சமீபத்திய பதிவுகள்

கள்ளப் போதகமும் வஞ்சிக்கப்பட்டவர்களும்

>> Saturday, November 1, 2008

கள்ள உபதேசங்கள் குறித்து கால தாமதமாக பதிவதற்காக் பொறுத்துக் கொள்ளுங்கள். செய்வதை திருந்தச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் இந்த கால தாமதம். சரி தலைப்புக்கு வருவோம். என்ற ஒரு விவாத தொடுப்பு ஆரம்பிக்கப்பட்டது நினைவிலிருக்கலாம். அது எங்கே போய் ஒளிந்து கிடக்கிறது என்பது தெரியவில்லை. எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்ற அப்பியாசத்தில் இங்கே கொடுத்துள்ளேன். இக்கட்டுரைக்கு வலு சேர்க்கும் வண்ணம் சகோ.ஸ்டான்லி அவர்களின் துண்டுப் பிரதி ஒன்றையும் இணைத்துள்ளேன்.

கடைசிக் காலத்தின் அறிகுறிகளில் பெருகிவரும் கள்ளப் போதகமும் ஒன்றாகும்.


கள்ளப் போதகர்கள் யார்?
வேதத்தை வேத வெளிச்சத்தில் காணாதவர்கள். தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அல்லது தங்கள் இஷ்டக் கருத்துக்களை ஊர்ஜிதம் செய்ய மட்டுமே வேதத்தை பொய்யாய் யாதொரு நெறிமுறையின்றி மேற்கோளாக பயன்படுத்துவார்கள்.
வினோதமாக வேதசத்தியத்திற்கு இவர்கள் விளக்கம் அளிப்பது போதாதென்று தாங்கள் புதுமை படைப்பாளிகள் என்றும் சில வேளைகளில் மார்தட்டிக் கொள்வார்கள்.
தங்கள் போதகத்தின் பயனாக கிறிஸ்து மகிமைப்படுத்தப்பட்டாரா? ஜனங்கள் எச்சரிக்கப்பட்டு பயன்பெற்றார்களா? என்றெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் நோக்குவதில்லை.
ஜனங்களை தங்கள் பக்கம் வசப்படுத்தி அடிமைகளாக்கி தங்களுக்கு ஆதாயம் அல்லது பிழைப்பை தேடிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
இந்திய திருச்சபையில் கொசுக்களைப் போல பெருகியிருக்கும் இவர்களைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
தப்பான போதனைகள் இன்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால் இந்த வெள்ளத்தில் எவருமே மீந்திருக்க முடியாது என்ற அளவுக்கு சிந்தைக்கு தொட்டில் கட்டி அப்பாவி விசுவாசிகளுக்கு மகுடி வாசித்து மயங்கவைக்கும் போதை உபதேசங்கள் விஷம் போல பெருகியிருக்கின்றன.

சர்ப்பமானது தனது தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல உங்கள் மனதையும் (மயக்கி) கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தினின்று விலக்கும்படி (தந்திரமாய்) கெடுத்துப் போடுமோ என்று பயந்திருக்கிறேன் என்று பவுல் சொன்னதில் இப்படிப் பட்ட கள்ளப் போதகர்களும் அடங்குவரோ?


கள்ள உபதேசங்கள் கள்ளப் போதகர்கள் இவற்றைப் பற்றி பேசும் போது முதலாவது நாம் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் பிசாசினால் சத்தியத்தினின்று விலகும் படி வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆவர். நாம் அவர்கள் எந்தப் பகுதியில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சரியாய் விளங்கிக்கொண்டால்தான் அவர்களிடம் நாம் தப்பவோ அல்லது சரியாய் பதில் கூறவோ முடியும். இந்தக் காரியத்தில் நமக்கு உதவியாய் இருக்கும் படிக்கு நான் சமீபத்தில் வாசித்த சகோ.ஸ்டான்லி அவர்கள் எழுதிய வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள் என்ற துண்டுப் பிரதியை இங்கே தர விரும்புகிறேண். நிச்சயம் அது மிகவும் பிரயோஜனமாக் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள்
"உமது வருகைக்கும் உலகின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு கொடுத்த 93 வசனப் பதிலின் முதல் வாக்கியம் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்பதே. அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார். பகுத்தறிவதில் விசுவாசிகள் வளரவேண்டுமென்று பவுல் ஜெபித்தார் (பிலி.1:9). வஞ்சிக்கப்படுதலை அடையாளங்காண இதோ சில பரிசோதனைகள். வஞ்சிக்கப்பட்ட ஊழியர் அல்லது மக்களில் கீழ்கண்ட ஒன்று அல்லது கூடுதல் அடையாளங்களைக் காணலாம்.

1. நான் மிகவும் வித்தியாச்மானவர் என்று வஞ்சிக்கப்பட்டவன் நினைக்கத் துவங்குகிறான். மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென அவன் எண்ணுகிறான்.

2.எழுதப்பட்ட வசனத்தை விட சொல்லப்படும் வார்த்தைகளில் அவன் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். திருமறைக்கும் மிஞ்சிய வெளிப்பாடுகளை தேவனிடமிருந்து வரும் புதிய காரியம் என்று அணைத்துக் கொள்ளுகிறான்.

3. சொப்பனங்கள் தரிசனங்கள் சத்தங்கள் மற்றும் கவர்ச்சியானதும் உடலுக்கடுத்ததுமான உணர்ச்சிவசக்காரியங்களில் அவன் அலாதிப் பிரியங்கொள்ளுகிறான். நூதனக்காரியங்களிலே அவனுக்கு நாட்டம் அதிகம்.

4.அவன் ஒரு புறம் சாய்ந்துவிடுகிறான். மற்றவை மறக்கப்படுமளவிற்கு ஏதோ ஒரு உபதேசம் அல்லது அனுபவத்தையே திரும்ப திரும்ப வலியுறுத்துகிறான்.  இது வேதத்தை திருக்குவது என்று அவன் அறியான்.

5. பக்குவப்பட்ட வேத போதகர்கள் முதிர்ச்சியடைந்த தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனையை அவன் நாடுவதில்லை. அவர்களது கண்காணிப்புக்குள் அடங்குவதுமில்லை. எல்லாமே நேரே பரலோகத்தில் இருந்து தனக்கு கிடைத்துவிடுகிறது என அவன் எண்ணுகிறான். முடிவை வைத்து முறை சரியென்று சாதித்துவிடுகிறான்.

6. ஏதோ விளக்கம் கூறி தன் வாழ்விலுள்ள சில பாவங்களுக்கு அவன் சாக்குப் போக்கு சொல்லிவொடுகிறான். அவன் பொதுவாக பிறர்மீது கடினமாகவும் தன்மீதோ சலுகையுடனும் இருப்பான்.

7.வேதத்தை ஆழமாய் ஆராய்கிறேன் என்ற போர்வையில் அவன் மறைவான இரகசியமான காரியங்களில் அசாதாரண பிரியம் காட்டுகிறான்.

8.மிஷனெறிப்பணியிலும் நற்செய்தி அறிவிப்பிலும் அவனது நடைமுறை ஈடுபாடும் விருப்பமும் தணிகிறது.

9. யாராவது அவனது தவறுகளை சுட்டிக் காட்டினால் அதை நல்மனதுடன் அவன் ஏற்பதில்லை. நான் சத்தியத்திற்காக பாடனுபவிக்கிறேண் என்று பிசாசு அவனை எண்ணச் செய்கிறான்.

10. தான் வஞ்சிக்கப்பட்டுள்ளது அவனுக்குத் தெரியாது; அதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். வெற்றிகள் அவன் கண்களை குருடாக்கிவிட்டன. நான் தவறென்றால் தேVஅன் எனது ஊழியத்தை இவ்வித மாசீற்வதிப்பது எப்படி? என்பதே அவனது விவாதம்.
 

 


Note: வஞ்சிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளங்காண‌.........இதைப் படிங்க முதல்ல‌
 

StumbleUpon.com Read more...

Answering IslamKalvi: இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? 
இஸ்லாம் கல்விக்கு பதில்
 


இஸ்லாம் கல்வி தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது, அதில் "இயேசு இறைவன் என்றால் அவர் எப்படி மரிக்கமுடியும்?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அக்கட்டுரைக்கான தொடர் பதில்கள் வரிசையில் இதனை முதலாவது பதிலாக நான் முன்வைக்கிறேன்.

 
 
 
இஸ்லாம் கல்வி எழுதியது:

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

Source: Islam Kalvi

 
 
 
பைபிள் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்

A Series of Answers to Common Questions

சாம் ஷமான்
 
 
கேள்வி:

இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்?

( If Jesus is God, how can God die? Who was running the universe those three days that Jesus was dead?)
 
 
பதில்:

 
ஒருவர் மரித்தால் அவர் "முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(non-existence)" என்பதே இக்கேள்வியில் மறைந்துள்ள ஒரு செய்தி அல்லது ஊகமாகும். இந்த கேள்வியின் படி, இயேசு மரித்தார் என்றுச் சொன்னால், அவர் முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(ceased to exist), இது போல நடக்க வாய்ப்பே இல்லையே, அதாவது இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்படி நிலைக்கும்? மரணம் என்பதின் பொருளை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள், இது தான் பிரச்சனை. ஆனால், பரிசுத்த வேதாகமத்தின் படி, மரணம் என்பது, ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான ஒரு பிரிவு மட்டுமே ஆகும். முதல் மனிதனின் பாவத்தினால் இரண்டு வகையான பிரிவுகள் உண்டாயின என்று வேதம் சொல்கிறது. முதலாவது "ஆன்மீக மரணம் அல்லது ஆவிக்குரிய மரணம்" ஆகும், அதாவது, இறைவனோடுள்ள ஐக்கியம் அல்லது உறவுமுறை துண்டிக்கப்பட்டு, இறைவனின் அன்பான மற்றும் நெருக்கமான பிரசன்னத்தை இழப்பதாகும். மனிதன் மீது இறைவனின் அன்பு சூழ்ந்து இருப்பதற்கு பதிலாக‌, இறைவனின் கோபம் வியாப்பித்து இருப்பதாகும். இதைத் தான் ஆவிக்குரிய‌ ம‌ர‌ண‌ம் என்றுச் சொல்கிறோம்.
 
 
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:15-17)
 
 
தேவனுக்கு கீழ்படியாமல், தடுக்கப்பட்ட மரத்தின் கனியை புசித்த காரணத்தினால், ஆதாமும் அவன் மனைவியும் தேவனின் பிரசன்னத்திலிருந்தும், ஏதேன் தோட்டத்திலிருந்தும் துரத்தப்பட்டார்கள்.
 
 
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (ஆதியாகமம் 3:22-24)
 
 
பாவத்தின் காரணமாக உருவான இந்த ஆவிக்குரிய பிரிவினையை வேதம் தொடர்ந்து விவரிக்கின்றது.
 
 
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். (சங்கீதம் 5:4-6)

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார். (சங்கீதம் 66:18)

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59:2)

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். (மீகா 3:4)

தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? (ஆபகூக் 1:13).

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. …சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2:5,8)

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசியர் 2:1-5).
 
இயேசுவோடு ஐக்கிய‌ப்ப‌ட்ட‌ விசுவாசிக‌ள் கூட‌ அவ‌ர்க‌ள் ம‌றுபிற‌ப்பு அடைவ‌த‌ற்கு முன்பாக "பாவத்தில் ம‌ரித்த‌வ‌ர்க‌ளாக" இருந்தார்க‌ள் என்று மேலே ப‌டித்த‌ க‌டைசிப் ப‌த்தியில் ப‌வுல் சொல்கிறார். அதாவ‌து பாவ‌த்தில் ம‌ரித்த‌வ‌ர்க‌ள் என்றுச் சொன்னாலும், விசுவாசிக‌ள் இன்னும் உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளாகவே இருந்தார்க‌ள். மனிதன் பாவ‌த்தினால் ம‌ரித்தான் என்றுச் சொன்னால், அவ‌ன் இல்லாமல்(அழிந்தே) போய்விடுகிறான் என்று பொருள் அல்ல‌, அத‌ற்கு ப‌திலாக‌, அவ‌ன் அன்பான‌ தேவ‌னோடுள்ள‌ ந‌ட்புறவிலிருந்து பிரிக்கப்பட்டான் என்ப‌து தான் இந்த‌ வ‌ச‌ன‌த்தின் பொருளாகும்.

பரிசுத்த பைபிள் குறிப்பிடும் இரண்டாவது வகையான மரணம் "சரீர மரணமாகும்". இந்த சரீர மரணம் என்பது, சரீரத்திலிருந்து ஆவி/ஆன்மா பிரிக்கப்பட்டு, மற்றும் இந்த சரீரமானது தான் வந்த மண்ணுக்கே திரும்பிவிடும். மற்றும் நம்முடைய பாவத்தை சுமந்த இயேசு கிறிஸ்துவும் இந்த இரண்டு வகையான மரணத்தையும் சந்தித்தார், அதாவது தேவனுடன் தன் நட்புறவை நமக்காக இழந்தார், மற்றும் சரீரத்திலிருந்து ஆன்மா பிரிவதையும் அனுபவித்தார். நம்முடைய தொடர் கேள்விகளுக்கான பதிலில் இந்த விவரத்தைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் சிந்திக்கப்போகிறோம்.

 
ஆக, இந்த இரண்டு வகையான மரணங்களும், ஒருவரை "இல்லாமல் செய்துவிடாது"( Yet, neither types of death results in non-existence or cessation of life). உதாரணத்திற்கு கிழ் கண்ட வசனத்தை பார்க்கவும்:
 
 
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரேயர் 12:22-24)

 
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும்செத்ததாயிருக்கிறது ("As the body without the spirit is dead, so faith without deeds is dead." யாக்கோபு 2:26)

 
அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (வெளி 6:9-11)
 
 
"மரணம்" என்றால் என்ன என்பது பற்றி, கேள்வி கேட்டவரின் புரிந்துக்கொள்ளுதல் பைபிளுக்கு எதிரானது மட்டுமல்ல, அது குர்‍ஆனுக்கும் எதிரானது என்பது தான் மிகவும் முக்கியமான விவரமாகும்(Interestingly, not only is the questioner's definition of death unbiblical, it is also contrary to the Quran:).
 
 
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்(And say not of those slain in God's way, 'They are dead'; rather they are living, but you are not aware. குர்‍ஆன் 2:154)

 
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள். (குர்‍ஆன் 3:169-170)

Count not those who were slain in God's way as dead, but rather living with their Lord, by Him provided, rejoicing in the bounty that God has given them, and joyful in those who remain behind and have not joined them, because no fear shall be on them, neither shall they sorrow, S. 3:169-170
 
 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் வார்த்தைகளும் இதனையே எதிரொலிக்கின்றன.
 
அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். (லூக்கா 20:37-38)
 
 
இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்வது என்னவென்றால், இயேசு சிலுவையில் மரிக்கும் போது அவர் "முழுவதுமாக இல்லாமல் போகவில்லை". பரிசுத்த வேதம் நமக்கு இவ்விதமாக போதிக்கிறது, அதாவது கர்த்தரின் சரீரம் மூன்று நாட்கள் கல்லரையில் இருக்கும் போது கூட, அவரது ஆவி/ஆன்மா தொடர்ந்து உயிரோடு இருந்தது(still consciously alive) மற்றும் வாழ்ந்துக்கொண்டு இருந்தது என்று வேதம் சொல்கிறது.
 
 
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்,மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:19-22)

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:17-18)
 
 
இயேசு தன்னைத் தானே மரணத்திலிருந்து உயிர்த்தெழ வேண்டுமென்றால் அதற்கு உள்ள ஒரே வழி, அவர் உயிரோடு இருந்தால் தான் முடியும். இது நமக்கு இயேசு கல்லரையில் இருந்த மூன்று நாட்களில் அவர் இல்லாமல் போகவில்லை என்பதை நிருபிக்கிறது. இயேசுவின் தெய்வீகத் தன்மை மற்றும் அவரது மனித ஆன்மா அந்த மூன்று நாட்களும் உயிரோடு முழு உணர்வோடு இருந்தது.( The only way that Christ could be able to raise himself from the dead is if Christ were still consciously alive. This establishes that Christ did not cease to exist for those three days that his body remained in the grave. Both Christ's divine nature and his human soul were still conscious during that period of time.)

 
ஆக, கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இதுவே. உண்மைத் தேவனாகிய இறைவன், மூன்று நிகரற்ற ஆள்தத்துவத்துடன் எப்போது வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். இயேசுவின் சரீரம் கல்லரையில் வைக்கப்படும் போதும் சரி, அந்த சரீரம் கல்லரையில் இருந்த அந்த நாட்களிலும் சரி அவர் உயிரோடு இருக்கிறார். அந்த மூன்று நாட்களிலும் கிறிஸ்து உயிரோடு இருந்து, தன் பிதா பரிசுத்த ஆவியானவருடன் மகிமை வல்லமையுடன் உலகத்தை ஆண்டுக்கொண்டு இருந்தார்.


ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Shamoun/q_god_dying.htm
 
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/q_god_dying.htmlஇஸ்லாம் கல்வி தள கட்டுரைகளும், ஈஸா குர்ஆன் பதில்களும்

 

 

 

StumbleUpon.com Read more...

முஸ்லீம் அல்லாத மதம்மாறியவர்களுக்கு மரண தண்டனை: ஈரான் பாராளுமன்றம். Iranian parliament: Death to non-Muslim converts

  

ஈரான் பாரளுமன்றம் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதத்திற்கும் மாறினால் மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சட்டத்தை அமுல் படுத்தியுள்ளது. தகவல்களின் படி ஈரானியர்கள் ஆயிரக்கணக்கில் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தரங்க சபைகள் நாள்தோறும் தழைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற ஈரானியர்கள் ஒரு சமயத்தில் ஈரானில் ஆதிக்கம் செலுத்தியிருந்த சோரானியஸ்டிரத்திற்கு மாறிவருகின்றனர். Jonathan Rocho, with International Christian Concern (ICC), explains.

' கிறிஸ்தவ அமைப்புகளான நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்து மிக அக்கறையாக உள்ளோம் ஏனென்றால் இஸ்லாமிலிருந்து மதம் மாறின  ஆயிரக்காண கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்த காரணத்திற்காக மரணத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள்." என்று ரோக்கோ புலம்புகிறார்.

 1970 புரட்சிக்குபின் ஈரானில் ஏற்பட்ட மத ஆதிக்கம் நிறைந்த ஆட்சியில் வாழ்ந்த ஈரானியர்கள் தற்போது அதன் விசுவாசத்தைக் குறித்து கேள்வி  எழுப்புகின்றனர். 'அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த வித மாற்றத்தை காணவில்லை. என்று ரோக்கோ மேலும் கூறுகிறார். 'இன்னும் நிறைய அடக்குமுறைகளும், பிரச்சினைகளும் தொடர்ந்து  கொண்டிருப்பதால் மக்கள் இஸ்லாமிய நம்பிக்கையைக் குறித்து மிகுந்த குழப்பமடைந்துள்ளனர்."

ஏற்கனவே இரண்டு கிறிஸ்தவர்கள் மதம் மாறியதிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் ஈரான் எந்த நெருக்கடிக்கும் இணங்குவதில்லை எனவே ஜனங்களை அதிகமாக ஜெபிக்குமாறு வலியுறுத்துகிறார். Iranian parliament: Death to non-Muslim converts

 

Iran's parliament has passed the death penalty for apostasy, which is viewed in that country as converting to any other faith than Islam.

Thousands of Iranians have been converting to Christianity, and the underground church is thriving, according to reports. But other Iranians are returning to Zoroastrianism, which was the dominant religion in Iran at one time. Jonathan Rocho, with International Christian Concern (ICC), explains.

"We, as a Christian organization, are very much concerned about this because this means many Christians who converted from Islam are going to face death, simply because of their decision to follow Jesus Christ," Rocho laments.

He says Iranians are questioning the Muslim faith after living under the regime, which has been dominated by the religion since the revolution in the 1970s. "They have not seen any change in their lives," Rocho adds. "There is even more repression, more problems going on in the country, so they are very much confused about the Islamic faith."

Already, two Christian converts accused of apostasy have been given the death penalty. Since Iran does not easily succumb to international pressure, Rocho urges people to pray.

http://www.onenewsnow.com/Persecution/Default.aspx?id=266222

 

http://unmaiadiyann.blogspot.com/2008/10/iranian-parliament-death-to-non-muslim.html

StumbleUpon.com Read more...

ரூ.15கோடி இழப்பு:ஐ.பி.எல்.அமைப்பு மீது ரணதுங்கா பாய்ச்சல்

 
lankasri.comஐ.பி.எல்.(இந்தியன் பிரீமியர் லீக்) 20ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு மிகவும் வெற்றி கரமாக நடந்தது.இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அனைத்து நாட்டு சர்வதேச வீரர்களும் இதில் ஆடியதால் ரசிகர்கள் இதை வெகுவாக ரசித்தனர்.

ஏலம் முறையில் எடுக்கப்பட்டதால் வீரர்களுக்கும் இந்தப் போட்டியில் பணம் கொழித்தது.

இலங்கை அணியில் ஜெயசூர்யா,ஜெயவர்த்தனே,சங்ககரா போன்ற முன்னணி வீரர்கள் உள்பட பெரும்பாலானோர் ஆடுகிறார்கள்.அடுத்த ஆண்டு போட்டி நடைபெறும் நேரத்தில் இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய வேண்டி இருந்தது.

ஐ.பி.எல்.போட்டியில் ஆட வேண்டி இருப்பதால் பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைக்குமாறு கேட்டனர்.இதை தொடர்ந்து இங்கிலாந்து பயணத்தை இலங்கை கிரிக் கெட் வாரியம் ரத்து செய்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். அமைப்பின் மீது இலங்கை கிரிக்கெட் வாரிய சேர்மனும்,முன்னாள் கேப்டனுமான அர்ஜுனா ரணதுங்கா பாய்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல்.அமைப்பில் இலங்கை சீனியர் வீரர்கள் பலர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.அவர்கள் விளையாட முடியாததால் இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தோம்.இதனால் எங்களுக்கு ரூ.15கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் டெலிவிசன் உரிமம் மட்டும் ரூ.10கோடி கிடைக்கும்.

இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐ.பி.எல்.போட்டியில் வீரர்கள் ஆடுவதால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை.எங்கள் கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.வீரர்களுக்கு நாங்கள் அதிகமாகத்தான் பணம் கொடுக்கிறோம்.ஐ.பி.எல்.எங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1225536518&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

அசாம் குண்டுவெடிப்பு:ஜிகாதிகளே காரணம்?

 
 
lankasri.comஅசாம் மாநிலத்தின் 4வெவ்வேறு நகரங்களில் ஒரே சமயத்தில் நடந்த பயங்கர தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஜிகாதிகளே காரணம் என்று மாநிலப் போலீஸர் சந்தேகிக்கின்றனர்.

வெடிகுண்டுகளை வைத்தது நாங்களே என்று "இந்திய முஜாஹிதீன்கள்'" என்ற அமைப்பு உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எஸ்.எம்.எஸ்.என்ற குறுந்தகவலை அனுப்பியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறிவரும் வங்கதேச முஸ்லிம்களும், இந்திய அரசுக்கு எதிராக மறைமுகப் போர் நடத்திவரும் ஜிகாதி குழுக்களும் இணைந்து ஐ.எஸ்.ஐ.போன்ற நாசகார அமைப்புகளின் உதவியுடன் இக் கொடிய செயலை அரங்கேற்றியுள்ளன. "ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லமி" (ஹூஜி) என்ற வங்கதேச பயங்கரவாத அமைப்பின் உதவியில் இச் செயல்நடந்துள்ளது என்று போலீஸர் கருதுகின்றனர்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் "பேட்மேன்" (ஆஅஈஙஅச) என்ற சங்கேத வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளனர்.அதன்படி பார்த்தால் முதலில் பெங்களூர்,பிறகு ஆமதாபாத்,தில்லி,மணிப்பூர் இப்போது அசாம் ஆகிய ஊர்களில் குண்டுவைக்க திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.இதில் எஞ்சியிருப்பது "என்" என்ற எழுத்து.இது நொய்டாவாகவோ (தில்லியை அடுத்து இருப்பது),நாகபுரியாகவோ (மகாராஷ்டிரம்) நாகாலாந்தாகவோ இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

"பி.இ.-3"ரகம்: அசாமில் 4ஊர்களில் வெடித்த குண்டுகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆர்டிஎக்ஸ் ரக வெடி மருந்து மட்டும் அல்ல,அமெரிக்கா,ரஷியா போன்றவை ராணுவங்களில் பயன்படுத்தும் "பி.இ.-3"ரக வெடிமருந்து என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்கின்றனர்.அசாமில் இறந்தவர்களின் உடல்கள் கருத்தும் கருகியும் காணப்பட்டன. பி.இ.ரக வெடிமருந்துகள்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த குண்டுவெடிப்புகளுக்கு உல்ஃபா அமைப்பு காரணமோ என்ற சந்தேகம் முதலில் இருந்தது.உல்ஃபா இயக்கத்தையும் அதன் ஆயுதப் பிரிவையும் ராணுவமும் துணைநிலை ராணுவமும் கடுமையாக ஒடுக்கிவிட்டன.போதாக்குறைக்கு அதன் அமைப்பில் பிளவு ஏற்பட்டு எந்தவிதத் தாக்குதலுக்கும் திறன் இன்றி அது பலமிழந்துவிட்டது.எனவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் உல்ஃபா அல்ல என்று போலீஸர் தெரிவிக்கின்றனர்.

15பேர் கும்பல்:கடந்த செப்டம்பர் மாத மத்தியில் வங்கதேசத்திலிருந்து 15பேர் கொண்ட தீவிரவாதிகள் கும்பல் இந்தியாவுக்குள் ஊடுருவப் போவதாக ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.தூப்ரி மாவட்டத்தில் ராணுவம் கண்காணித்துக்கொண்டிருந்தபோது 15பேர் கொண்ட கும்பல் இந்திய எல்லைக்குள் வந்துகொண்டிருந்தது. ராணுவத்தினர் உடனே துப்பாக்கியால் சுட்டனர்.

அவர்களும் பதிலுக்குச் சுட்டனர்.அந்தச் சண்டைக்குப்பிறகு கும்பலைச் சேர்ந்த 7பேர் அங்கேயே பிணமாகக் கிடந்தனர்.மற்றவர்கள் இந்திய எல்லைக்குள் எங்கோ மறைந்துவிட்டனர்.அவர்களை ராணுவத்தினரும் போலீஸரும் தேடினர்.ஆனால் அவர்கள் உள்ளூரில் யாருடைய துணையாலோ மறைந்து தப்பிவிட்டனர்.

வங்கதேசிகளை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்று அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஆசு)கிளர்ச்சியைத் தொடங்கியது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் கிளர்ச்சிகளை அறிவித்தன.

வங்கதேசிகள் என்ற சாக்கில் ஆண்டாண்டு காலமாக வாழும் இந்திய முஸ்லிம்களை வெளியேற்றும் சதி இது என்று அவர்கள் கண்டித்தனர். அதே சமயம்,சட்டவிரோதமாக அசாமில் தங்கியவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 30வங்கதேசிகளை வெளியேற்ற அசாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந் நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி முழு அடைப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் அழைப்புவிடுத்தன.உடால்குரி மாவட்டத்தின் ரெடா என்ற ஊரில் போடோ இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் சிலர் வீதிகளில் வந்துகொண்டிருந்தனர்.முழு அடைப்பு அறிவித்திருக்கும்போது வீதியில் எப்படி நடக்கலாம் என்று கேட்டு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களைக் கத்தியால் குத்தினர்.

அதில் ஒருவர் இறந்தார்,3பேர் படுகாயம் அடைந்தனர்.அதையடுத்து போடோக்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.அந்தக் கலவரத்தில் 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது வங்கதேச முஸ்லிம்கள் என்பதால் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பதிலடியாக இந்தக் கொடூர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று காவல்துறைத் தலைவர் ககன் சர்மா நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1225532628&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP