சமீபத்திய பதிவுகள்

சூரியனுக்கு விண்கலம், அமெரிக்கா அனுப்புகிறது

>> Monday, May 5, 2008


2015-ம் ஆண்டில்
சூரியனுக்கு விண்கலம், அமெரிக்கா அனுப்புகிறது


வாஷிங்டன், மே.6-

சூரியனை பற்றி ஆராய்வதற்காக விண்கலம் ஒன்றை 2015-ம் ஆண்டில் அனுப்பப்படும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்து உள்ளது.

நாசா முடிவு

அமெரிக்காவும், ரஷியாவும் இதுவரை செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களுக்கும், சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளன. சூரியனுக்கு விண்கலங்களை எந்த நாடும் அனுப்பியது கிடையாது. சூரியன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதும், அதன் வெப்பநிலையும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து நினைத்துப்பார்த்தது கிடையாது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து இருக்கிறது. சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சி செய்வது சூரியனை பற்றி நாம் அறிந்ததை விட அதிகமான தகவல்கள் கிடைக்கும் எனறும், இந்த கண்டுபிடிப்பு பெரும்புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.

ரூ.3 ஆயிரம் கோடி செலவில்

2600 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக்கூடிய அளவு வெப்பத்தடுப்பு தகடுகள் மூலம் பாதுகாக்கப்பட்ட விண்கலம்,சூரியனுக்கு மிக அருகில் செல்லக்கூடும். அப்போது அது வினாடிக்கு 125 மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வரும்,

சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கான திட்ட மேலாளராக ஆன்ட்ரூ டான்ட்ஸ்லர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த திட்டத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கான விண்கலத்தை வடிவமைத்து உருவாக்கும் வேலைகளை ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைடு பிசிக்கல் லேபரட்டரி செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் விண்கல வடிவமைப்பு வேலைகள் முடிவு அடைந்து விட்டன. சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விண்கலத்தின் எடை 453 கிலோ ஆகும்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=410994&disdate=5/6/2008

StumbleUpon.com Read more...

தங்கம் மோசடி -இன்று(செவ்வாய்கிழமை) விசாரணை நடக்கிறது

தங்க மோசடி நிறுவனத்தில் மீண்டும் போலீஸ் அதிரடி சோதனை
87 கிலோ தங்கம் உள்பட ரூ.50 கோடி பொருட்கள் பறிமுதல்
கமிஷனர் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை


சென்னை, மே.6-

சென்னையில் தங்க மோசடி நிறுவனத்தில் மீண்டும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 87 கிலோ தங்கம் உள்பட ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தங்க மோசடி

சென்னை சேத்துபட்டு மெக்னிக்கல் ரோட்டில் ``கொஸ்ட் நெஸ்ட் இன்டர்நேஷனல்'' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இதன் கிளைகள் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் தங்க மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, சேத்துபட்டில் இயங்கும் கிளை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 71 கிலோ தங்ககாசுகள் உள்பட 21 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மற்றும் ஆயிரக்கணக்கான கைக்கடிகாரங்கள், தாஸ்தாவேஜ×கள் கைப்பற்றப்பட்டன.

ஊழியர்கள் கைது

அலுவலக மேலாளர் புஷ்பம் மற்றும் ஊழியர்கள் வித்யா, அரிபிரபாகரன், சந்திரசேகரன், அகஸ்டின், தண்டபாணி, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது பிற ஆசிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்சில் இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. நேபாளத்தில் இவர்களுடைய வணிக செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கே அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கேயும் அதன் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தோனேஷியாவில் இந்த நிறுவனத்தின் 2 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆகவே, உலக அளவில் இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாஸ்போர்ட் முடக்கம்

இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட விஜய ஈஸ்வரன் ஆந்திராவை சேர்ந்தவர். அவருக்கு `தத்தோ' என்ற பட்ட பெயர் உண்டு. இவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து சென்னைக்கு கொண்டு வருவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ரூ.50 கோடி

இதற்கிடையே சென்னை சேத்துபட்டில் உள்ள அலுவலகத்தை போலீசார் மீண்டும் சோதனை செய்தனர். அப்போது அங்கே ரகசிய அறையில் ஒரு மூட்டையில், 16 கிலோ தங்க நாணயங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுவரை 87 கிலோ தங்க நாணயங்கள், 898 கிலோ வெள்ளி நாணயங்கள், 8,362 கைக்கடிகாரங்கள், 250 செல்போன்கள், 2 கார்கள், 12 லேப்டாப், பயோ டிஸ்க் மருந்து பொருட்கள் உள்பட ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கோர்ட்டு மூலம் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் கோர்ட்டு மூலம் இந்த பொருட்கள் விற்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணமாக திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பொது மக்கள் முற்றுகை

இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்ததாக புகார் கூறி நேற்று காலையில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 100 பேர் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடைய மனுக்கள் முறைப்படி வாங்கப்பட்டது. முற்றுகையிட்ட ஆண்களும், பெண்களும் சரமாரியாக புகார் கூறினார்கள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட தங்ககாசுகள் 24 காரட்டில் செய்யப்படவில்லை என்றும் 18 காரட்டில் செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர்.

புகார் தெரிவித்த பல பெண்கள் கதறி அழுதார்கள். நகைகளை விற்று பணம் கொடுத்ததாகவும், வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் கூறும்போது, `தனது தொழிலை விட்டு, விட்டு தங்ககாசு திட்டத்தில் சேர்ந்து கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற பேராசையுடன் செயல்பட்டு, தற்போது எந்த தொழிலும் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதாக' மனம் நொந்து போய் பேசினார்.

கமிஷனர் ஆலோசனை

நேற்று இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணைகமிஷனர் ரவி, துணை கமிஷனர் சம்பத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இ.பி.கோ. 420 (நம்பிக்கை மோசடி), 120-பி (சதித்திட்டம்), 506-2 (கொலை மிரட்டல்) மற்றும் தமிழ்நாடு பரிசு பொருள், சீட்டு தடை சட்ட பிரிவு 5 மற்றும் 6 உள்பட மொத்தம் 8 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஜாமீனில் விடுதலை

தங்ககாசு மோசடி தொடர்பான வழக்கில் 7 பேர் கைதானதை கண்டித்து ஏராளமான பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 33 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடக்கோரி சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நேற்று இந்த மனு மீது விசாரணை நடத்தி கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 33 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், 33 பேரும் தினமும் மாலையில் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விட கோர்ட்டு ஆணையிட்டது.

தங்க மோசடி வழக்கில் கைதான 7 பேரையும் ஜாமீனில் விடக்கோரி சென்னை எழும்பூர் 5-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று(செவ்வாய்கிழமை) விசாரணை நடக்கிறது


http://www.dailythanthi.com/article.asp?NewsID=410946&disdate=5/6/2008&advt=1

StumbleUpon.com Read more...

அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?

அல்லா எங்கேயிருந்து வந்தார் தெரியுமா?

இஸ்லாம் சகோதரர்கள் வணங்கும் உருவமில்லா அல்லா எங்கேயிருந்து உருவானார் என்பது சற்று ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கலாம், நமக்கல்ல இதை வாசிக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்கு.

அல்லா என்பவர் முகமது நபியால் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரோ அல்லது யூத, கிறிஸ்த்வர்களின் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சர்வவல்லமையுள்ள தேவனோ கிடையாது. மேலும் பலர் சொல்லுவது போல அவர் முகமதுவின் கற்பனையில் உருவான கருவும் கிடையாது. அவர் யார் என்பதை அறிய நாம் காலச்சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழல விட்டு சற்று கூர்மையாக 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய அல்லது சமகால வரலாற்றை உற்று நோக்கினால் அது போதும்.

பண்டைய வரலாறு என்ன சொல்லுகிறது?
1.முகமது பிறப்பதகு முன்பே அல்-இல்லா என்ற பெயரில் சந்திரக் கடவுள் அரேபியர்களிடையே இருந்தது.இன்னும் சொல்லப் போனால் கி.மு 2000க்கும் முன்பே இருந்தே இந்த சந்திரக்கடவுள் அரபியப் பிரதேசங்களில் பிரபலம்.இந்த அல்-இல்லாவுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன: அல்-லட்,அல்-உஸ்ஸா மற்றும் மனட் ஆகியோராவர். இந்த மூவரின் பெயரிலும் மெக்காவில் தனித்தனியே வழிபாட்டுத்தலங்கள் உண்டு.

2. தான் நினைத்தபடி மதத்தின் பெயரால் சாதிக்க நினைத்த முகமதுவுக்கு முதலில் தோல்வியே கிடைத்தது. ஆகவே அவர் இந்த மூன்று பெண்கடவுளரை தனது மார்க்கத்தில் வணங்கவேண்டுமென்று கட்டளையிட்டார். பின்பு அவர் தனது பாணியில் வசனத்தை இறக்கி அதை வேண்டாம் என்று தள்ளிவிட்டது தனிக்கதை.

3.முன்பு சொல்லப்பட்டுள்ள வேதங்களில் உள்ள தவறுகளை நீக்குவதற்காக வெளிப்படுத்த வார்த்தைகள் என்ற பேரில் புதிதாக வேதங்களை இறக்கிய முகமதுவின் வார்த்தைகள் கிறிஸ்தவ கள்ள உபதேசங்களைக் கூறின பலரின் கூற்றுக்கும் ஒத்திருக்கிறது. ஆகவே முகமதுவின் உப்தேசம் பாதிக் களவாடினதும் மீதி வசதிக்காக சேர்க்கப்பட்டதுமாக இருக்கிறது.ஆகவே அதில் இறைத்தூண்டுதல் என்ற ஒன்று இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது. இன்னும் சொல்லவேண்டுமானால் முகமதுவே தான் பலவார்த்தைகளை சாத்தானிடமிருந்து பெற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார். அதைத்தான் சாத்தானின் வேதம் என்று சலமான் ருஷ்டி என்பவர் எடுத்துக் கூறி முஸ்லீம்களின் கோபத்துக்கு ஆளானார். சாத்தானின் ஏவுதலால் நான் கூறீன வார்த்தைகள் என்று முகமது சொன்னவை குரானிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன அல்லது திரிக்கப்பட்டுவிட்டன.

இதை வாசிக்கும் நமக்கு


அல்லா அல்லா நீ இல்லா அல்லா
சும்மா சும்மா எல்லாம் கதைமா
உண்மை உண்மை குரானின் பொய்மை
அது சொல்லுவதெல்லாம் கயமை -நான்
சொல்லுவதை கேட்டால் நன்மை


என்று பாடத்தான் தோன்றுகிறது.


The term Allāh is most likely derived from a contraction of the Arabic article al- and ʾilāh "deity, god" to al-lāh meaning "the [sole] deity, God" (ho theos monos)........In pre-Islamic Arabia, Allah was used by Meccans as a reference to the creator-god, possibly the supreme deity. Allah was not the sole divinity and the notion of the term may have been vague in the Meccan religion. Allah had associates and companions, whom pre-Islamic Arabs considered as subordinate deities. Meccans held that a kind of kinship existed between Allah and the jinn. Allah had sons and the local deities of al-ʿUzzā, Manāt and al-Lāt were his daughters. The Meccans possibly associated angels with Allah. Allah was invoked in times of distress. Muhammad's father name was ʿAbdallāh meaning the "servant of Allāh."......

source: http://en.wikipedia.org/wiki/Allah
see also: http://en.wikipedia.org/wiki/Ilah


சாத்தானின் வசனங்கள்

http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/SatanicVerses.htmlhttp://www.tamilchristians.com/

StumbleUpon.com Read more...

ஹிலாரிக்கு நடிகை திடீர் ஆதரவு

ஹிலாரிக்கு நடிகை திடீர் ஆதரவு

.

.
லாஸ் ஏஞ்சலஸ், மே 3: அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
.
நியூயார்க் மாகாண செனட் உறுப்பினரான ஹிலாரி அறிவாற்றல் மிக்கவர் என்றும் வலிமையான தலைவர் என்றும் எலிசபெத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எலிசபெத் 2300 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்டியானா மற்றும் வடக்கு கரோலினாவில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முதற்கட்ட வாக்குப்பதிவில் ஹிலாரிக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

StumbleUpon.com Read more...

கம்ப்ïட்டரில் உள்ள தகவல்களை-அழிக்கும் வைரஸ் புரோகிராம்கள்


1.வைரஸ் ( VIRUS)

வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கம்ப்ïட்டரில் உள்ள.EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம் களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண் டது. இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த.EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாராத வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கேரக்டர்களை,வேறு சில கேரக்டர்களாக (CHARACTER)மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வரிகளை காணாமல் செய்தோ பாதிப்புகளைஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக் கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த I LOVE YOU' எனப்படும் வைரஸ் கம்ப்ïட்டரில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

2.டிராஜன் ஹார்ஸ் (TROJAN HORSE)

இது ஒரு புதுவகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கம்ப்ïட்டர் புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும், பல நேரங்களில் எதிர்பார்க்காத சிலவேலைகளைச்செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு USER தனது புரோகிராமை எடுத்து அதில் சில மாற்றங்களைச் செய்ய முற்படும் போது, அந்த புரோகிராமை அழித்துவிடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹார்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் USER-கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பிப் போகும் நிலை உருவாகிறது.

3. வாம் (WORM)

இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் ஙஉஙஞதவ-யில் இஞடவ செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே SIZE ஆகவே காட்டும். ஆகையால், நாம் ஏதாவது ஒன்றை(DELETE)அழிக்க நினைத்து புரோகிராமை ERASE பண்ணி விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோகிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக ஒரு அலுவலகத்தில் கம்ப்ïட்டரை உபயோகிக் கும் ஒருவர், ஒவ்வொரு முறையும் தனது SERVER கம்ப்ïட்டரில் இருந்து நஉதயஉத கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும். அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றை கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

சாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை

சாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை

புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆசிரமத்துக்குள் கத்தியுடன் நுழைந்த 4 கொலை யாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்து மத கொள்கைகளையும், தத்துவங்களையும் போதித்து வருபவர் சத்யசாய் பாபா. இவருக்கு இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

இந்து மத கொள்கைகளை பரப்பும் "சத்யசாய் இயக்கம்" என்ற அமைப்பின் தலைவராகவும் சத்யசாய்பாபா இருந்து வருகிறார்.

புட்டபர்த்தி ஆசிரமம்.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் புட்டபர்த்தி என்ற இடத்தில் சாய்பாபாவின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசி ரமத்துக்கு "பிரசாந்தி நிலையம்" என்று பெயர். இங்குதான் சாய்பாபா தங்கி இருக்கிறார்.

பிரமாண்டமான இந்த ஆசிரம வளாகத்தில் சாய்பாபா பெயரில் ஒரு கல்லூரியும், மருத்துவமனையும் உள்ளன. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு சென்று சாய்பாபாவிடம் ஆசி பெற்று செல்கிறார்கள்.

ரகசியமாக நுழைந்த 4 பேர்

சாய்பாபா தங்கி இருக்கும் ஆசிரம பகுதிக்குள் 6_6_1993 அன்று இரவு 10_30 மணி அளவில் 4 பேர் சென்றனர். அந்த நேரத்தில் சாய்பாபா தூங்கிக்கொண்டிருந்தார். உதவியாளர்களும், பாதுகாவலர்களும் வேறு ஒரு அறையில் விழித்துக்கொண்டு இருந்தனர்.

சாய்பாபாவின் அறைக்குள் நுழைய முயன்ற அந்த 4 பேரையும் அங்கு நின்று கொண்டு இருந்த சாய்பாபாவின் உதவியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு அவர்கள், ஒரு முக்கியமான "தந்தி" வந்து இருக்கிறது. அதை சாய்பாபாவிடம் கொடுக்கவேண்டும்" என்று கூறினார்கள்.

ஆனால் அதை உதவியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "பாபா" தூங்கிக்கொண்டு இருக்கிறார். எனவே உள்ளே அனுமதிக்க முடியாது" என்று கூறினார்கள்.

கத்திக்குத்து

இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் "திடீர்" என்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த "பிச்சுவா" கத்தியை எடுத்து உதவியாளர்களை குத்தினார்கள்.

இதில் சாய்பாபாவின் தனி உதவியாளர்கள் ராதாகிருஷ்ண சுவாமி, சுனில் குமார் மகாஜன் மற்றும் மெய்க் காவலர்கள் அனில் பட்டேல், விஷால் பகத் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு, ஆசிரமத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்றவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த 4 ஆசாமிகளும் பக்கத்தில் உள்ள ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர்.

இந்த சம்பவத்தினால் ஆசிரமத்தில் பதட்டநிலை காணப்பட்டது. உடனே ஆசிரமத்தின் "அபாச சங்கு" ஒலிக்கப் பட்டது.

4 பேரும் சுட்டுக்கொலை

"அபாய சங்கி"ன் ஓசை கேட்டு, புட்டபர்த்தி போலீசார் ஆசிரமத்துக்கு விரைந்து வந்தனர். அறைக்குள் சென்று பதுங்கி இருந்த கொலையாளிகள் 4 பேரையும் வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர்.

இதனால் போலீசார் கதவை உடைத்து அறைக்குள் புகுந்தனர். உடனே அந்த 4 பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர்களை கத்தியால் குத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் குண்டு பாய்ந்து செத்தனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:_

1. சுரேஷ்குமார், "எம்.காம்." பட்டதாரி.

2. சுரேஷ் சாந்தாராம் பிரபு _ கப்பல் ஓட்டும் மாலுமி பயிற்சி பெற்றவர். மும்பையை சேர்ந்தவர்.

3. கே.சாய்ராம் _ எம்.காம். இறுதி ஆண்டு மாணவர்.

4. ஜெகநாத் _ சாய்பாபா கல்லூரி முன்னாள் மாணவர்.

2 உதவியாளர் சாவு

இதற்கிடையே கத்திக்குத்து காயம் அடைந்த 4 உதவியாளர்களும் ஆசிரம வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ராதாகிருஷ்ண சுவாமி, அனில்குமார் மகாஜன் ஆகிய 2 பேர் பரிதாபமாக செத்தனர். மற்ற இருவரும் ஆபரேஷனுக்குப்பிறகு உடல் தேறினார்கள்.

காரணம் என்ன?

இந்த சம்பவம் சாய்பாபா பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

.

சாய்பாபாவை கொல்ல வந்த கொலையாளிகள் தங்கி இருந்த அறையில் சோதனை போட்டபோது "சயனைடு" விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷம் ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதில் வெளிநாடு சதி இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும் ஆசிரம நிர்வாகம், இவர்களுக்கு எந்த வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்ய வில்லை என்றும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சத்யசாய்பாபாவை கொலை செய்ய முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மாநில ரகசிய போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.

பக்தர்களுக்கு தரிசனம்

கொலை முயற்சி நடந்த போதிலும், எவ்வித மாற்றமும் இல்லாமல் மறுநாள் (7_ந்தேதி) காலை 7 மணிக்கு சாய்பாபா வழக்கம்போல பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்

பஜனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மாலையிலும் வழக்கம் போல பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மன்டேலா


அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மன்டேலா
தொடர்ந்து நீடிக்கிறார்


வாஷிங்டன், மே.5-

அமெரிக்க பயங்கரவாதிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மன்டேலா பெயர் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அவர் அமெரிக்கா செல்வது என்றால் சிறப்பு அனுமதி பெறவேண்டிய நிலை உள்ளது.

நிறவெறி அரசு

தென்னாப்பிரிக்கா இப்போது ஒரு ஜனநாயக நாடு. தென்னாப்பிரிக்க தேசீய காங்கிரஸ் கட்சி அந்த நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கிறது. இந்த நாடு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறவெறி பிடித்த வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆட்சியாளர்கள் கறுப்பர்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். இந்த நிற வெறி ஆட்சிக்கு எதிராக போராடியவர் நெல்சன் மன்டேலா. இவர் இதற்காக கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் இருந்தவர்.

இவரை நிறவெறி தென்னாப்பிரிக்க அரசு பயங்கரவாதியாக சித்தரித்து இருந்தது. இதை ஏற்று அமெரிக்காவும் இவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.

தொடர்ந்து நீடிக்கிறது

நிறவெறி ஆட்சி போய் தென்னாப்பிரிக்காவின் மெஜாரிட்டி இன மக்கள் ஆட்சி அங்கு ஏற்பட்டது. அந்த அரசின் முதல் அதிபராக நெல்சன் மன்டேலா பதவியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். இன்னும் அவர் பெயர் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் நெல்சன் மன்டேலாவும், அவரது கட்சிப் பிரமுகர்களும் அமெரிக்கா செல்ல வேண்டுமானால் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உள்ளது.

தென்னாப்பிரிக்க தேசீய காங்கிரஸ் கட்சியின் பெயர் இன்னும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது என்று அமெரிக்க வெளிநாட்டு மந்திரி கண்டலீசா ரைஸ் கூறி இருக்கிறார்.

நீக்குவதற்கான தீர்மானம்

தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக ஹோவர்டு பெர்மன் ஒரு தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார். அது நிறைவேறுமானால் தான் நெல்சன் மன்டேலாவின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

மன்டேலாவின் 90-வது பிறந்த நாள் வருகிற ஜுலை 18-ந் தேதி வருகிறது. அதற்கு முன்பு அவர் பெயர் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410783&disdate=5/5/2008

StumbleUpon.com Read more...

ஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு

ஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு

சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.


அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.

கிறித்துவம் கேள்வி பதில்


கிறித்துவம் கேள்வி பதில்-2
உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்


இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?
போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.
இதை பற்றி அறிய

 
இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண
முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்

StumbleUpon.com Read more...

பெண்ணுரிமை பற்றி பேசியவருக்கு இஸ்ல்லாமிய நாட்டில் கசையடி-இதெல்லாம் அங்கே தான் நடக்கும்

பெண்ணுரிமை பற்றி பேசியவருக்கு இஸ்ல்லாமிய நாட்டில் கசையடி-இதெல்லாம் அங்கே தான் நடக்கும்

 
 

StumbleUpon.com Read more...

பிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை

பிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை

StumbleUpon.com Read more...

வேற்று கிரக பறக்கும் மனிதன்?-பரபரப்பு வீடியோ

StumbleUpon.com Read more...

ஆபாச வெப்சைட் பார்த்த அரசு ஊழியர்

ஆபாச வெப்சைட் பார்த்த அரசு ஊழியர்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP