அன்னைத் தமிழை வளர்த்த வெளிநாட்டவர்
>> Sunday, June 27, 2010
தமிழ் வளர்த்த வெளிநாட்டவர் - டாக்டர் பெ.சந்திர போஸ்
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்த்த அன்னியர்கள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை மிக்க தகவல் தருவதாகவும் நாம் அறியா சிலரைக் கண்டு கொள்ளவும் உதவுகிறது. கிறிஸ்துவை அறிமுகப்படுத்த இந்தியா வந்த ஊழியர்கள் நம் பெருமைமிகு மொழியின் சிறப்பை நமக்கு மட்டுமல்லாது அவர்கள் தேசத்திலும் பரப்பினர் என்பதற்கு இவை ஒரு சான்று. நாமும் இவர்களை தெரிந்து கொள்வோம்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.
தமிழுக்கு மகுடம் சூட்டும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் அவர்களையும், அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டினையும் நினைவு கூர்தல் நாம் அவர்களுக்குக் காட்டும் நன்றியாகும். இங்கு ஆங்கில அகர வரிசைப்படி அவர்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில் விடுபட்டவர்களும் இருக்கலாம்.
1. ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன் (1841–1897): தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான இலக்கணம் குறித்து நூல்களை வெளியிட்டவர். அவருடைய நூல்கள்
A progressive grammar of the Tamil language revised by A.C. Clayton. 5th ed. Madras : Christian Literature Society, 1942; reprinted 1976
Arden, A.H.: A progressive grammar of the Telugu language. [4th ed. Madras] Christian Literature Society [c1937, 1975 printing].
Arden, Albert Henry: A companion reader to Arden's progressive tamil grammar: Madras : Society for promoting Christian knowledge, 1914
2. பெஷ்சி(1680–1747): வீரமா முனிவர் எனத் தமிழ் மக்களால் போற்றப்படும் தமிழ் அறிஞர். ஒரு ஜெசூயிட் பாதிரியாராக இந்தியா வந்தவர் தமிழின் பால் தீராத காதல் கொண்டவராக மாறினார். தன் வாழ் நாள் முழுவதும் தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் காலத்தைக் கழித்தவர். பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதி உள்ளார். கொடுந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, தமிழ்–இலத்தீன் அகராதி, செந்தமிழ் இலக்கணம் (இலத்தீனில் எழுதப்பட்டது), வாமன் சரித்திரம் (பாடநூல்), தொன்னூல் விளக்கம், சதுரகராதி என்னும் சொற்களஞ்சியம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் ஆகிய நூல்கள் தமிழுக்கும் இவருக்கும் சிறப்பு சேர்த்தன. கீழே அவரின் நூல்கள் பிரசுரித்தவர்களின் முகவரியுடன் தரப்படுகின்றன.
Beschi, C.G: A grammar of the high dialect of the Tamil language called centamil, translated from the original latin by Benjamin Guy Babington. Thanjavur : Tanjore Maharaja Serfoji's Sarasvati Mahal Library, 1974.
Beschi, C.G.: The adventures of Gooroo Paramartan: a tale in the Tamul language: accompanied by a translation and vocabulary, together with an analysis of the first story. By Benjamin Babington. London, J.M. Richardson, 1822; Reprint Cleveland : The Clerk's Press, 1916
Beschi, C.G.: Tirukkavalurk kalampakam : mulamum uraiyum, uraiyaciriyar Rampola Maskaranes. Tiruccirappalli : Tamizh Ilakkiyak Kazhakam, 1977.
Beschi, C.G.: Tirukkural, Viramamunivar urai, potuppatippaciriyar Cu. Innaci ; patippaciriyar Es. Cauntarapantiyan., Cen_nai : Cennaip Palkalaik Kazhakam, 1985.
Beschi, C G.: Tiruppatalkal. 1972.
Beschi, C.G.: thEn cottum thEmpavanic colai, 1962.
Beschi, C G.: Virama Munivar aruliya Tempavani, 1st ed., 1965.
Beschi, C G.: Viramamunivar aruliya caturakarati : ayvup patippu , patippaciriyar Cu Innaci.: Palaiyankottai : Viramamu_nivar Ayvuk Ka_lakam, 1979, 1st ed.< br>
Beschi, C G: Viramamunivar iyarriya Citteriyammal ammanai, Kurippurai Iraikkuruvanar ; anitturai Rampola Maskarenacu., Cennai : Tirunelveli Thenninthiya Caiva Ciththanta Nurpatippuk Kazhakam, 1977.
Beschi, C G: Viramamunivar iyarriya Kitteriyammal ammanai. Madras, 1977.
3. ராபர்ட் கால்டுவெல் (1814–1891): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்தவர். இவரின் நூல்கள் பிற்காலத்தில் திராவிட மொழிகள் குறித்து ஆய்வு செய்தவர்களுக்கு ஒரு முதல் நூலாக இருந்தது. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தன் மதப் பணியையும், தமிழ்த் தொண்டையும் மேற்கொண்டவர்.
Caldwell, R,: A comparative grammar of the Dravidian, or, South-Indian family of languages, London : Harrison, 1856.; Reprinted London, K. Paul, Trench, Trubner & co., ltd., 1913.
Caldwell, R: A comparative grammar of the Dravidian or South-Indian family of languages, 3d ed. rev. and edited by J.L. Wyatt and T. Ramakrishna Pillai. Madras, University of Madras, 1961.
4. ஆலன் டேனியலு (1907–1994): இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழ்நாட்டில் கழித்தவர். தொன்மவியல் மற்றும் இசையில் வல்லுநர். வேதம், இந்து தத்துவம் மற்றும் சைவ சித்தாந்தம் கற்றுணர்ந்து ஆய்வு மேற்கொண்டவர். காசியில் ஹிந்து பல்கலையில் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். தமிழ் இலக்கியங்கள் மீது தீராத பற்றுக் கொண்டவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவரின் சிறப்பு பெற்ற நூல்கள்:
Danielou, A.: Shilappadikâram, The Ankle Bracelet, of Ilanko Adikal, Translation from the Tamil with the collaboration of R.S. Desikan New Directions, New York, 1965; Penguin Classics, India, 1993
Danielou, A.: Manimekhalai, The Dancer with the Magic Bowl, Translated from the Tamil with the collaboration of T.V. Gopala Iyer, New directions New York, 1989
Danielou, A.: The Way to the Labyrinth, Memories from east and west, New York: New Directions, 1987
Danielou, A.: Virtue, Success, Pleasure and Liberation, Traditional India's social structures, Rochester, NY: Inner Traditions International, 1993
Danielou, A.: The Myths and Gods of India: Rochester, NY: Inner Traditions International, 1991
Danielou, A.: While the Gods play, : Rochester, NY: Inner Traditions International, 1987
Danielou, A.: Fools of God, Translation of one of the Tales from the Ganges, Hanuman Books, Madras and New York 1988
5.ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711–1791): சத்தியவேத புத்தகம் என பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இந்த அறிஞர். தமிழ் – ஆங்கில அகராதியினைத் தயாரித்து வெளியிட்டார். இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்
Fabricius, J P.: A dictionary, Tamil and English, based on Johann Philip Fabricius's "Malabar-English dictionary". 3d ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Publishing House, 1910,1933.
J. P. Fabricius's Tamil and English dictionary. Based on Johann Philip Fabricius's Malabar-English dictionary. 4th ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Pub. House, 1972.
6. ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர். தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.
7. ஹூப்பர்: ஆழ்வார் பாடல்களை அச்சில் வெளியிட்டவர். நூல் குறித்த தகவல்கள்
Hymns of the Alvars by J. S. M. Hooper ... Calcutta, Association Press; London, New York [etc.] Oxford University Press, 1929.
8. ஜென்சன் ஹெர்மன் (1842–): தமிழ்ப் பழமொழிகளால் ஈர்க்கப்பட்டு, அவை குறித்து நூல்களை வெளியிட்டவர். ஐரோப்பாவில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள நூல்களை உருவாக்கியவர்.
Jensen, H., Rev.: A classified collection of Tamil proverbs , Madras : Methodist Episcopal Publ. House ; London : Trubner, 1897.; Reprinted New Delhi : Asian Educational Services, 1982
Jensen, H: A dictionary of Tamil proverbs, Delhi, India : Mittal Publications, 1988.
Jensen, H: A practical Tamil reading book for European beginners, Madras : Memorial Press, 1882.
9.எம்.ஏ. லேப்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொழி அறிஞர். தமிழ் மொழி சொற்கள் குறித்து பிரெஞ்ச் மொழியில் நூல்களை எழுதியவர். இவரின் குறிப்பிடத்தக்க நூல்
Lap, M.A.: Vocabulaire tamoul francais : contenant les mots tamouls d'un usage plus frequent, avec leurs sens francais les plus usites, New Delhi : Asian Educational Services, 1984.
10. ஜான் லேசரஸ்: தமிழ் இலக்கணம் குறித்தும், பழமொழிகள் குறித்தும் நூல்களை எழுதியவர்.
Lazarus, J.: Tamil grammar : designed for use in colleges and schools , Madras : Printed by Addison, 1878.
Lazarus, John, Rev.: A dictionary of Tamil proverbs : with an introduction and hints in English on their meaning and application , New Delhi : Asian Educational Services, 1991
11. ஜான் முர்டாக் (1819–1904): தமிழில் வெளியான நூல்கள் குறித்து அடவுத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தவர். அதில் ஒவ்வொரு நூல் குறித்தும் சிறிய குறிப்புரையும் தந்துள்ளார். இவரின் நூல் பிற்காலத்தில் தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. மத போதனையில் ஈடுபட்டதுடன், தமிழகத்தில் நிலவிய ஜாதிக் கட்டமைப்பு குறித்தும் இவர் ஆய்வு நடத்தி நூல்களை வெளியிட்டார். மஹாபாரதத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி நூலாகக் கொண்டு வந்தார்.
Murdoch, J.: Classified catalogue of Tamil printed books. With introductory notices., Compiled by John Murdoch., Edited by M. Shanmukham, Reprinted with a number of appendices & supplement. [Madras] Tamil Development and Research Council, Govt. of Tamilnad [1968].
Murdoch, J: Indian missionary manual : hints to young missionaries in India, 4th ed., rev. and enl. London : J. Nisbet, 1895.
Murdoch, J.: Caste : its supposed origin: its history; its effects : the duty of government, Hindus, and Christians with respect to it; and its prospects. 3d ed. London ; Madras : Christian literature society for India, 1896.
Murdoch, J: The Mahabharata : an English abridgment with introduction, notes, and review, New Delhi : Asian Educational Services,1987.
Murdoch, J: The religious history of India : for educated Hindus / compiled from Monier-Willimas, Max Muller, Muir...& other writers by John Murdoch. London ; Madras : Christian Literature Society for India, 1900.
Murdoch, J: Review of caste in India : a compilation of the ideas of leading thinkers, viz. Muir, Max Muller, Sherring, Wilson, Monier Williams, and Cornish; with a new introd. by K. L. Sharma. Jaipur : Rawat Publications, 1977.
12.இராபர்ட் நோபில் (1577–1656): இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஜெஸூயிட் போதகர். இவரை அக தத்துவ போதகர் என அழைப்பார்கள். நானோ பதிகம், ஆத்ம நிருண்யம், அன்ன நிவாரணம் மற்றும் திவ்ய மந்திரிகா என்னும் நூல்களை எழுதி வெளியிட்டவர். கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை ஆகிய சொற்கள் இவரால் பிரபலமடைந்தன.
13. பீட்டர் பெர்சிவல்: தமிழ்ப் பழமொழிகளில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 5,000 பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். அவ்வையாரின் நீதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்–ஆங்கில அகராதி ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார்.
Percival, Peter, Tamil proberbs with their English translation, containing upwards of six thousand proverbs. Madras, Rigginbotham; London, H. S. King, 1877.
Percival, P, Percival's Tamil-English dictionary = Tamil-Ankila akarati, AES reprint. New Delhi : Asian Educational Services, 1993.
14.ஜி.யு.போப் (1820–1908): தமிழக மக்கள் நன்கறிந்த வெளிநாட்டு தமிழ் அறிஞர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என ஒன்றைத் தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்டார்.
Pope, G. U.: A compendious Tamil English dictionary, 7th ed. New Delhi : J. Jetley for Asian Educational Services, 1981.
Pope, G. U.: A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883; 7th ed. Oxford, Clarendon press, 1911, 1926 printing.
Pope, G. U.: A handbook of the Tamil language / G. U. Pope. 7th ed. New Delhi : Asian Educational Services, 1979, 1981
Pope, G. U.: A handbook of the Tamil language : a Tamil prose reader. New Delhi : Marwah, 1982.
Pope, G. U. : A handbook of the Tamil languages : a compendius Tamil-English dictionary, 7th ed. New Delhi : Asian Educational Services, 1981.
Pope, G. U.: A Tamil prose reader : a handbook of the Tamil language, New Delhi : Marwah Publications, 1982.
Pope, G. U.: Tamil heroic poems, translations, 1st ed. Madras : South India Saiva Siddhanta Works Pub. Society, Tinnevelly, 1973.
Pope, G. U.: Tiru-valluvar -The 'Sacred' Kurral of Tiruvalluva-Nayanar / With introduction, grammar, translation, notes (in which are reprinted C.J. Beschi's and F.W. Ellis' versions) lexicon and concordance by the Rev. G.U. Pope. London : W. H. Allen & co., 1886.
Pope, G.U.: The Tiruvacagam, or, Sacred utterances of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar : the Tamil text of the fifty-one poems, with English translation, introductions, and notes : to which is prefixed a summary... Oxford : Clarendon Press, 1900.
Pope, G.U.: The Naladiyar, or, Four hundred quatrains in Tamil / with introduction, translation, and notes, critical, philological, and explanatory, to which is added a concordance and lexicon [by] Rev. G.U. Pope. New Delhi : Asian Educational Services, 1984.
Pope, G.U.: Manikkavacakar aruliya Tiruvacakam. 1970. Series title: Madras University Tamil Department publication series ; 27.
A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett, and the late G. U. Pope, D.D. Printed by order of the Trustees of the British museum. London, British museum [etc.] 1909.
Pope, G. U. : A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883.; Reprint 7th ed. Oxford, Clarendon Press, 1906, 1911, 1926
Pope, G. U: Longman's school history of India, by the Rev. G.U. Pope ... London, New York, Longmans, Green, and co., 1892.
Pope, G. U. : Pope's third Tamil grammar ... 2nd ed. Madras : P.R. Hunt, 1858-1859.
Pope, G. U.: A Tamil hand-book : or, full introduction to the common dialect of that language, on the plan of Ollendorf and Arnold : for the use of foreigners learning Tamil, and of Tamulians learning English : with... 2nd ed Madras : P.R. Hunt, 1859.
15.ரேணியஸ் சி.ட்டி.இ.(1790–1838): தமிழ் இலக்கணம் பால் ஆர்வம் கொண்டு, கற்றறிந்து நூல்களை வெளியிட்டார்.
Rhenius, C T E. Rev.: A grammar of the Tamil language, with an appendix., 3d ed. Madras, Printed for the proprietor, by P.R. Hunt, American mission press, 1853.
16. ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரஸ் (1879– ): தமிழ் மதங்கள் குறிப்பாக சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு நூல்களை எழுதியவர்.
Schomerus, H W.: Der Caiva-Siddhanta / H. W. Schomerus. New York : Garland Pub., 1980.; Series title: Oriental religions 9.
Schomerus, H W.: Arunantis Sivajnasiddhiyar : die Erlangung des Wissens um Siva oder um die Erlosung / unter Beifugung einer Einleitung und Meykantadevas Sivajnanabodha aus dem Tamil ubersetzt und kommentiert, Wiesbaden :Steiner, 1981.
Schomerus, H.W.: Indische erlosungslehren; ihre bedeutung fur das verstandnis des christentums und fur die missionspredigt, von lic. theol. , Leipzig, J.C. Hinrichs'sche buchhandlung, 1919.; Series title: Sachsische forschungs-institute in Leipzig.
Schomerus, H W.: Sivaitische Heiligenlegenden : (Periyapurana und Tiruvatavurar-purana) , aus dem Tamil ubersetzt,Jena : E. Diederichs, 1925.; Series title: His Texte zur Gottesmystik des Hinduismus ; Bd. 2.
17. ஜூலியன் வின்சன் (1843–1926): தமிழ் இலக்கணத்தினை பிரெஞ்ச் மொழியில் எழுதியவர். சீவகசிந்தாமணி மற்றும் திருக்குறளின் ஒரு பகுதியை மொழி பெயர்த்து வெளியிட்டவர்.
Vinson, Julien: Manuel de la langue tamoule (grammaire, textes, vocabulaire): Paris Imprimerie nationale, E. Leroux, editeur, 1903; Reprinted New Delhi : Asian Educational Services, 1986.
Vinson, Julien : Le verbe dans les langues dravidiennes : tamoul, canara, telinga, malayala, tulu, etc., Paris : Maisonneuve et cie, 1878.
Vinson, Julien: Les religions actuelles, leurs doctrines, leur evolution, leur histoire,: Paris, A. Delahaye et E. Lecrosnier, 1888.
18. விண்ஸ்லோ, மிரன் (1789–1864): இவரின் தமிழ் – ஆங்கிலம் அகராதி இன்றும் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது. முதன் முதலில் 67,000 சொற்களுடன் வெளியானது இந்த அகராதி. 1862 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
Winslow, Miron, Rev. (assisted by competent native scholars: in part from manuscript materials of the late Rev. Joseph Knight, and others.) :A comprehensive Tamil and English dictionary of high and low Tamil, Madras : P.R. Hunt, American Mission Press, 1862.
Winslow, Miron,: Tamil-English dictionary, Reprint of 1862 edition/ ed. by Klaus Ludwig Janert. Wiesbaden : Steiner, 1977.
Winslow's English and Tamil dictionary = [Vinculovin Ankila-Tamil akarati by Rev. Winslow, L. Spaulding, revised, enlarged & romanized by C. Appaswamy Pillai, 3rd ed. New Delhi : Asian Educational Services, 1989.
Winslow, Miron,: A sketch of missions, or, History of the principal attempts to propagate Christianity among the heathen / by Miron Winslow. Andover, Mass. : Flagg and Gould, 1819
19. பார்த்தலோமியோ சீகன் பால் (1683–1719): ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மத போதகர். 40,000 சொற்களுடன் மலபார் அகராதி என்ற ஒன்றை வெளியிட்டார். 17,000 சொற்களுடன் கவிதைச் சொற்கள் அடங்கிய நூல் ஒன்றையும் கொண்டு வந்தார்.
Ziegenbalg, B: Genealogy of the South-Indian gods : a manual of the mythology and religion of the people of southern India, including a description of popular Hinduism, published in Madras : Higginbotham, 1869; Reprinted with notes and additions..,New Delhi : Unity Book Service, 1984.
Ziegenbalg, B: Grammatica damulica von Bartholomaeus Ziegenbalg, herausgegeben von Burchard Brentjes und Karl Gallus. Halle : Martin-Luther-Universitat Halle-Wittenberg, c1985.
Ziegenbalg, Bartholomaeus: Alte Briefe aus Indien : unveroffentlichte Briefe; hrsg. von Arno Lehmann. Berlin : Evangelische Verlagsanstalt, [1957].
source:www.tamilchristians.com
--
http://thamilislam.tk Read more...