சமீபத்திய பதிவுகள்

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது !

>> Friday, October 14, 2011

 

 

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது.

இதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்க்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதூரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அதில் அதிர்வின் நிருபரும் அடங்குகிறார். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பீகளில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிலும் அந்த 4 எம்.பீக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதூரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார்.

அவரைத் தொடர்ந்து அதிர்வு நிருபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது ? என்று அதிர்வு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் அதிர்வின் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது அதிர்வின் நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார். தமிழ் பயங்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிஙகவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள். அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான் பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர்.

இறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர். அதிர்வு நிருபர் உட்பட மற்றைய 2வரும் ஒருவாறாக வெளியே வந்து தமக்கு நடந்த அனுபவங்களை மற்றைய செய்தியாளர்களுக்கு பகிர்ந்துகொண்டனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பீக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர். 4 எம்பீகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 

மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும். 150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும்.

source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP