சமீபத்திய பதிவுகள்

பஜ்ரங் தளத்தை தடை செய்க வ்

>> Monday, October 6, 2008

மதக் கலவரத்துக்கு வழிவகுக்கும் பஜ்ரங் தள அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மதக் கலவரத்துக்கு பஜ்ரங் தளம் மிக முக்கிய காரணமாகும் என்று பிரதமரிடம் அளித்த பரிந்துரையில் ஆணையத்தின் தலைவர் முகமது ஷபி குரேஷி சுட்டிக் காட்டியுள்ளார்.

மாநிலத்தில் செயல்படும் அனைத்து மத ரீதியான அமைப்புகளை கண்காணிப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை பேண முடியும். மதக் கலவரத்துக்கு வித்திடும் அமைப்புகளுக்குத் தடை விதிப்பதன் மூலம்தான் மத நல்லிணக்கம் சாத்தியமாகும்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் இக்குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கலவரம் பாதித்த மங்களூரில் மூன்று நாள் தங்கி நிலைமையை ஆய்வு செய்தது.

மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமான 17 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

பஜ்ரங் தள மாநில அமைப்பாளர் மகேந்திர குமாரே, அங்குள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அறையை சேதப்படுத்தியதாக அறிக்கை விட்டுள்ளார் என்றும் குரேஷி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெங்களூரில் 83 பேர் நீதிமன்றக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 36 பேர் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். மங்களூரில் 25 கன்னியாஸ்திரிகளை தாக்கிய போலீஸர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிக அளவில் மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், அவ்விதம் நடைபெற்றதற்கான ஒரு ஆதாரமும் இல்லை. இந்துக் கடவுள் அவமதிக்கப்பட்டு வெளியான துண்டு பிரசுரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். புலனாய்வு அமைப்புகளை சிறப்பாக செயல்படச் செய்வதன் மூலம் இதுபோன்ற மதக் கலவரங்களை தடுக்க முடியும் என்றும் தேசிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஒரிசா: ஒரிசாவில் வன்முறையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாராளமாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வன்முறையில் உயிரிழந்தவர்களின் சடலத்தை காண்பித்தால் மட்டுமே மாநில அரசு நிவாரணம் வழங்குகிறது. இதற்கு பதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை பதிவான 203 வழக்குகளை விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223284919&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஒரிசா,கர்நாடகாவில் கட்டாய மத மாற்றமே கலவரத்துக்கு காரணம்;நரேந்திரமோடி புகார்

யோக்கியவான் சொல்லுகிறார் கேளூங்கோ?அப்பாவிகளை கொல்லுவதீல் தனித்திறமை கொண்டவர் அல்லவா இவர்.
lankasri.comகுஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி ஒரிசா, கர் நாடக மதகலவரம் பற்றி தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.அவர் கூறியதாவது:-எந்த ஒரு அமைப்பு சட்டத்தை மீறினாலும் அது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.அந்த பிரச்சினைக்கு வேர் எது? என்பதை கண்டறிந்து அதை தடுக்க வேண்டும்.

ஒரிசா, கர்நாடக மதகல வரத்துக்கு அங்கு நடக்கும் கட்டாய மத மாற்றமே காரணமாக உள்ளது.மத மாற்றத்துக்கு மகாத்மா காந்தி கடுமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வழியை பின்பற்றி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். மத மாற்றத்துக்கு உதவுவதற்காக வெளிநாடு களில் இருந்து கிறிஸ்தவ பிரசார அமைப்புகள் ஏராளமாக பணம் அனுப்புகின்றன. இவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அவர்களை ஒடுக்க முடியும்.இதில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தாலும் அது ஆபத்தாக முடியும்.

இவ்வாறு மோடி கூறினார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223287590&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

கலவரத்தை ஒடுக்க கூட்டு நடவடிக்கை:ஒரிசா அரசு கலைப்பு இல்லை-மத்திய அரசு முடிவு

lankasri.comஒரிசா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிஷத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.

மாவோயிஸ்ட் தீவிர வாதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த படுகொலையை செய்திருப்பது தெரிய வந்ததால் ஒரிசாமாநில பழங்குடி இன மக்கள் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்கினார்கள். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தில் தான் கலவரம் அடக்க முடியாதபடி இருந்தது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 900 பேர் கைதானார்கள். 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு துணை நிலை ராணுவத்தை அனுப்பியது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் ஒரிசாவில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடந்தபடி உள்ளது.

கலவரத்தை கட்டுப் படுத்தாவிட்டால் அரசியல் சட்ட பிரிவு 355 மற்றும் 356-ன் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஒரிசா மாநில அரசை மத்திய அரசு எச்சரித்தது. அதன் பிறகும் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. கலவரக்காரர்களை அடக்க நவீன் பட்நாயக் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இந்த நிலையில் வரும் 9-ந் தேதி கந்தமாலில் விசுவ இந்து பரிஷத்சார்பில் மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கந்தமாலில் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

ஒரிசாவில் சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் இன்னமும் சகஜநிலைக்கு திரும்ப வில்லை. எனவே ஒரிசாவில் நவீன்பட்நாயக் ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தோழமை கட்சித்தலைவர்கள் லல்லுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ் வான் ஆகியோரும் ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இவர்கள் கடந்த சில தினங்களாக மத்திய அரசுக்குகடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரிசா அரசுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உயர் அதிகாரிகளை ஒரிசாவுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது.

கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்ற போதிலும் ஒரிசா அரசு மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. ஒரிசாவுக்கு மத்திய உள்துறை கடும் எச்சரிக்கை வார்த்தைகளுடன் எழுதிய கடிதமே போதும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே இப்போதைக்கு ஒரிசா அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்று தெரிகிறது.

இதற்கிடையே வரும் 13-ந் தேதி தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டி உள்ளார். அதில் ஒரிசா கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொடர்ந்து ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் சூழ்நிலை வருமா என்பது தெரிய வரும்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223287826&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தளி அருகே மாதா சிலைகள் உடைப்பு பதற்றம்-போலீசார் குவிப்பு



தேன்கனிக்கோட்டை, அக்.6-

தளி அருகே மாதா சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவாலயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ளது மதகொண்டப்பள்ளி கிராமம். அங்கு சொல்லேபுரம் செல்லும் சாலையில் எமது மாதா என்ற ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நுழைவு வாயில் அருகில் சிறிய அளவிலான ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 21/2 அடி உயரத்தில் ஒரு மேரி மாதா சிலையும், 4 அடி உயரத்தில் மற்றொரு சிலையும் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் யாரோ வந்து பள்ளி முன்பு உள்ள ஆலயத்தில் இருந்த 21/2 அடி உயரமுள்ள மேரி மாதா சிலையை உடைத்து சேதப்படுத்தி பள்ளி காம்பவுண்டு சுவர் ஓரத்தில் வீசியுள்ளனர். அதேபோல் 4 அடி உயரமுள்ள மற்றொரு மேரி மாதா சிலையையும் மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளனர். இந்த சிலையை காணவில்லை.

போலீசார் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து மோப்ப நாய் ரோபோ மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களையும், கைரேகையையும் பதிவு செய்தனர்.

மாதா சிலை உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442963&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும்,கவிஞர் கனிமொழி எம்.பி. பேச்சு

 


சென்னை, அக்.6-

நாட்டின் எந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராட அனைவரும் போராட வேண்டும் என்று கவிஞர் கனிமொழி எம்.பி., கேட்டுக் கொண்டார்.

ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் `ஹார்மோனி இந்தியா' அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவிஞர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடப்பது வெறும் ஏழு வார பிரச்சினை மட்டும் இல்லை. ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் கடந்த 35 வருடங்களாக 6 ஆயிரம் பயிற்சி மையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் 50 ஆயிரம் பேர் முழுநேர தொண்டர்களாக இருந்து வருகின்றனர். எனவே, ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடப்பவை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நடக்கும் சம்பவங்கள் இல்லை.

மவுனமாக இருக்கக்கூடாது

முதலில், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஜெர்மன் நாட்டில் ïத மக்களின் உழைப்பைச் சுரண்டி ரோடு போட்டார் ஹிட்லர். அதற்காக அவரைப் பாராட்ட முடியுமா? இந்த விஷயத்தில் ஜெர்மனியிலும் குஜராத்திலும் என்ன வித்தியாசத்தைக் காண முடியும்.

2002-ம் ஆண்டு ஒரிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் வில் அம்பைக் கொண்டு கொல்லப்பட்டார். வகுப்புவாதிகள் குஜராத்தை பயிற்சி மைதானமாக வைத்துள்ளனர். ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடக்கும் வன்முறைகளைப் பார்த்து நாம் மவுனமாக இருந்துவிட்டால் இந்த வன்முறை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். கண் எதிரே நடக்கும் இந்த அட்டூழியங்களை நாம் தொடர்ந்து அனுமதித்தால் எதிர்கால தலைமுறையும் அழியும் நிலை உருவாகும். நாட்டின் எந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்தும், நாட்டின் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்திற்காகவும் நாம் போராட முன்வர வேண்டும்.

அரசு சும்மா இருக்காது

தமிழ்நாட்டில் சிறு சம்பவம் நடந்த உடனே முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் நடவடிக்கை எடுத்தார். ஓட்டுக்காகவோ அல்லது மற்றவற்றிற்காகவோ அரசு இதைச் செய்யவில்லை. மதமாற்றத் தடை சட்டத்தை தூக்கி எறிந்தது இந்த அரசுதான். கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது.

இவ்வாறு கவிஞர் கனிமொழி கூறினார்.

தமிழக முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்ஸாண்டர் பேசியதாவது:-

வன்முறை நடக்காது

இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர்தான் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மதமாற்றம் செய்வதாகக்கூறி அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்று கூறுவதைப் போல இந்த கூட்டத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள் கலந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. பத்திரிகையாளர் ராம், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி போன்றவர்கள் இருந்தால் எங்கும் வன்முறை நடக்காது.

இவ்வாறு பி.சி.அலெக்ஸாண்டர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

இந்த கூட்டத்தில், சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சி.எஸ்.ஐ. திருச்சபை சென்னை பேராயர் வி.தேவசகாயம், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, `ஹார்மோனி இந்தியா' அமைப்பின் தலைவர் இந்து என்.ராம், இதன்செகரட்டரி ஜெனரல் ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, இஸ்லாமிய அறக்கட்டளை துணைத் தலைவர் ஹபீப் முகமது, இஸ்லாமிய இலக்கிய கழக துணைத்தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கலந்துகொண்டனர்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442963&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் சிறுபான்மையோர் ஆணையம் பரிந்துரை


புதுடெல்லி, அக்.6-

ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சமீபத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. இதையொட்டி கலவரங்களும் ஏற்பட்டன. இது பற்றி ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையோர் ஆணைய தலைவர் ஷபி குரோஷி தலைமையில் ஒரு குழு பெங்களூர், மங்களூர், உடுப்பி ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டது. அதே போல ஒரிசாவுக்கும் 2 குழுக்கள் சென்று பார்த்து வந்தது.

இந்தக் குழு நேற்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சிறுபான்மையோர் மீதான தாக்குதலுக்கு விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள்தான் காரணம். ஆகவே அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட 2 மாநில அரசுகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442977&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...

`இனி மதக் கலவரங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'கர்நாடகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை திடீர் ஆய்வு நடத்திய மத்திய மந்திரி சிவராஜ் பட்டீல் பேட்டி

 


பெங்களூர், அக்.6-

கர்நாடகத்தில் இனி மதக்கலவரங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று பெங்களூர் வந்தார். பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ராமேசுவர் தாகூரை சந்தித்து பேசினார்.

மேலும் கர்நாடக போலீஸ் மந்திரி பி.வி.ஆச்சார்யா, சட்ட மந்திரி சுரேஷ்குமார், தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் ஆகியோரையும் அழைத்து சிவராஜ் பட்டீல் பேச்சு நடத்தினார்.

பரபரப்பான இந்த சந்திப்புக்கு பிறகு சிவராஜ் பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு

கர்நாடக கவர்னர் ராமேசுவர் தாகூர், மாநில போலீஸ் மந்திரி ஆச்சார்யா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். இந்த ஆலோசனை கூட்டம் நல்ல பலனை கொடுத்து உள்ளது. இதன் மூலம் ஏராளமான தகவல்களை கேட்டு அறிந்தேன்.

மேலும் கர்நாடகத்தில் இனி மதக்கலவரங்கள் நடக்காமல் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அரசுக்கு எச்சரிக்கை

கர்நாடகத்தில் கடந்த ஜுலை மாதம் முதல் நடந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களும், மதக்கலவரங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும்படி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற விஷயங்களில் `மிகவும் கவனமாக'வும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

சிறப்பு போலீஸ் நிலையங்கள்

நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு இந்த போலீஸ் நிலையங்கள் சுமையாக இருக்கலாம்.

எனவே மாநில அரசுக்கு சுமையாக இல்லாமல் இருக்க முதல் 3 வருடங்களுக்கு சிறப்பு போலீஸ் நிலையங்களுக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த போலீஸ் நிலையங்களுக்கு தேவைப்படும் போலீசார், வாகன வசதி, நவீன ஆயுதங்கள் போன்றவற்றையும் மத்திய அரசே வழங்கும்.

இவ்வாறு மத்திய மந்திரி சிவராஜ் பட்டீல் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442980&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...

குஜராத்தில் பூமி அதிர்ச்சி

 


ஆமதாபாத், அக்.6-

குஜராத் மாநிலம், ஜ×னாகத் பகுதியில் நேற்று மாலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. சித்ரோடா கிராமத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சியின் அளவு ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருந்தது. 2 வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்ச்சியில், அமரபூர் நகரில் இரு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. கட்டிடங்கள் குலுங்கியதால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் பீதியுடன் வெளியே ஓடி வந்தனர். பூமி அதிர்ச்சியை தொடர்ந்து ஜ×னாகத் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

வட மேற்கு சீனா வுகியா மாகாணத்தில் நேற்று பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த பூமி அதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விவரம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதேபோல் மத்திய ஆசியாவில் மேற்கு கிரிகிஸ்தான் பகுதியிலும் நேற்று பூகம்பம் (6.3) ஏற்பட்டது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=443044&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...

திருப்பதியில் கருட சேவை 7 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்

 

 
திருப்பதி, அக்.6-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடந்த கருட சேவையை காண சுமார் 7 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அப்போது நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். இதில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது

கருடசேவை

மலையப்பசாமியின் கருடசேவையை தரிசனம் செய்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், மலையப்ப சாமி மகாவிஷ்ணு அவதாரத்தில் வரும்போது லட்சுமி ஆரம், சகஸ்ர நாமாவளி ஆரம், மகரகண்டி லட்சுமி ஆரம் போன்ற திருவாபரணங்களை அணிந்து வருவதால், அந்தக் கோலத்தில் சாமியை தரிசித்தால் பீடை விலகி- அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஒருசேர கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும்.

எனவே தென்னிந்தியா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து, திருமலையில் குவிந்தனர்.

9 பேர் காயம்

நேற்று ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதியது. இதில் நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

கருட சேவையை சுமார்
7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக, பக்த பிரமுகர் ஒருவர் மதிப்பிட்டார்.

திருமலையில் குவிந்த பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 சதவீதம் பேர் தமிழர்கள். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. அதன் காரணமாக, பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை பல இடங்களில் காண முடிந்தது. ராம் பக்ஷா தங்கும் விடுதி அருகே அதுபோல் மொழிப்பிரச்சினை ஏற்பட்டதால், குழப்பம் உருவானது. எனவே, போலீசார் லேசான தடியடி நடத்தி பக்தர்களை கலைத்தனர்.

24 மணி நேர தரிசனம்

பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நேற்று 24 மணி நேரமும் மகாலகு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=443045&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP