சமீபத்திய பதிவுகள்

உலக மனித இனமே இதை பார்க்க முடியாத படி உன் கண்களை கட்டியது யார்?

>> Monday, May 11, 2009

StumbleUpon.com Read more...

ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துச் செல்லும் பொதுமக்களின் மரணங்கள்": அமெரிக்கா கண்டனம்

  
தொடரும் போர் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாதளக்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திரு்கும் அமெரிக்கா, பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
"நாம் ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றோம். ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பொதுமக்களின் உயிரழப்புக்கள் அதிகரித்திருப்பதாக நாம் கருதுகின்றோம்" என இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கெலி ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆயுதங்களைக் கீழே வைக்குமாறும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும் விடுதலைப் புலிகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்டு வந்திருக்கின்றோம். அதேவேளையில், தமது தாக்குல் நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாகவும், பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் கவனர ஆயுதங்களை இனிமேல் பாவிக்கப்போவதில்லை எனவும் சிறிலங்கா அரசாங்கம் ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியிட்ட அறிவித்தலின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்" என அவர் மேலும் தெரிவித்தார்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP