சமீபத்திய பதிவுகள்

ஒரிசாவில் வன்முறை கிறிஸ்தவ ஆலயம் மீது மீண்டும் தாக்குதல்

>> Thursday, September 25, 2008

வனேசுவரம், செப்25-

ஒரிசாவில் இந்து சாமியார் நக்சலைட்டுகளால் கொல் லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது.கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன.கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர். கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் 15-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதுவரை 145 கிறஸ்தவ ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு கூடங்கள் தாக்கப்பட்டு உள்ளன.

கலவரத்தை அடக்க மத்திய போலீஸ் படை குவிக்கபட்டு உள்ளது. இருந்தாலும் அங்கு நிலைமை சீராகவில்லை.ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.

நேற்று ராய்கியா என்ற இடத்தில் போலீஸ் நிலையம் மீது வன்முறை கும்பல் தாக்கியது. அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.போலீஸ் தரப்பில் 25 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆலயத் துக்குள் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. நிலைமை மோச மாகாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 
 

StumbleUpon.com Read more...

அமெரிக்க பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து-புஷ்

அமெரிக்க பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து-புஷ்
    

Bush
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் சிக்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு வர்த்தக மையங்கள் தொடர்ந்து பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் சரிவைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது.

தொடர்ந்து மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான ஏஐஜியும் வீழச்சிக்குள்ளானது. இந்த வீழ்ச்சியிலிருந்து இந்நிறுவனத்தைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 85 பில்லின் டாலர்களைக் கடனாகத் தர முன்வந்துள்ளது.

மேலும் மார்கன் அண்ட் ஸ்டேன்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றைக் காப்பாற்றவும் பெரும் தொகையைக் கடனாகத் தர அமெரிக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

மேலும் வால் ஸ்ட்ரீட் எனப்படும் அமெரிக்க சந்தையின் முக்கிய நிறுவனங்களைக் காப்பாற்ற 700 பில்லியன் டாலர் அளவுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் தங்களது வரிப் பணத்தைக் கொண்டு இந்த தனியார் நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு முயல்வதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

ஊதாரித்தனமான இந்த தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் வரிப் பணத்தைச் செலவிடுவதா என எதிர் பிரச்சாரத்தில் பல அமைப்புகள் இறங்கியுள்ளன.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் இந்த சரிவு, உலக பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று திடீரென்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அமெரிகாவின் அதிபர் பொறுப்பிலிருப்பவர்கள் பொதுவாக மிக அரிதாகத்தான் இப்படி உரை நிகழ்த்துவார்கள் என்பதால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த உரையில் ஜார்ஜ் புஷ் கூறியதாவது:

அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பெரும் ஆபத்தில் சிக்கித் தவிக்கிறது. கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் இன்று நிற்கிறோம்.

இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர்களை வழங்க இருக்கிறது. மீண்டும் பணப் புழக்கத்தை சாதாரண நிலைக்கு வரவும், கடன் வழங்கல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்  சகஜ நிலைக்குத் திரும்பவும் இந்த உதவி வழங்கப்படுகிறது.

பிரச்சினைக்குள்ளாகியுள்ள அனைத்து நிதி நிறுவனங்களின் பிணைய சொத்துக்களும் மீட்கப்படும், நிலைமை சகஜமானபிறகு மீண்டும் அந்த நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படும்.

இதை சில தனியார் நிதி நிறுவனங்களுக்கான உதவி என்ற கோணத்தில் மக்கள் பார்க்கக் கூடாது.

நமது நாட்டை பெரும் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து வர செய்யப்படும் அவசர நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் புஷ்.

மேலும் அமெரிக்க எதிர்கட்சிகள் மற்றும் அனைத்துப் பிரிவு மக்களும் இந்த பொருளாதார மீட்பு நடவடிக்கையை எதிர்ப்பின்றி ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
 

StumbleUpon.com Read more...

மதுரையிலும் சர்ச் மீது கல் வீச்சு - மாதா சிலை கூண்டு சேதம்

மதுரையிலும் சர்ச் மீது கல் வீச்சு - மாதா சிலை கூண்டு சேதம்

    

Church
மதுரை: மதுரையில் சர்ச் மீது கல் வீசி தாக்கப்பட்டதில் அதன் அங்கிருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு போன்றவை நொறுங்கி உடைந்தது.

கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவிலும் தாக்குதல் பரவியது. தமிழகத்திலும் பரமத்தி வேலூர் பகுதியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன.

இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு சர்ச்சிலும் விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ளது புனித வளனார் சர்ச்.

இந்த சர்ச் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சர்ச்சில் இருந்த போர்டு, மாதா சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு ஆகியவை நொறுங்கி உடைந்தது.

தகவல் அறிந்த கிறிஸ்வது மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பங்குத் தந்தை ஜெரோம் எரோலி, கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP