சமீபத்திய பதிவுகள்

தமிழில் ஜெய்ஹோ பாடல்

>> Thursday, April 1, 2010

தமிழில் ஜெய்ஹோ பாடல்: ஏ.ஆர்.ரகுமான்


 ஜெய்ஹோ இந்திப் பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்துள்ளேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர் அமீர்கான் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம பூஷன் விருகளும், தொழிலதிபர் வேணுசீனிவாசன், கிரிக்கெட் வீரர் சேவாக் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் பிரதீபா பாட்டீல் வழங்கினார். 

இதைத்தொடர்ந்து புதன்கிழமை மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பத்ம பூஷன் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

அதில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான், ஜெய் ஹோ இந்திப் பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்துள்ளேன். தமிழ் சிறுவர், சிறுமிகள் ஜெய் ஹோ பாட்டை விழாக்களில் பாடியதை கேட்டு எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. அடுத்த வருடம் ஜெய் ஹோ பாடல் தமிழில் வெளியாகும் என்றார்.

ஸ்லம்டாக் மில்லினர் இந்திப்படம் கடந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார். ஒரு விருது அப்படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஜெய் ஹோ பாடல் உலகமெங்கும் பிரபலமானது


source:nakkheeran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சானியா பாகிஸ்தானுக்காக விளையாடுவார் ?


 

சானியா பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும்: பாக். டென்னிஸ் சம்மேளனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குடனான திருமணத்துக்குப் பின் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் என அந்நாட்டின் டென்னிஸ் சம்மேளனத் தலைவர் திலவர் அப்பாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் ஏப்ரல் 15 ந் தேதி நடைபெறும் திருமணத்துக்குப் பின் சானியாவும், சோயப் மாலிக்கும் துபையில் வசிக்கத் திட்டமிட்டுள்ளனர். திருமணத்துக்குப் பின்னரும் இந்தியா சார்பில் விளையாட சானியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோயப் மாலிக்கை சானியா திருமணம் செய்யவிருப்பது பாகிஸ்தான் டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் தகவல் என்றும். பாகிஸ்தான் குடிமகளாகி எதிர்காலத்தில் அவர் தங்களுக்காக விளையாடுவார் என நம்புவதாகவும் திலவார் அப்பாஸ் தெரிவித்தார்.

ஆசியப் பெண்கள் பாரம்பரியமாக தங்கள் கணவரைப் பின்பற்றுவதால் சானியாவும் ஒருநாள் பாகிஸ்தானுக்காக விளையாடுவார் என அப்பாஸ் நம்பிக்கை தெரிவித்தார்


source:nakkheeran


--
www.thamilislam.co.cc
 

StumbleUpon.com Read more...

ப.சிதம்பரத்தை காணவில்லை: பரபரப்பு


ப.சிதம்பரத்தை காணவில்லை: ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட இந்த துண்டு சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்கள் சார்பில் நேற்று (31.03.2010) ஆலங்குடியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் இந்த துண்டு சீட்டை ஒட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்து வடகாடு விஜய் ஆனந்த் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். நாங்கள் இந்த துண்டு சீட்டை ஒட்டவில்லை. அப்படி நாங்கள் ஒட்டியிருந்தால் எங்கள் பெயரையும் சேர்த்து ஒட்டியிருப்போம் என்று விஜய் ஆனந்த் போலீசாரிடம் கூறியுள்ளார். 

துண்டு சீட்டை யார் ஒட்டியது என்று தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


source:nakkheean


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சீனா வாலாட்டினால் நறுக்கிடுவோம் : இந்திய தளபதி

சீனா வாலாட்டினால் நறுக்கிடுவோம் : புதிய தெம்பூட்டுகிறார் இந்திய தளபதி

 

Top world news stories and headlines detail 

புதுடில்லி: பெரும் சவால்களை சமாளித்து பல்வேறு முன்னேற்றங்களை செயல்படுத்தும் தருணத்தில் இருக்கிறோம் என்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய ராணுவ தலைமை தளபதி வீ. கே., சிங் அளித்துள்ள முதல் பேட்டியில் கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில் சீனாவிடம் இருந்து எந்தவொரு மிரட்டல் வந்தாலும் அதனை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என புது தெம்புடன் பேட்டி அளித்தார். தீபக் கபூர் ஒய்வு பெற்றதை அடுத்து புதிய தளபதியாக ராணுவ அலுவலகத்தில் இன்று முதல் பொறுப்பேற்று பணியை துவக்கினார். இன்று நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி கண்டனர். அப்போது தளபதி கூறியதாவது;

 

நமது ராணுவத்தின் உள்கட்டமைப்பு ஆரோக்கியம் பேணிக்காத்திட முக்கியத்துவம் அளிப்பேன். இது சரியாக இருந்தால் தான் நாம் வெளியில் இருந்து வரும் அச்சுறுதல்களை சமாளிக்க முடியும். ராணுவ துறையில் ஊழல்கள் இல்லாதவாறு முழுக்கவனம் செலுத்துவேன். ராணுவ துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கப்பட்டு மேலும் நவீனப்படுத்தப்படும். இந்தியா பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. நமது ராணுவம் எதையும் சமாளிக்கும். சீனா மற்றும் வெளி நாட்டு அச்சுறுதல்கள் எதுவாக இருந்தாலும் அதனை சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

 

முன்னதாக  வீ. கே., சிங் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றுக்கொண்டார்.

 

புதிய தளபதியின் பணிகால வரலாறு : ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள வீ. கே., சிங் ராணுவ கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ தலைமை பொறுப்பு வகித்தவர். இலங்கை போர் நடந்த நேரத்தில் சென்ற அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர். மேற்குவங்ம் டார்ஜீலிங்கில் ராணுவ நிலம் முறைகேடாக விற்கப்பட்டது தொடர்பாக அவுதேஸ் பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்தவர் உத்தரவிட்டவர் வீ. கே., சிங் . நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பேர்போன வீ. கே., சிங் பதவி ஏற்றதில் ராணுவ துறையில் அதிகாரிகள் சற்று கூடுதலாகவே நிமிர்ந்து நிற்கிறார்களாம்.source:dianamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கப்பல்களைப் பார்க்கலாமா

 
 

எந்தக் கப்பல் எந்தக் கரையில் உள்ளது? கடலில் உள்ளது கப்பல் படை கப்பலா? மீன் பிடி கப்பலா? ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள கப்பலா? உல்லாசக் கப்பலா? எந்த கடல் பகுதியில் உள்ளவை குறித்து அறிய வேண்டும் என விரும்பினாலும், அதற்கான உதவிகளைத் தருகிறது மரைன் ட்ராபிக் காம் என்னும் இணைய தளம்(www.marinetraffic.comஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இது கூகுள் மேப் உடன் இணைந்து செயல்படுகிறது.
கம்ப்யூட்டரில் பாகம் மாற்றும் முன்....
கம்ப்யூட்டரில் சில பாகங்களை மாற்றுகிறீர்களா? நீங்கள் வாங்கி இணைக்க இருக்கும் துணை சாதனம் அல்லது கம்ப்யூட்டர் மதர் போர்டின் ஒரு பகுதி ஏற்கனவே உள்ளவற்றுடன் இணைந்து செயல்படுமா என்று அறிய வேண்டுமாயின் நீங்கள் செல்ல வேண்டிய முகவரிwww.newegg.com.மைக்ரோசாப்ட் சரி செய்த தவறுகள் மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற 2009 ஆம் ஆண்டில், 74 பேட்ச் பைல் அறிக்கைகளை வெளியிட்டது. இவற்றின் மூலம் தன் அப்ளிகேஷன் மற்றும் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்புகளில் 190 தவறுகளைச் சரி செய்தது. ஜூன் மாதம் மட்டும் 10 அறிக்கைகள் மூலம் 31 தவறுகள் சரி செய்யப்பட்டன. ஜனவரியில் மட்டும் ஒரே ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு, அதில் 3 தவறுகள் சரி செய்யப்பட்டன. மொத்தத்தில் 44 அறிக்கைகள் மிகவும் பிரச்சினைக்குரிய தவறுகள் குறித்து இருந்தன. மொத்த தவறுகளில் 132 மிகவும் சிக்கலுக்குரியதாகக் கருதப்பட்டன. 53 தவறுகள் முக்கியமானவையாகத் தெரியப்பட்டன. விண்டோஸ் சர்வர் 2003 தொகுப்பு மிக மிக மோசமான 13 தவறுகளுடன் இருந்தது. ஆபீஸ் எக்ஸ்பி தொகுப்பில் 11 தவறுகள் சரி செய்யப்பட்டன. ஆபீஸ் 2007 தொகுப்பில்10 தவறுகள் இருந்தன.ஜெர்மனியில் கே7 கம்ப்யூட்டிங்
கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வரும், சென்னையைச் சேர்ந்த கே–7 கம்ப்யூட்டிங் நிறுவனம், அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த ப்ராக்ஸிமா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கே–7 நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், ப்ராக்ஸிமா மூலமாக ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் விற்பனை செய்யப்படும். ஏற்கனவே ஜப்பான் நாட்டில் இந்த தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் உள்ள 3,000 விற்பனை மையங்கள் மூலமாக "கே7 டோட்டல் செக்யூரிட்டி' என்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு விற்பனை செய்யப்படும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP