சமீபத்திய பதிவுகள்

பயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்?

>> Sunday, October 4, 2009

 
 தன் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு தரும் வகையில் பயர்வால் தொகுப்பு ஒன்றை இணையத்தில் இருந்து பெற்று இன்ஸ்டால் செய்ததாகவும், அதன் பின் கம்ப்யூட்டர் இயங்குவது பல வழிகளில் தடை படுகிறது; குறிப்பாக இணையத்தில் பிரவுஸ் செய்வதில் பல தடைகளை இந்த பயர்வால் ஏற்படுத்துகிறது என்று ஒரு வாசகர் கிருஷ்ணன் கோவில் என்ற ஊரிலிருந்து எழுதிக் கேட்டுள்ளார். இது போன்று பல வாசகர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் நாம் விரும்பும் நேரத்தில் மட்டும் இந்த பயர்வால் தொகுப்பினை இயக்கவும் நிறுத்தவும் முடியுமா என்பதுதான். அது எப்படி என்று பார்க்கலாமா? பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு சிறப்பான புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன. கூடுதலாக வசதிகள் உள்ள பயர்வால் புரோகிராம்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
1. Start மெனு சென்று Control Panelசெல்லவும். 
2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீதுகிளிக் செய்திடவும். நீங்கள் Local Area Connection  பயன்படுத்தாமல் விர்ச்சுவல் பிரைவேட் நெட் வொர்க் வி.பி.என். அல்லது டயல் அப் இன்டர்நெட் பயன்படுத்தினால் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties  டேப் தேர்ந்தெடுத்து பின்Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.4. இனி பயர்வால் தேவை என்றால் "Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet' என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். 
5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended)என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.பயர்பாக்ஸ் - சில ஆட் ஆன் தொகுப்புகள்
பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்–ஆன் புரோகிராம்களை இங்கு தருகிறோம்.
1. Foxy Tunes: உங்களுடைய பிரவுசர் விண்டோவிலேயே ஒரு மீடியா பிளேயர் வேண்டுமானால், இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பதிந்து கொள்ளவும். அதாவது இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாடலுக்கான லிங்க் தரப்படுகிறது. அல்லது பாடல் அதிலேயே கிடைக்கிறது. இதற்கென இன்னொரு விண்டோவில் ஆடியோ பிளேயரை இயக்கிப் பார்க்க வேண்டியதில்லை. பிரவுசரிலேயே மீடியா பிளேயரை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/addon/219  2. Image Zoom: இணைய தளத்தில் உள்ள இமேஜ்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், இந்த புரோகிராம் உங்களுக்கு மிக முக்கியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும், பின் வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்து சிறியதாக்கிப் பார்க்கவும் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/1393.Visual Bookmarks: நீங்கள் அமைத்திட்ட புக்மார்க்குகள், அளித்த பெயருடன் உங்களுக்குப் பட்டியல் இடப்படுகிறது. புக்மார்க்குகள் அதிகமாக, அதிகமாக இவை எதனைக் குறிக்கின்றன என்பதே மறந்து போகும். இதற்கு ஓரளவிற்கு உதவும் வகையில் இந்த ஆட் ஆன் செயல்படுகிறது. ஓரளவிற்கு என்ன, முழுமையான உதவியை அளிக்கிறது. வெப்சைட்டுகளில் நீங்கள் அடையாளம் கொள்ளக்கூடிய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், அந்த பகுதி புக் மார்க் பட்டியலாகக் காட்டப்படும். இந்தப் பட்டியல் தனியே இருக்கும். இதனைப் பெற நீங்கள் அணுக வேண்டிய முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/addon/5396

4. FoxSaver: உங்களுடைய பயர்பாக்ஸ் பிரவுசரின் தோற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதா? அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா? அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா? கவலையே பட வேண்டாம். உங்கள் விருப்பத்தை இந்த பாக்ஸ் சேவர் ஆட் ஆன் புரோகிராம் நிறைவேற்றி வைக்கிறது.https://addons.mozilla.org/enUS/firefox/addon/5276 என்ற முகவரியில் உள்ள இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசரின் தோற்றம் மட்டுமல்ல, இணையத்தில் உங்களுக்கு விருப்பமான இமேஜஸ், ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ், ஏன் உங்களுடைய போட்டோ ஆகியவற்றை ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது.5. Clipmarks: கிளிப் மார்க்ஸ் ஏறத்தாழ காப்பி செய்திடும் வேலையை மேற்கொள்கிறது. ஆனால் ஒரு கத்தரிக்கோல் கொண்டு இந்த வேலையைச் செய்கிறது. இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் நீங்கள் தனித்துப் பார்க்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பின் அதனை வேறு ஒரு இடத்தில் காப்பி செய்திடலாம். சேவ் செய்து வைக்கலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். உங்கள் பிளாக்குகளில் பதியலாம். இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/1407 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். 
6.Videodownloader:  இந்த பெயர் என்ன கூறுகிறதோ அதையே சிறப்பாக மேற்கொள்கிறது இதில் உள்ள ஆட் ஆன் தொகுப்பு. ஆம், நீங்கள் வீடியோ கிளிப்கள் உள்ள தளங்களுக்குச் செல்கையில் உங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தியே அது. யு–ட்யூப், கூகுள் வீடியோஸ், மெட்கேப் போன்ற தளங்களுக்குச் செல்கையில் இதில் இருந்தெல்லாம் வீடியோ டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தி கிடைக்கும். அதற்கான மெனுவினைக் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின் இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பார்க்கலாம் இதனை http://www.download.com/VideoDownloader/ 300011745_410546007. html?tag=bestff3_hed என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
7. Gspace:  இணைய வெளியில் உங்களுக்கென்று ஓர் இடத்தை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களுடைய பேஜ் பார்க்கையில் கீழாக இவ்வளவு இடம் உங்களுக்கு உள்ளது; அதில் இவ்வளவுதான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற செய்தி கிடைக்கும். இந்த இடமானது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் தளத்தைப் பயன்படுத்துகையில் உயர்ந்து கொண்டே போகும். அப்படியானால் கூகுள் உங்களுக்குக் கூடுதலான இடத்தையே கொடுக்கிறது. அந்த கூடுதல் இடத்தை என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கான பயன்பாட்டினை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த ஜிஸ்பேஸில், இடத்தில், நீங்கள் உங்கள் பைல்களைச் சேவ் செய்து வைக்கலாம். அவ்வாறு சேவ் செய்து வைத்த இடத்தில் உள்ள பைல்களை இன்டர்நெட் இணைப்பு உள்ள எந்த இடத்தில் இருந்தும் பெற்று பயன்படுத்தலாம். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் அனுமதி கொடுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம். இதனை https://addons. mozilla.org/enUS/firefox/addon/1593 என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 8. Downthemall: ஏற்கனவே இந்த ஆட் ஆன் தொகுப்பு பற்றி இந்த மலரில் தகவல்கள் தரப்பட்டன. இந்த வேளையில் இதனை மீண்டும் நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் உள்ள படம், வீடியோ மட்டுமின்றி அனைத்தையும், டெக்ஸ்ட் மற்றும் லிங்க் உட்பட அனைத்தையும், மொத்தமாக டவுண்லோட் செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு உதவுகிறது. இதனைhttps://addons.mozilla. org/enUS/firefox/addon/201  என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.ஐஸ்வர்யா - யுவராஜ் சிங் / தேவையா உங்களுக்கு?
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைத் தயாரித்து வழங்குவதில் பிரபலமாக இயங்கும் மேக் அபி நிறுவனம், அண்மையில் இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கையை வழங்கியுள்ளது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், உலக மற்றும் பாலிவுட் அழகி ஐஸ்வர்யா பச்சன் ஆகியோர் குறித்து இணையதளத்தில் தேடுபவர்களில் பலர் மோசமான இணைய தளத்தினை லிங்க்காகப் பெறுகிறார்கள். இவர்களைப் பற்றிய தகவல்கள் உள்ளதாகக் காட்டப்படும் தளங்களில் ஐந்தில் ஒன்று வைரஸ், ஸ்பைவேர், ஆட்வேர், ஸ்பேம், பிஷ்ஷிங், மால்வேர் என இணையத்தில் உள்ள் அனைத்து கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கும் தளங்களாக உள்ளன என்று கூறியுள்ளது. ஏற்கனவே இந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான தேடல் நடிகையாக கத்ரினா கைப் இடம் பெற்றிருந்தார். இப்போது யுவராஜ் சிங் மற்றும் ஐஸ்வர்யா வந்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தோனி, நம் ஊர் நமீதா, ஸ்ரேயா சரண், ஹர்பஜன் சிங், சானியா மிர்ஸா, அசின், பிபாஷா பாசு, ஷாஹித் கபூர் இடம் பெறுகின்றனர். இது பற்றி மேக் அபி இந்தியப் பிரிவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இண்டர்நெட்டில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பரப்புபவர்கள் இது போன்ற பிரபலமானவர்களின் பெயரில் ஏதேனும் ஒரு தகவல் தரும் போர்வையில் செயல்படுகின்றனர். எனவே இது போன்ற தூண்டுதல்களுக்கு நாம் ஆளாகக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.வெப் ஆபீஸ் வேலை தொடங்கியது
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் கூகுள் டாக்ஸ் வசதிக்குப் போட்டியாகவும், கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவிலும் தன் தடம் பதிக்கவும் ஆபீஸ் வெப் அப்ளிகேஷன் என, இணையத்தில் எம்.எஸ். ஆபீஸ் பணிகளை மேற்கொள்ள வெப் ஆபீஸ் தொகுப்பினை வழங்க திட்டமிட்டு வேலைகளை மேற்கொண்டுள்ளது. இதன் முதல் முயற்சியாக, செப்டம்பர் பிற்பகுதியில், சிலருக்கு மட்டும் தொழில் நுட்ப ரீதியில் இதனைச் சோதனை செய்திட அனுமதி வழங்கியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் அல்லது சபாரி பிரவுசர் வழியாக இந்த இணைய ஆபீஸ் தொகுப்பினை இயக்கலாம். இது ஏறத்தாழ ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே இயங்குவதாக, இதனை இயக்கிப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கமாக நாம் இயக்கும் ஆபீஸ் தொகுப்பு போலவே எடிட்டிங் மற்றும் பார்மட்டிங் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள முடிகிறது. வேர்ட் தொகுப்பில் மட்டும் எடிட்டிங் வசதிகள் இன்னும் அளிக்கப் படவில்லை. எக்ஸெல், பவர்பாய்ண்ட் ஆகியவற்றில் முழுமையான வசதிகள் தரப்பட்டுள்ளன. மற்ற வசதிகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பொதுமக்களுக்கான சோதனைத் தொகுப்பிற்கான அனுமதியினை விரைவில் மைக்ரோசாப்ட் வழங்கும். இவர்களி டமிருந்து வெப் ஆபீஸ் இயக்கம் குறித்த கருத்துக்களைக் கேட்ட பின், அனைவருக்குமான வெப் ஆபீஸ் தொகுப்பு தரப்படும்.கூகுள் தரும் சைட்விக்கி
தொடர்ந்து ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் சைட்விக்கி என்ற புதிய சிறப்பான செயல்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இணைய தளம் ஒன்றைப் பார்க்கையில் இது சைட் பார் ஒன்றைத் திறக்கும். இதில் தாங்கள் பார்க்கும் இணைய தளம் குறித்த தங்கள் கருத்துகளைப் பார்ப்பவர்கள் குறித்து வைக்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் எழுதி வைத்ததைப் படிக்கலாம். 
இவ்வாறு எழுதப்படும் குறிப்புகளின் தன்மையின் அடிப்படையில் இந்த சாதனம் அவற்றை வரிசைப்படுத்தி வைக்கிறது. முழு இணைய தளம் அல்லது ஒரு பகுதி மட்டும் குறித்தும் கருத்துகளை இதில் பதியலாம். ஏற்கனவே ஒருவர் ஓர் தளம் குறித்து குறிப்பு எழுதி, பின் மீண்டும் எழுதுவதனையும் இது புரிந்து கொள்கிறது. இதற்கான தொழில் நுட்பம் இந்த சைட்விக்கியில் தரப்பட்டுள்ளது என இந்த தொழில் நுட்பத்தினை வடிவமைத்த கூகுள் து�ணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறினார். மற்றவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் பயனுள்ளவையா, இல்லையா என்று பிறர் கருத்துகளையும் இதில் பதியலாம். ஜஸ்ட் ரிலாக்ஸ்
CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
2. விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் "Bush hid the facts"  என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் காரணத்தைச் சொல்லுங்கள்.
3. மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9)  என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது அங்கே? என்று பார்க்கவும்.


source:dinamalar

 

StumbleUpon.com Read more...

பாக்., முதல் தேசிய கீதத்தை எழுதியவர் இந்து; புது சர்ச்சை

Top global news updateஇஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் முதல் தேசியகீதத்தை இயற்றியவர் ஒரு இந்து என்று, பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து, புது சர்ச்சை எழுந்துள்ளது.இந்தியாவில் இருந்து பிரிந்தது பாகிஸ்தான்; 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைய, மூன்று நாட்களுக்கு முன் நாட்டின் தலைவர் முகமது அலி ஜின்னா, லாகூரைச் சேர்ந்த உருது கவிஞர் திலக்சந்த் மக்ரூம் என்பவரது மகன் ஜகன்னாத் ஆசாத்தை பாக்., தேசிய கீதத்தை எழுதும்படி கூறினார்.அதன்படி, ஆசாத் உருது மொழியில் தேசிய கீதத்தை இயற்றினார். "அயி சர்சாமேனே பாக் சர்ரே...' என்ற அந்த பாடல் ஆறு மாதங்கள் நடைமுறையில் இருந்தது.ஜின்னா, 1947 செப்டம்பரில் மறைந்து விட்டார். ஜின்னாவுக்கு பின்னர் பதவியேற்ற அரசு அப்பாடலை நீக்கிவிட்டது. பின், தேர்வுக்குழுவின்பரிந்துரையின் படி புதியதாக எழுதப்பட்ட 723 பாடல்களில், ஹபீஸ் ஜலந்ரி என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய பாடல் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.சமீபத்தில் "டான்' என்ற பிரபல பாக்.,பத்திரிக்கை, பீனா சர்வார் என்ற கவிஞர் கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர், மதச்சார்பின்மையை கடைபிடிப்பவரான ஜின்னா,பாக்., தேசிய கீதத்தை ஒரு இந்துவை எழுதச் சொல்லி இருக்கிறார்."ஒரு இந்து, இந்து மதப்பாடல்களை தான் பாடவேண்டும்; முஸ்லிம் தன் மதப் பாடல்களை தான் பாடவேண்டும் என்பதில்லை.இந்தியாவில், இக்பால் என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய சாரே ஜகான் சி அச்சா என்ற பாடலை குழந்தைகள் அனைவரும் உச்சரித்து இன்றளவும் பாடி வருகின்றனர். அப்படியிருக்கையில், பாக்.,கில் இந்து எழுதிய தேசிய கீதத்தை ஏன் பின்பற்றக் கூடாது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகள் இலங்கைக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தினர்

 

புலிகளின் தமிழீழ வான்படையின் வீரர் ஒருவர் அரசின் ஆளில்லா வேவுவிமானம் ஒன்றை குறிதவறாமல் சுட்டுவீழ்த்தினார் என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டில், அதாவது ஈழப் போர் நான்காம் கட்டம் தொடங்குவதற்கு முன்னர், அரசுக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் ஒன்றை தமிழீழ வான்படைவீரர் ஒருவர் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியமையை அங்கீகாரமுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த அதிகாரி தமது பெயரை வெளியிட விரும்பவைல்லை. புலிகளின் வான்படைவிமானத்தில் இருந்தவாறே அந்த புலிவீரர் குறிதவறாமல் சுட்டு வீழ்த்தியுள்ளார். புலிகளின் வெற்றியை வெளியில் அறிவிக்க விரும்பாத அரசு இச்செய்தியை மிக ரகசியமாகப் பேணிவந்தது எனக் கூறப்படுகிறது.

ஏ-9 சாலையின் கிழக்கேயுள்ள ஓடுபாதைகளில் இயங்கிவந்த புலிகளின் விமானம், இஸ்ரேல் தயாரிப்பான Searcher Mark II ஐக் கொண்டிருந்ததோடு இது தொடர்ச்சியான கண்காணிப்பினையும் மேற்கொண்டு வந்துள்ளது. ஆனால் இவ்வாறு கண்காணிக்கப்பட்டு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட வேவு விமானமானது, தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே காணாமல் போய்விட்டதாக இலங்கை வான்படையினர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெதுவாக செல்லும் ஆளில்லா வேவுவிமானத்தைக் குறிவைக்கலாம் எனினும், இது மிகவும் இலகுவான ஒரு காரியம் அல்ல என அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த விமானம் சுடப்பட்ட வேளையில், இலங்கை வான்படையினர் புலிகள் கட்டமைத்து வந்த விமானத் தளங்களைக் கண்காணித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது வன்னியில் மீட்கப்பட்ட சில ஆவணங்களில் மேற்படி தாக்குதல் குறித்து புலிகள் விவரமாக எழுதி வைத்துள்ளனர் என ராணுவத் தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு முன்னர் பல ஒத்திகைகளைப் புலிகள் நடத்தியுள்ளனர். குறிதவறாமல் சுடும் வீரர் அந்த வேவு விமானத்தைச் சுடும்வரை புலிகளின் விமானம் அதைப் பின்தொடர்ந்து சென்றுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள், அதன் இயந்திரம், சிறகுகள், கமரா, சக்கரங்கள், குண்டுகள் உட்பட பல, புதுக்குடியிருப்பின் கப்புகுளம் பகுதியிலிர்ந்து கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டதாகவும் இலங்கை வான்படை கூறியுள்ளது. 

போர் நிறுத்த காலத்தில் அரசாங்கம் வேவு விமானங்களையோ, வேவு கப்பல்களையோ பயன்படுத்தக் கூடாது என புலிகள் வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு அவர்கள் பயனபடுத்தின் அது போர்நிறுத்த் மீறல் எனக் கருதப்படும் என்பதால், இந்த வேவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து இலங்கை அரசு ஸ்கண்டினேவியன் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கும் கொண்டு செல்லவில்லை.


source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP