சமீபத்திய பதிவுகள்

ராமர் பாலம் வழிபாட்டுத்தலம் தான்:ராம.கோபாலன் அறிக்கை-மத்திய அரசு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது

>> Wednesday, October 15, 2008

 
 
lankasri.comஇந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-ராமர்பாலம் வழிபாட்டுத்தலம் அல்ல என்று ஆளும் காங்கிரஸ் அரசு உச்ச நீதி மன்றத்தில் 100பக்க மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ராமர் பாலம் வழிபாட்டுத்தலம் தான் என்பதற்கான எல்லா ஆதாரங்களையும் நானும் எனது மனுவில் தாக்கல் செய்து இருக்கிறேன்.

ஒருவேளை நீதி மன்றம் நியமித்துள்ள பச்சோரி கமிட்டி மாற்றுப்பாதை சாத்தியமில்லை என்று கருத்து தெரிவிக்குமோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்படுகிறது.அந்த ஆய்வறிக்கையை புறந்தள்ளி விட்டு ராமர் பாலத்தை இடிப்பதற்கான கொல்லைப்புற வழி தான் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை என்று சொல்லத் தோன்றுகிறது.

ராமர் பாலம் வழக்கில் நானும் ஒரு மனுதாரர்,மனுதாரர்களுக்கு தெரியாமல் ரகசியமாக ஒரு மனு வைத்தாக்கல் செய்திருப்பது நாகரீகமான செயல் அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.ஒரு இடம் வழிபாட்டுத் தலமா,இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது பக்தர்கள் தான்.அரசு இந்த உரிமையில் தலையிட அனுமதிக்க மாட்டடோம்.

இந்துக்களுடைய நம்பிக்கையின் அரசு குறுக்கீடுகளையும், தகர்க்க முயற்சிப்பதையும் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். தனுஷ்கோடிக்கு செல்வதற்கு வசதிகளே இல்லாத நிலையில் கூட தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். ராமரே இல்லை என்று அவசர அவசரமாக ஒரு மனுவை தாக்கல் செய்து அதை திரும்பப்பெற்று அவமானப்பட்டது அரசுக்கு மறந்து விட்டது போலும்.

மணல் அள்ளும் விசயத்தில் பலகோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறப்படும் இந்த நேரத்தில் மத்திய அரசின் இந்த முயற்சி எதிர்மறை விளைவுகளைத்தான் உருவாக்கப் போகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த இந்து விரோத நடவடிக்கைக்காக இவர்களை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள்.

சட்ட வல்லுனர்களின் துணை கொண்டு அரசின் வரம்பு மீறிய செயலை மீறியடிப்போம். நேற்று இரவு ராமநாதபுரத்தில் நாகராஜன் என்ற பா.ஜ.க.கவுன்சிலர் மூது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் இந்தக் கொடிய செயலைச் செய்திருப்பார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காவல் துறை உடனடியாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கோருகிறது. கடந்த சில மாதங்களாகவே ராமநாதபுரத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது.மாநில அரசு உடனடியாக இதைத்தடுத்த நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

சீனா-பாகிஸ்தான் இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்து?

 
 
lankasri.comஇந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது போல,பாகிஸ்தான்-சீனா இடையேயும் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.இது தொடர்பாக சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் கூறியதாவது:

சிவில் அணுசக்தியை அமைதி வழிக்குப் பயன்படுத்துவதில் பாகிஸ்தானும் சீனாவும் எப்போதும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.அதனால்,இரு நாடுகள் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் தற்போதைய சீன பயணத்தின் போது கையெழுத்தாகும். தொழில்நுட்பம், விவசாயம், தாதுவளங்கள் என பல துறைகளில் இரு நாடுகள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், அது தொடர்பான விதிமுறைகளிலும் இருநாடுகளின் தலைவர்களும் கையெழுத்திடுவர்.

சர்தாரியின் பயணத்திட்டத்தில் முக்கிய அம்சமாக அணுசக்தி ஒப்பந்தம் இடம் பெற்றுள்ளது. அதில் மாற்றம் இல்லை. பாகிஸ்தானில் புதிய அணு உலைகள் அமைக்க சீனாவின் உதவி அவசியம். அதற்காகவே ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இது தொடர் பான எங்களின் விருப்பத் தை சீன அரசிடம் தெரிவித்து விட்டோம். அவர்கள் எங்களை அதிருப்தி அடைய வைக்கமாட்டார்கள். இவ்வாறு மசூத்கான் கூறினார். அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதால், அதேபோன்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தானும் போட வேண்டும் என்ற நிர்பந்தம் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது.

அதனால் தான், சீனாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அணுத்துறை வளர்ச்சியில் சீனாவின் ஆதரவும் அரவணைப்பும் உண்டு. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நெருக்கத்தை சீனாவும் முழுமனதுடன் அங்கீகரிக்கவில்லை. இப்பகுதியில் பாகிஸ்தானுடன் நெருக்கம் கொண்டிருக்க சீனா மிகவும் விரும்புகிறது. அது, அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1224085568&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

புஷ் பொருளாதார அணுகுமுறை தோல்வி:கரக்மென்

 
 
lankasri.com"நலிவடைந்த வங்கிகளுக்கு என்ன தான் நிதியுதவி அளித்தாலும் சர்வதேச அளவில் நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தொடரவே வாய்ப்பு உள்ளது" என,பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்ற பால் கிரக்மென் கூறினார்.

இந்த ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு பெற்றிருப்பவர் பால் கிரக்மென்.இவர் அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.நியுயார்க் டைம்ஸ் இதழில் பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை இன்னும் மோசமான நிலைக்குத் தான் செல்லும் என்பது இவரது வாதம்.இவர் நேற்று செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்.நலிவடைந்த வங்கிகளை தூக்கி நிறுத்த பிரிட்டன் அரசு அறிவித்துள்ள நிதயுதவியால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்த மந்தநிலை நீண்ட நாட்களுக்குத் தொடரும். தொழில்துறை தேக்கம் தொடரும்.முன்,நான் மட்டும் அமெரிக்க அதிபர் புஷ் மேற்கொள்ளும் பொருளாதாரக் கொள்கையை குறைகூறுபவனாகக் கருதப்பட்டேன்.இப்போது அமெரிக்க மக்கள் பலரும்,அவர் பின்பற்றிய கொள்கை தவறு என்று கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.இவ்வாறு பால் கிரக்மென் கூறினார்

 

 

StumbleUpon.com Read more...

கனடா:கன்சர்வேடிவ் வெற்றி

 
 
lankasri.comகனடா நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.எனினும் நாடாளுமன்றத்தில் தேவையான பெரும் பான்மையைவிட குறைவான இடங்களையே அக்கட்சி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 308இடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 142இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கனடா நாட்டு தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

உலகளாவிய அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி பிரச்சனை யில் நடைபெற்ற தேர்தலில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை பலம் இல்லாத போதிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஹார்ப்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP