் ஸோன் ஆகும்.இதில் பாதுகாப்பாக டேட்டாவினை ஸ்டோர் செய்து வைக்கலாம். 
முதல் முதலில் டிரைவினைப் பயன்படுத்தத் தொடங்குகையில் Privacy Zone உருவாக்கலாமா என்ற கேள்வி கேட்கப்படும். இதற்கு இசைவு தெரிவித்தால், உடனே அடுத்த Public Zone உருவாக்க விருப்பம் கேட்கும். உடனே என்பதில் அழுத்த இந்த இரு பகுதிகளும் உருவாக்கப்படும். முதலில் உள்ள பகுதியில் உள்ள டேட்டாக்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு, நீங்கள் மட்டுமே அறிந்த பாஸ்வேர்ட் மூலமே கிடைக்கும். இரண்டாவது பகுதியில் உள்ள டேட்டாவினை யாவரும் பார்க்க முடியும். சற்று விசேஷமான டிரைவாக இது தோன்றினாலும், இந்த டிரைவ் டேட்டாவினை எழுதும் வேகம் சற்றுக் குறைவாகவே உள்ளது. ஆனால் படித்துத் தரும் வேகம் மிக அற்புதமாய், வேகமாக உள்ளது. 64 ஜிபி என்றாலும் இதன் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் விலை ரூ. 9,999. விலை இன்னும் குறைக்கப் படும் என எதிர்பார்க்கலாம்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்


 
  

வார்சா: மாரடைப்பால் தரையில் சுருண்டு விழுந்த எஜமானரை காப்பாற்றியது செல்ல நாய். போலந்து நாட்டில் வார்ஸா நகரில் வசித்து வருபவர் ஸ்ட்ரைகன் பையோடர் வேக்னர்(50), இவர் வளர்க்கும் செல்ல நாய் ஜேக் ரஸ்ஸல். இரண்டு வயது ஆகிறது. சமீபத்தில், வீட்டில் "டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. செல்ல நாய் மட்டும் இவருடன் இருந்தது. ரசித்து பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.வலி தாங்கமுடியாமல் மார்பை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டார். எஜமான் மார்பை பிடித்து கொண்டு சாய்கிறாரே; ஏதோ வலியால் துடிக்கிறார் என்று உணர்ந்த நாய், தனது பின்னங்காலுக்கு மேல் உள்ள "இதய' வடிவிலான சதை பகுதியை வைத்து அவர் மார்பில் இறுக தேய்த்துள்ளது. அதனால் வேக்னர் படிப்படியாக வலி குறைந்து பழைய நிலைக்கு வந்துள்ளார்.


பின்னர், மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் கூறுகையில்,"வேக்னருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நாய் சமயோசிதமாக செயல்பட்டு அவரது வலியை குறைத்துள்ளது. அதனால் தான் அவரால் இங்கு வந்து சிகிச்சை பெற முடிந்தது. நாய் செய்த செயலால் அவர் உயிர் பிழைத்துள்ளார்' என்றனர். வேக்னர் தனது செல்லப்பிராணி பற்றி கூறுகையில், "எனது நாயின் செயல் கண்டு பிரமித்து போய் உள்ளேன்' என்றார்.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகள் எடுத்த தீர்மானமே அவர்கள் அழிவுக்கு காரணம் என்கிறார் கலைஞர்


 

2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என புலிகள் சொன்னதால் மகிந்த ஆட்சிபீடம் ஏறியதாகவும், அதனால் போர் மூண்டு புலிகள் அழிந்ததாகவும் கலைஞர் வசைபாடியுள்ளார். சகோதர யுத்தம் பற்றி அடிக்கடி பேசிவரும் கலைஞர் அவர்கள் தற்போது புலிகளின் பின்னடைவுக்கு புதுவகையான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். அதாவது மகிந்த ரணிலை விட ஒரு லட்சத்தி 80 ஆயிரம் வாக்குகளால் வென்றதாகவும், இலங்கையில் உள்ள 6 லட்சம் தமிழர்களும் ரணிலுக்கு வாக்களித்தால் அப்போது சமாதானத்தை வென்றெடுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் வி.புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார். இல்லை பாசாங்கு செய்கிறார். 

வி.புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். வி.புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார். வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்கி மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார். ரணில் விக்கிரமசிங்க வந்திருந்தால் கருணாவைப் பிரித்தது போல மேலும் புலிகளை பலவீனப்படுத்தி, அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் இருந்த உறவைப் பயன்படுத்தி மேலதிகமாக போராட்டத்தை நசுக்கி இருக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம். 

அதாவது சுருக்கமாகச் சொல்லப்போனால், ரணில் ஒரு கொளுக்கட்டை என்றால் மகிந்த ஒரு மோதகம், உருவங்கள் தான் வித்தியாசம் உள்ளுக்கு உள்ளதென்னவே ஒன்றுதான்.

அதுகூடாவா இவருக்குப் புரியவில்லை. போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்நிலையில் போராட்டத்தை ஊக்குவிக்கவேண்டாம், சரி போராட்டத்திற்கு ஆதரவும் தரவேண்டாம், போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.


source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம் (வீடியோ இணைப்பு)

 
 
lankasri.com
நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.

உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது. 

இதனை தரவிறக்க 

அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்

1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.

2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.

3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.

4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.

5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.

இதிலும் தமிழ் இணையபக்கங்கள் நன்றாக தெரிகின்றன. அந்த வசதியை எப்படி கொண்டு வருவது என அறிந்து கொள்ள இந்த இடுகையை பார்க்கவும். மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள். 

இதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்

--
www.thamilislam.co.cc

Opera Mini 5 beta tour from IntoMobile on Vimeo.

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

யானை கழிவிலிருந்து காகிதம் : விரைவில் உற்பத்தி துவங்க தீவிரம்

 
 

General India news in detail 

கோன்னி : யானை கழிவுடன், மேலும் சில கழிவுகளைச் சேர்த்து காகிதம் தயாரிக்கும் ஆலை, விரைவில் உற்பத்தியை துவக்கவுள்ளது. யானை கழிவு மற்றும் சில கழிவுகளைச் சேர்த்து, அரைத்து கூழாக்கி, அதில் இருந்து காகிதம் தயாரிக்க கேரள அரசு திட்டமிட்டது. இதற்கான ஆலை, இடுக்கி மாவட்டம் கோன்னி பகுதியில் அமைக்கப்பட்டது.


இதற்காக, யானைகள் பராமரிக்கப்படும் இடங்களில் (யானை தாவளம்) இருந்து, யானை கழிவுகள் சேகரிக்கப்பட்டு கொண்டு வரப்படும். இங்கு, யானை கழிவுகள் மட்டுமின்றி, பிளாஸ் டிக், காகித கழிவுகள், சிகரெட் பெட்டிகள் போன்றவற்றையும் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படும். இந்த காகிதம் மூலம், அலுவலக கோப்புகள், பைகள் (கேரி பேக்), விசிட்டிங் கார்டு போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். இத்திட்டத்தை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.

இத்திட்டத்திற்கான இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துடன், சாண எரிவாயு (பயோ கேஸ்) திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இக்காகித தயாரிப்பு நிலையம், இம்மாத இறுதியில் செயல்படத் துவங்கும் என, மாவட்ட வனத்துறை அதிகாரி புகழேந்தி தெரிவித்தார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP