சமீபத்திய பதிவுகள்

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் போர்க்களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது

>> Thursday, September 24, 2009

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது: ஈழநாடு
 
தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். தமது தாயக மக்களின் விடுதலைக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காகவும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசத்து மக்களையும் அரசையும் தமது நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கு மேலும் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்க முடியும்.

இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து, தகவல்களைத் திரட்டுவதுடன் பிளவுகளை உருவாக்கும் சதி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான யுத்தம் புலம்பெயர் தேசமெங்கும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக நம்மவர்கள் பலர் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளனர் என்ற அபாயகரமான உண்மைகளையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சமாதான காலத்தில் இவ்வாறு ஊடுருவல் செய்த பலர் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்ததிலும், அவர்களது களமுனைத் தகவல்களை எதிரிக்கு வழங்கிப் பேரழிவுகளை உருவாக்கியதையும் இறுதிவரை கள முனையில் இருந்த பல போராளிகள் கண்ணீரோடு தெரிவிப்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். மிகவும் உசார் நிலையிலுள்ள சிங்கள உளவுப் பிரிவினரின் முழுக் கவனமும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பப்பட்டுள்ளது. எத்தனை தமிழர்கள் இதுவரை விலை போயுள்ளனர் என்ற கணக்கு இப்போதைக்கு வெளிவரப் போவதில்லை.

புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதிலும், குழுக்களை உருவாக்குவதிலும் சிங்கள தேசம் எடுக்கும் முயற்சிக்குப் பலர் துணை போக ஆரம்பித்துள்ளதாகவே அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் இந்த நிலை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது.

பிரான்சில் நடக்கும் போராட்டங்களில் தமிழ் மக்களைப் பெருந்தொகையில் திரட்டுவதற்காக களத்தில் முன்நின்று பாடுபடுபவர்கள் அழைப்பு விடும் நிலையில், அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிலர் மேற்கொள்ளும் பிரச்சார நடவடிக்கைகளின் பின்னணிகள் அவதானமாக ஆராயப்பட வேண்டும். போராட்டத்தில் மக்கள் பெருந்தொகையாகக் கலந்து கொண்டால், தாம் மேற்கொண்டுள்ள சதி முயற்சிகள் தோல்வி அடைந்துவிடும் என்ற அச்சம் காரணமாக முன் நின்று பாடுபடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது சேறு பூசும் அவதூறுகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த வருட மாவீரர் தின உரையில் மிகத் தெளிவாகவே புலம்பெயர் தமிழர்களுக்கும், இளையோர்களுக்கும் தனது ஆணையைத் தெரிவித்துள்ளார். 'புலம்பெயர் தமிழர்களே, போராடுங்கள்!, இளையோரே, போராடுங்கள்!' என்பது அவரது வேத வாக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை தேசியத் தலைவர் அவர்கள் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார். நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது விருப்பத்தை புலம் பெயர் தமிழர்கள் யாரும் தவிர்த்துவிட முடியாது.

எங்களது மண்ணின் விடுதலைக்காகவும், எங்களது மக்களின் விடிவிற்காகவும் தங்களை ஆகுதியாக்கி அந்த மண்ணில் தமிழீழக் கனவோடு கண்ணுறங்கும் 31,000 மாவீரர்களது தியாகமும், அந்தப் போர்க்களத்தில் தங்களைப் பலி கொடுத்த இலட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கும், இறுதி யுத்த காலத்தில் சிங்கள தேசத்தின் இனஅழிப்புக் கொடூரங்களில் சிதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, உயிரோடு புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், போராளிகள், தளபதிகள் அனைவருக்குமாக நாம் என்ன கைமாறு செய்யப் பொகின்றோம்? இத்தனை தழிமர்களைக் கொன்று குவித்த பின்னரும் எஞ்சிய தமிழர்களை வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைகள் புரியும், கடத்திச் சென்று படுகொலைகள் புரியும் சிங்கள தேசத்திற்கு நாம் என்ன பதில் கொடுக்கப் போகின்றோம்?

புத்தன் போதித்த அன்பு சிங்களவனுக்குப் புரியாத மொழி. காந்தி போதித்த அகிம்சை இந்தியாவுக்குப் பொருந்தாத மொழி. எங்கள் தேசத்து உறவுகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை புலம்பெயர்ந்து, பாதுகாப்புடன் நீதி ஆட்சி செய்யும் நிலங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்களே. நாங்கள் போராடுவதற்கும், எங்களுக்கான நீதியைக் கோருவதற்கும், எமது உறவுகளது அவலங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் நாங்கள் வாழும் ஜனநாயகத்தைப் பேணும் நாடுகள் என்றுமே தடை போட்டதில்லை. எமக்கான போர்க்களம் என்றுமே திறந்துள்ளது. போராட வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. போர்க் களத்தில் நாங்கள் போராளிகள் மட்டுமே. 

எங்களுக்கான கடமைகளை நாங்கள் செய்வது மட்டுமே எமது பணி. யார் வருகிறார்கள்? யார் வரவில்லை? அவர்கள் வந்தால், நாங்கள் வரமாட்டோம்! அவர்கள் வராவிட்டால் நாங்கள் வரமாட்டோம்! என்ற வார்த்தைகளும் வாதங்களும் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க எண்ணுபவர்களின் தேசியத் துரோகமாகவே கணிக்கப்பட வேண்டும்.

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது. தமிழ்த் தேசியத்திற்கான போர்க் களம் பொதுவானது. அங்கே நாம் வகிக்கும் பங்குகள் மட்டுமே எம்மை முதன்மைப்படுத்தும். மக்களே தலைமையைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். மக்களே யாரை ஏற்றுக்கொள்வது, யாரை நிராகரிப்பது என்பதை முடிவு செய்வார்கள். தலைவர்களாக யாரும் தம்மை நியமித்துக் கொள்ள முடியாது என்ற யதார்த்தம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தமது போர்க்களத்தை வழிநடாத்த, நெறிப்படுத்த யாருக்கு முடியும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். தேசியத் தலைவரை நேசிப்பவர்களே! மாவீரர்களை பூசிப்பவர்களே! எங்கள் மக்களை சிங்கள இனவாத அழிப்பிலிருந்து மீட்போம் என்ற உறுதியுடன் அனைவரும் போர்க்களத்திற்கு வாருங்கள்! அங்கே உங்கள் திறமைக்கான பணிகளும் பதவிகளும் காத்திருக்கின்றது.

புலிக்கொடி ஏந்திப் புயலாக வாருங்கள்! இது புலிகளின் காலம் என்று உறுதியோடு வாருங்கள்!!

நன்றி: ஈழநாடு (பாரிஸ்)


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

tamil christian mp3 songs:பிரபல தமிழ் இணைய தளத்தின் மக்கள் அரங்கம் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடக்கம்

பிரபல தமிழ் இணைய தளத்தின் மக்கள் அரங்கம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்பட ஆரம்பித்துள்ளது.இதில் அநேக கிறிஸ்தவ பாடல்கள்,செய்திகள் மற்றும் அனல் பறக்கும் விவாதங்கள் அகியவை இடம்பெறும்.


Tamil Christian Songs

Free Songs, MP3 Downloads, TV and Radio for Songstamil christian mp3 songs
tamil christian songs download
free tamil christian songs download
tamil christian mp3 songs free download
tamil christian songs free download
free tamil christian songs
tamilchristians.com
popular tamil christian songs free
free tamil christian mp3 songs download
tamil mp3 christian songs for download

tamil

tamil indian christianstamil christian mp3 songs
tamil christian songs download
free tamil christian songs download
tamil christian mp3 songs free download
tamil christian songs free download
free tamil christian songs
tamilchristians.com
popular tamil christian songs free
free tamil christian mp3 songs download
tamil mp3 christian songs for download

tamil

tamil indian christians

--www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய வீடியோ
StumbleUpon.com Read more...

இந்தோனேஷிய பெண்ணுக்கு பிறந்த 8.7 கிலோ குழந்தை

 

 

ஜகார்த்தா, செப்.24-
 
இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா பகுதியை சேர்ந்தவர் அனி (வயது 41). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை மேடன் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
 
அக்குழந்தை 8.7 கிலோ எடையுடன் உள்ளது. 24.4 இன்ச் நீளமாக உள்ளது. இக்குழந்தைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்தோனேஷியாவில் அதிக எடையுடன் பிறந்து இக்குழந்தை சாதனை படைத்துள்ளது.

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மவுஸும் கீ போர்டும்

 

கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்!கம்ப்யூட்டருக்குள் டேட்டா அல்லது கட்டளைகளை உள்ளீடு செய்வதற்கு நமக்கு உதவிடும் திறன் கொண்ட இரண்டு சாதனங்கள் கீ போர்டும் மவுஸும். இதன் பயன்பாட்டில் பலவகைகள் உள்ளன. இவை இரண்டினைப் பயன்படுத்தும் வழிகளை எந்த அளவிற்கு தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் திறமை கொண்டவர்களாக உயரலாம். இவற்றை இயக்கும் சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.இந்த இரண்டில் நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று, நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில்'leftclicking' எனக் கூறுகின்றனர். ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக்குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், தேவையான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும். ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும்.டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம். வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும். அவை: – Open:: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்; Cut:  தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு.Copy: இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம்.Create Shortcut:  குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்குவழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். Delete: : நிரந்தரமாக நீக்கிட; Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர மற்றும் Properties:  பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது. மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள். டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது.கீ போர்டு: கம்ப்யூட்டரை நம் விருப்பத்திற்கு செயல்பட வைத்திட நமக்கு உதவும் சாதனம் கீ போர்டு. இதன குவெர்ட்டி கீ போர்டு என அழைக்கின்றனர். எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் கீகளில் முதல் வரிசையில் ஆங்கில எழுத்துக்களான QWERTY வரிசையாக இருப்பதால் இதனை இவ்வாறு அழைக்கின்றனர். இதுவே ஆங்கில டைப்ரைட்டிங் கீ போர்டிலும் இருந்தாலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கென இதில் கூடுதல் கீகளும் செயல்பாடுகளும் உள்ளன. கீ போர்டில் அதி முக்கிய கீ என்டர் கீ ஆகும். இதுதான் ஒரு செயலை மேற்கொள்ள இறுதியாகக் கம்ப்யூட்டருக்கு ஆணையிடும் கீ ஆகும். ஷிப்ட் மற்றும் கேப்ஸ் லாக் கீகள் ஆங்கில எழுத்துக்களில் பெரிய (கேபிடல்) எழுத்துக்களைத் தருகின்றன. அதே போல எழுத்துக்களுக்கு மேலாக உள்ள நம்பர் கீகளில் மேலாக பதியப்பட்டிருக்கும் சிறப்பு அடையாளங்களை ஷிப்ட் கீ அழுத்திப் பெறலாம். இந்த கீ தொகுதிகளுக்கு வலது புறம் சில சிறப்பு பயன்பாடுகளுக்கான கீ தொகுப்பினைப் பார்க்கலாம். இதில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ மானிட்டரில் இருப்பதனை அப்படியே படமாகக் காப்பி செய்திட உதவுகிறது. காப்பி செய்ததனைப் படங்களைக் கையாளும் புரோகிராம் ஒன்றில் ஒட்டி பைலாக சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.திரையில் கர்சரைக் கொண்டு செல்ல பேஜ் அப், பேஜ் டவுண், எண்ட், ஹோம் என்ற கீகள் உதவும். இன்ஸெர்ட் கீ டைப் செய்வதனை இடையே புகுத்த உதவும். கீழே இருக்கும் ஆரோ கீகள் ஆரோவின் தன்மைக்கேற்றபடி கர்சரை நகர்த்தும். இந்த கீ தொகுதிகளுக்கு அடுத்தபடியாக எண்களுக்கான கீ பேட் உள்ளது. ஒவ்வொரு எண் கீயிலும் வேறு சில செயல்பாடுகளும் (பேஜ் அப், பேஜ் டவுண், ஹோம், எண்ட் மற்றும் ஆரோ கீகளின் செயல்பாடுகள்) உள்ளன. இவற்றை எண்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனில் இவற்றின் இடது மேல் மூலையில் உள்ள நம் லாக் கீயினை அழுத்திச் செயல்படுத்தலாம்.முப்பரிமான வடிவம் தரும் கூலிரிஸ்
உங்களுடைய இன்டர்நெட் பிரவுசிங் அனுபவத்திற்குக் கூடுதலான மசாலா சேர்க்க விரும்புகிறீர்களா? அதிக ஆர்வத்துடன் நாம் இன்டர்நெட் வெப் சைட்களில் பார்ப்பது, படங்க<ள், கிராபிக்ஸ் தோற்றங்கள், வீடியோ மற்றும் கேம்ஸ் விளையாட்டுக்கள். நம் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் இவற்றிற்கு முப்பரிமாண தோற்றம் தந்து, முற்றிலும் புதிய முறையில் இவற்றைக் காட்டி மகிழ்ச்சிப்படுத்த ஒரு ஆட் ஆன் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் இணிணிடூடிணூடிண். இதன் மூலம் மல்ட்டி மீடியாவைக் காண்பது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.1. இதனை இயக்கிப் பார்க்க, நீங்கள் இன்டர் நெட் பிரவுசிங் செய்திட, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பயன்படுத்த வேண்டும். 
2. www.cooliris.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று கூலிரிஸ் ஆட் ஆன் தொகுப்பிற் கான புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். 
3. இந்த ஆட் ஆன் தொகுப்பு இன்ஸ்டால் ஆனவுடன், மீண்டும் பயர்பாக்ஸினை இயக்கவும். 
4. இப்போது பயர்பாக்ஸ் திரை வித்தியாசமாக அமைந்திருக்கும்.
5. பயர்பாக்ஸ் கிடைத்தவுடன் அதன் டூல் பாரின் மேல் வலது மூலையில் கூலிரிஸ் ஐகான் அமைந்திருக்கும். அதில் கிளிக் செய்திடவும். 
6. கூலிரிஸ் இன்டர்பேஸ் திறக்கப்படும். இதில் மூன்று பிரிவுகளைக் காணலாம். மெனு, சர்ச் மற்றும் கீழாக ஸ்குரோல் என மூன்று பிரிவுகள் கிடைக்கும். 
7. இனி சர்ச் பாக்ஸ் சென்று உங்களுக்குப் பிடித்தமான யு–ட்யூப் வீடியோவினைத் தேடிப்பாருங்கள். அதே போல படங்களையும் தேடிப் பாருங்கள். எல்லாமே தம்ப்நெயில் படங்களாகக் காட்சி அளிக்கும். அதிலிருந்து தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். படம் காட்டப்படும். 
8. பேஸ்புக், மை ஸ்பேஸ் போன்ற தளங்களுடனும் இதனைப் பயன்படுத்தலாம். எந்த தளங்களில் இது செயல்படும் என்பதனை http://www.cooliris.com/product/supported என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். 
9. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படங்களைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயர்பாக்ஸை இயக்கி, அதில் படங்கள் மற்றும் வீடியோ கிளிப்கள் இருக்கும் பைல்கள் உள்ள போல்டருக்குச் செல்லுங்கள். அனைத்தும் தம்ப் நெயில் படங்களாக, பிலிம் ஸ்ட்ரிப் போலக் காட்டப்படும். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைக் கிளிக் செய்தால் அந்த படம் முன்வந்து உங்களுக்குத் திரையில் காட்டப்படும்.10. இது எப்போதும் இயக்கத்தில் இருக்காது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து நீங்கள் வழக்கம்போல டேப் பிரவுசிங் செய்யலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பு வேண்டும் என்றால் மட்டும் இயக்கிப் பார்க்கலாம். இதனைக் கம்ப்யூட்டரிலிருந்து எடுக்க வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை. பயர்பாக்ஸ் மெனுவிலிருந்து டூல்ஸ், ஆட் ஆன் கிளிக் செய்தால் உங்கள் சிஸ்டத்தில் பயர்பாக்ஸ் தொகுப்பிற்கென இணைக்கப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். அதில் இந்த பிரிவைத் தேர்ந்தெடுத்து, பின் அன் இன்ஸ்டால் கொடுத்தால் உடனே இது நீக்கப்படும். எனவே தைரியமாக இதனை இன்ஸ்டால் செய்து சோதனை செய்து பார்க்கலாம்; பிடித்திருந்தால் சிஸ்டத்தில் வைத்துக் கொண்டு இயக்கலாம்; இல்லையேல் நீக்கலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ராதா படைப் பிரிவைச் சேர்ந்த போராளி ஓமந்தை காட்டில் கைது

 

இன்று (வியாழக்கிழமை) விடுதலைப் புலிகளின் ராதா படைப்பிரிவின் போராளி ஒருவரை தாம் காட்டுப்பகுதியில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதி நவீன குறிசூட்டுத் துப்பாக்கியுடன் இவர் கைதுசெய்யப்பட்டதாக மேலும் காவல்துறையினர் தெரிவித்தனர். பளையில் இருந்து காட்டுப்பகுதியூடாக கிளிநொச்சி வந்து பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதியூடாக பிறிதொரு இடம் செல்ல முயன்றவேளை ஓமந்தைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இவரை தாம் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் படங்களை வெளியிட்டுள்ள காவல் துறையினர், இவர் பெயர் விபரங்களை கூற மறுத்துவிட்டனர். புலிகள் முற்றாக அழிக்கப்பட்டும், முடக்கப்பட்டும் உள்ளனர் என கடந்த மே மாதம் முதல் கூறிவரும் இலங்கை அரசு, புலிகளின் சில அணிகள் இன்னமும் காட்டுப்பகுதில் செயற்படுவதை ஏற்க மறுக்கிறது. source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

“ஈரானை தாக்குபவரின் கைகளை துண்டிப்போம்”

"ஈரானை தாக்குபவரின் கைகளை துண்டிப்போம்" அதிபர் அகமதின்ஜாத் எச்சரிக்கை
தெக்கான், செப்.23-
 
ஈரான்-ஈராக் இடையே நடந்த போர் 1980-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையொட்டி நடந்த ஆண்டு விழாவில் ஈரான் நாட்டு அதிபர் முகமது அகமதின்ஜாத் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
ஐக்கிய அரபு பகுதியில் இருந்து அமெரிக்கா தலைமையிலான படைகள் வெளியேற வேண்டும். ஈரான் தற்போது வலிமையாகவும், அனுபவத்திறமை வாய்ந்த நாடாகவும் திகழ்கிறது.
 
எந்த ஒரு சக்தியாலும் ஈரானில் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. நம்மீது (ஈரான்) யாரும் தாக்குதல் நடத்தினால் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தால் கூட அவர்களின் கைகளை துண்டிப்போம்.
 
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

source:maal;aimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP