சமீபத்திய பதிவுகள்

கர்நாடகத்தில் பயங்கர வன்முறை-2 பேர் பலி

>> Monday, March 1, 2010

தஸ்லிமா நஸ்ரின் கட்டுரை: கர்நாடகத்தில் பயங்கர வன்முறை-2 பேர் பலி-ஷிமோகாவில் ஊரடங்கு


பெங்களூர்: வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய கட்டுரையை இரு கன்னட நாளிதழ்கள் வெளியிட்டதையடுத்து கர்நாடகத்தின் ஷிமோகா மற்றும் ஹாசன் மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இன்னொருவர் பலியாயினர்.

கன்னட நாளிதழ்களில் வெளியான தஸ்லிமாவின் புர்கா குறித்த கட்டுரையை கண்டித்து ஷிமோகாவில் நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தில சென்ற ஒரு சிலர் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசியதையடுத்து வன்முறை வெடித்தது. இதையடுத்து ஊர்வலம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஆனாலும் கூட்டத்தைக் கலைக்க முடியாததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊர்வலத்தினர் கல்வீசி தாக்கியதில் இன்னொருவர் பலியானார்.

இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதேபோல ஹாசன் நகரிலும் கண்டன ஊர்வலம் நடந்தது. இந்த கண்டன ஊர்வலத்துக்கு எதிராக இன்னொரு தரப்பினரும் ஊர்வலம் நடத்தியதையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் மூண்டது.

இதில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கலவரக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையையடுத்து ஷிமோகாவில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாசன் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரிலும் வன்முறை பரவுவதை தடுக்க நகர் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை முடிய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட கன்னட நாளிதழ்களின் அனைத்து அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து 30 மாவட்டங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அமைதி காக்க எதியூரப்பா வேண்டுகோள்:

இந் நிலையில் மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் எதியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷிமோகா, ஹாசனில் நடந்த வன்முறை தொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்த எதியூரப்பா,

வெளிநாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் முஸ்லீம் சமுதாயத்தை பற்றி எழுதியதை, கன்னட பத்திரிகை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி வந்த உடனே அனைத்து மாவட்டங்களிலும் போலீசை உஷார்படுத்தும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

இந் நிலையில் ஹாசனில் காலை 11.30 மணி அளவில் 10 ஆயிரம் முதல் 15,000 முஸ்லிம்கள் பத்திரிகையில் வந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது இன்னொரு பிரிவினரின் கடைகள் மீது கல்வீசி தாக்கினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இதே பிரச்சனையால் ஷிமோகாவிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.

இந் நிலையில் முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு தனது இல்லத்தில் மாநில சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், எந்த ஒரு மதத்தின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த அரசு நடந்து கொள்ளும். வன்முறை சம்பவத்துக்காக காரணமான 2 பத்திரிகைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் முஸ்லீம் மக்கள் அமைதி காக்க வேண்டு

SOURCE:thatstamil

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புதிதாக வீடு வாங்குகிறீர்களா?அதிக எச்சரிக்கை தேவை

  General India news in detailபுதுடில்லி:நீங்கள் வீடு வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் பில்டரிடம் இருந்து, வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை மறக்காமல் வாங்கி விடுங்கள். இல்லையெனில், அதற்காக கணிசமான தொகையை, சேவை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், மேலும் பல சேவைகளுக்கு, சேவை வரி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.வீடு வாங்குவோர், வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை பில்டரிடம் இருந்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்கவில்லையெனில், அதற்கு சேவை வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்காக, முன்பதிவு செய்தால், அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட பின், பில்டரிடம் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். இல்லையெனில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டுக்கு, மூன்று லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுதவிர, மாநில அரசுகள் விதிக்கும் மதிப்பு கூடுதல் வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்.எனவே, வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை பெற வேண்டியது மிகவும் அவசியம். மேலும், வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகள், தங்களிடம் கடன் வாங்குபவர், இதற்கு முன் வேறு எந்த வங்கிகளிலும் கடன் வாங்கியுள் ளாரா, அவற்றை முறையாக திருப்பிச் செலுத்தியுள்ளாரா என்பது போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், "இ-லோன் டேட்டா' மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் கடன் வழங்கும் வங்கிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம். கடன் வாங்குபவர், வங்கிகளை ஏமாற்றி முறைகேடு செய்வதை தவிர்ப்பதற்கு இந்த பதிவு முறை பெரிதும் கைகொடுக்கும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலியின் கண்களில் சேறு வீசி தந்தையை காப்பாற்றிய மகன் 

ஜார்காலி : சமயோசிதமாகச் செயல்பட்டு, புலியின் பிடியில் இருந்த தன் தந்தையைக் காப்பாற்றியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாமு என்பவர். மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள் புலிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதன் முகத்துவாரத்தில் கும்பலாக படகுகளில் வந்து மீன் பிடிப்பது அப்பகுதி கிராமத்தவர்களின் வழக்கம்.அதன்படி, ஒருநாள் ஜார்காலியிலுள்ள மூன்றாம் நம்பர் கிராமத்திலிருந்து நண்பகலில் ஜிதேன் மஜும்தார்(60) என்பவர் தன் மகன் தாமு (28)வுடன் புறப்பட்டு அருகிலுள்ள கெந்தோகாலி காட்டுக்கு படகில் சென்றார். அங்கு ஓர் இடத்தில் இருவரும் படகைக் கட்டி வைத்துவிட்டு, அன்று இரவு அங்கேயே தங்கினர். பின்பு நடந்ததை தாமு கூறுகிறார்: "மறுநாள் அதிகாலை 5 மணியிருக்கும். அடர்ந்த பனி; நான்கடி தூரத்தில் இருப்பது கூடத் தெரியவில்லை. திடீரென எனக்கு முன்பு உட்கார்ந்திருந்த தந்தை இருந்த இடத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது. சற்று கூர்ந்து பார்த்தேன்; அப்படியே திகைத்துப் போய்விட்டேன். என் தந்தையின் கழுத்தில் ஒரு காலையும், கைப்பகுதியில் ஒரு காலையும் வைத்தபடி ஒரு புலி உறுமிக் கொண்டிருந்தது. கையிலோ ஓர் ஆயுதமும் இல்லை; என் கையில் லத்தி மட்டும் இருந்தது. இருந்தாலும் தைரியம் தான் இல்லை. ஒருவழியாகச் சில வினாடிகளில் அசட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, என் கை நிறைய கீழே கிடந்த சகதியை அள்ளினேன். புலியின் முகத்தை நோக்கி வேகமாக வீசினேன்.'அவ்வளவுதான், சகதி புலியின் கண்களில் விழுந்தது; புலி தன் பிடியிலிருந்து ஜிதேனை விட்டு விட்டு, வழி தெரியாமல் திகைத்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாமு, தந்தையை இழுத்து அருகிலிருந்த படகில் ஏற்றி, திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக துடுப்புப் போட்டு வெளியே கொண்டு வந்து விட்டார். பின், படகில் இருந்த சில மூலிகைகளைக் கொண்டு தந்தையின் கழுத்தில் ஏற்பட்ட காயங்களில் மருந்து கட்டினார். ஊருக்குத் திரும்பியவுடன், அரசு மருத்துவமனையில் ஜிதேனைச் சேர்த்தார். "நாங்கள் எப்போதும் கும்பலாகத் தான் மீன் பிடிக்கச் செல்வோம். ஒருநாள், எங்கள் குழுவில் இருந்த ஒருவரைப் புலி தாக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்றதையடுத்து, ஜிதேன் எங்களுடன் வருவதை நிறுத்திவிட்டார்' என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP