சமீபத்திய பதிவுகள்

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது?

>> Wednesday, October 21, 2009

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் 'ஈழநாடு'  

eelam flag peoplesவட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ விடப்பட்டனர். பலவிதமான குழப்பங்கள் நிறைந்த செய்திகளும் வெளியிடப்பட்டன.

ஆரம்பத்தில் சிங்கள தேசம் எதிர்பார்த்தபடி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும், சலசலப்புக்களும் உருவாகினாலும், அது வெகு விரைவாகவே தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டது. சிங்கள தேசத்தின் கொடூரங்கள் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றிருந்தால், இந்தக் குழப்பங்கள் நீடித்துச் சென்றிருக்கலாம். ஆனால், தொடர்ந்தே செல்லும் சிங்கள இனவாதக் கொடூரங்கள் வன்னி மக்களை வதை முகாமில் இட்டதன் மூலம்; ஒன்றிணைந்து போராடவேண்டிய அவசியத்தை புலம்பெயர் தமிழர்களுக்கு மேலும் மேலும் அவசியமாக்கியது.

தமிழீழ விடுதலையை வேகமாக முன்நகர்த்தும் பணிக்காக புலம்பெயர் தமிழர்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு', 'உலகத் தமிழர் பேரவை' என்ற இரு அமைப்புக்களையும் இரு படை அணிகளாக முன்நிறுத்திச் செயற்பட, தமிழ் இளையோர் அமைப்புக்களும் போர்க் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆக மொத்தத்தில், 'ஐந்தாவது கட்ட ஈழப் போர்' புலம்பெயர் தேசங்களில் மையங்கொண்டுள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திய நான்கு கட்ட ஈழப் போர்களை விடவும் வீரியமாக இந்த ஆயுதம் ஏந்தாத போர் வீறு கொண்டு எழ ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புலம்பெயர் தேசங்கள் எங்கும் நடைபெற்ற சிங்கள அரசின் இன வன்முறைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டது இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

தற்போது, நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையே குழப்பத்தையும், போட்டியையும் உருவாக்கும் கைங்கரியங்களில் சிங்களக் கைக்கூலிகள் முனைந்து செயல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு அமைப்புக்களையும் இரு கண்களாக வளர்க்க முன் வந்துள்ள நிலையில், பதவி ஆசை பிடித்த சிலர் இரு அமைப்புக்களுக்கும் இடையே போட்டிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர், தமிழீழத் தேசியத் தலைமையே புலம்பெயர் தேசத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். அதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்மேல் புலம்பெயர் தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், விடுதலைப் புலிகளின் வீரமும், தியாகமும் புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகள் பக்கம் அணி திரள வைத்திருந்தது. ஆனாலும், தீர்க்க தரிசனப் பார்வை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாகவே அடுத்த கட்ட விடுதலைப் போரை புலம்பெயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிக்க இந்திய – சிறீலங்கா கூட்டுப் போர் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இந்த கூட்டு எதிர் சக்திகளிடம் சரணடைவது அல்லது விடுதலைப் போரைத் தொடர்ந்து நடாத்தி, அந்த அர்ப்பணிப்பு மூலம் அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிப்பது என்ற தெரிவில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமது இலட்சியத்தைக் கைவிட மறுத்து இறுதிவரை களமாடினார். அதற்கு முன்னதாகவே, கடந்த வருட மாவீரர் தின உரையில் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்திருந்த அவரது தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தேசங்களில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த இரு போராட்ட அமைப்புக்களும் கத்திமீதான பயணத்திற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதையில் கொஞ்சம் சறுக்கினாலும் கால்கள் அறுபடும் அபாயம் உள்ளதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். இவர்களது தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்தும் பொறுப்பில் புலம் பெயர் தமிழர்களே உள்ளார்கள். இதில் எங்கு பிழை நேர்ந்தாலும், அதற்குக் காரணமானவர் மக்களால் தூக்கி எறியப்படும் சாத்தியம் பலமானதாகவே உள்ளது.

ஏற்கனவே, உலகத் தமிழர் பேரவையினரின் நாடு தழுவிய அமைப்புக்கள் ஜனநாயக உரிமை கொண்ட அமைப்பாளர் தெரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இரு வருட கால ஆயுள் கொண்ட இதன் நிறைவேற்று அமைப்பை அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களே ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வார்கள் என்பதை யாப்பு ரீதியாகப் பதிவு செய்துள்ளார்கள். மாறும் தலைமை முறை கொண்ட இந்த அமைப்பு முறை தவறுகளுக்கு இடம் கொடுக்காது திறமைகளுக்கே இடம் கொடுக்கின்றது. பெரும்பாலும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பும் இவ்வாறான யாப்பு மூலமான உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த இரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் போரை மக்கள் பலத்துடன் முன் நகர்த்திச் செல்ல முடியும்.

நாங்கள் போகும் பாதை எதுவாக இருப்பினும் இலக்கு என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். இலக்குத் தவறிய பயணம் ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் மீண்டும் புதைகுழிக்கே அழைத்துச் செல்வதாக முடியும். தமிழீழ தேசியத் தலைவரது தமிழீழம் என்ற இலக்கில் சமரசம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வட்டுக்கோட்டை வரை முள்ளிவாய்க்கால் வரை அத்தனை இழப்புக்களையும் தமிழினம் தாங்கிக்கொண்டது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே. அதில் சமரசம் செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட முடியாது என்பது இறுதியான, உறுதியான முடிவாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேச தமிழீழ மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஈழப் போரை வேகமாக முன்னெடுத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே இந்த அமைப்புக்களின் தலைமைகள் முனைந்து செயற்படுத்த வேண்டும். அல்லது அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி இலட்சியத்தை முன்னெடுக்கும் தகுதி உள்ளவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

பாரிஸ் 'ஈழநாடு'
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கனிந்துவரும் சர்வதேச ஆதரவு -‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’

கனிந்துவரும் சர்வதேச ஆதரவு -'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' செயற்குழுவின் கைகளை பலப்படுத்த ஒன்றிணைவோம்

 ஈழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் திருப்பமான காலத்தில் இன்று புலம்பெயர் தமிழர்களுடன் ஈழத்தமிழர்கள் கைகோர்த்துள்ளனர்.

இற்றைவரை ஆயுதப்போராட்டம் எமது மக்களின் குரலை சர்வதேசம் எங்கும் ஒலிக்கச்செய்தாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவென்பது வெகு மந்தமாகவே இருந்துவந்தது என்பது உண்மையே.

M_Id_79857_Tamil_protestஈழத்தமிழர்களின் கைகளில் இருந்த 'தமிழீழ விடுதலைப்போராட்டம்' இன்று புலம்பெயர் மக்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் அதனைக்கண்டு இலங்கை அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளதானது இந்த போராட்டத்தின் வெற்றியின் முதல் படியாகும்.

கடந்த காலங்களில்போல் அல்லாமல்; ஈழத்தமிழர்கள் தொடர்பில் உறுதியான தீர்வுத்திட்டதுடன் சட்டத்தரணியும் தமிழ் உணர்வாளருமான உருத்திரகுமார் தலைமையில் வெளிக்கிளம்பியுள்ள 59 உறுப்பினர்களைக்கொண்ட 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' செயற்குழுவினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கையே இன்று இலங்கை அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

இதுவரை இலங்கையில் நிலவுவது 'பயங்கரவாத பிரச்சினையென' கூறிவந்த நாடுகள் கூட இன்று தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆதரவு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு முக்கிய காரணமாக இலங்கையில் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் தடுத்துவைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்படுவதும், கடந்த காலத்தில் சிங்கள படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் சாட்சியங்கள் மூலம் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டதுமாகும்.

இந்த நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தபோதெல்லாம் இராணுவ வெற்றியினை மட்டும் மனதில் கொண்டு இறுமாப்புடன் 'செவிடன் காதில் ஊதிய சங்காக'இருந்துவந்தது.

இந்த நிலையில் இலங்கை அரசு தொடர்பில் கையாலாகா தனத்தில் இருந்துவந்த சர்வதேச நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்துவந்துள்ளதுடன் இலங்கையின் நட்பு நாடான இந்தியா மூலமாகவும் கோரிக்கை விடுத்து வந்தது.

எனினும் இலங்கை தமிழர்கள் தொடர்பில் எந்தவித பிரதிபலிப்புகளும் ஏற்படாத நிலையில் 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்'செயற்குழுவின் செய்றபாடுகள் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தை அவர்கள் பால் ஈர்க்கவைத்துள்ளது.

கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளிடம் 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்'செயற் குழுவின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசு விடுத்தவேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளமையானது 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' செயற் குழுவின் செயற்பாடுகளை இந்த நாடுகள் வெளிப்படையாக ஏற்றுள்ளன என்பது புலனாகிறது.

இது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் 'தமிழீழ விடுதலைப்போராட்டம்'உறுதியான நிலையில் சென்றுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியடையசெய்துள்ளது.

அதுமட்டுமன்றி இந்த 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்'அமைப்பது தொடர்பில் ஈடுபட்டுவரும் அறிஞர்களை கைதுசெய்வது தொடர்பில் அந்தந்த நாட்டு இலங்கை தூதரகங்கள் மூலமாக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன் 'அவ்வாறு செய்யமுடியாது'சர்வதே நாடுகள் கூறியுள்ளமையானது புலம்பெயர் மக்கள் இதில் ஈடுபட இருந்த தடைகள் அறுத்தெறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புலம்பெயர் மக்களின் கைகளில் பலமான கையிறு வழங்கப்பட்டுள்ளது.அதற்கு பக்கத்துணையாக  'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்'அமைப்பது தொடர்பில் ஈடுபட்டுவரும் செயற்குழவினர் உள்ளனர்.

அவர்களின் தீர்வுத்திட்டங்கள் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லையென்பது இன்று நிதர்சனமாகிவருகின்றது.

இதற்கு புலம்பெயர் மக்கள் தம்மத்தியில் உள்ள கசப்புணர்வுகளையும் மாற்றுக்கருத்துகளையும் தூக்கியெறிந்துவிட்டு அவர்களின் கைகளை பலப்படுத்த முன்வரவேண்டும்.

உங்களின் இந்த செயற்பாடே எதிர்காலத்தில் முள்வேலிக்குள் அகப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்துவரும் உங்கள் உறவுகளை விடுவிக்க வழிகோலாக அமையும் என்பது திண்ணம்.

- வா.கி.குமார்


source:nerudal


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்;

விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்; மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் அதிரடி அறிவிப்பு

 இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது. இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது.

ltte_rpg_team_inஇந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
 
இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் ஒரு இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.
 
அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
 
அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
 
தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.
 
சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற் கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.
 
எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் – கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் – கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
 
நாங்கள் தற்போது மேற்கு வங்காளம், ஒரிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பலத்துடன் உள்ளோம். தென்மாநிலங்களில் எங்கள் அமைப்பை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை 

தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை எனக்குள் இன்றளவும் விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. ] திருமாவளவன் நேர்காணல் ] நன்றி ] ஜூனியர் விகடன்.

 

இலங்கைத் தமிழர்களின் நிலைமையை அறியும் விதமாக ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குப் போன தமிழக எம்.பி ] க்கள் குழு கடந்த 14 ]ம் தேதி ரிட்டர்ன் ஆனது. முதல்வரே சென்று இந்தக் குழுவை விமான நிலையத்தில் எதிர்கொண்டார்.  எம்.பி ]க்கள் குழு இலங்கையின் நிஜமான நிலையைக் கண்டிப்பாக வெளிப்படுத்தாது. பொருத்தமற்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளிக்கும் விதமாகத்தான் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்!என ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்க... இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தோம். பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமாவளவன்.
 
தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்க்கப்பட்ட வேதனை எனக்குள் இன்றளவும் விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாரத்து டன், மிச்சமிருக்கும் உறவுகளையாவது பார்த்துவிடுகிற துடிப்பிலேயே விமானத்தில் அமர்ந்தேன். சக எம்.பி ]க்கள்  முகங்களிலும் இறுக்கம்... சோகம். இலங்கையில் போய் கால் வைத்தபோதே, ஒரு விதமான நடுக்கம் என்னை ஆட்கொண்டது. முதலில் மரியாதை நிமித்தமான பணிகளை முடித்துவிட்டு, நம் சொந்தங்களைப் பார்க்கக் கிளம்பினோம். எங்களை வரவேற்கும் விதமாக சிங்களப் பெண்களும் ஆண்களும் நடமாடினார்கள். அவர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போல் ருத்ரதாண்டவமாக இருந்த அந்த நடனத்தைக் கண்டு எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. மாகாணங்கள், முகாம்கள் என சுற்றி வந்த ஐந்து நாள் பயணத்தில் மொத்தமாக நான் உடைந்துபோனதே நிஜம். தமிழகத்தில் எழுந்த பேரெழுச்சிகளை எல்லாம் தாண்டியும், இப்படியான கதிக்கு தமிழினம் ஆளாகிவிட்டதே என்கிற வேதனை சாகும் காலம் வரை என்னை சங்கடப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்...என்று குரல் உடைந்து கூறிய திருமாவிடம்...
 
முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கிறது?
மிகுந்த கவலைக்கிடமாகவே இருக்கிறது. 2,500 ஏக்கர் காட்டைச் சீரமைத்து நிலமாக்கி, அதில்தான் எட்டு முகாம்களை அமைத் திருக்கிறது சிங்கள அரசு. அதில் ஆறு முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொட்டடியில் பரிதாபமாக முடங்கிக் கிடந்தனர். முகாம்களுக்கு கதிர்காமர், அனந்த குமாரசாமி, அருணாசலம் என தமிழர்களின் பெயரையே வைத்திருப்பதை சிங்கள அதிகாரிகள் எங்களிடம் பெருமிதமாகச் சுட்டிக் காட்டினார்கள்.  நாங்கள் எந்தளவுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதற்காகவே சொன்னது அது!
 
ஆனால், தலைவாழை இலைச் சோற்றில் அரளியை அரைத்து ரசம் ஊற்றிய கணக்காக, தமிழர்களின் பெயர் களை முகாம்களுக்கு பெருமையாகச் சூட்டிவிட்டு, உள்ளே உருத்தெரியாத அளவுக்கு தமிழ் மக்களைச் சிதைக்கிற வேலையையே சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முகாம்களில் தங்கி இருக்கும் நம் உறவுகளிடம் பேசியபோது, அனைவருமே கண்ணீருடன்,  பச்சத் தண்ணிகூட கிடைக்கலே... எங்க தொண்டையை நனைக்கவாவது வழி பண்ணிட்டு போங்க என்று கதறுகின்றனர். ஓர் ஆளுக்கு ஐந்து லிட்டர் வீதம் தண்ணீர் கொடுப்பதாக சிங்கள அரசு எங்களிடம் சுட்டிக் காட்டியது. ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த பாவப்பட்ட மக்களுக்கு தண்ணீரையே கண்ணில் காட்டவில்லையாம். சில சிறுவர்களிடம் பேசியபோது,  குளோரின் கலந்த தண்ணீரைக் குடிக்கப் பிடிக்கலை  என்றார்கள். படுக்கைக்கும் கழிப்பிடத்துக்கும் வழியில்லாத நிலையைச் சொல்லியழுத தாய்மார்கள்,  இப்படியெல்லாம் நாங்க அவமான வாழ்க்கை முன்பு வாழ்ந்ததே கிடையாது என வீறிட்டனர். மந்தைகளாக மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் கொடுமையை உலகத்தின் பெருந் துயரக்காரனாகப் பார்த்துவிட்டு வந்தேன்!
 
முகாமில் உள்ள இளைஞர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இளம் பெண்கள் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாவதாகவும் சொல்லப் படுகிறதே... அது குறித்து விசாரித்தீர்களா?
 
முகாமில் உள்ளவர்கள் எங்களிடம் மனசுவிட்டுப் பேச அச்சப்பட்டு ஒதுங்கியே நின்றார்கள். முகாம்களில் நிலவும் நிஜமான நிலைகுறித்து விசாரிப்பதற்காக தனிப்பட்ட சிலரிடம் நான் பேச முற்பட்டபோது, இந்திய தூதரக அதிகாரிகளே அதனைத் தடுக்க மெனக் கெட்டார்கள். அதையும் தாண்டி சிலரிடம் பேசியபோது, முகாம்களில் இருந்தவர்களில் சந்தேகத்தின் பேரில் 11,000 பேர்களை பிரித்து ரகசிய முகாம்களுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். வவுனியாவில் உள்ள வாணி மகா வித்யாலயா, முஸ்லிம் மகா வித்யாலயா ஆகிய பாடசாலைகளிலும், கண்டி, கொழும்பு, ஓமந்தை மன்னார், திரிகோணமலை பகுதிகளில் உள்ள ரகசிய முகாம்களிலும் வைத்து அவர்களை விசாரணை என்கிற பெயரில் ராணுவம் படாத பாடுபடுத்திக் கொண்டிருக்கிறதாம். 11,000 பேரில் எத்தனை பேர் மிச்சமிருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது எனச் சொன்னார்கள்.
 
எங்களோடு சகஜமாக பேச முடியாத அந்தச் சூழலிலும், தயவுசெய்து எங்களை சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள். கையேந்திப் பிழைக்கும் வாழ்க்கை எங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது என பலரும் ஓலமிட்டு அழுதார்கள். ஒரு பெரியவர் என்னிடம் ஓடிவந்து, ஒரே ஒரு வேட்டியை ஒரு மாசத்துக்கும் மேலா உடுத்திக்கிட்டு இருக்கேன் என்றவர் கைவிரித்துக் கதறினார். பல தாய்மார்கள், எங்களோட பொடியன்களைக் காணோம். அவங்க எங்கே இருக்காங்களோ, எப்படி இருக்காங்களோ...என்று மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்கள்.
 
முகாம்களுக்கு இடையே முள்வேலிக் கம்பி போடப் பட்டு இருப்பதால், தங்களின் சக ரத்த உறவுகளைக்கூட சந்திக்க முடியாமல், கம்பி வேலிக்கு அப்பாலிருந்து தவிக் கிற அவர்களின் கொடுமையைக் காட்டிலும் வேறேதும் பெரிய சித்ரவதை இருக்கிறதா? குடிக்கவும் குளிக்கவும் வழியில்லாமல் தவிக்கும் நம் சொந்தங்கள், இன்னும் ஒரு மாதம் அந்த முகாமுக்குள்ளேயே நீடிக்கிற நிலை வந்தால், இன்னொரு சோமாலியா சோகம் அங்கே உருவாகிவிடும்! இப்போதே முகாம்களுக்குள் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. அதனால் மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் போன்றவை வருத்திக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமே வரப் போகும் மழைக்காலமும் தொற்று வியாதிகளைப் பெரிதாகப் பரப்பிவிடக் கூடிய அபாயமிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் முகாமுக்குள்ளேயே பிள்ளையார் கோயில் ஒன்றைக் கட்டி, நீயாச்சும் எங்களைக் காப்பாத்து சாமி! என நம் உறவுகள் கதறுவதையும் பார்த்தேன்.
 
எம்.பி ]க்கள் குழுவுக்கு பல இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்லப்படுகிறதே?
 
அதனை எதிர்ப்பு என்பதைவிட, அடக்க முடியாத ஆதங்கம் என்று சொல்லலாம். யாழ் பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் சென்றிருந்தபோது, தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றார்கள். நான் அங்கே பேச முடியாத சூழல் உண்டானது. பல இளைஞர்கள் என்னிடம் ஓடிவந்து,  நீங்கள் கட்டாயம் ஏதாவது பேசுவீர்கள் என எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்கள். சிலர், நாங்க என்ன பாவம் பண்ணினோம்? இந்தியாவும் கைகோத்து எங்களை அழிச்சிடுச்சே... கலைஞரய்யா எங்களை காப்பாத்துவார்னு நினைச்சோமே...என அபயக் குரல் எழுப்பினார்கள். எங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருக்கி றோம். நீங்கள்தான் கலைஞரய்யாவிடம் நிஜமான நிலைமையைச் சொல்லி அவரை உதவச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
 
சில இளைஞர்கள், இங்கே நீங்கள் போட்டியிட்டால் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண எம்.பி ]யாக ஜெயிப்பீர்கள். நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது என்றார்கள். என்னை நானே நொந்துகொண்ட நேரமது. எப்படியும் தொப்புள்கொடி உறவு நம்மைக் காப்பாற்றும் என நம்பிக்கை பூண்டிருந்தவர்களுக்கு நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தத்தில் கண் கலங்கி விட்டேன். அந்த வருத்தத்திலேயே சக எம்.பி ]க்களுடன்கூட என்னால் இயல்பாகப் பேச முடியவில்லை.
 
சிங்கள அரசுடன் நெருக்கம் பாராட்டும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோர்தான் உங்களை வழிநடத்திச் சென்றார்களாமே...?
 
சில மாகாணப் பகுதிகளுக்கு மட்டும் அவர்களோடு செல்ல வேண்டியிருந்தது. ஒரு மேடையில் என்னருகே அமர்ந்திருந்த கனிமொழி எழுந்ததும் அங்கே ஓடிவந்த டக்ளஸ் தேவானந்தா, என்னைப் பற்றி நீங்கள் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். என்னதான் போராடினாலும், இறுதியில் இப்படியான துயரம்தான் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததால்தான், நாங்கள் அரசோடு அனுசரித்து நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும், அரசுக்கு ஆதரவாக நாங்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை என்றார். நடந்தது நடந்துவிட்டது... மிச்சமிருக்கும் தமிழ்த் தலைவர்களாவது ஒற்றுமையாகக் கைகோத்து, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்யலாமே என அவரிடம் கேட்டேன். அவர் மீதான கோபங்களுக்கு எல்லாம் விடை கேட்கிற நிலையில் அப்போது அங்கே நான் இல்லை.
 
நான்காம் நாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தீர்களே... அப்போது எப்படி இருந்தது உங்களின் மனநிலை?
 
அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்கும் முன்னரே, முகாம்களின் நிலை குறித்துப் பேசுவதற்காக பாதுகாப்புத் துறை ஆலோசகரான கோத்தபய ராஜ பக்ஷேவைச் சந்தித்தோம். எனக்கு பாதுகாப்பு பணி மட்டும்தான் தெரியும். முகாம் நிலை குறித்து அறிய நீங்கள் அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக்ஷேயை பாருங்கள் எனச் சொன்னார். பசில் ராஜபக்ஷேயிடம் பேசியபோது, முகாம்களில் தற்போது 3,000 ]க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவெடுத் தோம். ஆனால், 268 கர்ப்பிணிகளைத்தான் அனுப்ப முடிந்தது என்றார். இதற்கெல்லாம் பிறகே அதிபருடனான சந்திப்புக்கு ஏற்பாடானது.
 
அனைத்து எம்.பி ]க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள் எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம் என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா? எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.
 
சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி ]க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.
 
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அடித்துச் சொல்பவர் நீங்கள். இலங்கைக்குப் போய் வந்த பிறகும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?
 
கொழும்பில் உள்ள சில முக்கியஸ்தர்களிடத்தில் தலைவர் பிரபாகரனின் நிலை பற்றி விசாரித்தேன். அவர்கள் ஏதும் பேசுகிற நிலையில் இல்லை. ஒரு விதமான பயமும் பாரமும் அவர்களைப் படபடப்போடு தவிக்க வைத்திருந்தது. அதனால் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரங்களை என்னால் சரியாக அறிய முடிய வில்லை. ஆனால், பசில் ராஜபக்ஷேயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பொட்டு அம்மானின் உடல் மட்டும் கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.
 
பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து ஏதாவது தெரிந்ததா?
 
அதிபரின் அரசியல் ஆலோசகரான பசில் ராஜபக் ஷேயிடம் பிரபாகரன் பெற்றோரின் நிலை குறித்து நான் விசாரித்தேன். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். உணவு, மருந்து என அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனச் சொன்னார் பசில். பிரபாகரனின் பெற்றோரையும், பிரபாகரனின் மாமியாரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என நான் வேண்டியபோது, அவர் களின் உறவு வழியிலானவர்கள் விருப்பப்பட்டால், தாராளமாக அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர் களை இந்தியாவுக்கு அனுப்ப மட்டுமே நாங்கள் அனுமதிப்போம் எனச் சொன்னார் பசில். எப்படியாவது அவர்களை விரைவிலேயே அங்கிருந்து மீட்க அனைத்து முயற்சிகளையும் நான் தொடர்ந்து எடுப்பேன்.
 
எம்.பி ]க்கள் குழுவின் அறிக்கை இலங்கைத் தமிழர்களின் நிஜமான நிலையை இருட்டடிப்பு செய் வதாக இருக்கும் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்களே?
அப்படி இருக்காது என நம்புவோம். ஜூ.வி.யிடத்தில் நான் சொல்லி இருக்கும் இலங்கைத் தமிழர்களின் அத்தனை விதமான துன்பங்களையும் எங்கள் கட்சி மக்கள் மத்தியில் எதற்கும் தயங்காமல் எடுத்துவைக்கும்

source:parantan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எக்ஸெல்: டிப்ஸ் -எக்ஸெல் விநோதம்

எக்ஸெல்: டிப்ஸ் 


எக்ஸெல் விநோதம் நீங்கள் எப்படியோ தெரியாது; ஆனால் நான் எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை வேகமாக என்டர் செய்திட முயற்சிப்பேன். வேகமாக டேட்டாவினை தொடர்ந்து என்டர் செய்வேன். ஒரு படுக்கை வரிசை அல்லது நெட்டுவரிசை முடிந்த பின்னர் அடுத்த வரிசைக்குச் செல்வேன். எடுத்துக் காட்டாக, என் வாடிக்கையாளர்களின் முகவரி மற்றும் சில டேட்டாவினை அமைக்க வேண்டும். A,B,C என மூன்று நெட்டு வரிசைகளில் டேட்டாவினை அமைக்கிறோம். அடுத்ததாக படுக்கை வரிசை 2லிருந்து 15 வரை டேட்டாவினை என்டர் செய்திட வேண்டும். 
படுக்கை வரிசையில் அனைத்தும் என்டர் செய்த பின், என்டர் செய்வதனை நிறுத்தி, மீண்டும் நெட்டு வரிசை அ செல்ல வேண்டும். டேட்டா என்டர் – நிறுத்தம் – அடுத்த ரோ – டேட்டா என்டர் – நிறுத்தம் .. எனச் செல்ல வேண்டும். இது சற்று ஏமாற்றமாகவும் எரிச்சலாகவும் உள்ளதா?
இதற்கு ஒரு தீர்வினை அண்மையில் கண்டறிந்தேன்.
முதலில் எந்த செல்களில் எல்லாம் டேட்டா என்டர் செய்திட வேண்டுமோ, அந்த செல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கவும். இப்போது A Columnமுதல் C Column வரை Row 1  முதல் 15 வரை நான் பயன்படுத்தப் போகிறேன். எனவே செலக்ஷனை A2 முதல் தொடங்குகிறேன். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நான் டேட்டா என்டர் செய்கிறேன். இங்கு ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்குச் செல்ல என்டர் அல்லது டேப் பயன்படுத்துகிறேன். இங்கு ஆரோ கீ பயன்படுத்தக் கூடாது. அது செல் செலக்ஷனை காலி செய்துவிடும். இப்போது டேட்டா என்டர் ஆகிக் கொண்டு இருக்கும். டேட்டா, டேப், டேட்டா, டேப் அல்லது என்டர், டேட்டா –– அடுத்து ஆஹா! இதோ கர்சர் அடுத்த நெட்டுவரிசை அல்லது படுக்கை வரிசையின் முதல் செல்லுக்குத் தானாகவே வந்துவிடுகிறது. இப்படியே போனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் இறுதி செல்லுக்குப் போன பின் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆம்! நீங்கள் நினைப்பது சரிதான். மீண்டும் தொடக்கத்தில் உள்ள முதல் செல்லுக்குக் கர்சர் செல்லும். அதாவது நாம் தேர்ந்தெடுத்த செல்கள் மட்டுமே ஒர்க் ஷீட்டின் மொத்த செல்கள் என எடுத்துக் கொள்ளப்பட்டு கர்சர் அதற்குள்ளாக மட்டும் மூவ் ஆகிறது.
நேரத்தை மணி, நிமிடக் கணக்கில் சொல்கையில் நாம் அனலாக் முறையில் தான் சொல்கிறோம். டிஜிட்டல் முறையில் சொல்வதில்லை. எடுத்துக் காட்டாக, பிற்பகல் 12 மணி 30 நிமிடம் என்பதை நாம் 12:30 என்கிறோம். இது அனலாக். இதனையே டிஜிட்டல் ஆகச் சொல்வது என்றால் 12.5 என்று சொல்ல வேண்டும். நாம் மணி என்ன என்று கேட்டால் மிகத் தெளிவாக பன்னிரண்டரை என்று சொல்வதில்லையா, அது போல. 
எக்ஸெல் தொகுப்பில் இது போல அனலாக் அளவில் இருக்கும் நேரக் கணக்கினை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு சில பார்முலாக்கள் உள்ளன. நீங்கள் சோதித்துப் பார்த்துப் பயன்படுத்தலாம்.முதல் பார்முலா : =(A4INT(A4))*24இதில் A4  என்பது அனலாக் அளவில் நேரத்தைக் கொண்டுள்ள செல். அந்த செல்லில் 12:35 என நேரத்தைக் கொடுத்து இந்த பார்முலாபடி மாற்றிப் பாருங்கள். விடை 12.58 எனக் கிடைக்கும். 
இன்னொரு பார்முலா: =(HOUR(A1)*60+MINUTE (A1))/60 

இதில் A1 என்பது அனலாக் அளவில் நேரத்தைக் கொண்டுள்ள செல்.எக்ஸெல் வரிசைகளை இடைச் செருக:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் அடிக்கடி வேலை பார்ப்பவர்கள் இந்த பிரச்சினையைச் சந்தித்திருக்கலாம். சரியாக நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை அமைத்து உங்கள் டேட்டாவினை அமைத்திருப்பீர்கள். அப்போது மேலும் ஒன்று அல்லது இரண்டு நெட்டு அல்லது படுக்கை வரிசையினைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். 
உடனே என்ன செய்கிறீர்கள்? இடைச் செருக வேண்டிய இடத்தில் உள்ள வரிசையில் ஏதேனும் ஒரு செல்லை தேர்ந்தெடுக்கிறீர்கள். பின் இன்ஸெர்ட் மெனு சென்று அங்கே ரோ அல்லது காலம் செலக்ட் செய்து கிளிக் செய்து அவற்றைப் பெறுகிறீர்கள். இந்த வேலை எல்லாம் இல்லாமலே நீங்கள் வேறுஒரு எளிய கீ போர்டு வழியில் செயல்படலாம். 
முதலாவதாக, எந்த வரிசைக்கு மேலாக அல்லது நெட்டுவாக்கில் இடைச் செருக வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வழக்கம்போல அந்த வரிசையினைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கும் நீங்கள் மவுஸ் துணையின்றி செயல்படலாம். அந்த வரிசையில் ஏதேனும் ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று வைத்து கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும். ஷிப்ட்+ ஸ்பேஸ் பார் அழுத்தினால் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். 
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினால் ஷிப்ட் கீயையும் ஆரோ கீயையும் சேர்த்து அழுத்தலாம். 
இனி இன்ஸெர்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம். மேலே கூறிய முறையில் செலக்ட் செய்த பின்னர், கண்ட்ரோல் ++ அழுத்தவும். அதாவது கண்ட்ரோல் கீ மற்றும் + கீயையும் சேர்த்து அழுத்தவும். இந்த + அடையாள கீ எழுத்துக்களின் மேலாக உள்ளதாகவோ, அல்லது கீ பேடில் உள்ளதாகவோ இருக்கலாம். இவ்வாறு அழுத்தும் போது உங்கள் கண் முன்னாலேயே திரையில் தோன்றும் ஒர்க் ஷீட்டில் வரிசைகள் இணைக்கப்படுவதனைக் காணலாம். 
சரி, இவற்றை நீக்க வேண்டுமானால் என்ன செய்திடலாம்.மீண்டும் முன்பு தேர்ந்தெடுத்தது போல எந்த வரிசை அருகே உள்ள வரிசைகளை நீக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் கண்ட்ரோல் கீயுடன் மைனஸ் (–) கீயை அழுத்தவும். வரிசைகள் மறையும். எதிர்பாராத வகையில் நீங்கள் நீக்க நினைக்கும் வரிசைக்குப் பதிலாக வேறு வரிசை நீக்கப்பட்டால், கண்ட்ரோல் + இஸட் அழுத்திச் செய்ததை மீட்டுப் பின் தவறு எங்கு உள்ளது என்று பார்த்து, கர்சரை அதன்படி வைத்து கட்டளை கொடுக்கவும்.டேட்டா வரிசைப்படுத்தல்:
டேட்டாக்களை அமைத்து, நாம் விரும்பும் வகையில், தீர்வுகளைப் பெறும் வகையில் அவற்றை இயக்கவே நாம் எக்ஸெல் தொகுப்பினைப் பயன் படுத்துகிறோம். டேட்டாவினை நாம் எதிர்பார்க்கும் வரிசையில் அமைப்பதுவும் அத்தகைய முயற்சி களில் ஒன்றாகும். பெரிய மதிப்பிலிருந்து சிறிய மதிப்பிற்குப் படிப்படியாக, வரிசைக் கிரமத்தில் அமைக்கவும், அதே போல எதிர் திசையில் சிறிய மதிப்பிலிருந்து பெரிய மதிப்பிற்கு அமைக்கவும் எக்ஸெல் தொகுப்பிலேயே வழி தரப்பட்டுள்ளது. அதே போல சொற்கள் அல்லது பெயர்களையும் நாம் வரிசைப்படுத்தலாம். அகர வரிசையில் அமைக் கலாம். இதனை எப்படிக் கையாள்வது என்று இங்கு பார்க்கலாம். 
முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த வேண்டும் எனச் சொல்ல வேண்டும். இதனை மேற்கொள்ள முதலில் டேட்டா இருக்கும் செல்லினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே ஒரு செல்லை மட்டும் வரிசைப்படுத்துவதாக இருந்தால் Sort Ascending  அல்லது Sort Descending பட்டனைத் தேர்ந்தெடுக் கவும். எந்த செல்லைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த செல் அந்த பீல்டின் காலத்தில் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இந்த இரு பட்டன்களும் Standard டூல்பாரில் உள்ளன.ஒரே வகை டேட்டா இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வகை டேட்டாவினை (எடுத்துக்காட்டாக பெயர் மற்றும் பிறந்த தேதி) வரிசைப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் எக்ஸெல் தொகுப்பிற்கு வேறு வகையில் இதனைத் தெரியப்படுத்த வேண்டும். எந்த பீல்டுகளை வரிசைப்படுத்த வேண்டும் எனவும் எந்த வகையில் அவற்றை அடுக்க வேண்டும் எனவும் கூற வேண்டும். இதற்கு முதலில் Data  மெனு செல்லவும். அதில் Sort  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Sort விண்டோவில் மூன்று வகையில் பிரிப்பதற்கு, அவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு என வழிகள் தரப்பட்டிருக்கும். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் நீங்கள் விரும்பும் டேட்டா செல்லுக்கான பெயரைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமைக்கேற்றபடி அமைக்கவும். அவை ஒவ்வொன்றிலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் (உயர்ந்த மதிப்பு/குறைந்த மதிப்பு) அமைக்க ascending அல்லதுdescending தேர்ந்தெடுக்கவும். வகைப்படுத்த வேண்டிய டேட்டா செல்களுக்கு நீங்கள் தலைப்பு வரிசையாக ஹெடர் வரிசை ("Header row")  ஒன்று இடையே கொடுத்திருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும். இதற்கு கீழாக வசதி தரப்பட்டிருக்கும். இதனை நீங்கள் செலக்ட் செய்யாவிட்டால் எக்ஸெல் ஹெடரிலுள்ள சொல்லையும் எடுத்துக் கொண்டு பிரித்து அதற்கென ஒரு இடம் கொடுத்துப்பிரிக்கும். அல்லது ஹெடர் வரிசை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் "No header row"  என்பதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். அனைத்தும் முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டேட்டா தொகுப்பு நீங்கள் விரும்பியபடி வகைப்படுத்தப்பட்டு அழகாகக் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு செல்லில் உள்ள டேட்டாவினையும் சேர்த்து வகைப்படுத்திடத் திட்டமிட்டால் அதனை மாற்றித் தேர்ந்தெடுத்து வகைப்படுத்தலாம்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP